Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி இராணுவமுகாம் வாசலில் வைரவருக்குக் கற்பூரமேற்றிய வயாவிளான் மக்கள்

Featured Replies

vasavilan%20ddfd1123.jpg

 

வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாயிலுக்கு முன்பாக வயாவிளான் மக்கள் கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்டனர். வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக்கப்பட்ட வளைவில் இருந்து உள்நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தினுள் வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் உள்ளது.
 
பெரிய வைரவர் ஆலயங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்ற இந்த ஆலயத்தில் மே மாதத்தில் வைரவர் மடை பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வயாவிளானை இராணுவம் கையகப்படுத்திய பின்னர் இந்த ஆலயத்துக்கு மக்களால் சென்றுவர முடியவில்லை.
 
புதிய ஜனாதிபதி பதிவியேற்ற பின்னர் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்திலாவது வயாவிளான் ஆலயப்பகுதி விடுவிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். அது நிறைவேறாத நிலையில், மே மாத மடைத் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு முன்னோடியாக இன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்துக்குச் சென்று வழிபடுவது என்று தீர்மானித்த நூற்றுக் கணக்கான வயாவிளான் மேற்கு மக்கள் இராணுவ வளைவுக்கு முன்னால் திரண்டனர்.
 
மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரும் சென்றிருந்தனர். இராணுவமுகாம் நுழைவு வாசலில் கடமையில் இருந்த படையினரிடம் ஆலய வழிபாட்டுக்காக வந்திருக்கிறோம் என்பதை படை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
எனினும் உள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அத்தோடு பொதுமக்களைச் சந்திப்பதற்கு படை அதிகாரிகளும் நீண்டநேரமாகியும் சமூகமளிக்கவில்லை. இந்நிலையிலேயே,சினம் கொண்ட மக்கள் முகாம் வாசலுக்கு முன்பாக சிதறு தேங்காய் உடைத்து, கற்பூரம் கொழுத்தி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
 
முகாம் வாசலில் கற்பூரவழிபாட்டைச் செய்யவேண்டாம் என்று கடமையில் இருந்த இராணுவத்தினர் ஆரம்பத்தில் சொன்னபோதும், பொதுமக்கள் திரளாக வழிபட ஆரம்பித்ததும் விலகிச் சென்றுவிட்டனர். மே மாதம் முடிவடைவதற்குள் ஞானவைரவர் ஆலயத்தில் மடைத் திருவிழா பூசை வழிபாட்டுக்க ஏற்பாடுசெய்து தருமாறு அங்கு அங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடமும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அங்கு சென்றிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
vasavilan%20ddfd1122.jpg
 
vasavilan%20ddfd1121.jpg
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உணர்வுகளை எந்த சிங்கள அரசும் புரிந்து கொள்ளாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உணர்வுகளை சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை சேனாதிராஜா போன்ற அரசியல்வாதிகளே உணராத போது சிங்களப் பேரினவாதத் தலைமைகளிடம் அதனை எப்படி எதிர்பார்க்க முடியும்.

 

அண்மையில்.. ஜோன் கெரியை சந்திச்சு சொதப்பிச்சுதுகளே.. அப்படித்தான் காலம் காலமா எல்லாத்தையும் சொதப்பி வருகுதுங்க. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளை உட்பட பல இனப்படுகொலைகளை நிறுத்தத் தவறியதும் இந்த தவறான தமிழ் அரசியல்வாதிகள் தான். இவர்கள் அந்த மக்கள் அழிவினை இட்டு போலி கருசணை கொண்டிருந்தார்களே ஒழிய ஒரு சொட்டு இனப்பற்றும்.. அந்த மக்கள் காக்கப்படனும் என்றும் எமது போராட்டம் காப்பற்றப்படவும்.. வெற்றி பெறவும் என்று இவர்கள் இதய சுத்தியோடு செயற்பட்டதில்லை.

 

அப்படி இருக்க.. சிங்களவனிடம்.. நாம் அதிகம் எப்படி எதிர்பார்க்க முடியும்.

 

எமக்குப் பிரச்சனை எம் கூடவே உள்ளதுகள் தானே தவிர வெளியில் இல்லை. :icon_idea::(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வைரவர் எங்கள் மண்ணை காப்பாற்றிவிட்டார்....ஆயுதத்தால் நெறுங்க முடியாத பிரதேசத்தை வைரவர் புண்ணியத்தில் மக்கள் தரிசிக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வைரவர் எங்கள் மண்ணை காப்பாற்றிவிட்டார்....ஆயுதத்தால் நெறுங்க முடியாத பிரதேசத்தை வைரவர் புண்ணியத்தில் மக்கள் தரிசிக்கின்றார்கள்

 

வைரவருக்கு வைத்த நெருப்பில்(கற்பூரம்)

இராணுவம் கொஞ்சமாவது கதிகலங்கியிருக்கும் என்கிறீர்கள்

மறுப்பதற்கில்லை  :o

  • கருத்துக்கள உறவுகள்

வைரவர் எங்கள் மண்ணை காப்பாற்றிவிட்டார்....ஆயுதத்தால் நெறுங்க முடியாத பிரதேசத்தை வைரவர் புண்ணியத்தில் மக்கள் தரிசிக்கின்றார்கள்

 

உதெல்லாம்.. எங்கள் கரும்புலிகள் போய் வந்த இடம் தான். எம் வான்புலிகள் போய் வந்த இடம் தான். எம் ஆட்லறிகள் வீச்சுக்குள் ஒடுங்கிக் கிடந்த இடம் தான். நாம் தான் அவற்றை பாதுகாக்கத் தெரியாமல்.. இப்ப வைரவர்.. பிள்ளையாரைச் சாட்டியாவது ஒரு தீப்பொறியை உருவாக்க படாதபாடு படுறம். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம்.. எங்கள் கரும்புலிகள் போய் வந்த இடம் தான். எம் வான்புலிகள் போய் வந்த இடம் தான். எம் ஆட்லறிகள் வீச்சுக்குள் ஒடுங்கிக் கிடந்த இடம் தான். நாம் தான் அவற்றை பாதுகாக்கத் தெரியாமல்.. இப்ப வைரவர்.. பிள்ளையாரைச் சாட்டியாவது ஒரு தீப்பொறியை உருவாக்க படாதபாடு படுறம். :D:icon_idea:

 

பிள்ளையாருக்கும் வயசு போகுது ஆனபடியால் கம்பன்கழகம் கம்பன் விழாவை அடுத்தமுறை இங்கு வைத்தால் ,கம்பனின் கன்னித்தமிழ் வளரும் :D

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாருக்கும் வயசு போகுது ஆனபடியால் கம்பன்கழகம் கம்பன் விழாவை அடுத்தமுறை இங்கு வைத்தால் ,கம்பனின் கன்னித்தமிழ் வளரும் :D

 

கம்பர் ஆரிய புராணமான இராமாயணத்தின் கவிச் சக்கரவர்த்தி என்பதால்.. எனி அவர் கொழும்பை விட்டு வெளியில் வரவே வரமாட்டார். அவர் கொழும்புக்கு வந்து சென்றிலாகப்பட்ட பாடு.. உங்களுக்குத் தெரியாது. எத்தினை ஒழுங்கை ஒழுங்கையா ஏறி வாசற்படிகள்... ஏறி இறங்கி.. இருப்பார்.! அந்த முயற்சிகள் எல்லாம் வீணாகலாமோ..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.