Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ச‌ரவணா ஸ்டோர்ஸ் – ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு! ஒரு பகீர்த் தகவல்!!!

Featured Replies

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’

‘‘திருவண்ணாமலை பக்கம்..’’

‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல ..’’

‘‘இப்போ அப்படி இல்ல… அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’

‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’

‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’

‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’

‘‘ஷிப்டா… அதெல்லாம் தெரியாதுண்ணே. காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’

‘‘சாப்பாடு?’’

‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்சக், கொஞ்சப் பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’

‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’

‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’

‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’

‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா… அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’

‘‘உட்காரவே கூடாதா?’’

‘‘ம்ஹூம், உட்காரக்கூடாது. வேலையில சேர்க்கும் போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’

-யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.

‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’

‘‘5,500 ரூபாய்.’’

‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது… அதெல்லாம் உண்டா?’’

‘‘இல்லண்ணே… அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’

‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’

‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’

‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’

‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’

‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’

‘‘ஆமாம்.’’

‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’

‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’

‘‘லீவு எல்லாம் உண்டா?’’

‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’

‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா ?’’

‘‘அதான் சொல்றனேண்ணே… லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’

‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’

‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’

‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்து ட்டுப் போவீங்களா?’’

‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’

‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’

‘‘ம்ஹூம்… அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’

‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’

‘‘தெரியலை..’’

‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’

‘‘நெல் விவசாயம்..’’

‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’

‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’

‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’

‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’

‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’

‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’

‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’

‘‘இங்க எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’

கனத்த மனதுடன் அப்பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்தத் தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்தபிரம்மாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.

- ச‌ரண்குமார்

ச‌ரண்குமார் என்பவர் முகநூலில் பகிர்ந்த இந்த கண்ணீர்க் கதையை படிக்கும்போது அங்காடித் தெரு என்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அத்திரைப்படத்தில் எதையுமே மிகைப்படுத்தாமல், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் இது போன்ற ஏழைப்பணியாளர்களின் கதையையும் அங்கு நடக்கும் இதுபோன்ற கொடூரங்களையும் வசந்தபாலன் அப்ப‍டியே காட்டியிருக்கிறார்.

இதுபோன்ற கொடுமைகள் நடப்ப‍து சரவணா ஸ்டோர் ஸில் மட்டுமல்ல‍ பெரிய வணிக நிறுவனங்களில் நடப்ப‍வையே!

சினிமாக்காரன் கண்களுக்குத் தென்பட்ட‍ இக்கொடுமை அரசாங்க அதிகாரிகளின் கண்களுக்கு தெரியாமல் போனது ஏனோ? அல்ல‍து தெரிந்தும் கண்ணிருந்தும் குருடர்களாக சுயநலமாக‌ வாழ்கிறார்களா?

ஒரு சராசரி மனிதனின் வேலை நேரம் உலகம் முழுவதும் 8 மணி நேரங்களே...

அவ்வாறு இருக்கும் போது ஒரு இளம் பெண்ணிடம் அவளின் உடலியல் ரீதியான பாதிப்புக்களைக் கவனத்தில் கொள்ளாமல் 14 மணி நேரம் வேலை வாங்குகிறார்களே இது கொடுமையில்லையா!!

வெளிநாடுகளில் 8 மணி நேரம் தவிர்த்து ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்தாலே அந்த ஒரு மணி நேரத்திற்கு அதிக சம்பளம் தருகிறார்கள்... இங்கே 6 மணி நேரமாக அதிகமாக வேலை செய்தும்... அதுவும் 5 வருடங்களாக வேலை செய்தும் 5500 ரூபாதானா???

இது ஒரு மனித உரிமை மீறலாகும்..!!!

டெல்லியில் கற்பழித்த பெண்ணுக்கு இங்கே தொண்டை கிழிய கத்தி ஊடக வெளிச்சத்திற்கு முகம் கொடுக்கும் கண்டறியாத பெண் அமைப்புக்கள் எல்லாம் எங்கே???

மிருகங்களை துன்புறுத்தினால்... அதற்கு "மிருகவதை தடுப்புச் சட்டம்" இருக்கிறது. அவ்வாறாயின், இந்த இளம் பெண்களைக் காப்பாற்ற "மனித வதை தடுப்புச் சட்டம்" ஏதும் இல்லையா???

