Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எண்ணம் கொண்டவர்கள் இளைஞர்களே : வடக்கு முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் இளைஞர்,யுவதிகளாகத் தான் இருப்பார்கள்.வயதிலே இருப்பவர்கள் சமுதாயத்தை இருக்கும் விதத்திலேயே கொண்டு நடத்தவே சிந்திக்கின்றார்கள்.சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.ஆகவே சமுதாயத்தில் மறுமலர்ச்சியை  கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் இளைஞர்களே இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.
 
 
இன்று வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜனநாயகத்தின் முகவரி தேடும் இளையோரின் சங்கமத்தினால் முதலமைச்சருக்கு 25 கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரகடனம் முன்வைக்கப்பட்டது.அதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இளம் சமூகத்தினர் அரசியலுக்கு வருவது தொடர்பில் உங்கள் கருத்து என்றவாறு கேள்வியை எழுப்பினார்.அந்தக் கேள்விக்கு விடையளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையிலே 70 வயதிற்கு மேற்பட்டவர்களே தலைமைப் பொறுப்பு வகிக்கின்றார்கள். அடுத்த கட்ட மாற்றமாக இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேற்கப்பட வேண்டியதொன்று. 
 
எனவே சமுதாயத்திலும்,தலைமைத்துவத்திலும் மாற்றத்தை கொண்டு வருவதுடன் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் சிந்தனை ஆற்றல் இளைஞர்கள் மத்தியில் தான் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார். 

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=469334193712823749#sthash.jI67J8XQ.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்டமைப்பில் எல்லோரும் மனதால் இளைஞர்களாக உள்ளார்கள்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எண்ணம் கொண்டவர்கள் இளைஞர்களே : வடக்கு முதல்வர்

முதல்வர் மக்களுக்கு வரும் காலம் சம்பந்தமாக ஏதோ சொல்லவருகிறார்

புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல.... 

தன்னை இளைஞர் என்று நினைக்கின்றாரோ.:grin: 

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை இளைஞர் என்று நினைக்கின்றாரோ.:grin: 

தன்னையும் சேர்த்துத்தான்

எல்லோரும் 70க்கு மேலே என்கிறார்

உங்களுக்கு குண்டக்க

மண்டக்க என்று பழகிப்போச்சு.. :grin::grin:

அவரது இளமையில் முப்பது வருடங்கள் போராட்டம் நடக்கும்போது எங்கே  இருந்தார் ?

பென்சன் எடுத்துவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டு இப்படியெல்லாம் கதை விட கூடாது அப்போதே ஒரு இளைஞருக்கு வழி விட்டு இதை சொல்லியிருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அவரது இளமையில் முப்பது வருடங்கள் போராட்டம் நடக்கும்போது எங்கே  இருந்தார் ?

பென்சன் எடுத்துவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டு இப்படியெல்லாம் கதை விட கூடாது அப்போதே ஒரு இளைஞருக்கு வழி விட்டு இதை சொல்லியிருக்கலாம் .

அவர் வரமாட்டன்

எனது பென்சன்  வாழ்வை வாழப்போறன் என்று தான் சொன்னவர்

நமக்குத்தான் வேறு ஆட்கள் கிடைக்கல..

இழுத்துவந்தோம்...

இப்படி என்றால் அப்படி

அப்படி என்றால் இப்படி என்று பேசுவது நாகரீகமல்ல..

இது கவுண்டமணி செந்தில் திரையுமல்ல...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.