Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கில் 423 ஏக்கரையே பார்வையிட அனுமதித்தனர் இராணுவத்தினர்! தையிட்டி மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

Featured Replies

varuttalai%20vilaan%20111168.jpg

 

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. ஏனைய ஏழு கிராமங்களிலும் 423 ஏக்கர் நிலப்பரப்பையே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
 
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்து வெளி இடங்களில் வாழ்ந்தவர்கள் பெரும் ஆவலோடு தமது காணிகளைப் பார்வையிடச் சென்றபோதும் சில இடங்களுக்கு இராணுவத்தினர் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர் மக்கள்.
 
இதன்படி, வலி.வடக்கில்
 
மயிலிட்டி வடக்கு(ஜே-246),
வீமன்காமம் வடக்கு(ஜே-236),
வீமன்காமம் தெற்கு(ஜே-237),
காங்கேசன்துறை தெற்கு(ஜே-235),
மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238),
வறுத்தலைவிளான்-(ஜே-241)
 
ஆகிய ஏழு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 423 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது
 
தையிட்டி தெற்கு(ஜே-250) கிராமத்துக்கும் மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேபோன்று ஜே.-241 வறுத்தலைவிளான் கிராம அலுவலர் பிரிவிலும் ஒரு பகுதி விடப்பட்டாலும் மக்கள் அதிக நெரிசலாக வாழ்ந்த பிரதேசம் விடுவிக்கப்படவில்லை. இதனால் மக்கள் திரும்பி ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றுள்ளனர். இந்த கிராம அலுவலர் பிரிவில் இராணுவத்தினரின் 11 ஆவது படையணியின் தலைமையகம் அமைந்துள்ளமையால் பல ஏக்கர் காணிகள் இராணுவத்தினால் விடுவிக்கப்படவில்லை ஏன்பது குறிப்பிடத்தக்கது.
 
varuttalai%20vilaan%20111167.jpg
 
varuttalai%20vilaan%20111166.jpg
 
varuttalai%20vilaan%20111165.jpg
 
varuttalai%20vilaan%20111164.jpg
 
varuttalai%20vilaan%20111163.jpg
 
varuttalai%20vilaan%20111162.jpg
 
varuttalai%20vilaan%20111161.jpg
 
 
http://www.malarum.com/article/tam/2015/04/11/9572/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-423-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.html#sthash.P5qsGJGE.dpuf
 
 
  • தொடங்கியவர்

வலிகாமம் வடக்கில்...

 

article_1428749954-vadakku.jpg

 

article_1428751859-10967179_907090189312

 

article_1428751876-11066132_907090235979

 

article_1428751890-11072428_907090269312

 

article_1428751904-11092926_907090242646

 

article_1428751917-11136583_907090165979

 

article_1428751931-11153473_907090322646

 

http://www.tamilmirror.lk/143922

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

article_1428751844-1A.jpg

 

IMG_0081-e1428742878602.jpg

 

 

myl-7-e1428742975467.jpg

 

mother-e1428743005916.jpg

 

 

  • தொடங்கியவர்

மீள்குடியமர்வுகாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் இருந்த வீடுகள் அண்மையில் இடிக்கப்பட்டதாக விசனம்

 

article_1428755545-jaffna%20(2).JPG

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில் காணப்படுகின்ற மக்களின் வீடுகள், அண்மையில் இடித்தழிக்கப்பட்டுள்ளதுடன் சில வீடுகளின்; ஜன்னல்களும் கொத்தி சூறையாடப்பட்டுள்ளன. 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்று புதிய அரசால் அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக பகுதி பகுதியாக காணிகள் விடுவிக்கப்பட்டன.

 

இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக சனிக்கிழமை(11) வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதியில் உள்ள காணிகளின் ஒரு பகுதி இன்று மக்களின் பார்வைக்கு அனுமதிக்கபட்டது. 25 வருடங்களின் பின்னர் தமது காணிகளை பார்வையிட சென்ற மக்கள் அங்குள்ள நிலைமைகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

ஆர்.பிரேமதாசவின் வேண்டுகோளுக்கிணங்க வீமம் காமம் பகுதி மக்களுக்கு வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்ட நிலையில் வீட்டுத்திட்டத்தின் நினைவுக்கல் மட்டும் காணப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் மீதமுள்ள வீடுகளின் கதவு, ஜன்னல்களின் நிலைகள் அனைத்தும் இரவோடு இரவாக உடைத்து சூறையாடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. 1989ஆம் ஆண்டு, வீடுகள் எம்மிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் பால் பொங்குவதற்கு ஆயத்தமான நிலையில் இடம்பெயர்ந்து சென்றோம்.  25 வருடங்களின் பின்னர் வந்து பார்க்கின்றோம். வீடு தற்போது கற்குவியலாக காட்சியளிக்கின்றது என்று இடிக்கட்ட வீட்டின் உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.  article_1428755558-jaffna%20(3).JPG

