Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வன்முறைகளுக்கு முகங்கொடுத்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் : சரவணபவன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவ வன்முறைகளுக்கு முகங்கொடுத்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் : சரவணபவன் எம்.பி
news
இடர்படும் மக்களின் நலன்களுக்கும், வாழ்வில் உயரத் துடிக்கும் உள்ளங்களின் அபிலாசைகளுக்கும் தன்னலமற்ற வகையில் தொண்டாற்றும் ஓர் உன்னத அமைப்பின் இந்தச் சந்திப்பானது போரின் வடுக்களால் துவண்டு போயுள்ள எமது மக்களின் விடிவுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான செயற்பாடுகளுக்குப் பணியாற்றும் ஒப்பற்ற கடமையை முன்கொண்டு செல்வதில் பெரிய பங்கை வகிக்கும் என்று யாழ்- கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
 
நேற்று சொர்ணாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்ற வறிய மற்றும் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 
மேலும் அவர் உரையாற்றுகையிலே ,
 
நாம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும் ஒரு சமூகம் என்பதிலும், ஒரு உயரிய கலாசார பாரம்பரியம் கொண்ட ஒரு இனம் என்பதிலும் வரலாற்றுக்காலம் தொட்டு எமக்கான ஒரு வாழிடத்தில் நிலைகொண்டு வந்தவர்கள் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்பதில் நீங்களும் என்னுடன் உடன்படுவீர்கள் என நான் திடமாக நம்புகிறேன். தொன்மை வாய்ந்த எமது கலை இலக்கியச் சிறப்பைக் காவியங்களும், புராணங்களும், தேவார திருவாசகங்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன. 
 
எமது கலைகள் செழித்து வளரும் மையங்களாகவும் எமது பாரம்பரிய ஒழுக்கம், பண்பாட்டின் மூலமாகவும் எமது ஆலயங்கள் இன்றும் சாட்சி சொல்லி நிற்கின்றன.
 
செழிப்பும், அமைதியும், நிம்மதியும் நிலவிய எமது வாழ்வியல் சூழல் மீது இன ஒடுக்குமுறை என்ற கருமேகம் சூழ்ந்தபோது குழப்பங்களும் கொந்தளிப்புகளும் எழுந்தன. 
 
இனக்கலவரங்கள் என்ற பேரில் எம்மீது இன அழிப்பு ஏவிவிடப்பட்டபோது எங்கள் இயல்பு வாழ்வு நிலைகுலைந்து ஓர் இருள்மயமான பயங்கரத்துக்குள் தள்ளப்பட்டோம்.
 
எம்மை நாமே பாதுகாக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் எம்மீது ஏவிவிடப்பட்ட கட்டற்ற இனவாத இராணுவ வன்முறைகளுக்கு முகம் கொடுக்க எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
 
 
மெல்ல மெல்ல முளைவிட்ட ஆயுதப்போராட்டம், ஆட்சித்தரப்பால் ஒரு பெரும் போரால் எதிர்கொள்ளப்பட்டது.
 
எனவே நாம் போரின் சகல துன்ப துயரங்களையும் பேரிழப்புகளையும் சுமந்தோம். சமாதான வழியில் நாம் எமது உரிமைகளைப் பெற எடுத்த முயற்சிகள் எப்படித் தோற்கடிக்கப்பட்டனவோ அவ்வாறே போரைப் போரால் முகம்கொடுத்த எமது முயற்சிகளும் நயவஞ்சகமான முறையில் தோற்கடிக்கப்பட்டன.
 
வாரணப் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும், தாரணி மெளலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும், வீரமும் களைந்தே போட்டு வேதனைக் கடலில் விழுந்தோம். 
 
ஆனால் நாம் வீழ்ந்தது அழிந்து போவதற்காகவல்ல. மீண்டெழுந்து நிமிர்ந்து நிற்பதற்காக. அந்த எழுச்சியை நோக்கி எங்கள் முன்னும், உங்கள் முன்னும் பெரிய பணிகள் விரிந்து கிடக்கின்றன.
 
ஏற்கனவே விழுந்து போனவர்களும் சரி, விழுந்த போதும் மீண்டும் எழுந்து நிமிர்ந்து நிற்பவர்களும் சரி இன்னும் எழ முடியாது விழுந்து கிடப்பவர்களுக்குக் கரம் கொடுத்து எழுப்பி விடக் கடமைப்பட்டவர்கள். 
 
வறிய வாழ்விலும், ஏங்கிய மனங்களுடன் அல்லல்படும் எமது உறவுகள் விமோசனம் பெறவேண்டும்.
 
அவர்களுக்கு எட்டாக்கனியாகிப் போய்விட்ட இயல்பு வாழ்வு அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
 
அந்த அரிய பணியை முன்னெடுப்பதில் இணைந்து கொள்ள வரும்படி உங்களை உரிமையுடன் அழைக்கிறோம்.
 
