Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு கட்சி, தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி, தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது?

யதீந்திரா

0cf128af-8695-42ed-b75d-c6b7f2685bb31.jp

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தசாப்தகால வயதுண்டு. ஆனாலும் ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரை தசாப்தகால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்?

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில், தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய தேவை முன்னரைவிடவும் அதிக கனதியுடைய தேவையாக மாறியிருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் முன்னாள் விடுதலை இயக்க பின்னணி கொண்ட கட்சிகள் இந்த விவகாரத்தை தொடர்ந்தும் பிற்போட முடியாதென்னும் வாதத்தை முன்வைத்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அண்மையில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இராஜவரோதயம் சம்பந்தனின் கொழும்பு இருப்பிடத்தில் இரண்டு சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது கூட்டமைப்பை பதிவு செய்வதில் தாமதங்கள் ஏற்படுமிடத்து, முதலில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் கட்சிகளுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்பதில் இணக்கம் காணப்பட்டது. இது தொடர்பில் நான்கு கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலும் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

மேற்படி சந்திப்பின்போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசு கட்சியின் உறுப்பினர்களுடன் பேசிய பின்னர் இது தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக உடன்பட்டிருந்தார். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ஊடக செய்திகளின்படி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவதாயின் அதில் தமிழரசுக் கடசிக்கு 51 வீதம், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 வீதம் என்னும் அடிப்படையில் அதிகாரம் வரையறுக்கப்பட வேண்டுமென்று தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பில் மாவை சேனாதிராஜா எந்தவொரு மறுப்பையும் வெளியிட்டிருக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறித்துக்கொள்ளலாம். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையிட்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புரிந்துணர்வு உடன்படிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து மீண்டும் இந்த விவாதம் அண்மைக்காலத்தில் முற்றுப்பெறப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

மேலும் கிடைக்கும் தகவல்களின்படி, சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதும் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி சந்திப்பின் போதும், தமிழரசு கட்சியின் தனித்துவம் பற்றியே வகுப்பெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் மிகவும் நேர்மையாக ஒரு கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது. அதாவது, தமிழரசு கட்சியின் தனித்துவம் என்பது என்ன? தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் மேலான ஒரு கட்சிநலன் இருக்க முடியுமா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்த் தேசிய அரசியலை ஏகபோகமாக கையாண்ட காலத்தில், தமிழரசு கட்சியென்று ஒன்று இருப்பதாகவே எவருக்கும் நினைவிருந்திருக்காது. மேலும் தமிழரசு கட்சியை நினைவுகொள்ள வேண்டிய தேவையும் எவருக்கும் இருந்திருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் அதுவரை எதிரணியில் நின்றுகொண்டிருந்த பிரதான ஜனநாயக கட்சிகள் அனைத்தையும் ஓரணிப்படுத்தி, புலிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவானவர்களாக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டனர். இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட ஒரு முரண்பாட்டின் விளைவாகவே அதுவரை கவனிப்பாரற்றுக் கிடந்த தமிழரசு கட்சி மீண்டும் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் எட்டிப் பார்த்தது. இதுதான் தமிழரசுக் கட்சி மீண்டும் தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்த வரலாறு.

உண்மையில் வரலாற்றுரீதியாக பார்த்தால், ஒப்பீட்டடிப்படையில் தற்போது கூட்டமைப்பிற்குள் அங்கம் வகித்துவரும் கட்சிகளிலேயே தனித்துவம் பற்றி பேச முடியாத கட்சியென்று ஒன்றிருக்கின்றதென்றால், அது தமிழரசு கட்சி மட்டும்தான். ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர், தமிழரசு கட்சி என்னும் ஒரு கட்சி தமிழர் அரசியல் அரங்கிற்குள்ளேயே இருந்திருக்கவில்லை. அப்படியானதொரு கட்சி எவ்வாறு இன்று தனித்துவம் பற்றி பேச முடியும்? உண்மையில் இன்று தமிழரசு கட்சிக்கு, தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஒரு முகம் இருக்கிறதென்றால், அந்த பெருமை பிரபாகரனையே சாரும். அவர் போட்ட பிச்சையின் காரணமாகவே இன்று சிலரால் நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் என்று பெருமைகொள்ள முடிகிறது. இதிலுள்ள சுவாரசியமான விடயம் என்னவென்றால், தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தில் வெளிவந்த பல தலைவர்கள் கொல்லப்பட்டதும் இதே புலிகளால்தான். பிரபாகரன் 1987இல் இந்திய பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் கைகளுக்கு அதிகாரம் செல்வதை தான் விரும்பவில்லை, அதனால்தான் அவர்களை நான் எதிர்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார். ஒருவேளை அதற்குப் பழிதீர்க்கும் வகையில்தான் இன்றைய தமிழரசு கட்சி செயற்படுகின்றதா?

இந்த இடத்தில் கட்சிகளின் சொந்த முகம் பற்றியும் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இதனையும் இணைத்து வாசிக்கும் போதுதான், ஒரு அரசியல் வாசகர் தமிழரசு கட்சியின் கையறுநிலையை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். அண்மையில் கனடிய தமிழ் இணைய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில், கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், சில கட்சிகளுக்கு தங்களது சொந்தப் பெயரில் மக்களை எதிர்கொள்ள விருப்பமில்லை. அவர்களுக்கென்று சில பின்னணிகள் உண்டு. அந்த பின்னணிகளுடன் மக்களை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆனால், அவ்வாறானவர்களுக்கு தங்களின் கட்சியை விட்டுவிட்டு தமிழரசு கட்சியுடன் இணைந்து கொள்ளவும் விருப்பமில்லை. இப்படியானவர்கள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டுமென்று கூறுகின்றனர். அதாவது அவர்கள் அனைவரும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூட்டமைப்பை ஒரு ஐந்தாவது கட்சியாக பதிவுசெய்யுமாறு கோருகின்றனர் என்றவாறு தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் மிகவும் தெளிவாகவே பேசியிருக்கின்றார். அதாவது, தற்போது கூட்டமைப்பிற்குள் அங்கம்வகிக்கும், குறிப்பாக கட்சிப் பதிவு தொடர்பில் பேசிவரும் முன்னைநாள் போராட்ட அமைப்புக்கள் எவையும், தங்களின் சொந்த முகத்தில் தமிழ் மக்களை எதிர்கொள்ள முடியாதவை. சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், மற்றும் அடைக்கலநாதன் ஆகியோருக்கு சொந்த முகம் இல்லை. அதனால்தான் அவர்கள் புதியதொரு முகத்திற்குள் மறைந்துகொள்ள முற்படுகின்றனர் என்பதாகவே சுமந்திரனின் கருத்துக்களை நான் விளங்கிக் கொள்கிறேன். இதனை வேறு விதமாக விளங்கிக் கொள்ளவும் முடியாது. சுமந்திரன் சொல்வது போன்று தங்களுக்கு சொந்த முகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதற்கு மேற்படி மூன்று கட்சிகளின் தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். அவர்கள் சார்பில் இந்த பத்தி பதிலளிக்கவும் முடியாது. ஆனால் கட்சிகளின் சொந்த முகம் பற்றி என்னிடம் சில அபிப்பிராயங்கள் உண்டு. அதனை இங்கு இணைத்துக் கொள்வது, அரசியல் வாசகர்களுக்கு பயனுடையதாக இருக்கலாம்.

