Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பம்.

Featured Replies

மாவீரர் வார நிகழ்வுகள்

உணர்வு பூர்வமாக ஆரம்பம்.

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் எழுச்சிவாரம் தமிழீழம் எங்கும் நேற்று உணர்ச்சிபூர்வமாக ஆரம்பமாகியது.

www.uthayan.com

  • தொடங்கியவர்

மாவீரர்கள் மறைந்தவர்கள் அல்ல- உலகத் தமிழினத்தின் இதயங்களிலும் வேரூன்றி நிற்கின்றவர்கள்: மணலாறு தளபதி இளம்புலி

மாவீரர்கள் மறைந்தவர்கள் அல்ல. உலகத் தமிழினத்தின் இதயங்களிலும் மாவீரர்கள் வேரூன்றி நிற்கின்றார்கள் என்று மணலாறு மாவட்ட களமுனைத் தளபதிகளில் ஒருவரான இளம்புலி தெரிவித்தார்.

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

எதிரிகளின் வருகைகளை எதிர்கொண்டு வீரத்துடன் போராடி மண்ணின் விடுதலைக்காக வித்தாகியவர்கள் மாவீரர்கள்.

மாவீரர்களின் தியாகத்தை எமது மக்கள் மட்டுமல்ல எதிரிகளும் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

சிங்களப் பேரினவாத அரசுகளினால் இலட்சம் வரையான எமது மக்கள் உயிர்களை இழந்துள்ளனர். அவர்களுடைய வரலாறு ஒருவரிடமும் முழுமையாக இல்லை. ஆனால் எதிரிகளை எதிர்கொண்டு வீரச்சாவடைந்த மாவீரர்களின் வரலாறு எமது மண்ணில் எழுதப்பட்டுள்ளது.

மாவீரர்கள் மறைந்தவர்கள் அல்ல. உலகத் தமிழினத்தின் இதயங்களிலும் மாவீரர்கள் வேரூன்றி நிற்கின்றார்கள்.

பூமித்தாயும் மாவீரர்களை ஏற்றுள்ளாள். மாவீரர்கள் தமிழ் மக்களின் அவலங்களை தீர்க்க என்றும் காவலாக இருப்பார்கள் என்றார்.

வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் தனது உரையில்,

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் எங்களுடைய தலைவரின் அணியிலே இணைந்து மண்ணின் விடுதலைக்காக, எமது மக்களின் சுதந்திரத்திற்காக பல்வேறுபட்ட களங்களில் அர்ப்பணிப்புள்ள தியாகங்களைப் புரிந்து தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நாம் நினைவு கூறுகின்றோம். எங்களுடைய மண்ணை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தவர்கள் மாவீரர்கள் என்றார்.

முன்னதாக நெடுங்கேணி நாதம்பிரான் ஆலய முன்றலிருந்து அணியிசையுடன் நிகழ்வு மண்டபம் நோக்கி மாவீரர்களின் பெற்றோர் அழைத்து வரப்பட்டனர்.

முதன்மைச்சுடரினை தளபதி இளம்புலி ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை மணலாறு களமுனைத் தளபதிகளில் ஒருவரான வசந்தன் ஏற்றினார்.

மாவீரர்களின் பொது உருவப்படத்திற்கு வவுனியா மாவட்ட மாவீரர் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் ஆனந்தன் ஈகச்சுடர் ஏற்றினர். வவுனியா மாவட்ட மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பிறைசூடி மலர்மாலையினை அணிவித்தார்.

அரங்க நிகழ்வுகள் நெடுங்கேணி அரசியல்துறைப் பொறுப்பாளர் பிறையாளன் தலைமையில் நடைபெற்றன. நெடுங்கேணி மகாவித்தியாலய முதல்வர் எம்.குகதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவீரர் நடனத்தை நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகள் நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடந்தன.

www.puthinam.com

  • தொடங்கியவர்

மாவீரர் துயிலுமில்லங்களுக்குச் செல்ல படையினர் அனுமதிக்க வேண்டும் - புலிகள் கோரிக்கை.

எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு 20ம் திகதி முதல் தமிழீழமெங்கும் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்புப் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் மாவீரர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்வரும் 27ம் திகதி துயிலும் இல்லங்களுக்குச் சென்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திவர படையினர் அனுமதிக்க வேண்டும். இதற்க்காக விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மூலமாக கோரியுள்ளனர்.

www.pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய தமிழ்தேசியத்தை எதிரிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் தளபதி கேணல் ரமேஸ்

எங்களுடைய தமிழ்த் தே சியத்தை ஒரு போதும் எதிரிக்கு விட் டுக் கொடுக்க மாட்டோம்|| இவ்வாறு தளபதி கேணல் ரமேஸ் அவர்கள் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமான மாவடி முன்மாரிகோட்ட மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் குறிப்பிடு கையில்:-

தேசியத் தலைவருடைய சிந்தனையில் போராட்ட வாழ்வில் பக்கபலமாக நின்று உழைத்து சரித்திரமாகிப்போன மாவீரர்களைப் பெற் றெடுத்த நீங்கள் கதறத் தேவையில்லை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சாவு என்பது நிச்சயம், ஆனால் உங்களுடைய பிள்ளைகள் சாகவில்லை சரித்திரமாகி விட்டார்கள். அவர்கள் எங்களுடைய உள்ளங்களில் ஒவ் வொரு நாளும் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

அவர்க ளைப் பெற்றெடுத்த வீரத்தாய்மார்க ளை நாங்கள் கௌரவிக்க கடமைப்ப ட்டவர்கள் அந்த வகையிலே நாங்கள் இன்று உங்களைக் கௌரவிக்கின்றோம் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் :-

இலங்கை சுதந்திரமடைந்த பிற்பாடு மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைவர்கள் இலங்கைத் தீவை ஒரு சிங்கள பௌத்த தேசமாக பிரகடனப்படுத்தும் வகையில் தமிழ் மக்களிடையே உரிமைகளையும் சுதந்திரங்களையும் அழித்து ஒரு பாரிய அளவிலான இன அழிப்பு படுகொலையை மேற்கொண்ட காலப்ப குதியில் இருந்து தமிழ் மக்கள் சுதந் திரமாகவும் தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் உருவாக வேண்டும் என்றும் எதிரியின் போர்களம் சமரில் நேருக்கு நேர் நின்று தங்களுடைய உடம்பில் குண்டுகளை தாங்கி எதிரிபடையை விரட்டி அடித்து மக்களின் உரிமை மீட்புக்காகப் போராடி வீரச்சாவடைந்த இவர்கள் சரித்திரமாகி விட்டார்கள்.

எனவே மாவீரர்கள் கார்த்திகை 27ல் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் எங்களுடைய உள்ள த்தில் பூசிக்கப்பட வேண்டியவர்கள் எனவே மாவீரர்களை பெற்றெடுத்த தாய்மார் களே ஏனைய மக்களே சிறிலங்கா அரசு எதிர்வருகின்ற காலங்களில் எம்முடைய தேசம் மீது நடத்தவிருக் கும் ஒரு பாரிய தாக்குதலை எதிர் கொண்டு சிங்கள படையை அழித்து ஒழிக்க வேண்டியது தமிழர்களின் தலையான கடமையாகும் என்றார்.

-ஈழநாதம்

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார மூன்றாம் நாள் நிகழ்வுகள்.

மாவீரர் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது மாணவர் மன்றப் பிரதிநிதி தலைமையில் இடம் பெற்ற இன்றைய நிகழ்வில் ஈகைச்சுடரினை பல்கலைக்கழக பேராசிரியாகள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவமன்றப் பிரதிநிதிகள் ஏற்றி வைத்தார்கள்

இதனைத் தொடர்ந்து மலரஞ்சலி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளை மாணவமன்றப் பிரதிநிதிகள் நிகழ்த்தினார்கள்.

இன்றை நிகழ்வுகளில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் காலையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும் நினைவாலயப் பகுதி சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

www.pathivu.com

  • தொடங்கியவர்

தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ மாவீரர் நாளை முன்னெடுப்பதற்கான அலங்கார வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகைப்படங்களை பார்க்க இங்கே அழுத்தவும்.

http://sankathi.org/news/index.php?option=...20&Itemid=1

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு.

