Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: சைவ இறைச்சி!

 
 
masala_2911821f.jpg
 

சான்பிரான்சிஸ்கோவில் தாவரங்களில் இருந்து இறைச்சி போன்ற சுவையுடைய பர்கரைத் தயாரித்திருக்கிறார்கள்! உலகம் முழுவதும் இறைச்சி அதிக அளவில் மக்களால் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. நீண்ட காலமாகவே இறைச்சிக்கு மாற்றாக அதே சுவையுடைய உணவுப் பொருளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் சான்பிரான்ஸ்சிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டது.

கடந்த 5 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, மாட்டு இறைச்சியைப் போன்ற நிறமும் சுவையும் உடைய பொருளை உருவாக்கிவிட்டனர். ’’ஒரு உணவுப் பொருள் புதிதாகக் கண்டுபிடிக்கும்போது, அது உலகத்தையே மாற்றிவிடவேண்டும். அப்படி ஒரு பொருளைத்தான் நாங்கள் தற்போது உருவாக்கியிருக்கிறோம். இந்தத் தாவர இறைச்சியைச் சமைக்கும்போது மாட்டு இறைச்சி சமைப்பது போலவே மணம் வரும். பார்க்கவும் கண்களைக் கவரும். சுவையும் அசல் மாட்டு இறைச்சியை ஒத்திருக்கும். பர்கரில் வைத்துச் சுவைத்தவர்கள் தாவர இறைச்சி என்பதை நம்பவில்லை.

அத்தனைத் துல்லியம். நாங்கள் சைவ உணவு மேற்கொள்பவர்களுக்காக இந்தத் தாவர இறைச்சியை உருவாக்கவில்லை. பல கோடி அசைவப் பிரியர்களுக்காகவே இதை உருவாக்கியிருக்கிறோம். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, கோதுமை, உருளைக்கிழங்கில் உள்ள புரோட்டீன்கள் எல்லாம் சேர்ந்து தாவர இறைச்சியைக் கொடுக்கின்றன. இறைச்சியை விட இதில் அதிக அளவில் புரோட்டீனும் குறைந்த அளவு கொழுப்பும் இருக்கின்றன.

அதனால் பயமின்றி இந்தத் தாவர இறைச்சியைச் சாப்பிடலாம். தற்போது இதன் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை குறைந்துவிடும். அடுத்த 50 ஆண்டுகளில் சைவ இறைச்சி முக்கிய இடத்தைப் பிடித்துவிடும்’’ என்கிறார் பாட்ரிக் ப்ரெளன்.

சைவ இறைச்சி! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!

ஈரானைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் சஜாத் காரிபி. 175 கிலோ எடை கொண்ட சஜாத், உலகின் மிகப் பெரிய மனிதராக இருப்பார் என்ற செய்தி உலகம் முழுவதும் பரவி வருகிறது. இவரது புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், ‘ஈரானியன் ஹல்க்’, ’பெர்சியன் ஹெர்குலிஸ்’ போன்ற பட்டங்களை எல்லாம் அளித்து வருகின்றனர். ’’எனக்கு மற்றவர்கள் சொல்வது போல ஒரு ஹல்க் ஆகவோ, பெர்சியன் ஹெர்குலிஸ் ஆகவோ மாற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது.

நான் பளு தூக்கும் விளையாட்டை மிகவும் நேசிக்கிறேன். அதனால் கடினமாக உடற்பயிற்சி செய்து, உணவுகளைச் சாப்பிட்டு நல்ல நிலையில் உடலை வைத்திருக்கிறேன். ஈரானைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் என்று என்னை உலகம் அடையாளம் காண வேண்டும் என்பதே என் விருப்பம். என்னை இன்ஸ்டாகிராமில் 67 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். என் உருவத்தை வித்தியாசமாகக் காட்டும்போதுதான் நான் பிரம்மாண்ட மானவனாகத் தெரிவேன். அதனால்தான் குளிர்பான பாட்டில் போன்றவற்றை வைத்துக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பேன். இவ்வளவு பெரிய உருவத்தின் கையில் இத்தனைச் சிறிய பாட்டிலா என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்’’ என்கிறார் சஜாத்.

பெர்சிய ஹெர்குலிஸ்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சைவ-இறைச்சி/article8783357.ece

  • Replies 1k
  • Views 150k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: புலி நண்பன்!

 
masala_2912879f.jpg
 

ஆஸ்திரேலியாவில் உள்ள மோகோ விலங்குகள் பூங்காவில் கின்வா என்ற புலியும் ரம்பிள் என்ற நாயும் 7 ஆண்டுகளாக நண்பர்களாக வசித்து வருகின்றன. கின்வாவை ஒரு நிமிடம் கூட ஓய்வாக அமர விடாது ரம்பிள். எப்பொழுதும் இரண்டும் சேர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கின்றன. ஒன்றுக்கொன்று கிச்சுகிச்சு மூட்டி, செல்லமாகக் கடித்து, தண்ணீர் தெளித்து, கட்டிப் புரண்டு விளையாடிக்கொண்டே இருக்கின்றன. கின்வாவிடம் வம்பிழுப்பது, விளையாட்டுக்கு அழைப்பது எல்லாம் ரம்பிள்தான். “இரண்டும் குட்டியாக இருந்தபோது வந்து சேர்ந்தன. இரண்டும் நீண்ட கால நண்பர்களைப் போலப் பார்த்தவுடன் நெருங்கிவிட்டன. புலியின் குணம் பற்றி நாய்க்கு தெரியாது. ஏன் புலிக்கே தன் சக்தி என்ன என்பது முழுவதுமாக தெரியாது. அதனால் இரண்டும் நட்பை இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கின்றன!” என்கிறார் விலங்குகள் பூங்காவின் உரிமையாளர் சாலி.

அசத்தும் ஆருயிர் நண்பர்கள்!

பிலிப்பைன்ஸில் வசிக்கும் நெல்சன் பெப்பிக்கு கண் பார்வை கிடையாது. எனினும், தென்னந்தோப்பில் தினமும் 60 மரங்களில் ஏறி, தேங்காய்களை பறிப்பதுதான் இவரது வேலை. ஒரு நாளைக்கு ரூ.600 கூலி கிடைக்கும். பார்வையற்ற நெல்சனை வீட்டில் இருந்து தென்னந்தோப்புக்கு அழைத்துச் செல்வது அவரது 5 வயது மகள் ஜென்னி. ஒரு குச்சியின் இரண்டு முனைகளை ஆளுக்கு ஒன்றாகப் பிடித்துக்கொள்கின்றனர். பின்னர் தந்தை சொல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்கிறாள் ஜென்னி. மரம் ஏறுவதற்கு முன்பு நெல்சனுக்கு தண்ணீர் கொடுக்கிறாள். இருவர் கால்களிலும் செருப்பு இல்லை. கரடுமுரடான பாதைகளில் அழுக்கு உடைகளோடு இருவரும் நடந்து செல்வதைப் பார்ப்பவர்கள் மனம் உருகிப் போகிறார்கள். யாரோ ஒருவர் இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட, இன்று பிலிப்பைன்ஸ் முழுவதும் ஜென்னியைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. சர்வதேச நிறுவனம் ஒன்று, நெல்சனையும் ஜென்னியையும் சந்தித்தது. அவர்களுக்கு பாதுகாப்பான சூழலில் சிறப்பாக வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது.

இனிமேலாவது ஜென்னியின் குடும்பக் கஷ்டம் தீரட்டும்…

சீனாவில் வீடியோகேம் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது. 19 வயது இளைஞர் ஒருவர், இண்டர்நெட் கஃபேயில் தொடர்ந்து 6 நாட்கள் விளையாடியிருக்கிறார். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், சாப்பிடாமல், தூங்காமல் விளையாடியவரின் மனமும் உடலும் மிகவும் மோசமடைந்தன. பணம் இல்லாததால், வேறு வழியின்றி வெளியேறி இருக்கிறார். நடக்க முடியாமல் புதர் செடியில் விழுந்துவிட்டார். மயங்கிக் கிடந்தவரை காவலர்கள் மீட்டனர். அவருக்கு மருத்துவம் செய்து, வீடியோ கேம் மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருக்கிறார்கள். கொஞ்சம் தாமதமாக அவரைக் கண்டுபிடித்திருந்தால், உயிரைக் காப்பாற்றி இருக்க இயலாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

எந்த விஷயமும் நம்மை அடிமைப்படுத்த அனுமதிக்கக்கூடாது!

  • தொடங்கியவர்

உலக மசாலா: மனித சண்டையில் பலியாகும் அப்பாவி விலங்குகள்!

 
 
masala_2914164f.jpg
 

ஏமனில் இதுவரை 60 ஆயிரம் மனித உயிர்களை காவு வாங்கிய உள்நாட்டுப் போரில், விலங்குகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. டைஸ் விலங்குகள் பூங்காவில் 19 சிங்கங்கள், 26 சிறுத்தைகள் உட்பட 266 விலங்குகள் இருந்தன. உணவு கிடைக்காமல் இதில் 12 சிங்கங்களும் 6 சிறுத்தைகளும் பட்டினியில் இறந்துவிட்டன. எஞ்சியிருக்கும் விலங்குகளும் உணவின்றி, எலும்பும் தோலுமாகவும் நோய்வாய்ப்பட்டும் காட்சியளிக்கின்றன. இண்டர்நெட் கஃபே நடத்தி வரும் 25 வயது பஸ்ஸம் அல் ஹகிமி, பூங்காவில் உள்ள உயிரினங்களைக் காப்பாற்றுவதற்காக போராடி வருகிறார். “உள்நாட்டுப் போரில் நாங்கள் இழந்தது ஏராளம். மனிதர்களுக்கே வாழ வழியில்லாதபோது, விலங்குகள் மீது யாராலும் அக்கறை செலுத்த முடியவில்லை.

போரால் நேரடியாக பூங்காவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் பூங்காவுக்கு யாரும் வருவதில்லை. அரசாங்க உதவியும் கிடைக்கவில்லை. பூங்கா ஊழியர்கள் சம்பளம் இல்லாததால், வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இருநூறுக்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கு உணவளிப்பது தனி நபரால் செய்யக்கூடிய காரியம் இல்லை. உள்நாட்டில் நிதி திரட்டவும் வழியில்லை.

என்னுடன் சில நண்பர்கள் சேர்ந்து, எங்காவது உணவு சேகரித்து, விலங்குகளுக்கு அளித்து வருகிறோம். விலங்குகளின் இருப்பிடங்கள் அசுத்தமாக இருக்கின்றன. இதனால் விலங்குகளுக்கு எளிதில் நோய் தாக்கிவிடுகிறது. சரியான உணவும் இல்லாமல் மருந்தும் இல்லாமல் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்? ஒரு வாரத்துக்கு 2,25,000 ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 32 ஆயிரம் ரூபாய். தொடர்ந்து பராமரிக்க வழியில்லாவிட்டாலும் மருத்துவம் செய்து, காட்டிலாவது இவற்றை விட்டுவிடுவதற்கு தொண்டு அமைப்புகள் முன்வந்தால் கூட போதும். மனித உயிர்களைப் போலவே விலங்குகளின் உயிரும் முக்கியம் என்பதால் என்னால் சும்மா இருக்க முடியவில்லை” என்கிறார் பஸ்ஸம் அல் ஹகிமி.

மனிதர்களின் சண்டையில் பலியாகும் அப்பாவி விலங்குகள்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஆரோன் செர்வெனாக், கடந்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லாஸ் வேகாஸுக்குச் சென்றார். அங்கே ஏற்பாடு செய்திருந்த எளிய திருமண விழாவில் தன்னுடைய ஸ்மார்ட்போனை திருமணம் செய்துகொண்டார். ஓர் ஆய்வில் 4-ல் ஒருவர் தங்கள் பெற்றோரை விட ஸ்மார்டோனுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். இரவு ஸ்மார்ட்போனை பார்த்துவிட்டுத்தான் படுக்கிறார்கள். காலை ஸ்மார்ட்போனில்தான் கண் விழிக்கிறார்கள்.

