Jump to content

மேலதிக சீனி சேர்க்காத பண்டங்கள் ( No added sugar treats)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவமயம்

முன் குறிப்பு1 :

முதலில் sugar என்றால் என்ன என்று பார்ப்போம். நாம் உட்கொள்ளும் உணவை புரதம், கொழுப்பு, காபோகைதரைட்டு (கார்ப்ஸ்) என்று பிரிப்பார்கள் (இதுக்கு மேலும் பிரிவுகள் உண்டு - மேலதிக தகவல் தேவைப் படுவோர், நீங்களாகவே தேடிப்படியுங்கள் :) )

கார்ப்சை மேலும் வகை படுத்தும் போது உருவாகும் சிறிய அலகே சுகர். அதாவது எல்லா கார்ப்சும் சுகர் இல்லை, ஆனால் எல்லா சுகரும் கார்ப்ஸ். சுகர் என்பது ஒரு வழக்குச் சொல். டெக்னிகல் டேர்ம் அல்ல. உண்மையில் சுகரும் குளுக்கோசு (குளுக்கோசு பொடியில் உள்ளது), சுக்ரோசு (பழங்களில் உள்ளது), லக்டோசு (பால்) மேலும் சில வகைகளாய் வகைப் படுத்தப்படும். சுகர் என்பது யாதென விளங்கிறாதா?

மிக அடிப்படையான விளக்கமே இது. நான் கெமிஸ்ரிக்கான நொபெல் பரிசுக்கு கட்டுரை எழுதவில்லை என்பதை நினைவில் கொள்க :)

மு.கு 2

அடுத்து No added sugar என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு பதார்தத்தை செய்யும் போது அதில் உள்ள இயற்கையான சுகருக்கு மேலதிகமாய் சுகர் சேர்க்கப் படாவிடில் அதுதான் நோ அட்டெட் சுகர். உதாரணத்துக்கு பாலில் 100 மில்லி லிட்டருக்கு 2.4 g அளவில் சுகர் (பெரும் பாலும் லக்டோசு) உண்டு. பாலை சீனி சேர்த்து குடித்தால் இது பலமடங்கு அதிகமாகும். சீனி சேர்க்காத பாலை நோ அட்டெட் சுகர் பால் எனலாம்.

ஆனால் எல்லா சுகர் மேலதிகமாய் சேர்க்காத பதார்தமும் சுகர் அளவு குறைவாய் இருக்கும் என்பதில்லை. உதாரணதுக்கு இளனியில் குளுக்கோசு (சுகர்)அளவு அதிகம், சீனி சேர்க்காது குடித்தாலும்.

மு.கு 3

நீரிழிவு, உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்க்கு, கார்ப்ப்சை அதிலும் சுகரினை குறைக்கும் படி டாக்டர் கூறுவது வழமை. நீரிழிவினர்க்கு சுகரை அறவே ஒதுக்குங்கள் என்பதே பொதுவான அறிவுரை. இந்தவகையில் நாம் முன்பு சீனி சேர்த்து வெளுத்துக் கட்டிய உணவு வகைகளை. முடிந்தளவு சீனியை குறைத்து செய்து அல்லது வாங்கிச் சாப்பிட முடியுமா?

முடியும். என்ன உணவுகள் என்பதை கிழே பார்ப்போம்.

முக்கிய குறிப்பு : இது சுகர் பிரீ எனப்படும் சுகர் அறவே அற்ற பதார்தங்களை பற்றிய குறிப்பு அல்ல. எனவே நீரிழிவாளர்கள் - இதை சிறிய அளவில் சோதனை முயசியாக செய்து, உங்கள் குருதியில் சுகரின் அளவை அவதானித்து, முடிவு எடுங்கள்.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.

பதார்த்தம் 1

நோ அட்டெட் சுகர் சர்பத்.

சர்பத் - சின்ன வயது தேவ பானம். ஆனால் இப்போ டாக்டர் வாயை கட்டுறாரா? கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கு நோ அட்டெட் சுகர் சர்பத்.

பொருட்கள்

1) முழு ஆடைப்பால் (fresh milk), யூகேயில் blue top milk என்பர். தேவையான அளவு

2) பிங்க் நிறக் கலரிங். உங்களுக்கு பிடித்த அளவுக்கு பால் பிங்க் ஆகும் அளவுக்கு

3) ரோஸ் வாட்டர் - இது மிக முக்கியம். தமிழ்/இந்திய கடைகளில் சீனி சேர்க்கப் பட்ட ஒரு ரோஸ் நிற கரசலை (MD பிராண்டும் உண்டு) விப்பார்கள். இதை பாவித்தால் நீரிழிவாளருக்கு கோமா நிச்சயம்!

நீங்கள் வாங்க வேண்டியது, நிறமற்ற திரவமாய், பெரிய சுப்பர் மார்கெட்டில் world food பகுதியில் இருக்கும் ரோஸ் வாட்டரை. போத்திலிலே sugar 0 என லேபல் ஓட்டி இருப்பர். யூகேயில் டெஸ்கோவில் கிடைக்கும்.

அளவு - ரெண்டு தே கரண்டி. மணம் சுவை தேவை கருதி கூட்டிக் குறைக்கலாம்.

4) தூள் sweetener (Splenda, Tesco, பல பிராண்டில் கிடைக்கும்).

