Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லங்கா நாடாளுமன்றத்தில் பெரும் இழுபறி, கலகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாகரை விவகாரம்: சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெரும் இழுபறி, கலகம்

மட்டக்களப்பு வாகரையில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சபையில் பெரும் இழுபறி, கலகம் ஏற்பட்டது.

இதன் உச்ச கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மேல் அங்கியை கழற்றி எறிந்து விட்டு சபை நடுவே நின்று பெருத்த குரலில் ஆக்ரோசமாக கத்தினார். இதனால் சபையில் பெரும் அமளி-துமளி ஏற்பட்டது.

எனினும், சிவாஜிலிங்கம் கழற்றி எறிந்த மேலங்கியை எடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் அதனை ஒருவாறு மீண்டும் சிவாஜிலிங்கத்திற்கு போட்டுவிட்டார்.

நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியபோது மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான சிறப்பு அறிக்கையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வெளியிட்டார்.

இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டுமென சபையின் நடுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்பு உடைகளை அணிந்தவாறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சபையின் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே குழம்பின.

இதனையடுத்து காலை 10.10 மணியளவில் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே, வாகரையில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்புமாறும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று முன்தினம் 10 பார ஊர்திகளில் வாகரைக்குச் சென்ற உணவுப் பொருட்களை சிறிலங்காப் படையினர் மாங்கேணியில் திருப்பி அனுப்பியதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பினர், உடனடியாக இப்போதே வாகரைக்கு உணவுப் பொருட்களை 10 பார ஊர்திகளில் அனுப்ப வேண்டுமென வலியுறுத்தினர். அவ்வாறு அனுப்பாவிடில் சபை நடவடிக்கைகள் தொடர இடமளிக்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக கூறினர்.

இதனால், நாடாளுமன்ற விவாதத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

கூட்டமைப்பினரின் இந்த ஆர்ப்பாட்டத்தை மீறி சபை நடவடிக்கைகளை தொடர முடியாமல் போனதால், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பாக உரையாடினார்.

கூட்டமைப்பினர் தமது நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டமைப்பினருடன் இடையிடையே சபையின் நடுவே வந்து உரையாடினர்.

இதனையடுத்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அரச மேல் மட்ட உயரதிகாரிகளுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு 3 பார ஊர்திகளில் உணவுப்பொருட்களை அனுப்புவதாக கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.

ஆனால், அதற்கு உடன்படாத கூட்டமைப்பினர் 10 பார ஊர்திகளில் உணவு அனுப்பப்பட்டாலே சபை நடவடிக்கைகளை குழப்ப மாட்டோமென தெரிவித்ததால் மீண்டும் சபையில் அமளி-துமளி ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அமைச்சர் ஜெயராஜ் தொலைபேசியில் உரையாடி விட்டு மட்டக்களப்பிலிருந்து 10 பார ஊர்திகளில் உணவை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளதாக கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.

எனினும், ஆர்ப்பாட்டத்தை கைவிடாத கூட்டமைப்பினர், மட்டக்களப்பு அரச அதிபர் ஆர்.புண்ணியமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு 10 பார ஊர்திகளுடனான உணவுப்பொருட்களும் மாங்கேணி படை முகாமை கடந்தபின்னர் தமக்கு இது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என்றும் அதுவரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக கூறினர். அமைச்ர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் மட்டக்களப்பு அரச அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார்.

இந்த ஆர்ப்பாட்டம், இழுபறிக்கு மத்தியில் சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியதால் அங்கு பெரும் கலகம் ஏற்படும் நிலை தோன்றியது. கூட்டமைப்பினர், சபாநாயகரை நோக்கி பாய்ந்து சென்று அவரது மேசையில் தட்டி சபை நடவடிக்கைகளை குழப்பினர். சபாநாயகரை நோக்கி கூட்டமைப்பினர் பாய்ந்ததையடுத்து ஜே.வி.பி.யினரும் அவ்விடத்திற்கு சென்றதால் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மேல் அங்கியை கழற்றி எறிந்து விட்டு ஆவேசமாக காணப்பட்டார்.

