Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கிலப்பெயர்கள் சூடும் கிறிஸ்தவ தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் எந்த மதத்தையும் கும்பிடலாம். கும்பிடாமல் நாஸ்திகராகவும் இருக்கலாம். இது அவர் அவர் விருப்பம். ஆனால் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த பல தமிழர்கள் ஆங்கிலப் பெயர்கள் சூடுவதினால் அவர்களது பெயர்களை வைத்து இவர் தமிழரா அல்லது வேறு இனத்தவனா என்று கேட்கத்தோன்றுகிறது. ஏன் இவர்கள் தமிழ்ப் பெயர்கள் சூடுவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உங்களுக்கு என்னாச்சு? இது எல்லாம் பகுத்தறிவில், அல்லது தமிழ்பற்றில் கிடையாது. தமிழ்மொழி வளர்ப்பது என்பது ஆரியப் பெயர்களை எதிர்ப்பது மட்டும் தான். நீங்கள் என்னடா என்றால் இத்தனை வயதாச்சு, அது கூடத் தெரியாமல் இருக்கின்றீர்கள்!

கந்தப்பு! உங்களுக்கு விடயம் சரியாக விளங்கவில்லை

மகாலிங்கம் என்ற பெயர் கொண்ட ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்ற பொழுது, அவர் தன்னுடைய பெயரை மாற்றுகிறார்.

வடமொழிப் பெயர்கள் இந்துக் கடவுள்களின் பெயர்களை கொண்டிருப்பதால், மதம் மாறுகின்ற பொழுது பெயரை மாற்ற வேண்டிய தேவை எழுகிறது.

அத்துடன் ஏற்கனவே வேற்று மொழியாகவிய வடமொழிப் பெயரைக் கொண்டிருப்பதால் அவருக்கு இன்னும் ஒரு வேற்று மொழிப் பெயரை மாற்றுவது தவறு என்றும் தெரியவில்லை.

ஆனால் நல்ல தூய தமிழ் பெயர்களை வைத்திருந்தால், இந்த பெயர் மாற்ற வேண்டிய தேவையே வராது. உதாரணத்திற்கு "தூயவன், மலரவன்" போன்ற பெயர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை எந்த மதத்திற்கு போனாலும் வைத்துக் கொள்ளலாம்.

காரணம் தூய தமிழ் பெயர்கள் மொழியின், இனத்தின் அடிப்படையிலேயே வைக்கப்படுகின்றன. மதத்தின் அடிப்படையில் அல்ல.

ஆகவே இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு நாம் இனியாவது நல்ல தமிழ் பெயர்களை வைப்பதுதான்.

கந்தப்பு! உங்களுக்கு விடயம் சரியாக விளங்கவில்லை

மகாலிங்கம் என்ற பெயர் கொண்ட ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்ற பொழுது, அவர் தன்னுடைய பெயரை மாற்றுகிறார்.

வடமொழிப் பெயர்கள் இந்துக் கடவுள்களின் பெயர்களை கொண்டிருப்பதால், மதம் மாறுகின்ற பொழுது பெயரை மாற்ற வேண்டிய தேவை எழுகிறது.

அத்துடன் ஏற்கனவே வேற்று மொழியாகவிய வடமொழிப் பெயரைக் கொண்டிருப்பதால் அவருக்கு இன்னும் ஒரு வேற்று மொழிப் பெயரை மாற்றுவது தவறு என்றும் தெரியவில்லை.

ஆனால் நல்ல தூய தமிழ் பெயர்களை வைத்திருந்தால், இந்த பெயர் மாற்ற வேண்டிய தேவையே வராது. உதாரணத்திற்கு "தூயவன், மலரவன்" போன்ற பெயர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை எந்த மதத்திற்கு போனாலும் வைத்துக் கொள்ளலாம்.

காரணம் தூய தமிழ் பெயர்கள் மொழியின், இனத்தின் அடிப்படையிலேயே வைக்கப்படுகின்றன. மதத்தின் அடிப்படையில் அல்ல.

