Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவிடம் நேரடி கேள்வி..! நீங்கள் தயாரா…?

Featured Replies

மஹிந்தவிடம் நேரடி கேள்வி..! நீங்கள் தயாரா…?

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுடன், நேரடிபேஸ்புக் கேள்வி, பதிலுக்கு நாளைய தினம், ஜூலை 23, 2015, காலை 8.30 மணிக்கு இணைந்து கொள்ளுங்கள்.

http://www.jvpnews.com/srilanka/117556.html

MR FB

ஏற்கனவே ஒருவர் பதிலளிப்பதாக அறிவித்து முடிந்து விட்டது. இனி இவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்வி...!

ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது... அந்த நாட்டின் மிக உயர்ந்த பதவியென்பது உலக அபிப்பிராயம்!

அதுவும் அந்தக்காலத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ..அந்தப் பதவிக்குக் கொடுத்த மரியாதை..வெறும் உத்தம அல்லாது.. அதி உத்தம.. என்பதாகும்!

அத்தகைய ஒரு பதவியை அலங்கரிக்கும் வெளி நாட்டுத் தலைவர்கள்.. மீண்டும் வேறு எந்த வழியிலும் அரசியலுக்குள் நுழைய முயற்சிப்பது மிகவும் அரிது!

நீங்கள் எதற்காக மீண்டும்.. வெறும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறீர்கள்?:innocent:

 

நீங்கள் பதிலளிக்க மாட்டீர்கள்!

நானே பதிலையும் எழுது விடுகிறேன்!

நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக....!:grin:

 

அடுத்த கேள்வி.?

பயங்கரவாதம் என்றால் என்ன?

இது பற்றிய உங்கள் பார்வை எப்படி?:oO:

 

  • தொடங்கியவர்

எனது கேள்வி...!

ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது...............

இது இங்கே அல்ல முக நூலில் தான் பதிலளிப்பார்.ஏற்கனவே பல தமிழர்கள் நட்பாகியுள்ளார்கள். நீங்களும் விரும்பினால் இணைந்துகொள்ளலாம்

https://www.facebook.com/PresidentRajapaksa?fref=ts

Edited by BLUE BIRD

எனது கேள்வி...!

ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது... அந்த நாட்டின் மிக உயர்ந்த பதவியென்பது உலக அபிப்பிராயம்!

அதுவும் அந்தக்காலத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ..அந்தப் பதவிக்குக் கொடுத்த மரியாதை..வெறும் உத்தம அல்லாது.. அதி உத்தம.. என்பதாகும்!

அத்தகைய ஒரு பதவியை அலங்கரிக்கும் வெளி நாட்டுத் தலைவர்கள்.. மீண்டும் வேறு எந்த வழியிலும் அரசியலுக்குள் நுழைய முயற்சிப்பது மிகவும் அரிது!

நீங்கள் எதற்காக மீண்டும்.. வெறும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறீர்கள்?:innocent:

 

நீங்கள் பதிலளிக்க மாட்டீர்கள்!

நானே பதிலையும் எழுது விடுகிறேன்!

நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக....!:grin:

 

அடுத்த கேள்வி.?

பயங்கரவாதம் என்றால் என்ன?

இது பற்றிய உங்கள் பார்வை எப்படி?:oO:

 

இந்தக் கேள்வியை மகிந்தரிட்டை கேக்காட்டியும் அவரது சகாக்களிடம் அடிக்கடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கேட்கினம். எ;ல்லாரும் சொல்லி வைச்சமாதிரி சொல்லிற பதில் அவர் ஓய்வெடுப்பம் எண்டு போனாலும் சனம் விடுகுதில்லையாம். உங்களை விட்டால் நாட்டை ஆள வேறை  ஆக்கள் இல்லை எண்டு வரச் சொன்னதாம். சனத்தினரை வேண்டுகோளைத் தட்ட முடியாமல் தானாம் அவர் வந்தவர்.

 

இதுக்கு அநுர குமார ஒரு பதில் சொன்னவர் இந்த ஆளுக்கும் குடும்பத்திலை எல்லாருக்கும் அதே மாதிரி அவரைச் சுத்தியுள்ள கூட்டத்திற்கும் வழக்கு மேலை வழக்கு எண்டு வரப் போகுதாம். தாங்கள் கூட்டுக்கை போகாமல் இருக்கிறதுக்கு இந்தக் கள்ளக்கூட்டத் தலைவனைக் கொண்டு வந்து இருத்தினால் தான் சரி எண்டு அந்தக் கூட்டம் உசுப்பேத்தி விட்டிருக்காம். அதுக்குத் தான் வெளிக்கிட்டிருக்கிறாராம்.

 

 

உங்கடை அடுத்த கேள்விக்குப் பதில் தமிழன்  தங்களுக்கு பசிக்குது எண்டு கேட்டாலென்ன நாங்கள் சுதந்திரமா மூச்சு விட வேணும் எண்டு கேட்டாலென்ன எல்லாம் பயங்கரவாதத்திற்குள்ளை தான் அடங்கும்.

சிங்களவனிலை யாராவது தமிழன் கேக்கிறது சரிதானே எண்டு சொன்னால் அதுகும் பயங்கரவாதத்திற்குள்ளை அடங்கும்.

பேஷ்புக்கில் கேள்விகளுக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச
[ வியாழக்கிழமை, 23 யூலை 2015, 07:01.35 AM GMT ]
mahinda_001.jpg
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பேஷ்புக் வலைத்தள கணக்கின் மூலம் இன்று பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

ராஜபக்சவிடம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்துடன் அவற்றில் பலவற்றிக்கும் மகிந்த ராஜபக்ச பதிலளித்திருந்தார்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகிந்த ராஜபக்சவின் இந்த கேள்வி. பதில் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். கேள்விகளை அனுப்பிய பலர் மகிந்த பழைய தவறுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவற்றுக்கு பதிலளித்துள்ள அவர், சில தவறுகளை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளதுடன் அதற்கான வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தவறுகள் குறித்து சுய விமர்சனம் செய்துள்ளதாகவும் தவறுகளை திருத்திக் கொள்ள அவற்றை அறிந்து கொள்வது பயனுள்ளது என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வந்தால், அவரை சுற்றியுள்ளவர்களின் ஊழல் மோசடிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பீர்களா என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மகிந்த, அப்படியான ஊழல், மோசடிகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை எனவும் வெளிப்படை தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துடன் அரசாங்க நிர்வாகத்தை முன்னெடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyHRXSVnv0A.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.