24 மணி நேரமும் கூடவே இருக்கும் ஸ்மார்ட்போன் மீது அன்பு செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். “எனக்கும் ஸ்மார்ட்போனுக்கும் நீண்ட கால உறவு. நான் நினைப்பதை எல்லாம் செய்து கொடுக்கிறது. என் பேச்சை நூறு சதவீதம் கேட்கிறது. என் அன்புக்கு பாத்திரமாக இருக்கிறது. அதனால் திருமணம் செய்துகொண்டேன். இந்தத் திருமணத்துக்காக ஏராளமான கேள்விகளை எதிர்கொண்டேன். இறுதியில் அனுமதி கிடைத்தது. எளிய திருமணம். மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருந்தனர். திருமண உறுதிமொழி வாசித்து, மோதிரம் மாற்றும்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன்” என்கிறார் ஆரோன் செர்வனாக்.

அடக் கொடுமையே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனித-சண்டையில்-பலியாகும்-அப்பாவி-விலங்குகள்/article8791533.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன்!

 
 
masala_2915954f.jpg
 

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் இந்தோனேஷி யாவில் வசிக்கும் ஆர்ய பெர்மானா. 10 வயதாகும் இவனது எடை 192 கிலோ. அரிசி, இறைச்சி உணவுகளை தினமும் 5 வேளை சாப்பிடுகிறான். உடல் பருமானால் நடக்க முடியவில்லை. அதனால் பள்ளிக்கும் செல்லவில்லை. ஆடைகளையும் அணிய முடியவில்லை. “2 பெரியவர்களின் ஒரு நாள் உணவை என் மகன் சாப்பிடுகிறான். பெரிய தண்ணீர் தொட்டியில் 4 மணி நேரம் குளிப்பான். உதவியின்றி இரண்டு அடி கூட எடுத்து வைக்க முடியாது. அடிக்கடி மூச்சு விட சிரமப்படுவான். பிறக்கும்போது 3.2 கிலோ இருந்தான். அவனுடைய பசியையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எடையையும் குறைக்க முடியவில்லை. விவசாயத் தொழில் செய்துவரும் எங்களால் பெரிய மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்க்க இயலவில்லை”’ என்கிறார் பெர்மானாவின் அம்மா.

ஐயோ… பாவம் குழந்தை…

சீனாவின் ஸெங்ஸோவ் பகுதியில் வசிக்கிறார் ஸோவ். சமீபத்தில் ரூ.3 லட்சத்துக்கு மினி வேன் ஒன்றை வாங்கினார். 88888 என்ற அதிர்ஷ்ட எண் கொண்ட நம்பர் பிளேட் வாங்குவதற்கு மட்டும் கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்! மகிழ்ச்சியில் முதல் நாள் மினி வேனை எடுத்துக்கொண்டு சென்றார். வழியில் போக்குவரத்துக் காவலர்கள் வண்டியை நிறுத்தினார்கள். இந்த எண்களுக்கும் வேனுக்கும் சம்பந்தம் இல்லை, அதனால் போலியாக இருக்குமோ என்று நினைத்தனர். அரை மணி நேரம் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். சிறிது தூரம் சென்றதும் அடுத்த பகுதி காவலர்கள் வண்டியை நிறுத்தினர். அவர்களுக்கும் அரை மணி நேரம் விளக்கம் கொடுத்தார்.

இப்படி ஒரு நாளில் மட்டும் 8 முறை அவரது வண்டி நிறுத்தப் பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. “நான் பழங்களை ஏற்றிச் செல்வதற்காகத்தான் மினி வேன் வாங்கினேன். அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இருப்பதாலும் வித்தியாசமாகவும் விளம்பரமாகவும் இருக்கட்டுமே என்று இந்த எண்களை கஷ்டப்பட்டு வாங்கினேன். ஒரே நாளில் நொந்து போய்விட்டேன்” என்கிறார் ஸோவ்.

எந்த எட்டும் கைகொடுக்கவில்லையே ஸோவ்!

ஜெர்மனியைச் சேர்ந்த nat-2 ஷூ நிறுவனம், உலகின் முதல் வீகன் ஷூக்களைத் தயாரித்திருக்கிறது. இவை 90% மரத்தால் ஆனவை. “மரத்துண்டுகளுடன் பருத்தி இழைகளைச் சேர்த்து, புதுவிதமான தோல் போன்ற பொருளை உருவாக்கி இருக்கிறோம். இந்தத் தோல் நன்றாக வளையக்கூடியது, மென்மையானது. மேப்பில், வால்நட், செர்ரி, பீச் போன்ற மரங்களில் இருந்து ஷூக்களுக்குத் தேவையான மரப் பொருட்களை எடுக்கிறோம். இத்தாலியில் உள்ள நவீன ஆலையில் இவற்றை தாவரத் தோலாக மாற்றுகிறோம். விலங்குகளின் தோல்களைப் பயன்படுத்தாததால் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. வீகன் ஷூக்கள் 4 விதங்களில் கிடைக்கின்றன. விரைவில் ஜெர்மனியில் விற்பனைக்கு வர உள்ளன” என்கிறார்கள் nat-2 நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

ம்… நல்ல விஷயம்தான்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகிலேயே-அதிக-எடை-கொண்ட-சிறுவன்/article8795708.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: தங்கப் புதையல் புத்தகம்

 
 
masala_2408297f.jpg
 

நியு மெக்ஸிகோவைச் சேர்ந்தவர் ஃபாரஸ்ட் ஃபென். பழங்காலப் பொருட்களையும் ஓவியங்களையும் சேகரிப்பது இவருடைய தொழில். மிகப் பெரிய கோடீஸ்வரர். சாகசங்கள் என்றால் இவருக்கு விருப்பம் அதிகம்.

1988-ல் சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய வாழ்நாள் அதிகக் காலம் நீடிக்காது என்று நினைத்த ஃபென், ஒரு பெட்டியில் தங்க நாணயங்கள், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களைப் போட்டு மூடினார்.

புதையல் வேட்டை என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ள குறிப்புகளை வைத்து, ராக்கி மலையில் தங்கப் புதையலைப் புதைத்துவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் ’புதையல் வேட்டை’ போட்டியை நடத்துகிறார். சென்ற ஆண்டு 30 ஆயிரம் பேர் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.

ஆனால் ஒருவராலும் புதையலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தங்கப் புதையலின் இன்றைய மதிப்பு சுமார் 12.5 கோடி ரூபாய். ’’புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைச் சரியாக வரிசைப்படுத்தினாலே புதையலைக் கண்டுபிடித்துவிடலாம்’’ என்கிறார் ஃபென்.

சுவாரசியமான மனிதர்!

உலகின் முதல் ‘ஹலோ கிட்டி’ சீன உணவு விடுதி ஹாங்காங்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பான ஹலோ கிட்டி கதாபாத்திரத்தை சீனர்கள் அதிகம் விரும்புகின்றனர். மேன் க்வாங் என்பவர் இந்தப் பிரத்யேக உணவு விடுதியை உருவாக்கியிருக்கிறார். இங்கே தயாராகும் உணவுகள் அனைத்தும் ஹலோ கிட்டி வடிவத்திலேயே பரிமாறப்படுகின்றன. உணவின் மீது ஹலோ கிட்டி படத்தை வரைவதற்கு இயற்கையான வண்ணங்கள்பயன்படுத்தப்படுகின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் இந்த உணவுகள் கவர்ந்து இழுக்கின்றன. உணவு விடுதியின் கண்ணாடி, மேஜை, நாற்காலி, உணவு பரிமாறப்படும் பாத்திரங்கள், தேநீர் குவளைகள், ஒளிரும் விளக்குகள், சுவர் அலங்காரங்கள் என்று எங்கு திரும்பினாலும் ஹலோ கிட்டியின் படங்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் ஒவ்வொரு மேஜையிலும் பெரிய ஹலோ கிட்டி பொம்மை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. ஹலோ கிட்டி உணவகத்தில் சாப்பிடுவதற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

ஆஹா… நாவில் நீர் ஊறுகிறது…

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆரோன் ரோஸ் செல்லப் பிராணியாக மலைப் பாம்பு ஒன்றை வளர்த்து வந்தார். வின்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பாம்புக்கு உணவாக எலியைக் கொடுக்கும்போது, உலோக இடுக்கியை அப்படியே மறந்து வைத்துவிட்டார். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் இடுக்கியை விழுங்கிவிட்டிருந்தது பாம்பு.

தன்னுடைய செல்லப் பிராணியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அடிலெய்ட் பல்கலைக்கழக வனவிலங்கு மருத்துவரிடம் எடுத்துச் சென்றார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் உடலுக்குள் இடுக்கி இருப்பது உறுதியானது. பைதானின் உள் உறுப்புகள் பாதிக்காத வண்ணம் அறுவை சிகிச்சை செய்து, இடுக்கியை வெளியே எடுத்தார் மருத்துவர் ஆலிவர் ஃபன்னெல். ஒரு வாரத்தில் நன்றாகக் குணமடைந்துவிட்டது வின்ஸ்டன்.

அப்படி ஒரு பசியா!

பிரிட்டனில் வசிக்கும் நைஜெல் பூலே தன்னுடைய மூக்கை 50 கோடி ரூபாய்க்குக் காப்பீடு செய்திருக்கிறார். பிரிட்டனின் மிகப் புகழ்பெற்ற பாலாடைக்கட்டித் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் நைஜெல், 18 ஆண்டுகளாக இங்கே பணிபுரிகிறார். பாலாடைக்கட்டியின் வாசனையை வைத்தே சரியான பதத்தில் இருக்கிறதா, எவ்வளவு நாட்கள் ஆன பாலாடைக்கட்டி, தரம் குறைந்திருக்கிறதா போன்ற விஷயங்களை எல்லாம் கண்டுபிடித்துவிடுவார்.

ஒருநாளைக்கு 6 ஆயிரம் கிலோ பாலாடைக்கட்டி இங்கே தயாரிக்கப்படுகிறது. 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பூலே நுகர்ந்து பார்ப்பதோடு, ஒரு நாளைக்கு ½ கிலோ பாலாடைக்கட்டியைச் சுவைத்துப் பார்க்கவும் செய்கிறார். 69 வயது பூலேவின் மூக்கு திடீரென்று நுகரும் சக்தியை இழந்து வருகிறது. பூலே அளவுக்கு நுகர்வதில் நிபுணராக இருக்கும் ஒருவரை நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.

நல்ல வேலையாகத் தெரியுதே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தங்கப்-புதையல்-புத்தகம்/article7213491.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: பட்டனைத் தட்டினால் உணவு!

 
masala_2917324f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கும் 69 வயது பீட்டர் ப்ரெளனி காலை உணவு தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். பொத்தானை தட்டினால் ஒரு பக்கம் சூடான தேநீர் கோப்பைக்குள் விழுகிறது. இன்னொரு பக்கம் ஒரு கிரேன் மேஜையில் இருக்கும் முட்டையை எடுத்து, கொதிக்கும் நீரில் வேக வைக்கிறது. சரியான பதத்தில் வெந்த உடன் முட்டையை எடுத்து, தட்டில் வைக்கிறது. இன்னொரு கருவி பிரெட்டை நன்றாக வாட்டி, தட்டில் தள்ளுகிறது. மற்றொரு கருவி வெளியில் இருக்கும் செய்தித்தாளைக் கொண்டு வந்து மேஜையில் போடுகிறது. பிரெட், வேக வைத்த முட்டை, சூடான தேநீருடன் காலை உணவைச் சாப்பிட்டுக்கொண்டே செய்தித்தாளைப் படிக்க வேண்டியதுதான்.