 

article_1428755598-jaffna%20(4).JPG

 

article_1428755598-jaffna%20(4).JPG

 

article_1428755608-jaffna%20(7).JPG

 

 

http://www.tamilmirror.lk/143933#sthash.h9JoXyaO.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு நகுலேஸ்வரத்தை காட்டிச்சினம். இதில உள்ள கோயிலை காட்டி இருக்கலாமே.

 

சிங்களவன் இன்றும் துணிந்து எங்கட மண்ணில் நிற்கிறான் என்றால் அதற்கு 90% காரணம் எங்கட அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் தான். :icon_idea::rolleyes::(


14 பேரோட எதிர்க்கட்சி தலைவர் பதவி எடுத்து.. மக்களுக்கு என்னத்தை சாதிக்கப் போயினம். சாகும் போது எதிர்க்கட்சி தலைவர் என்ற பெயரில் செத்து.. சிங்களவனின் அணிவகுப்பு பெறுவதையே இன்று சிலர் தமது தலையாய  அரசியலாக்கி உள்ள நிலையில்.. இந்த அவலங்கள் தொடரவே செய்யும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
25 வருடங்களின் பின்னர் வந்து பார்க்கின்றோம். வீடு தற்போது கற்குவியலாக காட்சியளிக்கின்றது என்று இடிக்கட்ட வீட்டின் உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.  

 

 

வீடுகள் தற்போது(அண்மை காலங்களில்) இடிக்கப்பட்டதா அல்லது முன்பே இடிக்கப்பட்டு விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்க்க முன்பு இடிக்கப்பட்டிந்தால்.. லைக்கன்கள்.. களான்கள்.. பாசிங்கள் பிடிச்சிருக்கும்.

 

ஆனால்.. கட்டிடங்கள்.. புதிதாக அண்மையில் இடிக்கப்பட்ட நிலையில்.. எந்த விதமான.. காலநிலைச் சீரழிவுக்கும்.. (biological..physical..chemical weatherings).. ஆகாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

 

ஏலவே இதே குற்றச்சாட்டை வடக்கு முதலமைச்சரும் கடந்த முறை முன் வைத்திருந்தார். :icon_idea:

 

article_1428755598-jaffna%20%284%29.JPG

 

 

  • தொடங்கியவர்

20 சதவீத குடியிருப்பு காணிகளே விடுவிப்பு

 

article_1428817047-jaffna01.jpg

 

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கர் காணிகளில் 20 சதவீதமான குடியிருப்புக் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன், ஞாயிற்றுக்கிழமை (12) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தையிட்டி தெற்கு (ஜெ - 250 கிராம அலுவலர்) பிரிவில் 271 ஏக்கர் காணியில் 17 ஏக்கர் காணிகளே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. வறுத்தலைவிளான் (ஜே - 241 கிராம அலுவலர்) பகுதியின் 222 ஏக்கரில் 118 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், 49 ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளன. இந்த 49 ஏக்கரில் வசித்த சுமார் 100 குடும்பங்கள், இன்னமும் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள நலன்புரி முகாமில் வசித்து வருகின்றனர். கட்டுவன் (ஜே - 238 கிராம அலுவலர்) பிரிவிலுள்ள 247 ஏக்கர் காணியில் 10 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளன. தையிட்டி தெற்கு (ஜெ - 250 கிராம அலுவலர்), வீமன்காமம் தெற்கு (ஜே - 237 கிராமஅலுவலர்), பிரிவு காணிகளுக்கு சென்று வருவதற்கான பாதையை இராணுவத்தினர் முட்கம்பி வேலிகளால் அடைத்து வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் புகையிரதக் கடவைக்கு அருகிலுள்ள சிறிய பாதையூடாக நடந்து செல்லவேண்டியுள்ளது. வாகனத்தில் அந்த வழியூடாக செல்ல முடியாது. வறுத்தலைவிளான் (ஜே - 241 கிராம அலுவலர்) பகுதிக்குச் செல்லும் வீதியின் குறுக்கே இராணுவத்தினர் மண் அணை போட்டுள்ளமையால் பொதுமக்கள் அங்கு சென்று வருவதற்கு இயலாத நிலை காணப்படுகின்றது என்றார்

article_1428817063-jaffna04.jpg

 

article_1428817079-jaffna03.jpg

 

article_1428817099-jaffna02.jpg

 

