Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறந்த குழந்தையை உயிருள்ளதாகக் காட்ட முயலும் கூட்டமைப்பு -இளையவன்னியன்

Featured Replies

இறந்த குழந்தையை உயிருள்ளதாகக் காட்ட முயலும் கூட்டமைப்பு -இளையவன்னியன்

amalrajநீதியின் முன்னால் நடுநிலைமை வகிக்க முடியாது, இன்றைய காலகட்டத்தில் ஈழ அரசியலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதத் தவிர வேறு மாற்று கிடையாது என்கிறார் இளையவன்னியன்.

பத்தி எழுத்தாளர், ஊடகவியலாளர், வானொலி அறிவிப்பாளர், யாழ் பல்கலை முன்னாள் மாணவர் தலைவர்களுள் ஒருவர் என பன்முகம்கொண்ட இளையவன்னியன்   சிறிலங்கா நாடாமன்றத் தேர்தல் தொடர்பாக  நிலவன் வழங்கிய நேர்காணல்:

கேள்வி : 2015 பாராளுமன்ற தேர்தல் உடனே உங்கள் மனதில் எழும் எண்ணம்?

பதில் : போட்டித்தன்மை கூடிய, தெளிவற்ற கலங்கலான ஒரு தேர்தலாக அமைகிறது .

கேள்வி : அதன் அர்த்தம் என்ன?

பதில் : களத்தில் போட்டியிடும் கட்சிகளை பொறுத்தவரையில் போட்டித்தன்மை கூடிய ஒரு தேர்தலாக இருக்கிற அதே கணம், மக்களை பொறுத்தவரையில் தெளிவற்ற ஒரு குழம்பிப்போன அரசியல் சூழ்நிலையில் இந்த தேர்தலை எதிர்கொளுகின்றனர். தெற்கைப் பொறுத்தவரையில் கட்டறுத்த குளுமாடுபோல் சர்வாதிகார போக்கில் சென்ற ஊழல் ஆட்சியை தற்காலிகமாகவேனும் தடை செய்த ரணிலின் கூட்டணியை ஆதரிப்பதா, வெல்லப்பட முடியாதாது என்று கருதப்பட்ட போரை வென்ற சிங்களத்தின் நவீன துட்டகைமுனு என்று கொண்டாடப்பட்ட ஆனால் தமிழர்களின் தீர்மானிக்கும் வாக்குகளால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மகிந்தவை வெல்ல வைப்பதா? என்ற குழப்பமும், வடக்கை பொறுத்தவரையில் எல்லோரும் தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை; பயன்படுத்துகிறார்கள், இந்நிலையில் அந்த சொல்லாடலின் உண்மையான கொள்ளளவினை நடைமுறையில் அரசியலாக கையாண்டு வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பதா? விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்துக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதா என்னும் குழப்பமான சூழல் காணப்படுகிறது.

கேள்வி : தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பயணம் தொடர்பாக?

பதில் : அவர்கள் இணக்க அரசியலை கையாள்வதாக தம்மை வெளிப்படுத்துகிறார்கள், உண்மையில் இலங்கையில் இணக்க அரசியல் என்பது தோற்றுப்போன ஒரு அரசியல் உபாயம், இந்நிலையில் இங்கு இணக்க அரசியல் என்பது ஒரு வகையில் சரணாகதி அரசியலே, இதற்கு மிகச்சிறந்த அண்மைய உதாரணம் சனாதிபதி தேர்தல், எந்த வித பேரம் பேசுதலும் இன்றி “உன்னதமான தலைவரை தெரிவு செய்ய அன்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று சனாதிபதி தேர்தலில் பங்கு கொண்டமையாகும்.

உண்மையில் நடந்து முடிந்த சனாதிபதி தேர்தல் என்பது, சிங்களத்தின் இரு புத்திரர்களுக்கு இடையிலான போர்க்களம், அவர்கள் இருவரும் இரு வேறு கிண்ணத்தில் ஊற்றப்பட ஒரே வகை நச்சு திரவம், அதில் தமிழர்கள் தீர்மான ரீதியாக, பகிரங்கமாக கலந்துகொண்டமை அவ்வளவு உசிதமான காரியமல்ல, உடனடியாக சில நன்மைகள் நடந்தது போல் தோன்றலாம். ஆனால் அதனுள் மோசமான பாதகங்களும் நிறைந்து கிடக்குறது. தமிழர்கள் சிங்களவர்களாலும், மேற்குலகத்தாலும் பயன்படுத்தபட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.

