Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு! - கொக்கிளாயில் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு! - கொக்கிளாயில் பதற்றம். photo.png

[Thursday 2015-04-23 07:00]
kokilai-land-230415-200-seithy.jpg

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று கடந்த செவ்வாயன்று காலை முறியடிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற தமிழ் மக்கள் மேற்படி முயற்சியை நீண்ட நேர போராட்டத்தின் பின் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் பெருந்தொகையான சிங்கள மக்களும் கூடியதால் அப்பகுதியில் ஒரு முறுகல் நிலை தோன்றியது.

  

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் நில அளவையாளர்களும் தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர். ஏற்கனவே குறித்த காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் தமிழ் மக்களிடம் இருக்கிற நிலையில் சட்ட விரோதமான முறையில் இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்ற தகவலை அறிந்தவுடன் முன்கூட்டியே அவ்விடத்திற்கு வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் நில அளவை செய்யும் முயற்சியை அனுமதிக்கவில்லை.

 

முதலில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த நில அளவையாளரிடம் ரவிகரன் சூழ்நிலை பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். சட்டவிரோதமான இச்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டார். இதையடுத்து முல்லைத்தீவு கரைந்துரைப்பற்று பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டு நில அளவையாளர் சூழ்நிலை பற்றி விளக்கினார். ஆனால் அவர் நில அளவையை மேற்கொள்ளுமாறு மீண்டும் கூறியதாக நில அளவையாளர் ரவிகரனிடமும் மக்களிடமும் தெரிவித்தார்.

 

உடனே ரவிகரன் “இது ஒரு சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான நடவடிக்கை. ஏற்கனவே தமிழ் மக்களின் பெயரில் இருக்கிற காணிகளை இவ்வாறு அதிகாரபூர்வமாக அபகரிக்க முனைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீங்கள் நில அளவை செய்வதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். நீங்கள் உங்கள் முயற்சியைக் கைவிடும் வரை இவ்விடத்தை விட்டு நாங்கள் நகரமாட்டோம் என்று நேரடியாக கூறிவிட்டார்.

 

பின்னர் முல்லைத்தீவு கரைந்துரைப்பற்று பிரதேச செயலரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ரவிகரன் நிலவரத்தை நேரடியாக அழுத்தமாகத் தெரிவித்தார்.

இவ்வாறிருக்க தமிழ் மக்களின் காணிகளை தங்களின் காணி என்று கூறிக்கொண்டு சில பெரும்பான்மை மக்களும் அவ்விடத்தில் கூடிவிட்டனர். அதேவேளை தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தரும் அங்கே வந்தடைந்தார். ஒரு கட்டத்தில் பெரும்பான்மை மக்கள் அந்தக் காணிகள் தங்களுடையது என்று கூற தமிழ் மக்களும் ரவிகரனும் காணி ஆவணங்களை முன்னிறுத்தி அங்கிருந்தோர் முன்னிலையில் வாதாட ஒரு முறுகல் நிலை அங்கே தோன்றியது.

 

எனினும் தங்கள் நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக ரவிகரனும் மக்களும் இருந்த நிலையில் நில அளவையாளர்களும் தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தரும் தங்கள் முயற்சியைக் கைவிட்டுச் சென்றனர். முற்பகல் நிகழ்ந்த இச்சம்பவத்தால் கொக்கிளாய் பகுதியில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

kokilai-land-230415-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=130761&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.