Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் இனியொரு தடவையேனும் யாரிடமும் கையேந்தக் கூடாது : டெனீஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மக்கள் இனியொரு தடவையேனும் யாரிடமும் கையேந்தக் கூடாது : டெனீஸ்வரன்
212babc4c926e6ad0b9068e982adb233.jpg
கடந்தகால போர் சூழலால் எம் மண்ணுக்காக உயிர் நீத்தவர்களது குடும்பங்கள், அரசினால் புனர்வாழ்வழிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளது குடும்பங்கள் போன்றவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவும், மீன்பிடி பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் ஆகியன தொடர்பான தமது அமைச்சின் நடவடிக்கை தொடர்பில் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தெளிவுபடுத்தியிருந்தார்.
 
மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனது ஊடக சந்திப்பு இன்று யாழிலுள்ள அவரது பணிமனையில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் இச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
போர் சூழலால் எம் மண்ணுக்காக உயிர் நீத்தவர்களது குடும்பங்கள். அரசினால் புனர்வாழ்வழிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளது குடும்பங்கள் போன்றவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக எனது அமைச்சினுடாக கொள்கை பிரகடனம் செய்யப்பட்டு அதற்கென 42மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் இவ் வேலைத்திட்டத்திற்காக இதுவரையில் ஜந்து மாவட்டங்களிலும் இருந்து 13ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களை காலகிரம அடிப்படையில் சந்தித்து அவர்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
 
இவ் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்பதன் நோக்கம் எம் மக்கள் இனி ஒரு தடவையேனும் யாரிடமும் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே.
 
இவ் வேலைத்திட்டத்தின் ஊடாக நாம் உள்ளுர் வளங்களை பயன்படுத்தி கூடிய வருமானத்தை பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காகும். அத்துடன் இதற்கான சிறந்த சந்தை வாய்பினையும் ஏற்படுத்த வேண்டும். இதற்கு சில நிறுவனங்கள் தாம் உதவுவதாக தெரிவித்திருக்கின்றன.
 
அத்துடன் இவ் வேலைத்திட்டத்தில் பெண் போராளிகள் அவையவங்களை இழந்தவர்கள் போன்றோரை நாம் முதன்மைப்படுத்தி வேலைத்திட்த்தை முன்னெடுக்கவுள்ளோம். 
 
இத்தகைய வேலைத்திட்டத்திற்கு மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம். 
 
ஏனெனில் சில பிரதேச மக்கள் தமது பிரதேசங்களுக்கும் இவ்வாறான உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என கேட்கின்றனர். 
 
ஆனால் நாம் இவ் வேலைத்திட்டத்தை வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்துவதற்கு மிகவும் கஸ்ரப்படும் மக்களிற்கே முதலில் வழங்குகின்றோம். தொடர்ந்து நாம் ஏனைய மக்களுக்கும் உதவித்திட்டங்களை வழங்கவுள்ளோம். 
 
முழு சமூகத்தினரையும் ஒரே முறையில் அபிவிருத்தி செய்வதற்கு மாகாண அரசால் மட்டுமல்ல மத்திய அரசால் கூட முடியாத காரியம். எனவே இவற்றை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும். இவ் வேலைத்திட்டத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்களும் உதவுவதாக தெரிவித்துள்ளனர். இவற்றை கொண்டு இவ் வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
fhffg.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=700804031213697055#sthash.oAvXgZPU.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்
இவ் வேலைத்திட்டத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்களும் உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
எங்களை வேண்டாம் என்று ஆத்மீகவாதி சொல்லுகின்றார்........அரசியல்வாதி வேணும் என்று சொல்கின்றார்.....நாங்கள் இப்ப என்னதான் செய்யிறதாம்?
  • கருத்துக்கள உறவுகள்

எங்களை வேண்டாம் என்று ஆத்மீகவாதி சொல்லுகின்றார்........அரசியல்வாதி வேணும் என்று சொல்கின்றார்.....நாங்கள் இப்ப என்னதான் செய்யிறதாம்?

வெள்ளை வேட்டிக்கார்ரும் சரி காவி வேட்டிக்கார்ரும் சரி காசை மட்டும் கொடு " மூச் பேச்" இருக்க கூடாது என்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.