 

 http://www.tamilmirror.lk/143952#sthash.FuJ1uo6R.dpuf

  • தொடங்கியவர்

வீமன்காமம் வடக்கில் இராணுவ பயிற்சி முகாம்

 

article_1428846034-IMG_7231.JPG

 

வீமன்காமன் வடக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணியில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்று செயற்பட்டுள்ளமையை அங்குள்ள பயிற்சி உபகரணங்கள் மூலம் அறியமுடிகின்றது. கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 613 ஏக்கர் காணிகளை மக்கள் பார்வையிடுவதற்கு சனிக்கிழமை (11) அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, வீமன்காமம் வடக்குப் பகுதியில் இராணுவ பயிற்சி முகாம் இருந்ததுக்கான அடையாளங்கள் காணப்பட்டன. இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் உபகரணங்கள், நிலக்கீழ் நகரும் தளம் உள்ளிட்ட பல அங்கு காணப்பட்டன.

 

article_1428846050-IMG_7233.JPG

 

article_1428846068-IMG_7242.JPG

 

article_1428846083-IMG_7252.JPG

 

 

article_1428846112-IMG_7256.JPG

 

 

article_1428846112-IMG_7256.JPG

 

article_1428846132-IMG_7257.JPG

 

at: http://www.tamilmirror.lk/143995#sthash.nVVY66nc.dpuf

  • தொடங்கியவர்

வீட்டை இடித்ததாக கேள்வியுற்றதும் கணவர் மயக்கிவிட்டார்

 

article_1428839738-home03.jpg

 

எமது வீட்டை இடித்துவிட்டு இராணுவ முகாம் அமைத்ததாக கேள்வியுற்றதும் எனது கணவர் சுப்பையா கந்தசுவாமிபிள்ளை (வயது 74) மயக்கிவிட்டார் என அவரது மனைவி தெரிவித்தார். கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் விடுவித்து இருந்தனர். விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட சனிக்கிழமை (11) சென்ற வீமன்காமம் வடக்கினை சேர்ந்த சுப்பையா கந்தசுவாமிபிள்ளை (வயது 74) என்பவரின் மனைவியே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

வீமன்காமம் வடக்கு ஜே - 236 கிராம அலுவலர் பிரிவு இன்றைய தினம் (சனிக்கிழமை) விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நாங்கள் எமது வீட்டை பார்க்க ஆவலுடன் வந்தோம். 'உங்களது வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு, புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படுகிறது என எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் தொலைபேசி மூலம் எனது கணவருக்கு தெரிவித்தார். அதனை கேட்டதும் கணவர் அப்படியே மயக்கிவிட்டார். அதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு நான், எமது வீட்டை பார்க்க வந்தேன்.

 

எமது வீடு 3 ½ பரப்பு காணிக்குள் அமைந்துள்ளது. அதனை சுற்றி முள்வேலி அடைத்து வைத்துள்ளார்கள். வீட்டை முற்றாக இடித்து அழித்து விட்டு, புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருகின்றார்கள். எமது வீட்டில் இருந்த மலசலகூடமும் தண்ணீர் தொட்டியுமே எஞ்சியுள்ளன. எமது வீட்டியையும் காணியையும் விடுவிப்பார்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்.  இங்கு வந்து பார்த்தால் புதிய இராணுவ முகாம் அமைக்கின்றார்கள் என கவலையுடன் தெரிவித்தார்.

 

article_1428839752-home02.jpg

 

article_1428839762-home01.jpg

 

 http://www.tamilmirror.lk/143980#sthash.NdCjMRZR.dpuf

  • தொடங்கியவர்

மாற்றத்தை ஏற்படுத்த முனையும் புதிய அரசாங்கம் இவர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துமா ?

 

Vali%20North01_CI.JPG

 

மலர்கின்ற புது வருடத்தை தமது சொந்த நிலத்தில் கொண்டாடலாம் எனவும், புதுவருடத்தன்று தமது குல தெய்வத்தை வழிபடலாம் எனவும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இருந்த மக்களில் 20 வீதத்திற்கும் குறைவானவர்களுக்கே அந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பூர்த்தி ஆகியுள்ளது.

 
ஏனையவர்கள் வழமை போன்று தமது தற்காலிக புகலிடத்திலையே புது வருடத்தை வரவேற்கின்றார்கள்.
 
வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில் மக்கள் குடியிருப்பு பகுதியை இராணுவத்தினர் கையகப்படுத்தி   அதனை உயர் பாதுகாப்பு வலயம் என பிரடகனப்படுத்தி வைத்திருப்பதனால்  அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் 25 வருடகாலமாக தொடர்ந்தும் நலன்புரி முகாம்களிலையே  வாழ்ந்து வருகின்றனர்.
 
புதிய அரசாங்கம் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பிரதேச உயர் பாதுகாப்பு வலய பகுதிகளில் உள்ள 6300 ஏக்கர் காணிகளில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக கூறி 1000 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது.
 
அரசாங்கத்தால் புதிதாக விடுவிக்கப்பட்டுள்ள 1000 ஏக்கர் காணிகளில் பெரும்பாலானவை விவசாய காணிகளே ஆகும். மக்கள் குடியிருப்பு காணிகளை தொடர்ந்து இராணுவத்தினர் தம் வசமே வைத்துள்ளனர்.
 
விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் சிறிய அளவு நிலப்பரப்பே மக்கள் குடியிருப்பு நிலமாகும் ஏனையவை விவசாய நிலங்கள் ஆகும். 
 
புதிய அரசாங்கம் தாம் 1000 ஏக்கர் காணிகளை விடுவித்து விட்டோம் என கூறினாலும் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் தொடர்ந்து நலன்புரி முகாம்களிலையே  வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு இன்னமும்  திரும்ப முடியாத நிலையிலையே உள்ளனர்.
 
கடந்த சனிக்கிழமை வறுத்ததலைவிளான் J/241 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 222 ஏக்கர் நிலப்பரப்பில் 118 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டது.
 
அதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலத்திற்கும் திரும்பும் ஆவலுடன் வந்து இருந்தார்கள். வந்தவர்களுக்கு பலத்த ஏமாற்றமே காத்திருந்தது.
 
ஏனெனில் அக் கிராம சேவையாளர் பிரிவில் விடுவிக்கப்பட்ட 118 ஏக்கர் நிலப்பரப்பும் விவசாய நிலங்களாகும். அவை மக்கள் குடியிருப்பு அற்ற பிரதேசம் ஆகும்.
 
விடுவிக்கப்படாத 104 ஏக்கர் நிலப்பரப்பிலையே மக்கள் குடியிருப்பு உள்ளது. மக்கள் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தி மக்களின் வீடுகளை உள்ளடக்கி  49 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய இராணுவ முகாமினை அமைத்துள்ளார்கள்.
 
இதனால் அப் பகுதி மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்ப முடியாது ஏமாற்றத்துடன் தமது நலன்புரி முகாம்களுக்கே  திரும்பி சென்றனர்.
 
அப் பகுதியை சேர்ந்த சுமார் 100 குடும்பத்தை சேர்ந்தவர்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள நலன்புரி முகாமிலையே  கடந்த 25 வருட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
 
' இந்த புது வருடத்துடன் ஆவது நாம் எமது முகாம்  வாழ்கையை விட்டு எமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டோம் ஆனா அது எமக்கு நிறைவேற வில்லை.
 
எமது வாழ்கை முகாமுக்குள்லையே கழிய போகுது. நாம் சாகிறதுக்கு முதல் எனது பிள்ளைகளுக்கு எமது சொந்த வீட்டையும் காணியையும் காட்டுவோம் என நினைத்தால் அது சரிவராது போல ' என விரக்தியுடன் வறுத்ததலைவிளானை சேர்ந்த அ . கந்தையா என்பவர் தெரிவித்தார்.
 
அதேபோன்று வீமன்காமம் வடக்கு J/236 கிராம சேவையாளர் பிரிவில் 153 ஏக்கர் நிலப்பரப்பில் 55 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டு உள்ளது. 98 ஏக்கர் விடுவிக்கப்படவில்லை. 
 
விடுவிக்கப்படாத பகுதிகளில் தான் மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. அவற்றினை இராணுவ குடியிருப்புக்களாகவும், இராணுவ முகாம் தேவைகளுக்காகவும் பயன்படுத்து கின்றனர். சில வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு இராணுவ முகாம்களை அமைக்கின்றனர்.
 
கடந்த சனிக்கிழமை தமது சொந்த இடத்தை  பார்வையிட வந்த வீமன் காமம் மக்களின் கண் முன்னாலையே அவர்களின் காணிகளில் புதிதாக இராணுவ முகாம்களை இராணுவத்தினர் அமைப்பதை பார்த்து கண்ணீர் விட்டனர்.
 
