Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்மி மிதித்து அருந்ததி காட்டி கட்டிய தாலி யாருக்கு சொந்தம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்?  யாழ் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் வாதப் பிரதி வாதம் ..

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வாதப்பிரதிவாதம் எழுந்தது. நீண்ட விவாததத்தின் பின்னர், திருமணத்தின் அடையாளமாகக் கட்டப்பட்ட தாலியும் கொடியும் விவாகரத்து பெற்ற பெண்ணுக்கே சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டது.  

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான கனகா சிவபாதசுந்தரம், மா.இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டு வழக்கில், 29 ஆம் திகதி புதன்கிழமை நீதிபதி கனகா சிவபாதசுந்தரத்தின் உடன்பாட்டுடன் நீதிபதி இளங்செழியன் தீர்ப்பு வழங்கினார்.

இந்த விவாகரத்து வழக்கு, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, விவகாரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது

அதேநேரம் திருமணத்தின் போது கட்டப்பட்ட தாலிக்கொடி சம்பந்தமாக எழுந்த விவகாரத்தில், தாலி மட்டுமே மனைவிக்கு சொந்தம் எனவும், அதனை வைத்துக் கொண்டு, கொடியை கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பாக எழுந்த வாதப் பிரதி வாதங்களையடுத்து, மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பில் சிறு பகுதியை நீக்கிவிட்டு. அந்தத் தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான கனகா சிவபாதசுந்தரம் மற்றும் மா.இளஞ்செழியன் ஆகியோர் ஏகமனதாக வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பில், நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது:

இந்து. தமிழ் சமயாசார திருமணத்தின் அடிப்படையில் தாலி கட்டி திருமணம் செய்வது வழக்காற்று திருமணமாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது என்பதற்கான ஒரு சாட்சியாகவும் சான்றாகவுமே தாலி கருதப்படுகின்றது. தாலியும் கொடியும இணைந்தது. தாலியை அணிகின்ற கொடி என்பது ஒரு சொத்து அல்ல. அது காலாசார, பண்பாடு பெறுமதியைக் கொண்டது. அதன் பெறுமதி அளவிட முடியாதது. எனவே, தாலியையும் கொடியையும் இரண்டாகப் பிரிக்க முடியாது

 

மிக முக்கியமாக நிறைவேற்றப்படுகின்ற திருமணத்தை உறுதி;ப்படுத்துவதற்காகவே திருமணத்தில் தாலி கட்டப்படுகின்றது. இது தாலித் திருமணமாகும். மஞ்சள் கயிற்றில் மூன்று முடிச்சு போடுவது ஒருவகை தாலித்திருமணமாகும். ஆனால் யாழ்ப்பாணம் இந்து தமிழர் கலாச்சாரம் தங்க நகையில் தாலி கட்டுவதாகும். எனவே தாலி வேறு தாலிக்கொடி வேறு என பிரிக்க முடியாது. விவாகரத்தின் பின்னரும் தாலியும், தாலிக்கொடியும் மனைவியிடமே இருக்க வேண்டும். அதனை விவாகரத்து பெற்ற கணவன் உரிமை கோர முடியாது என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் யாழ் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த, தாலிக்கொடி கணவனுக்கே சொந்தம் என்பதை ரத்துச் செய்தார்

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்ததாவது:

இந்தத் திருமணத்தின்போது சீதனமாக கணவனுக்கு வழங்கப்பட்ட 15 இலட்சம் ரூபாவை, கணவன் மனைவியிடம் திருப்பிச் செலுத்த வேண்டும். திருமணத்தின் பின்னர் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியினால், கணவனுக்கு சீதனம் வழங்கப்படுகின்றது, இங்கு விவாகரத்தின் மூலம் இந்தத் திருமணம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மனைவிக்கு சொந்தமான அந்த 15 லட்சம் ரூபா சீதனப் பணத்தை, கணவன், மனைவிக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்

 

இந்தத் திருமணத்தில் தாலிகட்டும்போது மேலதிகமாக கணவன் பரிசாக அளித்திருந்த முத்துச் சங்கிலி கணவனின் முதுச சொத்தாகும். எனவே, அந்தச் சங்கிலிலய, மனைவி கணவனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்

 

மேலும் திருமணம் செய்து இடையில் விவாகரத்து ஏற்பட்ட படியால் மனைவி நிம்மதியாக பிரிந்து வாழ வேண்டும் என்பதற்காக கணவன் மனைவிக்கு நிரந்தர பிரிமனை பணமாக ஒன்றரை லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்

 

இந்தத்; திருமணத்தின் பின்னர் பிறந்துள்ள ஆண்குழந்தை தாயிடமே வளர்ந்து வருகின்றது. கணவன் அதுசம்பந்தமாக ஆட்சேபணை தெரிவிக்காததனால், அந்தக் குழந்தையின் பாதுகாப்பும் பராமரிப்பும் தாயிடம் ஒப்படைத்து தீர்ப்பளிக்கப்பட்டது

 

நீதிமன்றத் தாக்குதல்: யாழ் மாவட்டத்தின் கலாசார சீரழிவு காடைத்தனம், ரவுடித்தனம் வன்முறை ஆட்டத்தின் உச்சகட்டம் - பிணை மனுவை நீடிய திகதிக்கு நீதிபதி இளஞ்செழியன் ஒத்திவைத்தார்.

