Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சின்னச் சின்ன கதைகள்

Featured Replies

சின்னச் சின்ன கதைகள்

kumudam1fn1.png

"ப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, புது யூனிப்பார்ம் போட்டு வரலைனா, டீச்சர் ஸ்கூலுக்கு வரவேணாம்டாங்க. சீக்கிரம் யூனிப்பார்ம் எடுங்கப்பா."

தேவி சும்மாயிருக்க மாட்டே. நானே எலக்ஷன் டென்ஷன்ல இருக்கேன். இன்னும் வேலையே முடியலே. தொகுதிப் பூரா போஸ்டர் ஒட்டணும். கொடி, பேனர் கட்டணும். வட்டச் செயலாளர், பொறுப்பை எங்கிட்ட விட்டிருக்காரு. அதப் பார்ப்பேனா, இல்லை இதச் செய்வோன" கடுப்பானான் மாரி.

"ஆமா, அடுப்பெரிக்க விறகில்ல, கொடி கட்டப் போறாறாம் கொடி. முதல்ல குழந்தைக்கு டிரஸ் எடுக்க வழிய பாரு, இல்லைனா, வீட்டு வாசப்படி மிதிக்காத" பொருமினாள் அஞ்சலை.

வாசலில் நிழலாடியது. அஞ்சலை பார்த்தாள் சோமு நின்றிருந்தான்.

'எக்கா, கட்சி கொடி, பேனர், போஸ்டர் எல்லாம் இறக்கிட்டுப் போறேன். மாரிமாமா வந்தா சொல்லுங்க. சாயங்காலத்துக்குள்ள, கொடி பேனர்ல்லாம் கட்டச் சொன்னாரு வட்டச் செயலாளர். இந்தாக்கா, பசைக்காக, சணலுக்காக நூறு ரூபாய் கொடுத்து விட்டாரு. மாமா கைல கொடுத்திருங்க."

அஞ்சலை பார்த்தாள். பல வண்ணங்களில், பளபளவென்று கொடித் துணிகள். படபடவென்று இரண்டு கொடித் துணிகளை உருவினாள்.

"தேவி. வா டைலர் கடைக்கு, உனக்கு புது யூனிப்பார்ம் ரெடி" என்று புறப்பட்டாள்.

----------

kumudam2vo7.png

ழக்கமாக நான் செல்லும் டவுன் பஸ் அது. அந்த பஸ்ஸின் கண்டக்டர் எப்படி இந்த மனநிலைக்கு வந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பெல்லாம் பள்ளிக் குழந்தைகள் ஏறினால் போதும், டென்ஷனாகி முகம் சிடுசிடுவென்று ஆகிவிடும் அவருக்கு.

"பட்டாளம் வந்துருச்சுங்கப்பா... ஏறுங்கடாப்பா....!" குட்டிப் பிசாசு மாதிரியிருக்கிற இந்தப் பையை வேறு முதுகுல தூக்கிக்கிட்டு, ஏற முடியாம ஏறி, இறங்க முடியாம இறங்கி, நிக்க இடமில்லாம... காட்டுக் கூச்சல் வேறு போட்டுக்கிட்டு... சே... சே... சமாளிக்க முடியலப்பா...!"

"டேய்.... பையை வழியில வைக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது... வழியில வச்சுக்கிட்ட எங்களை டிக்கட் கொடுக்க விடாம... பெரிய தொந்தரவுப்பா...!" இப்படி ஏகத்துக்கும் கத்தித் தீர்த்துடுவார்.

இப்ப என்னடான்னா, குழந்தைகள் ஏறும் ஸ்டாப் வந்ததும் பஸ்ஸை விட்டு இறங்கி, "பிள்ளைகளா ஏறுங்க... பார்த்து மெதுவா ஏறுங்க..." ரொம்ப பாசத்துடன் கூறுகிறார்.

எல்லாப் பிள்ளைகளும் ஏறி முடித்ததும் கடைசியில் இவர் ஏறி விசில் கொடுக்கிறார்.... இறங்கும்போது பிள்ளைங்க பையை இவரே கீழே இறக்கி வைக்கிறார்.

நேற்று இல்லாத இந்த மாற்றம் குறித்து மெதுவா கண்டக்டரிடம் விசாரித்தேன்.

"இந்த வருஷத்திலிருந்து என் பையனும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுட்டான் ஸார்... பஸ்லதான் போறான்.... அவன் படற கஷ்டம் எனக்கு இப்ப புரியுது சார்..!"

----------

kumudam3vk9.png

விஞ்ஞானி சந்திரசேகர் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தார்.

'கண்டுபிடித்துவிட்டேன்! கண்டுபிடித்துவிட்டேன்' என்று அலறினார். சோதனைக் கூடத்திலிருந்து வெளியேறி, தனது காரில் ஏறி, வீட்டை நோக்கி விரைந்தார்.

நூறாண்டுகளுக்கும் மேலாக இளமையோடு வாழ்வதற்குண்டான மருந்தொன்றை, பத்தாண்டு ஆராய்ச்சிக்குப் பின் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில்தான் சந்திரசேகர் அப்படி அலறினார். கிழடு தட்டிப்போன நாயன்றிற்கும், முயலொன்றிற்கும் வாலிபம் திரும்பக் கிடைக்கச் செய்யும் முயற்சியில் முழு வெற்றி பெற்றிருந்தார்.

இனிமேல் ஐம்பது வயதை எட்டியிருக்கும் தானும், நாற்பதுகளில் நிற்கும் தனது மனைவி அம்சவல்லியும், இளமைத் திமிருடன் இன்னும் பல ஆண்டுகள் வாழ முடியும் என்ற எண்ணமே அவர் மனதில் மேலோங்கி நின்றது. காரை இன்னும் விரைவாகச் செலுத்தினார். மாதமொரு முறையோ, இருமுறையோ மட்டும் சந்திக்கும் தனது மனைவியை, இனி பிரிய வேண்டிய அவசியம் இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

அந்த நேரம் அவர் செல்போன் சிணுங்கியது. "நான் அம்சவல்லி பேசுறேன். நீங்க உங்க ஆராய்ச்சியைக் கட்டிக்கிட்டு அழுங்க. நான் என் மனதுக்குப் பிடித்தவரோடு வாழப்போறேன்."

