Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த மாளிகை அமைத்தபோது தமிழர்கள் பொறுமை காத்ததே பெரிய விடயம்! - சிங்களவர்களாக இருந்தால் விரட்டியிருப்பார்கள் என்கிறார் பிரதமர்

Featured Replies

wifi%20ranil%204ddd.jpg
 
 
சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் அரச மாளிகை அமைத்திருந்தால் அந்த மக்கள் எம்மை நாட்டிலிருந்து விரட்டியிருப்பார்கள். ஆனால், யாழில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 200 ஏக்கர் காணியில் கோடிக்கணக்கான செலவில் அரச மாளிகை அமைத்தபோதும் தமிழ் மக்கள் இன்றுவரை பொறுமையாக இருந்ததே பெரிய விடயம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 
தமது வீடுகளைக் கேட்டுப் போராடும் தமிழ் மக்கள் மீது நாம் குற்றம்கூறமுடியுமா என்றும் கேள்வி அவர் எழுப்பினார். கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று இலவச Wi - Fi திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
மஹிந்த அரசின் மோசடிகள் பல உள்ளன. இது தொடர்பில் நாம் விசாரணைசெய்து வருகின்றோம். இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, திறைசேரி, கணக்காய்வாளர் திணைக்களம் என்பன தமது கடமைகளை நிறைவேற்றவில்லை. இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நாம் இந்த ஊழல், மோசடி குறித்து விசாரணை நடத்திவருகின்ற நிலையில், நாம் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றோம் என்று கூறுகின்றனர்.
 
இடம்பெற்றுள்ள மோசடிகளைக் கண்டுபிடிக்க நாம் மேற்கொள்ளும் விசாரணைகள் குறித்து எவரும் பேசுவதில்லை. நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதனால், இந்த வேலைகளை நாடாளுமன்றம்தான் செய்யவேண்டும்.
 
இதேவேளை, மஹிந்த அரசு யாழில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான செலவில் அரச மாளிகையொன்றை அமைத்துள்ளது. இதுபோன்ற அரச மாளிகையை எமது மக்கள் வாழும் இடங்களில் அமைக்க முடியாது. அப்படிச் செய்தால் சிங்கள மக்கள் எம்மை நாட்டைவிட்டு விரட்டியிருப்பார்கள். தமிழ் மக்கள் இன்றுவரை பொறுமையாக இருந்தது பெரிய விடயம் - என்றார்.
 
http://www.malarum.com/article/tam/2015/03/30/9391/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.html#sthash.L0jCXrcH.dpuf
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதிகளில் இராணுவத்தையும்.. உயர் பாதுகாப்பு வலயங்களையும் வைச்சுக் கொண்டு மகிந்த என்ன மைத்திரி.. ரணிலும் என்னவும் செய்யலாம் என்பதை தெரியாத மாதிரி நடிக்கிறார் ரணில்.

 

அதனால் தான்.. இவரும்.. இராணுவத்தை மீளப் பெற மாட்டம்.. இராணுவத் தேவைகள் நீங்கிய பின் தான் மேலதிக காணிகள் விடுவிக்கப்படும் என்று ஏன் ரணில் சொல்லி வருகிறார். அதையும் சிங்கள மக்களுக்கு விளக்கலாமில்ல. 

 

ரணில் நல்ல நடிகன்.  :icon_idea:  :rolleyes:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பொறுமையை எள்ளி நகையாடுகின்றார்.. :(  :(  :(

தமிழர்களைத்தூண்டி விடுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கூட துப்பாக்கி இல்லாத ராணுவத்தைக் காணமுடியாமல் இருக்கு.

 

நாட்டின் எந்த பகுதியில் இப்படியான நிலை இருக்கிறது.

தமிழர் பகுதிகளில் இராணுவத்தையும்.. உயர் பாதுகாப்பு வலயங்களையும் வைச்சுக் கொண்டு மகிந்த என்ன மைத்திரி.. ரணிலும் என்னவும் செய்யலாம் என்பதை தெரியாத மாதிரி நடிக்கிறார் ரணில்.

 

அதனால் தான்.. இவரும்.. இராணுவத்தை மீளப் பெற மாட்டம்.. இராணுவத் தேவைகள் நீங்கிய பின் தான் மேலதிக காணிகள் விடுவிக்கப்படும் என்று ஏன் ரணில் சொல்லி வருகிறார். அதையும் சிங்கள மக்களுக்கு விளக்கலாமில்ல. 

 

ரணில் நல்ல நடிகன்.  :icon_idea:  :rolleyes:  :lol:

மேலதிக காணியை தருவதற்கு நரியிடம் கடனா கேட்கிறோம்?

நரி தன் முகத்தை வடிவாக திறந்து காட்டுது

உதைத்தான் அப்பவே அண்ணன் சொன்னவர்

சில தினங்களுக்கு முன்பு கிழவி என்ற கள உறவு தெளிவாக கூறியது போல் "எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்க. தமிழர்கள் ரொம்ப நல்லவங்க", என்று சொல்லுறார் ரணில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறிச்ச காணியை பறிகுடுத்தவனிட்டை திருப்பிக்குடுக்கிறதுக்கே சிங்களவன் விழா எடுக்கிறான் எண்டால் யோசிச்சு பாருங்கோ.......அவன் ஆருக்கோ நாடகம் போட்டு காட்டுறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.