0cf128af-8695-42ed-b75d-c6b7f2685bb34.jp

என்னுடைய கணிப்பில், தற்போது வடக்கு கிழக்கை தளமாகக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்துவரும் அனைவருமே தங்களின் சொந்த முகங்களில் இல்லை. இது தமிழரசு கட்சியிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வரையில், அனைவருக்கும் பொருந்தும். தமிழரசு கட்சி தன்னுடைய சொந்த முகத்திலா தமிழ் மக்களை எதிர்கொண்டு வருகின்றது? எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும் எந்தவொரு கட்சியும் தங்களின் சொந்த முகம் பற்றிய விவாதங்களில் ஈடுபட முடியாது. இந்த யதார்த்தத்தை கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. அதனை உணர்ந்தே அவை செயற்பட்டும் வருகின்றன. ஒருவேளை தமிழரசு கட்சிக்கு தன்னுடைய சொந்த முகத்தில் நம்பிக்கையிருப்பின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், வெறும் தமிழரசு கட்சியாக மக்களை எதிர்கொண்டு தங்களின் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

ஏனெனில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, தமிழரசு கட்சி தன்னுடைய சொந்த முகத்தில் மக்களை எதிர்கொண்டதில்லை. மாறாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே மக்களை எதிர்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களும் தமிழரசு கட்சியை ஆதரிக்கவில்லை. மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து வருகின்றனர். இதனை கேள்விக்குள்ளாக்க வேண்டுமாயின் தமிழரசு கட்சியினர் தங்களுக்கு கூட்டமைப்பு என்னும் நாமம் தேவையில்லை, தங்களால் தங்களின் சொந்த பெயரில் தமிழ் மக்களிடம் செல்ல முடியும் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். அதன் பின்னர் சுமந்திரன் போன்றவர்கள் சொந்த முகத்தின் பிரகாசம் பற்றி விவாதிப்பார்களாயின் அதில் பொருளிருக்கும். அதற்கு தாங்கள் தயாரா என்பதை தமிழரசு கட்சியினர் தமிழ் மக்கள் முன் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போகின்றோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அறிவிக்கக்கூடிய ஆற்றல் தமிழரசு கட்சியிடம் இருக்கிறதா?

கட்சிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட சூழலில், அதனால் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான வெறும் கருவிகளேயன்றி, சிலரது சொந்த நலன்களை பாதுகாப்பதற்கான கருவியல்ல. தமிழரசு கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் மக்களின் தேசிய நலன்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையிலேயே அமைந்திருக்கிறது. மேலும் அடுத்து இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பல புதுமுகங்களை தமிழரசு கட்சி களமிறக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதில் ஒரு சிலர் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அரசியலுடன் தொடர்புபடாதவர்கள் என்றும் அறிய முடிகிறது. இதில், ஒருவர் மகிந்தவின் புதல்வர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் என்றும் கொழும்பில் அரசல்புரசலாக தகவல்கள் கசிகின்றன. இவர் எதிர்வரும் தேர்தலில் முல்லைத்தீவில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

மொத்தத்தில், தமிழரசு கட்சி தற்போது தமிழ் மக்களை எங்கு கொண்டு சேர்க்க விரும்புகிறது என்னும் கேள்வியே எஞ்சிக்கிடக்கிறது? ஆனால் அது நிச்சயமாக தமிழ் மக்களுக்கு நன்மையான, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஒரு தெளிவான பாதையில் தமிழரசு கட்சி இல்லை என்பது மட்டும் உண்மை. அவ்வாறானதொரு உயர்ந்த நோக்கம் தமிழரசு கட்சிக்கு இருந்திருப்பின், இன்று பங்குடமை வர்த்தக நிறுவனங்களில் பங்குபிரிப்பது போன்று, 51 வீதம், 49 வீதம் பங்குபிரிப்பு பற்றி விவாதித்திருக்காது. உண்மையில் இவ்வாறான பங்குபிரிப்பு பற்றி தமிழரசு கட்சியினர் பேசுவதானது, இதுவரை தமிழ்த் தேசியத்திற்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்தவர்களை எள்ளிநகையாடும், கேவலப்படுத்தும் ஒரு செயலாகும்.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=0cf128af-8695-42ed-b75d-c6b7f2685bb3

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒருவேளை தமிழரசு கட்சிக்கு தன்னுடைய சொந்த முகத்தில் நம்பிக்கையிருப்பின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் தமிழரசு கட்சியாக மக்களை எதிர்கொண்டு தங்களின் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இவைக்கு புலியின் பெயரை சொல்லிதான் ஆகாசத்தில் பறப்பு  என்பது இந்த வாத்து கூட்டங்களுக்கு மறந்து போச்சு .

 

(1) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தசாப்தகால வயதுண்டு. ஆனாலும் ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரை தசாப்தகால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்?

 

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில்தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய தேவை முன்னரைவிடவும் அதிக கனதியுடைய தேவையாக மாறியிருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் முன்னாள் விடுதலை இயக்க பின்னணி கொண்ட கட்சிகள் இந்த விவகாரத்தை தொடர்ந்தும் பிற்போட முடியாதென்னும் வாதத்தை முன்வைத்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அண்மையில் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இராஜவரோதயம் சம்பந்தனின் கொழும்பு இருப்பிடத்தில் இரண்டு சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது கூட்டமைப்பை பதிவு செய்வதில் தாமதங்கள் ஏற்படுமிடத்துமுதலில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் கட்சிகளுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்பதில் இணக்கம் காணப்பட்டது. இது தொடர்பில் நான்கு கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலும் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

 

பதில்: ஆக சம்பந்தர் கூட்டணியின் தலைவர் அல்ல. அவர் வெறுமனே " கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும்"ஒருவர். இந்தக் கட்டுரையாளரின் கண்டுபிடிப்பு இது. இதிலிருந்து இந்த கட்டுரையாளரின் நடு நிலைமை பளிச்சிடுகிறது.

 

(2) மேற்படி சந்திப்பின்போதுதமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாதமிழரசு கட்சியின் உறுப்பினர்களுடன் பேசிய பின்னர் இது தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பதாக உடன்பட்டிருந்தார். ஆனால்தற்போது வெளியாகியிருக்கும் ஊடக செய்திகளின்படியாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதுபுரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவதாயின் அதில் தமிழரசுக் கடசிக்கு 51 வீதம்ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 வீதம் என்னும் அடிப்படையில் அதிகாரம் வரையறுக்கப்பட வேண்டுமென்று தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பில் மாவை சேனாதிராஜா எந்தவொரு மறுப்பையும் வெளியிட்டிருக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறித்துக்கொள்ளலாம். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையிட்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்புரிந்துணர்வு உடன்படிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து மீண்டும் இந்த விவாதம் அண்மைக்காலத்தில் முற்றுப்பெறப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

 

பதில்: சம்பந்தரை   கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் என்று விழித்த கட்டுரையாளர்  இபிஎல்ஆர்எவ் சுரேஷ் பிறேமச்சந்திரனை குறிப்பிடும் போது "ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்என அவரது முழுத் தரவுகளையும்  வெளியிடுகிறார். இதில் இருந்து இவர் அந்தக் கட்சிக்கு வக்காலத்து வாங்கும் எழுத்தாளர் என்பது துல்லியமாகத் தெரிகிறது.  நான்கு கட்சிகளுக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்?  புளட் கட்சியின் தலைவர் சித்தார்த்தனுக்கும் 14  ஒரு பங்கா?  வி.புலிகளை தோற்கடித்ததில் புளட் கட்சிக்கும் கணிசமான பங்குண்டு என்று சொன்ன ஒருவருக்கும் வி.புலிகளை தமிழ்மக்களது ஏகப்பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொண்ட மற்றக் கட்சிகளும் ஒன்றா?