மறுநாள் தினசரிகள் கொட்டை எழுத்துகளில் கதறின. 'விஞ்ஞானி சந்திரசேகர் தற்கொலை. ஆராய்ச்சியில் தோல்வி காரணமா?'

----------

kumudam4sa0.png

"ன்னங்க, என்னங்க, எழுந்திருங்க. குடியே முழுகிப் போச்சு. இன்னும் என்ன தூக்கம் வேண்டியிருக்கு..." பதற்றமாய், ஓடி வந்த மனைவியை, கண்களைக் கசக்கியபடி அதிர்ச்சியுடன் பார்த்தான் கமலேஸ்வரன்..!?

"இன்னும் முழுசா விடியக்கூட இல்லை. அதுக்குள்ள என்ன பிரச்னை ராஜேஸ்வரி" என்றார்.

"இந்தா பாருங்க, அருமை பெருமையா செல்லத்தைக் கொட்டி வளர்த்தீங்கல்ல ஒரே பொண்ணுன்னு.... அவ, லட்டர் எழுதி டீப்பாய் மேல வெச்சுட்டு, எவன் கூடவோ ஓடிப் போய்ட்டாங்க..." பதறினாள்.

"பாவி சண்டாளி இப்படிப் பண்ணிட்டியே இனி ஊரார் முகத்துல எப்படி முழிப்பேன். சொந்த பந்தமெல்லாம் காறி துப்புமே..." புலம்பிய மனைவியின் தலையை ஆறுதலாகத் தடவினார் கமலேஸ்வரன்.

"நாம சம்மதிக்க மாட்டோம்னு எங்காவது போய் விழுந்து செத்திருப்பாங்களோ..." என்றவளை... "சேச்சே எங்காவது போய் நல்லா பொழச்சுப்பா" என்றார்.

"என்னது?" என்று அதிர்ந்த மனைவியிடம், "ஆமாம். அன்னைக்கு நாமளும் இதே காரியத்தைத் தான் செஞ்சோம்... இன்னிக்கு ஓடிப்போறதெல்லாம் சகஜமாயிடுச்சு. ஆனா, இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நம்மள பெத்தவங்க ரொம்ப அவமானப்பட்டிருப்பாங்க... இல்ல... கடவுள் அதே தண்டனையைச் சரியான சமயத்துல கொடுத்திருக்கார்... நம்மள பெத்தவங்களோட வலி இப்பத்தான் தெரியுது" என்றார்.

மனைவியின் விசும்பல் நின்றிருந்தது.

----------

kumudam5gy2.png

"டேய் மாப்ளை. அவ உன்னைய லவ் பண்றாளேன்னு அசால்ட்டா இருந்திராத. நீ கூப்பிட்ட இடத்துக்கு வந்து உன்னை அவ 'தொட' அனுமதிச்சாள்னு வையி. அவ நடத்தை சரியில்லாதவ. அந்த விஷயத்துக்காகத்தான் லவ் பண்றாள்னு அர்த்தம். மறுத்து சத்தம் போட்டா, அவதான் உனக்குச் சரியான ஜோடி. உடனடியா வீட்ல சொல்லி கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிடு" என்றனர் நண்பர்கள்.

ஸ்ரேயாவைக் காதலித்துக் கொண்டிருந்த கணேஷ் திகைத்தான். நண்பர்கள் சொல்வது மாதிரி அவளை மகாபலிபுரம் கொண்டு போய் காட்டேஜில் வைத்து கலைத்துப் பார்க்கலாமா?

திட்டமிட்டான்.

அவனுடன் மோட்டார் பைக்கில் முதுகில் பசை போட்டுக் கொண்டாள் ஸ்ரேயா.

காட்டேஜ். மெல்லிய வெளிச்சம். குளிரான கடல்காற்று.

"என்ன கணேஷ் அப்படிப் பார்க்கறீங்க?" என்றாள்.

"நாமதான் கல்யாணம் பண்ணிக்கப் போறமே. ஒரு ஒத்திகை மாதிரி ஒரு தரம் அனுபவிக்கலாமா டியர்"

"ஓ ஷ்யூர். நான் ரெடி. டாப்ளட்ஸ் கூட ரெடியா கொண்டு வந்திருக்கேன்" நண்பர்கள் சொன்னது சரிதான் என்று நினைத்த கணேஷின் முகத்தில் அடித்த மாதிரி சொன்னாள்.

"ஓ. இதுதான் உன் திட்டமா. இதுவரைக்கும் எத்தினி பொண்ணுங்களோட இங்க வந்து சுகம் அனுவிச்சியோ. உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. குட்பை" கணேஷ் அதிர்ந்து பொடிப் பொடியானான்.

----------

kumudam6dr2.png

ஞ்சுவை இதுவரை ஐந்தாறு வரன்கள் வந்து பார்த்தாச்சு. இன்னும் திருமணம் முடிந்த பாடில்லை.

ஏழாவதாக ஒரு கும்பல் இன்று பெண் பார்க்க வந்திருந்தது.

பெண் வீட்டாருக்கு மாப்பிளையையும், மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண்ணையும் பிடித்திருந்தது. விமரிசையாக நடந்த பெண் பார்க்கும் படலம் முடியும் தருணத்தில்...

"நான் பெண்ணோட அப்பாகிட்ட தனியா பேசணும்" என்ற வரனுடன் அறைக்குள் சென்றார் பெண்ணின் தந்தை.