கேள்வி : தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்வு திட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்?

பதில் : சிறிலங்கா திட்டவட்டமாக சொல்லி இருக்கிறது, ஒற்றை ஆட்சிக்குள் தான் தீர்வு என்று, சமஷ்டி என்ற சொல் இல்லாமல் அதிகார பகிர்வு கொண்ட ஒரு தீர்வு திட்டமெனும் போது, அது மாகான சபை அமைப்பை அடியொற்றியதாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது. மாகாணசபை அமைப்பு என்பது “சிறிலங்காவும், இந்தியாவும் முறையற்ற முறையில் குழந்தையை பெற்று, அந்த குழந்தையை பெறும் போதே கொலை செய்து பெற்று, தமிழர்களை பார்த்து இறந்த குழந்தையை கொடுத்து இது உங்களுடைய குழந்தைதான், உயிருள்ள குழந்தை வளர்த்து எடுங்கள் என்று கொடுக்கப்பட்ட ஒன்று”. பிறந்த பொழுதே செத்த குழந்தைய இண்டைக்கும் உயிருள்ள குழந்தை எண்டு கொண்டாடுவதற்கும் ஆட்கள் இல்லாமல் இல்லை.

கேள்வி : இரு தேசம், ஒரு நாடு என்னும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீர்வு திட்டம் யதார்த்தத்துக்கு பொருத்தமானதா?

பதில் : உரிமைபோராட்டத்துக்கு தமிழ் மக்கள் மிக உயர்ந்த விலையை கொடுத்திருக்கிறார்கள், அதற்காக ஓரளவேனும் திருப்திகரமான தீர்வை பெற வேண்டியது அவசியம், இந்நிலையில் தமது சக்திக்கு உட்பட்டு, சிறிலங்காவின் ஆளுகைக்குள் இருந்துகொண்டு, உயர்ந்த பட்ச தீர்வாக எதனை முன் வைக்க முடியுமோ அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன் வைக்கின்றனர். தீர்வையே கூறாத தமிழ் தேசிய கூட்டமைப்போடு பார்க்கும் போது இவர்கள் தீர்வை முன்வைத்து அரசியல் செய்கிறார்கள்.

முள்ளிவாய்கால் பெருந்துயருக்கு வெறுமனே சிறிலங்கா அரசு, கருணா, டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன், என்று தொடரும் தீவுக்குட்பட்ட பட்டியலை சொல்ல முடியாது. அதனை விட பூகோள புவிசார் அரசியலின் புற நிலை தாக்கங்கள் அடிப்படையாகவும் அமைந்தன, சில நாடுகள் நேரடியாக யுத்தத்தில் பங்கு கொண்டன. உதாரணத்திற்கு “என்னோடு பல்கலையில் படித்த நண்பர் ஒருவர் இறுதி யுத்தத்தில் விழுப்புண் அடைந்து கிடந்த போது அவரை வெல்கம் என்று கூறி தூக்கி எடுத்தது ஒரு இந்திய சீக்கிய இராணுவ வீரர்”. ஆக சர்வதேச, பிராந்திய நாடுகளின் புவிசார் நலன்களுக்காக பலியிடபட்டவர்கள் தமிழர்கள். அதே பூகோள புவிசார் அரசியலை கையாள்வதன் ஊடாகத்தான் ஆரோக்கியமான தீர்வு ஒன்றை எட்ட முடியும், மாறாக சிறிலங்கா ஒரு போதும் தமிழர்களுக்கு திருப்திகரமான ஒரு தீர்வை தரப்போவது கிடையாது.

