Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் மன்னாரில் அனுஸ்டிப்பு! - ஓலமிட்டு அழுத உறவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
காணாமல்ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் மன்னாரில் அனுஸ்டிப்பு! - ஓலமிட்டு அழுத உறவுகள் Top News 
[Sunday 2015-08-30 20:00]
காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்கம், வட கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியன இணைந்து குறித்த தினத்தை அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்திருந்தது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி. செபமாலை அடிகளாரின் தலைமையில் நடைபெற நிகழ்வில் காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்கம், வட கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியன இணைந்து குறித்த தினத்தை அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்திருந்தது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி. செபமாலை அடிகளாரின் தலைமையில் நடைபெற நிகழ்வில் காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தப்பட்டது.

   

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய மண்டபத்தில் நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த போதும் தவிர்க்கமுடியாத காரணத்தால் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள டிலாசால் கிட்ஸ் கெம்பஸ் (பாடசாலையில்) காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை குறிந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வு ஆரம்பித்ததை தொடர்ந்து, மன்னார் பிரஜைகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் காட்டபட்டபோது தமது உறவுகளை இழந்த பெண்கள், தாய்மார்கள் தமது கவலையினை அடக்கி கொள்ள முடியாமல் ஒப்பரி வைத்து அழத்தொடங்கியதால் சிறிது நேரம் நிகழ்வினை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு பின் அது நிவர்த்தி செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினரான அருட்பணி. இராஜேந்திரம் (இயேசு சபை அகதிப் பணியின் இலங்கைக்கான பிரதிநிதி, தமிழ் சிவில் சமூக அமைப்பின் இணைப் போச்சாளர், பகுதிநேர விரிவுரையாளர் கிழக்கு பல்கலைகழகம், திருகோணமலை கல்வியகம்) பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் அந்தோனி பிறிமுஸ் சிராய்வா, அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் அதன் உத்தியோகஸ்தர்கள் மார்ட்டின் மாஸ்டர், அ.சாகாயம் உள்ளிட்ட நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் காணாமல் ஆக்கபட்டுள்ள குடும்பங்களின் பாடசாலை மாணவ மாவணிகளின் தற்போதைய மனநிலையை பிரதிபலிக்கும்வகையில் நடைபெற்ற சித்திர போட்டிகளில் பங்குபற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

காணாமல்போன உறவுகளின் உள்ளத்தின் வேதனைகளை வெளிப்படுத்தும் வகையிலான நாடகம் அங்கு அரங்கேற்றபட்டிருந்தது. வட கிழக்கு மாகாணங்களில் உள்ள காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு காலையில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தபோது அதிக எண்ணிக்கையிலான இராணுவ, பொலிஸ் உளவாளிகள் நிகழ்வு நடைபெறும் பகுதியில் புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

missing_day-mannar-300815-seithy%20(1).j

 

 

missing_day-mannar-300815-seithy%20(2).j

 

 

missing_day-mannar-300815-seithy%20(3).j

 

 

missing_day-mannar-300815-seithy%20(4).j

 

 

missing_day-mannar-300815-seithy%20(5).j

 

 

missing_day-mannar-300815-seithy%20(6).j

 

 

missing_day-mannar-300815-seithy%20(7).j

 

 

missing_day-mannar-300815-seithy%20(8).j

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=139444&category=TamilNews&language=tamil

 

 

 


 

 

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 அழாதேங்கோ........இரண்டாயிரத்து பதினாறிலை பிரச்சனை முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்நடந்த காலத்தில் காணாமல்போன சிங்கள ராணுவத்தினர் பலரை அவர்கள் பெற்றோர்கள் தேடியலைந்தார்கள். அவர்களில் சிலர் தமிழ் வீரர்களிடம் கைதிகளாக இருப்பதறிந்து அவர்களை நாடிவந்தனர். பெற்றோரின் கண்ணீரைக்கண்டு கருணைகொண்ட தமிழர்கள் கைதிகளை விடுவித்தனர். விடுபட்ட கைதிகள், தங்கள் தாய்மொழியுடன், தமிழும், ஆங்கிலமும் பேசக்கூடிய பயிற்சி பெற்றுக் கல்வி அறிவிலும், தமிழ் வீரர்கள் தங்களை மேம்படுத்தி விட்டதாகத் தெரிவித்தனர். மீடியாக்களும் அதனை உறுதிப்படுத்தி வெளியிட்டிருந்தன.:innocent:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.