Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை - சட்ட மா அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மநாதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை - சட்ட மா அதிபர்

31 ஆகஸ்ட் 2015
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
குமரன் பத்மநாதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை - சட்ட மா அதிபர்



தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி., குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் குமரன் பத்மநாதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது


ஜே.வி.பி. கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் குமரன் பத்மநாதனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.


மேன்முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பிலான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குமரன் பத்மநாதனுக்கு எதிராக 193 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.


நிதிச் சலவை , ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இன்னமும் கூடுதலான கால அவகாசம் தேவைப்படுவதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நிதிமன்றில் அறிவித்துள்ளது.


இந்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. குமரன் பத்மநாதனிடம் பாரியளவில் சொத்துக்கள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123473/language/ta-IN/article.aspx

ஊரிலை தேத்தண்ணி கொடுத்தவனும், இன்னும் கம்பி எண்ணுகின்றான்! ஆனால் அத்தான் கேபி மட்டும்?! ... வாவ்வ்வ் 

அத்தானும், முன்னாள் புலித்தலைவருமான கேபி சரணடையவில்லையாம் ...  கேட்கிறவன் கேணையன் என்றால் ...!

அத்தான் கேபியை மலேசியாவில் இருந்து கைது செய்து போனார்களாம் ... கேற்பை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டிச்சாம்!

http://www.lankatamil.net/wp-content/uploads/2015/01/KP-1.jpg

நிர்மலன், தயவு செய்து வாயை திறவுங்கள்tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் இப்ப கேபி சரணடைஞ்சார் என்று தான் வைத்துக் கொள்ளுவோமே! இப்ப அதுக்கு என்ன? நடேசன், புலித்தேவன், கர்ணல் ரமேஸ் போன்றோரும் சரணடைந்தவர்கள் தானே! ஒரு வித்தியாசம் கேபி காட்டிக் புலிகளின் இன்னொரு கும்பலால் காட்டிக் கொடுக்கப்பட்டு சரணடைந்தார், இவர்கள் ஏலாக் கட்டத்தில் சரணடைந்தனர். முடியாமல் போனதினால் எல்லோருமே சரணடைந்தனர். கேபி உயிரோடு இருப்பதுதான் பலருக்குப் பிரச்சினையாக்கும். நல்லா இருக்கு உங்கட கதை!:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

வாலி தெரிவித்ததுதான் சரியானது.

உண்மையாகப் போராடியவன்தான் இறந்தும் பிடிபட்டும் உள்ளான்.

வாலுகள் தற்போதும் தாங்கள் தான் ஏதோ உண்மையானவர்கள் என்று கூறிக்கொண்டு திரிகின்றார்கள்.

வேடிக்கை என்னவென்றால் அவர்கள் எல்லாம் தற்போதும் இவ்வாறு மற்றவனை துரோகி அது இது என்று கூறுவதற்கும் புலம்பெயர் நாடுகளில் வலுவாக காலூன்ற இரவு-பகல் பாராது உழைத்து இந்த கட்டமைப்பை உருவாக்கியது கே.பி.

கேணல் கிட்டுவே கே.பி.யின் செயற்பாட்டை பார்த்து பிரமித்து பிரபாகரனிடம் புகழ்ந்த வரலாறுகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இந்திய இராணுவ காலத்தில் பிரபாகரனின் மனைவி, பிள்ளைகளை வெளிநாடுகளில் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து ஊருக்கு அனுப்பிய வரலாறுகள் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது.

2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கே.பி.யை தூக்கி விட்டு பின்னர் காஸ்ட்ரோவால் அனுப்பப்பட்ட எத்தனையோ பேர் வந்த வேலைகளை மறந்து புலம்பெயர் நாடுகளில் தமக்கான துணையை தேடி தமது வாழ்க்கையை வளப்படுத்தி இருக்கின்றனர்.

இந்த இடத்தில் கே.பி. எவ்வளவோ மேல். 25 நாடுகளுக்கு மேல் பயணம் செய்த அவர், தனது நாடு என்ற சிந்தனை மேலோங்கி இருந்த ஒரே காரணத்திற்காகவே எந்த ஒரு நாட்டின் குடியுரிமையும் பெறவில்லை. இங்கே தாய்லாந்து குடியுரிமை பெற்றிருக்கின்றார் என்று கூற வருவீர்கள். அதுவும் அவர் தாய்லாந்து பெண்ணை திருமணம் புரிந்த காரணத்திற்காக அவருக்கு அந்த குடியுரிமை கிடைத்தது. இது கூட பிரபாகரன் அனுமதியளித்த காரணத்தினால்தான் திருமணமே புரிந்தார்.

ஊருக்கு செல்கின்றவர்கள், கிளிநொச்சி இரணைமடுச் சந்தியால் திரும்பினால் செஞ்சோலை இல்லம் வரும். அங்கே அவர் இருப்பார். அவரிடமே நேரில் கண்டு உங்களை துரோகி என்று கூறுகின்றார்களே அது எதற்கு என்று கேளுங்கள்.

