Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்துக்கு நாட்டில் இடமில்லை : வெற்றி விழாவில் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கு நாட்டில் இடமில்லை : வெற்றி விழாவில் ஜனாதிபதி

 Tue, 05/19/2015

Fd6f506d5f.jpg

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி விழாவின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் காணப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர உதவிய அனைத்து தலைவர்களுக்கு எனது நன்றியை மதிப்பையும் தெரிவித்துகொள்வதோடு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன்.

இதேவேளை நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும்.

 

 

F65d4f640df.jpg

http://www.virakesari.lk/articles/2015/05/19/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

ஜே வி பிக்கு இடம்கொடுத்தா.. 1970 களிலும்.. பின் 80 களிலும்..போராட வந்தார்கள். போராட நீங்கள் தொடர்ந்து சந்தப்பர்க்கங்களை உருவாக்கினால்.. வன்முறைகள் தொடர்ந்து பிரசவமாவதை எந்தச் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களாலும்.. தடுக்க முடியாது.. என்பதற்கு ஜே வி பியே சாட்சி. ஆகவே முறுக்காமல்.. உருப்படியா சிந்திக்கப் பழகுங்கள்.. சிங்கள ஜனாதிபதிகளா. :icon_idea::lol:


ஜே வி பியை வெற்றி கொண்ட நாளை.. அதில் உங்கள் சிங்கள இராணுவம் செய்த தியாகங்களை எல்லாம் மறந்து விட்டீர்களே. இது மட்டும் நல்லா ஞாபகம் இருக்குது. ஏனெனில் அழிக்கப்பட்டது தமிழர்கள் என்பதால். இந்த ஒரு அணுகுமுறையே  போதும்.. சிறீலங்கா வன்முறையை பிரசவிக்க.

 

இன்று இளவரசர் சாள்ர்ஸும்.. ஐ ஆர் ஏ இயக்க சிம் பைன் தலைவரும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள். இராணுவ ரீதியில் ஐ ஆர் ஏ தோற்கடிக்கப்பட்ட பின்னும்.. இது நிகழ்கிறது. அது சமாதானத்துக்கான முன்னெடுப்பு என்றால்.. இது வன்முறைகள் பிரசவிப்பதற்கான முன்னெடுப்பு. இவர் நல்லாட்சிக்குரிய சிங்கள தலைவர் என்றினம் சிலர். :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆர் ஏ ராணுவ ரீதியாய் தோற்கடிக்கப் படவில்லை.

Good Friday agreement ற்க்கு அமைய தாமாகவே ஆயுதங்களை decommission பண்ணி, இயக்கத்தையும்கலைத்து,வன்முறையை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்து power sharing assembly இல் பங்குதாராராயும் உள்ளனர்.

87 இல் பிரபா இதை செய்திருந்தால் இப்போ சில நேரம் மைத்திரியுடன் கை குலுக்கி இருக்கக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆர் ஏ இராணுவ ரீதியில் முடக்கப்பட்ட நிலையில் தான் ஆயுதக் கையளிப்பு உடன்படிக்கைக்கு வந்தது. அது இராணுவ ரீதியில் தாம் தமது இலக்கை வெல்ல முடியாது என்ற பட்சத்தில் தான் அமெரிக்க அணுசரணையோடு ஆயுதப் போராட்டத்தை முடிவுறுத்தினார்கள். இருந்தாலும் இன்றும் அங்கு சில வன்முறைகள் நிகழவே செய்கின்றன.

 

1987 இல் எமது தேசிய தலைவரும் ஆயுத ஒப்படைப்பைச் செய்து ஹிந்தியாவிடம் எம் மக்களின் பாதுக்காப்பை சுதுமலையில் வைத்துக் கையளித்தார். பின்னர் நடந்தது.. புலிகளிடம் ஆயுதக் களைவு ஒட்டுக்குழுக்களிடம் ஆயுதக் கையளிப்பு. அப்படி அமெரிக்கா நடந்து கொள்ளவில்லை. அதில் தான் ஐ ஆர் ஏ-- பிரிட்டன் உடன்பாட்டின் வெற்றி தங்கி உள்ளது. அதுவே இக் கைகுலுக்களுக்கு வழிகோலியது.

 

அன்று தேசிய தலைவர்.. ஆயுதக் கையளிப்புச் செய்திராவிட்டால்.. இன்று மாகாண சபை என்ற மாயமான் கண்ணிலும் பட்டிருக்காது. இதுதான் யதார்த்தம். எதை உருட்டிப் பிரட்டி எழுதினாலும்.  :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ ஐ ஆர் ஏ காரருக்கு கொஞ்சம் மேல்வீட்டு சரக்கு ஜாஸ்தி என்பதால், நிலைமையை தெளிவாக கவனித்து அவர்கள் தேவையானதை பெற்றுக் கொண்டார்களோ என்றுதான் தோன்றுகிறது.

சேச்சே அப்படி இருக்காது - தேத மட்டும் இந்தியாவுடன் பகைத்திராவிட்டால், இலங்கை மீது நாம் 150, 000 பேரை கொண்டு விட்டர்கள் என சொல்லி அளுத்தம் பிரயோகிக்க முடியாமலே அல்லவா போயிருக்கும்.

ஐ ஆர் ஏ காரனுக்குத்தான் மூளேக்க களிமண்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆர் ஏ காரனுக்கு மூளைக்க உங்களை மாதிரி ஊத்தை இருந்திருந்தால்.. ஆயுதத்தையே தொட்டிருக்கமாட்டான். பிரித்தானியாவுக்கு அடிமையாகக் கிட என்றிட்டு இப்படி முழிப்பிருந்து வெட்டிக்கு கதையளந்திருப்பான்.

 

ஐ ஆர் ஏ காரங்கள்.. ஒன்றும் நாடு பிடிச்சு வைச்சிருக்கல்ல. அவர்களின் போர்முறை ஆரம்பம் முதல் இறுதி வரை கெரில்லாவாகவே இருந்தது. லண்டனில் குண்டு வைப்பதாக இருந்தது.

 

ஆனால் எமது போராட்ட நிலவரமே வேறு. எமக்கான நிழல் அரசை நிறுவினோம். இயங்கினோம். சர்வதேசத்துக்கு அடையாளம் காட்டினோம்.

 

எமக்கு மூளைக்குள் சரக்கிரந்த படியால் எமது களச் சூழலுக்குள் எமது வீர வரலாற்றுக்கு பாதிப்பின்றி போராடினோம்.

 

இறுதியில்.. நாங்கள் இராணுவ ரீதியில் தோற்க வேண்டி ஏற்பட்டமை.. சர்வதேச நிலைமாற்றங்களால் அன்றி சிங்களத்தின் வீரத்தால் அல்ல.

 

மீண்டும் நிலைகள் மாறும். காலம் எமக்காகவும் கனியும். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கண்ணால் கண்டவற்றை, அனுபவத்தை, யதார்த்தத்தையும், பொய் புரட்டு கற்பனை என்று வாதிட்டு தங்களை அறிஞர்கள் என எண்ணிக் களிப்பவர்களும் எம் இனத்தில் மலிந்துவிட்டார்கள்.   :o  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.