ஆகவே இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு நாம் இனியாவது நல்ல தமிழ் பெயர்களை வைப்பதுதான்.

பீட்டர் பிலிப்ஸ் எல்லாம் தமிழ் பெயர் என்று நம்புவோம்

ஏன் கிளிண்டன் கூட தமிழ் பெயர் தான் :P

  • கருத்துக்கள உறவுகள்

மகாலிங்கம் என்ற பெயர் கொண்ட ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்ற பொழுது, அவர் தன்னுடைய பெயரை மாற்றுகிறார்.

வடமொழிப் பெயர்கள் இந்துக் கடவுள்களின் பெயர்களை கொண்டிருப்பதால், மதம் மாறுகின்ற பொழுது பெயரை மாற்ற வேண்டிய தேவை எழுகிறது.

அத்துடன் ஏற்கனவே வேற்று மொழியாகவிய வடமொழிப் பெயரைக் கொண்டிருப்பதால் அவருக்கு இன்னும் ஒரு வேற்று மொழிப் பெயரை மாற்றுவது தவறு என்றும் தெரியவில்லை

யேசுராஜ், மேரியின் பெயரை வைத்து மரியா, திரேஸ்மேரி என்ற எல்லாம் பெயர் வைத்தால் அது எல்லாம் மதம் சார்ந்த பெயர்களல்ல! யாருக்குப் பூச்சுத்துகின்றீர்கள். ;)

நான் சொல்வது உண்மையிலேயே உங்களுக்கு வளங்கவில்லையா?

மகாலிங்கம் என்ற பெயரை வைத்த ஒருவர் பீட்டர் என்று பெயர் மாற்றுவதில் புதிய தவறு ஒன்று நிகழ்ந்து விடப் போவதில்லை.

வேறோரு மொழியில் இருந்து வேறொரு மொழிக்கு பெயர் மாறுகிறது.

ஏற்கனவே தவறு செய்தவன் மீண்டும் அதே தவறை செய்கிறான். இரண்டு தவறுகள்

மதம் மாறுகிறான் (ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்கு போகிறான்)

பெயரை மாற்றுகிறான் (வடமொழியில் இருந்து ஐரோப்பிய மொழிக்கு)

ஆனால் ஒரு வகையில் அவன் பெயரை மாற்றுவது தவறு இல்லை.

சமஸ்கிருதம், லத்தின், கெர்மானிய மொழிகள், செல்டிக் எல்லாமே ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்று மொழியியலாளர்கள் நிறுவி உள்ளார்கள். ஆகவே சமஸ்கிருதப் பெயர் உள்ளவன் லத்தீன் மொழியில் பெயர் வைப்பதில் தவறு இல்லை.

ஆகவே தூய தமிழில் பெயரைக் கொண்டிருக்கின்ற ஒருவன் தன்னுடைய பெயரை மாற்றுவதைத்தான் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேடிக்கை சபேசன்! :P குப்பையில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்படமாட்டேன் என்கின்றீர்ள். அதே குப்பை தானே உங்களின் பார்வையில் இந்து மதம். அப்படியிருக்க அந்தக் குப்பையில் ஏன் கை வைக்கின்றீர்கள். ( சற்று நேரத்துக்கு முன்பு தான், இந்து மத்தில் உள்ளவர்களைப் பிரிப்பேன் என்று வேறு சவால் விட்டீர்கள்).

எமக்கு ஏற்ற விதத்pல் கொள்கைகளை மாற்றாதீர்கள் சபேசன். அது உங்களின் கொள்கையில்லாத்தன்மையை அடையாளப்படுத்துகின்றது.

உங்களுக்கு உண்மையிலேயே என்னுடைய தமிழை விளங்குவது கடினமாக உள்ளது.

உங்களுக்கு புரிகிற மாதிரி என்னால் எழுத முடியவில்லை என்று நினைக்கிறேன்.