"வழக்கமா பொண்ணுகிட்ட தனியா பேசணும்னு சொல்றதைத்தான் கேள்விப்பட்டிருக்கேன்" என இழுத்தார் தந்தை.

"எங்க ஊருக்கு அடிக்கடி நீங்க வந்து போறதும், கூத்தியா ஒண்ணு வச்சிருக்கிறதும் எனக்குத் தெரியும். உங்க பொண்ணு ரொம்ப அழகான பொண்ணு! ஒழுக்கமான பொண்ணு! பிறகும் உங்ககிட்ட சம்பந்தம் பண்ணிக்க இதுவரையில் யாரும் வராததுக்குக் காரணமே, உங்க தனி மனித ஒழுக்கக்கேடுதான்! அந்தப் பழக்கத்தை இன்னிக்கே விட்டிருங்க. கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்கச் சொல்றேன்" என்றார் வரன்.

சின்ன யோசனைக்குப் பின்...

"கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்கச் சொல்லுங்க!" என்றார் மாமா.

கண்டிப்பாக மாமா திருந்தியிருப்பார் என நம்பி, திருமண தேதி குறிக்கும் வேலையில் இறங்கினார் மருமகன்.

----------

kumudam7hj5.png

சுகுனா என்றாலே அக்கம்பக்கத்து வீட்டு பெண்களுக்கு பொறாமை.

"அஞ்சு... பத்து... கைமாத்தா கேட்டா தரமாட்டா. காபித்தூள் கேட்டாக்கூட தரமாட்டாடி. பிக்கல் பிடுங்கல் இருந்தாத்தானே கஷ்டம் தெரியும்." இப்படி ஏச்சுகள், பேச்சுகள்.

புதிதாக குடிவந்த பங்கஜம் சுகுணாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளைப் பார்க்கப் போனபோது, வரவேற்று டீ பரிமாறினாள் சுகுணா.

சுகுணாவின் கழுத்தில் தாலிச்சரடைத் தவிர, காது, கைகளில் கூட நகை ஏதுமில்லை. ப்ளாக் & ஒயிட் டி.வி., இரண்டு நாற்காலிகள், சோபா, டீ பாய் ஆடம்பரப் பொருட்கள் ஏதுமில்லை. பங்கஜம் ஏதோ கேட்க முயன்றாள்.

"நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு தெரியுது. அக்கம் பக்கத்து வீடுங்க மாதிரி ஆடம்பரமா இல்லியேன்னு நினைக்கறீங்க..."

"ஆ.....ங்."

"எனக்குக் கடனே பிடிக்காதுங்க. வட்டிக்கு வச்சு வாங்கறது, சீட்டுக்குக் கட்டறது. மளிகைக்கடைகாரங்கிட்டே... பால் காரங்கிட்டே கடன் சொல்றது, வாடகை பாக்கி வைக்கிறது எதுவுமே கிடையாது. கேபிள் கனெக்ஷன் கிடையாது. பிள்ளைங்க படிக்கறாங்க இல்லே. புடவை கூட வருஷத்துக்குத் தீபாவளி... பொங்கல்... பிறந்த நாளுக்குதான். தவணையிலே எதையும் வாங்கமாட்டேன். ஒருத்தர் வந்து பாக்கி எங்கேன்னு ஒருவார்த்தைப் பேசிடக்கூடாது. வீட்டுக்காரரும் லோன் எல்லாம் போடமாட்டார். சம்பளத்தை அவர் செலவுக்கு நூறு இருநூறு போக அப்படியே கொண்டுவந்து கொடுத்துடுவார். காசுக்கேத்த மாதிரி சிக்கனமா செலவழிப்பேன். நானும் யாருக்கும் கடன் தரமாட்டேன். அந்த அளவுக்கு வசதியில்லே..."

சுகுனாமீது எல்லோருக்கும் ஏன் பொறாமை என்று பங்கஜத்திற்குப் புரிந்தது.

----------

நன்றி குமுதம்

கதைகளை இணைத்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய கதைகள் வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது..பக்கம் பக்கமா எழுதுவதை விட இவை அநேகரால் வாசிக்கப்பட வாய்ப்பும் இருக்கிறது.

இங்கு கதைகளைத் தரும் போது தோன்றும் பெட்டிகள் சதுரங்களை அக்கற்றினால் வாசிக்க அருவருப்பில்லாமல் இருக்கும்.

கவனிப்பீர்களா?

  • தொடங்கியவர்

வசிசுதா

உங்கள் நன்றிக்கு நன்றிகள்.

நெடுக்காலபோவான்

உங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள். நான் குமுதம் பத்திரிகையில் வந்த இக்கதைகளை இங்கு இணைக்கும் போது மிகவும் கவனமெடுத்து பத்திரிகையில் எப்படி வந்ததோ அதேபோல் இங்கே இணைக்கவும் முயற்சியெடுத்துள்ளேன். நீங்கள் எதைப் பெட்டிகள் சதுரங்கள் என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. தெளிவாக்குவீர்கள் என்றால் நிச்சயம் அவற்றைச் சரி செய்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வசிசுதா

உங்கள் நன்றிக்கு நன்றிகள்.

நெடுக்காலபோவான்

உங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள். நான் குமுதம் பத்திரிகையில் வந்த இக்கதைகளை இங்கு இணைக்கும் போது மிகவும் கவனமெடுத்து பத்திரிகையில் எப்படி வந்ததோ அதேபோல் இங்கே இணைக்கவும் முயற்சியெடுத்துள்ளேன். நீங்கள் எதைப் பெட்டிகள் சதுரங்கள் என்று குறிப்பிடுகின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. தெளிவாக்குவீர்கள் என்றால் நிச்சயம் அவற்றைச் சரி செய்வேன்.