அன்றைய தினம் காலையில் தமது சொந்த வீட்டை வீட்டை பார்வையிட வாடகை வீட்டில் இருந்து ஆவலுடன் கிளம்பிய சுப்பையா கந்தசுவாமிபிள்ளை (வயது 74 ) என்பவருக்கு அவரது சொந்த வீட்டுக்கு அருகில் வசித்தவர்  ' உங்களது வீடு இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு அதன் மேல் புதிய இராணுவ முகாம் அமைக்கின்றனர் என தொலை பேசியின் ஊடாக கூறினார்.
 
அதனை கேட்ட சுப்பையா கந்தசுவாமிபிள்ளை மயக்கமுற்றார். அதனையடுத்து அவரை வைத்திய சாலையில் அனுமத்தித்து விட்டு அவரது மனைவி வந்து வீட்டை பார்த்து கண்ணீர் விட்டார்.
 
வீமன்காமம் வெங்காய சந்தைக்கு பின் புறமாக இருந்த வீடுகள் தற்போது இடித்து அழிக்கப்பட்டு விட்டன. அவை கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தம்மை இங்கு அழைத்து வந்த போது அவை சேதமின்றி இருந்தது என இடித்து அழிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
 
அதேபோன்று கட்டுவான் J/238 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி விடுவிக்கப்படும் என கூறப்பட்டது. அக் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மொத்த நிலப்பரப்பு  247 ஏக்கர் ஆகும். அதில் 5 வீதத்திற்கும் குறைவான 10 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டது. 237 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவில்லை 
 
அதேவேளை தையிட்டி தெற்கு மற்றும் வீமன் காமம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஊடறுத்து முட்கம்பி வேலி அடைத்து உள்ளனர்.
 
இதனால் அப்பகுதிக்கு செல்லும் மக்கள் புகையிரத பாதை ஓரமாக நடந்தே செல்ல முடியும் அதே போன்று சாந்தை சந்தியில் இருந்து வறுத்த தலைவிளான் பகுதிக்கு செல்லும் பாதையின் குறுக்காக மண் அரண் காணப்படுவதனால் அப்பகுதிக்கு செல்லும் மக்கள் மண் அரணை கடந்தே செல்ல வேண்டும் வகானத்தில் கடந்து செல்ல முடியாத வாறு மண் அரண் காணப்படுவதனால் மக்கள் நடந்தே மண் அரணை தாண்டி தமது பிரதேசத்திற்கு செல்கின்றனர்.
 
மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் 1000 ஏக்கரை விடுவித்து விட்டோம் என கூறினாலும் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து 25 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் வாழ்வில் இதுவரை மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
 
மாற்றத்தை ஏற்படுத்த முனையும் புதிய அரசாங்கம் இவர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துமா ?  
 
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதாக அறிவிக்கப்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் 46 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மக்களுடைய குடிமனைகளை முழுமையாக கையகப்படுத்தி பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறும் ஆசையுடன் சென்ற 100 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கவலையுடன் மீண்டும் நலம்புரி நிலையத்திற்கு திரும்பியுள்ளன. இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் மீள்குடியேற்றத்துக்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகத் தெரிகின்றது. புதிய அரசாங்கத்தின் அறிவிப்பின் படி இரண்டாம் கட்டமான மீள்குடியேற்றத்திற்காக 8 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 590 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஜே.241 வறுத்தலைவிளான் பகுதியும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சனிக்கிழமை விடுவிப்பதாக இனங்காணப்பட்ட பகுதிகளை மக்கள் சென்று பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. தமது சொந்த நிலங்களை பார்த்து அதில் குடியேறும் ஆசையுடன் கடந்த 27 வருடங்களாக உரும்பிராய் இந்துக்கல்லூரி முகாமில் வசித்து வந்த வறுத்தலைவிளான் மக்களும் அங்கு குவிந்திருந்தனர். மேற்படிக் கிராமசேவையாளர் பிரிவில் 118 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும்பாலான காணிகள் விவசாய நிலங்கள் மட்டுமே. மக்களுடைய வீடுகளை உள்ளடக்கிய குடிமனைகளுடன் 46 ஏக்கரை இராணுவத்தினர் கையகப்படுத்தி பாரிய இராணுவ முகாம் அமைத்துள்ளனர். முகாமினைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளையும் இராணுவத்தினர் பலப்படுத்தியுள்ளதோடு, எல்லைப்பாதுகாப்பு அரண்களையும் அமைத்துள்ளனர். இதனால் தமது விடுகளையும் காணிகளையும் பார்வையிடச் சென்ற மக்கள் இராணுவத்தினருடைய செயற்பாடுகளையும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் கண்டு பெரும் ஏமாற்றத்துடனும், கவலையுடனும் தமது முகாங்களுக்கே திருப்பினர். http://tamilleader.com/?p=48257

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.