Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிசாத்துக்கு சொந்தமாக 3000ஏக்கர் காணி: பல மில்லியன் சொத்துக்கள் உள்ளன: சட்டத்தரணி வெளிப்படுத்தினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக  மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் எங்களிடம் உள்ளது என தெரிவித்த வட மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, குறுகிய காலப்பகுதியில் ரிசாத்துக்கு எவ்வாறு பல மில்லியன் ரூபா சொத்துக்கள் கிடைக்கப்பெற்றது எனவும் கேள்வியெழுப்பினார்.

யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்களைக் காட்டி அமைச்சர் றிஷாத் பதியுதீன் பணம் சம்பாதித்து வருவதாகவும் அதனாலேயே வடக்கிலிருந்து  இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது சேவை பெறுனரான, றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் சொத்துக் குவிப்பு தொடர்பில் முறைபாடளித்த குவாதிர் கான் சார்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது தன்னிடம் 4 கோடி  ரூபா கப்பம் கோரியதாக றிஷாத் நாடகம் ஆடுவதாகவும் அரசியல் இலாபம் கருதி வில்பத்து விவகாரத்திலும் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துவதாகவும் இதன் போது அவர் குற்றம் சுமத்தினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
2000 ஆம் ஆண்டு ரிஷத் என்ப்வர் அரசிஒயலுக்கு வரும் போது அவருக்கு சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிளோ அல்லது காணித் துண்டோ இருக்கவில்லை. ஆனல் இன்று அவருக்கு சொந்தமாக மன்னார் தீவில் மட்டும் 3000 ஏக்கர் காணி உள்ளது.

இது அவரது நெருங்கிய உரவினர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தனையும் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பாதிக்கப்பட்டவை.

இதனை விட அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்ருக்கு ரிஷாத்துக்கு சொந்தமான 60 மில்லியன், 49 மில்லியன்  ரூபா பெறுமதியிலான இரு ஆதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் றிஷாத்தின் சொத்துக்களில் ஒரு பகுதியே.

உன்மையில் எமக்கு உள்ள சிக்கல் என்னவெனில் இத்தனை சிக்கல்களையும் அவர் எப்படி இந்த குருகிய காலத்தில் சம்பாதித்தார் என்பதாகும். அது தொடர்பில் எனது கட்சிக் காரரால் கடந்த மார்ச் மாதம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நன்றி - வீரகேசரி:-

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122865/language/ta-IN/article.aspx

ரிஷாத் என்ற திருடன் அரச ஆதரவுடன் அபகரித்த தமிழர் காணிக்கான பத்திரங்கள் அனைத்தும் செல்லுபடியற்றவையாக அறிவிக்கப் படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் 93% ஆய் இருந்தும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்காமையினால் இரெண்டு எம்பிகளை வைத்து கொண்டு வடக்கையே ஆளுகிறான் ரிசாத்.

இந்த முறை வன்னியில் முண்ணணி வாக்குகளை பிரிப்பதால், ரிசாத்துக்கு 3 சீட் கிடைகும். ஒரு கபினெட் எம்பி, இரெண்டு ராஜாங்க அமைச்சர்.

அடுத்த ஐந்து வருடத்தில் மன்னாரில் தமிழர் 3ம் இனக்குழு. அடுத்து வவுனியா பின் முல்லைத்தீவு.

ஒரு நாடு, இரு தேசம், சுய நிர்ணயம், திம்பு, தும்பு என்று நம் தலைவர்கள் நீட்டி முழக்கி கொண்டே இருப்பார்கள். 

இன்னும் 10-20 வருடத்துக்குப் பின் எல்லாம் அடங்விடும். யாழ்பாணமும் யாழிஸ்தான் ஆகிவிட்டிருக்கும்.

புலத்தில் அப்போதும் தமிழ ஈழம் மீட்க நிதி சேகரிப்பு ஜரூராக நடக்கும்.

தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் மொக்குக் குணமுண்டு.

இதற்கு உங்களின் தீர்வென்ன ? சிங்களத்துடன் சேர்ந்து 4 ராஜாங்க அமைச்சர், 2 துணையமைச்சர் பதவிகள்...............???

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, மாறாக முதலில் மாகாணசபைக்கு காணி பொலீஸ் அதிகாரம் பின் மத்தியில் கபினெட் அந்தஸ்துள்ள புனர் நிர்மாணம் உட்பட்ட 3 அமைச்சுகள்.

தொடர்ந்தும் சமஸ்டி நோக்கி காய்நகர்த்தல்.

தொண்டமான்/ அஸ்ரப் பாணி அரசியல் தான் எம் இருப்பை தக்க வைக்க உடனடியாகத் தேவை.

மூண்ணணியின் அரசியல் எம்மை விரைவில் 3ம் இனக்குழுவாக் மாற்றும்.

