Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாவின் புதிய அவதாரம்: பின்புலம் என்ன?

Featured Replies

ப.தெய்வீகன்

விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மகிந்த ராஜபக்ச அரசின்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்கள் பல தளங்களில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் - குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் - ஏற்படுத்தியிருக்கின்றன.

நேர்காணலை பார்த்த ஓவ்வொருவரும் - அதன் உள்ளடக்கங்களை ஒவ்வொன்றாக உருவி எடுத்து - தமக்கு தமக்கு தேவையான விடயங்களை பொதுவெளியில் செய்தியாக முன்வைக்கும்போது எது சுவாரஸ்யம்மிக்கது என்ற அடிப்படையிலும் எது ஜனரஞ்சகசுவை மிக்கது என்ற கோதாவிலும் எடைபோட்டு அவற்றை மட்டும் தனி அலைவரிசையில் தாங்கி சென்று அவற்றுக்கு வியாக்கியானம் கொடுப்பதில் குறியாக இருக்கின்றனர்.

இந்த நேர்காணலில் உள்நாட்டு அரசியல் பேசப்பட்டிருக்கிறது. சிறிலங்காவை மையமாக கொண்ட பூகோள அரசியல் பேசப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்கள் பேசப்பட்டியிருக்கிறது. அதற்கான பொறுப்புக்கூறல் பற்றி பேசப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி பேசப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் பற்றி பேசப்பட்டியிருக்கிறது. அவர்கள் தொடர்பாகவும் சிறிலங்காவினதும் ஒட்டுமொத்த இராணுவ விவகாரங்கள் தொடர்பாகவும் ஆழமாக பேசப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா பற்றி பேசப்பட்டிருக்கிறது. இந்தியா தொடர்பான விடயத்தில் கருணா கூறிய பல கருத்துக்கள் மேலே குறிப்பிட்ட எல்லா தலைப்புக்களுக்கு ஒரே பதிலாகவும் அமைந்திருக்கிறது.

அதாவது, முதல் தடவையாக சிறிலங்காவின் பிரதான கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த கருணா, நடந்து முடிந்த போரில் இந்தியாவின் நேரடி பங்களிப்பு குறித்து தனது ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியிருக்கிறார்.

“இறுதிக்கட்ட போரின்போது வன்னியில் தளமைத்திருந்த இந்தியபடையினர், சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆட்லறி மற்று செய்மதி படங்களின் ஊடாக தாக்குதல் நடத்தும் பிரதான இராணுவ - மூலோபாய - உத்திகளுக்கு களத்தில் பக்கபலமாக நின்று யுத்தம் நடத்தினார்கள்” என்று கூறியுள்ள கருணா, விடுதலைப்புலிகளை அழிப்பதில் ஒரே குறியாக செயற்பட்ட இந்தியா தனது காரியத்தை வெற்றிகரமாக சாதித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயங்கள் யாவும் முன்னர் ஊடாகங்களில் அவ்வப்போது ஹேஸ்யங்களாகவும் மூன்றாம்நிலை அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிவந்திருந்தபோதும், போரை நடத்திய மகிந்த அரசு தரப்பின் மிகமுக்கியமான ஒருவரின் ஊடாக – அதாவது, அந்த அரசில் பிரதிஅமைச்சு பதவியையும் கட்சியின் பிரதிதலைவர் என்ற பதவியையும் வகித்தவரின் ஊடாக – சொல்லப்பட்டிருப்பது இன்றைய நிலையில் ஆழமாக நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மகிந்த அரசுக்கு இராணுவ ரீதியாக உதவியளிக்க கூடாது என்று இந்தியாவின் நடுவண் அரசை நோக்கி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் தமிழகத்திலிருந்து அழுத்தங்கள் வழங்கப்பட்டபோதும் -

பொதுமக்களுக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா ஆதரவளிக்காது என்றும் அப்படியே இராணுவ உதவிகளை வழங்கினாலும் கனரக ஆயுதங்களை சிறிலங்காவுக்கு வழங்காது என்றும் அதிலும் குறிப்பாக பாரிய அளவில் பங்கம் விளைவிக்கும் போர் உபகரணங்களை (lethal weapons) சிறிலங்காவுக்கு வழங்காது என்றும் டில்லி தரப்பு தன்னிடம் கோரிக்கை விடுத்த எல்லோரிடமும் அடித்துக்கூறியது.