இத்தனைக்கும் மத்தியில் சபை நடவடிக்கைகள் நடைபெற்றன.

இறுதியில், கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய (நேற்று) ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து சபை நடவடிக்கைகள் அமைதியாக நடந்தன.

-வீரகேசரி

கோஷங்கள், சுலோகங்களுடன்

கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றின் நடுவே நடத்தினர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்கள் நேற்றுச் சபையில் காலை முதல் நண்பகல் வரை தொடர்ச்சி யாகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி னர்.

வரவு செலவுத்திட்டம் மீதான இரண் டாம் நாள் விவாதம் ஆரம்பமாகியதும், கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களை விட் டெழுந்து கோஷங்களை எழுப்பியவாறே சபையின் நடுவே சென்றனர்.

சபைக்கு நடுவே செல்லும்போது ""ரவி ராஜின் கொலைக்கு டக்ளஸைக் கைதுசெய்'' என்று கோஷமிட்டவாறே நடந்தனர்.

அங்கு சென்றதும், சபாநாயகரின் ஆச னத்துக்கு முன்னால் நின்று உரத்த குரலில் பல கோஷங்களை எழுப்பினர்.

கூட்டமைப்பு எம்.பிக்களின் கோஷங் களுக்கு மத்தியில் சபாநாயகர் ஐ.தே.கட்சி எம்.பி காமினி ஜெயவிக்ரம பெரேராவை உரையாற்ற அழைத்தார். அவர் பேசுவதற்கு எழுந்த போதிலும் கூட்டமைப்பு எம்.பிக் களின் கோஷங்களால் எழுந்த பெரும் ஒலி யின் மத்தியில் அவரால் உரையாற்ற முடிய வில்லை.

சபாநாயகர் காலை 10.10 மணிக்கு சபையை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்து கட்சித்தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி னார்.

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் கூட்டமைப்பு எம்.பிக்களின் கோஷம் தொடர்ந்தது.

கூட்டமைப்பு எம்பிக்கள் ஏந்தியிருந்த அட்டைகளில் ஒன்றில் கேலிச்சித்திர மொன்று வரையப்பட்டிருந்தது. அந்தக் கேலிச்சித்தி ரத்தில் ஜனாதிபதியின் படம் வரையப்பட்டி ருந்தது.

தடியொன்று தாடியுடனுள்ள மனித முகத்துடன் ஜனாதிபதியின் கால்களுக்கிடை யில் இருந்து, ரவிராஜ் எம்பியை நோக்கி துப் பாக்கி வேட்டுக்களைத் தீர்ப்பது போன்று கேலிச்சித்திரம் வரையப்பட்டி ருந்தது.

கூட்டமைப்பு எம்.பிக்கள் கோஷம் எழுப்பியபோது அந்தச் சுலோக அட்டை கள் பலவும் சபைக்கு நடுவே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

கோஷங்கள்

கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒலித்த கோஷங்கள் வருமாறு:

* கொல்லாதே கொல்லாதே, தமிழ் மக் களைக் கொல்லாதே.

* பட்டினிபோடாதே பட்டினி போடாதே, யாழ்.மக்களை பட்டினிபோடாதே.

*ரவிராஜின் கொலைக்கு அரசே பொறுப்பு.

*ரவிராஜை கொலை செய்தது மஹிந்த சிந்தனையா?

கூட்டமைப்பு எம்.பிக்கள் இவ்வாறு கோஷம் எழுப்பினர்.

சுலோகங்கள்

கூட்டமைப்பு எம்.பிக்களின் கைகளில் சுலோகங்கள் எழுதிய அட்டைகளும் காணப்பட்டன. ஆங்கிலத்திலும் தமிழி லும் சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இலங்கை அரசின் பயங்கரவாதம்! தமிழ் இன அழிப்புக்கு உத்தரவாதம்!

2005 இல் ஜோசப்! 2006 இல் ரவிராஜ்! 2007 இல் யார்?

