Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 இல் சுமந்திரன், சம்பந்தன் எங்கே ஒளித்தார்கள்? தமிழன் என்று சொல்ல தயங்குகின்றார்களா? - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள். இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின் மனங்களில் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத வலிகள் நிறைந்த நாளாகவே இருக்கும். இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் கடந்தாலும், குறித்த நாளில் அனைத்து தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் பல அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அஞ்சலி செய்து கொண்டே வந்துள்ளனர்.

 

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்பின்னர் தமிழ்மக்களின் தலைவராக வந்தவராக சொல்லப்படும் திரு சம்பந்தன் அவர்களும், அரசியல் இராஜதந்திரியாக தன்னை வெளிப்படுத்தி வரும் திரு. சுமந்திரன் ஆகியோர்கள் வடகிழக்கில் நடைபெற்ற எந்த அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கபட்ட சிங்கக் கொடியை ரணில் அவர்களோடு சேர்ந்து உயர்த்திக் காட்டியபோதும், தந்தை செல்வா காலம் தொட்டு புறக்கணித்து வந்த சிறிலங்கா சுதந்திர தின விழாவில், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தது அது காலத்தின் தேவை என மழுப்பினார்கள்.

சிங்கள படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விட்டமையானது இவர்கள் மீது மிகுந்த கோபத்தினையே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படியான இவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தருவார்கள் என்றோ, எமது மக்களிள் விடிவிற்காக எப்படி குரல் கொடுப்பாகள் என்றோ நம்பவே முடியாது. கலந்து கொள்ளாமைக்கான காரணங்கள் எதைச் சொன்னாலும்; மக்கள் எனியும் அதனை நம்ப தயாராகவில்லை.

தமிழ் மக்களின் நிகழ்வில் கலந்து கொண்டால் சிங்கள ஆட்சியாளர்களை அல்லது சிங்கள மக்களின் இதயத்தை நோக வைக்கும் என்று நினைத்து அன்று ஓய்வு எடுத்தார்களோ தெரியவில்லை.

அல்லது சர்வதேச அழுத்தம், இந்தியாவின் அழுத்தம் என்று காரணத்தை சொல்லப்போகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் என்ன காரணத்தினை சொன்னாலும், தமிழ் மக்களின் முக்கியமான ஒரு நினைவு நாளில் கண்டிப்பாக கலந்து கொள்ளாமையானது பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துவதோடு கடும் சினத்தினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தான் தமிழ் இனத்தின் தலைவர்கள் என்று சர்வதேசம் பார்க்கும் போது, அவர்களே தமிழ் மக்களின் நினைவு தினத்தினை புறக்கணிப்பு செய்யும் போது அனைத்துலகத்திற்கு பிழையான ஒரு எண்ணப்பாட்டினை ஏற்படுத்துவதோடு, தமிழ் மக்களோ ஐ. நா நோக்கிய எமக்கான நீதியை வேண்டி கையேந்திக் கொண்டிருக்கும் போது, இப்படியான தலைவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை சிதைத்து, இனப்படுகொலை நடைபெற்றதை மறுதலித்து சிறிலங்கா அரசாங்கமே விசாரணையை மேற்கொண்டு தீர்கட்டும் என்ற நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று எண்ண தோன்றுகின்றது.

சிங்கள் மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என்றும் ஆட்சியாளர்களின் இதையத்தோடு பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டு இறுதியில் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரியவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரிந்தாலும் பறவாயில்லை, ஆனால் எமது மக்கள் என்ன நோக்கத்திற்காக மாண்டு போனார்களோ அவர்களின் நோக்கத்தை இலட்சியத்தினை, விடுதலைக் கனவை ஏறி மிதித்து தமிழர்களை நிரந்தர அடிமைகள் ஆக்கப்பார்க்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கு எந்த தமிழ் மக்களும் இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதோடு, ஜனநாயக வழியில் அவர்களுக்கான தண்டனையை மக்கள் நிச்சயம் கொடுத்து அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு-

http://www.tamilsforobama.com/

சுவிசில கூப்புட்டு கையெழுத்து வைக்க சொன்ன கூட்டத்தில உந்த அமைப்பும் தொடர்பிருக்கா?

Edited by Sooravali

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லப்பட்ட செய்தியை ஆராயாமல் சொன்ன அமைப்பை பற்றி ஆராய்ந்து என்ன பிரயோசனம். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 ஆனால் எமது மக்கள் என்ன நோக்கத்திற்காக மாண்டு போனார்களோ அவர்களின் நோக்கத்தை இலட்சியத்தினை, விடுதலைக் கனவை ஏறி மிதித்து தமிழர்களை நிரந்தர அடிமைகள் ஆக்கப்பார்க்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

 

இதற்கு எந்த தமிழ் மக்களும் இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதோடு, ஜனநாயக வழியில் அவர்களுக்கான தண்டனையை மக்கள் நிச்சயம் கொடுத்து அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு-

http://www.tamilsforobama.com/

 

 

நீங்க வேறை....

தேர்தல் வரும்போது

""எங்கள் லட்சியம் தமிழ் ஈழம்!!

""எங்கள் நாடு தனி ஈழம்""

என்று மேடையில் முழங்கினால் காணும்.

மக்கள் அப்படியே புல்லரித்து வாக்குகளை அள்ளி வீசுவார்கள்.

பின்னர்.... பழைய குருடி கதவைத் திறவடி தான் 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேறை....

தேர்தல் வரும்போது

""எங்கள் லட்சியம் தமிழ் ஈழம்!!

""எங்கள் நாடு தனி ஈழம்""

என்று மேடையில் முழங்கினால் காணும்.

மக்கள் அப்படியே புல்லரித்து வாக்குகளை அள்ளி வீசுவார்கள்.