ஆனால், கருணா தற்போது தெரிவிக்கும் விடயங்கள், போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட “இரகசியமான கைங்கரியங்கள்” அனைத்தையும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கின்றன.

இவ்வாறான ஒரு பின்னணியில், தற்போது அனைத்து தரப்பினரும் அசைபோடும் போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தினை சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு இந்தியா அனுமதியளிக்குமா? அவ்வாறான ஒரு விசாரணை சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்போது அந்த விசாரணை போரில் நேரடியாக பங்குகொண்ட இந்திய படையினரையும் இந்த விசாரணையின் உள்ளே இழுத்து சென்று துவம்சம் செய்யாதா?

இந்த கேள்விகளுக்கு மகிந்த காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் காத்திரமான பதிலாக அமையும்.

அதாவது, மகிந்த ஆட்சிக்காலத்தில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்பு துறைமுக கடற்பரப்புக்கு வந்தது தொடர்பாக சீற்றமடைந்த இந்தியா, பாதுகாப்பு செயலர் கோத்தபாயவை தொடர்புகொண்டு “சீனாவுடன் நீங்கள் காட்டும் ஒட்டுறவென்பது எல்லைமீறி போகிறது போலத்தெரிகிறது. இந்த நிலைமை தொடருமானால், சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டிவரும்” – என்று பொரிந்து தள்ளியபோது –

அதற்கு மிகவும் நிதானமாக பதிலளித்த கோத்தபாய “அவ்வாறு நீங்கள் ஒரு நடவடிக்கையை மேற்கொள்வீர்களேயானால், இறுதிக்கட்ட போரின்போது இந்திய தரப்பினர் எங்களோடு பேசிய விடயங்கள் குறித்த பதிவு செய்த உரையாடல்கள் மற்றும் போருக்கான இந்தியாவின் உதவிகள் என்பவை குறித்து நாங்களும் விரிவாக எல்லோருக்கும் தெரியும்படி வெளியிடவேண்டியிருக்கும்” என்று கூறியதுடன் இந்தியா மௌனமாகியது.

மகிந்த ஆட்சியிலிருக்கும்வரை சீனாவின் ஊடாகவும் அதன் அரவணைப்பில் திளைத்துக்கொண்டிருந்த மகிந்தவின் ஊடாகவும் இரட்டை தலைவலியில் “திருடனுக்கு தேள்கொட்டியது போல” வலியோடு வளைந்து கொடுத்துக்கொண்டிருந்த இந்தியா, தற்போது மைத்திரியின் ஆட்சி மாற்றத்தோடு சற்று பெருமூச்சுவிட ஆரம்பித்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இந்த பின்புலத்தில் சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தில் தனது 'பொருளாதார சகோதரமான' அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா மேற்கொண்டிருக்கும் “உள்நாட்டு விசாரணை பொறிமுறை” என்ற காய்நகர்த்தலை –

தேர்தல் முடிவுற்ற கையோடு சிறிலங்காவுக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான உதவி இராஜாங்க செயலர் நிஸா பிஸ்வால் தெளிவாக கூறி சென்றிருக்கிறார்.