“இப்படி ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதற்காக 1000 மணி நேரங்களைச் செலவு செய்து, உருவாக்கியிருக்கிறேன். 1968-ம் ஆண்டு வெளிவந்த

‘சிட்டி சிட்டி பேங் பேங்’ என்ற திரைப்படம்தான் இந்தக் கருவியை உருவாக்கும் யோசனையைக் கொடுத்தது. நான் இந்தக் கருவியை என் வீட்டில் வைத்து, தினமும் பயன்படுத்தப் போவதில்லை. ஒரு இயந்திரத்தால் காலைச் சிற்றுண்டியைச் செய்து தர முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே இதை உருவாக்கியிருக்கிறேன். அதனால் விரைவில் ஓர் அருங்காட்சியகத்தில் இந்த இயந்திரத்தை வைத்துவிடப் போகிறேன். பொதுமக்கள் பார்த்துப் பயன்படுத்திக்கொள்ளட்டும்’’ என்கிறார் பீட்டர் ப்ரெளனி.

அடடா! பட்டனைத் தட்டினால் உணவு!

ரஷ்யாவின் யூரால் மலைப் பகுதியில் இருக்கும் ‘கல் நதி’ (Big stone river) முழுவதும் பெரிய பெரிய கற்கள் நிறைந்திருக்கின்றன. 6 கி.மீ. நீளமும் 200 மீட்டர் அகலமும் கொண்டது இந்த நதி. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மலை பனியால் போர்த்தப்பட்டு இருந்தது. உறைபனிக் காலம் முடிந்த பிறகு, பனி உருகியது. அப்போது மலையில் இருந்த பாறைகள் எல்லாம் கீழ் நோக்கி உருண்டு வந்துவிட்டன. பெரிய கல் நதியாக மாறிவிட்டது. இந்த நதியில் தண்ணீர் செல்வதில்லை. கற்களே தண்ணீர் போல பரவியிருக்கின்றன. தண்ணீர் செல்லாததால் இந்தக் கற்களுக்கு நகரும் வாய்ப்பும் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே இடத்தில் அசையாமல் இருக்கின்றன. கல் நதியின் இரு பக்கங்களிலும் அடர்ந்த மரங்களும் தூரத்தில் தெரியும் மலையும் இந்தப் பகுதியை மிக அழகானதாக மாற்றியிருக்கின்றன. ஒவ்வொரு கல்லும் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் கிலோ வரை இருக்கின்றன. 6 அடி ஆழம் வரை கற்கள் புதையுண்டுள்ளன. கல் நதியில் தண்ணீர் ஓடாவிட்டாலும் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கும். 6 அடி ஆழத்துக்குக் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன் ஓசை மட்டுமே மேலே கேட்கிறது. யூரால் மலைப் பகுதிகளில் இது போன்று பல கல் நதிகள் இருக்கின்றன. ரஷ்யாவுக்கு வெளியே பல்கேரியாவில் சிறிய அளவில் கல் நதிகள் காணப்படுகின்றன.

இயற்கையின் அதிசயம் கல் நதி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பட்டனைத்-தட்டினால்-உணவு/article8800597.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அசத்தும் பாட்டில் கிராமம்!

 
 
ulaga_2918540f.jpg
 

லிபோர்னியாவில் உள்ள சிமி பள்ளத்தாக்கில் இருக்கிறது பிரிஸ்ப்ரியின் பாட்டில் கிராமம். இங்கு 30 சிற்பங்களும் 16 வீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை முழுக்க முழுக்க பாட்டில்களால் ஆனவை. இந்த பாட்டில் கிராமத்தின் உரிமையாளர் தெரஸா பிரிஸ்ப்ரிக்கு பென்சில்கள் சேகரிப்பது முக்கியமான பொழுதுபோக்கு. 17 ஆயிரம் பென்சில்கள் சேகரித்திருந்தார். ஒரு கட்டத்தில் பென்சில்களை பராமரிப்பது கடினமாகிவிட்டது. பென்சில்கள் அருங்காட்சியகம் அமைப்பதற்காக சிமி பள்ளத்தாக்கில் இடம் வாங்கினார். கட்டிடம் கட்டுவதற்கு ஏராளமாக செலவு ஆகும் என்று தோன்றியது. தூக்கி எறியும் பாட்டில்களை வைத்து கட்டிடம் கட்டினால் செலவு குறையும் என்பதால் பாட்டிலில் கட்டிடம் கட்ட ஆரம்பித்தார். 10 லட்சம் பாட்டில்களை வைத்து மொத்தம் 16 கட்டிடங்களைத் கட்டினார். 17 ஆயிரம் பென்சில்கள், 600 பொம்மைகள், நூற்றுக்கணக்கான பொம்மை வீடுகள் என்று ஒவ்வொரு கட்டிடத்திலும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பாட்டில் கிராமத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு பொதுமக்களை அனுமதித்தார் தெரஸா. இதற்காக 1 டாலர் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டார். ஆனால் பாட்டில் கிராமத்தை முழுவதுமாக சுற்றிப் பார்த்தவர்கள், தாங்களாகவே விரும்பி நன்கொடைகளை அளித்து வந்தனர். 1982-ம் ஆண்டு தெரஸா இறந்துவிட்டார். 1994-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாட்டில் கிராமம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பிறகு தன்னார்வத் தொண்டு அமைப்பு ஒன்றின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அசத்தும் பாட்டில் கிராமம்!

ங்கிலாந்தின் மேலாண்ட் பகுதியில் 67 வயது பிரான்சஸ் ஒயிட் என்ற பெண்மணி வசிக்கிறார். பறவைகளின் அன்பரான பிரான்சஸ், 20 மயில்களை வளர்த்து வருகிறார். இந்த மயில்கள் கூண்டுக்குள் அடைக்கப்படுவதில்லை. அதனால் கிராமம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன. எல்லோரும் மயில்களை விரும்புவதில்லை. ஓயாமல் கத்திக்கொண்டிருப்பதாகப் புகார் சொல்கிறார்கள். சிலர் தோட்டத்தில் உள்ள பூக்களை மயில்கள் பிய்த்துவிடுகின்றன என்கிறார்கள். இன்னும் சிலர், வீட்டுக் கூரையில் ஏறி அசுத்தம் செய்வதாகச் சொல்கிறார்கள். இதனால் கிராம நிர்வாகம் பிரான்சஸ்ஸுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. “நான் கடந்த 20 ஆண்டுகளாக பறவைகளை வளர்த்து வருகிறேன். 2 ஜோடி மயில்களைத்தான் முதலில் வளர்க்க ஆரம்பித்தேன். இன்று 20 மயில்கள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை கூண்டுக்குள் அடைத்தால், ஒன்றை ஒன்று தாக்கி, காயமடைகின்றன. என்னால் வேறு இடத்துக்கு குடிபெயரவும் முடியாது. நான் வளர்க்கும் புறாக்கள் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து, திரும்பக்கூடியவை. வீடு மாறினால் அவற்றுக்கு அடையாளம் தெரியாது. பறவைகளை குழந்தைகள் போல நினைக்கிறேன். இவற்றை என்னால் கைவிடவும் முடியாது” என்கிறார் பிரான்சஸ்.

மயில்களை ரசிக்க ஆரம்பித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அசத்தும்-பாட்டில்-கிராமம்/article8803796.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கரப்பான் பூச்சி கேம் ஷோ

 
 
masala_2405599f.jpg
 

ஜப்பானில் கரப்பான் பூச்சி கேம் ஷோ மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு நீண்ட கண்ணாடிக் குழாயின் நடுவே கரப்பான் பூச்சியை வைத்து விடுகிறார்கள். குழாயின் இரண்டு பக்கங்களிலும் போட்டியாளர்கள் அமர்ந்துகொள்ள வேண்டும். குழாயில் வாய் வைத்து ஊத வேண்டும்.

ஊதும்போது கரப்பான் பூச்சி நகர்ந்து, எதிராளியின் வாய்க்குள் சென்றால் ஒரு பாயிண்ட். இந்த கேம் ஷோவில் ஒரு நடுவர் இருக்கிறார். குறிப்பிட்ட நேரத்தில் யார் அதிக முறை வாய்க்குள் கரப்பானைத் தள்ளுகிறாரோ, அவருக்கே வெற்றி. பரிசுத் தொகை அதிகம் என்பதால் பங்கேற்பதற்கு வரிசையில் காத்திருக்கிறார்கள். இணையதளத்தில் வெளியான கரப்பான் போட்டி வீடியோவை இதுவரை 1 கோடியே 65 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்!

ம்… இதெல்லாம் ஒரு போட்டி… இதுக்குப் பரிசு வேறு…

ஜப்பானில் வசிக்கிறார் ஷின்ரி டெஸுகா. இவர் லாலிபாப்களில் விதவிதமான உருவங்களைச் செய்யக்கூடிய கலைஞர். `அமெஸைகு’ என்பது ஜப்பானின் பழங்காலக் கலைகளில் ஒன்று. மிட்டாய்களில் மீன், தவளை, சிங்கம், புலி என்று விதவிதமான உருவங்களை மிக நேர்த்தியாகச் செய்யக்கூடிய கலை. இந்தக் கலையைச் சொந்த முயற்சியில் கற்றுக்கொண்டார் டெஸுகா. டோக்கியோவில் சிறிய கடை ஒன்றை வைத்து, லாலிபாப்களை விற்று வருகிறார். ஜப்பானிலேயே இரண்டே இடங்களில்தான் அமெஸைகு லாலிபாப்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வாடிக்கையாளர் கண் முன்பே லாலிபாப்களை உருவாக்கித் தருகிறார் டெஸுகா. சர்க்கரைப்பாகை 90 டிகிரியில் சூடுபடுத்தி, 3 நிமிடங்களில் மோல்ட்களில் ஊற்றி உறைய வைக்கிறார். பிறகு கத்தியால் அழகாகச் செதுக்கி, தேவையற்ற பகுதிகளை நீக்குகிறார். மிட்டாய் நன்றாகக் கட்டியான பிறகு, இயற்கை நிறங்களை அதன் மீது ஊற்றிக் காய வைத்து, அழகான லாலிபாப்களைக் கையில் கொடுத்துவிடுகிறார்.

இதுபோன்ற லாலிபாப்களைச் செய்வது மிகவும் கடினமான காரியம். தங்கமீன், தவளை, தலைப்பிரட்டை, பறவை, ஒட்டகச்சிவிங்கி, பாம்பு, புராணக் கதைகளில் வரும் விலங்குகள் என்று ஏராளமான உருவங்களைச் செய்து அசத்திவிடுகிறார் டெஸுகா. 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஒரு லாலிபாப் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பழங்காலக் கலையைப் பாதுகாக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார்.

இவ்வளவு அழகாக இருந்தால் எப்படிச் சாப்பிடத் தோன்றும் டெஸுகா?

தைவானைச் சேர்ந்தவர் 47 வயது அஹ் ஜி. கடந்த 20 ஆண்டுகளாக தைனான் ரயில் நிலையத்தில் தன்னுடைய காதலிக்காகக் காத்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ஜியின் காதலி, ரயில் நிலையத்தில் காத்திருங்கள், சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் அவர் வரவேயில்லை. அந்தப் பெண்ணின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு ஜி இன்று வரை காத்திருக்கிறார்.

வீட்டுக்கோ, வேலைக்கோ செல்வதில்லை. யாராவது பரிதாபப்பட்டு உணவு கொடுத்தால் வாங்கிச் சாப்பிடுகிறார். உறவினர்கள் அடிக்கடி வந்து உடைகளையும் பணத்தையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களிடம் சகஜமாகப் பேசுவார், பழகுவார். ஆனால் வீட்டுக்குக் கூப்பிட்டால் மட்டும் செல்லவே மாட்டார். ஒருமுறை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கிருந்து தப்பித்து, ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார் ஜி. “ஒருவேளை நான் இங்கு இல்லாதபோது அந்தப் பெண் வந்தால் ஏமாற்றம் அடைந்துவிடுவார். அதற்காகவே நான் இங்கு காத்திருக்கிறேன்’’ என்கிறார் ஜி. முடிவெட்டுதல், மருத்துவ உதவி, உணவு என்று யாராவது உதவி செய்துகொண்டே இருப்பதால் காத்திருப்பதில் கஷ்டம் ஒன்றும் இல்லை என்கிறார் ஜி.

