Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாய வளர்த்த சுறாக்களுக்கு மனிதர்கள் இரையாக்கப்பட்டனரா? - விசாரணை தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய வளர்த்த சுறாக்களுக்கு மனிதர்கள் இரையாக்கப்பட்டனரா? - விசாரணை தீவிரம்

[Wednesday 2015-04-15 19:00]
gotabaya-200-2-news.jpg

வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்டவர்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் சுறா மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் வசித்து வந்த வீட்டில் 40 அடி நீளம், 10 அடி ஆழமுடைய மீன்தொட்டிகளில் மனிதர்களை உண்ணும் சுறா மீன்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த சுறா மீன்களின் உணவிற்காக நாளொன்றிற்கு 50 கிலோ கிராம் இறைச்சி அவசியமாகியுள்ளதுடன், இலங்கை கடற்படையினரால் குறித்த மீன்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன.

சாதாரண பொது மக்கள் யாரும் இவ்வகையான மீன்களை வளர்ப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. எனினும் இத்தகைய சுறா மீன்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வளர்ப்பதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அத்துடன் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்களில் ராகம லொக்கு சீயா என்பவரை தவிர வேறு எவரினதும் உடற்பாகங்கள் இதுவரை மீட்கப்படவில்லை.

இந்நிலையிலேயே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டவர்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்களா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வான் கடத்தலில் கடற் படை அதிகாரிகளின் ஈடுபாடு காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கிடையில் காணப்பட்ட விரிசலை வெள்ளைவான் கும்பல் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது. கடற்படை தளபதியை அனுப்பி வெள்ளை வான் கும்பலை செயற்படுத்தும் போது இராணுவ தளபதியினால் அவை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். பொன்சேகாவின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலேயே கரன்னாகொட தனது வெள்ளை வான் கும்பலை அனுப்பி வைத்துள்ளார்.

எது எவ்வாறாகயிருப்பினும் அதன் பின்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கோத்தாபாய ஆகியோரின் கோபத்திற்கு ஆளாகியதின் காரணமாக வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை அவர் பக்கம் திருப்பி விடுவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு முடியாமல் போனது என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தமையினால் கோத்தாபாயவின் இராட்சத சுறா மீன்கள் கடற்படையினரால் உடனடியாக குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. அவற்றிற்கு என்னவாயிற்று என்பதும் யாருக்கும் தெரியாமல் போனது.

http://www.seithy.com/breifNews.php?newsID=130324&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.