Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலைப்பதிவாளர் சந்திப்பு - லக்கிலுக்கின் பார்வையில்!

Featured Replies

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு கடந்த ஞாயிரன்று மாலை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு சிறிய ஹாலில் சிறப்புற நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பாக வானமும் வலைப்பதிவாளர் சந்திப்பை வாழ்த்த சில துளிகளை அனுப்பி வைத்திருந்தது.

Ockey, ஓவர் டூ வலைப்பதிவாளர் சந்திப்பு :

* விழா 4 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சுமார் 3.30 மணிக்கு முத்து(தமிழினி)யுடன் விழா அரங்குக்குச் சென்றோம். வாசலில் சிகப்பு டீ-சர்ட் ஜீன்ஸ் பேண்டுடன் பாலபாரதி "யூத்" மாதிரி காட்சியளித்தார். இதுவரை வலைப்பதிவாளர் சந்திப்புகளில் வருகைப்பதிவேடு இருந்ததில்லை. முதன்முறையாக இந்த சந்திப்பில் வருகை பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. சந்திப்புகள் முறையாக நடக்கத் தொடங்குகிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

* எல்டாம்ஸ் சாலை பாதி ஒன்வே, பாதி டபுள்வே என்பதால் வலைப்பதிவாளர்கள் நிறைய பேர் வர சிரமப்பட்டனர். தொலைபேசியில் அவர்களுக்கு இந்த கூத்தினை விளக்கி, சரியான வழி சொல்ல ரொம்பவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.

* 4 மணியளவில் மிக சொற்பமான பேரே வந்திருந்தாலும் (சுமார் 15 பேர் இருக்கலாம்) விழாவை சரியான நேரத்துக்கு பாலபாரதி தொடங்கினார். இரு கட்டுரைகள் வாசிக்கப்படும் என்று அறிவித்த அவர் கூட்டத்துக்கு மதிப்பிற்குரிய இராம.கி. அவர்களை தலைமையேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

* இராம.கி. தலைமையுரை வாசிக்கும்போது வலைப்பூக்களில் கதை, கவிதைகளையே எழுதிக்கொண்டிராமல் வித்தியாசமாக தொழில்சார்ந்த பதிவுகள் வரவேண்டும் என கேட்டுக் கொண்டார். கதை, கவிதைகளை எழுத பத்திரிகைகள் இருக்கின்றன. பத்திரிகைகளுக்கும், வலைப்பூக்களுக்கும் வேறுபாடு இருக்கவேண்டும் என்பதாக அவர் தொனி இருந்தது. அவரது கருத்தில் எனக்கு சில முரண்பாடுகள் உண்டு. வலைப்பூவில் எழுதுபவர்களில் 90 சதவிகிதம் அமெச்சூர் எழுத்தாளர்கள். ஓரளவுக்கு "பக்குவப்படுத்தப் பட்டதற்கு" பிறகே பெரும்பான்மை வலைப்பதிவர்கள் Profesional Bloggers ஆக முடியும் என்பது என் கணிப்பு.

* அடுத்ததாக மா. சிவக்குமார் வலைப்பூக்களின் அடுத்த நகர்வு என்ற தலைப்பில் பேசினார். எனக்கு அவ்வளவு சுவாரஸ்யமாகப் படவில்லை. தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களாக அவர் பேசியதால் இருக்கலாம். இடையில் குறுக்கிட்ட பாலபாரதி டெம்ப்ளேட்களை தமிழ்மணம் கமழும் வகையில் (பேக் கிரவுண்டில் கன்னியாகுமரி, வள்ளுவர் கோட்டம் போன்ற படங்களுடன்) அமைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று குறிப்பிட்டது என்னை மிகவும் கவர்ந்தது.

* மா. சிவக்குமாரிடம் தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள ஒரு தனி குழு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினேன். உடனடியாக அவர் ஆன் - த - ஸ்பாட்டிலேயே முடிவெடுத்து என்னவெல்லாம் செய்யமுடியும் என்று எனக்கு விளக்கமளித்தார். தொழில்நுட்பத்தில் பூச்சியமான என்னை மாதிரியான வலைப்பதிவர்களுக்கு என்ன தேவை என்று அவரிடம் சொன்னேன். விக்கி, பொன்ஸ், மா. சிவக்குமார் மற்றும் ஏனைய சில தொழில்நுட்ப வல்லுனர்களை ஒரு குழுவாகக் கொண்டு விரைவில் இதுகுறித்த வலைப்பதிவை ஆரம்பிக்கப் போவதாக வாக்களித்திருக்கிறார்.