ஐயோ… ஒரு வார்த்தைக்காக காலம் முழுவதும் காத்திருக்கீங்களே… நீங்க ரொம்பப் பாவம் ஜி.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கரப்பான்-பூச்சி-கேம்-ஷோ/article7204823.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: சாப்பாடா, புகைப்படமா?

 

 
masala_2404456f.jpg
 

உணவு சமைப்பதோடு அவற்றை அலங்காரம் செய்து புகைப்படங்கள் எடுக்கும் கலை பிரபலமாகி வருகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த உணவு விடுதி ஒன்றில் பரிமாறப்படும் உணவுகளைப் புகைப்படங்கள் எடுப்பதற்கு வசதியாக தட்டுகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன.

தட்டு போல தோற்றம் இல்லாமல், கண்ணாடி ஸ்டாண்ட் போல தோற்றம் அளிக்கின்றன. தட்டின் ஓரத்தில் செல்போனை வைத்துப் படம் பிடிக்கும் விதத்தில் சிறிய ஸ்டாண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. உணவைத் தட்டில் வைத்தவுடன் எதிர்ப் பக்கம் இருக்கும் பகுதியில் அழகாக பிரதிபலிக்கிறது. வேண்டிய அளவுக்குப் படம் பிடித்துவிட்டு, சாப்பிடலாம்.

புகைப்படம் எடுக்கும் ஆர்வம் சாப்பாடு தட்டு வரை வந்துவிட்டது…

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிக்கிறார் 75 வயது ஹுவான் க்யி. அவரது மனைவி 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரே மகனும் தூர தேசத்தில் வேலை செய்து வருகிறார். தூரத்து உறவினர்கள் எப்பொழுதாவது வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

தனிமை ஹுவானை வாட்டி வதைத்தது. தன்னுடைய பிரச்சினை தீர்வதற்கு அவரே ஒரு முடிவு எடுத்துவிட்டார். தன்னை யாராவது தத்தெடுத்துக்கொள்ள வேண்டும். தத்தெடுக்கும் குடும்பம் அவருடைய வீட்டிலேயே இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். தன்னுடைய பென்ஷன் முழுவதும் கொடுத்து விடுவார். அவர்களுக்கும் தங்கும் இடம் இலவசம். இதனை விளம்பரமாகக் கொடுத்துவிட்டார்.

முதுமையில் தனிமை கொடுமை…

ஊட்டச் சத்து நிபுணர்கள் பொதுவாகச் சமச்சீர் உணவுகளே மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்கிறார்கள். ஆனால் ஆண்டர்சன் குடும்பத்துக்கு இந்த விதி பொருந்தவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இறைச்சிகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக, உறுதியான உடலுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இறைச்சியை வைத்துப் பரிசோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட உணவு முறைக்கு வந்துவிட்டனர். எண்ணெய், மசாலா, உப்பு சேர்க்கப்படாத இறைச்சியைச் சமைத்து இரவில் வயிறு நிறையச் சாப்பிடுகிறார்கள். பகலில் பசி எடுக்கும்போது இறைச்சியும் தண்ணீரும் சேர்த்துக்கொள்கிறார்கள். பால், காபி, தேநீர் எவற்றையும் பருகுவதில்லை.

மிகக் குறைவான உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள். அப்படியிருந்தும் எடை அதிகரிக்கவில்லை. 56 வயது ஆண்டர்சன் பார்ப்பதற்கு மிக இளமையாக இருக்கிறார். ஆண்டர்சன், சார்லின் தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள். அவர்களும் இதே உணவுப் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்போ, நோய் வரும் வாய்ப்போ இந்த உணவுப் பழக்கத்தில் இல்லவே இல்லை என்கிறார் ஆண்டர்சன்.

அதெல்லாம் சரி… ஆனா தினமும் சாப்பிட்டால் சலிப்பு வந்துடாதா…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சாப்பாடா-புகைப்படமா/article7198596.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: தாயும் நானே, தந்தையும் நானே!

 
masala_2920666f.jpg
 

பிரிட்டனைச் சேர்ந்த இயான் முக்லெஜான், 2001ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். மூவரையும் தன்னந்தனியாகவே 15 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். ‘’எனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால் குழந்தைகள் மீது ஆர்வம். முட்டை நன்கொடையாளரைத் தேடினேன். புத்திசாலியான 27 வயது மெலிஸா வல்டோவின்ஸ், முட்டைகளைத் தரச் சம்மதித்தார். முட்டைகளுடன் விந்துகள் சேர்க்கப்பட்டன. வாடகைத் தாய் டினா பிரைஸ் வயிற்றில் 3 கருக்கள் உருவாகின. நான் ஒரு குழந்தைதான் எதிர்பார்த்தேன்.

ஆனால் எதிர்பாராத விதமாக 3 குழந்தைகள் கிடைத்ததில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரே நேரத்தில் பிறந்த 3 குழந்தைகளைச் சமாளிப்பது மிகப் பெரிய கஷ்டம் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒரு பெண் துணை இன்றி, ஆணால் குழந்தைகளை வளர்க்க முடியும் என்று நிரூபிப்பதே என் எண்ணம். எவ்வளவு கஷ்டப் பட்டேனோ, அதைவிட அதிகமாகக் குழந்தைகளால் மகிழ்ச்சியை அனுபவித்தேன். லார்ஸ், பியர்ஸ், இயான் மூவரும் 15 வயதை எட்டிவிட்டனர். பிரிட்டனில் குழந்தை இல்லாத தம்பதியர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனி மனிதனாக வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட முதல் பிரிட்டன் மனிதர் நான்தான்!’’ என்கிறார் இயான்.

தாயும் நானே, தந்தையும் நானே!

நாரிபோன் என்பது புத்தப் புராணங்களில் வரக்கூடிய ஒரு மரம். இந்த மரத்தின் பழங்கள் இளம் பெண்ணைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்திரன் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஹிமாபன் என்ற புராணக் காட்டில் வசித்து வந்தார். இந்திரனின் மனைவி உணவுக்காகப் பழங்களைச் சேகரிக்கச் சென்றபோது, ஆண் துறவியால் தாக்கப்பட்டார். துறவிகள் தங்கள் தவ வலிமையால் எத்தனையோ சக்திகளைப் பெற்றும் காமத்தை வெல்ல முடியவில்லை. அதனால் இந்திரன் 12 மரங்களை உருவாக்கினார். அதில் உருவான பழங்கள் அனைத்தும் அழகிய இளம் பெண்ணைப் போலவே இருந்தன. துறவிகள் பழங்களால் ஈர்க்கப்பட்டால், தன் மனைவியைத் துன்புறுத்தமாட்டார்கள் என்று நினைத்தார்.

பெண் வடிவில் உள்ள பழங்களை ஆசையுடன் பறித்துச் சென்ற துறவிகள், 4 மாதங்களில் தங்கள் தவ வலிமையை இழந்தனர் என்கிறது தாய்லாந்து புராணம். இன்றுவரை தாய்லாந்து ஓவியங்கள், கதைகள், திரைப்படங்களில் இந்த நாரிபோன் மரம் இடம் பெற்று வருகிறது. பாங்காக் அருகில் இருக்கும் ஒரு புத்தர் ஆலயத்தில் 2 நாரிபோன் மரங்கள் இருப்பதாகச் சொல்கிறார் கள். ஆனால் அதை நம்புவதற்குத்தான் ஆட்கள் இல்லை.

நம்ப முடியவில்லை...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தாயும்-நானே-தந்தையும்-நானே/article8810513.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: சிலிர்க்க வைக்கும் நட்பு!

 
 
masala_2921830f.jpg
 

தென்னாப்பிரிக்காவில் வன விலங்குகள் சரணாலயத்தில் ஓராண்டுக்கு முன்பாக வேலை செய்தவர் டால்ப் வாக்கர். 10 மாதச் சிறுத்தைக் குட்டி கேப்ரியலை மிகவும் அன்புடன் கவனித்து வந்தார். உணவூட்டுவார், விளையாடுவார், கட்டிப் பிடித்துக்கொள்வார். வாக்கரின் அன்புக்குச் சற்றும் குறைவில்லாமல் கேப்ரியலும் அவரிடம் அன்பு காட்டியது. இருவரும் விளையாடுவதைப் பார்ப்பவர்கள், சிறுத்தைக்குட்டியா, பூனைக்குட்டியா என்று ஆச்சரியப்படுவார்கள்.

“வன விலங்கு களிடம் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். என் நம்பிக்கையும் அன்பையும் முழுவதுமாகப் பெற்றிருந்தது கேப்ரியல். இதுவரை ஒரே ஒருமுறைதான் கேப்ரியலின் நகங்கள் தவறுதலாக என் தலையில் கீறின. நான்கு நாட்கள் மருத்துவம் பார்த்தேன். கடந்த ஓராண்டு காலம் சரணாலயத்தில் நான் பணிபுரியவில்லை. மீண்டும் சரணாலயம் சென்றேன். கேப்ரியல் என்னை நினைவு வைத்திருக்குமா என்று சந்தேகப்பட்டேன்.

ஆனால் என்னை அப்படியே நினைவு வைத்திருந்தது. சற்றுப் பெரிய உருவமாக மாறியது தவிர, கேப்ரியலிடம் வேறு மாற்றங்கள் இல்லை. என்னைப் பார்த்ததும் பாய்ந்து ஓடி வந்தது. என் மீது தாவி ஏறி, முகம் முழுவதும் நாக்கால் ஈரம் செய்தது. என்னை விளையாட்டாகக் கீழே தள்ளி, படுத்துக்கொண்டது. மற்ற சிறுத்தைகளை அருகில் வர அனுமதிக்கவில்லை. என் வாழ்க்கையில் கேப்ரியலைப் போல அன்பான எந்த வன விலங்கையும் நான் பார்த்ததில்லை. எங்கள் அன்பின் ஆழத்தை நிரூபிக்க இரவு முழுவதும் நானும் கேப்ரியலும் ஒரே படுக்கையில் தூங்கினோம்’’ என்கிறார் வாக்கர்.

சிலிர்க்க வைக்கும் நட்பு!

பெரிய பாறைகளில் பாம்புகள், பல்லிகள் சூரிய வெளிச்சத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். அதே நுட்பத்தைப் பயன்படுத்தி சீனாவின் ஸியான் நகர முதியவர்கள் சுடும் பாறைகளில் ஓய்வெடுக்கிறார்கள். பூங்காக்களில் இருக்கும் பெரிய பாறைகள் மீது படுத்து, முகத்துக்கு ஒரு துண்டைப் போர்த்திக்கொள்கிறார்கள். இதன் மூலம் தங்களது நோய் குணமாவதாகச் சொல்கிறார்கள். லோ என்ற பெண்மணிதான் முதன்முதலில் பாறையில் படுக்கும் மருத்துவத்தை ஆரம்பித்தார். பிறகு இந்த விஷயம் பரவி, இன்று ஏராளமானோர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

‘’இது சீனாவின் பழங்கால மருத்துவ முறைகளில் ஒன்று. நான் இந்தச் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தவுடன் பல்வேறு நோய்களில் இருந்து விடுபட்டுவிட்டேன். மூட்டு வலி குறைந்தது. தசைகள் வலுவானது. தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை சூரியனின் கதிர்கள் உச்சத்தில் இருக்கும். இந்த நேரம்தான் சரியானது’’ என்கிறார் லோ. ஆனால் இதைப் பல மருத்துவர்கள் தவறு என்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலால் வேறு பல நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள். சில மருத்துவர்கள் இதை அங்கீகரிக்கவும் செய்கிறார்கள். 70 வயது பெண் ஒருவர் இப்படி வெயிலில் இருந்ததால் வயிறு முழுவதும் கொப்புளங்கள் வந்துவிட்டன. வலியால் துடித்துப் போனார் என்ற செய்தி மீடியாக்களில் பரவியது. ஆனாலும் பாறைகள் மீது படுக்கும் நிகழ்வு குறையவே இல்லை.

