Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி, அக்கராயன் : சட்டவிரோத மணல் அகழ்வால் மரங்கள் அழிவு

Featured Replies

article_1429170752-IMG1680.JPG

 

கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஆற்றுநடுவே காணப்படும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிவடையும் அபாயநிலை உள்ளது என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவர் வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.

 

அத்துடன், அக்கராயன் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்;படும். சுமார் ஏழரை கிலோமீற்றருக்கு இந்த மணல் அகழ்வு நடைபெறுகின்றது. மணல் அகழ்வு காரணமாக அக்கராயன் மத்திய பகுதி, கிழக்குப் பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடி நீர் எதிர்காலத்தில் குறைவடையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

 

அக்கராயன் ஆற்றில் மணல் அகழ்வு தொடருமானால் எதிர்காலத்தில் அக்கராயன் பிரதேசத்தில் பெருமளவிலான சூழலியல் ஆபத்துக்கள் ஏற்படுவதுடன், உயிர் ஆபத்துகள் ஏற்படக்கூடிய அபாயநிலை உருவாகும் என அவர் கூறினார்.

 

article_1429170761-IMG1693.JPG

 

http://www.tamilmirror.lk/144050#sthash.1YphMMsV.dpuf

  • 1 month later...
  • தொடங்கியவர்

சட்டவிரோத மணல் ஏற்றிய 10 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன

 

கிளிநொச்சி, இத்தாவில் சேரன்பற்றுப் பகுதியிலிருந்து இருந்து அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற, மணலுடன் கூடிய 10 வாகனங்களை புதன்கிழமை (10) இரவு கைப்பற்றியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். 
 
ஒரு உழவு இயந்திரம், ஒரு பாரவூர்தி மற்றும் 8 டிப்பர் ரக வாகனங்களில் அனுமதிப்பதிரமின்றி சேரன்பற்றுப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் ஏற்றிச் செல்லப்பட்டது. 
 
பளைச் சந்தியில் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தொடர்ச்சியாக வந்த இந்த வாகனங்களை மறித்துச் சோதனை செய்ததில், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு, வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டனர். 
 
மணலுடன் கூடிய வாகனங்கள் பளைப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
சட்டவிரோதமாகக் குடியேறுவதற்கு அனுமதித்தால் அனைத்தும் சட்டவிரோதமாகவே நடக்கும். நடக்கிறது.....  :(  :unsure:
 
  • தொடங்கியவர்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய ஜவர் கைது

 

article_1434091881-01.jpg

 

 
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை(11) சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டுசெல்லப்பட்ட 05 டிப்பர்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு அதன் சாரதிகள் ஐவரையும் கைது செய்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அலகக்கோனின் பணிப்புரைக்கு அமைவாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.அபேயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் கொண்டு செல்லப்பட்ட டிப்பர்களை கைப்பற்றியுள்ளனர்.
 
அரிப்பு மற்றும் சிலாபத்துறை பகுதிகளுக்கு குறித்த மணல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒரு டிப்பர் நானாட்டான் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதோடு ஏனைய 4 டிப்பர்களும் முருங்கன் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
 
மணலுடன் 05 டிப்பர்களும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு சாரதிகள் ஐவரும் கைது செய்யப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த ஐவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

 

அடப்பாவிங்களா, குளக்கோட்ட மன்னனுக்கு பின்னர் குளம் வெட்டிய தமிழனை கைது செய்துட்டாங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.