Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார் : விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார் : விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்
news

சர்வதேச விதவைப் பெண்கள் தினம் யூன் 23 ஆம் திகதி உலகம் பூராகவும் அனுஸ்டிக்கப்படுகின்றது.

 
இத்தினத்தையொட்டி பெண் தலைமைத்துவக் குடும்பத் தலைவிகளுக்கு வாழ்வாதாரமாகத் தென்னங்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டமொன்றை வடமாகாண சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின்; சம்மேளனம் முன்னெடுத்துள்ளது.
 
இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று  யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது, வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார்.
 
மேலும் தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட கலப்பு இனமான சீ.ஆர்.ஐ–60  என்ற தென்னை ரகமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. 
 
ஏனைய மாவட்டங்களிலும், அம்மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பத் தலைவிகளுக்கு இவ்வாறு தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன. 
 
நெதர்லாந்து மனித நேயச் செயற்பாடுகளுக்கான கூட்டுறவு அமைப்பின் நிதி உதவியுடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
வடமாகாண சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் செ.இரகுநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.கணேசு, தென்னை அபிவிருத்திச் சபையின் பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் ஆகியோரோடு சிக்கனக் கடன் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் மாவட்டத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
111%2820%29.jpg
 
1111111%284%29.jpg
 
11%2882%29.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=645534101422736468#sthash.opc1BjMj.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

தென்னங்கன்று கொடுத்தீக ஆனால் அந்த தென்னங்கன்றிற்கு ஊத்த தண்ணீர் கொடுத்தீங்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடி நீர் ஆபத்தில்லை-ஜங்கரநேசன்! இறுதி அறிக்கையின் பின்னரே முடிவு-முதலமைச்சர்

ayngaranesan1.pngசர்ச்சைக்குரிய சுன்னாகம் நிலத்தடி நீர் மாதிரிகளினில் அபாயகரமான நச்சுப்பொருட்கள் இல்லையென வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். - பதிவு
 
 
 
 
 
யாழ் நிலத்தடி நீரில் மாசு இல்லையென விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளதைப் புரிந்துகொள்ளாது அவரை விமர்ச்சிப்பவர்கள்.... அவரால் வழங்கப்படும் தளரா வளர் தெங்குகள் அதன் தாள்கள் உண்ட நிலத்தடி நீரைத் தலையாலே தரும்போது புரிந்துகொள்வார்கள். :rolleyes:
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நிலத்தடி நீர் மாசு தொடர்பில் ஆராய முற்பட்டால் பல சர்ச்சைகள் உருவாகும்: ரவூப் ஹக்கீம்

 

http://www.tamilwin.com/show-RUmtyGRWSUfu5A.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.