 

(3) மேலும் கிடைக்கும் தகவல்களின்படிசில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதும் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி சந்திப்பின் போதும்,தமிழரசு கட்சியின் தனித்துவம் பற்றியே வகுப்பெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் மிகவும் நேர்மையாக ஒரு கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது. அதாவதுதமிழரசு கட்சியின் தனித்துவம் என்பது என்னதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும் மேலான ஒரு கட்சிநலன் இருக்க முடியுமாதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்த் தேசிய அரசியலை ஏகபோகமாக கையாண்ட காலத்தில்தமிழரசு கட்சியென்று ஒன்று இருப்பதாகவே எவருக்கும் நினைவிருந்திருக்காது. மேலும் தமிழரசு கட்சியை நினைவுகொள்ள வேண்டிய தேவையும் எவருக்கும் இருந்திருக்கவில்லை.

 

பதில்: "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்த் தேசிய அரசியலை ஏகபோகமாக கையாண்ட காலத்தில்தமிழரசு கட்சியென்று ஒன்று இருப்பதாகவே எவருக்கும் நினைவிருந்திருக்காது" அந்த "எவரும் யார் யார் என்று சொல்லமுடியுமா?" தமிழரசுக் கட்சிக்கு ஒரு நீண்டநெடியதியாகம் செறிந்த வரலாறு இருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்த காலத்திலும் அதனைக் கொண்டு நடத்தியவர்கள் தமிழரசுக் கட்சியினரே. 

 

(4) இவ்வாறானதொரு பின்னணியில்தான் அதுவரை எதிரணியில் நின்றுகொண்டிருந்த பிரதான ஜனநாயக கட்சிகள் அனைத்தையும் ஓரணிப்படுத்திபுலிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவானவர்களாக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டனர். இதன்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட ஒரு முரண்பாட்டின் விளைவாகவே அதுவரை கவனிப்பாரற்றுக் கிடந்த தமிழரசு கட்சி மீண்டும் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் எட்டிப் பார்த்தது. இதுதான் தமிழரசுக் கட்சி மீண்டும் தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்த வரலாறு.

 

பதில்: மேலே குறிப்பிட்டபோல  தமிழர் விடுதலைக் கூட்டணியின் இயங்கு சக்தி  தமிழரசுக் கட்சிதான்.  தமிழ்க் காங்கிரஸ் அல்ல. அதன் செயலாளரா நீண்ட காலம் இருந்தவர் அ. அமிர்தலிங்கம் அவர்களே. கட்டுரையாளர் தமிழரசுக்கட்சியை மட்டம் தட்ட மெத்தப் பாடுபடுகிறார். அது நடவாது.

 

(5) உண்மையில் வரலாற்றுரீதியாக பார்த்தால்ஒப்பீட்டடிப்படையில் தற்போது கூட்டமைப்பிற்குள் அங்கம் வகித்துவரும் கட்சிகளிலேயே தனித்துவம் பற்றி பேச முடியாத கட்சியென்று ஒன்றிருக்கின்றதென்றால்அது தமிழரசு கட்சி மட்டும்தான். ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர்தமிழரசு கட்சி என்னும் ஒரு கட்சி தமிழர் அரசியல் அரங்கிற்குள்ளேயே இருந்திருக்கவில்லை. அப்படியானதொரு கட்சி எவ்வாறு இன்று தனித்துவம் பற்றி பேச முடியும்?

 

பதில்: இதற்கான விடை மேலே உள்ளது.  மீண்டும் சொல்கிறேன். தமிழரசுக் கட்சியை மட்டம் தட்டுவதில்  ஏன் இந்த கொலைவெறி?

 

 (6) உண்மையில் இன்று தமிழரசு கட்சிக்குதமிழ் மக்கள் மத்தியில்குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஒரு முகம் இருக்கிறதென்றால்அந்த பெருமை பிரபாகரனையே சாரும். அவர் போட்ட பிச்சையின் காரணமாகவே இன்று சிலரால் நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் என்று பெருமைகொள்ள முடிகிறது. இதிலுள்ள சுவாரசியமான விடயம் என்னவென்றால்தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தில் வெளிவந்த பல தலைவர்கள் கொல்லப்பட்டதும் இதே புலிகளால்தான். பிரபாகரன் 1987இல் இந்திய பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்தமிழர் விடுதலைக் கூட்டணியின் கைகளுக்கு அதிகாரம் செல்வதை தான் விரும்பவில்லைஅதனால்தான் அவர்களை நான் எதிர்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார். ஒருவேளை அதற்குப் பழிதீர்க்கும் வகையில்தான் இன்றைய தமிழரசு கட்சி செயற்படுகின்றதா?

 

பதில்:  அது சரியென்றால் 2010 இல் புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட தங்கேஸ்வரிகனகரத்தினம்கிஷோர்பத்மினி சிதம்பரநாதன்செல்வராசா கஜேந்திரன்கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  எல்லோரும் தேர்தலில் போட்டியிட்டு தோற்றது மட்டுமல்ல கட்டுக்காசுகளையும் இழந்தார்களே?   என்ன காரணம்?  செல்வராசா கஜேந்திரனின் 112,000 விருப்பு வாக்குகள்  திருநீலகண்டரின்  திருவோடு மாதிரி  காணாமல் போனதே! என்ன காரணம்தமிழர் விடுதலைக் கூட்டணியை தன்னோடு ஆனந்தசங்கரி கொண்டு சென்றுவிட்டதால் எஞ்சிய கட்சிகளில் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது கஜேந்திரகுமார் காங்கிரஸ் கட்சிதான் பழம்பெரும் கட்சி அதில் போட்டியிட வேண்டும்  என்று சொன்னபோது தலைவர் பிரபாகரன் அதனை நிராகரித்து தமிழரசுக் கட்சியில் போட்டியிடுமாறு பணித்தார். ஏன் அவர் அப்படியான முடிவு எடுத்தார்தமிழரசுக் கட்சிதான் பலமுள்ள கட்சி. கறைபடியாத வரலாற்றுக்குச் சொந்தமான கட்சி என்பது அவருக்குத் தெரியும்.