"...' இப்படியான குறியீடுகள் பெட்டியாக தெரிந்தன. இப்போ அந்தப் பிரச்சனை மாயமாக மறைந்து விட்டது. இங்கே உள்ள கணணி மென்பொருள் பண்ணிய குளறுபடி போல் உள்ளது. கணணி செய்த தவறால்..கவனத்தில் எடுத்துக் கொண்டதுக்கு நன்றிகள் கணணி. :P

  • தொடங்கியவர்

"...' இப்படியான குறியீடுகள் பெட்டியாக தெரிந்தன. இப்போ அந்தப் பிரச்சனை மாயமாக மறைந்து விட்டது. இங்கே உள்ள கணணி மென்பொருள் பண்ணிய குளறுபடி போல் உள்ளது. கணணி செய்த தவறால்..கவனத்தில் எடுத்துக் கொண்டதுக்கு நன்றிகள் கணணி. :P

இங்கே பல நேயர்கள் இக்கதைகளை வாசித்துள்ளார்கள். எவருக்கும் தெரியாத பெட்டிகள் சதுரங்கள் உங்களுக்கு மாத்திரம் தெரிந்ததென்றால் இது நிச்சயமாக உங்கள் கணினியுள்ள Internet Explorer மென்பொருளின் குளறுபடிதான். அதை நீங்கள் குளறுபடியில்லாமல் புரிந்து கொண்டால்ச் சரி. :rolleyes::D:D:D

பி.கு:

வேண்டுமென்றால் ஒருமுறை நீங்கள் Thatstamil பக்கத்திற்குச் சென்று பாருங்கள் இதே பிரைச்சினை உங்களுக்கு அங்கும் ஏற்படும்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பல நேயர்கள் இக்கதைகளை வாசித்துள்ளார்கள். எவருக்கும் தெரியாத பெட்டிகள் சதுரங்கள் உங்களுக்கு மாத்திரம் தெரிந்ததென்றால் இது நிச்சயமாக உங்கள் கணினியுள்ள Internet Explorer மென்பொருளின் குளறுபடிதான். அதை நீங்கள் குளறுபடியில்லாமல் புரிந்து கொண்டால்ச் சரி. :rolleyes::D:D:D

இருக்கலாம். குளறுபடி தீர்ந்தாயிற்றே. :P

  • தொடங்கியவர்

வேண்டுமென்றால் ஒருமுறை நீங்கள் Thatstamil பக்கத்திற்குச் சென்று பாருங்கள் இதே பிரைச்சினை உங்களுக்கு அங்கும் ஏற்படும்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமென்றால் ஒருமுறை நீங்கள் Thatstamil பக்கத்திற்குச் சென்று பாருங்கள் இதே பிரைச்சினை உங்களுக்கு அங்கும் ஏற்படும்.

“This is yet another crime in a very long list of such crimes that have deliberately and systematically targeted innocent Tamil civilians. These are war crimes of the most serious nature,” the TNA said in a press release that described the execution style killings on Saturday.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20326

இதை எக்ஸ்புளோரரில் வாசிக்கும் போது பெட்டிகள் எதுவும் இல்லை. ஆனால் இங்கு ஒட்டும் போது சில இடங்களில் "...' குறியீடுகள் பெட்டிகளாகின்றன. உங்களுக்கு அந்தப் பெட்டிகள் தெரிகின்றனவோ தெரியாது. நமக்குத் தெரிகிறது. This ஆரம்பிக்கும் இடத்திலும், nature ஐத் தொடர்ந்து வரும் கமாவை அடுத்தும் பெட்டிகள் தெரிகின்றன. இப்படித்தான் தெரிந்தன. இப்போ உங்களின் ஆக்கத்தில் அது தென்படவில்லை. :rolleyes: :P

Edited by nedukkalapoovan

"...' இப்படியான குறியீடுகள் பெட்டியாக தெரிந்தன. இப்போ அந்தப் பிரச்சனை மாயமாக மறைந்து விட்டது. இங்கே உள்ள கணணி மென்பொருள் பண்ணிய குளறுபடி போல் உள்ளது. கணணி செய்த தவறால்..கவனத்தில் எடுத்துக் கொண்டதுக்கு நன்றிகள் கணணி. :P

அவ்வாறு தெரிந்த பெட்டிகளை நான் நீக்கி ஒழுங்குபடுத்தியிருந்தேன். இது பற்றி அறிவிக்காதது எனது தவறே :rolleyes:

சிறியதானலும் சுவாரசியமான கதைகள்

நன்றி இணைத்தமைக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான குட்டிக்கதைகள்.. என்ன இவை அனைத்தும் இத்தியத் தமிழர்களுக்குத்தான் பொருந்தும்..

  • தொடங்கியவர்

இன்னும் சில......................

kumudam01zu4.png

"ம்மா போயிட்டு வர்றேம்மா" என்று டாட்டா காட்டியபடியே பைக்கில் புறப்பட்டான், பிரபு.

சொந்தமாக அச்சகம் நடத்தி வந்ததால், அவனது வருகை இரவு பத்து மணிக்குமேல் என்பது வழக்கமாகியிருந்தது. ஆனால், அன்று மதியமே வீட்டிற்கு வந்தான். அதுவும் கையில் மாவுக்கட்டோடு.

"என்னய்யா ஆச்சு? எப்படிய்யா இது நடந்தது? ஐயோ! பாவத்தே! நாம யாருக்கும் என்னைக்கும் ஒரு தீங்கும் நெனச்சதில்லையே... நமக்கா இப்படி நடக்கணும்...?" கதறினாள், பிரபுவின் அம்மா.

'''அம்மா... ஒண்ணுமில்லமா. பூசணிக்காய் உடைச்சி ரோட்டுல போட்டிருந்தாங்க. வண்டி வழுக்கி விழுந்துட்டேன். லேசான ஃப்ராக்சர்தான். ரெண்டுவாரத்துல சரியாயிடும். நீ ஒண்ணும் கவலப்படாதம்மா..." பிரபு தேற்றினான்.

