Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரி வடமாகாணசபை தீர்மானம்

Featured Replies

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரி வடமாகாணசபை தீர்மானம்

 
சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முன் மொழிந்தார்Image captionசர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முன் மொழிந்தார்

இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்தார்.

ஏற்கனவே சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டிருக்கிறது என்று பிபிசி தமிழோசையிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருந்த பின்னணியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த தீர்மானம் வடமகாணாத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் மற்றுமொரு பிரதி இராஜாங்க செயலாளர் டொம் மெரினோவ்ஸ்கின் ஆகியோருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

அமெரிக்க பிரதி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்த தமிழ்த் தேசியக்குழுவினர்Image copyrightstate.govImage captionஅமெரிக்க பிரதி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்த தமிழ்த் தேசியக்குழுவினர்

அந்தச் சந்திப்பில் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்று அமைக்கப்படவுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டதன் பின்பே இந்தத் தீர்மானத்தை அவசர அவசரமாக சபையில் கொண்டு வர நேர்ந்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச பொறிமுறையிலான விசாரணையொன்றின் மூலமே நீதி கிடைக்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நம்புகிறது என்றும் அதனை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானம் குறித்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கருத்துக்களை அறியாமல் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான தவராசா முதலில் சபையில் கூறினார்.

ஆனால் பின்னர், எதிர்க்கட்சியில் இருக்கும் ஐந்து உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தவராசா சபையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்க்கட்சியினருடைய நிலைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டு சபையில் சமூகமளித்திருந்த ஏனையோரின் ஆதரவுடன் இந்தத்தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சி வி கே.சிவஞானம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150901_slresolution

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலில் பொறி, பொறி முறை என்பதற்கான  கருத்து விளக்கங்களை யாரவது விளங்கப்படுத்துவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக வரவிருக்கும் அறிக்கைகள்..

 

சம்: இந்தத் தீர்மானம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பேன்.

சும்: இது புலிவால்கள் சிலரின் ஆசை.

மாவை: வடமாகாண சபையில்..அரைத்த மாவை அரைக்கிறாங்கள்.

சிவாஜி: நான் தனியொருவான போராடிப் பெற்றது.

அனந்தி: மக்களின் மனசை வடக்கு மாகாணசபை பிரதிபலிக்கிறது.

அமெரிக்கா: நாங்க சொன்னாச் சொன்னது தான். கேட்டு நடக்க வேண்டியது எல்லோரினதும் பொறுப்பு. மக்களாவது ஆணையாவது தேர்தலாவது ஜனநாயகமாவது. எல்லாம் அமெரிக்கா சொல்லுறபடி தான் நடக்கனும். அதுதான் சட்டம்.

பிரிட்டன்: எதுக்கும் அமெரிக்கா சொல்வதை காதில் வாங்கவும்.

கனடா: நாங்க நடுவுநிலை வகிக்கப் போறம்.

ஹிந்தியா: நட்பு நாடான சிறீலங்காவை நாம் கைவிடோம். இது தேவையில்லாத தீர்மானம்.

கருணாநிதி: சரியான தீர்மானம்.. ஆனால் என்னளவுக்கு மக்களை ஏமாற்றப் போதுமானதல்ல.

ஜெ: (வழமை போல மெளனம்.. அல்லது கண்டும் காணாத போக்கு.)

சீமான்: போதாது. இன்னும் காத்திரமாக செய்தி சொல்லப்படனும்.

திருமுருகன் காந்தி: நல்ல தொடக்கம். சர்வதேச விசாரணை ஒன்று வரும் வரை மக்கள் சக்தி திரண்டு குரல்கொடுக்க வேண்டும். அது இலங்கை..தமிழகம்.. சர்வதேசம் என்று வியாபிப்பது நல்லது.

 

 

சிங்கள தேசத்தில்...

ரணில்: சொல்வழி கேட்காட்டி மாகாண சபை முறையையே ரத்துச் செய்வேன்.

மைத்திரி: ரணில் சும்மா இரும். அந்த அதிகாரம் எனக்குத் தான் உண்டு. நான் செய்கிறேன்.

சந்திரிக்கா: சர்வதேச விசாரணை என்ற உச்சரிப்பே இடமில்லை. அதுவும் ரணில் - மைத்திரி நல்லாட்சியில். 

மகிந்த: நான் சொல்லேல்ல. புலிகள் வந்திட்டாங்கன்னு.

 

அரசியலில் பொறி, பொறி முறை என்பதற்கான  கருத்து விளக்கங்களை யாரவது விளங்கப்படுத்துவீர்களா?

பொறி:

தேர்தலுக்கு முன்னம் 2016 இல் தீர்வு என்பது பொறி.(மக்கள் எலின்னா.. 2016 தீர்வு என்பது தேங்காய் சொட்டு)

 

இதில் பல வகை உண்டு..

 

images?q=tbn:ANd9GcS_VVQd4fHkYBQimn-e_gY 258_istock_mousetrap-e1305753476352.jpgsharp-bear-trap-23495959.jpg

 

பொறிமுறை:

2016 இல் தீர்வுன்னு தலைவரே சொல்லிட்டார் வாக்கு மக்களே வாக்கு.. என்று முழங்கிறது.. அப்புறம் தேர்தலில் வென்றிட்டு.. 2016 இல் தீர்வென்னு தானைத் தலைவர் சம் சொன்னாரா.. ஞாபகம் இல்லை என்கிறது பொறியை இயக்கிற... பொறிமுறை. tw_blush:

 இது பொறி முறை..

 cb16.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பாக வரவிருக்கும் அறிக்கைகள்..

------

யாழ்கள.... சம்பந்தனின் அல்லக்கைகள்: விக்கியரை.... சம்பந்தன் ஐயா பிடிச்சு, வெளீலை விடப் போறார். :grin:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.