சர்வதேச அரசியலை கையாள்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்றால், தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களின் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததது. இந்து சமுத்திரத்தை எவன் ஆளுகிறானோ அவனே இந்த உலகின் அதிபதி என்னும் உலகளாவிய புவிசார் தத்துவம் சாகாமல் உயிரோடு வாழ்ந்து வருகிறது. ஆக தமிழர்கள் வாழும் பிராந்தியம் எப்போதும் நொதிச்சுக்கொண்டே இருக்கும், நீடித்த ஸ்திரதன்மை என்பது ஒரு போதும் நிலவாது, புவிசார் அரசியலை சரியான முறையில் கையாள்வதன் ஊடாக தமிழர்கள் தமக்கான வாய்ப்புக்களை உருவாக்கி தீர்வை பெற்றுகொள்ள முடியும். ஆகவே இரு தேசம் ஒரு நாடு என்பதும் அசாத்தியமான ஒன்றல்ல.

இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். யதார்த்தத்தை அடிப்படையாக வைத்து தான் தீர்மானங்கள் எடுக்கவேண்டுமாக இருந்தால், எதிர்காலம் தொடர்பாக யாராலும் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அதே கணம் யாதார்த்தம் என்பது அதன் காலத்தின் கொள்ளளவிற்கு உற்பட்டது, ஒருவேளை எதிர்கால யதார்த்தம் தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அனைத்து அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டது, தீர்வே தேவையில்லை என்று உலக நாடுகளும், சிறிலங்காவும் சொல்லுகிறது என்று வைத்துகொள்ளுவோம், அதனை அந்த கால யதார்த்தத்தின் நிலை என்று தமிழர் தரப்பு ஏற்றுகொள்ளுமா?

கேள்வி : உங்கள் பார்வையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்கள் ஆதரவை பெற்று இருக்கிறதா?

பதில் : 2010ம் ஆண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணிய அரோக்கியமான முறையில் விமர்சனம் செய்த பல என்னுடைய நண்பர்களே இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளர்களாகவும், உறுப்பினர்களாவும் மாறி இருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்போடு ஒப்பிடும் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அடிமட்டத்தில் மக்களிடம் இறங்கி வேலை செய்வதற்கான வெளி என்பது குறைவாகவும், தடைகளும், வரையறைகளும் அதிகமாகவும் காணப்படுகிறது. அதற்கு காரணம் சிறிலங்கா அரசு இவர்களை விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக பார்கின்றமையே ஆகும். ஆனாலும் நெருக்குவாரங்களுக்குள்ளும் மக்கள் மயப்படுத்தப்பட்ட பல போராட்டங்களை மக்கள் நலன் சார்ந்து நடாத்தி இருக்கிறார்கள். குறிப்பாக சொல்லப்போனால் 2009 பின் மக்கள் போராட்ட களத்தை திறந்தவர்கள் இவர்களே. இதனால் மக்களோடு களத்தில் நின்று மக்களுக்காக அரசியல் செய்கிறார்கள் என்னும் நற்பெயரை பெற்று இருக்கிறார்கள். அது நிச்சயம் வாக்கு வங்கியில் தாக்கம் செலுத்தும். யாழில் ஒரு ஆசனத்தை நிச்சயம் இவர்கள் பெறுவார்கள் என்று மக்கள் வெளிப்படையாக கதைக்கும் அளவிற்கு அவர்களுக்கு ஆதரவு பெருகி இருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக இப்படியான அரசியலை முன்னெடுக்குமாக இருந்தால் எதிர்வரும் காலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கான ஆதரவு தளத்தை அதிகரித்து கொண்டே போகும்.

கேள்வி : உங்கள் பதில்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக அமைகிறதே?

பதில் : நீதியின் முன்னால் நடுநிலைமை வகிக்க முடியாது, ஈழ அரசியலில் இவர்களை தவிர வேறு மாற்று கிடையாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்ய தவறிய தமிழ் மக்களுக்கான சரியான தேசிய அரசியலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி செய்து வருகிறது. அதனால் அவர்கள் செய்யும் அரசியலை நேர் பெறுமானத்தோடு பார்க்க கூடியதாக இருக்கிறது. அது உங்கள் பார்வைக்கு ஆதரவானதாக தென்படுவதில் தவறில்லை, ஏனெனில் நிஜங்கள் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். தேர்தலின் பின் எவ்வாறான சூழல் அமைய போகிறது?