 

(7) இந்த இடத்தில் கட்சிகளின் சொந்த முகம் பற்றியும் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இதனையும் இணைத்து வாசிக்கும் போதுதான்ஒரு அரசியல் வாசகர் தமிழரசு கட்சியின் கையறுநிலையை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். அண்மையில் கனடிய தமிழ் இணைய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில்,கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்சில கட்சிகளுக்கு தங்களது சொந்தப் பெயரில் மக்களை எதிர்கொள்ள விருப்பமில்லை. அவர்களுக்கென்று சில பின்னணிகள் உண்டு. அந்த பின்னணிகளுடன் மக்களை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆனால்அவ்வாறானவர்களுக்கு தங்களின் கட்சியை விட்டுவிட்டு தமிழரசு கட்சியுடன் இணைந்து கொள்ளவும் விருப்பமில்லை. இப்படியானவர்கள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டுமென்று கூறுகின்றனர். அதாவது அவர்கள் அனைவரும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால்அவர்கள் கூட்டமைப்பை ஒரு ஐந்தாவது கட்சியாக பதிவுசெய்யுமாறு கோருகின்றனர் என்றவாறு தெரிவித்திருந்தார்.

 

 

அதாவதுதற்போது கூட்டமைப்பிற்குள் அங்கம்வகிக்கும்குறிப்பாக கட்சிப் பதிவு தொடர்பில் பேசிவரும் முன்னைநாள் போராட்ட அமைப்புக்கள் எவையும்தங்களின் சொந்த முகத்தில் தமிழ் மக்களை எதிர்கொள்ள முடியாதவை. சுரேஸ் பிரேமச்சந்திரன்சித்தார்த்தன்மற்றும் அடைக்கலநாதன் ஆகியோருக்கு சொந்த முகம் இல்லை. அதனால்தான் அவர்கள் புதியதொரு முகத்திற்குள் மறைந்துகொள்ள முற்படுகின்றனர் என்பதாகவே சுமந்திரனின் கருத்துக்களை நான் விளங்கிக் கொள்கிறேன். இதனை வேறு விதமாக விளங்கிக் கொள்ளவும் முடியாது. சுமந்திரன் சொல்வது போன்று தங்களுக்கு சொந்த முகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதற்கு மேற்படி மூன்று கட்சிகளின் தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். அவர்கள் சார்பில் இந்த பத்தி பதிலளிக்கவும் முடியாது. ஆனால் கட்சிகளின் சொந்த முகம் பற்றி என்னிடம் சில அபிப்பிராயங்கள் உண்டு. அதனை இங்கு இணைத்துக் கொள்வதுஅரசியல் வாசகர்களுக்கு பயனுடையதாக இருக்கலாம்.

 

 பதில்: சுமந்திரன் மிகவும் தெளிவாகவே பேசியிருக்கின்றார்.  யதார்த்தத்தை சொல்லியிருக்கிறார். சொந்த முகம் இல்லை என்று சுமந்திரன் சொல்லவில்லை.  அவர்களுக்குள்ள வரலாற்றுப் பின்னணியில்  அவர்களால் தனித்து போட்டி போட நினைத்தால் அது பின்னடைவைக் கொடுக்கலாம்  என்று மட்டும் சொன்னார். முகம்கங்கள் பற்றி அவர் சொல்லைவில்லை. அது கட்டுரையாளர் இட்டுக் கட்டிச் சொல்லும் புனைகதை.

 

(8) என்னுடைய கணிப்பில்தற்போது வடக்கு கிழக்கை தளமாகக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்துவரும் அனைவருமே தங்களின் சொந்த முகங்களில் இல்லை. இது தமிழரசு கட்சியிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வரையில்அனைவருக்கும் பொருந்தும். தமிழரசு கட்சி தன்னுடைய சொந்த முகத்திலா தமிழ் மக்களை எதிர்கொண்டு வருகின்றதுஎனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்துவரும் எந்தவொரு கட்சியும் தங்களின் சொந்த முகம் பற்றிய விவாதங்களில் ஈடுபட முடியாது. இந்த யதார்த்தத்தை கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் உணர்ந்திருக்கின்றன. அதனை உணர்ந்தே அவை செயற்பட்டும் வருகின்றன. ஒருவேளை தமிழரசு கட்சிக்கு தன்னுடைய சொந்த முகத்தில் நம்பிக்கையிருப்பின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்வெறும் தமிழரசு கட்சியாக மக்களை எதிர்கொண்டு தங்களின் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

 

பதில்: கட்டுரையாளர் அரசியலில்  தானொரு சாணக்கியன் என நினைக்கிறார். தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு தேர்தல் என்று வரும்போது ததுகூ என்ற குடை அமைப்பில் போட்டியிடுகிறது. இதுவே கடந்த15 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  தென்னிலங்கையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இருக்கிறது. அதே நேரம்  தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடைக் கட்சியின் கீழ்த்தான் சுதந்திரக் கட்சி தேர்தலை சந்திக்கிறது. அதை வைத்துக் கொண்டு சுதந்திரக் கட்சி பலமில்லாத கட்சி என்ற முடிவுக்கு வருவது முட்டாள்த்தனம்.  உண்மையில் ஐமசுமு இல் யார்யார்  போட்டியிட வேண்டும் என்பதை சுதந்திரக் கட்சிதான் தீர்மானிக்கிறது. இரண்டுக்கும் நேற்றுவரை ஒருவரே தலைவராகவும் இருக்கிறார்.

 

(9) ஏனெனில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்துதமிழரசு கட்சி தன்னுடைய சொந்த முகத்தில் மக்களை எதிர்கொண்டதில்லை. மாறாகதமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே மக்களை எதிர்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களும் தமிழரசு கட்சியை ஆதரிக்கவில்லை. மாறாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து வருகின்றனர். இதனை கேள்விக்குள்ளாக்க வேண்டுமாயின் தமிழரசு கட்சியினர் தங்களுக்கு கூட்டமைப்பு என்னும் நாமம் தேவையில்லை,தங்களால் தங்களின் சொந்த பெயரில் தமிழ் மக்களிடம் செல்ல முடியும் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். அதன் பின்னர் சுமந்திரன் போன்றவர்கள் சொந்த முகத்தின் பிரகாசம் பற்றி விவாதிப்பார்களாயின் அதில் பொருளிருக்கும். அதற்கு தாங்கள் தயாரா என்பதை தமிழரசு கட்சியினர் தமிழ் மக்கள் முன் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போகின்றோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அறிவிக்கக்கூடிய ஆற்றல் தமிழரசு கட்சியிடம் இருக்கிறதா?

 

பதில்: தேர்தல் என்றால் என்ன மல்யுத்தச் சண்டையாகட்டுரையாளர் ததேகூ க்குள் இருக்கும் கட்சிகளுக்கு  இடையே சிண்டுமுடியப் பார்க்கிறார். தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என்றால் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். ஆனால் கட்டுரையாளரின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழரசுக்  கட்சி அணியமாக இல்லை!