செய்முறை

1) ஐஸ் கட்டிகளை, crush பண்ணி கிளாசின் அடியில் போடவும்

2) பிறிதொரு பாத்திரத்தில் தேவையான அளவு குளிரூட்டிய பால், கலரிங், ரோஸ் வாட்டரை கலக்கவும். இந்த கரைசல் இனிக்காது. பால் போல சுவையும், சர்பத் போல மணமும் கலரும் இருக்கும்.

3) பாலில் சீனியை கரைப்பது போல் தேவையானளவு தூள் சுவீட்னரை கரைக்கவும். இப்போ சர்பத் ரெடி.

4) ஐஸ் கட்டி அடியில் போடப் பட்ட கிளாசில் ஊத்தி பரிமாறினால் - பல நடுத்தர வயது தாண்டிய அங்கிள், அன்ரி மாருக்கு அண்டைக்கு நீங்கள்தான் கண்கண்ட தெய்வம்.

மேலே சொன்னதில் பாலில் இயற்கையாய் உள்ள சுகர் மட்டுமே இருக்கும். சுகர் கவுண்ட்டில் கிட்டத்தட்ட ஒரு கீலாஸ் பால் குடிப்பதற்கு ஒப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதார்த்தம் 2 - நோ அடெட் சுகர் பலூடா

இப்போ அங்கிள்/அன்ரி களை இன்னும் இம்பெரெஸ் பண்ண விரும்புகிறீர்கள் ( வடிவான மகளாம்). உங்கள் உற்ற நண்பன் - நோ அட்டெட் சுகர் பலூடா.

மேலே சொன்ன கிலாசில் மேல் பகுதியில் வனிலா ஐஸ் கிரீமை மிதக்க விட்டு, ஜெலியையும் மிதக்க விட்டால் - அன்ரி/அங்கிள் மாருக்கு உங்களில் ஏதேனும் இஸ்லாமிய கலப்பு இருக்குமோ ( மகளை தருவீனமோ!) என சந்தேகம் வரும் அளவுக்கு ஒரிஜினல் பலூதா ரெடி.

நோ அட்டெட் சுகர் ஐஸ் கிரீம், ஜெலிக்கு எங்கே போவது? நீங்கள் ஒரு விக்ரமாதித்தன் என்றால் - ஒரு ice cream maker வாங்கி, ஜெலிதூள் வாங்கி சில பல வேலைகள் செய்ய வேண்டி இருக்கும்.

ஆனால் என்னைப்போல நோகாமல் நொங்கு தின்னும் சோம்பேறியாயினும் கவலை இல்லை. அண்ணன் எலவே வழி கண்டு பிடித்துள்ளேன்.

யூகேயில் franks no added ice cream என்று ஒரு கம்பேனி இருக்கிறது. Asda, Waitrose, Tesco, Morrsions எங்கும் இவர்களின் வனிலா, ஸ்ரிரோபெரி நோஅட்டெட் சுகர் ஐஸ் கிரீம் கிடைக்கும். அதே போல், சின்ன சின்ன புட்டிகளில் திண்ம ஜெலியும் கிடைக்கும் (இதில் 0%சுகர்).

பிறகென்ன- நோ அட்டெட் சுகர் பலுதாவும் ரெடி.

இதில் சர்பத்துக்கு மேலதிகமாய், ஐஸ் கிரீம் செய்த பாலில் இருக்கும் சுகர் மட்டும் கூடுதலாய் இருக்கும்.

உங்கள் பதார்தங்களையும் பதியுங்கள்.

Link to comment
Share on other sites

கோசான் டாக்டரின் அறிவுறையால் ரொம்பத்தான் நொடிந்து நூலாகினமாதிரி தெரியுது. எனக்கு இப்பவும் 3 கரண்டி சீனி போடாட்டி கோப்பியே ருசிக்காது. எல்லாம் அவன் செயல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுப்ப கிளப்புறார் மை லோர்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இந்த மனுசன் சிவமயத்டோடை தொடங்கியிருக்கிறார்?  கடவுள் பயம் எக்கச்சக்கமோ?  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ரெண்டு நாளா ஒரே பேயடிச்ச மாரித்தான் இருக்குதண்ணை - அதுதான் ஒரு சேப்டிக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இந்த மனுசன் சிவமயத்டோடை தொடங்கியிருக்கிறார்?  கடவுள் பயம் எக்கச்சக்கமோ?  :D  :lol:

 

இதற்குள்ளும்..... சம் சும்... அரசியலை கலந்து விடுவார்கள் என்ற பயம் தான். :D  :lol:  :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

என்னப்பா இந்த மனுசன் சிவமயத்டோடை தொடங்கியிருக்கிறார்?  கடவுள் பயம் எக்கச்சக்கமோ?  :D  :lol:

 

அண்ணை உந்த சிவமயத்திற்கு மேல உள்ள "உ" ஏன் எழுதுவது. தெரிந்தால் சொல்லுங்கோ. சத்தியமா எனக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உந்த சிவமயத்திற்கு மேல உள்ள "உ" ஏன் எழுதுவது. தெரிந்தால் சொல்லுங்கோ. சத்தியமா எனக்குத் தெரியாது.

 

 முதற்கண் உருத்திரகுமாருக்கு வணக்கம் எண்டு அர்த்தம் ராசா  :lol:  :D

Link to comment
Share on other sites

 முதற்கண் உருத்திரகுமாருக்கு வணக்கம் எண்டு அர்த்தம் ராசா  :lol:  :D

 

நன்றி
இனிமேல் மறந்தும் "உ" போடமாட்டன். 
அப்பாடா தப்பிச்சேன்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.