Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரமுத்துவும் மாயச்சூழலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவும் மாயச்சூழலும்

வா. மணிகண்டன்

புகழ் ஒரு மாயச் சூழல். இழுத்துக் கொண்டேயிருக்கும். யாராவது நம்மைக் கவனிக்கத் தொடங்கும் போதே ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். அதன் பிறகு அந்தப் புகழ் இன்னமும் பரவ வேண்டும் என மனம் விரும்புகிறது. அதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். அந்த வெளிச்சம் ஒரு போதை. போதை குறையும் போதெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதையெல்லாம் செய்ய வேண்டும் என கணக்குப் போட்டு அதன்படி காய்களை நகர்த்துகிறோம். மீண்டும் தாங்கிப்பிடித்துவிட்டால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் ஒரு படி கீழே இறங்கவும் தயங்குவதில்லை. ஒரு படி இரண்டு படிகளாகி இரண்டு படிகள் என்பது மூன்று படிகளாகி எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கும் போதுதான் சந்தி சிரிக்கிறது.

நமது புகழ் பரவுகிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வயிற்றெரிச்சல், பொறாமை, இயலாமை அல்லது உண்மையான காரணங்கள் எது வேண்டுமானாலும் பின்னணியில் இருக்கக் கூடும் ஆனால் புகழ் வெளிச்சம் அதிகரிக்க அதிகரிக்க எதிரிகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கும். ஒரேயொரு வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் அவர்கள். நாமே அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் நமது கதை முடிந்தது என்று அர்த்தம். நேர்மை, நாணயம், அறம், புண்ணாக்கு, பருத்திக் கொட்டை என்ற ஏதாவதொரு காரணத்தை முன்வைத்து அடித்து நொறுக்கி சிதைத்துச் சின்னாபின்னமாக்கி தொங்கவிட்டுவிடுவார்கள். ஊரே சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் போது யாருடைய சட்டையையும் பிடித்து ‘என்னை அடிக்கிறயே நீ ஒழுக்கமா?’ என்று கேட்க முடியாது. அவனும் ஒழுக்கமில்லைதான். அவனும் அயோக்கியன்தான். ஆனால் என்ன செய்ய முடியும்?

kavi_photo.jpg

வைரமுத்து அப்படித்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார். குமுதத்தில் தான் எழுதிக் கொண்டிருப்பதைப் பாராட்டி ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தை எழுதி அவரது பழைய கையொப்பத்தையும் பயன்படுத்தி ‘இதுதான் ஜெயகாந்தனின் கடைசி ஆவணம்’ என்று குமுதத்திலும் வெளியிட்டுவிட்டார்களாம். ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயகாந்தனிடம் சிபாரிசு வாங்க வேண்டிய இடத்தில்தான் வைரமுத்து இருக்கிறாரா என்ன? அவர் அடைய வேண்டிய புகழ் என்று ஏதாவது மிச்சமிருக்கிறதா? தமிழ் வாசிக்கத் தெரிந்த அத்தனை பேருக்கும் வைரமுத்துவைத் தெரிந்திருக்கும். அதற்குப் பிறகும் ஏன் தவியாய்த் தவிக்கிறார் என்றுதான் புரியவில்லை.

நமக்கான ஒரு இடத்தை அடைந்த பிறகு- இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது- எது நமக்கான இடம் என்பதே குழப்பம்தான். போதும் என்கிற மனமெல்லாம் வாய்ப்பதில்லை. ‘இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்’ என்கிற ஆசையில் அறிவை இழந்து, அறிவின் கட்டுப்பாட்டை இழந்து எதையாவது செய்து அடைந்த புகழை இன்னும் உயரச் செய்வதையே கவனமாகச் செய்யத் துவங்குகிறது மனம். வைரமுத்து அப்படியான ஒரு சிக்கலில் இருக்கிறார்.