* சீரியஸான சந்திப்புக்கு நடுவே ஜோக்கர் மாதிரி இட்லிவடையின் பிரதிநிதி ஒருவர் உள்ளே புகுந்து புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினார். தன்னை வாசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் உடனடியாக எஸ்கேப் ஆகி இட்லிவடைக்கு படங்களை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இட்லிவடை இந்த முறைகேடான பேப்பரஸி வேலைக்காக மன்னிப்போ அல்லது தகுந்த விளக்கமோ தரும் வரை இட்லிவடை பதிவுகளில் பின்னூட்டம் இடாமல் புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்திருக்கிறேன்.

* தமிழ் ஈழநாடு, கிளிநொச்சியைச் சார்ந்த சகோதரர் அகிலன் 10 நாட்களுக்கு முன்பாக சென்னை வந்திருந்தார். சென்னை வந்த அவர் என்னை தொடர்புகொண்ட போது வலைப்பதிவர் சந்திப்புக்கு கட்டாயம் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அகிலனும், நிலவன் என்ற நண்பருடன் சந்திப்புக்கு வந்திருந்தார்.

* பாலபாரதி நிகழ்ச்சி நிரலில் அருமையான இடைச்செருகலாக திடீரென அகிலனை பேச அழைத்தார். தமிழ் ஈழத்தில் இணையம் என்ற தலைப்பில் (இந்த தலைப்பு நானாக வைத்தது, அகிலன் பொதுவாக தான் பேசினார்) அருமையான தமிழில் அகிலன் உரை நிகழ்த்தினார். சுமார் 4 லட்சம் பொதுமக்கள் தற்போது நிறைந்திருக்கும் தமிழீழ நாட்டில் சுமார் 50,000 பேர் வரை மட்டுமே கணிணியை பாவித்திருப்பார்கள். அவர்களில் சுமார் 10,000 பேர் வரை மட்டுமே இணையத்தை பாவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்களில் சுமார் 5000 பேருக்குள்ளாக தான் தொடர்ந்து இணையத்தை பாவித்திருப்பார்கள். அனேகமாக தமிழ் ஈழநாட்டில் இருந்து வலைப்பூ எழுதியவர்கள் அகிலனும், நிலவனும் மட்டுமே கூட இருக்கலாம் என்றார். அகிலன் ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராக கிளிநொச்சியில் பணிபுரிந்து வந்தவர்.

* ஒரு பத்திரிகையாளராக செஞ்சோலை படுகொலைக்கு பின்னர் செய்தி சேகரிக்க சென்ற அனுபவத்தை அகிலன் விவரித்தபோது கண்களில் நீர்கோர்த்தது. விமானத் தாக்குதல் எவ்வளவு கொடூரமானது என்பதை எளியத்தமிழில் புன்னகையுடன் சொன்னார். ஒரு வெடிகுண்டு விமானத்தில் இருந்து போடப்பட்டால் சுமார் 1 கி.மீ. வரை அதன் பாதிப்பு இருக்கும். மேலும் குண்டு போடப்பட்ட இடத்தில் ஒரு கிணறு வெட்டப்பட்டதைப் போன்ற பெரும் பள்ளம் ஏற்படும் என்றார். செஞ்சோலையில் அதுமாதிரி 16 குண்டுகள் போடப்பட்டு மழலைப்பூக்களை இலங்கை அரசு கருக வைத்ததை உருக்கமாக எடுத்துச் சொன்னார்.

* சென்னையில் பிச்சைக்காரர்களை பார்க்க நேர்ந்த அகிலன் அதுகுறித்து ஆச்சரியப்பட்டார். தமிழீழ நாட்டில் ஒரு பிச்சைக்காரர் கூட இல்லை என்று அவர் சொன்னபோது தமிழீழம் உலகால் அங்கீகரிக்கப்படும்போது சிங்கப்பூரை தாண்டிச் செல்லும் என்ற என் கணிப்பு சரியாகவே இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத் திறமைக்கு இதுவே சரியான சான்று.

