Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை மீளாய்வு! - மங்கள சமரவீர தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mangala-samaraweera-200-news5.jpg

இலங்கையினால் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடை குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

   

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தின் ஒழுங்கு விதிகள் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது, அதற்கு பணம் வழங்குவதை நிறுத்துவது, கறுப்புப் பணப் பரிமாற்றம் மற்றும் அதனோடு தொடர்புடைய தரப்புக்களை தடுப்பதற்கான சட்டவிதிமுறைகள் 2012 ஆம் ஆண்டு ஐ.நா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தலிபான் அறிக்கை அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்புக்களை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆயுதங்கள் கொள்வனவு, பணம் வழங்கல்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு ஐ.நா மற்றும் ஜனநாயக சரத்துக்களுக்கு இலங்கை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

 

ஆசிய பசுபிக் குழு கறுப்புப் பணம் பறிமுதல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாகவும் டிசம்பர் பிரகடனம் 1267 மற்றும் 1373 இன் கீழ் பாதுகாப்பு சபையில் தீர்மானம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கையின் மத்திய வங்கியிலும் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. பணம் கொடுக்கல் வாங்கல் திருத்தங்கள் தொடர்பில் இலங்கையின் சட்டவரைவுக்குள் சர்வதேச நிதி மற்றும் பயங்கரவாத தடைக்கு ஏற்றவாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது நாட்டிலும் நீண்ட காலமாக பிரச்சினை தலைதூக்கியிருந்தது. இதனை இன நெருக்கடி என்ற அடிப்படையிலேயே நோக்க வேண்டும். ஐ.நா சபை 60 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. நாம் அவ் அமைப்பில் 1955 ஆம் ஆண்டு தொடக்கம் உறுப்புரிமை பெற்று வருகிறோம். அத்தோடு ஐ.நா சட்டங்களை மதித்து எமது சட்ட வரையறைக்குள் நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

 

கடந்த கால ஆட்சியாளர்கள் ஐ.நாவுடன் மட்டும் அல்லாது சர்வதேச நாடுகளுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நெருக்கடியில் நாட்டை தள்ளிவிட்டிருந்தது. சர்வதேச ரீதியில் நட்புறவுகள் பேணப்படவில்லை. எனவே ராஜதந்திர உறவுகள் விரிசலடைந்திருக்கின்றது. அந்த நாடுகள் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எமக்கு ஆதரவு வழங்கவில்லை.அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை.

 

ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அரசாங்கத்தில் ஐ.நா உட்பட சர்வதேச நாடுகளுடன் நட்புறவுகளை மேம்படுத்திக் கொண்டுள்ளோம். ராஜாந்திர உறவுகள் மேம்பட்டுள்ள எமது அபிவிருத்திற்கு உதவி வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளன. கடந்த ஆட்சியாளர்கள் இவ்வாறான நட்புறவுகளை முன்வராத காரணத்தினால் தான் எமக்கெதிராக ஐ.நா வில் தொடர்ச்சியாக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன. இன்று இறையாண்மை கொண்ட எமது தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு சர்வதேசத்துடன் நட்புறவுகள் பேணப்பட்டு வருகின்றது.

 

ரோமர் பிரகடனத்தில் நாம் கையெழுத்திடவில்லை.எனவே மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எமது நாட்டு சட்டப்பிரகாரமே கையாள்கிறோம். அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே பொறிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். உள்ளகப் பொறிமுறை ஊடாக எமது நாட்டின் பெயரை பாதுகாத்து வருகின்றோம். நாம் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்படவில்லை. மாநாடு எமது மக்களின் கோரிக்கைகளை ஏற்றே விசாரணைகளை நடத்துகின்றோம். எமது இராணுவத்தினர் ஒழுக்கமுள்ளவர்கள், சட்டத்தை மதிப்பவர்கள் எனவே இன்று ஐ.நா சமாதானப் படையிலும் அங்கம் வகிக்கின்றது. கடந்த தேர்தல் காலத்தில் அரசியல் தேவைக்காக விடுதலைபுலிகள் தொடர்பான புரளி கிளப்பப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாகவும் பீதி கிளப்பட்டது. என்றும் தெரிவித்துள்ளார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=128579&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

GTF இனுடைய தடை எடுக்கப்படலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தடையும் நானே.. தடை நீக்கமும் நானே.. சிறீலங்காவும்.. திருவிளையாடலும்.  :D  :lol:

அப்பாடா  இந்த  முறை  விடுமுறை  ஊரில கழிக்கலாம் ....இணைய போராளிகள் மகிழ்ச்சி  :D

GTF இனுடைய தடை எடுக்கப்படலாம்

மூன்று கண்டங்களில் உள்ள மூன்று அமைப்புக்களின் தடைகள் நீக்கப்படலாம் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

புலிகொடிக்கும் தடை நீக்கப்போயினமாம்.....ஜாலி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.