Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

DHEEPAN -red carpet- (en) Cannes 2015

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகள் வித்தகர்களின் தீர்ப்பின் படியே வழங்கப் படுவதாயும் ஆடியன்ஸ், பாக் ஆபிஸ் கருத்தில் எடுக்கப் படுவதில்லை என்றும் எங்கோ வாசித்த நியாபகம்.

ஓஸ்கார், பாவ்டா போலில்லாமல் இதில் திரைக்கு வராத கலைப்படங்களும் போட்டியிடலாமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஒபாமாவுக்கு நோபல் கொடுத்த கணக்குத்தான். :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சங்ககாரா விடயத்தில் நான் ஒரு இனவாதியாக இருந்ததுபோல்,சோபா விடயத்தில் புலிவாதியாகவே இருக்க விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் நீங்கதான் 100% தமிழன்.

அப்ப எப்படி விருதுக்கு போனது.. பார்வையாளர்கள் பரிந்துரை இல்லாமலே... ????! :rolleyes::icon_idea:

 

இல்லை நெடுகஸ்
 
இந்தியாவிலும் எத்னையோ படங்களுக்கு இவ்வாறு அங்கீகாரம் கிடைத்திருக்கு.
உ+ம்: காஞ்சிவரம், தலைமுறைகள், காக்காமுட்டை இப்படி பல..

இலங்கை அகதிகள் பற்றிய படத்துக்கு கான்ஸ் விருது - காணொளி

 

சிறந்த திரைப்படத்துக்கான, பிரபல சர்வதேச கான்ஸ் திரைப்பட விருது இந்த முறை இலங்கை போரால் பாதிக்கப்பட்டு, பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரும் ஒரு போராளியின் கதையை பின்னணியாகக் கொண்ட ''தீபன்'' என்ற படத்துக்கு கிடைத்திருக்கிறது.

 

ஜாக் ஒவ்தியார் இயக்கிய இந்த திரைப்படத்துக்கு ''பாம்தோர்'' (தங்கப்பனை) விருது கிடைத்துள்ளது.
அதன் கதை பல விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
 
இது குறித்த பிபிசியின் ஒரு காணொளி.

தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை

 

150524202401_cannes_624x351_reuters.jpg

தீபன் திரைப்படத்துக்காக பாம்தோர் விருது வாங்கியிருக்கும் இயக்குநர் ஷாக் அவ்தியா(த்)
 
பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் இன்றுடன் (24-05-2015) நிறைவடைந்த கான்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது.
 
பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
 
150524205517_dheeeban_shobha_sakthi_624x
தீபனாக நடித்திருக்கும் ஈழத்தமிழ் எழுத்தாளர் ஷோபா சக்தி
 
பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது. ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார்.
புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது.
 
கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
150524210037_dheepan_kaleeswari_624x351_
தீபன் திரைப்படத்தின் கதாநாயகி காளீஸ்வரியும் குழந்தை நட்சத்திரமும்
 
இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
 

 

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபன் திரைப்படத்திற்கு விருது கிடைத்தமை வரவேற்கப்பட வேண்டியது – அரசாங்கம்
 
புலிகள் சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது.
 
 
deepan_CI.jpg

 


கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபன் என்ற திரைப்படத்திற்கு விருது கிடைத்தமை வரவேற்கப்பட வேண்டியது என அரசாங்கம் அறிவித்துள்ளது.


புகலிடக் கோரிக்கையாளர்களின் அவலங்கள் இந்த திரைப்படத்தில் சித்தரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


அரசாங்கப் பேச்சாளர்த ராஜித சேனாரட்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விருதானது புதிய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் முனைப்புக்களை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இந்த திரைப்படம் சில தசாப்தங்களுக்கு முன்னைய இலங்கையின் சூழ்நிலையை பிரதிபலிப்பதாகவும் தற்போதைய சூழ்நிலை இதில் வெளிக் கொணரப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது நாட்டின் நிலைமைகளில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


புதிய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120165/language/ta-IN/article.aspx

 
  • கருத்துக்கள உறவுகள்

Young French Recruits-to-be

In France the enthousiasm to join was enormous too. The picture shows young Frenchmen on their way to the recruiting office.

