Jump to content

காதல் Vs திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காதல் Vs திருமணம்

 

041.jpg         marriage.jpg

 

 

ஒரு ஞானியை அணுகிய சீடன், 'காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன'வெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது..!" என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்....

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்...!"

 

 

-மின்னஞ்சலில் வந்தது.. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ.... அதுதான், திருமணம் செய்த ஆண்கள்.... அதிகமாக "சைட்" அடிக்கிறார்கள் போலுள்ளது. :D  :icon_idea:

Posted

இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. :D

உண்மையான காதல் என்றால் கண்கள் சந்தித்த உடனேயே மின்சாரம் பரவும். :icon_idea: பிறகு எந்த ஐஸ்வர்யா ராய் வந்தாலும் ஒன்றும் வேகாது. :o அப்படியும் ஏதாவது வேகினால் மின்சாரத்தில் வோல்ட்டேஜ் பத்தாது என்று பொருள்படும். :D அதாவது அது உண்மைக்காதல் இல்லை. :unsure:

இப்படி உண்மைக்காதலில் ஈடுபடாதவர்களில் பெரும்பான்மையானவர்கள்தான் வாழ்க்கை வெறுத்து முதல் சூரியகாந்திச் செடியை பிடுங்கி வந்துவிடுவார்கள்.. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதெல்லாம் பழைய கிழட்டுக்காதல்.. கல்யாணம்..

 

இப்ப.. கிரடிட் கார்ட்.. பி எம் டபிள்சு.. கவர்ச்சியான வேலை.. சிற்றிசன்சிப் இருந்தால் வருவது  காதல்

 

மேற்குறிப்பிட்டவற்றோடு.. ஒரு அடிமாடா இருக்க தலையாட்டினால் நடப்பது... திருமணம்.

 

இதெல்லாமே மாயை. :):D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதெல்லாம் பழைய கிழட்டுக்காதல்.. கல்யாணம்....

 

எங்கே ஒருத்தரை இன்னமும் காணோமேயென பார்த்தேன், வந்துவிட்டார்..!

 

நூறு வயசு! :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.