Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டைக் காப்பாற்ற மகிந்தவும் மைத்திரியும் ஒன்றிணைய வேண்டும்! - என்கிறார் கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைக் காப்பாற்ற மகிந்தவும் மைத்திரியும் ஒன்றிணைய வேண்டும்! - என்கிறார் கோத்தபாய

[Wednesday 2015-04-22 08:00]
gotabaya-rajapaksa-200-news.JPEG

நாட்டை பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கை கோர்த்துக்கொள்ள வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஆறு ஆண்டுகள் பதவி வகிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

எனவே அவர் அவரது கடமைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும், விரைவில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தி மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இருவரும் இணைந்து மீண்டும் செயற்பாட்டு ரீதியான ஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்கி நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

 

மஹிந்த ராஜபக்ஷ் மீளவும் வர வேண்டுமென மக்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஷ்விற்கு 5.8 மில்லியன் மக்கள் வாக்களித்திருந்தனர் எனவும், அதனை விடவும் தற்போது மக்கள் ஆதரவு பல்கிப் பெருகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டில் யார் ஆட்சி செய்கின்றார்கள் யார் உண்மையில் நாட்டின் தலைவர் என்பது தொடர்பில் மக்கள் குழப்பமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒரு புறத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச நிர்வாக கடமைகளை ஆற்றி வரும் அதேவேளை, சந்திரிக்கா, சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித போன்றவர்ளும் அரச நிர்வாகத்தை தாங்கள் கட்டுப்படுத்துவதாக அறிவித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் தொழில்களை இழந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

யுத்தத்தை தாமே வெற்றியீட்டியதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறி வருகின்ற போதிலும், 30 ஆண்டுகளாக இராணுத்தில் இருந்த போதும் அவரால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடியவில்லை எனவும், ராஜபக்ஷ் சகோதரர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னரே யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது எனவும் கோத்தபாய ராஜபக்ஷ் இந்திய ஊடக மொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=130693&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.