ரணில் அணி வெற்றி பெற்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக அவர்களை ஆதரிக்கும் ஒரு நிலை உருவாகும். நல்லாட்சி என்று சொல்லப்படுகிற அந்த கோசத்தை வலுப்படுத்த அதனை அவர்கள் செய்வார்கள். மகிந்த அணி வெற்றி பெற்றால் மகிந்தவின் இரண்டாம் வருகையின் அத்தியாயம் ஆரம்பமாகும். மகிந்த எதிர்கட்சியாக அமைந்தால் கூட பலமான ஒரு எதிர்ப்பாளராக இருந்து வருவார். எது எப்படியாயினும் இப்போது நிலவுகின்ற சூழ்நிலையின் அடிப்படையில் மிக விரைவில் இன்னொரு பாராளுமன்ற தேர்தலை இத்தீவு எதிர்கொள்ளும் என்பதே அவதானிப்பாளர்களின் கருத்தாக அமைகிறது. அதேகணம் இலங்கை தேர்தலின் வெற்றிகள் என்பது இனவாத, இனமான அலைகளின் வெற்றியாவே இருந்து வந்திருக்கிறது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள கூடிய ஒன்று.

கேள்வி : ஜனநாயக போராளிகள் தனி ஒரு அலகாக அரசியல் வருகின்றமை தொடர்பாக?

பதில் : “மாண்டால் மாவீரன் தப்பினால் தளபதி”
இதை தவிர போராளிகள் எதையும் தாம் தமக்காக எதிர்பார்த்ததில்லை எஞ்சியதும் இல்லை, உலகில் எந்த மனிதனும் மரணிக்க விரும்புவன் கிடையாது, மரணத்தினூடாக சொர்க்கமே கிடைக்குமென்றாலும் கூட, அந்த மரணத்தை யாரும் தழுவ போவதும் கிடையாது. ஆனால் போராளிகள், யாரும் விரும்பாத மரணத்தை தழுவ, வாழ்வை விட சாவதற்கு தம்மை கடுமையாக தயார்படுத்திக் கொண்டார்கள். தமக்காக அல்ல மக்களுக்காக மண்ணுக்காக. அரசியலுள் பிரவேசிக்கிறார்கள் ஏன்பதற்காக அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது, காயப்படுத்தும் வார்த்தைகளை கையாள்வது கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாத வஞ்சகர்கள் பயன்படுத்த கூடிய வார்த்தையாவே பார்க்க முடியும். இந்நிலை கூட புலிநீக்கம் செய்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கையாலாகத்தனத்தின் பக்க விளைவே. இப்படி ஒரு சூழலை எதிரி உருவாக்கலாம் என்று ஏன் இராச தந்திரிகளால் அனுமானிக்க முடியவில்லை. அதற்கான திட்டங்களை கையாளவில்லை, உங்களின் இராசதந்திரத்துக்காக நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டவர்கள், இன்று எதிரியின் இராசதந்திரத்துக்காக கையாளப்படுகிறார்கள். இதுதான் நிஜம்.

“போராளிகளை நொந்து கொள்வதில் எதுவும் இல்லை”. காலமே உண்மையை உணர்த்தும் மிகப்பெரிய ஆசான். ஆனால் இதையும் கடந்துதான் செல்லவேண்டி இருக்கிறது. கடமையை செய்ய தவறிவிட்டு காலத்தை மட்டும் நம்பி இருக்கும் வல்லவர்கள், தமிழர்களை விட வேறு யாரும் உலகில் உண்டோ

கேள்வி : மாற்றத்துக்காக வாக்களியுங்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி சொல்லும் கோசம் எத்தகையதாக இருக்கலாம்?