Quote from the British weekly The War Illustrated on 28th May, 1915, describing a battle near La Bassée:

"Two French battalions of the line headed the charge, mostly formed of the youngest recruits. The Bavarians held their ground and fought gamely. The youngest soldiers of France rushed the machine-guns, at no matter what loss, emptied their magazines into the crowded trenches, and then jumped in and fought with the bayonet."

child02_d.jpg

British Recruits

Young soldiers of the Lancaster Regiment outside a bell tent in a trainingcamp.

lancasterboys_d.jpg

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

கான்ஸ் விருதும் கண்டறியாத பிரச்சனைகளும்! : கதிர் மார்க்

05/29/2015 இனியொரு.

depan.jpg

இப்ப புலம்பெயர் தேசத்து சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிற முக்கியமான பிரச்சனை, அன்ரனி அண்ணை நடிச்ச தீபன் பட விருது எண்டால் அது மிகையில்ல. அன்ரனி அண்ணையின்ட அரசியலை ஒத்த (புலியெதிர்ப்பு மற்றும் இல-அரச ஆதரவு) அண்ணை/அக்காமார் அன்ரி/அங்கிள்மார் எல்லாரும் அவரைத் தூக்கிப்பிடித்து புளகாங்கிதம் அடையினம். ஆனால் புலி ஆதரவாளர்கள் தீபன் படம் பார்க்கமுடியா விட்டாலும் அது எமக்கானதில்ல என்று கிடைக்கிற தகவல்களையெல்லாம் தேடித்தேடி வெளியிட்டு அப்படத்தை விமர்சிக்கினம். இந்த இரண்டு சாராரை விட இன்னும் வேறு சாராரும் இந்தப்பிரச்சனைக்குள்ள இருக்கத்தான் செய்யினம்.

அதில ஒரு சாரார் யாரென்றால் ஜெசிக்கா ஈழத்தமிழ் எண்டபடியால் அந்தப்பிள்ளைய வெல்ல வைக்கோணும் எண்டும் (மனிதாபிமான அடிப்படையில் அல்லாமல்) வெறுமனே மயூரன் தமிழன் எண்டபடியால் அவருக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது எண்டும் அதை வழங்க நினைக்கிற அரசு காண்டுமிராண்டி அரசு என்று விமர்சித்த அந்த சாராரும் இந்த தீபன் திரைப்பட விருதினை வரவேற்றிச்சினம்! ‘‘கமலகாசனே கான்ஸ்சுக்குப் போகேல எங்கட ஆள் போயிட்டு வந்திட்டான் எல்லே’’ எண்ட மாதிரி, அதிலையும் இப்ப குழப்பம் வந்திட்டு, காரணம் அன்ரனி அண்ணையிண்ட அரசியல் நிலைப்பாடு தொிய முன் ஆதரிச்ச ஈழத்தமிழர்கள் இப்ப என்ன செய்யலாம் என்று யோசித்தபடி இருக்கிறார்கள்.

அது ஒருபக்கமிருக்க சில வாரங்களுக்கு முன்னர் சல்மான்கானுக்கு 5 வருடச் சிறைத்தண்டனை வழங்கினதோட ஒருத்தர் எனக்கு தொலைபேசிக் கேக்கிறார் ‘சல்மான் கானிண்ட அடி, தமிழாம் எண்டு கதை கிழப்பி விடுவமே? எங்கட ஆக்கள் பேஸ்புக்கில பிரிப்பாங்கள்’’ எண்டு. இப்ப இருக்கிறதில பொிய சாரார் கடைசியா மேல சொல்லப்பட்ட ஆக்கள்தான்!

சர்வதேச அரங்கில அன்ரனி அண்ணை அறியப்பட்டிருக்கிறார். இதனால அவரின்ட அரசியல் பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் அவரை ஆதரிக்கோணும் எண்டு ஒரு சில ஈழக்கலைஞர்களும், இல்லை நாங்கள் ஆதரிக்கத்தேவையில்லை எண்டு சில ஈழக்கலைஞர்களும் நிக்கிறார்களாம். அதைவிட படம் வரட்டும் பார்ப்போம் விமர்சிப்போம் என்கிற ஒரு சிறிய சாராரும் இருக்கிறார்கள்.