மாகாணசபைக்கு காணி மற்றும் போலீஸ் அதிகாரம் கிடைத்துவிடும் என்று நம்புகிறீர்களா? என்னைப் பொறுத்தவரையில் மாகாணசபைக்கு இந்த இரண்டு அதிகாரங்களும் கிடைப்பதும் ஒன்றுதான், சிங்களவர்கள் சமஷ்ட்டிக்கு ஒத்துக்கொள்வதும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த இரண்டுமே சிங்களத்தைப் பொறுத்தவரையில் தமிழர்களின் தனியாக பிரிந்து போவதற்கான முயற்சி என்றுதான் பார்க்கிறார்கள். 

நீங்கள் சொல்வதுபோல மாகாணசபைக்கான அதிகாரங்கள் இருந்தாலே இப்போதைக்குப் போதுமானதென்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த அதிகாரங்களைத் தருவோம் என்று எந்தச் சிங்களத் தலைவர்கூட இதுவரை ஒத்துக்கொள்ளவில்லையே? அவர்கள் ஒத்துக்கொள்வதற்கு முதலில் அவர்களின் சமூகம் ஒத்துக்கொள்ள வேண்டுமே? சமஷ்ட்டி, மாகாணசபைக்கு முழுதான அதிகாரங்கள் என்றவுடனேயே அவர்கள் பிரிக்கப் போகிறார்கள், தனியீழம் கேட்கிறார்கள் என்றல்லவா சன்னதம் ஆடுகிறார்கள்?

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்கள் தாமாக முன்வந்து எமக்கென்று ஒரு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை. அதிலும் யுத்தத்தில் தமிழினத்தின்மேல் முழுதான வெற்றியொன்றை ஈட்டிக் கொண்டபின் அதைத் தரவேண்டிய எந்த அவசியமும் அவர்களுக்கில்லை. ஆகவே, முன்னர் இருந்த நிலையைக் காட்டிலும் எமது பேரம்பேசும் வலு நன்றாகவே நலிவடைந்திருக்கிறது.

ஒரேவழி சர்வதேச அழுத்தம் ஒன்றின் மூலமான தீர்வுதான். ஆனால் எப்படியென்றுதான் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அழுத்தம் ஒரு மண்ணையும் தராது பாருங்கோ. மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவது மட்டும்தான் சர்வதேச அழுத்தத்தின் பங்கு. தீர்வு எண்டால் சிங்களவன் இந்தியாவோடு பேசித்தான் பெறமுடியும்.

 "சமஷ்ட்டி, மாகாணசபைக்கு முழுதான அதிகாரங்கள் என்றவுடனேயே அவர்கள் பிரிக்கப் போகிறார்கள், தனியீழம் கேட்கிறார்கள் என்றல்லவா சன்னதம் ஆடுகிறார்கள்?"

இவர்களிடம் போய் ஒரு நாடு இருதேசம் என்றால் எடுபடுமா? இதுக்கு முஸ்லீம்கள் தயாரா? எந்த நாடாவது இது நல்ல தீர்வு என்று ஆதரவு சொல்லியுள்ளதா?

மாகாணசபைக்கு பொலீஸ் காணி அதிகாரம் எடுக்கவே ரொம்ப கஸ்டப் படவேண்டி வரும்.

முண்ணனி வெண்டால் - சிங்களம் புலிப் பூச்சாண்டி காட்டியே எல்லாத்தையும் ஊதி நூத்துவிடும்.

தமிழர்கள் 93% ஆய் இருந்தும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்காமையினால் இரெண்டு எம்பிகளை வைத்து கொண்டு வடக்கையே ஆளுகிறான் ரிசாத்.

இந்த முறை வன்னியில் முண்ணணி வாக்குகளை பிரிப்பதால், ரிசாத்துக்கு 3 சீட் கிடைகும். ஒரு கபினெட் எம்பி, இரெண்டு ராஜாங்க அமைச்சர்.

அடுத்த ஐந்து வருடத்தில் மன்னாரில் தமிழர் 3ம் இனக்குழு. அடுத்து வவுனியா பின் முல்லைத்தீவு.

ஒரு நாடு, இரு தேசம், சுய நிர்ணயம், திம்பு, தும்பு என்று நம் தலைவர்கள் நீட்டி முழக்கி கொண்டே இருப்பார்கள். 

இன்னும் 10-20 வருடத்துக்குப் பின் எல்லாம் அடங்விடும். யாழ்பாணமும் யாழிஸ்தான் ஆகிவிட்டிருக்கும்.

புலத்தில் அப்போதும் தமிழ ஈழம் மீட்க நிதி சேகரிப்பு ஜரூராக நடக்கும்.

தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் மொக்குக் குணமுண்டு.

இதையே நான் சிலகாலத்துக்கு முன்னர் சொன்னே, இருந்து மகிந்ததான் வேணுமாம் எண்டு அணி.

அது முந்தா இப்ப இடிக்காத ஒன்றுக்கு கூப்படாடு.

இன்னும் ஒரு கொஞ்சகாலத்துக்கு அதுக்கு பிறகு எல்லாம் சிங்கள மயமாயிடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.