* இந்த வலைப்பதிவர் சந்திப்பில் எனக்கு மிகப்பெரும் ஆச்சரியம் மற்றும் ஆர்வத்தை தந்தது அகிலன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

* அகிலனின் பேச்சுக்கு பிறகு எஸ்.கே. "தமிழீழ நாட்டில் கணிப்பொறி பயன்பாடு குறைவாக இருப்பது இயலாமையா? பயமா?" என்று ஒரு கேள்வி கேட்டார். இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்ச்சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை அந்த அளவுதான் என்று நினைத்துக் கொண்டேன். மரபூர் ஜெயசந்திரசேகரனோ ஒரு படி மேலே போய் அகிலனிடம் "நீங்கள் சொன்ன கதையில்" என்று சொல்லப்போக பொங்கியெழுந்த வரவனையான் செந்தில், "அகிலன் சொல்வது கதையல்ல, அவரது வாழ்க்கை" என்று தெளிவுபடுத்தினார். உடனே டோண்டு சார் "கதை என்றால் தமிழீழ தமிழில் பேசுவது என்று பொருள்" என்று மரபூரின் "கதைக்கு" வியாக்கியானம் சொன்னார். இந்தக் கூத்துகளால் எந்த வருத்தமோ, சங்கடமோ அடையாமல் அகிலன் புன்னகையுடனேயே பதிலளித்தார்.

* அடுத்ததாக தேநீர் இடைவேளைக்குப் பிறகு வலைப்பூக்களில் சாதீயம் என்ற தலைப்பில் பாலபாரதி பேச ஆரம்பிக்க தீப்பிடிக்க ஆரம்பித்தது. சமீபத்திய தருமி பதிவு ஒன்றினை உதாரணம் காட்டி அவர் பேச போக ஓகை இடையே எழுந்து தன் எதிர்ப்பை தெரிவித்தார். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த பாலபாரதி ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் தன் பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டு விவாதம் ஆரம்பம் ஆகட்டும் என்றார். அவர் இன்னமும் நிறைய பேச தயார் செய்து வைத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

* அடுத்ததாக விவாதங்கள் ஆரம்பித்தது. ரோசாவசந்த் அவர் எழுத்துக்களைப் போலவே தீப்பிடிக்கும் பாணியில், ஆனாலும் லைட்டாகப் பேசினார். டி.பி.ஆர். ஜோசப் பத்திரிகையாளர்களுக்குரிய அங்கீகாரம் வலைப்பதிவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று சொன்னார். உடனே மறுத்த ஸ்டிமுலேசன் வலைப்பதிவுகள் பொழுதுபோக்குக்காக எழுதப்படுபவை என்று மறுத்தார்.

* ஓகை அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது செந்தழல் ரவி அவர்களின் வேலை வாய்ப்பிதழ் பற்றி பேசினேன். அவரும் செந்தழலாரின் சேவையைப் பாராட்டினார்.

* ஜாதி குறித்த பேச்சு வந்தபோது "இணையத்தில் தன் சாதிப் பெயரை சொல்லிக் கொள்வதால் தான் பிரச்சினை வருகிறது. ஜாதிப்பெயரை சொல்லிக்கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை" என்றேன். டோண்டு சார் உடனே மறுத்து என்னுடைய பர்சனல் தகவல்களை விசாரித்து பதில் அளிக்க முனைந்தார். இடையில் புகுந்த பாலபாரதி என்னை "தம்" அடிக்க வெளியே அழைத்துச் சென்று விட்டார்.

* கடைசியாக போட்டோ எடுக்கும் வைபவம் நடந்தபோது நான், பொன்ஸ், ரோசாவசந்த் உட்பட சில பதிவர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை.

* இந்த வலைப்பதிவர் சந்திப்பு முடிந்தபின்பு "தாகம்" கொண்ட வலைப்பதிவாளர்கள் ஒரு 10 பேர் சேர்ந்து இன்னொரு சந்திப்பு நடத்தினார்கள். அந்த "குட்டி" சந்திப்பு, ஒரிஜினல் சந்திப்பை விட மிக சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்தப் பதிவில் அந்த சந்திப்பு பற்றி எழுதுகிறேன்.

(http://madippakkam.blogspot.com

  • Replies 55
  • Views 6.9k
  • Created
  • Last Reply

ந்ன்றாக இருந்தது லக்கி உங்கள் பதிவு அந்த கூட்டத்தில் நேரில் பங்கு பற்றியது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது வாழ்த்துக்கள்

லக்கி தாகம் கொண்ட வலைப்பதிவாளர்கள் இந்த முறையும் பொன்னிறப்பானமா அருந்தினர்

Edited by ஈழவன்85

லக்கி லுக்... வலைபதிவர் சந்திப்பை வர்ணணை செய்த விதம் நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..