நோய் தீரும் என்றால் வெயில் ஒரு பொருட்டே இல்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிலிர்க்க-வைக்கும்-நட்பு/article8815127.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: குழந்தையான பொம்மை

 
 
masala_2400482f.jpg
 

பென்சிலை வைத்து ஓவியம் தீட்டுவார்கள். பென்சிலின் சீவித் தள்ளப்பட்ட பகுதியை வைத்து கண்கவர் ஓவியங்களை உருவாக்குகிறார் தென்னாப்பிரிக்காவில் ஆசிரியராக பணிபுரியும் மேஹன் மகனோச்சி. வெள்ளைத் தாளில் அவுட் லைன் வரைந்து கொள்கிறார். பிறகு வண்ணப் பென்சில்களைச் சீவி, சீவி அவுட் லைன் களுக்குள் நிரப்புகிறார். இப்படிச் செய்யும்போது ஓவியமாகத் தோன்றாமல், சிற்பம் போல காட்சியளிக்கிறது. ஒரு படத்தை நிறைவு செய்வதற்கே பல மணி நேரங்களாகும்.

’பென்சில் ஷேவிங் ஸ்கெட்ச்’ என்று இந்தக் கலைக்குப் பெயர் வைத்திருக்கிறார் மேஹன். படம் உருவாக்கி முடித்தவுடன் விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொள்கிறார். இவருடைய ஆட்ரி ஹெப்பர்ன், நெல்சன் மண்டேலா, ஸ்டீவ் ஜாப்ஸ் ஓவியங்களுக்கு பிரமாதமான வரவேற்பு இருக்கிறது. தன்னுடைய ஓவியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார்.

நீங்க கலக்குங்க மேஹன்!

சீனாவில் வசிக்கும் சாங் போவுக்கு இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான தலைவலி. உடலில் அடுத்தடுத்து ஏராளமான பிரச்சினைகள் தோன்ற, மன அழுத்தத்துக்குத் தள்ளப்பட்டார். தன்னுடைய உடல்நிலையை நன்கு அறிந்த சாங் போ, திருமணம் செய்துகொள்வதோ, குழந்தைகள் பெற்றுக்கொள்வதோ சாத்திய மில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஒருநாள் இணையதளத்தில் குழந்தை அளவு பொம்மை ஒன்றைக் கண்டார். அந்த பொம்மை தான் இனி தன் மகள் என்று முடிவு செய்தார். 14 ஆயிரம் ரூபாய் கொடுத்து பொம்மையை வாங்கிவிட்டார். ’ஸியாவோ டை’ அதாவது லிட்டில் பட்டர்ஃப்ளை என்று பெயர் சூட்டினார். நிஜக் குழந்தை போலவே நடத்த ஆரம்பித்துவிட்டார். கடைகள், உணவு விடுதிகள், தியேட்டர், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் என்று பொம்மையைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்.

ஐயோ… பாவம்…

லண்டனின் ஃபுல்ஹாம் பகுதியில் நடந்து செல்பவர்கள் மீது ஏராளமான தேனீக்கள் மோதின. எல்லோரும் பயந்து ஓடினர். அங்கு வந்த ஒரு காவலர் தேனீக்கள் எங்கிருந்து வருகின்றன என்று ஆராய்ந்தார். அருகில் பிஸா டெலிவரி செய்யக்கூடிய மோட்டார் பைக் நின்றது. அந்த பைக்கில் இருந்த பெட்டியில் ஆயிரக்கணக் கான தேனீக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. எல்லோரும் பயந்து ஒதுங்க, காவலர் மட்டும் அருகில் சென்றார். அவர் உடல் மீது தேனீக்கள் அமர்ந்தபோதும் சிரித்துக்கொண்டே நின்றார். சிறிது நேரத்தில் அந்த மோட்டார் பைக் உரிமையாளர் வந்தார். இதுவரை இப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை. தேனீ வளர்ப்புப் பெட்டியும் பைக் மீது இருந்த பெட்டியும் ஒரே மாதிரி இருப்பதால் தேனீக்கள் இப்படிச் செய்திருக்கலாம் என்றார் அவர்.

மரங்களை வெட்டினால் தேனீக்கள் எங்கே போகும்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குழந்தையான-பொம்மை/article7187728.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: இனி நாய்களுடனும் ரிமோட்டுக்குப் போராடணுமா!

 
 
masala_2922990f.jpg
 

செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள், வீட்டில் தனியாக நாய்களை விட்டுச் செல்வதை விரும்புவதில்லை. நாய்களுக்கு பொழுதுபோகாது என்பது அவர்களின் கவலை. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வை கண்டுபிடித்துள்ளது. நாய் தனியாக இருக்கும்போது தனக்கு தேவையான நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதியாக ரிமோட்டை உருவாக்கி உள்ளது. நாய்களே கால்கள், வாய் மூலம் இந்த ரிமோட்டை இயக்கி, பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொள்ள முடியும்.

அதற்கு ஏற்றவாறு தண்ணீர் புகாதவாறு பிளாஸ்டிக்கில் ரிமோட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி இயக்குவது என்று நாய்க்கு சொல்லிக் கொடுத்துவிட்டால் போதும் என்கிறார்கள். “91% நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். தாங்கள் வெளியே செல்லும்போது, நாய் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் போகிறதே என்று வருந்தினார்கள். அவர்களுக்காகவே இந்த ரிமோட். நாய்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கின்றன” என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

ஐயோ… இனி நாய்களுடனும் ரிமோட்டுக்குப் போராடணுமா!

ரஷ்யாவின் கிம்கி பகுதியில் போதை மருந்து வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. காவல் துறை எவ்வளவு முயன்றும் இதை ஒழிக்க முடியவில்லை. ஆனால் ஒரே மாதத்துக்குள் 40 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதற்குக் காரணம் பேட்மேன் ஆடை அணிந்த ஒரு மனிதர். “ஜூன் முதல் வாரத்தில் பேட்மேன் ஆடையில் ஒருவர், போதை மருந்து உற்பத்தி செய்யும் கிடங்குக்குள் நுழைந்தார். நீண்ட நேரம் கழித்து வெளியே வந்தார். கிடங்கு தீப்பற்றி எரிந்தது. காவலர்களுக்குத் தகவல் கொடுத்தேன். அவர்கள் வந்து பார்த்தபோது, கிடங்கின் ஒரு மூலையில் இருவரின் கைகள் விலங்குகள் பூட்டப்பட்டு, மோசமாக தாக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்” என்கிறார் ஒரு டாக்ஸி டிரைவர்.

பேட்மேன் யார் என்ற விவரம் தெரியாமல் எல்லோரும் குழப்பத்தில் இருந்தபோது, பத்திரிகையில் கடிதம் ஒன்று வெளியானது. “நான் களை எடுப்பவன். மனிதநேயத்துக்கான முதல் சூப்பர் ஹீரோவாக இருக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னைத் தெரியாது. சமூகத்தைச் சீரழித்து வரும் போதை மருந்து விற்பனையாளர்களுடனும் பாலியல் பலாத்காரம் செய்பவர் களுடனும் போராடி, குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்திருக் கிறேன். நான் எந்த சமூக விரோதியையும் கொலை செய்ய வில்லை.

நான் காவல் துறைக்கோ, அரசாங்கத்துக்கோ எதிரி இல்லை. ஆனால் காவல் துறையே கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு எல்லாம் சென்று, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் திறமை எனக்கு இருக்கிறது. நான் புகழுக்காகவோ, வேறு எதையும் எதிர்பார்த்தோ இந்தக் காரியங்களைச் செய்யவில்லை. சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும் என் ட்விட்டர் பக்கத்தில் குற்றவாளிகள் குறித்து தகவல்களை அளிக்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

ரியல் பேட்மேன்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இனி-நாய்களுடனும்-ரிமோட்டுக்குப்-போராடணுமா/article8818470.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: இளம் தொழிலதிபர்!

 
 
masala_2924657f.jpg
 

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 14 வயது வில் டீத், வெற்றி கரமான தொழிலதிபராக உருவாகி இருக்கிறார்! வில் டீத் பெற்றோர் இருவரும் தொழிற்சாலைகளில் மொத்தமாகப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார்கள். சிறிய வயதில் இருந்தே தொழிலை நேரடியாகப் பார்த்து வந்த வில் டீத்துக்கும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. வில் டீத்தைச் சீனாவுக்கு அனுப்பி, தேவையான பொருட்களை வாங்கி, தொழில் ஆரம்பிக்கும்படி பெற்றோர் உற்சாகப்படுத்தினர். குழந்தைகள் மற்றும் தன் வயதை ஒத்த சிறுவர்களுக்குத் தேவையான பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் என்று 1.68 லட்சம் ரூபாய்க்கு வாங்கி வந்தார். ஒரே வாரத்தில் ஆஸ்திரேலியாவில் 6.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார்! முதல் முயற்சியிலேயே ஒரே வாரத்தில் 5 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டிய வில் டீத்தை நினைத்துப் பெற்றோருக்குப் பெருமையாக இருக்கிறது.

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!

பொதுவாக இறைச்சிகளைப் பயன்படுத்தி இனிப்புகள் செய்வதில்லை. ஆனால் துருக்கியில் மட்டும் ‘டவக் காக்சு’ என்ற இனிப்புப் பொருள் பல நூற்றாண்டுகளாகக் கோழி இறைச்சியில் செய்யப்பட்டு வருகிறது. இந்த இனிப்பு புட்டிங்கில் கோழி இறைச்சியே பிரதானம். ஒட்டோமான் பேரரசில் மன்னர்கள் நடு இரவில் இனிப்புச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். புதிதாக வந்த சமையற்காரருக்கு அரண்மனை சமையலறையில் கோழிகளைத் தவிர வேறு உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. பால், சர்க்கரை, கோழி இறைச்சியை வைத்து ஓர் இனிப்பைப் புதிதாக உருவாக்கிவிட்டார். அந்த இனிப்பு அரசருக்கு மட்டுமில்லை, அனைவருக்கும் பிடித்துப் போனது. கோழியால் செய்யப்பட்ட இனிப்பு என்று சொன்னால் மட்டுமே தெரியும். மற்றபடி யாராலும் இதைக் கண்டுபிடிக்கவே முடியாது.

இன்று துருக்கியின் மிக முக்கியமான இனிப்புகளில் ஒன்றாக இருக்கிறது. இஸ்தான்புல்லில் ஓஸ்கோனாக் என்ற உணவு விடுதியில் கடந்த 50 ஆண்டுகளாக இந்த இனிப்புச் செய்யப்பட்டு வருகிறது. ’’3 லிட்டர் பாலில் அரை கிலோ சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் இருந்து, எலும்பில்லாத இறைச்சியை எடுத்து, மெல்லியத் துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவேண்டும். இதைப் பாலில் சேர்த்துக் குளிர வைக்கவேண்டும்.

பிறகு மீண்டும் 20 நிமிடங்கள் அடுப்பில் வைக்க வேண்டும். கலவை கெட்டியாக வரும்போது, உலோகத் தட்டுகளில் ஊற்றி, ஆறிய பிறகு வெட்ட வேண்டும். யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் எங்கள் சுவைக்கு ஈடாக அதை ஒருவராலும் செய்ய முடியாது. கோழி இறைச்சியால் செய்த இனிப்பு என்றதும் விருப்பம் இல்லாமல் சுவைப்பார்கள். ஆனால் சுவைத்த பிறகு அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள்’’ என்கிறார் விடுதியின் உரிமையாளர். இந்த இனிப்பு சமீபகாலமாக உலக அளவில் புகழ்பெற்று வருகிறது.

