Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றுக்கும் உதவாத சில யாழ்ப்பாணத்து காவாலிகள் செய்யும் வேலை இது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீவக படுகொலையை கண்டித்து யாழ் நகர்ப்பகுதியில் பேரணி நடைபெற்ற வேளையில் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் யாழ் நகர காமுகர்களும் காவாலிகளும் இணைந்த ஒரு பேரணி நடைபெற்றது.

 இது சற்று வித்தியாசமாக தடிகள் பொல்லுகள் இரும்புச்சங்கிலிகளுடன் கூடியதாக இருந்தது.

ரோட்டோர கடைகள் தாக்கப்பட்டும் போக்குவரத்து தடுக்கப்படும் கடைகளில் நின்றவர்கள் தாக்கப்பட்டும் மிகவும் அமைதியான முறையில்???  நடந்த இந்த பேரணிக்கு பொலிஸார் முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்கியிருந்தனர். மற்றைய பேரணிகளுக்கு வழங்காத ஒத்துழைப்பை இந்தக் காவாலிகளுக்கு வழங்கியது ஏன் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் இனத்தை அழிக்க வெளியில் இருந்து ஒருவன் வரத்தேவையில்லை. இதுவே நம் இனத்தின் சாபக்கேடு. இவர்கள் தங்களின் வெறியை காட்ட வேண்டிய இடத்தில் காட்டாது அப்பாவிகளிடத்தில் காட்டுவதும் இவ்வாறு காவாலித்தனம் புரிந்து பொதுமக்களின் இயல்புவாழ்க்கையை சீர் குலைப்பதும் இவர்களையும் கேடுகெட்டவர்கள் என்றே காட்டுகின்றது. இது படையினரினதும் எமக்குள் இருக்கும் சில கேடுகெட்டவர்களின் துாண்டுதலிலும் நடைபெறும் செயல்கள் என்பதை பொதுமக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

 

11182094_845432708825470_31307710026455611032679_845432695492138_762461906753190

 

http://newtamils.com/fullview.php?id=17189

 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் தமக்கு எதிரான அநீதிகளுக்கு எதிரான தன்னெழுச்சியை அடக்க எதிரி தூண்டிவிட்ட கும்பல்கள் தான் இவை. எதிரியின் எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ள மக்கள் விவேகமாக சூழ்நிலைக்களை கையாள வேண்டுமே தவிர எதிரிக்கு அஞ்சி.. அநீதிகளுக்கு தொடர்ந்து இடமளிக்க முடியாது. மக்கள் நீதி கிட்டும் வரை போராட வேண்டியவர்கள். இன்றேல் அவர்களுக்கு நீதி மறுக்கப்படுவது மட்டுமன்றி துன்பியலே வாழ்வாகும். அதற்கு அனுமதிக்க முடியாது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 தீவகத்தின் இன்றைய நிலை, கடந்த காலம்  அவர்களை   ஆண்டவர் கள் எதைச் சாதித்தார்கள் என்பதை கட்டியம் கூறுகிறது. அந்தத் தலைவர்கள்தான் இதற்கு தண்டிக்கப் படவேண்டும். எங்கே அவர்கள்? அவர்களின் மூச்சையே காணோம்.  

வீதியை மறித்து அட்டகாசம்

 

article_1432130107-mmmm.jpg

 

யாழ்.சுழிபுரம் அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக வீதியின் குறுக்காக கயிற்றைக் கட்டியுள்ள நபர் ஒருவர், வீதியின் ஊடாக எவரையும் செல்லவிடாது அட்டகாசம் செய்து வருகின்றார். தான் கசிப்பு அருந்தியுள்ளதாகவும் இரவு 11 மணி வரையில் இந்த வீதியின் ஊடாக யாரையும் செல்லவிடமாட்டேன் எனவும் அந்த நபர் அட்டகாசம் செய்கின்றார். அவருடன் இணைந்து அவருடை நண்பர் ஒருவரும் துணையாக நிற்கின்றார். இவர்கள் வீதியில் ரயரை எரித்தும் வருகின்றனர். இதனால் இந்த வீதியின் ஊடாக பயணிப்பவர்கள் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