 

(10) கட்சிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட சூழலில்அதனால் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான வெறும் கருவிகளேயன்றிசிலரது சொந்த நலன்களை பாதுகாப்பதற்கான கருவியல்ல. தமிழரசு கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் மக்களின் தேசிய நலன்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையிலேயே அமைந்திருக்கிறது. மேலும் அடுத்து இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பல புதுமுகங்களை தமிழரசு கட்சி களமிறக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதில் ஒரு சிலர் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அரசியலுடன் தொடர்புபடாதவர்கள் என்றும் அறிய முடிகிறது. இதில்ஒருவர் மகிந்தவின் புதல்வர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் என்றும் கொழும்பில் அரசல்புரசலாக தகவல்கள் கசிகின்றன. இவர் எதிர்வரும் தேர்தலில் முல்லைத்தீவில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

 

பதில்:   அப்படியென்ன சொந்த நலங்கள்யார் பேணுகிறார்கள்இப்படிப் பொத்தாம் போக்கில் சொன்னால் அதன் பொருள் என்ன?  தமிழ் மக்களின் தேசிய நலன்களுக்கு  முற்றிலும் மாறுபட்ட வகையிலேயே அமைந்திருக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறீர்?  என்ன குருவி சாத்திரம் பார்க்கிறாரா?  புது முகங்களை கொண்டுவருவது வராமல் விடுவது தமிழ் அரசுக் கட்சியல்ல ததேகூ முடிவெடுக்கும்.  கட்டுரையாளர் வீணே தனது தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. எல்லாவற்றுக்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கவலையை விடவும்.

 

(11) மொத்தத்தில்தமிழரசு கட்சி தற்போது தமிழ் மக்களை எங்கு கொண்டு சேர்க்க விரும்புகிறது என்னும் கேள்வியே எஞ்சிக்கிடக்கிறதுஆனால் அது நிச்சயமாக தமிழ் மக்களுக்கு நன்மையானதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஒரு தெளிவான பாதையில் தமிழரசு கட்சி இல்லை என்பது மட்டும் உண்மை. அவ்வாறானதொரு உயர்ந்த நோக்கம் தமிழரசு கட்சிக்கு இருந்திருப்பின்இன்று பங்குடமை வர்த்தக நிறுவனங்களில் பங்குபிரிப்பது போன்று, 51 வீதம், 49 வீதம் பங்குபிரிப்பு பற்றி விவாதித்திருக்காது. உண்மையில் இவ்வாறான பங்குபிரிப்பு பற்றி தமிழரசு கட்சியினர் பேசுவதானதுஇதுவரை தமிழ்த் தேசியத்திற்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்தவர்களை எள்ளிநகையாடும்கேவலப்படுத்தும் ஒரு செயலாகும். 

 

பதில்: தமிழ்மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அதையே ததேகூதமிழ் அரசுக் கட்சி எடுக்கும்.  தமிழரசுக் கட்சிக்கு தெளிவான பாதை இருக்கா இல்லையா என்பதையிட்ட தீர்ப்பை மக்களிடம் விட்டு விடுவோம். கட்டுரையாளர் முந்திரிக் கொட்டைமாதிரி முந்திக் கொண்டு முடிவுக்கு வரக் கூடாது.  அது சரி தன்னைப் புத்திசாலி என நினைக்கும் கட்டுரையாளர் ஏன் ஒரு கட்சி தொடங்கி தமிழ்மக்களுக்கு சரியான பாதை காட்டக் கூடாதா?

 

 - நக்கீரன்
  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகளை தமிழ்மக்களது ஏகப்பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொண்ட மற்றக் கட்சிகளும் ஒன்றா?

"- நக்கீரன்" இவருக்கு தமிழரசுக்கட்சியினரின் தற்போதய நிலை தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா அடுத்த 30 வருடங்களுக்குள் முள்ளிவாய்க்கால் வரை கொண்டுசெல்லாது என நம்பலாம்! அதுவரை பிரச்சினையில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயதபோராட்டம் எப்படி ஆரம்பமானது என்டு கன பேருக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
 

பிரபாகரன் மீது விசுவாசம் கொண்டவராக இருந்தால், சுமந்திரனை அல்லவா முதலில் எதிர்க்க வேண்டும்? – கனடா நக்கீரனிடம் யதீந்திரா கேள்வி

165a7295-3841-47f0-b9b2-b25e229d7f321.jp

 

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்!

மின் அஞ்சல் வழியாக பலருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் நக்கீரனின் அபிப்பிராயங்களுக்கு பதிலளிக்கும் அதேவேளை மேலும் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலும் இந்தக் குறிப்புக்களை எழுதுகின்றேன். நான் பொதுத்தளங்களில் சவால்களை சந்திக்க விரும்புவனேயன்றி, இவ்வாறு மின்னஞ்சல் வழியாக எவரையும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஏனெனில் இது கருத்துருவாக்க வகைக்கு பொருத்தமான ஊடகமல்ல. எனினும், எனது பெயரை விழித்து நக்கீரன் எழுதியிருப்பதால், அது பலருக்கும் மின் அஞ்சல் செய்யப்பட்டிருப்பதால், அவரது அபிப்பிராயங்கள் தொடர்பில் சில குறிப்புக்களை பகிர்ந்துகொள்ள விளைகின்றேன். நான் இறுதியாக எழுதிய 'தமிழரசு கட்சி தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது' என்னும் கட்டுரை தொடர்பிலேயே நக்கீரன் எதிர்வினையாற்றியிருக்கிறார். இக்கட்டுரை தினக்குரல் பத்திரிகையிலும் பொங்குதமிழ் இணையத்திலும் வெளியாகியிருந்தது.

முதலில், எனது மாவட்டத்தில் நானும் வாக்களித்து தெரிவு செய்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயாவை, 'கூட்டமைப்பின் தலைவராக அறியப்படுபவர்' என்று நான் ஏன் விழிக்க வேண்டியேற்பட்டது என்பதற்கான பதிலை பார்ப்போம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பின்னணியில்தான், தமிழ் மக்கள் தங்களின் முதன்மையான அரசியல் தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டனர். இதன் பின்னர்தான் சம்பந்தன் ஐயா கூட்டமைப்பின் வழியாக தமிழ் மக்களின் தலைவராக அங்கீகாரம் பெற்றார். இதனை எவராலும் மறுக்க முடியாது. 2009இற்கு முன்னதாக, சம்பந்தன் ஐயா எங்கும் தமிழ் மக்களின் தலைவராக அடையாளம் காணப்பட்டதாகவோ அல்லது அவ்வாறு அவர் முக்கியத்துவப்படுத்தப்பட்டதாகவோ எவரேனும் கூற முடியுமா? அனைத்துமே வேலுப்பிள்ளை பிரபாகரனால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது.

ஒருவேளை யுத்தம் மேலும் ஒரு வருடம் நீடித்திருந்தால் சம்பந்தன் ஐயா, பேசாமல் அரசியலிலிருந்தே ஒதுங்கியிருக்கவும் கூடும். ஏனெனில் அந்தளவிற்கு அவர் முக்கியத்துவமற்ற ஒருவராகவே இருந்தார். இதனை மற்றவர்கள் எவரையும் விட ஐயாவே நன்கறிவார். இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் அழிவு அவருக்கு தலைவர் அதிகாரத்தை வழங்கியது. அவரது வயது, தோற்றம், மிதவாத பாரம்பரியத்தில் அவருக்கு இணையாக நிற்பதற்கு வேறு எவரும் இல்லாத நிலைமை, இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து அவரை நிகரற்ற ஒருவராக மாற்றியது. உண்மையில் சம்பந்தன் ஐயா தமிழ் மக்களின் தலைவரானது ஒரு விபத்து. நான் சம்பந்தன் ஐயா தலைவரானது குறித்து ஆரம்பத்தில் கர்வத்துடனும் எழுதியிருக்கிறேன். ஏனெனில் அவர் எனது ஊரவர்.