சிவத்த சட்டையுடன் வந்திருந்தீர்கள் என்று கேள்விப்பட்டன்..

ஆனால் வேறு இருவரும் சிவத்த சட்டையுடன் வந்தமையால் போட்டோக்களில் அடையாளம் காணமுடியவில்லை...

http://special-aappu.blogspot.com/

எனக்கும் மிரட்டி மேலை உள்ள பதிவாளர் எனது பதிவில் பின்னூட்டம் போட்டுள்ளார்.... அதை நான் பப்ளிஸ் செய்யவில்லை...

லக்கிலுக்.. உங்களுக்கு தெரிந்திருக்கும்.இந்த....தமிழ் பதிவுலக சிக்கு மாக்குகள்..பற்றி

இந்த சின்னக்குட்டி பனங்காட்டு நரி...சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது...

இதில யாரு லக்கி சொல்லுங்கள் வலைப்பதிவு நண்பர்களே !!!!

meet_19.jpg

என்ன சின்னக்குட்டி http://special-aappu.blogspot.com/ இதில எல்லாரையும் பற்றி எழுதியிருக்கு கணனிகுள் உள்ளே பூந்து விளையாட்டு காடூராங்கள் போலவும் இருக்கு

மூன்று பெயர்களிலும் டோண்டு ராகவன் என்கிற கிழட்டு பாப்பார நாய் பயன்படுத்தும் ஐப்பி விபரங்கள்:-

61.17.180.60

210.211.184.227

61.17.180.60.static.vsnl.net.in (61.17.180.60)

210.211.184.227.bb-dynamic.vsnl.net.in (210.211.184.227)

Videsh Sanchar Nigam Ltd - India

இவன் என்னுடைய பதிவினை எச்.டி.எம்.எல் டாகுமெண்டாக தன்னுடைய டெஸ்க்டாப்பில் நியூ ப்ரீப்கேஸ் என்ற போல்டரில் moorth என்ற பெயரில் சேமித்து வைத்து இருக்கிறான்!!!

கவனமப்பா இனி வ்லைப்பதிவே எனக்கு வேணாம் :rolleyes:

இதில யாரு லக்கி சொல்லுங்கள் வலைப்பதிவு நண்பர்களே !!!!

meet_19.jpg

என்ன சின்னக்குட்டி http://special-aappu.blogspot.com/ இதில எல்லாரையும் பற்றி எழுதியிருக்கு கணனிகுள் உள்ளே பூந்து விளையாட்டு காடூராங்கள் போலவும் இருக்கு

மூன்று பெயர்களிலும் டோண்டு ராகவன் என்கிற கிழட்டு பாப்பார நாய் பயன்படுத்தும் ஐப்பி விபரங்கள்:-

கவனமப்பா இனி வ்லைப்பதிவே எனக்கு வேணாம் :rolleyes:

ஈழவன்.........உந்த பார்பனியத்துக்கு ஆதரவு செய்பவர்களை எச்சரிக்கை செய்கிறது.. இருக்கட்டும்...

என்னை ஏன் மிரட்டி ஈ-மெயில் போட்டார்கள் என்று விளங்கவில்லை...

எனது கருத்துகளை வாசித்தவர்கள் தெரிந்தவர்கள் நன்கு தெரியும்... என்றுமே பார்பனியத்துக்கு எதிராக குரல் கொடுப்பவன் சின்னக்குட்டிஎன்று...

கொலர் இல்லாத சிவத்த சட்டை போட்டவர் தான் லக்கிலுக் என்று யாரோ சொல்லுறாங்கள்... எனக்கு உண்மை பொய் தெரியாது.

Edited by sinnakuddy

காலர் இல்லாத சிவப்புசட்டை போட்டுக்கிட்டு சுவத்தோட ஒட்டிக்கிட்டு இருப்பவர்தான் எமது லக்கிலுக்கு. :P :P :P

லக்கி இன்னும் ஒத்துக்கொள்ளவில்லையே அதைவிட இப்படியும் எழுதியிருகிறாரே

* கடைசியாக போட்டோ எடுக்கும் வைபவம் நடந்தபோது நான், பொன்ஸ், ரோசாவசந்த் உட்பட சில பதிவர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை.

திசை மாத்தவும் எழுதியிருப்பார் உவர் உவரை நம்பவும் முடியாது அப்படித்தானே பிருந்தன் :P :P

ஈழவன்.........உந்த பார்பனியத்துக்கு ஆதரவு செய்பவர்களை எச்சரிக்கை செய்கிறது.. இருக்கட்டும்...