 

http://www.tamilmirror.lk/146515#sthash.PEshqPkR.dpuf


அச்சுவேலி உணவகம் அடித்து நொருக்கப்பட்டது

 

article_1432128675-hotel.jpg

 

அச்சுவேலி சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று, இன்று புதன்கிழமை (20) இனந்தெரியாத நபர்களால் அடித்து நொருக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ். மாவட்டம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை (20) நடைபெற்றது.  இதனால் அச்சுவேலியில் அமைந்துள்ள அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டிருந்தன. ஒரு உணவகம் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றபோது. அங்கு 7 மோட்டார் சைக்கிளில் சென்று குழுவொன்று கடையை திறந்தமைக்காக உரிமையாளரை ஏசியதுடன், அங்கிருந்த கண்ணாடி அலுமாரிகள், முன்பக்க கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து நொருக்கியது. -

 

http://www.tamilmirror.lk/146509#sthash.d3Oz2CjV.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புக்குளுக்கள் நல்லா வேலை செய்யுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள்.. இராணுவ ஒற்றர் குழுக்கள்.. எல்லாம் விழிப்புக்குழுக்கள் ஆகிட்டுது. இவைக்கு கறுப்புக்கொடி.. இரும்புக் கம்பி.. பிரபா கொடுத்து அனுப்பியது என்று எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு சிலர் தம்மை தாமே எழுத்தால்.. கேலிக்குரியதாக்கி வருகின்றனர். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எதை பிரேரிக்கும் முன் யோசிக்கணும்.

ஊர் இருக்கிற நிலமையில் விழிப்புக்குழு அமைச்சா, காந்தியும் புத்தனுமா வந்து சேரப் போறாங்க?

எல்லா விழிப்புக்குழுவிலும் என்னையும் சேருங்கோ எண்டு மிலிட்டரி இண்ட், ஈபி டிபி தான் முன்னுக்கு வந்து நிக்கும்.

சேர்க்காட்ட்டி அதேவச்சே கலகம் பண்ணுவாங்கள்.

இல்லாட்டி ஒரு போட்டி விழிப்புக்குழு அமைத்து உள்ள கொள்ளையெல்லாம் அடிப்பாங்கள்.

விழிப்புக்குழு எனும் போர்வையில் புலிகள் மீள இணைகிறார்கள் எண்டு சீவியின் வேட்டியை கிழிப்பார்கள்.

தேவையா இந்த social experiment?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புக்குழுவாக இருக்கப் போவது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். இவர் ஏன் இந்தளவுக்கு பயப்பிடுறார்.. பயங்காட்டிறார்.

 

தான் நினைப்பதையே உலகம் செய்யனுன்ன பேர்வழி போலும். :D

 

விக்கி ஐயாவுக்கு ஏலவே ரணில் வேட்டி கிழித்த படிதான். அவர் அதனைத் தாண்டி மக்களுக்கு என்ன தேவையோ அதனைச் செய்வார் என்பதற்கு விழிப்புக்குழு பற்றிய அவரின் முன்மொழி ஒரு உதாரணம். :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/157830-இன்று-யாழ்ப்பாணத்தில்-பூரண-ஹர்/#entry1111503

நேற்றுக் காலை 5:30 மணிக்கு ஆதவன் இணைத்த இந்தச் செய்தியில்...
சிலர் ரயர்களை போட்டு எரித்த போதே....  பொதுச் சொத்துக்களுக்கு நாசம் செய்யும் போராட்டம்,

மக்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் அந்நியப் படுத்தி விடும் என்று..... கவலைப் பட்டேன்.
 

இதற்குப் பின்... ஒட்டுக்குழுக்களின் சதி இருப்பது... இப்போதுதான் புரிகின்றது. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.