அன்று மாலை...

"பிரபு... இப்படி வந்து உட்காரு. நீ, இந்தச் சின்ன வயசுலேயே ஒரு அச்சகத்துக்கு மொதலாளியாயிட்டேங் கிற பொறாமை, நம்ம சொந்தக்காரங்களுக்கு. மடமடன்னு வளர்ந்துட்டேனு பொச்சரிப்பு நம்ம தெரு ஜனங்களுக்கு. கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படக்கூடாது. இப்படி வந்து உட்காரு. வெள்ளிக்கிழமையதுவுமா ஒரு பூசணிக்காய்ச் சுத்திப்போட்டுடறேன்"

----------

kumudam02vw8.png

"ர்மதா..." _ என்றான் ரிஷி, வலிக்காமல்.

"எஸ்..." புருவம் உயர்த்திய நர்மதா அழகாய் இருந்தாள். வானம் கருமேகம் சூழ, இன்னும் கொஞ்சநேரத்தில் மழை பெய்யக் கூடும்.

"எனக்கு சுசீலா பாடல்களை, ராத்திரி நேரத்தில் கேட்கப் பிடிக்கும், நர்மதா..."

"எனக்கும்..."

"எனக்கு சூர்யா படம் பிடிக்கும்."

"எனக்கும்..."

காற்று வீசி நர்மதாவின் முடியைக் கலைத்து, அவள் அழகை அதிகமாக்கியது.

"மழையில் நனைவது எனக்குப் பிடிக்கும்."

"எனக்கும்."

நர்மதா கண் அடித்தாள்.

"மொட்டை மாடி பனியில், அதிகாலையில் நிற்பது பிடிக்கும்."

"எனக்கும்..."

"நான் ஒண்ணு கேட்கட்டுமா?"

"உம்."

"எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும் பிடிக்குமென்றால், உன்னைப் பிடித்த என்னை ஏன், உனக்குப் பிடிக்கவில்லை?"

சிரித்தாள்.

"தமிழ் சினிமா பாதிப்பா? ரிஷி, நீ முட்டாளில்லை! ஐ நோ. உன்னை நான் ஒண்ணு கேட்கட்டுமா? என்னுடைய கடிகாரமும் உன்னுடைய கடிகாரமும் ஒரே நேரத்தைக் காட்டுவதால், நான் உன்னைக் 'கல்யாணம்' பண்ணிக்க முடியுமா? நாம ரெண்டு பேருமே, ஒரே கிராமத்திலிருந்து 'சினிமா'வைப் படிக்க வந்திருக்கோம். சினிமாத்தனங்களை விட்டு விலகி, 'சினிமா'வை யோசிப்போம். சாதித்த பிறகு யோசிக்கலாம் வாழ்க்கையைப் பற்றி!"

மழை தூவ ஆரம்பித்துவிட்டது.

ரிஷி மனதில் 'காதல்' கரைய ஆரம்பித்தது.

----------

kumudam03bmpma3.png

ணவனை நினைத்தால் ரஞ்சனாவிற்குள் ஆத்திரம் தாங்கவில்லை.

ஒரு மாதமாகவே... அலங்காரம் தூள் பறக்கிறது. போதாதற்கு செருப்பிலிருந்து ஷ¨வுக்கு மாறியாயிற்று.

எல்லாம் அடுத்த வீட்டிற்கு வனிதா குடியேறிய நாளிலிருந்துதான், இந்தக் கூத்து நடக்கிறது. வனிதா அந்த ஏரியாவையே கவர்ந்திழுக்கும் அழகு மோகினி. மளிகைக் கடைக்காரன், பால்காரன் என ஒருவர் பாக்கியில்லாமல் வழியத் தொடங்கிவிட்டனர். இப்போதோ, அவளைக் கவர்வதற்கு தன் புருஷனும் சேர்ந்து கொண்டாயிற்று.

நாற்பது வயதில்... இரண்டு குழந்தைகள் பெற்றவர் போலவா நடந்து கொள்கிறார்...? இன்றைக்கு இவரை ஒருவழி செய்ய வேண்டும் என முடிவெடுத்து வெளியில் கிளம்பினாள்.

வழியில் சீக்கிரமே ஆபீஸ் விட்டு வந்த அவள் கணவனும், அவர் நண்பனும் பேசுவது காதில் விழவும் சற்று ஒதுங்கி நின்று கேட்கலானாள்.

"என்னப்பா ராகவா...? மாப்பிள்ளை கணக்கா... மேக்கப் எல்லாம் தூள் கிளப்புது...? என்ன, ஏதாவது பார்ட்டிக்கு ரூட் விடறியா?"

"அட நீ வேறடா...? எனக்கும், என் பொண்டாட்டிக்கும் 10 வயசு வித்தியாசம். நானோ இந்த 40 வயசுலயே இப்படி முன்பாதி வழுக்கை, சின்ன தொந்தின்னு ஆளே வயசானவன் மாதிரி கிடக்கறேன். இதுல... என் பக்கத்து வீட்டுக்குப் புதுசா ஒருத்தன் குடிவந்திருக்கான். பையனும் நல்ல ஸ்மார்ட்டா இருக்கான். அசத்தலாவும் ட்ரெஸ் பண்ணறான். ஒண்ணுகிடக்க ஒண்ணாச்சுண்ணா என்ன பண்ணறது...? அதான்... பேசாம நானே யங்கா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்." என்று சொல்லி முடித்த ராகவனையும், தன்னையும் எண்ணி உள்ளூரச் சிரிக்கலானாள் ரஞ்சனா.

----------

kumudam04bmphl1.png

புவனாவுக்கு எரிச்சலாக வந்தது. நாள் முழுக்க கடுகடுப்பாக இருக்கும் கணவன் வாசுதேவன், இரவில் மட்டும், அதுவும் படுக்கையறையில் குழைந்தபடி வந்து, "எல்லாம் காலைல பேசிக்கலாம். இப்ப எனக்கு மூடு வந்திருச்சி" என்பான்.