இந்தப் போரில் போராளிகளாவும், பொதுமக்களாகவும் உடல் ஊனமடைந்தோரை ஒரு முறை திரும்பிப் பாருங்கள்! கணவன்மாரை இழந்து விதவைகளாகிவிட்ட நிலையிலும் குடும்பப் பாரத்தைச் சுமக்க முடியாமல் சுமந்து நடைப்பிணமாகிவிட்ட பெண்களைப் பாருங்கள்! பெற்றோரை இழந்து அநாதைகளாகி விட்ட சின்னஞ்சிறுசுகளின் உள்ளத் தவிப்பை ஒரு முறை எண்ணிப் பாருங்கள்! யார் இவர்கள்! ஒரு விடியலுக்காய் தங்கள் அவயங்களை இழந்தவர்கள்! எமது மீட்சிக்காக உறவுகளை இழந்தவர்கள்.
 
இவர்கள் படும் துன்பம் நாங்கள் படும் துன்பமல்லவா? இவர்கள் அனுபவிக்கும் வேதனை எமது சமூகத்துக்காகச் சிந்திய குருதியில் கலந்ததல்லவா?
 
எனவே ஊனமுற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் மறுவாழ்வு வழங்கும் பணியில் நாம் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக இறங்க வேண்டும் என்பதை அன்பான ஆணித்தரமான கோரிக்கையாக உங்களிடம் முன்வைக்கிறேன்.
 
நேற்றுத் துப்பாக்கி ஏந்தி நமது மக்களைக் காத்த வீரன் இன்று ஒரு பிடி சோற்றுக்குக் கையேந்தலாமா? நேற்று அடர்ந்த காட்டிலும் நட்ட நடு நிசியில் எல்லை காத்தவன் வீதியில் பசியில் மயங்கி விழலாமா? அவர்கள் சிந்திய குருதியில் எங்கள் மண் சிவந்து போய்க்கிடக்கிறது. 
 
 அந்த மண்ணில் நடமாடும் நாம் அவர்கள் படும் துன்பம்கண்டும் மனம் வறண்டு போய்க்கிடக்கலாமா? கழுத்தில் சயனைட் கட்டி தோளில் சாவைச் சுமந்து நின்று களமாடியவர்கள் வறுமை தாங்காது கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்யலாமா?
 
ஆட்சியாளர்களுக்கு அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் அடக்குமுறையாளர்களுக்கு அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம்; ஆனால் எமக்கு அவர்கள் பாதுகாவலர்களாக விளங்கியவர்கள். எமது முன்னோடிகளாகச் செயற்பட்டவர்கள்.
 
ஊனமுற்றோருக்கும், விதவைப் பெண்களுக்கும், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் இன்று தேவைப்படுவது மறுவாழ்வு. சிறு உதவிகளையும் சலுகைகளையும் வழங்கிவிட்டு எம்மை நாமே திருப்திப்படுத்தி விட முடியாது.
மறுவாழ்வு இது ஒன்றுதான் அவர்கள் படும் துயரங்களுக்கு நிரந்தரத் தீர்வை  வழங்கும்.
 
மீண்டும் சொல்கிறேன் அவர்கள் வீழ்ந்து போனது நாம் நிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதற்காக. இப்போது அவர்கள் நிமிர்ந்து நிற்க உரம் கொடுப்பது ஒவ்வொருவரினதும் கடமை. 
 
எனவே இதே பாதையில் ஊனமுற்றவர்கள், கணவன்மாரை இழந்த பெண்கள், உறவுகளை  இழந்த சிறுவர்கள் எனப் பல்வேறு பாதிப்புக்களுக்கும் உட்பட்டவர்களை உயர்த்திவிடும் பணியில் நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=840814105124315613#sthash.hk7UhRYa.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ஆ....அப்பிடியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
""
வாரணப் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும், தாரணி மெளலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும், வீரமும் களைந்தே போட்டு வேதனைக் கடலில் விழுந்தோம். 
 
 
நேற்றுத் துப்பாக்கி ஏந்தி நமது மக்களைக் காத்த வீரன் இன்று ஒரு பிடி சோற்றுக்குக் கையேந்தலாமா? நேற்று அடர்ந்த காட்டிலும் நட்ட நடு நிசியில் எல்லை காத்தவன் வீதியில் பசியில் மயங்கி விழலாமா? அவர்கள் சிந்திய குருதியில் எங்கள் மண் சிவந்து போய்க்கிடக்கிறது. 
 
 அந்த மண்ணில் நடமாடும் நாம் அவர்கள் படும் துன்பம்கண்டும் மனம் வறண்டு போய்க்கிடக்கலாமா? கழுத்தில் சயனைட் கட்டி தோளில் சாவைச் சுமந்து நின்று களமாடியவர்கள் வறுமை தாங்காது கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்யலாமா?
 
ஆட்சியாளர்களுக்கு அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் அடக்குமுறையாளர்களுக்கு அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம்; ஆனால் எமக்கு அவர்கள் பாதுகாவலர்களாக விளங்கியவர்கள். எமது முன்னோடிகளாகச் செயற்பட்டவர்கள்.""
 
இதுதான் இன்றைய-தேர்தல் கால த தோ கூ. 
பலே பலே சரவணா..
கொடுத்ததற்காக மேலால கூவுறான்ப்பா..
 
 
 
 
 
 

ஆமா உந்த சரவணபவனும் புலவாலா?:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.