மக்களுக்கு உணவு கேட்ட மாமனிதர் ரவிராஜுக்கு படுகொலைதான் பதிலா?

உலகமே, 130 பேரைக் கொன்ற சதா முக்கு மரணதண்டனை! ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற மஹிந்த ராஜ பக்ஷவுக்கு என்ன தண்டனை?

கூட்டமைப்பு உறப்பினர்கள் பி.ப.1.30 மணியளவில் தமது ஆர்ப்பாட்டத்தை நிறுத் திக் கொண்டனர்

-உதயன்

வாகரைக்கு உணவுப் பொருள் அனுப்ப

அரசு நாடாளுமன்றில் வாக்குறுதியளிப்பு

ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினர் கூட்டணி எம்.பிக்கள்

பட்டினியால் வாடும் வாகரை மக்களுக்கு பத்து லொறிகளில் உணவுப் பொருள்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுமென அரசு உத்தரவாதம் அளித்ததையடுத்து கூட்டமைப்பு எம்.பிக்களின் ஆர்ப்பாட்டம் நேற்று பி.ப 1.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.

கூட்டமைப்பு எம்.பிக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நாடாளுமன்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிக்கும் போதே வர்த்தக அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட ஏனைய எம்.பிக்களுடன் பேச்சு நடத்தினார். வாகரைக்கு உணவுப் பொருள் அனுப்பப்பட்டுள்ளன. நீங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என அமைச்சர் பெர்ணான்டோ புள்ளே கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருந்தது.

இரா. சம்பந்தன் எம்.பி கையடக்கத் தொலைபேசி மூலம் மட்டக்களப்பு அரச அதிபருடன் சபையின் நடுவே இருந்தவாறு தொடர்பு கொண்டு பேசுவதையும் கேட்கக் கூடியதாகவிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்திலும் சபைக்கு நடுவே ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

குரல் எழுப்பிக் களைத்த கஜேந்திரன்

யாழ்.மாவட்ட எம்.பி எஸ்.கஜேந்திரன் உரக்கக் குரல் எழுப்பிக் கோஷமிட்டுக் களைத்திருந்தார். அவர் அமைச்சர் சீ.பி.ரத்னாயக்கா வைப் பார்த்துக் கையசைக்கவே அவர் தண்ணீர்ப் போத்தலொன்றை கஜேந்திரன் எம்.பியை நோக்கி வீசினார். லாவகமாக அதைப் பிடித் துக் கொண்ட கஜேந்திரன் எம்.பி. நீரை மட மடவென்று குடித்து விட்டு மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கினார்.

மேற்சட்டையைக் கழற்றி இடுப்பில் சொருகிய சிவாஜிலிங்கம்

இன்னொரு சந்தர்ப்பத்தில் கோஷமிட்டுக் களைத்திருந்த சிவாஜிலிங்கம் எம்.பி அவரது மேற்சட்டையைக் கழற்றி இடுப்பில் சுற்றிக் கொண் டார். இது நாடாளுமன்ற நடைமுறைக்கு முரணானது எனத் தெரிவித்து சில அரசதரப்பு எம். பிக்கள் சிவாஜி லிங்கத்துக்கு அருகே சென்று மீண்டும் மேற்சட்டையை அணிவித்தனர்.

கூட்டமைப்பு எம்.பிக்களின் பலத்த கோஷசத்திற்கு மத்தியிலும் சில அரச தரப்பு எம்.பிக்கள் உரையாற்றினர். அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து பி.ப 1.30 மணியளவில் இரா.சம்பந்தன் அறிக்கை ஒன்றை விடுத்தார். அத்துடன் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

-உதயன்

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக

வாகரை சென்ற உணவு லொறிகள்

நேற்றும் திருப்பி அனுப்பப்பட்டன

மட்டக்களப்பில் விடுதலைப் புலி களின் நிர்வாகப் பிரதேசமான வாகரைப் பகுதிக்கு நேற்று பத்து லொறிகளில் எடுத் துச்செல்லப் பட்ட உணவுப் பொருள்கள் நாவலடி முகாமில் வைத்துத் திருப்பி அனுப்பப்பட்டன.

செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவின் வழித்துணையுடன் இந்த லொறிகள் வாகரை நோக்கிச் சென்றன.

செங்கலடியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து லொறி கள் செல்வதற்குப் படையினர் அனுமதிக்க வில்லை என்றும்

மீண்டும் இன்று அந்தப்பொருள்களை வாகரைக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக் கப்பட்டது.

நேற்றுமுன்தினமும் 6 லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருள் கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன.

வாகரைக்கு உணவு அனுப்ப வேண் டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அங்கு பொருள்கள் அனுப்ப ஏற்பாடாகி யுள்ளது என்று அரச தரப்பில் நேற்றுக் காலை உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அங்கு சென்ற லொறிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனை நம்பி ஆர்ப்பாட்டத்தை கைவிட்டது சரியல்ல.இப்படி அழுத்ததை கொடுத்தால் உணவு போய் சேர்ந்திருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாகரை- கதிரவெளி மக்களுக்கான உணவுப் பாரஊர்திகளை இராணுவம் தடுக்கும் கொடுமை: மகிந்தவுக்கு இரா.சம்பந்தன் கடிதம்

வாகரை- கதிரவெளி மக்களுக்கான உணவுப் பாரஊர்திகளை சிறிலங்கா இராணுவத்தினர் தடுப்பதால் அப்பகுதி மக்கள் 3 வாரங்களாக உணவின்றி தவித்து வருகின்றனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் அனுப்பியுள்ள கடித விவரம்:

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை மற்றும் கதிரவெளி பிரதேசங்களில் 12 ஆயிரம் தமிழ்க் குடும்பங்களுக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சென்றடையவில்லை. 3 வார காலமாக எதுவித பொருட்களும் சென்றடையாததால் பாரிய மனித அவலம் ஏற்பட்டிருக்கிறது என்று கடந்த நவம்பர் 16 ஆம் நாள் உங்களை நேரில் சந்தித்த போது தெரிவித்திருந்தோம். அச்சந்திப்பின் போது உடனிருந்த உங்களின் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர், 16 ஆம் நாள் மாலைக்குள் வாகரை மற்றும் கதிரவெளி பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மட்டக்களப்பு கச்சேரியிலிருந்து நவம்பர் 17 ஆம் நாள் கதிரவெளி மற்று வாகரைக்கு 10 பாரஊர்திகளில் பிரதேச செயலாளருடன் உணவுப் பொருட்கள் அனுப்ப்பி வைக்கப்பட்டன. மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாமுக்கு தெற்குப் பகுதியில் சிறிது தொலைவில் நாவலடி பாம்பு பாலம் அருகே இராணுவத்தினரால் உணவுப் பொருட்கள் ஏற்றிச் சென்ற பாரஊர்திகள் வழிமறிக்கப்பட்டன. பாரஊர்திகளை திரும்பிச் செல்லுமாறும் உத்தரவிட்டனர். அதன் பின்னர் பிரிக்கேடியர் ரட்ணநாயக்க என்பவர் மாவட்ட அரச அதிபரைத் தொடர்பு கொண்டு வாகரை மற்றும் கதிரவெளி பகுதிகளுக்கு மேலதிக பாரஊர்திகளை அனுப்ப இயலாது என்று தெரிவித்துள்ளார்.

நவம்பர் 18 ஆம் நாள் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பினோம். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தரப்பினருடன் தொடர்பு கொண்டு பேசினார். வாகரை மற்றும் கதிரவெளிக்கு 18 ஆம் நாள் 8 பாரஊர்தி உணவுப் பொருட்களை அனுப்புவதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 8 பாரஊர்திகளும் மேலதிக அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளருடம் வாகரை மற்றும் கதிரவெளிக்கு மட்டக்களப்பு கச்சேரியிலிருந்து புறப்பட்டன. மாங்கேணி சோதனைச் சாவடியில் மீண்டும் பாரஊர்திகள் நிறுத்தப்பட்டு மட்டக்களப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

கடந்த ஒக்ரோபர் 27 ஆம் நாளுக்குப் பின்னர் வாகரை மற்றும் கதிரவெளிக்கு எதுவித உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படவில்லை. கடந்த 3 வாரகாலமாக உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் எதுவுமே அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கவில்லை.