விடுதலைப் புலிகளின் கட்டமைப்பைப் போன்றே செஞ்சோலை, பாரதி, அன்பு இல்லங்களை கே.பி. நடத்தி வருகின்றார். இன்றும் அவர் தனது தலைவன் பிரபாகரன் என்றே கூறுகின்றார். தனது தலைவன் போராடித்தான் வீரமரணம் அடைந்தார் என்றே அவர் கூறி வருகின்றார்.

2003 க்குப் பின்னர் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு விலகிய பின்னர் மாதாந்தம் 1,000 டொலர் அவர் செலவுக்கு வழங்குமாறு காஸ்ட்ரோவுக்கு பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். சிறிது காலம் அந்த தொகையினை வழங்கிய காஸ்ட்ரோ பின்னர் அதனை நிறுத்தி விட்டார். நினைத்தால் பிரபாகரனிடத்தில் அவர் தெரிவித்து அந்தத் தொகையை பெற்றிருப்பார். ஆனால், அதனை அவர் விரும்பவில்லை.

பின்னர் அவர் செலவுகளுக்கான பணத்தினை வெளிநாட்டில் இருந்த பழைய நண்பர்களே வழங்கி இருந்தனர்.

பல தடவை இங்கே வாதிடப்பட்டததுதான்.

கே.பி. துரோகி என்று கூறுகின்றவர்களிடத்தில் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கின்றேன்.

புலம்பெயர் புலிகளின் வாதத்தில் துரோகி என்றால் பிரபாகரன் ஏன் 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இவரை சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக நியமித்தார்?

அன்று இவரைத்தானே ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்ட எரிக் சொல்ஹெய்ம் அனைவரும் தொடர்பு கொண்டனர்.

ஆயிரம் உண்மைகளை கூறினாலும் நீங்கள் எதனையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால், நான் எழுதியதனை வாசித்த பலர், கே.பி.யைப் பற்றி தெளிவடைந்து நேரடியாக கிளிநொச்சி சென்று அவரது இல்லங்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். இந்த வகையில் இது எனக்கு கிடைத்த வெற்றி என்பதனை விட 350 பிள்ளைகளுக்கு உதவி புரியக் கிடைத்தது என்பதனை நினைக்க சந்தோசமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி 1000 டொலர்கள் கேட்கவில்லை ஆனால் 2009 இல் தன்னை சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராக அறிவிக்கும் படி கேட்டார் ஒற்றைக் காலில். நல்லா கதை விடுறாங்க.

இயக்கத்திற்கு மண்வெட்டி கொடுத்தவனும் பங்கர் வெட்டினவனும் உள்ள இருக்க இவர் மட்டும் இல்லங்கள் நடத்துறாராம். 

நிர்மலன் நீங்கள் எழுதியது தான் " உண்மையாக போராடியவன் தான் இறந்தும் பிடிபட்டும் உள்ளான்" - அப்போ கே.பி எப்படி? 

கே.பி விலை போனது கடைசியில் தான் புலிகளுக்கு தெரியவந்தது, 2009 இல் ஏதாவது ஒரு துரும்பை பிடித்தாவது கரைசேர வேண்டும் என நினைத்ததாலேயே கே.பி உள்ளே வந்தார். 

 

 

ஆகா, ஓகோ .. அற்புதம், அபாரம்!

* அத்தான் கேபி சரண் மட்டுமா அடைந்தார்?

*இறுதி யுத்தம் 2008இல், அத்தான் சரணடைந்தது 2000ல்?

*அத்தான் கம்னு இருப்பதற்கு, யாரின் ஏவலில் புலித்தலைவரென மகுடம் தனக்கு தானே சூட்டினார்?

*அத்தான் அள்ளிக் கொண்டு போய் சேர்த்தவைகள் எவ்வளவு?

*அத்தான் ...  இந்தா நான் தான் புதிய தலை, நான் இங்கிருக்கிறேன், அங்கு வருகிறேன், இங்கு வந்து சந்தியுங்கள், என் தொலைபேசி இலக்கம் இது ... என்று விட்ட வானவேடிக்கைகள் ஒன்று இரண்டல்ல! சீனிக்குட்டி பிடித்து மூத்தா பெய்யத்தெரியாத பால்குடியும் சொன்னது அத்தானின் இருப்பிடம்! ... ஆமா உந்த அத்தானை காட்டியா கொடுக்க வேண்டும்?

கேட்பவர்கள் கேணையர்கள் என்றால், நீங்கள் ஓரோபிளேனும் ஓட்டுவீர்களாம்!

(ஒரு கோப்பை சோற்றுக்கு, ஓரரிசி பதமாம் ... சில வாரங்களுக்கு முன்னுக்கும் இங்கு கனடாவில் இருந்து ஒருவர் அங்கு போய் சிலரையும் கூட்டிக் கொண்டு ஓட்டோவில் போய் அத்தானை  சந்தித்தனராம்! சந்தித்தவரில் இருந்து அத்தானின் பின்னணியை அறியக்கூடியதாக இருக்கிறது!)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.