Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி

Featured Replies

okkanmani_2378996f.jpg

 

இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
 
ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார்.
 
மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.
 
திருமணம் தவிர்த்த வாழ்க்கையை விரும்பும் காதலர்களைத் திருமணத்தை நோக்கித் தள்ள அவர்களது குடும்பங் கள் செய்யும் முயற்சிகள் தோல்வி யடைகின்றன. ஆனால் தொழில் நிமித்தமாக ஏற்படும் பிரிவால் வரும் வேதனை அவர்கள் முடிவை மறு பரிசீலனை செய்யவைக்கிறது. அதீத மான அன்புக்கும் சுதந்திர உணர்வுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் எது வெல்கிறது என்ற கேள்விக்கான பதிலாக விரிகிறது படம்.
 
படம் முழுவதும் இளமைத் துள்ள லின் உற்சாக அதிர்வை உணர முடி கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, மணிரத்னத்தின் வசனங்கள், காட்சி யமைப்புகள், பி.சி. ராம் செதுக்கி யுள்ள ஒளி-நிழல் சித்திரங்கள் ஆகியவை இளமையின் உற்சாகத்தையும் அனை வருக்குமான அழகியலையும் ரசனை யோடு முன்வைக்கின்றன. லீலா சாம்சனிடம் நித்யா மேனன் பாடிக் காட்டும் இடத்தில் இயக்குநர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர் வைர முத்து ஆகிய மூவரும் இணைந்து இனிமை யான அனுபவத்தை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். நாடகத்தன்மை யைத் தாண்டியும் அந்தக் காட்சி நம்மை ரசிக்கவைக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் பின்னணி இசை கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.
 
அகமதாபாதில் இஸ்லாமியக் கட்டிடக் கலையைப் பார்வையிடும் காட்சி அற்புதமானது. கம்பீரமான அந்தக் கட்டிடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் மனதில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன.
 
காதலை வெளிப்படுத்தும் காட்சி களில் இளமையும் ரசனையும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஊரி லிருந்து அண்ணன் குடும்பம் வரும் சமயத்தில் துல்கருக்கு ஏற்படும் பதற்றத்தை வைத்து நித்யா மேனன் விளையாடும் இடம் அழகு. பேருந்து, ரயில் பயணங்களில் பொங்கி வழியும் காதல் உணர்வுகளும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சின்னச் சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளன. காதல் வளரும் விதம் இயல்பாக இல்லை என்றாலும் இன்றைய இளைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதத்தில் காதல் காட்சிகள் உள்ளன.
 
காதலர்களின் பிரிவுக்கான கார ணம், மனம் மாறுவதற்கான சூழல் ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சினைக்கு வருவதற்குத் திரைக்கதை ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வதில் இரண்டாம் பாதியில் படம் மந்தமாகிறது. காதலின் ஈரத்தையும் காதலுக்குள் முளைக்கும் சண்டையையும் சமாதானத்தையும் சொல்லும் காட்சிகள் கடைசிவரை திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன.
 
படத்தின் முக்கியமான பிரச்சினைகள் இவை அல்ல. மணிரத்னம் சமகாலப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுக் கிறார். அதைப் பெருமளவில் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்துடன் சித் தரிக்கிறார். முரண்பாட்டை உருவாக்கி, வலுவான கதை முடிச்சாக மாற்றுகிறார். இந்த முடிச்சை அவிழ்க்கும் சவாலை எதிர்கொள்வதில் பலவீனமாக வெளிப் படுகிறார். புதியதொரு கேள்விக்குப் புதியதொரு பதில் இல்லை. பார்வை யாளர்களின் கற்பனைக்கு இடம் தரும் முடிவாகவும் அமையவில்லை. பழைய பதிலைத் தருவதில் தவ றில்லை. அந்தப் பதில் பாத்திரங்களின் அனுபவம் மூலம் வெளிப்படும் பதிலாக இருக்க வேண்டும். மாறாக, செயற்கையாக முன்வைக்கப்படும் பதிலாக இருக்கிறது. இதுதான் படத்தின் பலவீனம்.
 
மணிரத்னத்துக்கே உரிய ஒப்பனை களை மீறி வசனங்கள் பல இடங்களில் இயல்பாக இருக்கின்றன. “ஒரு சர்டிஃபிகேட் இருந்தா எல்லாம் சரியாயிடுமா?” என்பன போன்ற கூர்மையான வசனங்களும் உள்ளன. திருமண பந்தத்தைத் தவிர்ப்பதற்கான காரணங்களைச் சொல்லியிருப்பது போலவே, திருமணம் தவிர்த்த வாழ்க்கை யில் இருவரும் ஏற்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் வசனங்கள் சொல்கின்றன.
 