இந்த களநிலை யதாரத்தங்களை எடுத்து நோக்கினால், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் எதிர்காலம் என்ன? ஐ.நா. சபையில் எதிர்வரும் செப்ரெம்பரில் நடக்கப்போவது என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் நாடாளுமன்ற சுமந்திரனும்தான பதில் சொல்லவேண்டும் என்றில்லை. சாதாரண பொதுமகனுக்கே புரியக்கூடிய வெளிப்படை உண்மைதான் இது.

சரி. கருணாவின் நேர்காணலில் கூறப்பட்டுள்ள இன்னொரு முக்கியமான விடயம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றியதாகும்.

இவ்வளவுகாலமும் தென்னிலங்கையின் செல்லப்பிள்ளையாக பேரினவாத கட்சிகள் கொஞ்சிக்குலாவிய தீடீர் ஜனநாயக போராளியாக போற்றப்பட்ட கருணா, தற்போது கனவுகண்டு இடையில் எழும்பி புலம்புபவர்போல, தான் பிரதிதலைவராக அங்கம் வகித்த சிறிலங்கா சுதந்திர கட்சியை இனவாத கட்சி என்றும் துவேச கட்சி என்றும் இந்த கட்சியை தூக்கியெறிந்துவிட்டு வருவதற்கு தான் தயார் என்றும் கூறி விடுதலைப்புலிகளின் தலைவரை துதிபாட ஆரம்பித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கையில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்று அங்கு கூடிய பெரும்திரளான தமிழ்மக்கள் மத்தியில் பேசும்போது “தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்” என்று அடித்துக்கூறிவிட்டு -

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று சுதந்திர கட்சியின் சுகானுபவங்களை சுகித்துக்கொண்டிருக்கும்போது “தலைவர் மகிந்த ராபக்ஸ தலைமையில்தான் இந்த நாட்டுமக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும்” என்று தான் முன்னர் பேசிய வசனத்தில் பெயரை மட்டும் மாற்றிவிட்டு, தனது விசுவாசத்தின் வடிவத்தை மாற்றிய கருணா –

இன்று மீண்டும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தியாகி என்றும் போற்றுதற்குரிய தலைவர் என்றும் சித்தத்தெளிவேற்பட்டவராக அருள்வாக்கு கூற ஆரம்பித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கவல்ல சரியான அரசியல் சக்தி என்று கூறியிருக்கிறார்.

இன்னும் இரெண்டொரு நாட்களில் “சம்பந்தன் தலைமையில்தான் தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும்” என்று அவர் அறிக்கை விட்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

2004 ஆம் பொதுத்தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண வேட்பாளர்களை தனக்கேற்றவாறு செயற்படுத்துவதற்காக கடத்தி சென்று பின்னர் விடுவித்தது மட்டுமல்லாமல் அக்காலப்பகுதியில் கிழக்கில் இடம்பெற்ற கூட்டமைப்பின் முக்கயஸ்தர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்கள் உட்பட பலரின் படுகொலைகள் தொடர்பாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்ட கருணாவுக்கு –

தற்போது கூட்டமைப்பின் மீது ஏற்பட்டுள்ள திடீர் ஞானோதயத்தின் பின்னணி என்ன?

இந்த இடத்தில், கொள்கை மாறாத துரோகமே உருவான ஒரு நபரது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்றவகையில் தமிழ் கூட்டமைப்பு காணப்படுகிறதா அல்லது கூட்டமைப்புக்கு வலைவீசும் மர்மமான திட்டத்துடன் கருணா களமிறக்கப்படுகிறாரா என்ற கேள்வயும் எழத்தான் செய்கிறது

ஆனால், கருணாவின் இந்த புதிய நிலைப்பாடானது அரசியல் ரீதியானதோ இராஜதந்திர ரீதியானதோ அல்ல. இது முழுக்க முழுக்க புலனாய்வு ரீதியானது என்பதை குறிப்பிட்ட அவரது செவ்வியினது பல பாகங்கள் அவரையும் அறியாமல் பல இடங்களில் வெளிக்காட்டி நிற்கிறது.