யாழ்ப்பணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, யாழ் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களுக்கான 22 பிணை மனுக்கள் மீதான விசாரணையின்போது, நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, யாழ் மாவட்டத்தின் கலாசார சீரழிவு, காடைத்தனம், ரவுடித்தனம், வன்முறை ஆட்டத்தின் உச்சகட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன் அந்த மனுக்கள் மீதான விசாரணைகளை நீடிய திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்

 

இந்த மனுக்கள் வியாழனன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தொகுதி மீதான தாக்குதல் நடத்தியமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியமை, அரச வாகனங்களுக்கு சேதம் எற்படுத்தியமை போன்ற பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த நூ}ற்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களுக்கு யாழ் மாவட்ட நீதிவான் சிவகுமார் ஏற்கனவே பிணை வழங்கி தீர்ப்பளித்திருந்தார்

 

பாரதூரமான குற்ச்சாட்டுக்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட சந்தேக நபர்களி;ன் பிணை மனுக்கள் நீதவான் சிவகுமாரினால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட பிணை தீரப்புக்கு எதிராக 22 பிணை மீளாய்வு மனுக்கள் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுக்கப்பட்டன புங்குடுதீவில் மரணமாகிய வித்யாவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டம் செய்தபோது, சில விசமிகளின் தூண்டுதலால் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தேகநபர்களின் பின்னணி என்பவற்றைக் கவனத்தில்; எடுத்து, பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரினர்

 

நீதிபதிகளின் இதயத்தைத்; தாக்கிய தாக்குதலே நீதிமன்ற தாக்குதல் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், எந்த நீதிமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியதோ, அதே நீதிமன்றத்திற்கு வந்து கருணை காட்டுமாறு கோருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும் என குறிப்பிட்டார்.

 

நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை பாரதூரமான குற்றச் செயலாகும். இந்த பிணை மனுக்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாவமன்னிப்போ, கருணையோ கிடையாது. அவ்வாறு மன்னிப்பளிப்பதோ கருணை காட்டுவதோ என்பது, நீதிமன்றின் மீதும் நீதிபதிகள் மீதும் நம்பிக்கையில்லாத நிலையை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும்.

நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளியாகக் காணப்படும் நபர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக 20 வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அரச ஆதன சொத்தழித்தல் சட்டம் பரிந்துரை செய்கின்றது. அதேநேரம், நீதவான் சிவகுமாருடைய தீர்ப்பில் என்ன சட்ட பிழை விடப்பட்டிருக்கின்றது என்று, அந்த சட்டப் பிழையை முன்காட்டத்தவறியிருப்பதனால் பிணை மனு ஆரம்பித்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்

அப்போது, மன்றில் சந்தேக நபர்களுக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், சந்தேக நபர்களின் உறவினர்கள் நீதி மன்றத்தில் நிற்கின்றார்கள். சந்தேக நபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளரர்கள். எனவே, அவர்களின் வேதனையை கவனத்தில் எடுத்து, பிணை மனுக்களை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யாமல்,  நீடிய தவணை தருமாறு மன்றை கோரினர்;.

 

அதனையடுத்து நீதிபதி தனது கட்டளையில் தெரிவித்ததாவது

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத்தொகுதி மீதான தாக்குதலானது, நீதித்துறை மீதான தாக்குதல் மட்டுமல்லாமல், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு விழுந்த அடியாக மன்று கருதுகின்றது.

