Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் வெள்ளைவான் கும்பல்களின் அட்டகாசம்

Featured Replies

திங்கள் இரவு நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொலை

யாழ். குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள இரவு வேளையில் வெள்ளை வான்களில் திரிவோரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவும் யாழ்நகரப் பகுதிக்கு அதற்கு வெளியேயும் நள்ளிரவு நேரத்தில் வெள்ளை வானில் கொண்டு வரப்பட்டு ஆயுதபாணிகளால் நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களில் இரவு நேரங்களில் இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை வான்களில் வருவோரால் கடத்தப்பட்டதுடன் அவர்களில் எட்டுப்பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

யாழ்நகரப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பட்டப் பகலில் ஆயுததாரிகளால் வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்கள், காங்கேசன்துறை வீதி அரசடிச் சந்திக்கு அண்மையில், நேற்றுக் காலை சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த நள்ளிரவு வேளையில் வானொன்றில் கொண்டு வரப்பட்டு இவ்விருவரும் இப்பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் சுரேஷ் குமார் (வயது- 18), முத்துலிங்கம் சத்தியசீலன் (வயது- 25) ஆகிய இருவருமே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களாவர்.

இவ்விரு இளைஞர்களும் யாழ்நகரில் வைத்து ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இவ்விருவரது சடலங்களும் நேற்றுக் காலை மீட்கப்பட்டன.

சுட்டுக் கொல்லப்பட்ட இருவரது சடலங்களும் மழை வெள்ள நீரில் வீசப்பட்டிருந்தன.

சம்பவ இடத்திற்கு யாழ். மாவட்ட நீதிபதி இ.த.விக்னராஜா நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

எரிந்த நிலையில் சடலம் மீட்பு

இதேநேரம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கோண்டாவில் வடக்கு வீரபத்திரர் கோவில் வீதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, பின்னர் அவரது சடலம் எரியூட்டப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் இரைச்சல்கள் கேட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும் கேட்டுள்ளது.

இதையடுத்து ஒரு சில நிமிட நேரத்தில் பெற்றோல் மணமும் அதன் பின் மனித உடல் எரிந்து கருகும் மணமும் வீசியுள்ளது. எனினும் பலத்த அச்சம் காரணமாக எவருமே வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

நேற்றுக் காலை பார்த்த போது இளைஞன் ஒருவரது சடலம் கருகிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுன்னாகம் பகுதியில் கடத்தப்பட்ட சரவணபவானந்தன் ஹரிகரன் (24 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்றுமுன்தினமிரவு வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞனொருவரது சடலம் அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் நேற்றுக் காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.சசி (30 வயது) என்பவரது சடலமே இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2006/11/15...s_page15266.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.