இறைச்சியிலும் இனிப்பு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இளம்-தொழிலதிபர்/article8823132.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: இது சிங்கம் ஜீன்ஸ்!

 
masala_2926203f.jpg
 

ஜப்பானில் ‘zoo jeans’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் ஜீன்ஸ் துணிகளை வடிவமைப்பது வனவிலங்கு பூங்காவில் வசிக்கும் சிங்கங்கள்! ஜப்பானின் டொஹோகு பகுதியில் இருக்கும் வனவிலங்கு பூங்காவில் 2014-ம் ஆண்டு ஒரு ஜோடி ஜீன்ஸ் சிங்கங்களால் முதல்முறை வடிவமைக்கப்பட்டன. டெனிம் ஜீன்ஸ் துணிகள் சுற்றப்பட்ட பொம்மைகளை சிங்கங்கள், புலிகள், கரடிகள் இருக்கும் இடங்களில் வைத்தனர். விளையாட்டுப் பொருள் என்று எண்ணி, அவை விளையாடி, பற்களாலும் நகங்களாலும் கிழித்தன. பிறகு இந்தத் துணிகளை எடுத்து, தைத்துவிட்டனர்.

இப்படிச் சிங்கங்களாலும் புலிகளாலும் கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் துணிகளுக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு. 10 ஜோடி ஜீன்ஸ் இணையதளம் மூலம் ஏலத்துக்கு விடப்பட்டன. கணிசமான தொகை கிடைத்தது. இந்த ஆண்டும் 19 வயது ஆண் சிங்கத்தாலும் 16 வயது பெண் சிங்கத்தாலும் ஜீன்ஸ் துணிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதம் இவை ஏலம் விடப்பட இருக்கின்றன. ஆரம்ப விலை 65 ஆயிரம் ரூபாய். ஏலத்தில் இருந்து கிடைக்கும் பணம் முழுவதும், வனவிலங்கு பூங்காவுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஜப்பானில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் ஜீன்ஸ், சிங்கங்களால் வடிவமைக்கப்பட்டவையே!

இது சிங்கம் ஜீன்ஸ்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயது ரிச்சர்ட் கிம்பர்லி கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் தொழிலை, 20 ஆண்டுகளாகச் செய்து வந்தார். வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் வரும் சமிக்ஞைகளால் அதிக அளவில் கதிர்வீச்சுகள் வெளியேறுகின்றன. இதனால், தான் தனக்கு எலக்ட்ரோ ஹைபெர்சென்சிடிவிட்டி என்ற அரிய குறைபாட்டுக்கு ஆளானதாகக் கூறுகிறார் ரிச்சர்ட். தற்போது தன் தொழிலை மூடிவிட்டார். ‘’1996-ம் ஆண்டு முதல் எப்போதும் கம்ப்யூட்டர், செல்போன்களுடனே வாழ்ந்து வந்தேன். வயர்லெஸ் தொழில்நுட்பத்தால் அதிக அளவில் கதிர்வீச்சுகள் வெளியேறி, என் உடல் நிலையை மோசமாக மாற்றிவிட்டன. ஒரு மருத்துவரிடம் ஆலோசித்தேன். எலக்ட்ரோ ஹைபர்சென்சிடிவிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார். வீட்டில் உள்ள அலுவலகத்தை மூடினேன். வயர்லெஸ் தொழில்நுட்பத்தை நீக்கினேன். என் பிரச்சினை சிறிது குறைந்தது. ஆனாலும் என் வீட்டைச் சுற்றிலும் வயர்லெஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதால், முழுமையாகக் குணமாக முடியவில்லை. அளவுக்கு அதிகமாகச் சோர்ந்து போனேன். இதில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள அலுமினியத் தகடுகளால் மூடப்பட்ட வேனுக்குள் குடிபுகுந்தேன். அலுமினியத் தகடுகள் கதிர்வீச்சுகளைத் தடுத்து நிறுத்தக்கூடி யவை.

வேனுக்குள் வயர்லெஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தாமல், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் கம்ப்யூட்டரையும் போனையும் பயன்படுத்தி, வெப் டிசைனராக வேலை பார்த்து வருகிறேன். எலக்ட்ரோ ஹைபெர்சென்சிடிவிட்டி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். சரியான நேரத்தில் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட்டேன். இல்லாவிட்டால் என் வாழ்க்கையே என்ன ஆகியிருக்குமோ என்று தெரியாது’’ என்கிறார் ரிச்சர்ட். எலக்ட்ரோ ஹைபெர்சென்சிடிவிட்டி என்ற பிரச்சினை மிக அரிதானது. இது வயர்லெஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இது-சிங்கம்-ஜீன்ஸ்/article8827996.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: நிஜ டார்ஸான்கள்!

 
masala_2927333f.jpg
 

வியட்நாமைச் சேர்ந்த ஹோ வான் லாங்கும் அவரது அப்பா ஹோ வான் தானும் 41 ஆண்டுகள் காடுகளில் வசித்திருக்கிறார்கள். வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்தபோது, ஹோ வான் தானின் மனைவியும் 2 குழந்தைகளும் சுரங்க வெடிப்பில் உயிர் இழந்துவிட்டனர். மனம் உடைந்துபோனவர் 2 வயதான ஹோ வான் லாங்கைத் தூக்கிக்கொண்டு, காட்டுக்குள் நுழைந்துவிட்டார். அன்று முதல் வெளியுலகத் தொடர்பே அவர் வைத்துக்கொள்ளவில்லை. காடுகளில் உள்ள பழங்களை இருவரும் உண்டனர். சோளங்களை விளைவித்துச் சாப்பிட்டனர்.

பழங்கள் கிடைக்காத காலங்களில் எலிகளை வேட்டையாடி உண்டனர். கோரைப் புற்களையும் மரப்பட்டைகளையும் ஆடையாக அணிந்துகொண்டனர். உயரமான இடத்தில் பாதுகாப்பான குடிசை ஒன்றை உருவாக்கிக்கொண்டனர். 41 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு காட்டுக்குள் வந்த சிலர், இருவரையும் கண்டனர். இவர்கள் விநோதமாக நடந்துகொண்டதைப் பார்த்து, காவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். காவலர்கள் இருவரையும் மீட்டனர். இருவரும் சாதாரண மனிதர்களைப் போல இல்லை. அவர்களுக்குக் காட்டுக்கு அருகில் சிறு வீட்டைக் கொடுத்து, தங்க வைத்திருக்கிறார்கள். 3 ஆண்டுகளில் உலகத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நிஜ டார்ஸான்கள்!

சீனாவில் ‘நேச்சுரல் ஷாக் ஹெல்த் கிளப்’ மூலம் 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ‘Punching therapy’. தலை முதல் பாதம் வரை குத்துவதன் மூலம் நோய் குணமாக்கும் மருத்துவம். ஹார்பின் பகுதியைச் சேர்ந்த பாவோ என்ற பெண்மணி, சிகிச்சைக்காகச் சேர்ந்தார். சிகிச்சை மூலம் மேலும் பிரச்சினை கள் பெரிதாகின. அவரது பார்வை குறையத் தொடங்கியது. தன்னுடைய கவலையைச் சிகிச்சை அளிப்பவர்களிடம் தெரிவித்தார் பாவோ. அவர்கள் மேலும் நம்பிக்கை அளித்து, சிகிச்சையைத் தொடர்ந்தனர். 18 மாதங்களில் 160 தடவை சிகிச்சை எடுத்துக்கொண்டார் பாவோ. “வலது கண் பார்வை கிட்டத்தட்ட பறிபோய்விட்டது. வேறு வழியின்றி கண் மருத்துவரைச் சந்தித்தேன். அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்கள்.

நேச்சுரல் ஷாக் ஹெல்த் கிளப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் சிகிச்சையால் கண் புரை எல்லாம் சரியாகி இருப்பதாகவும் எனக்கு மட்டுமே ஏதோ பிரச்சினை என்றும் கூறிவிட்டனர். வழக்கு தொடுத்தேன். ஹெல்த் கிளப் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. ஆனால் என் பார்வை திரும்ப வருமா?’’ என்கிறார் பாவோ. சீனாவில் அக்குபஞ்சர், டாய் சி போன்ற நம்பகமான பாரம்பரிய மருத்துவ முறைகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்து, மக்கள் புதுப்புது மருத்துவச் சிகிச்சைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அடப் பாவமே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நிஜ-டார்ஸான்கள்/article8831383.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ’கடல்குதிரை வில்லா!’

 
masala_2399308f.jpg
 

கேரளத்திலும் ஸ்ரீநகரிலும் படகு வீடுகளைப் பார்த்திருப்போம். ஆனால் பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடம்பர படகு வீட்டை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் படுக்கையறை தண்ணீருக்குள் இருக்கிறது.

முதல் தளத்தில் நீச்சல் குளம். மேல்தளத்தில் சமையலறை. வீட்டுக்கு வெளியே செயற்கை பவளப்பாறைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடி வீட்டுக்குள் படுத்துக்கொண்டே தண்ணீருக்குள் நீந்திச் செல்லும் மீன்கள், ஆமைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களை ரசிக்கலாம். ’கடல்குதிரை வில்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள இதுபோன்று இன்னும் 40 வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.

இயற்கை வளம் மிகுந்த இடத்தையும் மாசுபடுத்த முடிவு செஞ்சாச்சா….

சீனாவின் ஷாங்காய் பகுதியில் வசிக்கிறார் கு ஜி. இவர் ஒரு பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் வேலை செய்து வருகிறார். இளம் வயது ஆசிரியர். மாணவர்களிடம் மிகவும் நட்பாகப் பழகக்கூடியவர். இவருடன் மாணவர்கள் வெளியே செல்வது வழக்கம். அப்படிப் போகும்போது ஒரு சில மாணவர்கள் குடை பிடித்துக்கொண்டு வருவார்கள். மாணவன் ஒருவன் ஆசிரியருக்குக் குடை பிடிக்கிறான் என்ற செய்தி புகைப் படத்துடன் இணையதளங்களில் வேகமாகப் பரவியது.

பலரும் கு ஜிக்குக் கண்டனம் தெரிவித்தனர். செய்தியையும் புகைப்படத்தை யும் பார்த்து அதிர்ந்து போனார் கு ஜி. பள்ளியிலும் அவர் மீது விசாரணை நடைபெற்றது. இறுதியில் கு ஜி மீது எந்தக் குற்றமும் இல்லை, ஒரு சில ஆர்வக் கோளாறு மாணவர்கள் தாங்களாகக் குடைபிடித்தார்கள் என்று தெரியவந்தது. இணையத்தின் மோசமான பக்கத்தைக் கண்ட கு ஜி அதிர்ச்சியில் இருக்கிறார்.

அடப்பாவமே…

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ரமனி துருவசுலா என்ற மருத்துவர், தம்பதியருக்கு இடையேயான பிரச்சினைகளை மிக எளிதான வழியில் தீர்த்து வைக்கிறார். மனோதத்துவ மருத்துவரான ரமனியிடம் ஏராளமானவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்படி கேட்கிறார்கள். அவர்களிடம் குறைகளைக் கேட்ட பிறகு, Ikea மரச்சாமன்கள் விற்கும் கடையில் மேஜை, அலமாரி போன்ற ஏதோ ஒரு பொருளை வாங்கி, வீட்டில் வைக்கச் சொல்கிறார். Ikea நிறுவனத்தில் மேஜைகளாகவோ, அலமாரிகளாகவோ பொருட்கள் வருவதில்லை. தனித்தனிப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, சிறிய அட்டைப் பெட்டியில் போட்டுக் கொடுத்து விடுவார்கள்.

வீட்டில் அவற்றைப் பிரித்து, நாமே இணைத்து மேஜையையோ, அலமாரியையோ உருவாக்க வேண்டும். இதைத் தனியாளாகச் செய்ய முடியாது. கணவனும் மனைவியும் சேர்ந்து உருவாக்கும்போது தம்பதியரிடம் ஒற்றுமை, பொறுமை, அன்பு எல்லாம் உருவாகி விடுகிறது. அடுத்த தடவை மருத்துவரைச் சந்திக்கும்போது மிக அன்பான தம்பதியராக மாறிவிடுகிறார்கள். அடுத்து வரும் ஒன்றிரண்டு சந்திப்புகளில் அவர்களின் பிரச்சினைகளை முழுமையாகச் சரி செய்துவிடுகிறார் ரமனி.

அடடா! மருந்து, மாத்திரை இல்லாமல் நல்ல டெக்னிக்கா இருக்கே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கடல்குதிரை-வில்லா/article7184069.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: தக்காளி மரங்கள்!