 

இந்தத் தாக்குதலானது யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார சீரழிவு, காடைத்தனம், ரவுடித்தனம், மட்டுமல்லாமல், வன்முறையாட்டத்தின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் மற்றைய பாகங்களில் உள்ள மக்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்து மக்களைக் கீழ்த்தரமாகக் கணிப்பிடும் அளவிற்கு நடத்தப்பட்ட தாக்குதலாக அமைந்துள்ளது

 

யாழ் மாவட்டம் கல்வி, கலாசாரம் பாரம்பரியம் என்பவற்றைப் பிரத்தியேகமாகக் கொண்டது. இங்கு வாழும் மக்கள், படித்தவர்கள். பண்புள்ளவர்கள் தமது கலாசாரத்தை மேலோங்க பாதுகாப்பவர்கள் என்பது பொதுவான கருத்தாகும். யுத்த காலத்தில்கூட, போரட்டத்தில் ஈடுபட்ட எந்தத் தரப்பினராலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை நீதிபதிகள் மீதும் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவி;ல்லை. இத்தகைய புனித தன்மை கொண்ட யாழ் மாவட்டத்தின் பெயரைக் கெடுக்கும் வகையிலும் நீதிபதிகளின் மனச்சாட்சியைத் தட்டிப்பார்த்து சோதிக்க முயற்சித்த ஒரு செயலாகவுமே, இந்தத் தாக்குதலை மன்று நோக்குகின்றது

 

ஆர்ப்பாட்டம்  செய்வது ஜனநாயக உரிமை என கூறிக்கொண்டு, வன்முறை பேயாட்டம் ஆடியது மட்டுமன்றி, அந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்தை நோக்கி ஏன் வந்தது? மன்றின் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்பன குறித்து, குற்றப்புலனாய்வின் மூலம் கண்டறிய வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவும் மன்று கருதுதுகின்றது

 

சட்டவாட்சியைப் பரிசோதித்து நீதிமன்றத்தினுடைய சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலான இந்த வழக்கில், தேர்தல் காலத்தில் பிணை வழங்க முடியாது. விரைவாக விசாரணை செய்வதற்கும் பிணை மனுக்களில் விதிவிலக்கான காரணங்கள் எதுவுமில்லை.  இருப்பினும் இயற்கை நீதிக்கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பிரஜையினுடைய கோரிக்கை மனுவை மன்றினால் விசாரணை செய்து தீர்ப்பளிக்க வேண்டியது முக்கியம் என மன்று கருதுகின்றது.  

 

அதேநேரம், பிணை மனுக்களில் நீதிவான் விட்ட சட்டப்பிழை என்ன என்பதும், இவர்களுக்கு, பிணை வழங்குவதற்குரிய விதிவிலக்கான காரணம் என்ன என்பதும் தெரிவி;க்கப்படவில்லை. பிணை வழங்குவதற்கான விசேட காரணம் என்ற அடிப்படையில் உரிய ஆவணங்களும் இந்த மனுக்களில் இணைக்கப்படவில்லை. இருந்த போதிலும் பிரஜைகளின் கோரிக்கைக்கு அமைவாக,  பிணை மனுவை, விசாரணைக்க உட்படுத்தப்பட வேண்டும் என்ற நியதியி;ன் அடிப்படையில் 22 பிணை மனுக்களும் விசரணைக்கு மன்றினால் ஏற்றுக்காள்ளப்படுகின்றது என தெரிவித்த நீதிபதி  செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு விசாரணைகளை ஒத்தி வைத்தார்

 

போதைப்பொருளை ஒழிப்பதற்கான யாழ் குடாநாட்டு மாவட்ட நீதிபதிகளின் நடவடிக்கைகளில்  மேல்நீதிமன்றம் அநாவசியமாகத் தலையீடு செய்ய மாட்டாது - நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு

 

சமூக நலன்களுக்கு விரோதமாக கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருளை அடியோடு இல்லாமல் ஒழிப்பதற்காக யாழ் குடநாட்டு மாவட்ட நீதிபதிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் அநாவசியமாக மேல் நீதிமன்றம் தலையீடு செய்யமாட்டாது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்

 

பெருந்தொகையான 26 கிலோ மற்றும் 141 கிலோ அளவிலான கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமைக்காக, இரண்டு வௌ;வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்; வைக்கப்பட்டுள்ள இரண்டு நபர்கள் தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பிணை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின்போதே அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.  

 

தனது உடைமையில் 26 கிலோ கஞ்சாவை வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தின் கட்டளையின்பேரில் நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  அதேபோன்று 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் பருத்தித்துறை நீதாவனின் கட்டளைக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தின் 83 ஆம் பிரிவின் கீழ் போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்கிற்கு மேல் நீதிமன்றில் மட்டுமே பிணை மனு தாக்கல் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் இந்த இரண்டு நபர்களுக்கும் பிணை வழங்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இரண்டு வௌ;வேறு பிணை மனுக்கள் தாக்கல் செய்யபட்டிருந்தன

இந்த பிணை மனுக்கள் தொடர்பான விசாரணைகள், 29.07.2015 ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றன. இந்த பிணை மனுக்களுக்கு ஆட்சேபணை தெரிவிப்பதாகக் கூறிய அரச சட்டத்தரணி, தனது ஆட்சேபணையை மனு ஒன்றின் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அவகாசம் கோரி, தவணை ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டார்

