Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைக்கு எதிராக திரண்டது தென்னிலங்கை

Featured Replies

ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமே கவனத்தை திருப்பென உரத்த கோஷங்கள்

படுகொலையுண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. நடராஜா ரவிராஜின் இறுதி அஞ்சலிக் கூட்டமும் கண்டனப் பேரணியும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றபோது இன, மத வேறுபாடுகளை நிராகரித்து விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

படுகொலைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற திடமான உறுதிப்பாட்டுடன் திரண்டு வந்த மக்கள், கட்டுக்காவலுடன் உள்ள தலைநகரில் பட்டப் பகலில் இடம்பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென உரத்த கோஷங்களை எழுப்பினர்.

கொழும்பு பொரளையிலுள்ள ஏ.எவ். ரேமன்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிராஜின் பூதவுடல் கொழும்பு மாநகர சபைக்கு முன்பாகவுள்ள விஹாரமகாதேவி பூங்காவிற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பொரளை ரேமன்ஸ் மலர்ச்சாலையிலிருந்து ஹோட்டன் பிளேஸ் வழியாக நடராஜா ரவிராஜின் பூதவுடல் எடுத்து வரப்பட்டவேளை சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் பொது அமைப்புகளின் பிரமுகர்களும் ஊர்வலமாக வந்தனர்.

`கொல்லாதே கொல்லாதே அப்பாவி மனிதர்களைக் கொல்லாதே', `மகிந்தவின் அரசே ரவிராஜின் படுகொலைக்கு பதில் சொல்', `கொலைகார ஜே.வி.பி.யை அரசியலிலிருந்து வெளியேற்று, `சர்வதேச சமூகமே மகிந்தவின் அரசுக்கு துணைபோகாதே, `கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்து', `வெட்கம்' போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் கோஷங்களை எழுப்பினர்.

தலைநகர் கொழும்பிலிருந்தும் தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் ரவிராஜுக்கு தமது கண்ணீரஞ்சலியை செலுத்தினார்கள். இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட பெருமளவு பொதுமக்கள் ரவிராஜின் பூதவுடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுததையும் காணக்கூடியதாகவிருந்தது.

ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட ரவிராஜின் பூதவுடல் விஹாரமாதேவி பூங்காவில் விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் ஐ.தே.கட்சி எம்.பி.ராஜிதசேனாரத்ன, மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., போருக்கு எதிரான முன்னணியின் தலைவர் குமார் ரூபசிங்க, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, பிரதியமைச்சர் பி.இராதாகிருஷ்ணன், மேல் மாகாண சபை உறுப்பினர் பிரபாகணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.திகாம்பரம், முன்னாள் எம்.பி. கே.வேலாயுதம், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான கலாநிதி ந. குமரகுருபரன், வேலணை வேணியன், எம்.கார்த்திக், நடராஜா ரவிக்குமார், கே.ரி.குருசாமி, எம்.ஜி.ஆர், சுப்பையா கோமதி மற்றும் மனித உரிமை ஆர்வலர் சுனிலா அபேசேகரா, நிமல்கா பெர்னாண்டோ உட்பட இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த குருமார்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

அத்துடன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்றைய இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

விஹாரமாதேவி பூங்காவில் நடைபெற்ற இறுதி அஞ்சலிக்கூட்டத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இதேவேளை, நேற்றுக்காலை ரேமன்ஸ் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிராஜனின் பூதவுடலுக்கு அமைச்சர்களான சுசில் பிரமேஜயந்த, சரத் அமுனுகம, திஸ்ஸ விதாரண, தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்) த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்

http://www.thinakkural.com/news/2006/11/14...s_page15195.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.