நான் எழுதியதை நீங்கள் தெளிவாக வாசித்து விளங்கி இருந்தால், இப்படி சம்பந்தம் இல்லாத பதில்களை எல்லாம் தந்து கொண்டிருக்க மாட்டீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று உங்களுக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. அல்லது மழுப்புகின்றீர்கள்.

ஆரியப்பெயர் வைத்தவன், லத்தினிலோ, அல்லது பிரிதொரு மொழியிலேயே பெயர் வைக்கலாம். தப்பில்லை என்கின்றீர்கள். எனென்றால் எல்லாம் குப்பை. தமிழில் பெயர் வைத்தவன் குறித்தே கவலைப்படுகின்றேன் என்கின்றீர்கள்.

அதே நீங்கள் தான் குப்பைமொழிகளில் ஒன்றான ஆரியப் பெயர்களுக்கு எதிராகக் கொந்தளிக்கின்றீர்கள். ஆனால் லத்தீன் பெயர்களுக்கு ஏன் கொந்தளிக்கவில்லை என்பது தான் எம் கேள்வி. எனி மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்.

உங்களுக்கு விளங்குகின்ற மாதிரி சொல்ல முயற்சிக்கிறேன்.

ஒருவன் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்திருக்கிறான்.

ஆனால் அவன் தினமும் ஒரு ஹிந்திக்காரியிடம் போய் வருகிறான்.

ஒரு நாள் அவன் ஹிந்திக்காரியிடம் போவதை விட்டுவிடுகிறான் ஆனால் ஒரு வெள்ளைக்காரியிடம் போகத் தொடங்குகிறான்.

நான் அவன் தமிழ் மனைவியை விட்டுவிட்டு வேறு பெண்ணிடம் போனது தவறு என்கிறேன்.

நீங்கள் ஹிந்திக்காரியை விட்டு வெள்ளைக்காரியிடம் போனது தவறு என்கிறீர்கள்.

அப்பொழுது நான் சொல்கிறேன்; அவன் ஹிந்திக்காரியிடம் போனது சரி என்றால், வெள்ளைக்காரியிடம் போனதும் சரிதான் என்று.

அதாவது ஹிந்திக்காரியிடம் போன பொழுது அதை ஆதரித்த நீஙகள், இப்பொழுது வெள்ளைக்காரியிடம் போவது குறித்து மட்டும் குற்றம் சாட்டுவது தவறு என்று சொல்கிறேன்.

ஆகவே தமிழ் மனைவியிடம் இருந்து விடுவது சரியானது என்கிறேன்.

அப்பாடா.....ஒரு மாதிரி விளங்கப்படுத்தி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது நான் சொல்கிறேன்; அவன் ஹிந்திக்காரியிடம் போனது சரி என்றால், வெள்ளைக்காரியிடம் போனதும் சரிதான் என்று.

அதாவது ஹிந்திக்காரியிடம் போன பொழுது அதை ஆதரித்த நீஙகள், இப்பொழுது வெள்ளைக்காரியிடம் போவது குறித்து மட்டும் குற்றம் சாட்டுவது தவறு என்று சொல்கிறேன்.

ஹந்திக்காரியிடம் போனது தவறு என்று புறப்பட்டதே நீங்கள் தானே! அப்போது நாங்கள் யாரிடம் போனது பற்றிப் பேசாமல் தானே இருந்தோம். ;)

நீங்கள் இப்போது என்னடா என்றால் ஹந்திக்காரியிடம் போனதை மட்டுமே கண்டிக்கின்றீர்கள். ஹந்திக்காரியைப் பற்றி அசிங்கமாக வேறு பேசுகின்றீர்கள். நாங்கள் என்ன சொல்கின்றோம் என்றால் ஹந்திக்காரியிடம் போனது தப்பு என்று நீங்கள் சொன்னால், வெள்ளைக்காரியிடம் போனதும் தப்பு எண்டு சொல்லுங்கோ! ஏன் பாரபட்சமாக நடக்கின்றீர்கள் என்று தான் கேட்கின்றோம்.

