Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்பட்டது
news

ஏ-9 வீதியின் ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1997ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஓமந்தையின் பிரதான வீதி ஊடான பாதை மறிக்கப்பட்டு வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மாற்று வழியூடாக இதுவரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை பொருள்களுடன் வரும் வாகனங்கள் அவற்றை சோதனைக்குட்படுத்தும் இடமாகவும் ஓமந்தை சோதனைச் சாவடி செயற்பட்டிருந்தது.

மேலும் நள்ளிரவு வேளைகளில் பயணிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் ஆட்சி அதிகாரம் மாற்றமடைந்துள்ள நிலையில் ஒமந்தை சோதனைச் சாவடி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை இந்த சோதனைச் சாவடியினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் பயணிகள் மற்றும் தெற்கு நோக்கில் இருந்து வடக்கிற்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

60%288%29.jpg

600000.jpg

80%2810%29.jpg

600%281%29.jpg

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=826594231029219528#sthash.GA7IuZyL.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
ஓமந்தைச் சோதனைச் சாவடியில் சோதனைகள் நிறுத்தம்! Top News 
[Saturday 2015-08-29 20:00]
வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று  முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏ-9 வீதியூடாக நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் பயணிக்கும் பயணிகளின் வசதி கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏ-9 வீதியூடாக நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் பயணிக்கும் பயணிகளின் வசதி கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

   

ஓமந்தை இறம்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடி யுத்த மோதல்கள் நடந்த காலம் தொட்டு இயங்கி வந்துள்ளது. யுத்த காலத்தில், இரண்டு நாடுகளுக்கிடையிலான சோதனைச்சாவடியைப் போன்று இங்கு சோதனைகள் நடந்துவந்தன. வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தன. பொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களில் இருந்து பொருட்களும் இறக்கி சோதனையிடப்பட்டிருந்தன.

யுத்தம் முடிந்த பின்னர், பயணிகளின் பொதிகள் சோதனையிடப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்களின் ஆள் அடையாள ஆவணங்கள் சோதிக்கப்பட்டு வந்தன. இதற்காக பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி நடந்து சென்று சோதனை முடிந்த பின்னர் மீண்டும் தமது வாகனங்களில் ஏறிச் செல்லும் நடைமுறை இருந்தது.

பின்னர், பயணிகளைச் சோதனையிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்கி ஏற்றும் நடவடிக்கையிலும் தளர்வு ஏற்பட்டிருந்தது. ஆயினும் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறை தொடர்ந்தும் இருந்துவந்தது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், தனியான கருமபீடம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வாகனங்களும் பொதுமக்களும் பிரதான வீதியில் இருந்து உட்பக்கமாக, அதற்கென அமைக்கப்பட்டுள்ள பகுதிக்குள், அதற்கென அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் ஊடாகச் செல்ல வேண்டிய நடைமுறையே இருந்துவந்தது.

இன்று முதல் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டு, பிரதான வீதி வழியாக எந்தவித தடங்கலுமின்றி வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.இதற்கான உத்தரவை இராணுவ தலைமைப்பீடம் வழங்கியிருக்கின்றது. புதிய உத்தரவையடுத்து, வெறிச்சோடிக்கிடக்கின்ற ஓமந்தை சோதனைச்சாவடியில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, மேலிடத்தில் இருந்து தங்களுக்குக் கிடைத்த உத்தரவையடுத்து வாகனங்களின் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் நேரடியாக எந்தவிதத் தடையுமின்றி செல்வதற்குத் தாங்கள் அனுமதித்திருப்பதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைவாக ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியின் சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார். கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து பெப்ரவரி 2 ஆம் திகதி ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை மற்றும் வாகனப் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஆயினும் இரண்டு தினங்களில் மீண்டும் அந்த நடவடிக்கை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.

இப்போது, பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, இரண்டாவது முறையாக ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

 

omanthai-check-point-290815-seithy%20(1)

 

 

omanthai-check-point-290815-seithy%20(2)

 

 

omanthai-check-point-290815-seithy%20(3)

http://www.seithy.com/breifNews.php?newsID=139362&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தின் ஓமந்தை சோதனைச்சாவடி நீக்கம் – ஜெனிவாவுக்கு முன்னோட்டம்

Aug 29, 2015 | 14:45by கார்வண்ணன் in செய்திகள்

omanthai checkpointசுமார் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக ஓமந்தையில் இயங்கி வந்த சிறிலங்கா இராணுவச் சோதனைச்சாவடியில் இன்று முதல் சோதனையிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

1990களின் துவக்கத்தில், முதலாம் கட்ட  ஈழப்போர் காலத்தில் இருந்து ஓமந்தையில், சிறிலங்கா இராணுவத்தின் சோதனைச்சாவடி இயங்கி வந்தது.

வடக்கிற்குச் செல்லும், வடக்கில் இருந்து வெளியேறும் பயணிகளைச் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாக ஓமந்தை தடை முகாம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

எனினும், பிற்காலத்தில், போர்க்கள நிலவரங்களுக்கேற்ப, அவ்வப்போது, இதன் தேவைப்பாடுகள் மாற்றமடைந்த போதிலும், தொடர்ந்தும் அது முக்கியமான சோதனைச்சாவடியாக இருந்து வந்தது.

2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிற்குச் செல்லும்- வடக்கில் இருந்து வெளியேறும், வாகனங்கள் மற்றும், பயணிகளை சோதனையிடும் இடமாக ஓமந்தைச் சோதனைச்சாவடி  பயன்பாட்டில் இருந்தது.

இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வடக்கில் பல சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்ட போதிலும், ஓமந்தை தடைமுகாமில் மட்டுப்படுத்தப்பட்டளவு சோதனைகள், பதிவுகள் இடம்பெற்று வந்தன.

இந்தநிலையிலேயே, இன்று ஓமந்தைச் சோதனைச்சாவடி ஊடாக வாகனங்கள் கட்டுப்பாடுகளின்றி நேர்வழியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படவுள்ள நிலையில், இந்த சோதனைச்சாவடியில் சோதனையிடும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் திருகோணமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, சிறிலங்கா இராணுவம் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

http://www.puthinappalakai.net/2015/08/29/news/9252

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வருகின்றது.

ஓமந்தை வில்லங்கமே பக்கெண்டு முடியுது!!!!!!!!!! இனியென்ன இன்னும் கொஞ்சப்பிரச்சனைதானே!!!! 
அதுவும் இந்த வருசத்துக்கிடையிலை எல்லாம் குளோஸ் :cool:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.