பதில் : இதுவரை காலமும் தமிழ் மக்கள் மற்றவரின் மாற்றத்துக்காக தான் வாக்களித்து இருக்கிறார்கள், அவர்களின் வாக்குகள் இராச தந்திர முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகள். உள்ளூர் மட்டுமல்ல உலகளாவிய பூகோள அரசியலின் ஆதிக்க போட்டியாளர்களின் வகிபாகத்தை மாற்றக்கூடியதாக அவர்களின் வாக்குகள் இருந்திருக்கிறது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்களத்தின் மாற்றத்துக்காகவும், சீன அமெரிக்க ஆதிக்க போட்டியின் மாற்றத்துக்காகவும் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் , இதன் போது தமிழர்களுக்கு நிகழ்ந்த ஒரு மிக முக்கியமான மாற்றம் “தமிழ் தேசியம், சிங்கள தேசியத்துள் கரைக்கபட்டதுதான்” அதானால் தான் போல் இருக்கிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறை தமிழ் தேசிய அரசியலை உயிர்ப்புடன் கொண்டு செல்ல மாற்றத்துக்கான மாற்றாக தம்மையும், இந்த கோசத்தையும் முன் வைத்து இருக்கிறார்கள்.

இளையவன்னியன் : பத்தி எழுத்தாளர், ஊடகவியலாளர், வானொலி அறிவிப்பாளர், யாழ் பல்கலை முன்னாள் மாணவர் தலைவர்களுள் ஒருவர்

நேர் கண்டவர் : நிலவன்

http://tamilleader.com/?p=50228

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு பல்கலையில் படித்த நண்பர் ஒருவர் இறுதி யுத்தத்தில் விழுப்புண் அடைந்து கிடந்த போது அவரை வெல்கம் என்று கூறி தூக்கி எடுத்தது ஒரு இந்திய சீக்கிய இராணுவ வீரர்”
  • கருத்துக்கள உறவுகள்

உதென்னடா பெரிய இழவாக் கிடக்கு, அவங்க தான் இறந்த குழந்தைய உயிருள்ளதா காட்ட முயலுறாங்க, இவங்க என்னடாவெண்டால் இல்லாத குழந்தைக்கு பால்பருக்கவெல்லே முயலுறாங்க! ரெம்ப நன்னா இருக்கு!:grin:

  • தொடங்கியவர்

சம் சும் மீண்டும் வந்தால் அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழரின் பிரச்சினை தீராது .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் தீர்வு ஒன்றை எடுப்பதுக்கு எதிரான சக்திகள் அகற்றப்பட்டு இருக்கின்றன. நிச்சயம் நல்லதொரு தீர்வு கிடைக்கும். ஆனால் அது புலிவால்கள் விரும்பிய தீர்வாக ஒருபோதும் இருக்காது இருக்கவும் கூடாது. இலங்கைத் தீவை பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை!

  • தொடங்கியவர்

அந்த ரகசிய தீர்வு அநேகமாய் இதுவாகத்தான் இருக்கும் "சிங்களத்தை படித்து புத்த சமயத்துக்கு மாறினால் காணும் என்கிறிர்களா ?"

அதுதான் தீர்வாக இருக்கும் இன அழிப்பு என்ற சொல்லை எடுத்து தமிழரின் முதுகில் குத்திய சுமத்திரன் தரவளிகள் சந்தோஷ படுங்கள் .

 

 

Edited by spyder12uk

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எங்கே எப்போது சிங்களத்தைப் படித்து புத்த மதத்துக்கு மாறச் சொன்னார்?

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் பிழை சரி செய்யபட்டுள்ளது .

இளையவன்னியனும் ஒரு காக்கை வன்னியன் போல்தான் இருக்கிறார்

அவர் நேரடியாகவே கஜேந்திரன் கோஷ்டிக்கு பிரச்சாரம் செய்யலாம்....மண்டையில மிளகாய் அரைக்க பார்க்கிறார்.
தமிழ் தேசிய முன்னணி தங்கடை கொள்கைய சொல்லுதில்லை....சும்மா கூட்டமைப்பு மீது வாந்தி எடுக்குது..

கூட்டமைப்பின் பெயரில் வாழ்க்கை நடத்தும் குருவிச்சைகள் தான் காஜா அன்கோ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.