சம்பந்தன் ஐயாவை தலைவராக ஏற்றுக்கொள்ள எவரும் தயங்கியதில்லை. கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவரை தங்களின் தலைவராகவே ஏற்றுக் கொண்டனர். இன்று கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவுசெய்ய வேண்டுமென்று வாதிட்டுவரும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட, சம்பந்தன் ஐயாவை தலைவராக ஏற்க முடியாதென்று எங்கும் கூறவில்லை. ஆனால் பலரும் சம்பந்தன் ஐயாவை தலைவராக ஏற்றுக்கொண்ட போதிலும் கூட, சம்பந்தனை கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழ் மக்களின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ளாத ஒருவர் இருக்கிறார் என்றால் அது சம்பந்தன் ஐயா மட்டுமேயாகும். இன்றுவரை சம்பந்தன் ஐயா தன்னை எங்கும் கூட்டமைப்பின் தலைவராக அடையாளப்படுத்தியதில்லை. மாறாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவராகவே அடையாளப்படுத்தி வருகின்றார். அவர் எழுத்து மூலம் அனுப்பும் ஆவணங்கள் எதிலும் தன்னை தலைவர், கூட்டமைப்பு என்று விழிப்பதில்லை. ஏன்? அவரே தன்னை கூட்டமைப்பின் தலைவராக அடையாளப்படுத்த விரும்பாத போது, நான் ஏன் அடையாளப்படுத்த வேண்டும்?

ஆரம்பத்தில் நானும் அவரை கூட்டமைப்பின் தலைவராகவே எழுதி வந்தேன். ஆனால் அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் சிலவற்றை உற்றுநோக்கிய பின்னர்தான், அவரை 'அறியப்படும் தலைவர்' என்று விழிப்பதே சரியானதென்று கருதினேன். அதனைத்தான் அவரும் விரும்புவார். அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்திருந்தால் அல்லது, அவர் அவ்வாறு இருக்க விரும்பியிருந்தால், கூட்டமைப்பை ஒரு தனியான அரசியல் கட்சியாக பதிவுசெய்ய வேண்டுமென்னும் விவாதம் இன்றுவரை தொடர்ந்திருக்காதே! ஆரம்பத்தில் பதிவு விவகாரத்தில்தான் முரண்பாடுகள் நிலவின. ஆனால் இன்று கூட்டமைப்பிற்குள் கொள்கை அடிப்படையிலும் உடன்பாடு இல்லை என்பது வெள்ளிடைமலை. ஜனாதிபதி தேர்தலின்போது பொது எதிரணி வேட்பாளரை ஆதரித்து அறிக்கை வெளியிட்டமை, சிறிலங்காவின் 67வது சுதந்திர தினத்தில் பங்குகொண்டமை, தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றமை - இதன் போதெல்லாம் ஐயா கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டாரா? அவர் தலைவரென்றால் மற்றவர்களுடன் கலந்தாலோசித்தல்லவா முடிவை எடுத்திருக்க வேண்டும்? இங்கு எந்தவொரு இடத்திலும் சம்பந்தன் ஐயா தன்னை கூட்டமைப்பின் தலைவராகக் காண்பிக்கவில்லையே! ஐயாவே தன்னை தலைவராக காண்பிக்க விரும்பாத போது, நான் மட்டும் ஏன் அதனைச் செய்ய வேண்டுமென்று ஒருவர் எதிர்பார்க்கலாம்?

இவற்றை குறிப்பாக உணர்த்தும் நோக்கில்தான் அண்மைக்காலமாக 'கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் சம்பந்தன்' என்று விழித்து வருகின்றேன். கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்டமைப்பாக வலுப்படுத்தி, அதனடிப்படையில் தெளிவானதொரு அரசியல் கோரிக்கையை முன்வைத்து செயற்படக்கூடிய, ஓர் ஒழுங்கு உருவாகாத வரையில், சம்பந்தன் ஐயா கூட்டமைப்பின் தலைவர் அல்ல, மாறாக, அவர் ஒரு அறியப்படும் தலைவர் மட்டுமே!

நான் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு வக்காலத்து வாக்குவதாக ஒரு கண்டுபிடிப்பை வேறு இந்த அன்பர் செய்திருக்கிறார். எவருக்கும் வக்காலத்து வாங்கும் நோக்கில் எதனையும் எழுதவேண்டிய தேவை எனக்கில்லை. நான் தொடர்ச்சியாக கருத்துருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்திவருபவன் என்னும் வகையில், பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தன் ஐயாவை நியாயப்படுத்தியும் எழுதியிருக்கிறேன். எனது விமர்சனங்கள் என்பவை எவர் மீதான தனிப்பட்ட கோபதாபங்களின் வெளிப்பாடல்ல. மாறாக, குறிப்பிட்ட சூழலை கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் எதிர்வினைகள் மட்டுமே! இதனை இவ்வாறு பார்க்கக் கற்றுக்கொள்வது அவசியம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஆனால் நக்கீரன் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலை ஆழ்ந்து நோக்கும் ஒவ்வொருவருக்கும் விளங்கும், நக்கீரன் எந்தளவிற்கு தமிழரசு கட்சிக்காக வக்காலத்து வாங்கியிருக்கின்றார் என்பது.

165a7295-3841-47f0-b9b2-b25e229d7f324.jp

நான் பல முறை கூட்டமைப்பை விமர்சித்திருக்கிறேன். விடுதலைப் புலிகளையும் விமர்சித்திருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் துள்ளியெழாத இவர், இப்போது தமிழரசு கட்சி பற்றி எழுதியதும் ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்? அதற்கும் ஒரு காரணமுண்டு, அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக, குறிப்பாக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களில் பலரும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர். இவ்வாறானதொரு பின்னணியில்தான், புலிகளின் ஆதரவாளர்களும் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்று மாவை சேனாதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறானதொரு சூழலில்தான் எனது கட்டுரையும் பிரசுரமாகியிருக்கிறது. இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியாமல்தான், இவ்வாறான 'காட்போர்ட்' போராட்டத்தில் நக்கீரன் ஈடுபட்டிருக்கிறார். மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் எழுதியிருக்கும் 'என் எழுத்தாயுதம்' என்னும் நூலில் தமிழரசு கட்சியினரை 'கார்ட்போர்ட் சண்டியர்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த நூல் அறிமுகத்தின் போது,  மாவையையும் மேடையில் வைத்துக் கொண்டே நான் இதனைக் குறிப்பிட்டு பேசியிருந்தேன். 

அன்பர் நக்கீரன், இப்படி வேறு குறிப்பிட்டிருக்கின்றார் – நான்கு கட்சிகளுக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்?  புளட் கட்சியின் தலைவர் சித்தார்த்தனுக்கும் 1/4 பங்கா? வி.புலிகளை தோற்கடித்ததில் புளட் கட்சிக்கும் கணிசமான பங்குண்டு என்று சொன்ன ஒருவருக்கும் வி.புலிகளை தமிழ்மக்களது ஏகப்பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்ட மற்றக் கட்சிகளும் ஒன்றா?