நான் தமிழ் மனைவியுடன் இரு என்று சொல்கிற பொழுதே, வேறு பெண்ணுடன் போனது தவறு என்று சொல்லி விடுகிறேன். வேறு பெண் ஹிந்திக்காரியாக இருந்தாலும், வெள்ளைக்காரியாக இருந்தாலும் தவறு தவறுதான்.

ஆனால் நீங்கள் ஹிந்திக்காரியிடம் போவதை மறைக்க வெள்ளைக்காரியிடம் போகின்ற விடயத்தை தூக்கிப் பிடிப்பது நேர்மையற்ற செயல்.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருகிறேன் (இதே பாணியில் தொடர்ந்தால் கருத்துக்கள் நீக்கப்படும் அபாயம் உண்டு)

நாம் அதிகமாக இந்துமதம் பற்றியும், வடமொழி பற்றியும் கதைப்பதற்கு காரணம் பற்றி பல முறை சொல்லி உள்ளேன்.

நான் பாகிஸ்தானில் பிறந்திருந்தால், என்னுடைய சமூகம் இஸ்லாமிய சமூகமாக இருந்திருந்தால், நான் இஸ்லாமில் உள்ள குப்பைகள் குறித்துத்தான் பேசி இருப்பேன்.

பங்களதேசில் சில காலத்திற்கு முன்பு ஒரு பெண் எழுத்தாளர் (பெயர் மறந்து விட்டது) இஸ்லாம் மதம் குறித்து எழுதி, பல பிரச்சனைகளை சந்தித்தார். அவரிடம் போய் நீஙகள் ஏன் யூத மதம் குறித்து பேசவில்லை என்று கேட்க முடியுமா?

நான் இந்து மத முறையில் வளர்க்கப்பட்டேன். என்னை சுற்றி உள்ள தமிழ் சமூகம் இந்து மதத்தை கடைப்பிடிக்கிறது. ஆகவே நான் என்னுடைய சமூகம் குறித்துத்தான் பேச முடியும்.

இன்னும் ஒன்று!

உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள்.

ஏன் திருடுகிறீர்கள் என்று கேட்டால், பீட்டரும் திருடுகிறானே என்று பதில் சொல்லாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் எந்த மதத்தையும் கும்பிடலாம். கும்பிடாமல் நாஸ்திகராகவும் இருக்கலாம். இது அவர் அவர் விருப்பம். ஆனால் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த பல தமிழர்கள் ஆங்கிலப் பெயர்கள் சூடுவதினால் அவர்களது பெயர்களை வைத்து இவர் தமிழரா அல்லது வேறு இனத்தவனா என்று கேட்கத்தோன்றுகிறது. ஏன் இவர்கள் தமிழ்ப் பெயர்கள் சூடுவதில்லை?

இப்போதிய காலகட்டத்தில் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த தமிழர்கள் மட்டும் ஆங்கில பெயர்கள் சூட்டுவது இல்லை. மற்ற சமயத்தோரும் அப்படித்தான் வெளிக்கிட்டிருக்கினம் கந்தப்பு சார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போட்டியில் சரவணன்( முருகனின் மறுபெயர்) என்ற பெயர் உடையவரும்,ரிச்சாட் என்ற பெயர் உடையவரும் பங்கேற்றார்கள். இவர்கள் இருவரும் ஈழத்தில் பிறந்தவர்கள்.

இப்பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு இப்போட்டியில் எத்தனை தமிழர்கள் போட்டியிட்டார்கள் என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

ம்ம்ம் கந்தப்பு எனக்கும் உங்களுக்கும் இந்த பிரச்சனை இல்லை ;)

இங்கு பலர் அப்படித்தான்..