பின்னர்.... பழைய குருடி கதவைத் திறவடி தான் 

 

சும்சும் நினக்கினம் தங்கடை வாலுகள் போல் மக்களும் முட்டாளாய் இருப்பினம் என்று காலம் மாறிவிட்டது இணயம் முகநூல் என தங்கடை டங்குவார் கிளியிரவிடயம் அவைக்கு தெரியவில்லையாக்கும்  :D  :icon_idea:

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

2009 இன் பின் இப்படி சிவாஜி லிங்கம் தவிர வேறு எந்த தமிழ் அரசியல் வாதியும் கூறவில்லை.

அவனவனுக்கு கனவில் அனுஷா பதுவா, தமன்னா வருவா, நம்ம வாத்தியாருக்கு இப்படியா கனவு வரணும் :)

சொல்லப்பட்ட செய்தியை ஆராயாமல் சொன்ன அமைப்பை பற்றி ஆராய்ந்து என்ன பிரயோசனம். 

 

யார் சொன்னான் எவன்சொன்னான் என்று அறியாம எல்லாத்தையும் உள்வாங்க முடியுமா? 

 

ராசபக்சவும் இந்த ஆட்சி சரியில்லை என்கிறார்.. 

 

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஒரு லாபி அமைப்பாக தொடங்கபட்டு இப்போது அரசியல் அறிக்கைகளை விடுவது வியப்பாக இருக்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒபாமாவுக்கான தமிழர் என்னும் அமைப்பு வெளியிட்ட அந்த அறிக்கையின்படி அவ் இரு தமிழ்த் தலைவர்களும் மே18 அன்று எந்த நினைவுக்கூட்டங்களிலும் கலந்து கொண்ட எந்த செய்தியும் எங்கும் வரவில்லையே ஏதாவது நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இரகசிய இடத்திலா அஞ்சலி செய்தார்கள். ஒன்றுமே புரியவில்லை.
 
அதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாத போது இந்த அறிக்கையில் உண்மை உள்ளதென்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் க. திருக்குமாரன் என்னும் ஒருவர் கீழ் கண்ட செய்தியை அவர்கள் அஞ்சலி நிகழ்வுகளுக்கு செல்லாமைக்குரிய காரணமென்று யாழ் தளத்தில் பதிவு செய்திருந்தார். அதனையும் அதன் கீழ் எனது கருத்தினையும் இணைக்கின்றேன். சும்மா யாரும் யாரையும் ஏமாற்றிவிட முடியாது!!
************************************************************
ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் இராசபக்ச அரசின் பிடியில் தமிழர் சந்தித்த அதீத கொடுமைகள் பற்றி எதுவும் ஏன் அங்கு உதாரணம் காட்ட வில்ல என “ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு” கேள்விக் கணைகள்-கண்டனங்கள்-அறிக்கைகள் விட்டதாகத் தெரியவில்லை............................இதற்கிடையில் மே 17 - 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சம்பூர் மக்கள் மீள தமது கிராமங்களுக்கு செல்வது தொடர்பில் சம்பூருக்கும் - கொழும்பில் உயர் நீதிமன்றத்திற்கும் இடையில் பயணித்துக் கருமமாற்ற வேண்டிய சட்ட வேலைப் பணிகளும் திரு. சுமந்திரனுக்கு இருந்திருப்பது அங்கிருந்து வரும் செய்தி-நிலவரங்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது."

****************************************************************

சிங்களத்தினால் கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளாது இருந்ததற்கு இங்கு சொல்லப்பட்ட காரணம் சுத்த முட்டாள்தனம். சம்பூர் மக்களே இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சம்பூர் மக்களிடம் பொய்யான செய்தியை  கொண்டு சென்ற சமந்திரன் மக்களை மீண்டும் மீண்டும் முட்டாள் ஆக்கப்பார்க்கின்றார்.

 

மரணித்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த காரணத்தினை தேடும் ஒருவர் எப்படி மக்களின் தலைவராக இருக்கமுடியும்.

 

உங்கள் கூற்றுப்படி நீதிமன்ற பணிகளில் சுமந்திரன் இருந்தார் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு ஏற்ற ஒரு பொது இடத்தில் அஞ்சலி செய்திருக்கலாமே. உலகம் இதனை அசதானித்திருக்கும் அல்லவா? 24 மணிநேரத்தில் ஒரு 5 நிமிடமோ 10 நிமிட நேரமா அவர்களுக்கு கிடைக்காடமல் போய்விட்டது.
 
இப்டியான பொய்யர்களுக்கா சம்பந்ப்படவர்களே சொல்ல விரும்பாத நொண்டிச்சாட்டை ஏன் நீங்கள் சொல்லுகின்றீர்கள்.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பற்றிய விமர்சனங்கள் இருப்பினும் அவர்களால் சொல்லப்பட்ட செய்தியானது இங்கு மிக முக்கியமானதும் உண்மையானதுவுமாகும். பல தமிழ் ஊடகங்களால் மறைக்கபட்ட உண்மையை ஒமாமாவுக்கன தமிழர் என்னும் அமைப்பு போட்டுடைத்துள்ளமையானது நல்ல விடையமே.

Edited by kpkannan

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்படும் சேதி அளவுக்கு முக்கியமானது, சொல்பவரின் நம்பகத்தன்மை.

யார் சொல்கிறார் என்று கட்டாயம் பார்க்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்படும் சேதி அளவுக்கு முக்கியமானது, சொல்பவரின் நம்பகத்தன்மை.

யார் சொல்கிறார் என்று கட்டாயம் பார்க்க வேணும்.

 

 

சோவிலிருந்து சோபா சக்திவரை  எனது நிலைப்பாடு இது தான்...

எதையும் மறப்பதில்லை

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.