பாரதிக்குப் பிறகு மிகப்பெரிய புகழை அடைந்த தமிழ்க்கவிஞனாக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அப்படியான ஆசை இருப்பதில் தவறொன்றுமில்லை. அதற்கான மேடை மொழி, மீசை, உடை, பாவனை என அத்தனையையும் மாற்றியமைத்திருக்கிறார். இதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லை. யார் வேண்டுமானாலும் ஆசைப்பட்டுவிடலாம். ஆனால் அந்த இடத்தை அடைவதற்கான முயற்சிகளோடு வெகுசிலர்தான் நகர்கிறார்கள். வைரமுத்து நகர்ந்து கொண்டிருந்தார். ஆனால் தாம் விரும்புகிற இடத்தை அடைய முடியாது போய்விடக் கூடும் என்று பதறுகிறார். அதற்கான சாத்தியங்கள் அருகிக் கொண்டே வருவதாக நம்பத் தொடங்கியிருக்கிறார். அதுதான் வைரமுத்துவின் பிரச்சினை. அதனால்தான் மரணப்படுக்கையில் கிடந்த ஜெயகாந்தனின் சிபாரிசு தேவைப்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊரில் பொங்கல் விழா நடந்தது. வைரமுத்துதான் சிறப்பு விருந்தினர். ஒரு திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. இடமில்லாமல் வெளியில் நின்றபடியே ஏகப்பட்ட பேர் மெகா திரைகளில் கவிஞரின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும் வரை ஒரு ஆள் நகரவில்லை. வைரமுத்துவின் திறமைக்குச் சேர்ந்த கூட்டம் அது. அவரது எழுத்து மற்றும் பேச்சு மீதான நம்பிக்கையில் கூடியிருந்தார்கள். கோபிச்செட்டிபாளையம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் கூட அவ்வளவு பெரிய கூட்டத்தை அசையாமல் கட்டிப் போடும் ஆளுமையுடைய எழுத்தாளர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. வைரமுத்துவை தமிழ்ச் சமூகத்தின் சாமானிய மனிதன் நம்புகிறான். இந்த மொழிக்காகவும் இனத்துக்காகவும் சிந்திக்கிற கவிஞன் என்று வைரமுத்துவை ஏற்றிப் பிடிக்கிறான். ஆனால் வைரமுத்துவுக்கு ஓரளவு புரிதல் இருக்கிறது அல்லவா? அதனால் அவர் தன்னை நம்புவதில்லை. தமக்குச் சேர்கிற கூட்டமும் இந்தப் புகழும் தனக்குப் பின்னால் காலியாகிவிடும் என்று பயப்படுகிறார். அதனால்தான் விருதுகளையும் சிபாரிசுகளையும் தேடித் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்.

வயது கூடக் கூட வரக் கூடிய இயல்பான பதற்றமும் பயமும்தான் இது. மருமகள் வந்தவுடன் தனது இடம் கேள்விக்குள்ளாகிவிடும் என்று பயப்படுகிற மாமியாரின் மனநிலைதான் இது. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. அம்மாவின் இடம் அம்மாவுக்குத்தான். இளங்கவிஞர்கள் தனது இடத்தைப் பிடிக்கிறார்கள் என்று வைரமுத்து பயப்படுகிறார் போலிருக்கிறது. அடுத்த தலைமுறை வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் முந்தய தலைமுறையின் இடத்தைக் காலி செய்துவிட முடியாது. psychological crisis இது. ஆனால் ஒன்று- எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் ரஜினி தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆரின் இடத்தை அடைய முடியாது. ரஜினிக்குப் பிறகு இவர்தான் என்று யாரை நோக்கியும் விரலை நீட்ட முடியாது. ரஜினியின் இடம் ரஜினிக்குத்தான். அப்படித்தான் வைரமுத்துவும் என்று நம்புகிறேன். எப்படி பட்டுக்கோட்டையாரின் பெயரையும் கண்ணதாசனின் பெயரையும் வைரமுத்துவால் ஸ்வாஹா செய்துவிட முடியாதோ அப்படித்தான் முத்துக்குமாராலும் யுகபாரதியாலும் வைரமுத்துவை விழுங்கிவிட முடியாது. பாரதியின் பெயருக்கு அடுத்தபடியாக வரவில்லையென்றாலும் தமிழ் வரலாற்றில் வைரமுத்துவின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். இதைக் கூட புரிந்து கொள்ளாத அளவுக்கு சாமானிய மனநிலையோடுதான் கவிப்பேரரசு இருக்கிறார் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

http://www.nisaptham.com/2015/04/blog-post_21.html

குமுதத்தின் கப்ஸா : ஜெயகாந்தன் மகள் பாய்ச்சல்

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள தகவல் :

Deepalakshmi.jpg

சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:

இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.

அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.

ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!

அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.

இப்படி எழுதியிருக்கிறார்.

குமுதம் வார இதழில் வெளியான அந்தக் கடிதமும், செய்தியும் :

JK1.jpg

Vairamuthu.jpg

JK.jpg

ஏற்கனவே விகடன் மேடையில் ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து ஒருமுறை எழுதப் போய் அது இளையராஜா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

வைரமுத்து எழுதிய அந்தச் செய்தி :

ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.

வணக்கம். வைரமுத்து பேசுகிறேன்.

என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.

அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.

‘பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.

‘கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். ‘நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம்.

விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, ‘நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.

கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

http://www.seythigal.com/?p=6070

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் மேலே மேலே ஏறிப்போனாலும் சராசரி மனித இயல்பிலிருந்து மீளமுடியவில்லையே....

நானும்  கண்ணதாசன் எனக்கு  எழுதிய  வாழ்த்துக்கடிதம்  வெளியிடலாம்  என்று  இருக்கிறேன்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கண்ணதாசன் எனக்கு எழுதிய வாழ்த்துக்கடிதம் வெளியிடலாம் என்று இருக்கிறேன் :icon_idea:

புங்குடுதீவில எந்த கண்ணதாசனா இருக்கும்:)

புங்குடுதீவில எந்த கண்ணதாசனா இருக்கும் 

இதே  ஆச்சரியம்  என்றால் எங்க  அப்பத்தாக்கு  சின்னப்பா  தேவர்  எழுதிய  காதல்  கடிதம்  கிடக்கு அதை  போட்டால்  உங்கள்  நிலை  ஜி  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.