 
 
masala_2930370f.jpg
 

கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்பட்டது ‘ஆக்டோபஸ் தக்காளி மரங்கள்’. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஆக்டோபஸ் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இந்தப் பெயர். 40 முதல் 50 சதுர மீட்டர்கள் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் தக்காளி மரத்தில் ஒவ்வொரு சீசனிலும் பல்லாயிரக்கணக்கான கிலோ தக்காளிகள் விளைகின்றன. அமெரிக்காவின் ப்ளோரி டாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட்டில் விவசாயத்துக் காகத் தனி பசுமைக்குடில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கேதான் ஆக்டோபஸ் தக்காளி மரங்களும் இருக்கின்றன.

சீனாவில் இருந்து தக்காளி விதைகள் கொண்டு வரப்பட்டு, இங்கே விதைக்கப்பட்டன என்கிறார்கள். ஒரு தக்காளி மரம் வளர்வதற்கு 1.2 முதல் 1.5 ஆண்டுகள் வரை ஆகிறது. 8 மாதங்கள் வரை இந்த மரம் காய்ப்பதில்லை. அதற்குப் பிறகு பூத்து, காய்க்க ஆரம்பித்தால் 14 ஆயிரம் தக்காளிகள் வரை அறுவடை செய்யலாம்! தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் 2 தக்காளி மரங்களில் இருந்து 32 ஆயிரம் தக்காளிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 522 கிலோ.

இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது. டிஸ்னி வேர்ல்டில் 1 மணி நேரம் பசுமைக்குடிலைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அசாதாரணமான செடிகள், காய்கள், பழங்கள் போன்றவற்றை இங்கே பார்க்கலாம். ஒவ்வொரு செடியும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு விளைகிறது, எப்படிப் பராமரிக்கிறார்கள் போன்ற தகவல்களை சுவாரசியமாகத் தருவார்கள். தக்காளி மரத்தில் காய்ப்பதே ஓர் ஆச்சரியம், அதிலும் பல்லாயிரக்கணக்கில் காய்த்துத் தொங்குவதைப் பார்ப்பதற்கென்றே என்றே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்!

தக்காளி செடியா, மரமா என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டதே!

ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பகுதியில் இருக்கிறது ஒரு ரயில் சுரங்கம். 1866-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1919-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அருகில் இருவழி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டவுடன் இந்தச் சுரங்கம் பயன்படுத்தப்படவில்லை. 1950-ம் ஆண்டு இந்தச் சுரங்கத்தில் ஆஸ்திரேலியாவின் முதல் காளான் பண்ணை அமைக்கப்பட்டது.

டாக்டர் நோயல் அர்ரோல்ட் என்ற ஆராய்ச்சியாளர் இங்கே வித விதமான காளான்களை விளைவித்து, ஆஸ்திரேலிய சந்தைக்கு அனுப்பினார். காளான்கள் வளர்வதற்கு குளிர்ச்சியான இடம், குறைவான வெளிச்சம் தேவை என்பதால், இந்தச் சுரங்கம் காளான் வளர்ப்புக்கு மிகச் சரியாக இருக்கிறது. 650 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கத்தின் இரு பக்கங்களிலும் காளான்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கே 15 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு விளக்குகள் போடப்பட்டு, 12 மணி நேரம் வரை எரிய வைக்கப்படுகின்றன.

“ஒரு வாரத்தில் சுமார் 1500 கிலோ காளான்களை விளைவிக்கிறோம். ரசாயன கலப்பு எதுவும் இல்லை. வீணான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். அதிக லாபம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி காளான்களை வைத்துப் பலவித ஆராய்ச்சிகளையும் இங்கே மேற்கொண்டு வருகிறோம்’’ என்கிறார் நோயல் அர்ரோல்ட்.

ஆஹா! ரயில் சுரங்கத்தில் காளான் பண்ணை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தக்காளி-மரங்கள்/article8843158.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: தலைமீது அமர்ந்த பறவை!

 
 
masala_2929341f.jpg
 

இங்கிலாந்தைச் சேர்ந்த சைமனும் ரிச்சர்ட்டும் பறவைகள் ஆராய்ச்சியா ளர்கள். இருவரும் கேமராக் களுடன் பைனாகுலரை வைத்துக்கொண்டு ஆர்டிக் டெர்ன் பறவைகளைப் பார்த்துக் கொண்டி ருந்த னர். திடீரென்று ஒரு பறவை வேகமாகப் பறந்து வந்து ரிச்சர்ட்டின் தலை மீது அமர்ந்தது.

‘‘ரிச்சர்ட் அசையாமல் பைனாகு லரில் பார்த்துக் கொண்டி ருந்தார். பறவையும் பைனாகுலர் பார்க்கும் திசையை உற்று நோக்கிக்கொண்டிருந்தது. நான் வேகமாக இந்தக் காட்சிகளைப் படம் பிடித்தேன். அந்தப் பறவைக்குத் தன்னுடைய முட்டைகளுக்கும் கூட்டுக்கும் ஆபத்து வருமோ என்ற பதற்றம். திடீரென்று ரிச்சர்ட்டின் தொப்பியையும் காதுகளையும் அலகால் கொத்த ஆரம்பித்துவிட்டது. அப்படியும் அமைதி காத்தார் ரிச்சர்ட். எங்களால் ஆபத்து இல்லை என்பதை உணர்ந்த பிறகு, பறந்து சென்றது’’ என்கிறார் சைமன்.

அட்டகாசமான படம்!

ஜெர்மனியைச் சேர்ந்த காபிஃபார்ம் நிறுவனம், காபி தூளுடன் பயோபாலிமரைச் சேர்த்து அழகான காபி கோப்பைகளை உருவாக்கி வருகிறது. இந்தக் கோப்பைகள் நீண்ட காலம் உழைப்பதுடன், கோப்பையில் இருந்து காபியின் நறுமணமும் கிடைக்கிறது. உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் குவளைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குவளை காபி குடித்தால் 2 ஸ்பூன் பிளாஸ்டிக் கழிவு நிலத்தில் சேர்கிறது. இந்தப் பிரச்சினையைக் குறைப்பதற்காக, மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் நிலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வது குறைகிறது. ஆனால் அதன் ஆபத்து அதிகம் குறைந்து விடுவதில்லை. காபி கோப்பைகளை உருவாக்கியவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூலியன் லெச்னர், ‘‘சர்க்கரையில் கோப்பைகளை உருவாக்க முயன்றோம். ஆனால் தோல்வியைச் சந்தித்தோம். கடைசியில் பயோபாலிமர் செல்லுலோஸ், நார்ப்பொருட்கள், பசை, காபி தூளைக் கொண்டு சூழலுக்குத் தீங்கிழைக்காத கோப்பைகளை உருவாக்கிவிட்டோம். ஒரு கோப்பையை 6 முறை பயன்படுத்தலாம். பிறகு மறுசுழற்சிக்காக எங்களிடமே அனுப்பி வைக்கலாம்’’ என்கிறார்.

சூழலுக்கு உகந்த காபி கோப்பைகள்!

இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள நாய்களுக்கான க்ளப் ஒன்றில் எல்விஸ், பெல்லா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்துக்காக அரங்கம் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாய்களுக்கான உணவில் தயாரித்த மூன்று அடுக்கு கேக் வைக்கப்பட்டிருந்தது. மணமகள் பெல்லா திருமண ஆடை, பூக்கள் சூடப்பட்ட தலையலங்காரம் என்று வசீகரித்தாள். எல்விஸ் டை கட்டப்பட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந் தான். இந்தத் திருமணத்துக்கு ஏராளமானவர்கள் தங்கள் செல்ல நாய்களை விதவிதமாக அலங்கரித்துக்கொண்டு வந்திருந்தனர்.

‘‘பெல்லாவுக்கும் எல்விஸுக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இரண்டும் அத்தனை அன்பாக இருக்கும். இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே 2 குழந்தைகள் இருக்கின்றன. திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். 2 லட்சம் ரூபாய் இதற்காகச் செலவு செய்திருக்கிறேன்’’ என்கிறார் நாய்களின் உரிமையாளர் அல்மா.

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா அல்மா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தலைமீது-அமர்ந்த-பறவை/article8838402.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அழுகை பிஸினஸ்!

 
 
masala_2397728f.jpg
 

ஜப்பானிய பெண்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளா கிறார்கள். அவர்களின் பிரச் சினைகளைக் குறைப்பதற்காக ஷின்ஜுகு நகரில் உள்ள மிட்சுய் கார்டன் யோட்சுயா தங்கும் விடுதியில் ஒரு யோசனை செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது பெண்களுக்கு என்று பிரத்யேகமாக இங்கே `அழுகை’ அறைகளை வாடகைக்கு விடுகிறார்கள். ஓர் இரவுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

எந்த விதமான சங்கடமுமின்றி, மன அழுத்தம் குறையும் வரை கதறி அழலாம். கண்ணீரைத் துடைப்பதற்கு ஸ்பெஷல் டிஷ்யு பேப்பர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அழுது, அழுது கண்கள் வீங்காமல் இருப்பதற்காகக் கண்களை நீராவியில் காட்டும் வசதியும் இருக்கிறது.

அழுது முடித்த பிறகு, சந்தோஷமான மன நிலையைக் கொண்டு வருவதற்கு நகைச்சுவைத் திரைப்படங்கள், காமிக் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்து, படித்து விட்டு சந்தோஷமாகத் தூங்கி விடலாம். மறுநாள் காலை புத்துணர்வோடு இயல்பான வேலைகளுக்குத் திரும்பலாம்.

ஐயோ… அழுகையைக் கூட பிசினஸா மாத்திடறீங்களே…

அர்ஜெண்டினாவில் ரக்பி விளையாட்டு வீரர்கள் சால்டா பியர் பாட்டில் மூடிகளைப் பற்களால் கடித்து, நீக்குகிறார்கள். இதனால் அவர்களது பற்கள் விரைவில் உடைந்து விழுந்துவிடுகின்றன. ரக்பி வீரர்களுக்கு மாற்றுப் பற்களைப் பொருத்துவதற்கு சால்டா பியர் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த மாற்றுப் பற்கள், பாட்டில் மூடியை எளிதாகத் திறக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. வாயில் மூடியை வைத்ததும் மாற்றுப் பல் மூடியைச் சில நொடிகளில் கழற்றி விடுகிறது. இதன் மூலம் பற்களுக்கும் ஆபத்தில்லை, அதிக ஆற்றலைச் செலவிட வேண்டிய அவசியமும் இல்லை. பல் மருத்துவர் செபாஸ்டின் ஜுரி தங்களுடைய பிரத்யேகக் கண்டுபிடிப்பான மூடி திறக்கும் பற்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்.

ஒபனர் வைத்தால் எளிதாக வேலை முடிந்துவிடுமே…

கனடாவைச் சேர்ந்த மார்க் தன் மனைவி, குழந்தைகளுடன் மிக அழகான, 3 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவார். 40 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு 3 நாட்கள் வீட்டைக் கொடுக்கும்படி ஒருவர் கேட்டார். மார்க்கும் சம்மதித்தார். திடீரென்று 4 பெரியவர்களுடன் வீட்டுக்கு வந்த அந்த மனிதர், திருமணத்துக்காக இவர்கள் வந்திருக்கிறார்கள். விரைவில் சென்றுவிடுவார்கள் என்று கூறினார். மார்க்கும் அதை நம்பி, சாவியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார்.