என்னை ஏன் மிரட்டி ஈ-மெயில் போட்டார்கள் என்று விளங்கவில்லை...

சின்னகுட்டியார் உங்களை கடத்திக்கொண்டுபோய் ஆப்பு வைக்கதான்.........

இரவில தனிய திரியாதீங்க........... :P :P :P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அகிலன் இந்தப் படத்தில் நிற்கின்றாரா?

அகிலன் இந்தப் படத்தில் நிற்கின்றாரா?

இவராக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக் சார் உங்கள் வலைப்பதிவு சந்திப்பு நல்லாஇருக்கு

சின்னகுட்டியார் உங்களை கடத்திக்கொண்டுபோய் ஆப்பு வைக்கதான்.........

இரவில தனிய திரியாதீங்க........... :P :P :P :blink:

என்னை கடத்தி கொண்டு போய் என்ன காணப்போறாங்கள்.... அதுவும் இரவிலை..... ஏறுறதும் இறங்கிடும்( அவங்கள் தண்ணி அடிச்சிருந்தால்) :(:(

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கடத்தி கொண்டு போய் என்ன காணப்போறாங்கள்.... அதுவும் இரவிலை..... ஏறுறதும் இறங்கிடும்( அவங்கள் தண்ணி அடிச்சிருந்தால்) :blink::(

:(:(

  • கருத்துக்கள உறவுகள்

லக்கியின் விமர்சனம் நன்றாக இருக்கிறது

அகிலன் அண்ணாவை பற்றி எழுதியுள்ளீர்கள்.... நன்றாக இருக்கு லக்கி!

  • தொடங்கியவர்

கண்ணாடி போட்ட வெள்ளைமுடியுடன் இருக்கும் பெரியவரின் பின்னால் கறுப்பாக, களையாக, ஒல்லியாக இருக்கும் இளைஞன் தான் சகோதரர் அகிலன்.

இந்த வண்ணப்படத்தில் நான் இல்லை :P

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி போட்ட வெள்ளைமுடியுடன் இருக்கும் பெரியவரின் பின்னால் கறுப்பாக, களையாக, ஒல்லியாக இருக்கும் இளைஞன் தான் சகோதரர் அகிலன்.

இந்த வண்ணப்படத்தில் நான் இல்லை :P

தப்பி விட்டீர்கள். இல்லாவிட்டால் ஊர் நாவுறு எல்லாம் உங்கள் மேலே தான். பிறகு மடிப்பக்காத்தில் வேப்பமிலை தேடி அலைய வேண்டி வரும் :):)

லக்கிலுக்கு நன்றாக உங்கள் சந்திப்பை நேரில் பார்த்தது போல எமக்கு அளித்திருக்கிறீர்கள். இணைப்புக்கு நன்றி ஆமா இதுல எது நீங்கள்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கிலுக்கு நன்றாக உங்கள் சந்திப்பை நேரில் பார்த்தது போல எமக்கு அளித்திருக்கிறீர்கள். இணைப்புக்கு நன்றி ஆமா இதுல எது நீங்கள்???

meetlkpa9.jpg

வட்டத்தில் சிகப்பு சட்டையணிந்து உள்ளவர்தான் லக்கி. ஒரு ஊகம்தான்.

meetlkpa9zl4.jpg

அண்ணாத்தை. அந்த நாள் நடிகர் சுமன்.சுதாகருஙக மாதிரி... சோக்கா தான் இருக்கிறாரு

  • தொடங்கியவர்

சுரேஷுக்கு யாழ்களத்தின் ஜேம்ஸ்பாண்டு பட்டம் கொடுக்கலாம். :P

எனக்கு பின்வரிசையில் கூலிங் க்ளாஸ் போட்டு ஸ்மார்ட்டாக இருப்பவர் யார் என்று யாராலேயாவது யூகிக்க முடியுமா?

ஆகா லக்கியை படம் பிடித்து போட்ட சுரெசுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரிசையில் கண்ணாடி போட்டிருப்பவர் சுரேஸ் ஆ?

  • தொடங்கியவர்

பின்வரிசையில் கண்ணாடி போட்டிருப்பவர் சுரேஸ் ஆ?

இல்லை.

தூயவனுக்கு தெரியவில்லை. தூயாவுக்காவது தெரியுமா?

Edited by Luckyluke

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.