Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உடனடியாக விலகும் சாத்தியம் இல்லை

Featured Replies

சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை உடனடியாக விலகும் சாத்தியம் இல்லை APR 11, 2015 | 12:10by கி.தவசீலன்in செய்திகள்

eu-flag-300x200.jpgசிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள, மீன் ஏற்றுமதித் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே தடை நீக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி விதிமுறைகளை நிறைவேற்றத் தவறியதால், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம், சிறிலங்காவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

எனினும், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து, இந்த மீன் ஏற்றுமதி தடையை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அரசியல், இராஜதந்திரச் செல்வாக்கின் மூலம், அதனை நீக்குவதற்கான உடனடி முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும், சிறிலங்கா மீன்பிடிப் படகுகளில், தேவையான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும், கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1500 இற்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை, கரையில் உள்ள மத்திய நிலையம் ஒன்றுடன் இணைப்பை ஏற்படுத்திக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

இதற்கென, படகுகளில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இன்னும் 3-4 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்து விடும் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சின் செயலர் நிமால் ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள மீன்பிடித் தடை விலக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சிறிலங்கா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2015/04/11/news/5151

இந்த அரசின் நம்பகத்தன்மை குறைவதே இதற்கு காரணமாகுமா?

 

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.