ரசனையும் அலட்டிக்கொள்ளாத தன்மையும் கொண்ட பாத்திரத்தில் துல்கர் சல்மான் கச்சிதமாகப் பொருந்து கிறார். படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விதமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய பாத்திரம் இவருக்கு. கடைசிக் காட்சியில் மட்டும் மாறுபட்ட நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்கிறது. நித்யா மேனனின் ‘துறுதுறு’ தோற்றமும் துள்ளல் நடிப்பும் படத்தின் சிறப்பம்சம். காதலின் வேகம், செல்லக் கோபம், சோகம் என எல்லா உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். பிரகாஷ் ராஜும், லீலா சாம்சனும் படத் துக்குக் கூடுதல் பரிமாணத்தை வழங்குகிறார்கள்.
 
இளமைத் துள்ளல் படத்தின் மிகப் பெரிய பலம். எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கையாளும் விதம் பலவீனம்.
 

நேற்று இப்படத்தினை பார்த்து விட்டு என் FB இல் இட்ட நிலைச்செய்தி

 

--------------

 

ஓ காதல் கண்மணி:

ஒரு களைப்பான பயணத்தின் போது, மழை பெய்து இருக்கையில், இடை நடுவில் ஓரக் கடை ஒன்றில் சுடச் சுட நல்ல பிளேன் ரீ குடித்த அனுபவம் போன்று இருக்கின்றது இப் படம்.

பிளேன் ரீயில் எந்த சத்தும் இருக்காது, நேற்றும் முந்த நாளும் கூட இதே வகையான பிளேன் ரீ குடித்து இருப்போம், நாளைக்கும் குடிப்போம்...ஆனால் களைப்பான பயணத்தின் நடுவே குடிக்கும் பிளேன் ரீ மனசுக்கு சுவையாக இருக்கும்.

கலை, அரசியல், அவை சார்ந்த சினிமா என்ற ஆழமான விடயங்களுக்குள் எல்லாம் இப் படத்தினை வைத்து பார்க்காமல், ஒரு hectic week இன் பின் சனி மாலையில் இரண்டரை மணித்தியாலங்கள் இளமையும், அழகும், முத்தங்களும், சின்ன சின்ன சிணுங்கல்களும் தொடுதல்களும் என்று romantic மனவோட்டத்துக்குள் இட்டு சென்று மனசை இலேசாக ஆக்கியது 'ஓ காதல் கண்மணி'