காலையில் எழுந்தால் ஆள் அப்படியே மாறிப் போய் விடுவான். அம்மா சொல்வதைத்தான் கேட்பான். அலுவலகத்திற்கு ஃபோன் செய்தால் எப்போதும் ஏதாவது மீட்டிங், டிஸ்கஷன் என்று இருப்பான்.

மாலையில் வந்ததும் லாப்டாப்பை வைத்துக்கொண்டு ஆபீஸ் வேலையில் மூழ்கி விடுவான்.

அப்படியென்றால் 'அதுக்கு' மட்டும்தான் நானா?

இன்றிரவு அவன் வந்து ஹிஹி என்று வழிந்தால், நறுக்கென்று கேட்டு விட வேண்டியதுதான்.

புவனா முடிவு செய்தாள்.

இரவு.

அதே போன்ற வழிசலுடன், "வாயேன் புவனாக்குட்டி" என்றான்.

வெடித்து விட்டாள்.

அவள் பேசி முடிக்கும் வரை முழுக்க கேட்டுக் கொண்டிருந்து விட்டு சொன்னான். "புவனா, அம்மா என்மேல கண்மூடித்தனமான பாசத்தோட இருக்காங்க. ஆபீஸ்ல தலையைத் திங்கற அளவுக்கு வேலை. செய்தே ஆகணும். நாள் முழுக்க தேய்ஞ்சு போன நான், உன்கிட்ட ஒரு வடிகால் தேடறது உண்மைதான். அதை விட பகல்பூரா இருக்கற பிரச்னைகள்ல இருந்து என்னைக் காப்பாத்தற தேவதையா நினைச்சுதான் உனக்குள்ள என்னை புதைச்சுக்கறேன். நீ வெறும் பெண்டாட்டி இல்லை. என்னை தினம் தினம் புதுப்பிச்சுக் கொடுக்கற தேவதை" என்று அவன் சொல்லச் சொல்ல, பிரமித்துப் போன புவனா அவனை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

----------

kumudam05bmptw7.png

சுகுமார் மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டிருப்பதை சுகந்தி பார்த்தாள். சுகந்தி, சுகுமாரின் பக்கத்து வீட்டுக்காரி.

அவளுக்கு சுகுமாரும், அவன் மனைவி சௌந்தர்யாவும் ஒரு நாள்கூட சண்டை போட்டுக் கொள்ளாதது சங்கடத்தைக் கொடுத்தது. இன்று எப்படியாவது கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சுகுமார் அருகில் வந்தாள்.

"இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைன்னு மார்க்கெட்டுக்கு நீங்களே வந்திட்டீங்களா?"

நிமிர்ந்து சுகந்தி நிற்பதைப் பார்த்துப் புன்னகைத்தான்.

"ஆமாங்க! லீவுன்னா நான்தான் வருவேன்! நீங்க எல்லாம் வாங்கிட்டீங்களா?" என்றான்.

"இனிமேதான்" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சற்று நெருக்கமாக வந்து...

"ஆமா நீங்க எப்ப வீட்டை விட்டு கிளம்புவீங்கன்னு உங்க ஃப்ரண்ட் மூர்த்தி காத்திருப்பார்போல இருக்கு! அந்த நேரம் பார்த்து உங்க வீட்டுக்குள்ளே போயி உங்க மனைவி கிட்டே அவ்வளவு நேரம் என்ன பேச்சு வேண்டி கிடக்கு? சௌந்தர்யாவும் இவ்வளவு இடம் குடுக்கக் கூடாது! நானேகூடச் சொல்லிடுவேன்! அப்புறம் என்னைத் தப்பா நினைச்சிட்டா என்ன பண்றதுன்னுதான் சொல்லலே..."

அவள் சொல்லச் சொல்ல, சுகுமார் முகம் மாற... சரியாக பத்தவச்சிட்டதாக எண்ணி, அவன் காணாத வகையில் சிரித்தபடி நகர்ந்தாள்.

மணி 10 அடித்தும் பக்கத்து வீட்டில் எந்தச் சத்தமும் வராமல் அமைதியாக இருப்பதை நினைத்தபடி வாசல் அருகில் சுகந்தி வந்த போது, அவள் கணவன் கதிர்வேல் உள்ளே வந்தான்.

"ஏண்டி? எத்தனை நாளா இது நடக்குது? நீ அந்த சுகுமார்கிட்டே மார்க்கெட்ல உரசி நின்னுக்கிட்டு, சிரிச்சி சிரிச்சிப் பேசிக்கிட்டிருந்தியாமே? மானமே போகுதுடி! ஏன் அவன்கூட ஓடிப்போக திட்டம் ஏதாவது போட்டுக்கிட்டிருந்தியா?" என்றவன் பளாரென அவள் கன்னத்தில் அறை விட, சுழன்று கீழே விழுந்தாள் சுகந்தி.

நன்றி குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சின்னக் கதைகள். யாழிலும் ஒவ்வொருவரும் தங்களின் கற்பனையில் ஒரு வரி சொல்லும் கதையை எழுதி வந்தார்கள். ஆனால் ஏனோ அது நிறுத்தப்பட்டுவிட்டது

கதைகளுக்கு நன்றி...சின்னதா நல்லா இருக்கு..

  • தொடங்கியவர்

இன்னும் சில......................

kumudam01ir2.png

னியனே.. பிஹேவியர் தெரியலே... தரையில சிந்தாம சாப்பிடு...’’ _மகன் குமாரின் தலையில் நறுக்கென்று குட்டினான் ரமேஷ்.

‘‘அப்பா... தலையில அடிக்காத... வலிக்குது...’’ என்றான் குமார் பரிதாபமாக.