வாகரை மற்றும் கதிரவெளியில் 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3,500 குடும்பங்கள் அப்பகுதிகளில் நிரந்தரமாக வசிக்கின்றன. 8,500 குடும்பங்கள் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள்.

போசாக்கின்மை, நோய்கள் மற்றும் பட்டினிக் கொடுமைக்கு அம்மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். அங்கு பாரிய மனித அவலம் ஏற்படும் நிலைமை உள்ளது.

ஆகையால் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாகரை மற்றும் கதிரவெளி பிரதேசத்துக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸை கைது செய்ய வலியுறுத்தி சபையில் தமிழ்க் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் -பட்ஜெட் விவாதம் 2-1/2 மணி நேரம் முடக்கம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் பணியை முன்னெடுக்க முடியாத நிலையில் சபை அலுவல்களை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் இடை நிறுத்தி வைத்தார்.

பாராளுமன்றம் நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதன் பின்னர் இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாக்களின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ரவிராஜ் படுகொலை தொடர்பான விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றினார்.

சம்பந்தன் உரையாற்றி முடிந்தவுடன் கறுப்பு உடைகள், கறுப்பு பட்டிகளையணிந்தவாறு சபைக்கு நடுவே வந்த தமிழ்த் தேசிய கட்டமைப்பு உறுப்பினர்கள் டக்ளஸை கைது செய் என கோஷமெழுப்பியவாறு கைகளில் சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிராக சுலோக அட்டைகள்

`கொலைகளை நிறுத்து' `மக்களுக்கு உணவு கேட்ட மாமனிதர் ரவிராஜுக்கு படுகொலைதான் பதிலா' `ரவிராஜ் கொலைக்கு அரசே பொறுப்பு', `இலங்கையரசின் பயங்கரவாதம் தமிழ் இன அழிப்பிற்கு உத்தரவாதம்', `உலகமே 130 பேரைக் கொன்ற சதாமுக்கு மரண தண்டனை, ஆயிரக்கணக்கான தமிழரைக் கொன்றவருக்கு என்ன தண்டனை' போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு உரத்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலரையும் கவர்ந்த கேலிச்சித்திரம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைத்திருந்த கேலிச்சித்திரமொன்று அமைச்சர்கள் உட்பட பலரையும் கவர்ந்தது. அந்த படத்தில் மகிந்த ராஜபக்‌ஷவின் காலுக்குள்ளால் நுழைந்து தாடியுடனான மனித முகத்தைக் கொண்ட உருவமொன்று துப்பாக்கியால் ரவிராஜை சுடுவது போல் வரையப்பட்டிருந்தது.

இந்தப்படம் சபைக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த போது பல அமைச்சர்கள் அருகில் வந்து பார்த்து சிரித்தவாறு சென்றனர். சில ஐ.தே.க. எம்.பி.க்கள் அதனை தமது செல்போன்களின் மூலம் படம் எடுத்துக்கொண்டனர்.

சபையை ஒத்திவைத்த சபாநாயகர்

`கொல்லாதே கொல்லாதே தமிழரைக் கொல்லாதே', கொலை கார டக்ளஸை கைது செய்', `ரவிராஜ் கொலைதான் மகிந்த சிந்தனையா' என கோஷமிட்டவாறு தமிழ்க் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சபாநாயகர் காலை 10.10 மணியளவில் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்கள் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்து உபதலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களின் பின்னரே சபை மீண்டும் கூடியது.

சபை ஒத்திவைக்கப்பட்டிருந்த வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஐ.தே.க. எம்.பிக்களும் அமைச்சர்கள் சிலரும் சபைநடுவே நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.