Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் உடல்உறுப்பை இழந்து நாடாளுமன்றம் செல்லும் முதல் உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரில் உடல்உறுப்பை இழந்து நாடாளுமன்றம் செல்லும் முதல் உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா

Aug 30, 2015

Shanthi Sriskandarajah

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார்.

8ஆவது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இம்முறை நாடாளுமன்றத்துக்கு 63 புதுமுகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கிறார் சாந்தி சிறீஸ்கந்தராஜா.

வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மிக குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றவர் இவர்.

எனினும், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் இவர், இம்முறை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் 13 பெண் உறுப்பினர்களில் ஒருவராவார்.

சாந்தி சிறீஸ்கந்தராஜா சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நுழையும், போரில் தமது உடல் உறுப்பினை இழந்த முதல் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டப் போரின் போது,- 2009 பெப்ரவரி மாதம், சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் தனது ஒரு காலை இழந்தார்.

துணுக்காய் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளராக இருந்த இவர், முழங்காலுக்குக் கீழ் தனது காலை இழந்த போதும், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்த, காயமடைந்தவர்களின் சார்பில் குரல் கொடுக்க நாடாளுமன்றம் செல்கிறார்.

போரில் உடல் உறுப்பை இழந்த நிலையில் நாடாளுமன்றம் செல்லும் முதல் நபர் நானே.

என்னைப் போன்ற நிலையில், உள்ள பலரின் சார்பிலும், குரல் கொடுத்து அவர்களுக்கு நல்ல வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்,” என்று தெரிவிததுள்ளார் சாந்தி சிறீஸ்கந்தராஜா.

http://www.puthinappalakai.net/2015/08/30/news/9260

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். கூட்டமைப்பிற்குப் பாராட்டுக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டிற்குரிய விடயம். நாளுமன்றத்திற்குச் செல்லும் அதேவேளை, கணவரைப்பறிகொடுத்தோர்  பெற்றொரை இழந்தோர் பராமரிப்பற்ற மூதாளர் என இவர்களின் முழுமையான தகவற் சேமிப்பகம் ஒன்றை உருவாக்கி ஆதார்பூர்வமாகச் செயற்பட்டுதல் நன்மைபயக்கும்.

சிறிலங்கா நாடாளுமன்றமானது தமிழினத்தின் பிரச்சினைகளை எவளவு இதயசுத்தியோடு அணுகும் என்பது தமிழினம் அறிந்தததே. தற்போது இரண்டு இனவாதக்கட்சிகளின்  அரசு அமைய உள்ளமை தமிழினத்துக்கு எப்படியான நன்மை கிடைக்கும்  என்பதையும் நாம் அனுபவிக்கவே போகின்றோம். 

தமிழ்த்தலைமைகள் அது வென்றோர் தோற்றோர் என்பதற்கப்பால் ஒரு ஒன்றிணைந்ததொரு செயற்படுதல் அவசியமானது. என்னதான் சிங்களம் கட்சி அரசியல் தலைமை அத இது என்றாலும் இனமென்று  அடிப்படையில் ஒரே கோட்டிலே நின்ற சிந்திப்பவர்கள். ஆனால் நாமப்படியில்லையல்லவா?

 

  • கருத்துக்கள உறவுகள்

13 பெண் உறுப்பினர்களில் ஒருவராவார்.

எத்தனை தமிழ் பெண்கள்  இந்த முறை தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.