Jump to content

மார்க்கின் ஒரு நாள்!


Recommended Posts

மார்க்கின் ஒரு நாள்!

 

p43a.jpg

ஃபேஸ்புக்ல தூங்கி ஃபேஸ்புக்ல கண் விழிக்கிற நாம ஒரு நாளாச்சும் மார்க் ஸுக்கர்பெர்க்கைப்பற்றி சில வித்தியாசமான தகவல்களைத் தெரிஞ்சுக்காட்டா எப்பிடி?

Red_Dot.pngநம் எல்லோரையும் போல 10 டு 5 தான் அவருடைய வேலை நேரம். சில நேரங்களில் 8 மணி வரை உட்கார்ந்திருப்பார். ஃபேஸ்புக்கில் ரவுண்ட் வருவது அவருடைய ஹாபி. தன் அதிகாரப்பூர்வத்தளத்தில் (https://www.facebook.com/zuck) புதிதாக அறிமுகப்படுத்தும் தொழில்நுட்பத்தை தன் கைப்படவே ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்!

Red_Dot.pngஒரே மாதிரியான க்ரே கலர் வட்டக்கழுத்து டி ஷர்ட்களைத்தான் தன் வார்ட்ரோபில் நிறைய அடுக்கிவைத்திருக்கிறார். முக்கியமான மீட்டிங்கிற்குக்கூட ட்ரெஸ்கோட் கட்டாயம் என்ற நாட்களில் மட்டும் கோட் சூட் அணிந்துகொள்கிறார். ‘எனக்கு இப்படி ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்கத்தான் பிடிக்கிறது. என்னைப்பற்றி ‘மார்க்குக்கு சட்டை வாங்கிக் கொடுங்கள்’ என்று தனி பேஜ் ஆரம்பித்தே கிண்டல் செய்தார்கள். நான் நானாகத்தான் இருக்க விரும்புகிறேன். தவிர, இதனால் என் நேரம் அவ்வளவு மிச்சமாகிறது’ என்கிறார் இந்த அடக்கஒடுக்கமான கோடீஸ்வரர்!

p44a.jpg

Red_Dot.pngசிவப்பு, பச்சை நிறப் பார்வை சவால் பிரச்னை இவருக்கு உண்டு. அவர் கண்களுக்கு நீல நிறம்தான் நன்கு தெரியும் என்பதால், முகநூலை எந்த வண்ணத்திலும் இனிமேல் மாற்றும் யோசனைகள் அவரிடம் இல்லை!

Red_Dot.pngட்விட்டர் பக்கம் ஆரம்பித்ததில் இருந்து நான்கு வருடங்களில் 19 ட்வீட்கள் மட்டுமே கீச்சி இருக்கிறார். ஆனால் ஃபாலோயர்கள் 2,20,000 பேர் இருக்கிறார்கள்!

Red_Dot.pngதன் காதல் மனைவி பிரிசில்லா சானுக்குக் காதல் பரிசாகக் கொடுத்த  ஹங்கேரியன் ஷீப் இனத்து நாயான ‘பீஸ்ட்’டுக்கென தனிப்பக்கத்தை (https://www.facebook.com/beast.the.dog) ஆரம்பித்து இவர் கைப்படவே நாயின் சார்பாக ஸ்டேட்டஸ் போட்டுத் தாக்குகிறார். திரித்திரியாக நூலால் செய்யப்பட்ட பொம்மையைப்போல இருக்கும் இந்த நாய் ‘இன்னிக்கு செம எலும்பு என் பிறந்தநாள் பரிசாகக் கிடைச்சிருக்கு. வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!’ என ஆங்கிலத்தில் ஸ்டேட்டஸ் போட்டு லைக்ஸ் அள்ளுகிறது!

p45a.jpg

Red_Dot.pngவீட்டில் டி.வி வைத்துக்கொள்ளவில்லை. எல்லாமே இணையம்தான். அதற்கே நேரம் போதவில்லையாம்!

Red_Dot.pngகருப்பு கலர் Acura TSX காரை தானே டிரைவ் செய்து போவது ரொம்பப் பிடிக்கும். மிக அரிதாகத்தான் டிரைவிங் சீட்டை விட்டுக்கொடுப்பார்!

Red_Dot.pngஃபேஸ்புக் நிறுவனமே இவரின் பெர்சனல் பாதுகாப்புக்காக பெரும் தொகையை ஆண்டுதோறும் செலவு செய்கிறது. அமெரிக்க அரசும் ஸ்பெஷல் பாதுகாப்பு வளையத்துக்குள் இவரை வைத்திருக்கிறது.  ‘மார்க் இல்லை என்றால் எதுவுமே இல்லை’ என்பதால்தான் இந்தச் செலவுகள் என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்!

Red_Dot.png5 அடி 8 அங்குலம்தான். ஆனால் உயரமாகத் தெரிவதன் காரணம் நிமிர்ந்துதான் எப்போதும் நிற்பார்!