இதைப் பற்றி பேசும்போது ஏனோ புல்லரிப்பதுண்டு, அந்தளவிற்கு இது பரவசமான விடயம். அன்பர் நக்கீரன் சொல்கின்றார், சித்தார்த்தன் புலிகளை அழித்ததில் தங்களுக்கு கணிசமான பங்குண்டு என்று சொன்னதாக – மேலும் அவர் வி.புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நக்கீரன் கிறுக்கியிருக்கிறார். 

ஆனால் இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால், சம்பந்தன் ஐயாவோ வேறு கதையல்லவா சொல்கின்றார். ஐயா சொல்கின்றார் - புலிகளை வேறு எவரும் அழிக்கவில்லை, அவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொண்டனராம். பிரபாகரன் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மதிக்காததால் அல்லவா அழிந்து போனதாக ஐயா சொல்கின்றார். மேலும் சம்பந்தன் ஐயா இன்னொரு விடயமும் சொல்லியிருக்கிறார். தனது நல்ல நண்பரான லக்ஸ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதாக அல்லவா ஐயா சொல்லியிருக்கிறார். உண்மையில் சித்தார்த்தன் சும்மா ஜோக் அடித்திருக்கிறார் போல, ரணில் விக்கிரமசிங்க இந்திய மீனவர்களை சுடுவோம் என்று நகைச்சுவையாக சொன்ன மாதிரி. ஆனால் உண்மையில் புலிகள் எப்படி அழிந்து போனார்கள் என்பதை சம்பந்தன் ஐயா அல்லவா அழகாக ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார். ஆதனை கீழே பார்க்கவும். இதனை ஐயா வேறு எங்கும் சொல்லவில்லை, 2012 இல் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதல்லவா இவற்றை குறிப்பிட்டார். இதன் போது நக்கீரன் எங்கிருந்தார்?

They never observed human rights, they never observed democracy. These were their failings. A lot of people claim credit for destroying the LTTE. I say the LTTE destroyed itself by not observing democracy, by not observing human rights and that was the truth. The late Hon. Lakshman Kadirgamar, our former Member of Parliament, a most respected Member of Parliament and my good Friend, played a very leading role in ensuring that the LTTE was weakened, that the LTTE was paralyzed, that the LTTE structures in many countries the world over were dismantled. He was largely responsible for the support of the international community to Sri Lanka to defeat the LTTE  -http://dbsjeyaraj.com/dbsj/archives/13539

இதனை வாசித்தால் தமிழரசு கட்சி விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கட்சி என்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா? பதில் உங்களிடமுண்டு. உண்மையில் இன்று தமிழரசு கட்சி மட்டும்தான், விடுதலைப் புலிகளை முடிந்தளவிற்கு கேவலப்படுத்திவரும் ஒரேயொரு கட்சியாகும். விமர்சனம் என்பது வேறு, கேவலப்படுத்தல் என்பது வேறு. நானும் பல தடவைகள் நிகழ்காலத்தை கையாளுவதற்கு, கடந்தகாலம் குறித்த அவதானம் அவசியம் என்னும் அடிப்படையில் விடுதலைப் புலிகளை விமர்சித்திருக்கிறேன். இன்று வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனது விமர்சன நியாயத்தை விளங்கிக் கொள்வார்களென்றும் நான் நம்புகிறேன்.

தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் சுமந்திரன், அண்மையில் கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்னும் தொனியில் பதிலளித்திருக்கின்றார். ஆனால் நக்கீரன் கூறுகின்றார், தமிழரசு கட்சி விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட கட்சியாம். இதென்ன பகிடி?

சுமந்திரனின் பதிலை கீழே பாருங்கள்.

There are some concerns regarding the TNA being given the position of the leader of the opposition as there is an allegation that the TNA supports the LTTE and their ideology. Is this so?

A: No we do not have any allegiance to the LTTE nor are we committed to their ideology. We stand up for the rights of the Tamil people but we are not in favour of terrorism nor do we encourage it and everyone knows this.

http://www.thesundayleader.lk/2015/04/19/tna-has-no-loyalty-towards-ltte

விடுதலைப் புலிகள் தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, நாங்கள் பயங்கரவாதத்தின் மீதான நாட்டம் கொண்டிருக்கவில்லை என்று ஏன் சுமந்திரன் பதிலளிக்க வேண்டும்? இவ்வாறு கூறுபவர்களை முக்கியமானவர்களாக கொண்டிருக்கும் கட்சியான தமிழரசு கட்சிக்காக, வரிந்த கட்டிக்கொண்டு வந்திருக்கும் நக்கீரன், பிரபாகரனை தேசியத் தலைவர் என்று வேறு கூறுகின்றார். சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரது ஆதரவாளராக இருக்கின்ற ஒருவர், எவ்வாறு பிரபாகரனை தேசிய தலைவராக கொள்ள முடியும்? இந்த இடத்தில் நக்கீரனின் முகமூடி கழன்று தொங்குகிறதல்லவா! நக்கீரன் உண்மையிலேயே பிரபாகரன் மீது விசுவாசம் கொண்டவராக இருந்தால், முதலில் அவர் தமிழரசு கட்சிக்கு எதிராக அல்லவா போர்க்கொடி உயர்த்த வேண்டும். குறிப்பாக சுமந்திரனை எதிர்க்க வேண்டுமல்லவா! ஆனால் இங்கு வக்காலத்து அல்லவா வாங்கிக் கொண்டிருக்கிறார். சுமந்திரன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடுவது அவரது சொந்தக் கருத்தாகும். ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கும் உரித்துண்டு. ஆனால் கேள்வி நக்கீரன் வகை தமிழரசு கட்சிக்காரர்கள் அதனை ஏற்கிறார்களா? மாவை ஏற்பாரா?

மேலும் நக்கீரன் சொல்கிறார் சுமந்திரன் சொந்த முகம் பற்றி பேசவில்லையாம் நான் இட்டுக் கட்டுகிறேனாம். இதிலுள்ள காணொளி ஒன்றை பாருங்கள். http://www.tamilkingdom.org/2015/03/blog-post_729.html

முகம் என்று சுமந்திரன் சொல்லவில்லையாம். இந்த காணொளியை நன்றாக செவிமடுங்கள்: 'சில சில கட்சிகள் தங்களின் பெயரில் தொடர்ந்து இருக்கிறதுக்கு அவர்களுக்கு விருப்பமில்ல. ஏனெண்டால் தங்களுக்கு ஒரு பின்னணி இருக்குது அல்லோ! அந்த பின்னணியை கொண்டு முன்னால போறதுக்கு அவர்களுக்கு விருப்பமில்ல’.

முகம் என்றால் என்ன, பெயர் என்றால் என்ன எல்லாம் ஒண்டுதானே நக்கீரரே! இதனை விளங்கிக் கொள்ளும் திறன் ஒருவருக்கு இல்லாது போனால் அவர் குறித்து பரிதாபப்படலாம். மேலும் இங்கு சுமந்திரன் கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியல்ல என்றும் சொல்லியிருக்கிறார். கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியில்லையென்றால் அதற்கு எப்படி சம்பந்தன் ஐயா தலைவராக இருக்க முடியும்? அவரை அவ்வாறு சொல்ல வேண்டுமென்று கோருவது முட்டாள்தனமல்லவா!

