Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறையில் ஈடுபட்ட மேலும் 14 பேர் யாழ்ப்பாணத்தில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையில் ஈடுபட்ட மேலும் 14 பேர் யாழ்ப்பாணத்தில் கைது! 

[sunday 2015-05-31 08:00]
jaffna_protest_arrest-380-seithy.jpg

யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் மேலும் 14 பேரை கடந்த இரு தினங்களில் பொலிசார் கைது செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனார். கடந்த 19ம் திகதி யாழ்.நகரில் கூடிய குழுவொன்று யாழில் இன்றையதினம் கடையடைப்பு என கூறி யாழ்.நகரில் உள்ள அனைத்து கடைகளையும் கட்டாயப்படுத்தி மிரட்டி பூட்ட வைத்தனர்.

மறுநாள் 20ம் திகதி யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியை சூழவுள்ள பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையில் ஊடுருவிய குழுவொன்று திடீர் என வன்முறையில் இறங்கி நீதிமன்ற கட்டட தொகுதி மீது கல் வீசி தாக்குதலை மேற்கொண்டனர். அதனை அடுத்து அன்றைய தினம் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் 130 பேரை கைது செய்து பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தி இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் தற்போது நீதிமன்ற கட்டட தொகுதி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் கடந்த 19 மற்றும் 20ம் திகதிகளில் யாழில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நோக்குடன் தேடி வருகின்றனர். இரு நாட்களிலும் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் அன்றைய தினங்களில் சிவில் உடையில் நின்ற பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இனம் காணப்பட்ட சிலரை தேடி வருகின்றனர்.

தேடப்படும் நபர்களில் பலர் யாழ்.நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் வேலை செய்வோர் மற்றும் நகரில் பழ கடைகளில் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர்கள் என தெரியவருகின்றது. தேடப்படும் நபர்களில் பலர் தற்போது தலைமறைவாகி உள்ளனர் எனவும் அவர்களை தொடர்ந்து தேடி வருவதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.seithy.com/breifNews.php?new

 

ஆரம்பிச்சாச்சா? 

 

நொங்கை எடுக்காம விடமாட்டாங்க போலத்தான் தெரியுது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சரியா நடக்குது. சிறுமிகளை பாலியல் வல்லுறவு கொண்டு கொல்பவர்களை மட்டும் பிடிக்க.. தண்டிக்கச் சிரமமா இருக்குது.

 

அதாவது சிங்கள மேலாதிக்கத்துக்கு உதவக் கூடிய குற்றச் செயல்களை அனுமதிப்பம்.. அதுக்கு சிறிதும் அச்சுறுதல் (தாங்களே தூண்டி விட்டு எதிர்பாராத அரசியல் விளைவை மகிந்த ஏற்படுத்திய பின் நடக்கும் கைதுகள்... அதிலும் தமக்கு வேண்டிய தான் தூண்டிவிட்ட குற்றவாளிகளை தப்பவிட்டு.. மாணவர்களை பழிவாங்குதல்..தான் நடக்குது.)சிறிய அம்சத்தையும் விட்டு வைக்கமாட்டம். :o:rolleyes:

 

இதுக்கு சம் சும் கம்பனி வழங்கும் சான்றிதழ்.. நல்லாட்சி. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.