முல்லைத்தீவு மாங்குளத்தில் இன்று மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இன்று வியாழக்கிழமை முற்பகலில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாங்குள பிரதேச பொறுப்பாளர் தலைமை வகித்தார்.

வடபோர்முனை கட்டளைத் தளபதிகளில் ஒருவரான குபேரன் போர்க்களங்களில் உயிர்துறந்த மாவீரர்கள் தமிழினத்துக்கென ஒரு வீர வரலாற்றை எழுதிக் கொண்டுள்ளனர். மாவீரர்களின் கனவை நனவாக்க தலைவரின் தலைமையில் அணிதிரள்வோம் என்றார்.

தளபதி வேந்தன் தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் செ.முகுந்தன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

www.puthinam.com

  • தொடங்கியவர்

மாவீரார் நினைவுநாள் சோடனைகள் படையினரால் அறுத்தெரியப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு நாளையொட்டி சோடனை செய்யப்பட்ட கொடிகள் காட்டு மிராண்டித்தனமான முறையில் இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அறுத் தெறியப்பட்டுள்ளன பல்கலைக் கழக மாணவர்களினால் கடந்தாண்டு மாவீரர் நினைவுத் தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நுழைந்த இராணுவத்தினர் மாவிரார் நினைவுத் தூபியை உடைத்து தமது வெறியை வெளிப்படுத்தி சென்றார்கள்.

இத்தகைய நிலமையில் மாணவர்கள் கடந்த வாரம் மாவிரர் நினைவுத் தூபியை திருத்தம் செய்து இந்தாண்டும் குறிப்பிட்ட இடத்தில் மாவீரார் நினைவு நாளை கொண்டாடி வருகின்றார்கள்.

இத்தகைய நிலமையில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் துப்பாக்கிகள் சகிதம் பல் கலைக்கழகத்தின் சுற்றாடலில் வந்த இராணுவத்தினர் வீதியில் அலங்கரிக்கப்பட்டு இருந்த சிவப்பு மஞ்சல் நிறக் கொடிகளையும் பதாதைகளையும் அறுத்தெரிந்து வெறியாட்டம் ஆடிவிட்டுச் சென்றுள்ளதுடன் எச்சரிக்கையும் செய்துவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரியர்களும் எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

www.pathivu.com

  • தொடங்கியவர்

தமிழீழ மருத்துவப் பிரிவின் ஒழுங்குபடுத்தப்பட்ட மாவீரர் நினைவு மண்டபம் இன்று திறக்கப்பட்டது.

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு திறக்கப்பட்ட மாவீரர் மண்டபத்தில் 500 திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

http://www.eelampage.com/?cn=29902

  • தொடங்கியவர்

டென்மார்க்கில் மாவீரர் நாள் ஏற்பாடுகள்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் நினைவெழிச்சி நாளை எழிச்சியுடன் கொண்டாடுவதற்று தயாராகி வருகிறார்கள். டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் மாவீரர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் டென்மார்க் கலை பண்பாட்டு கழகத்தினரால் மிக எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

www.pathivu.com

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 மாவீரர்கள் வீரச்சாவு.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 18742 என தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2006ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது.

மாவீரர்கள்

ஆண் மாவீரர்கள் - 14677

பெண் மாவீரர்கள் - 4065

மொத்த மாவீரர்கள் - 18742

கரும்புலிகள்

தரைக் கரும்புலிகள் - 79

கடற்கரும்புலிகள் - 220

மொத்தக் கரும்புலிகள் - 299

எல்லைப்படை மாவீரர் - 279

நாட்டுப் பற்றாளர்கள் - 454

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

தாயகத்தில் தமிழீழ மாவீரர் நாள்.

தமிழீழ தாயகத்தில்; தமிழீழ மாவீரர்நாளின் ஆரம்பநாள் நிகழ்வுகள் இன்று ஆரம்பாமாகி உள்ளன தமிழீழ அரசியல்துறை நடுவகப்பணியகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர்தூயவனின் சகோதரனும், சிற்பக்கலைஞருமான விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார்.

தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுப் படதிற்கான சுடர் ஏற்றிவைக்கப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்துக்களான மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான ஈகைச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன. நினைவுரையினை தூயவன் அரசறிவியற்க் கல்லூரி அதிபர் அரசன்னா ஆற்றினார்.

புகைப்படங்கள்:-

http://sankathi.org/news/index.php?option=...34&Itemid=1

  • தொடங்கியவர்

தமிழீழத் தாயகமெங்கும் எழுச்சிக் கோலத்துடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடக்கம்.

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒன்று சேரப்போற்றும் மாவீரர் எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை தொடங்கியுள்ளன.

மாவீரர் துயிலுமில்லங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறைகள், நிறுவனங்கள் பாடசாலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் பொதுச்சுடரேற்றப்பட்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன.

இன்று காலை 7.59 மணிக்கு பொதுச்சுடரேற்றப்பட்டு மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் தொடங்கின.

காலை 8 மணிக்கு தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடரேற்றப்பட்டு மலர் வணக்கம் நடைபெற்றது. அதன்பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் தொடங்கின.

மாவீரர் நாளுக்காக தமிழீழத் தாயகமெங்கும் எழுச்சிக்கோலமாக உள்ளது.

சிறிலங்கா இராணுவக் கெடுபிடிகள் நிறைந்த யாழ். குடாநாட்டில் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகளில் மாவீரர் எழுச்சிநாள் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

www.puthinam.com

  • தொடங்கியவர்

புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாளில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வருகை.

எதிர்வரும் 27ம் நாள் புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாளில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பா மற்றும் அவுஸ்ரேலியா நாடுகளுக்கான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

மாவீரர் நாளில் சிற்புரையாற்றுவதற்கா வருகை தரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளனர்.

1. சுவிஸ்லாந்து - திருமதி.பத்மினி சிதம்பரநாதன்.

2. டென்மார்க் - திரு.அரியநேந்திரன்

3. நோர்வே - திரு.பத்மநாதன்

4. பிரான்ஸ் - திரு.கஜேந்திரன்

5. கனடா - திரு.ஜெயானந்தமூர்த்தி

6. அவுஸ்ரேலியா - திரு.ஈழவேந்தன்

8.ஜேர்மனி - திரு.அரியநேந்திரன்

9.நெதர்லாந்து - திரு.அரியநேந்திரன்

10. திரு.சிவநேசன்

ஆகியோர் பங்கேற்கின்றனர்.

www.pathivu.com

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் ஆரம்ப நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் பங்கேற்பு.

மாவீரர் வாரத்தின் முதல் நாள் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்று வணக்கம் செலுத்தியுள்ளார்.

இதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் பொதுச் சுடரேற்றி முதல் மாவீரன் லெப்.சங்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • தொடங்கியவர்

தமிழீழ மாவீரர் நாள் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தமிழீழ காவல்துறை நடுவகப் பணியகத்தில் இன்று காலை 8.00மணியளவில் தமிழீழ காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் இயலரசன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

http://sankathi.org/news/index.php?option=...51&Itemid=1

யாழில் படையினரின் கெடுபிடிகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்த தினம் மக்களால் அனுஷ்டிப்பு.

- பண்டார வன்னியன் ளுரனெயலஇ 26 ழேஎநஅடிநச 2006 09:44

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வதிரிச் சந்திப் பகுதியில் இன்று காலை 8.00மணியளவில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

படையினரின் கெடுபிடிகளின் மத்தியிலும் பொதுமக்களால் இந்தப் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதேவேளை வல்வெட்டித்துறை யாழ்பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் படையினரின் கெடுபிடிகளிற்கு மத்தியிலும் தலைவரின் பிறந்த தின நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.

இதே வேளை மாவீரர் தினத்தையொட்டி வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டி சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. படையினர். இன்று குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் வீதியால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செல்லும் மக்களை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

கடற்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை பொதுமக்கள் கேக் வெட்டி வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர்.

http://sankathi.org/news/index.php?option=...52&Itemid=1

  • தொடங்கியவர்

மாவீரர் நாட்களின் படத் தொகுப்புக்கள்.