எங்கு சென்றாலும் பார்த்தால் வெள்ளையர்களின் பெயர்கள்..ஆனால் பார்த்தால் !!!

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்களின் இயலாமையை இந்த நேரத்தில் புரிந்து கொள்கின்றேன். தமிழ்மொழியில் பெயர் வைக்க வேண்டும் என்று, ஆரியப் பெயர்களை மட்டுமே எதிர்த்த இந்த நேரத்தில் வேறுவழியில்லாமல் வாதத்துக்காக, அதுவும் நேரடியாகச் சொல்லமுடியாமல் கிறிஸ்தவப்பெயர்களை வைப்பது என்று ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டீர்கள். என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

பெயர் வைக்கும் விடயத்தில், என்றைக்குமே தமிழ்பெயரை எதிர்த்தது கிடையாது. ஆனால் அதைச் செயற்படுத்துவது என்பது அடிநாதத்தில் இருந்தே வரவேண்டும் என்றே சொல்கின்றேன். சபேசன் என்ற ஆரியப்பெயரை உங்களால் பெற்றோரைச் சாட்டி எவ்வாறு மாற்ற முடியமல் போகின்றதோ, அவ்வாறே ஒவ்வொருவரும் ஆயிரம் காரணங்களைக் கூறுவார்கள்.

நீங்களும் சரி, மற்றவர்களும் சரி, ஆரியம் என்று எதிர்ப்பவர்கள் மற்றய இனத்தின் சாயலை எதிர்ப்பதில் என்பது தான் எங்களுக்குச் சந்தேகத்தைத்த தருகின்றது. கிறிஸ்தவர்களோ, முஸ்லீம்களோ கணிசமான அளவு எம்மத்தியில் இருக்கும்போது, இந்து மதத்தை மட்டுமே, ஏன் இந்தத் தலைப்புப் போட்டு கந்தப்பு கேட்கும் வரைக்கும் யாரிடமும் விருப்பத்தோடு அது பற்றிய விவாதத்துக்கு மனம் வரவில்லை. அப்படித் தலைப்பைப் போட்டவுடன், சலாப்பு பதில்களாகவே வருகின்றது.

ஆரிய எதிர்பபை தமிழ் உணர்வு என்ற விடயத்துக்குள் உட்புகுத்தப் பார்க்கின்றீர்களா என்ற சந்தேகம் வருகின்றது.

சந்திரிக்கா அரசு ஒரு காலத்தில் நீலன் திருச்செல்வம், பிரீஸ் உருவாக்கத்தில் ஆன, தீர்வுப் பொதியை வைத்தது. அதை அப்போது விடுதலைப்புலிகளும் எதிர்த்தார்கள். ஜதேகாவும் எதிர்த்தது. திருகோணமலை, மற்றும் பலாலி போன்ற முக்கிய நகரங்கள் இலங்கையரசின் கீழ் கொண்டு வருவது உற்பட பல இடங்களில் தமிழரின் வாழ்வாதாரத்தை அடியோடு பறிக்கும் திட்டம் எனப் புலிகள் எதிர்த்தார்கள். ஆனால் ஜதேக தமிழருக்கு சொற்பான தீர்வும் போகக் கூடாது என்பதற்காக, அன்று பாராளுமன்றத்தில் அதைக் கிழித்து எறிந்தது. இதில் இரண்டு பேரும் எதிர்த்தார்கள் என்பதற்காக இரண்டு பேரும் ஒரே கொள்கையுடையவர்கள் என்று சொல்ல முடியுமா?

அவ்வாறு தான் உங்களின் ஆரிய எதிப்பு குறித்து கருத வேண்டியுள்ளது.

தமிழ்மொழியின் வளர்ச்சி பற்றிக் கதைப்பது என்ற பெயரில் வெறுமனே ஆரிய எதிர்ப்பில் மட்டுமே தங்கியிருப்பதன் பெயர் மொழி வளர்ச்சிக்கான செயற்பாடல்ல. அது உண்மைத்தன்மையோடு வரவேண்டும்.