புலனாய்வு திட்டங்கள் எனப்படுபவை அவை தன்முனைப்பு பெறுவதற்கு முன்னர் தான் சார்ந்த செயற்பாட்டு தளத்தினை மறுதலிப்பதன் ஊடாகவே தன்னை முன்னிறுத்துவது வழக்கம். அவ்வாறான மறுதலிப்பு நகர்வின்போது அந்த திட்டங்கள் ஒருபோதும் அதன் உண்மையான பின்னணிகளை சந்தேகத்துக்கு உட்படுத்துவதில்லை.

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவுக்கு எதிரான – பொதுவெளியில் ஏற்கனவே ஓரளவுக்கு அறியப்பட்ட – போர்க்குற்ற சாட்டுக்களுடன் களமிறங்கும் கருணா எந்த பாதையில் பயணிக்கிறார் என்பதும் அவர் யாரால் செயற்படுத்தப்படுகிறார் என்பதும் புரிந்துகொள்ளமுடியாத புதிர் அல்ல.

சிங்களத்தின் குகைக்குள்ளிருந்து கர்ஜித்த எத்தனையோ சிங்கங்களுக்கு கடந்த காலங்களில் துப்பாக்கிகளால் விடைகொடுத்து சிலை வைத்த வரலாறுதான் கொழும்பு அரசியல். அவ்வாறான ஒரு பின்னணியில், இவ்வளவு துணிச்சலுடன் இன்னமும் பேரினவாத கட்சியொன்றில் இருந்துகொண்டு, அந்த கட்சியையும் வல்லரசுகளையும் ஒருவர் வம்புக்கு இழுக்கிறார் என்றால், அவர் தமிழ் மக்களுக்கு ஏதோ “பெரிதாக” செய்ய விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்.

சிறிலங்காவில் தற்போது ஏற்படுவதற்கு ஆரம்பித்துள்ள அரசியல் ஸ்திரத்தன்மை என்பது இந்தியாவின் பாரம்பரிய அரசியல் - இராஜதந்திர நிகழ்ச்சி நிரலுக்கு ஒவ்வாத சமன்பாடாகும்.

தமிழர் அரசியலிலேயே அதற்கான வரலாற்றுக்காரணிகள் கொட்டிக்கிடக்கின்றன.

ஆயுதக்குழுக்களின் உருவாக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழ்தேசிய அரசியலில் இந்தியா மேற்கொண்ட பிரித்தாளும் தந்திரமும் -

ஜே.வி.பியின் முக்கியஸ்தர் சோமவன்ஸ அமரசிங்கவை கிளர்ச்சிக்காலத்தில் பாதுகாத்து வெளியேற்றி பின்னர் நவஅரசியல் யுகத்தின்போது மீண்டும் அவரை களத்தில் இறக்கிவிட்டு குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க தலைப்பட்டது போன்ற சம்பவங்கள் முதல் ஆட்சிமாற்றங்களுக்காக ஆட்களை வாங்கும் இன்றைய அரசியல்வரை தென்னிலங்கையிலும் –

இந்தியா மேற்கொள்ளும் காய்நகர்த்தல்கள் யாவும் தனது நலனை முன்னிலைப்படுத்தியதே ஆகும்.

அந்த வகையில், விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உதவியுடன் பிரிக்கப்பட்டு மகிந்தவால் வளர்க்கப்பட்டு தற்போது எந்த பின்னணியும் இல்லாத தளத்திலுள்ள கருணாவை இந்தியா தத்தெடுத்திருக்கிறது.

அமெரிக்க - இந்திய புலனாய்வு இயந்திரம் மகிந்தவின் அணியிலிருந்த பொன்சேகாவை பிரிந்தெடுத்து அவரால் தாம் விரும்பிய மாற்றத்தை கொண்டுவரமுடியாமல் போனபோதுகூட சளைக்காமல் மீண்டும் முயற்சி செய்து மைத்திரி விடயத்தில் வெற்றிகண்டது.