தமிழீழ மாவீரர் நாள் தாயகம் தளுவிய ரீதியில் தமிழீழ மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 25-11-2006 முதல் 27-11-2006வரை பிரதேச ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் மாவீரர் நாள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமக்கு இன்று கிடைக்கப்பெற்ற படத்தொகுப்புக்கள்.

http://sankathi.org/news/index.php?option=...65&Itemid=1

கனடா ரொறன்ரோ இன்ரர்நசனல் சென்ரரில் தேசிய நினைவெழுச்சி நாள் - 2006.

கனேடியத் தமிழர்கள் நடத்தும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் ரொறன்ரோ நகரின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றான இன்ரர்நசனல் சென்ரரில் இன்று திங்கட்கிழமை (27.11.06) இருபெரும் நிகழ்வுகளாக பேரெழுச்சியுடன் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ரொறன்ரோ பெருநகரில் பிரதேச வாரியாக நடைபெற ஏற்பாடாகியிருந்த சகல தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை கவனத்திற் கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்ரர்நசனல் சென்ரர் ரொறன்ரோவின் மேற்குப் புறத்தில் ரொறன்ரொ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில்இ 6900 ஏயார்போட் வீதிக்கு அருகாமையில் எயார்போட் ஃடெறி வீதி சந்திப்பிற்கு அருகாமையில் உள்ளது.

அனைத்து தமிழ் மக்களும் ஓரணியாக அணிதிரண்டு மாவீரரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு வசதியாக இந்தப் பெருமண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் பல உயர் மாநாடுகள் சர்வதேச மட்டத்திலான கண்காட்சிகள் போன்றவற்றிற்கு இந்த இன்ரர்நசனல் சென்ரர் மண்டபம் பிரபல்யமானது.

அனைத்து தமிழ் மக்களும் நெரிசலின்றி தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளில் பங்கேற்று வணக்கம் செலுத்தவும் சிறப்பு நிகழ்சிகளை காண்பதற்கும் வசதியாகவும் இரு நிகழ்வுகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முதல் நிகழ்வு பிற்பகல் 1:00 மணிக்கும்

இரண்டாவது நிகழ்வு மாலை 6:00 மணிக்கும்

ஆக இடம்பெறவுள்ளன.

ஆரம்ப நிகழ்வுகளுடன்

தேசியக் கொடியேற்றல்

தேசியத் தலைவர் உரை

அகவணக்கம்

கார்த்திகைப் பூ வணக்கம்

நடனங்கள்

சிறப்புரைகள்

நாடகங்கள்

இசை நிகழ்ச்சி

ஆகியன இரு பெரும் நிகழ்வுகளிலும் இடம்பெறவுள்ளன.

நினைவெழுச்சி நாளை முன்னிட்டு தேசிய விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தியுள்ள தமிழ் வர்த்தகர் சமூகத்தினர் தங்களது வர்த்தக நிறுவனங்கள்இ அலுவலகங்கள் அன்றைய நாள் மூடியிருக்கும் என அறிவித்துள்ளனர்.

இன்றைய தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்இ தமிழ் மக்கள் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளில் பங்கேற்கத் திரண்டு வரலாம் என எதிர்பார்த்து அதற்கேற்ப சகல வசதிகளையும் விழா ஏற்பாட்டாளர்களும் இணைந்து செயலாற்றும் தொண்டர்களும் மேற்கொண்டுள்ளனர்.

www.puthinam.com

  • தொடங்கியவர்

தேசியத் தலைவர் அவர்களின் உரையின் முழுவடிவமும் புகைப்படங்களும்.

http://sankathi.org/news/index.php?option=...74&Itemid=1

மாவீரர்களிற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார். புகைப்படங்கள் உள்ளே:-

http://sankathi.org/news/index.php?option=...75&Itemid=1

  • தொடங்கியவர்

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு.

http://sankathi.org/news/index.php?option=...79&Itemid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.