------------------------------------------

தஸ்லீமா நஸ்ரின் பற்றிச் சொல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அவர் சரியானவரா என்று எனக்குத் தெரியாது.அவராகட்டும், சாத்தான்களின் வேதம்

எழுதிய சல்மன் ருஸ்டி ஆகட்டும். யாருமே சரியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் மேலைத்தேய திறந்த உடலுறவுக்கொள்கையைக் கொண்டவர்கள்.

தமிழ்மொழி என்பது ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் வாழும் மக்களுக்குப் பொதுவானது. அது கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் பௌத்தர் என்று அனைவரும் பொதுவாகப் பேசும் நிலையில் உள்ளது. அப்படியிருக்க கணிசமாக உள்ள அந்தச் சமுதாயத்தை தமிழர்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

திருத்தம் என்று புறப்பட்டால் அனைவரையும் சமத்துவமாகத் தானே அணுக வேண்டும். ஏன் அந்தச் சமுதாயத்தவர்களை தமிழரில்லை என்று ஒதுக்குகின்றீர்களா?

பீட்டரும் திருகின்றான். ஆனால் என்னை மட்டும் குற்றவாளி என்று பிடிச்சால் அது தப்புத் தானே! அத்தோடு பீட்டர் உங்களுக்கு கைலஞ்சம் தாருகின்றானோ என்ற சந்தேகம் வரவும் அந்த இடத்தில் இடமுண்டு.

கிறிஸ்தவ தமிழர்களையும், இஸ்லாமிய தமிழர்களையும் குறை சொல்லாதையுங்கோ... பிறகு அவர்களை எங்களோட இருந்து பிரிக்கிறதாய் சிலர் சொல்லக் கூடும்...!

தமிழர் பொதுமுறை, வரலாறு என்பதுக்குளே இருந்து அவர்கள் எப்போதும் வெளியிலேயே நிக்கிறார்கள்... அவர்களாய் உள்ள வரட்டுக்கும் அது வரைக்கும் தமிழருக்கு மொழி ரீதியான தொடர்பு மட்டும்தான் அவர்களுடன் எங்களுக்கு இருக்கிறது...!

தமிழர்கள் மத்தியில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள், எத்தனை வீதம் இஸ்லாமியர் என்று உங்களுக்கு தெரியுமா?

அதை விடுங்கள்!

நீங்கள் தமிழர்களின் பெயர்கள் வேற்று மொழியில் இருப்பதற்கான அடிப்படைக் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்!

அதை உங்களுக்கு புரிய வைப்பதற்குத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

தூய தமிழில் இருந்து தமிழ் பெயர்கள் முதலில் வடமொழிக்குத்தான் மாறின. அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. ஆகவே பிரச்சனை எங்கு ஆரம்பமானதோ, அதை சரி செய்தால், மற்றைய பிரச்சனைகள் தானாக தீர்ந்து விடும்.

அதுவும் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற மதங்களிலேயே, தமிழ் மொழி எதிர்ப்பை அதிகமாக கொண்ட மதமாக இந்து மதமே இருக்கிறது. தமிழ் மொழிக்கு மாற்றாக வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை திணிக்கிறது.

கிறிஸ்தவர்கள் தமிழில் வழிபாடாவது செய்கிறார்கள். அவர்களிடம் அவர்கள் மதத்தை பற்றி கேட்டால் பைபிளில் இருந்து ஆயிரம் விடயங்களை சொல்வார்கள்.

இங்கே வந்து இந்து மதத்திற்காக வக்காலத்து வாங்குபவர்கள் இந்து மதத்தின் நான்மறைகளில் இருந்து ஒரு வசனத்தையாவது சொல்லுங்கள் பார்ப்போம்.

உங்களால் முடியாது. அது சமஸ்கிருதத்தில் இருக்கிறது. நீங்கள் படிக்கவும் முடியாது. வேதம் படிக்கின்ற, கேட்கின்ற சூத்திரனின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என்று மனு சொல்லி விட்டுப் போயிருக்கிறான்.