என்ர பிரச்சனை என்னவெண்டா, அன்ரனி அண்ணைய அந்தப்படத்துக்கு அவங்கள் பாவிக்காமல் பிரான்சில இருக்கிற வேற தமிழீழ ஆதரவு கொண்ட கலைஞர் ஒருத்தரை அவங்கள் பாவிச்சிருந்தா, என்ன நடந்திருக்கும்? அன்ரனி அண்ணைய இப்ப தூக்கிப்பிடிக்கிற ஆக்கள் அப்பவும் படத்தையும் நடித்தவரையும் தூக்கிப்பிடிச்சிருப்பினமா? மற்றது இப்ப எதிர்க்கிற புலி ஆதரவாளர்கள் அப்பவும் படம் வரமுன்னரே விமர்சித்திருப்பினமா? எண்டதுதான்.

தீபன் படத்தில நடிக்கிறதுக்கு அந்தப்படக் குழுவினர் இந்தியா, ஐரோப்பா, கனடா எண்டு எல்லா இடத்திலயும் தேர்வு வைச்சவங்கள். Casting போயிட்டு வந்த பெடியங்கள், மனிசன் மாதிரி ஒராளைத் தேடுறாங்கள் என்று வெளியே வந்து சொல்லியிருக்கிறாங்கள்.

விஜய் சேதுபதியும் Casting போயிருக்கிறார். முதல் இந்தியாவில இருந்துதான் நாயகனும் நாயகியும் தொிவாகியிருந்தார்கள், பிரான்சிலுள்ள ஈழத்தமிழ்க் கலைஞர்கள் அந்தப்படத்தில் சிறிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார்கள். இடைவெளியில் நாயகனை மாற்றவேண்டி வந்தவிடத்து பாத்திரப் பொருத்தம் அன்ரனி அண்ணைக்கு சரியாய் வர அப்பவே அன்ரனி அண்ணைக்கு செங்கம்பளம் தயாராகிட்டுது!

அந்தப்படத்தில அன்ரனி அண்ணை மட்டும் நடிக்கேல, தமிழ்நாட்டு காளி அக்காவும் பிரான்ஸ் நாட்டில இருக்கிற கிளவ்டின் எண்ட ஈழத்தமிழ்ப் பிள்ளை ஒண்டும் நடிச்சிருந்தது. ஆனால் எல்லாரும் அன்ரனி அண்ணையத்தாண்டி போயினமே இல்லை. அது ஏன் நாயகனைத் தவிர வேறு யாரையும் நாங்கள் தமிழ் படங்களில கணக்கெடுக்கிறேல எண்டபடியாலா? அல்லது காளி அக்கா இந்தியா எண்டபடியாலா? கிளவ்டின் எண்ட ஈழத்துப்பிள்ளை வெறுமனே சின்னப்பிள்ளை என்பதாலா? அன்ரனி அண்ணையோ அல்லது காளி அக்காவோ நடிக்காமல் கிளவ்டின் எண்ட அந்தப்பிள்ளை மட்டும் நடித்திருந்தால் இப்ப சமூகவலைத்தளம் முழுவதும் ஜெசிக்காவை மிஞ்சி அந்தப்பிள்ளையிண்ட பேச்சாகவே இருந்திருக்குமோ?

ஆக மொத்தில இண்டைக்கு தமிழ் மக்களிட்ட இன்னும் வெளிவராத தீபன் பேசப்படுகிறதுக்கு முக்கியமா மூண்டு காரணம் இருக்கு ஒண்டு வெள்ளக்காரன் எங்களயும் மதிச்சு படமெடுத்திட்டான் எங்கள அவன்ட படத்தில பாவிச்சிட்டான் எண்ட தாழ்வு மனப்பான்மை ரெண்டு அன்ரனி அண்ணையிண்ட அரசியல் நிலைப்பாடு மற்றது எங்கட மக்களின்ட விளக்கமில்லாத தமிழ் உணர்ச்சி!

நல்லா வருவீங்கடா!

http://inioru.com/46369/dheepan-movie-and-socialnetworks/

  • கருத்துக்கள உறவுகள்
நல்லா வருவீங்கடா!
நல்லா வந்தவுடனே "நல்லா வந்திட்டாங்கள்" என்று கட்டுரை எழுதவேண்டும் சொல்லிப்போட்டேன்.....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.