அன்று இரவு... ஸ்கேலை எடுத்து சுளீர் சுளீர் என்று குமாரைப் பின்னி எடுத்துவிட்டான். பென்சில் பாக்ஸைத் தொலைத்து விட்டானென்று.

‘‘நான் தொலைக்கலேப்பா... எவனோ திருடிட்டான்...’’ வலியைத் தாங்கிக் கொண்டே குமார் சொன்னான்.

‘‘அலட்சியம்... எல்லாத்துலேயும் அலட்சியம்... உஷாரா இருக்கணும்ல... பிஹேவியரே தெரியலே...’’ குமார் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

ரமேஷ் அடிக்கடி இப்படிதான்... சின்னச் சின்ன விஷயங்களில் கூட குமாரை அடித்துத் துவைத்து விடுவான். அன்று அப்படிதான்... வகுப்பில் குமார் கடைசி ரேங்க் வந்து விட்டான். அதனால் பெற்றோரைக் கூட்டி வரச் சொல்லி விட்டார்கள்.

‘‘உன்னால என் மானமே போயிடுச்சுடா... ஒரு நல்ல பிஹேவியர் கூட இல்லே... ஒரு மணி நேரம் முட்டிப்போடு...’’ முட்டிப் போட்டான் குமார்.

தலைமையாசிரியர் அறை... ‘‘நல்லா படிக்கிற பையன்... சமீப காலமா கவனக்குறைவா இருக்கான். விசாரிச்சப்போ, நீங்க வீட்ல அவன் கிட்டே ரொம்ப முரட்டுத் தனமா நடந்துக்கறீங்க... சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட அவனை அடிச்சுடறதா சொல்றான். நாங்களே இப்பல்லாம் குழந்தைகளை அடிக்கறதில்லே... அவங்க பூ மாதிரி... அன்பா அரவணைச்சு அவங்களை நடத்தணும். குழந்தைங்க கிட்டே எப்படி நடந்துக்கணும்கிற பிஹேவியர் தெரியல உங்களுக்கு...’’ திகைத்தான் ரமேஷ்.

----------

kumudam02yb2.png

கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது.

‘‘அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.’’

‘‘ஒரு ரெண்டு டீ போடு.’’

குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது.

டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, ‘‘ஐயா! சாமி ஒரு சாயா தாங்கய்யா.’’ _எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அழுக்கு உடையில் காவிப் பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார்.

டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு, அந்த அழுக்கு நபருக்கு, அலுமினிய டம்ளரில் டீ போட்டு தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார்.

எல்லோரும் காசு கொடுக்க _ அந்த நபரும் காசு கொடுக்க கல்லாவில் போட்டார் கடைக்காரர். டீ கொடுத்து, அதைக் குடித்து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார் அந்த அழுக்கு ஆசாமி. ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு எனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க. ஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும் ஒரே கல்லாவில் போடுறீங்களே!’’_பதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு.

----------

kumudam03pi1.png

மாத்தூர் கிராமமே அன்று அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

கிராம மக்களின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறப் போகிறது.

இரண்டு கிராமங்களை இணைக்கும் அந்தச் சிறிய பாலத்தைத் திறந்து வைக்க இரண்டு அமைச்சர்கள் வருகைபுரிகிறார்கள்.

ஊரெங்கும் தோரணங்கள். வண்ணமயமான டிஜிட்டல் பேனர்கள்.

கிராம மக்களிடம் சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், வருத்தம் ஒருபுறம் இருக்கத்தான் செய்தது.

அவர்கள் கனவு, வண்டிப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு அகலமான பாலம். ஆனால், பேரூராட்சி நிர்வாகம், அத்தனை தொகையெல்லாம் ஒதுக்க முடியாது என்று கூறி, நாற்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் நடைப்பாலம்தான் அமைத்திருக்கிறது.

புழுதிபறக்க வரிசையாக கார்கள் அணிவகுத்தன. கிராமத்து மக்கள் ஆச்சரியமாய் அண்ணாந்து பார்த்தார்கள். வெடி வெடித்தார்கள். சிலர் கொடி பிடித்தார்கள்.

அமைச்சர்கள் இருவரும் வந்து இறங்கினார்கள்.

பேரூராட்சி நிர்வாகம் பிரமாண்டமாய்ப் பந்தல் போட்டு பிளாஸ்டிக் நாற்கலிகளைப் பரப்பியிருந்தது.

அமைச்சர் ஒருவர் தலைமைதாங்கி, தமது அரசின் மகத்தான சாதனைகளை விளாவாரியாக விளக்க, இன்னொரு அமைச்சர் பாலத்தைத் திறந்து வைத்தார்.

மறுநாள் பேரூராட்சி கணக்கர், செலவு கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தார்.

பாலம் கட்டியதற்கு நாற்பதாயிரம்.

திறப்புவிழாச் செலவு ஐம்பதாயிரம்!

----------

kumudam04ag4.png

ம்மா இறந்து விட்டார்’ எனத் தன் நெருங்கிய உறவினர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்பினாள் கீதா.

சில மணி நேரங்களில் கீதா வீட்டிற்குச் சொந்த பந்தங்கள் வந்து சேர்ந்தனர். வீட்டிற்குள் சென்ற வர்களுக்குப் பெரிய அதிர்ச்சி.

இறந்துவிட்டதாகச் சொன்ன கீதாவின் அம்மா, படுக்கையில் உயிருடன் இருந்தார்.

‘‘ஏன் தவறான தகவல் சொன்னாய்...?’’ என்று எல்லோரும் கீதாவிடம் ஆத்திரப்பட்டார்கள். பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, கீதா பேசினாள்.

