Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழிற்கு ஏ-9 ஊடாக பொருட்களை அனுப்ப நடவடிக்கை.

Featured Replies

யாழிற்கு ஏ-9 ஊடாக பொருட்களைக் கொண்டு செல்லப் போவதாக அரசு அறிவிப்பு?

யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதியூடாக பொருட்களை கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனுப்பத் தயாராகவுள்ள அனைவரையும் உடனடியாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ் அனுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாகவா அல்லது ஒரு தடைவ மட்டுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

www.sankathi.com

  • தொடங்கியவர்

ஏ9 வீதியூடாக பொருட்களை கொண்டுசெல்வதற்கு விரும்பும் லொறி உரிமையாளர்களை பதிவுசெய்ய கோரிக்கை.

ஏ9 வீதியூடாக பொருட்களை கொண்டு செல்ல விரும்பும் லொறி (பார ஊர்தி ) உரிமையாளர்கள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு பிரதி திறைசேரியின் செயலாளரும் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகமுமான எஸ். பி. திவாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் காரணமாக பொருட்கள் அனுப்புவதற்கு ஏ 9 பாதையைப் பிரயோகப்படுத்த முடியாத காரணத்தால் அரசாங்கம் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களையும் எரிபொருட்கள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் அனுப்புவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் பொருட்களின் தடையில்லாத வழங்கலை நிச்சயப்படுத்தியது.

நிலைவரத்தை மீளாய்வு செய்யும் சமயப் பெரியார்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றின் விண்ணப்பங்களையும் கவனத்தில் எடுத்தும் அடுத்த வாரங்களில் காலநிலை சீரற்றதாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும் யாழ்ப்பாணத்திற்கு ஏ 9 வீதி ஊடாக அத்தியாவசிய பொருட்களை அனுப்பும் வசதிகளைச் செய்யுமாறு மேன்மை தங்கிய ஜனாதிபதி அத்தியாவசிய ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு பாரவூர்திகளை வழங்க விரும்பும் பாரவூர்தி உரிமையாளர்களையும் பொருட்கள் சுமக்கும் பார ஊர்தி நிறுவனங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். பாரவூர்தி உரிமையாளர்களும், பாரவூர்தி உரிமை நிறுவனங்களும் தங்கள் சிரத்தையை இதன் கீழ் காணும் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலம் வெளிப்படுத்தும்படி வேண்டப்படுகின்றனர்.

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் உற்பத்தியாளர்களையும் இறக்குமதியாளர்களையும் மொத்த விற்பனையாளர்களையும் தமது பொருட்களை யாழ்ப்பாணத்திலுள்ள தங்கள் விநியோகஸ்தர்கள், முகவர்கள் மூலம் விநியோகித்து இப் பொருட்கள் விநியோகத்தில் பங்கேற்க விரும்பின் தங்கள் சிரத்தையை அறிவிக்கும்படி வேண்டப்படுகின்றனர்.

அப்படியாயின் பொருட்களின் விபரம், அனுப்பப்படக்கூடிய தொகை, பாரவூர்தியில் ஒதுக்க வேண்டிய இட அளவு (மெற்றிக்தொன் அல்லது கன மீற்றரில்) என்பனவற்றையும் குறிப்பிடவும்.

www.tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.