நித்தியா மேனனின் கண்கள் கன நாட்களுக்கு மறக்காது

  • கருத்துக்கள உறவுகள்

மணிரத்னத்திடமிருந்து பொறுப்பான நல்ல படங்களை நான் எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை. அப்படியே பொறுப்பான படங்கள் என்று கொண்டாடப்பட்ட படங்களும், 'அந்த அரபிக்கடலோரம் ஏ ஹம்மா ஹம்மா' போன்ற குத்துப் பாடல்கள் அடங்கிய அக்கதைக்கு சற்றும் ஒவ்வாத மசாலா சமாச்சாரங்களை அதிகம் கொண்டவை. சினிமா என்பது வியாபாரம். அதில் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்புபவர் ‘மணி'ரத்னம். கலை நேர்மை மணியைப் பொறுத்தவரை ‘கிலோ என்ன விலை?'.‘அலைபாயுதே'வுக்கு அப்புறம் ‘ என் பணி சினிமா எடுப்பது. வெற்றி தோல்விகளைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை' என்று சொல்லாமல் மவுனமாக அதை தன் படங்களில் உணர்த்தி வந்த மணிரத்னத்துக்கு ஒரு வணிகரீதியான வெற்றி தேவை என்று தோன்றியிருக்கும் என்பதை இப்படத்துக்கு அவர் எடுத்துக்கொண்டிருக்கும் கதையே காட்டிக் கொடுக்கிறது.தாலி கட்டிக்கொண்டு வெளியே சொல்லாமல் கூத்தடித்தால் அது ‘அலை பாயுதே'. தாலியே கட்டிக் கொள்ளமாட்டோம். ஆனால் கூத்தடிப்போம் என்றால் அது ‘ஓ காதல் கண்மணி'. ரெண்டு வரிகளில் சொல்வதானால் கதை இதுதான்.ஆனால் ரெண்டேகால் மணி நேரத்துக்கு இருந்தால்தான் படம் என்பதுபோல் கொஞ்சம் வளவளவென்று எழுதினால்தான் கதை என்று திருப்தி அடைகிறோம்.'வேஸ்ட் மாம்பலம்' பிராமின் பையன் துல்கர் சல்மான். வீடியோ கேம் டெவலப்பர். இவருக்கு பெரிய தொழில் அதிபர் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகவேண்டுமென்ற ஆசை. கோவை மில் அதிபர் மகள் நித்யா மேனன். இவருக்கு கட்டிட கலையில் ஆர்வம். பாரிஸில் செட்டில் ஆகவிரும்புகிறார்.இருவரும் தங்கள் தொழில் நிமித்தமாக மும்பையில் இருக்கிறார்கள். தோழியின் திருமணத்தில் சந்தித்து,ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் சைகையிலேயே செல்போன் எண் வாங்கி இரண்டாவது சந்திப்பிலேயே காதலாகி, மூன்றாவது சந்திப்பிலேயே காமமாகி கட்டிட கலையை மறந்து முழுநேரமும் முத்தமழை பொழிந்து, கட்டில் கலையிலேயே மூழ்கித் திளைக்கிறார்கள்.படம் முழுக்க பரஸ்பரம் எத்தனை முத்தங்கள் கொடுத்துக்கொண்டார்கள் என்று எண்ணிச் சொல்பவர்களுக்கு ஒரு மவுஸ் இலவசம்.நித்யா அம்மாவுக்கு திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமண வாழ்க்கை பற்றி அபிப்ராயம் இல்லை. மாம்பலம் அம்பிக்கும் அதே ஷேம் எண்ணம்தான்.இருவரும் வெளிநாடு செல்லும் வரை நன்றாக 'அனுபவித்துவிட்டு' பிரிந்து சென்று விடுவதாக உத்தேசம்.இவர்களின் முதல் செக்ஸ் காட்சியே நித்யாவின் லேடீஸ் ஹாஸ்டலில்தான் அரங்கேறுகிறது. அங்கேயே தொடர்ந்தால் ரசிகர்கள் லாஜிக் கேட்பார்களே என்று துல்கர் தான் தங்கியிருக்கும் பிரகாஷ்ராஜின் இல்லத்திற்கே அதிகாரபூர்வமாக அழைத்து வருகிறார்.'சமூகக்கேடான செயல் இது' என்று முதலில் எதிர்க்கும் பிரகாஷ்ராஜ், நித்யா மேனனின் பாடல் ஒன்றில் மயங்கி, அவர்கள் தாலி கட்டிக்கொள்ளாமல், தனது வீட்டில் கூடிக் களிக்க இடம் தருகிறார்.பிரகாஷ்ராஜின் மனைவி லீலா சாம்சனுக்கு அல்ஸீமர் என்னும் மறதி நோய். தெருவில் எங்காவது போய்க்கொண்டிருக்கும்போது வீடு போகத் தெரியாமல் எங்காவது அமர்ந்து விடுவார்.அந்த அல்ஸீமரை கிளைமாக்ஸில் கையில் எடுத்துக்கொண்டு வயசான காலத்துல ஒருத்தொருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்க கல்யாணம் தேவை என்ற உரத்த சிந்தனை ஒன்றை உதிர்க்கிறார். சுபம்.நல்லதோ கெட்டதோ இடைவேளை வரை படம் ஒரு டீன் ஏஜர்களின் காதல் போல ஜிவ்வென்று செல்கிறது. துல்கரும் நித்யாவும் இளமை ததும்பி வழிய கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.அப்புறம் மணிரத்னமும் அல்ஸீமர் நோய்க்கு ஆட்பட்டது போல், அடுத்து கதை செல்லவேண்டிய இடம் தெரியாமல் தேங்கி தெருவில் அமர்ந்து விடுகிறார்.‘லிவிங் டுகெதர்' பற்றிய கதை போன்ற இப்படத்தில் ‘கல்யாணத்துக்கு முன்பே இஷ்டத்துக்கு செக்ஸ் வைத்துக்கொண்டார்கள்' என்பது தாண்டி, அவ்வாழ்க்கை குறித்த உருப்படியான ஒரு பதிவு கூட இல்லை. காதல், காமக் கூத்து தாண்டி என்னிடம் இப்படத்தில் வேறு எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதில் மணி இவ்வளவு கறாராக இருந்திருக்க வேண்டியதில்லை என்பதே என் தாழ்மையான அபிப்ராயம்.படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் மேற்படி சொல்லப்பட்ட நான்கே பாத்திரங்கள். யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.அதிலும் நித்யா மேனன், தனது அந்நியோன்மான நடிப்பால் படம் பார்ப்பவர்களை காதல் கொள்ள வைக்கிறார். இடவேளை வரை துல்கரை திரையிலிருந்து அகற்றிவிட்டு, நித்யாவின் காதலனாக நான் இருந்தே படம் பார்த்தேன்.நித்யாவுக்கு கிடைக்கும் இந்த பாராட்டில் பாதிக்கும் மேற்பட்ட பங்குக்குச் சொந்தக்காரர் கண்டிப்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்தான். எத்தனையோ படங்களில் மொக்கை ஃபிகராகக் காணப்பட்ட நித்யாவை தேவதை போல் காட்ட அவரால் மட்டுமே முடியும்.மணி ஏமாற்றியது போல், ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கண்டிப்பாக ஏமாற்றவில்லை. ‘மன மன மெண்டல் மனதில்' மட்டும் எரிச்சலூட்டும் ரகம்.படத்தில் பி.சி.யின் ஒளிப்பதிவைத் தாண்டி என்னைக் கவர்ந்த இன்னொரு முக்கிய அம்சம் வசனங்கள். அவை மணியின் வழக்கமான ஒற்றை வரி நான்சென்ஸ்களிலிருந்து சற்றே வேறுபட்டிருந்தன. அவற்றை எழுதியவரை ஏனோ இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்.எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு நேர்காணலில் 'படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்ந்து சோபிக்கமுடியாமல் தேங்கி விடுகிறார்களே?' என்ற கேள்விக்கு, ‘அவர்கள் முற்றிய மரங்கள் போல் ஆகிவிடுகிறார்கள். ஒரு அளவுக்கு மேல் முற்றிய மரங்களிடம் கனிகளை எதிர்ப்பார்க்கக்கூடாது' என்பது போல ஒரு பதில் அளித்திருந்தார்.இந்த ‘ஓ காதல் கண்மணி' பார்த்தபோது மணிரத்னமும் அப்படி ஒரு முற்றிய மரமாகிவிட்டாரோ என்ற கவலையும், அப்படி ஆகிவிடக் கூடாது என்ற அக்கறையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. Read more at: http://tamil.filmibeat.com/cinemaakkaran-saalai/cinemakkaran-saalai-21-034132.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே

தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்

ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்

ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்

ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா

தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் - ரோஜா

தாலிகட்டாமல் தீவிரவாதியை கட்டிக் கொண்டு செத்தால் - உயிரே

குழந்தையைத் தத்து எடுக்கிறதுக்காக தாலி கட்டினால் - கன்னத்தில் முத்தமிட்டால்

தாலி கட்டாமல் பிள்ளை பெற்றால் - தளபதி

ஆகா ! மணிரத்னம் அவர்களே ஒரு தாலியை வைத்து எப்படி எல்லாம் சிந்தித்துள்ளீர்கள்.

ஆக , இன்றில் இருந்து மணிரத்தினம் - தாலிரத்தினம் என அழைக்கப்படுவார்

முகபுத்தகத்திலிருந்து....

  • கருத்துக்கள உறவுகள்

 

தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே

தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்

ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்

ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்

ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா

தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் - ரோஜா

தாலிகட்டாமல் தீவிரவாதியை கட்டிக் கொண்டு செத்தால் - உயிரே

குழந்தையைத் தத்து எடுக்கிறதுக்காக தாலி கட்டினால் - கன்னத்தில் முத்தமிட்டால்

தாலி கட்டாமல் பிள்ளை பெற்றால் - தளபதி

ஆகா ! மணிரத்னம் அவர்களே ஒரு தாலியை வைத்து எப்படி எல்லாம் சிந்தித்துள்ளீர்கள்.

ஆக , இன்றில் இருந்து மணிரத்தினம் - தாலிரத்தினம் என அழைக்கப்படுவார்

முகபுத்தகத்திலிருந்து....

 

 

என்ன மாதிரி எல்லாம், சிந்திக்கிறாங்கப்பா..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.