இப்படி எங்கு பிரச்சனை அதிகமோ, எது எம்மை அதிகம் சூழ்ந்துள்ளதோ, அங்குதான் கை வைக்க வேண்டும்.

இதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவர்கள் தமிழில் பிரார்த்தனை செய்வது என்பது தமிழ்மொழிப் பற்றால் அல்ல. அவர்களால் பைபிள் எழுதிய மொழியில் பூசை செய் என்றால் கூட அவர்களால் முடியாது என்பது தான் உண்மையாகும். பைபிள் எழுதப்பட்ட மொழி இன்று வழக்கிலும் இல்லை. யாருக்கும் மொழியின் அர்த்தம் தெரிந்தவர்கள் இன்று வரை யாருமில்லை.

தமிழில் பூசை செய்ய வேண்டும் என்பதை வரவேற்கின்றேன். ஆனால் அது சுயநலத்துக்காக, இந்து மதத்தை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சொல்லுவதகாக உணரும்போது வரவேற்க முடியாது.

இன்று கிறிஸ்தவர்களைத் தவிர, மற்றய மதத்தவர்கள் எல்லாம் மூல மொழியில் தான் வழிபர்டு செய்கின்றனர். பௌத்தனுக்கு எங்கு போனாலும் புத்தம் சரணம் கச்சாமி தான். அவ்வாறே முஸ்லீம்களுக்கு அல்லாகு அக்பர் தான். ஆனால் மேலே சொன்னது போலக் கிறிஸ்தவர்களுக்கு தான் மூலத்தைத் தொலைத்து வைத்துத் தவிர்க்கின்றார்கள்.

வெறுமனே மந்திரங்களையும், பெயர் வைப்பும் தமிழ்மொழியினை வளர வைப்பதற்கான வழியல்ல. அது வெறுமனே ஆரிய எதிர்ப்பின் அடையாளமே!.

-----------

சமஸ்கிருத மொழியை இன்று யார் பேசுகிறார்கள்?

அது வழக்கில் இருக்கிறதா?

உங்களுக்கு தெரியாத மொழியில் உங்களை கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்வதுதான் மத நம்பிக்கையா?

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும், அது பற்றிய அறிவு பலருக்கு இருக்கின்றது. எம்மை அதை கேவலப்படுத்துகின்றதா இல்லையா என்பதை ஆரியவெறியை அடிப்படையாகக் கொண்டவர்கள் சொல்வதை வைத்து மட்டும் நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் அல்லவே!

நான் திருமண மந்திரங்கள் பற்றி சில விடயங்கள் எழுதியுள்ளேன்.

அதை நீங்கள் நம்பவில்லை என்றால், சரியான அர்த்தத்தை தாருங்கள்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு! உங்களுக்கு விடயம் சரியாக விளங்கவில்லை

மகாலிங்கம் என்ற பெயர் கொண்ட ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்ற பொழுது, அவர் தன்னுடைய பெயரை மாற்றுகிறார்.

வடமொழிப் பெயர்கள் இந்துக் கடவுள்களின் பெயர்களை கொண்டிருப்பதால், மதம் மாறுகின்ற பொழுது பெயரை மாற்ற வேண்டிய தேவை எழுகிறது.

அத்துடன் ஏற்கனவே வேற்று மொழியாகவிய வடமொழிப் பெயரைக் கொண்டிருப்பதால் அவருக்கு இன்னும் ஒரு வேற்று மொழிப் பெயரை மாற்றுவது தவறு என்றும் தெரியவில்லை.

ஆனால் நல்ல தூய தமிழ் பெயர்களை வைத்திருந்தால், இந்த பெயர் மாற்ற வேண்டிய தேவையே வராது. உதாரணத்திற்கு "தூயவன், மலரவன்" போன்ற பெயர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை எந்த மதத்திற்கு போனாலும் வைத்துக் கொள்ளலாம்.

