Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத்தின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்ய சூழ்ச்சி: பா.அரியநேத்திரன் பா.உ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்ய சூழ்ச்சி: பா.அரியநேத்திரன் பா.உ
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 05:04.14 PM GMT ]
ariyam_sports_003.jpg
இளைஞர்களுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருப்பதைப் போல் எமது நிலத்தின் மீதும் ஆர்வம் இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

படுவான்கரை பெருநிலத்தின் பனையறுப்பான் கயமுக விளையாட்டுக்கழகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி மரணித்த இளைஞர்களின் நினைவுகூரல் முகமாக இடம்பெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று பனையறுப்பான் வியாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியம் எம்.பி கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில்,

தமிழ் இளைஞர்கள் தாயகப்பற்றுடன் வாழ வேண்டும் இந்த படுவான்கரை மண் கடந்த கால போராட்டத்தில் பல தியாகங்களை செய்த மண். குறிப்பாக எல்லை கிராமங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற பலர் முயற்சிக்கின்றனர். இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.

இவைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரான நாம் தடுத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். கடந்த காலத்தில் பல உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கி மட்டக்களப்பில் துணிந்து முகம் கொடுத்தவர்கள் நாமே. 

எமது அரசியல் பலத்தினால் தான் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் நிலைத்து நிற்கின்றது.

தற்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டுயிட பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அன்று ஒளித்து பயத்தால் முன்வர தயங்கியவர்கள் புலம்பெயர்ந்து வாய் திறக்காமல் இருந்த சிலரும் இன்று தேர்தலில் போட்டியிட வாய்புக்களை உருவாக்கி கொடுத்தவர்கள் நாங்கள் தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவைகளை விட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இல்லாமல் செய்ய இன்னும் பலர் முயல்கின்றனர். இதற்காக சில அரசியல் கட்சிகள் அரசிடமும் புலனாய்வாளர்களிடமும் பணத்தை பெற்று இம்முறை தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிட ஆள்த்தேடுவதையும் காண முடிகிறது. இவ்வாறானவர்கள் தொடர்பாக எமது இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஆட்சிமாற்றத்தை பயன்படுத்தி பலர் தமிழினத்தின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றார்கள் என்பதை புத்திஜீவிகளும் புரிய வேண்டும் எனவும் மேலும் கூறினார்.

ariyam_sports_001.jpg

ariyam_sports_002.jpg

ariyam_sports_003.jpg

ariyam_sports_004.jpg

ariyam_sports_005.jpg

தமிழ்வின்

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பெரிய சூழ்ச்சி எல்லாம் தேவையில்ல. சம்பந்தனும் சுமந்திரனும் சங்கரியும் போதும். இனத்தைக் கூறுபோட்டு கூவி விற்குங்கள். :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.