 

இதனையடுத்து, இந்த பிணை மனுக்கள் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்டவை என்பதுடன், இரண்டு வழக்குகளிலும் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா போததைப் பொருளின் அளவு பிரமாணம் மிக அதிகமானதாகும் என நீதிபதி இளஞ்சசெழியன் சுட்டிக்காட்டிய அவர் மேலும் தெரிவித்ததாவது

 

இந்த இரண்டு வழக்குகளிலும் புரியப்பட்டுள்ள குற்றம் பாரதூரமானது. இத்தகைய குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்க முடியும் என்று சட்டம் பரிந்துரை செய்கின்றது. ஆனால், யாழ் குடாநாட்டில் போதைப்பொருளை அடியோடு அழிப்பதற்கு யாழ் குடாநாட்டு மாவட்ட நீதவான்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். பொலிசார் துப்பறிற்து பொதுமக்கள் வழங்கும் தகவல்களுடன் போதைப் பொருளை உடைமையில் வைத்திருப்பவர்களைக் கைது செய்கின்றார்கள். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை மாவட்ட நீதவான்கள் விளக்கமறியலில் வைத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்கின்றார்கள். அதனால், பாரதூரமான குற்றச்செயல்களான கஞ்சா போதைப் பொருள் வழக்குகளுக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்கி மாவட்ட நீதிமன்றங்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கக் கூடாது

 

போதைப்பொருட்களை இல்லாமல் செய்வதற்காக மாவட்ட நீதிமன்றங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மேல் நீதிமன்றம் உதவியாகவும் உடந்தையாகவும் இருக்க வேண்டுமேயொழிய, உபத்திரமாக இருக்கக் கூடாது

 

போதைப்பொருளாகிய கஞ்சா கடத்துதலும், உடைமையில் வைத்திருப்பதுவும், பாரதூரமான சமூகவிரோதக் குற்றச் செயலாகும். மாணவர்கள், இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை நாசப்படுத்துகின்ற குற்றச் செயலுமாகும். எனவே, இக்குற்றங்களுக்கு இலகுவில் பிணை வழங்க முடியாது. பிணை மனுக்களை விரைவாக விசாரணை செய்யவும் முடியாது என தெரிவித்தார்

 

அத்துடன், இந்த இரண்டு பிணை மனுக்களுக்கும் எதிராக ஆட்சேபணை மனு தாக்கல் செய்ய அரச சட்டத்தரரணி செய்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122467/language/ta-IN/article.aspx

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

தாலி என்பது.. தம்பதிகளுக்கு இடையேயான .. உறவின் அடையாளமே அன்றி வேறு ஒரு விதமான மகிமையும் அதற்கு இருக்குமென நான் நினைக்கவில்லை!

என்றைக்கு அந்த உறவு அறுந்து போகின்றதோ.. அன்றைக்கே தாலியும்.. தனது மகிமையை இழந்து போகின்றது!

எனவே..வெறும் அனுதாப அலைகளுக்கு அப்பால் நின்று நீதிபதிகள் செயல் படுவது அத்தியாவசியமாகின்றது!

எல்லாப் பொருட்களையும் பங்கிடும் விகிதாசாரத்திலேயே தாலியும் கொடியும் பங்கிடப்பட வேண்டும்!

அம்மி.. அருந்ததி..எல்லாம் சாட்சிக்கு ஓடி வர மாட்டார்கள்! அதனால் தான். அவர்கள் சாட்சிக்கு வைக்கப்படுகிறார்கள்!

தாலி கணவனால் மனைவி கட்டப்படும் ஒரு அடிமைச் சங்கிலி/கொடி/விலங்கு. இது அநாவசியமற்ற ஒன்று..  சரி அது எப்பிடி இருப்பினும் ஆணால் பெண்ணுக்க்குக் குடுக்கப்பட்டது அது ஒரு அன்பளிப்பு... அன்பளிப்பைப் திருப்பிப் பெறுவது அழகல்ல ஆணுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கணவனால் மனைவி கட்டப்படும் ஒரு அடிமைச் சங்கிலி/கொடி/விலங்கு. இது அநாவசியமற்ற ஒன்று..  சரி அது எப்பிடி இருப்பினும் ஆணால் பெண்ணுக்க்குக் குடுக்கப்பட்டது அது ஒரு அன்பளிப்பு... அன்பளிப்பைப் திருப்பிப் பெறுவது அழகல்ல ஆணுக்கு. 

அந்த அன்பு தான் தொலைந்து போச்சே!

அந்தத் தாலியைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்... அந்தப் பெண்ணின் மனதில் ஒரு 'நெருடல்' இருந்து கொண்டேயிருக்குமே!:shocked:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.