எங்கே "அம்மா"... "அம்மா" என்று அழைக்கின்ற "புரட்சித் தலைவி அம்மா"??? இந்த அம்மாவெல்லாம் ஒரு பெண்தானே... இல்லை சும்மாவா???

எங்கே "கற்புக் களங்கரசி" குஷ்பூ? இதற்கெல்லாம் குரல் கொடுக்க மாட்டீர்களா?

Thanks: FB relax please

  • கருத்துக்கள உறவுகள்

திருவன்ணாமலை என்பதையாவது எடிற் பன்ணீயிருக்கலாம். பாவம் அந்த பெண்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலை போச்சா  :o  :o

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு.... மூல காரணம், தமிழக திராவிட அரசியல் கட்சிகள் மட்டுமே...
"டாஸ் மாக்" என்று.... மது விற்பனை நிலையங்களை, கண்ட இடமெல்லாம் திறந்து, தமிழக அரசுக்கு.... வருவாய் வருகின்றது என்று, சந்தோசப் பட்ட அரசு.....
இன்று.. அதனை குடித்த, தகப்பன், செத்துவிட்டான் என்றால்..... அவனின் பிள்ளைகள்,என்ன செய்யும்?
இப்படியான.... இடங்களில், வாழ்க்கையை... சீரழிக்க வேண்டி உள்ளது.

அதற்கு... இடையில், தமிழகத்தில் நல்ல வேலை வாய்ப்பு உண்டு...
 

தாராள மது விற்பனையால், அதனை குடித்த தமிழன் செத்தால், 

அந்த இடத்தை நிரப்ப.... அந்நிய மாநிலத்தவன் வருவான்.
அவன்... பிள்ளை, தமிழ் பேசாது.
இது.... ஒரு, நீண்ட கால... தமிழ் ஒழிப்பு திட்டம்.
இதற்கு.... கருணாநிதியும்,  ஜெயலலிதாவும்.... செத்தாலும், தீர்வு கிடைக்காது.
 

ஏனென்றால்.... தமிழகம், திராவிடர் நாடு.
கேரளாவில்.... மது விலக்கு, 6 மாதத்தில் கொண்டு வரப் பட்டது.
 

தமிழகம், குடி காரர்களின் நாடு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்கு ஆள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கும் நாடுகளில் வாழும் எமக்கு இந்த கவலை நியாயமானது போல் இருப்பினும், 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், மிதமிஞ்சிய வேலை செய்யக் கூடிய வலு கொண்ட மக்கள், வேலைகளுக்கு போட்டியிட்டால் இது சாதாரணமானது தான்.

பிரிட்டனில் கூட சேர்ப் என்ற கொத்தடிமை முறை இருந்தது.

பிளாக் எனும் கொள்ளை நோயினால், இவர்களில், பெரும் வீதத்தில் மரணிக்க, மீதமுள்ளவர்கள், வேலைக்கு ஆள் இல்லாமையால் உண்டான முதலாளிகளிடையான போட்டி காரணமாக, அடிமைத்தலையிலிருந்து வெளிவந்து தம் நிலையை உயர்த்தினர்.

இந்தியாவில் இது சாத்தியம் இல்லை.

  • 2 weeks later...

தொழிலாளர் நலன்கள் மற்றும் அடிப்படை பாதுகாப்புச் சட்டங்கள் எதனையும் கொண்டிராத நாடுகளிலும் ஊழல் மலிந்த நாடுகளிலும் இவ்வாறான மனித உழைப்பினை சுரண்டுவது நடந்து கொண்டே தான் இருக்கிறது . இந்த பணக்காரர்கள் அரசினை அதனை சார்ந்த இயந்திரங்களை தக்க முறையில் கவனித்துக் கொள்வதால் இதற்கு தீர்வே இல்லாது போகிறது....

இந்தியா இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆசிய நாடுகளுக்குள்ளே ....எல்லாவற்றிலும் முன்னேறி விட்டோம் என்று மார் தட்டிக் கொண்டே ஆசியாவின் வல்லரசாகும் கனவில் மிதந்து கொண்டே இந்த 21ம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை (மல) எனக்கு எழுவே முடியாத ஒரு விடயத்தை மனிதர்களைக் கொண்டு கைகளால் சுத்தம் செய்யும் வேலையை நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை  செய்வித்துக் கொண்டிருக்கிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.