காரணம் தூய தமிழ் பெயர்கள் மொழியின், இனத்தின் அடிப்படையிலேயே வைக்கப்படுகின்றன. மதத்தின் அடிப்படையில் அல்ல.

ஆகவே இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு நாம் இனியாவது நல்ல தமிழ் பெயர்களை வைப்பதுதான்.

மகாலிங்கம் என்ற பெயரில் இருப்பவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் போது யேசு, அந்தோணியார் என்ற கிறிஸ்தவக்கடவுளின் பெயர்களைத்தானே சூடவேண்டும். ஆனால் ஏன் ஆங்கிலப்பெயரான மைக்கெல், ரெக்ஸி, ரொச்மன் என்று வைக்கிறார்கள்?. மகாலிங்கம் என்ற பெயரை வட இந்தியர்கள் வைத்திருக்கிறார்களா?. கிறிஸ்தவ மதத்தில் மாறும் வெகு சிலரே தமிழ்ப் பெயர்களாக அந்தோணிப்பிள்ளை, அருளப்பர் என்று வைக்கிறார்கள். ஆனால் 90 வீதத்துக்கு மேலான கிறிஸ்தவத்துக்கு மாறும் மக்கள் ஆங்கிலப்பெயர் வைத்து அடையாளத்தினை இழக்கிறார்கள்.

மைக்கல், ரெக்சி போன்ற பெயர்களுக்கும் டிக்சன், மிக்சன் போன்ற பெயர்களுக்கும் (இவைகள் இந்துக் குழந்தைகளின் பிறந்தநாள் விளம்பரங்களில் கண்டது) என்ன வித்தியாசம்?

மைக்கல், ரெக்சி போன்ற பெயர்களையாவது ஐரோப்பிய மொழிப் பெயர்கள் என்று அடையாளப்படுத்துகிறோம். அந்தப் பெயர்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும்.

ஆனால் டிக்சனும், மிக்சனும் எந்த மொழிப் பெயர்? அதன் அர்த்தம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

மகாலிங்கம் என்ற பெயரில் இருப்பவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் போது யேசு, அந்தோணியார் என்ற கிறிஸ்தவக்கடவுளின் பெயர்களைத்தானே சூடவேண்டும். ஆனால் ஏன் ஆங்கிலப்பெயரான மைக்கெல், ரெக்ஸி, ரொச்மன் என்று வைக்கிறார்கள்?. மகாலிங்கம் என்ற பெயரை வட இந்தியர்கள் வைத்திருக்கிறார்களா?. கிறிஸ்தவ மதத்தில் மாறும் வெகு சிலரே தமிழ்ப் பெயர்களாக அந்தோணிப்பிள்ளை, அருளப்பர் என்று வைக்கிறார்கள். ஆனால் 90 வீதத்துக்கு மேலான கிறிஸ்தவத்துக்கு மாறும் மக்கள் ஆங்கிலப்பெயர் வைத்து அடையாளத்தினை இழக்கிறார்கள்

கந்தப்புவின் எரிச்சலுக்காக தமிழ்பற்றாளராகக் காட்டிக் கொள்ளும் குழு விரைவில் தனது தமிழ்பற்றைக் காட்டுவதற்காக இதைக் கண்டிப்பதாக அறிக்கை விடும். இப்போது சந்தோசம் தானே கந்தப்பு!

எனிவரும் காலங்களில் ஆரிய எதிர்ப்பில் தமிழ் உலகத்தை நாங்கள் காண விரும்பும்போது குறுக்கே நிற்காதீர்கள். நாளைக்கு எங்களின் இப்படியான முயற்சியால் தமிழ் அழிந்தாலும், தமிழ் அழியக் காரணம் ஆரியம் தான் என்று வரலாற்றில் இடம் பெற வைப்பது எம் பொறுப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.