Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்­டவர் மீண்டும் நாட்டின் ஆட்­சியை கைப்­பற்ற சதி­மு­யற்சி

Featured Replies

chandrika_bandaranayake_2.jpg
 
மக்­களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதி­கா­ரத்­தினை கைப்­பற்ற முயற்­சிக்கும் சதித்­திட்டம் இடம்­பெ­று­கின்­றது. இழந்த உரி­மை­களை வென்­றெ­டுக்­கவே நாம் போராட வேண்­டி­யுள்­ளது என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார்.
 
அடுத்த பொதுத் தேர்­தலில் நாட்­டிற்கு ஏற்ற மிகச் சரி­யான தலை­வரை மக்கள் தேர்ந்­தெ­டுக்க வேண்டும் எனவும் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க குறிப்­பிட்டார்.
 
பத்தரமுல்லையில் இடம்பெற்ற யுத்­தத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்­களின் தாய்­மாரை கெள­ர­விக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்­டி­ருந்த போதே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­னது.
 
இலங்­கையில் இன்று ஒற்­று­மையின் சூழ­லினை உரு­வாக்கிக் கொடுத்­ததும் மூவின மக்­களின் ஒற்­று­மை­யினை வென்­றெ­டுத்து கொடுத்­ததும் இந்த நாட்­டிற்­கான உயர்ந்த தியாகம் செய்த இரா­ணுவ வீரர்­களே ஆவர். பிள்­ளை­களை இழந்த தாய்­மார்­கள்­படும் துயரம் சொல்­லி­ல­டங்­கா­தது. நாட்­டிற்­காக தமது உயி­ரினை மாய்த்த இரா­ணுவ வீரர்­களின் தாய்மார் வேத­னை­ய­டை­வ­தையும் அதேபோல் நாட்­டிற்­காக பிள்­ளை­களை பெற்­றெ­டுத்­ததை நினைத்து பெரு­மையும் அடை­ய­வேண்டும். எனினும் கடந்த காலத்தில் இந்த யுத்த வெற்­றி­யினை ஒரு சிலர் அல்­லது ஒரு தனி நபர் மட்­டுமே உரிமை கொண்­டா­டிக் ­கொண்­டிந்­த­மையும் யுத்த வெற்­றியின் மூலம் ஒரு குடும்பம் மட்டும் நன்­மை­ய­டைந்­த­தையும் நாம் அவ­தா­னித்தோம். அந்த அந்த நபர் இன்று மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்டு ஆட்­சியில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டுள்ளார். அவர்கள் மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்­தினை கைப்­பற்­றிக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர். அதி­கா­ரத்­தினை மீண்டும் பெற்­றுக்­கொள்ள பாரிய சதித்­திட்டம் இடம்­பெ­று­கின்­றது.
 
இரா­ணு­வத்தின் வெற்­றி­யினை சுய­ந­லத்­திற்­காக பயன்­ப­டுத்தி அதில் வாழ்­கின்­றனர். நாம் நாட்­டையும் மக்­க­ளையும் கோரப்­பி­டி­யி­லி­ருந்து மீட்­டெ­டுத்­துள்ளோம் எனினும் இந்த பத்து ஆண்­டு­களின் நாட்டின் அரச வேலை முதல் அனைத்து விட­யங்­க­ளிலும் அடி­மட்டம் தொடக்கம் மேல் மட்டம் வரை ஊழல் பர­வி­யி­ருக்­கின்­றது. எமது கையில் இன்று மீண்டும் நாடு ஒப்­ப­டைக்­கப்­பட்­டாலும் மக்­க­ளுக்­கான தூய்­மை­யான நாடாக மாற்­றி­ய­மைப்­ப­தற்கு மிக நீண்ட காலம் அவ­சியம் அதற்கு மக்­களும் பொறு­மை­யுடன் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். கடந்த ஆட்­சியில் இலங்கை பத்து ஆயிரம் கோடி ரூபாய் அமெ­ரிக்க டொல­ருக்கள் கடனில் உள்­ளது. இவற்றில் இருந்து நாட்டை மீட்­டெ­டுக்க வேண்டும்.
 
புதிய அர­சாங்கம் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்தின் நாட்டின் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தித் தரு­வ­தாக கூறி­யுள்­ளனர். ஆனால் நூறு நாட்­களில் நாட்டை மீட்­டெ­டுக்க முடி­யுமா என எனக்குத் தெரி­யாது. இந்­நி­லையில் பொதுத் தேர்தல் ஒன்­றிற்கு நாடு முகம் கொடுக்­க­வுள்­ளது. இது­வ­ரையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியில் திருடர்களும் ஊழல் மோசடிக்காரர்களுமே பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம்படுத்தினர். ஆனால் இம்முறை பொதுத் தேர்தலில் நாட்டிற்கு பொருத்தமான திறந்த தலைவரை மக்களே தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
 

மேடம் நல்லா வயலின் வாசிப்பங்களாம்..  :)

மேடம் நல்லா வயலின் வாசிப்பங்களாம்..  :)

:D  :D  :D பார்த்தால் தவில் மாதிரி தெரியுது 

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி படுகொலையை பற்றி கேள்வி கேட்க ஒரு தமிழன் கூட்டத்தில் இல்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.