ஆனால், கருணா எனப்படுபவர் ஏற்கனவே பணம் கட்டி வெற்றிபெற்ற பந்தய குதிரை. அதனால்தான் இரட்டிப்பு நம்பிக்கையுடன் மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்மக்களின் அரசியல் இருப்புக்கும் எதிர்காலவிடிவுக்கும் கருணா துரோகியா அல்லது கருணா மட்டும்தான் துரோகியா என்பதற்கு இறந்தகாலம் பல பதில்களை சொல்லிவிட்டது. அதே பதில்களைத்தான் வருங்காலமும் கூறப்போகின்றதா என்பதை "பலவிடயங்களில்" தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் சொல்லவேண்டும்.

(இந்த கட்டுரை "தமிழ் மிரர்" தினசரியில் 01/09/2015 அன்று பிரசுரமானது)

என்ன பேட்டி?

  • கருத்துக்கள உறவுகள்

.சிறிலங்காவிடம் கிரிக்கட்டை தவிர மற்ற எல்லாத்திலயும் இந்தியா வெற்றியடைந்து கொண்டுவருகின்றது........நாங்களும் இனி ஜெய்கிந் என்று போட்டு இந்தியாவுக்கு சாமரம் வீசத்தான் இருக்கு...

.சிறிலங்காவிடம் கிரிக்கட்டை தவிர மற்ற எல்லாத்திலயும் இந்தியா வெற்றியடைந்து கொண்டுவருகின்றது........நாங்களும் இனி ஜெய்கிந் என்று போட்டு இந்தியாவுக்கு சாமரம் வீசத்தான் இருக்கு...

கிரிக்கெட்டும் இந்த முறை இந்தியா வென்றுவிட்டது .

இலங்கை மீது இந்தியா திணிக்கும் இந்த பிராந்தியஆதிக்கம் புதியவிடயம் அல்ல,  அனைத்து பலம் பொருந்திய  நாடுகளும் இந்த பிராந்திய ஆதிக்கத்தை கடைப்பிடித்தே வருகின்றார்கள் .

இந்தியாவின் இந்த பிராந்திய நலனிற்குள் அகப்பட எங்களுக்கே விருப்பம் இல்லை அப்ப சிங்களவனுக்கு எப்படி இருக்கும் .அதுதான் நியதி என்று இருக்கும் போது யார் என்ன செய்யமுடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அரசியலில் இருந்து காணாமல் போகாமல் செல்வாக்கோடு இருக்கத் தேவையான அடித்தளங்களைப் போடுகின்றார். தற்காப்புத் தாக்குதலில் மட்டும் நிற்காமல் முன்னேறியும் தாக்குதல் நடாத்தி ஜெயசிக்குறு நடவடிக்கையை முறியடித்தவர் நிதானமாகத்தான் செயற்படுகின்றார் என்று தோன்றுகின்றது:cool:

Pamban-Bridge-India-005.JPG

இதையும் மறந்து விடாதீர்கள்

“இறுதிக்கட்ட போரின்போது வன்னியில் தளமைத்திருந்த இந்தியபடையினர், சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஆட்லறி மற்று செய்மதி படங்களின் ஊடாக தாக்குதல் நடத்தும் பிரதான இராணுவ - மூலோபாய - உத்திகளுக்கு களத்தில் பக்கபலமாக நின்று யுத்தம் நடத்தினார்கள்” என்று கூறியுள்ள கருணா, விடுதலைப்புலிகளை அழிப்பதில் ஒரே குறியாக செயற்பட்ட இந்தியா தனது காரியத்தை வெற்றிகரமாக சாதித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

கருணாவின் புதிய அவதாரம்: பின்புலம் என்ன?

மஹிந்த மற்றும் கோத்தபாயாவின் விசுவாசியாக நன்றி மறவாமல் நடந்து கொள்கின்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.