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=107884

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த கற்பனை கலந்த ஆக்கத்தை வாசித்த  போது மீண்டும் பின்வரும் பழைய பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.   
    • இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1    
    • அப்பு இப்ப சரியே...நீங்கள் அரசியலில் பி.ஹெச்.டி என்ற காரணத்தால்  எங்களுக்கு இப்படி கஸ்டமான கேள்விகளை கேட்க கூடாது கண்டியளோ😅
    • கஜேந்திரகுமார், சுமந்திரன் இருவரும் மீண்டும் கொழும்பு சென்று தமது சட்டதரணி தொழிலுக்கு திரும்பலாம். மணிவண்ணன் மீண்டும் யாழ் மாநகரசபை மேயராகி நகரை அபிவிருத்தி செய்யலாம். செலவம், சுரேஷ் ஓய்வெடுக்கலாம், சுகாஷ் “நான் லோயர்” என்று கத்திக்கொண்டு அடுத்த பைத்தியமான குதிரை கஜோட சேர்ந்து   தெரு தெருவா அலையலாம்.  மற்றயவர்கள் ஏதோ தெரிந்த தொழிலைச் செய்து பிழைக்கலாம். 
    • தமிழ்த்தேசிய இயக்கம் சிபா ஆதித்தனார். மபொசி போன்றவர்களால்திராவிட இயக்கங்களின் தோற்றுவாயான நிதிக்கட்சிக் காலத்திலிருந்தே தோன்றி இருந்தன.தனித்தமிழ்நதாடு கோரிக்கையை முன்வைத்து சிபா ஆதித்தனாரின் கட்சியின் பெயரே நாம் தமிழர் இயக்கம்தான். அண்ணா போன்ற பேச்சாற்றலும்  அன்றைய வெகுஜன ஊடகமான சினிமாவை அததன் நடிகர்களை கதைவசனகர்த்தாக்களை பாடசாலைhசிரியர்களை வைத்து தமிழத்தேசியம் வளராமல் தடுத்து கடைசியில் திராவிடநாடு கோருpக்கையை கைவிட்டு பதவி நாற்பாலி அரசியலை அண்ணா ஆன்னெடுத்தார். அவர்களின் கவர்ச்சியான பிரச்சாரத்துக்கு முன்னால் தமிழ்த்தேசியத்தலைவர்களால் நின்று பிடீக்க முடியாமல் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்த் தேசிய அரசியல் நீரத்துப் போனது. அப்டீபாது தமிழ் ஈழக் கோரிக்கை கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் {ழக் கோரிக்கையும் அதனால் உன்டான ஆயுதப் புரட்சியும் தமிழ்த்தேசிய எழுச்சியை உந்தித்தள்ளின.அப்பொழுதும் கூட தமிழ்த்தேசியத்தலைவரின் பெருமதிப்பைப் பெற்ற பழ நெடுமாறன் ஐயாவி அவர்களின் தலைமையில் உலகத் தமிழர் இயக்கம் இயங்கியது.புலிகள் இயக்கம் அழிக்கபட்ட பின்னர் சீமான் அந்த அழிவிலிருந்து அந்த அழிவுக்கு திராவிடமும் ஆரியமும் காரணம் என்று தமிழகமக்களுக்கு தெளிவு படுத்தியதின் விளைவே நாம் தமிழரின் மீள் எழுச்சி.நாம்தமிழர் இயக்கம் முன்பு போல் தொடர் தோல்விகளால் துவண்டு திராவிட இயக்கங்களில் கரைந்து போகாமல்   கொஞ்சம்கொஞ்சமாக ஏழுச்சிபெற்று வருவதை திராவிட இயக்கங்களால் சீருணிக்க முடியவில்லை. திராவிட இயக்கம் தோன்றியதன் பினால் தோன்றிய முக்கிய கட்சிகள் திராவட  என்ற சொல்லை தவிர்க்க முடியாமல் தங்கள் கட்சிகளுக்கு சூட்ட வேண்டிய நிர்பந்தததை உடைத்து திராவிடத்தைக் கட்சிப் பெயர்களில் இருந்து நீக்க வேண்டிய நிலை நாம்தமிழர் கட்சி உருவானதன் பின்னரே ஏற்பட்டது. எதிர்காலத்தில் திராவிடம்  தமிழ்நாட்டில்இருந்து முற்றாக நீக்கப்படும்.(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் >மக்கள் நீதிமய்யம் தமிழகவெற்றிக்கழகம்)(பாட்டாளி மக்கள்கட்சி>விடுதலைச்சிறுத்தைகள்> விதிவிலக்காக பெயரளவில் இருந்தாலும் திராவிடக்கட்சிகளுடன் கூட்ணி அமைத்து அந்தத் திராவிடக்கட்சிகளையும் வளர்த்து தம்மையும் வளர்த்த கட்சிகளாகும்) 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.