இவ்வாறு சுமந்திரன் கூறுவதனால்தான் - நான் முடிந்தால் தமிழரசு கட்சி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து, அதாவது, தங்களின் சொந்த பெயரில் மட்டும் முன்னால் சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தேன். அதனைத்தான் மீண்டும் கேட்கின்றேன். முடிந்தால் தமிழரசு கட்சியினர் எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவையில்லை. எங்களிடம் கறைபடியாத கட்சியுண்டு. அதனால் மக்களை தனித்து எதிர்கொள்ள முடியும் என்று கூறி மக்களிடம் செல்லட்டும், பார்ப்போம்! அதற்கான ஆற்றல் தமிழரசு கட்சிக்கு உண்டா? தமிழரசு கட்சி தனித்து, தங்களின் கறைபடியாத சொந்த பெயரில் மக்களை எதிர்கொள்ளட்டும், ஏனையவர்கள் அதாவது, கறைபடிந்த, சுமந்திரன் சொல்வது போன்று சொந்த பெயரில் முன்னால் போக முடியாதவர்கள் ஒரு கூட்டமைப்பாக போட்டியிடட்டும். பார்ப்போம், திருகோணமலையில் சம்பந்தன் ஐயா வெற்றி பெறுவதை?

மேலும் இங்கு நக்கீரன் ஒரு புதுக் கதை புனைந்தும் தமிழரசு கட்சியை காப்பாற்ற முற்பட்டிருக்கின்றார். கஜேந்திரகுமார் காங்கிரஸ் கட்சிதான் பழம்பெரும் கட்சி, அதில் போட்டியிட வேண்டும் என்று சொன்னபோது, தலைவர் பிரபாகரன் அதனை நிராகரித்து தமிழரசுக் கட்சியில் போட்டியிடுமாறு பணித்தார். ஏன் அவர் அப்படியான முடிவு எடுத்தார்? தமிழரசுக் கட்சிதான் பலமுள்ள கட்சி. கறைபடியாத வரலாற்றுக்குச் சொந்தமான கட்சி என்பது அவருக்குத் தெரியும். பிரபாகரன் அப்படி கூறினார், இப்படி கூறினார் என்று எவரும் சொல்லலாம். ஏனெனில் அதன் உண்மை பொய் பற்றி உரைக்க இன்று எவரும் இல்லை. ஆனால், தமிழரசு கட்சியை அன்று புலிகள் தெரிவு செய்ததற்கு காரணம் அது பலமுள்ள கட்சி, கறைபடியாத கட்சியென்பதால் அல்ல. மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியை பயன்படுத்த முடியாத நிலைமை தோன்றியது. அதனால் தமிழரசு கட்சியை பயன்படுத்தும் முடிவை வி.புலிகள் எடுத்தனர்.

இதற்கு பெரிய விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. உண்மையில் உதயசூரியன் சின்னத்திலான தமிழர் விடுதலைக் கூட்டணியைத்தான் வி.புலிகள் தெரிவு செய்தனர். அதுதான் சரியானதும். ஏனெனில் தமிழ் மக்கள் தனி நாட்டுக்கான தங்களின் ஆணையை வழங்கியது உதயசூரியன் சின்னத்திலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே அன்றி, வீட்டு சின்னத்தையுடைய தமிழரசு கட்சிக்கல்ல. 1990களுக்கு பின்னரான தமிழ் தலைமுறைக்கு தெரிந்த ஒரேயோரு அமைப்பு வி.புலிகள் அமைப்புத்தான். தெரிந்த ஒரேயொரு தலைவர், அண்ணன், தம்பி, பெரியவர் அனைத்தும் பிரபாகரனே. பிறகு எதற்காக தமிழரசு கட்சியை ஒருவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் எனது கட்டுரையில் குறிப்பிட்டது போன்று இன்று தமிழரசு கட்சி பற்றி பேசப்படக்கூடிய நிலைமை இருக்கிறதென்றால் அது பிரபாகரன் போட்ட பிச்சையாகும். அதாவது சுமந்திரனின் வார்த்தையில் பயங்கரவாதிகள் போட்ட பிச்சை.

நக்கீரன் போன்றவர்கள், ஒன்றிற்காக வக்காலத்து வாங்கும் போதும் கூட, ஆழ்ந்த அறிவோடும், தேடலோடும் களம் புக வேண்டும். ஏனென்றால் நான் விதண்டாவாதம் செய்யும் நபரல்ல. அன்பர் நக்கீரன் இயலாமையில் இறுதியில் தெற்கின் சிங்கள கட்சிகளிடம் சரணடைந்துவிட்டார். தென்னிலங்கையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இருக்கிறது. அதே நேரம் தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற குடைக் கட்சியின் கீழ்த்தான் சுதந்திரக் கட்சி சந்திக்கிறது. அதை வைத்துக் கொண்டு சுதந்திரக் கட்சி பலமில்லாத கட்சி என்ற முடிவுக்கு வருவது முட்டாள்தனம். உண்மையில் ஐமசுமு  இல் யார், யார் போட்டியிட வேண்டும் என்பதை சுதந்திரக் கட்சிதான் தீர்மானிக்கிறது.

கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துவம் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஒடுக்கும் அரச இயந்திரத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஒப்பிடுவதைப் போல ஒரு முட்டாள்தனம் வேறில்லை. மக்களின் நலன் பெரிதென்று சிந்தித்து செயற்படுவதே இன்றைய தேவை. அதற்காகவே கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய சக்தியாக கட்டியெழுப்ப வேண்டும். கஜேந்திரகுமார் போன்றவர்களுடனும் உரையாட வேண்டும். கட்சிகள் வெறும் கருவிகளே. கருவியின் பணி முடியும்வரை அதனை தீட்டி, கூர்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் அரசியல் கருவியை கூர்மையாக வைத்திருப்பதற்கு, தமிழரசு கட்சி தடையாக இருப்பின் அதனை தூக்கியெறிய, அதனை எதிர்த்து குரல் கொடுக்க தமிழ்த் தேசிய சக்திகள் தயங்கக் கூடாது.

தமிழரசு கட்சிக்கு நான் எதிரானவல்ல. ஆனால் கட்சித் தனித்துவம் எவர் பேசினும் அவர்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதே எனது அபிப்பிராயம். அதற்கான காலம் இதுவல்ல. இது காயங்களை ஆற்றுவதற்காக, காயங்கள் ஆறிய பின்னர் மக்கள் நலனை நோக்கி முன்னகருவதற்கான காலம். தமிழ்த் தேசிய சக்திகள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியமாக வேண்டும் என்பதே எனது அவா. அதற்கான ஒரு சிறு முயற்சியே எனது எழுத்துக்கள். என் பணி தொடரும்.

 

 
 
 
 
4/25/2015 11:04:39 AM
 
 

 

தமிழரசு கட்சிக்கு, அவர்கள் எங்கை போகினம் எண்டு தெரியாது. இந்த லட்சனத்தில தமிழ் மக்களை தமிழரசுகட்சி எங்கை கொண்டுபோறது 

  • கருத்துக்கள உறவுகள்

Surveyor உங்களுக்கு விளங்குது அதுகளுக்கும் அதுகளின் வால்பிடிகளுக்கும் விளங்கவில்லையே .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.