‘‘தப்பான தகவல் தந்ததுக்கு எல்லோரும் என்னை மன்னிச்சுக்குங்க... எனக்கு வேற வழி தெரியல... அம்மா படுத்தப் படுக்கையாகி ஒரு மாதமாச்சு.... ‘ஆபரேஷனுக்கு பத்துலேர்ந்து பதினைஞ்சாயிரம் செலவு பண்ணா அம்மாவ காப்பாத்திடலாம்னு டாக்டர் சொன்னாரு... அதுக்கு யாரும் உதவி பண்ணல... நீங்க ஒவ்வொருத்தரும் ‘நமக்கென்ன, அடுத்தவர் பார்க்கட்டும்’னு நினைக்கிறீங்க... நான் வெளிப்படையாவே கேக்குறேன்... அம்மாவோட சாவுக்கும் கருமாதிக்கும் நீங்க எவ்வளவு செலவு பண்ணுவீங்களோ, அதை இப்பவே கொடுங்க... அம்மாவ காப்பாத்திடலாம்... செத்துப் போனபிறகு, அம்மாவுக்கு யாரும் வாய்க்கரிசி போடவேண்டாம்... அவங்க உயிர் வாழும்போதே உதவி செய்யுங்க....’’ என்று கீதா கண்கலங்கினாள்.

அவளின் கோரிக்கையை ஏற்றதுபோல, கூடியிருந்த உறவினர்களின் கண்களில் ஈரம் கசிந்திருந்தது.

----------

kumudam05jq1.png

னக்கு அந்தப் புத்தாண்டு வாழ்த்தை, ஜெய்ப்பூரில் இருந்து அனுப்பியிருந்தார் என்பது பிரிக்காமலேயே புரிந்துவிட்டது.

பழைய வெள்ளை அல்லது பழுப்பு நிறக் காகிதத்தை எடுத்துத் தானே உறை செய்து, அதில் ஏற்கெனவே யாரோ தனக்கு முந்தைய ஆண்டு அனுப்பிய வாழ்த்து அட்டையை வைத்து அனுப்பியிருந்தார்..

புதிதாக ஒரு வாழ்த்து அட்டை வாங்கக்கூட காசு செலவழிப்பதில் கணக்கு பார்ப்பவர், இதை அனுப்பத்தான் வேண்டுமா என்று அவரிடமே கேட்டுவிடலாமா என்றுகூடத் தோன்றும்.

ஒருமுறை தேஜேஸ்வரின் மகன் யோகேஷ் சென்னை வந்தபோது, பைநிறைய அன்பளிப்புகளுடன் வீட்டுக்கு வந்து எங்களைத் திகைக்க வைத்தான்.

‘‘அப்பா அம்மா அனுப்பினாங்க.’’

‘வாழ்த்து அட்டை வாங்குவதில் இண்டம் பிடிப்பவரா இப்படி...?’ என் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியபோது,

‘‘ஓ அதுவா ஆன்ட்டி. அப்பா காட்டிலாக்கா அதிகாரியாக இருந்தபோது, பாமரத்தனமாய் மக்கள் மரங்களை வெட்டி அடுப்பெரிக்கவும், திருட்டுத்தனமாய் விற்றுப்பணம் பண்ணுவதையும் பார்த்துத் துடித்துப் புலம்பாத நாளே இல்லை. தான் பெரிய பசுமையின் காவலர் என்கிற நினைப்பு அவருக்கு. ‘பிளாஸ்டிக், கண்ணாடிச் சாமான் மாதிரி வாழ்த்து அட்டைகளையும் புனர் உபயோகம் செய்தால், இன்னும் பல மரங்கள் காகிதம் செய்வதற்காக வெட்டப்படுவதைத் தடுக்கலாமே’ என்று விவாதிப்பார். ‘சாரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்.’’ இல்லையா ஆன்டி?’ யோகேஷ் சிரித்துக் கொண்டே சொன்னான்.

----------

kumudam06fs9.png

ன் வீட்டுக்காரரு என்னை அநியாயத்துக்குச் சோதிக்கறாரு!’’

‘‘என்னோட குடிகாரப் புருஷன்தான் அப்படீன்னா உன் வீட்டுக்காரருமா?’’

‘‘அதை ஏன் கேட்கறே, காலையிலே ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துடறாரு. என்கூட வீட்டுவேலையையெல்லாம் பகிர்ந்துக்கறாரு. என்னை நச்சரிக்காம மடமடனு, தானே ரெடியாகி ஆபீஸ் புறப்பட்டுடறாரு. சாப்பாடு எது செய்து கொடுத்தாலும் எந்தக் குறையும் சொல்றதில்லே. ஆபீஸ் முடிந்ததும் நேரா வீட்டுக்கு வந்துடறாரு. நான் எது செய்தாலும் எந்தக் குற்றம், குறையும் சொல்றதில்லே. இதையெல்லாம் விட சிகரெட், மது, சீட்டாட்டம் இப்படி எந்த கெட்டபழக்கமும் இல்லே. அவர் கிட்டே எந்தக் குறையையும் என்னாலே கண்டுபிடிக்க முடியலே!’’

‘‘இதெல்லாம் ரொம்ப சந்தோஷமான விஷயமாச்சே! உலகத்திலே உன்னை மாதிரி கொடுத்து வச்சவ யாருமே இருக்க முடியாது! நீ ஏன் சோதிக்கறாருனு அலுத்துக்கறே, உனக்கென்ன பைத்தியமா?!’’

‘‘மண்ணாங்கட்டி! ஒரு பொண்டாட்டிக்கு, புருஷனை ஆட்டிவைக்கணும், புருஷன் செய்யற தப்பைக் கண்டுபிடிச்சு வசைபாடணும், காதைத்திருகி குட்டி வைக்கணும்னு... இப்படியெல்லாம் ஆசை இருக்காதா?! இப்படி என் ஆசை எதையுமே நிறைவேற்றிக்க முடியாம இவர் என்னை ஒரேயடியா இப்படி சோதிச்சா எப்படி?!’’

நன்றி குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.