அருகில் இருந்தவர்கள் மார்க்குக்குத் தகவல் கொடுத்தனர். அவசரமாக வந்து சேர்ந்தார் மார்க். வெளியில் இருந்து பார்த்தபோதே வீடு அலங்கோலமாகத் தெரிந்தது. வாடகை நாட்கள் முடியும் வரை வீட்டுக்குள் உள்ளே செல்ல சட்டத்தில் இடமில்லை. ஒருநாள் முழுவதும் காத்திருந்தார். மறுநாள் காவலர்களுடன் கதவைத் திறந்தபோது, எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

வாடகைக்கு விடப்பட்ட பகுதி யுடன் ஒட்டு மொத்த வீட்டையும் பாழாக்கியிருந்தனர். உணவுப் பொருட்களும் மது புட்டிகளும் இறைந்து கிடந்தன. எல்லா பொருட்களும் தலை கீழாகக் கவிழ்ந்து கிடந்தன. இந்த வீட்டைச் சரி செய்ய வேண்டும் என்றால் 40 லட்சம் ரூபாய் தேவைப்படும். வருமானத்துக்கு ஆசைப்பட்டு, இப்படி லட்சக்கணக்கில் இழந்து நிற்கிறோம் என்று வருத்தப்படுகிறார்கள் மார்க் தம்பதியர்.

நீங்க ரொம்பவே பாவம் மார்க்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அழுகை-பிஸினஸ்/article7179876.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: கொகெய்ன் கரடி!

 
 
masala_2931541f.jpg
 

அமெரிக்காவின் கெண்டகி ஃபன் மாலில் பாப்லோ எஸ்கோ என்ற கரடியின் ‘பாடம்’ செய்யப்பட்ட உருவம் வைக்கப்பட்டுள்ளது. 1985-ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல்காரர் ஆண்ட்ரூ தோர்டன், தன் உடலில் கொகெய்ன் டப்பாக்களைக் கட்டிக்கொண்டு, விமானத்தில் இருந்து ஜார்ஜியா காட்டுப் பகுதியில் குதித்தார். பாராசூட் வேலை செய்யவில்லை. கீழே விழுந்து இறந்து போனார். 3 மாதங்களுக்குப் பிறகு காட்டுப் பகுதிக்கு வந்த காவலர்கள், கொகெய்ன் டப்பாக்களைக் கண்டுபிடித்தனர். அருகில் ஒரு கறுப்புக் கரடி இறந்து கிடந்தது. கரடியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதிக அளவில் கொகெய்ன் சாப்பிட்டதால், கரடி உயிரிழந்ததாகச் சொன்னார்கள்.

“கொகெய்ன் அதிகம் எடுத்துக் கொண்டால் பெருமூளை, ஜீரண மண்டலம், சிறுநீரகம், இதயம் என்று ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு, இறுதியில் உயிரிழப்பு ஏற்படும். மனிதர்கள் இப்படி மரணமடைவது புதிதல்ல. ஆனால் ஒரு கரடி உயிரிழந்த சம்பவம் விசித்திரமானது. அதனால் இந்தக் கரடியை வைத்து மனிதர்களுக்கு விழிப்புணர்வூட்ட விரும்பினோம். கரடியைப் பாடம் செய்து. ‘கொகெய்ன் கரடி’ என்று பெயரிட்டு, பொழுதுபோக்குப் பூங்காவுக்கு கொடுத்துவிட்டோம்” என்கிறார் மருத்துவ அதிகாரி. கடந்த 30 ஆண்டுகளில் கொகெய்ன் கரடி பலரின் கைகளுக்கு மாறிவிட்டது. இறுதியில் ஸு டங் என்ற சீனரால் வாங்கப்பட்டு, கெண்டகி ஃபன் மாலில் வைக்கப்பட்டது.

மனிதனால் உயிர் இழந்து, மனிதனுக்கே பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறது கொகெய்ன் கரடி!

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை விபத்து நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. மலேசியாவைச் சேர்ந்த புகைப்படக்காரர் கியோவ் வீ லூங், நண்பர்களுடன் ஃபுகுஷிமாவின் 4 நகரங்களை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பியிருக்கிறார். “ஒரு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த நகரங்களில் இன்று வெறுமை குடி கொண்டிருக்கிறது. அணு விபத்து நிகழ்ந்தவுடன் அப்பகுதி மக்கள் தங்கள் விலை மதிப்புமிக்க பொருட்களைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை. செய்துகொண்டிருந்த வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, வெளியேறி இருக்கிறார்கள்.

வாஷிங் மெஷினில் இருந்து பாதி துணிகள் வெளியே வந்ததோடு இருக்கின்றன. கடைகளில் வியாபாரம் செய்த பணத்தைக் கூட எடுத்துச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான புத்தகங்களும் டிவிடிகளும் அப்படியே உறைந்திருக்கின்றன. காலண்டர்கள் அந்தத் துயரமான நாளை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்றும் சிக்னல்கள் வேலை செய்கின்றன. ஆனால் சாலைகளில் வாகனங்கள்தான் இல்லை. பல இடங்களில் தங்க ஆபரணங்களைக் கூட பார்க்க முடிந்தது. இன்றும் அணுக்கதிர்களின் ஆபத்து அதிகம் இருக்கிறது. நாங்கள் முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் பாதுகாப்பாக சென்றோம். வெளியில் வந்த பிறகு கண்கள் எரிந்தன. நாசியில் ரசாயன வாசனையை உணர முடிந்தது” என்கிறார் கியோவ் வீலூங்.

வாழ்ந்து கெட்ட நகரம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கொகெய்ன்-கரடி/article8848151.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மரக் கண்ணாடி வீடு!

 
 
masala_2933387f.jpg
 

ஆர்டிக் சர்க்கிளில் உள்ள நார்வேயின் சான்ட்ஹார்னே தீவில் அழகான, ஆரோக்கியமான வீட்டைக் கட்டியிருக்கிறார்கள் பெஞ்சமின், மேரி தம்பதியர். மணல், களிமண், வைக்கோல் வைத்து இயற்கையான முறையில் வீட்டைக் கட்ட வேண்டும் என்பது மேரியின் லட்சியமாக இருந்தது. ஆனால் ஆர்டிக் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் இந்த வீடு சாத்தியமில்லை.

ஆனாலும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தார் பெஞ்சமின். மேரியின் விருப்பம் போலவே மண்ணும் மரங்களும் சேர்த்து வீட்டைக் கட்டினார். வீடு பாழாகாமல் இருப்பதற்கு, வீட்டைச் சுற்றி அரைக்கோள வடிவில் ஒரு கண்ணாடிக் கூண்டை உருவாக்கிவிட்டார். கடும் பனிப் பொழிவு அதிகம் நிலவும் இந்த இடத்தில், ஆண்டு முழுவதும் இதமான குளிர் நிலவும் வகையில் வீடு உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடிக் கூண்டுக்கும் வீட்டுக்கும் இடையே இருக்கும் பகுதியில் வீட்டுக்குத் தேவையான காய்களும் பழங்களும் விளைவிக்கப்படுகின்றன.

“3 வாரங்களில் இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வீட்டுக்கு ஆழமான அடித்தளம் தேவை இல்லை. சுற்றுச்சூழலுக்கும் தீங்கு இல்லை. 15 மீட்டர் அகலமும் 7.5 மீட்டர் உயரமும் கொண்டது இந்தக் கட்டிடம். 360 கண்ணாடிகளும் 832 மறுசுழற்சி அலுமினியத் தகடுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வீட்டின் ஆயுள் காலம் 100 ஆண்டுகள். முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியமும் இல்லை’’ என்கிறார் பெஞ்சமின்.

“மிகக் குறைவான விஷயங்களைக் கொண்டு, ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு அதிகம் தீங்கிழைக்காத வாழ்க்கை முறை என்பதுதான் எங்கள் கொள்கை. அதேபோல வீட்டைக் கட்டியதில் மகிழ்ச்சி. வீட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதும் தோட்டத்தில் பாய்ச்சப்படுகிறது. எங்களுக்கான உணவை ஆண்டு முழுவதும் நாங்களே தயார் செய்துகொள்கிறோம். நாம் எதை நம்புகிறோமோ, எப்படி வாழ விரும்புகிறோமோ, அப்படி வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை! எங்கள் வாழ்க்கை முறை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் கூட இருக்கலாம். அதற்காக நாங்கள் வாழ்வது தவறாகிவிடாது. 4 குழந்தைகளுடனும் இயற்கையுடனும் சேர்ந்து வாழ்வது மிகவும் அற்புதமானது! குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர், ஷாப்பிங் மால் என்று நாங்கள் அறிமுகம் செய்யவில்லை. இயற்கையை அறிமுகம் செய்திருக்கிறோம். கடல், காடு, சட்டென்று மாறும் வானிலையை ரசிப்பதற்கு இந்த வாழ்க்கை போதாது’’ என்கிறார் மேரி.

அடடா! என்ன அழகான வாழ்க்கை!

சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு மனிதர், தன் குதிரைக்கு ராட்சச சிகரெட்டைக் கொடுத்து, புகைக்க வைத்து, படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். குதிரைக்கு சிகரெட்டா என்று கேட்பவர்களிடம், “சிகரெட் கொடுக்கவில்லை என்றால் மிகவும் சோர்ந்திருக்கும். அதனால் நானே மிகப் பெரிய சிகரெட்டைத் தயாரித்து, குதிரையின் ஒரு மூக்குத் துவாரத்தில் வைப்பேன். புகையை இழுத்து, அது இன்னொரு துவாரத்தில் வெளியிடும் அழகைப் பாருங்கள்! சிகரெட் பிடிப்பதை விரும்புவதால்தான் இவ்வளவு நேர்த்தியாக புகைக்கிறது’’ என்கிறார் குதிரையின் உரிமையாளர்.

அடக் கொடுமையே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மரக்-கண்ணாடி-வீடு/article8853289.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: நாய்களுக்குப் பேய் ஓட்டும் நிகழ்ச்சி!

 
 
masala_2934814f.jpg
 

ஜப்பானில் டி+ கிரிஷிமா நாய்களுக்காக இயங்கி வரும் பிரத்யேக ஸ்பா. உலகிலேயே முதல்முறை யாக நாய்களுக்குப் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது. ஷின்கரியு மடத்தைச் சேர்ந்த ஷின்டோ துறவி பேயோட்டி வருகிறார். “7, 10, 13 வயது நாய் களைக் கவனமாகப் பாது காக்க வேண்டும். இந்தக் காலகட்டங்களில் நாய் களைப் பேய்கள் தாக்கும்.

உடல்நலம் கெடும். மரணம் ஏற்பட வாய்ப்பு அதிகம். நாய்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக பேயோட்டி வருகிறோம். ஒரு நாய்க்குப் பேயோட்டுவதற்கு 30 நிமிடங்கள் ஆகும். ஒரு அறையில் நாயின் உரிமையாளர்கள் இருவர், நாய், பேயோட்டுபவர் என நான்கு பேரும் இருப்பார்கள். உரிமையாளர்களுக்கும் நாய்களுக்கும் சிறப்பான உணவுகள் வழங்கப்படும். ஒரு நாய்க்குப் பேய் ஓட்ட 20 ஆயிரம் ரூபாய் கட்டணம்’’ என்கிறார் ஸ்பாவின் உரிமையாளர்.

“அதிர்ஷ்டம் இல்லாத ஆண்டுகளில் பிரார்த்தனை மூலமும் பேய் ஓட்டுதல் மூலமும் ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற முடியும். திரைப்படங்களில் பேய் ஓட்டுவது போல திகிலாக இருக்காது. நாய் உரிமையாளரின் கைகளில் அமைதியாக அமர்ந்திருக்கும். நான் மந்திரங்களைச் சொல்லி, பேய் ஓட்டுவேன். இதுவரை பேய் ஓட்டப்பட்ட நாய்கள் அனைத்தும் நலமாக இருப்பதாக உரிமையாளர்கள் நன்றியோடு சொல்கிறார்கள்.

எல்லாவற்றையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறோம். பேய் ஓட்டி முடித்தவுடன் நாயைத் தனியாக நீச்சல் குளத்தில் விட்டுவிடுவோம். நாய் குளிக்கும், ஓய்வெடுக்கும். பிறகு சுவையான உணவு வழங்குவோம். சாப்பிட்ட பிறகு நாய்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன’’ என்கிறார் பேய் ஓட்டும் ஷின்டோ.

இல்லாத பேய், இப்போ நாயையும் பிடிக்க ஆரம்பித்துவிட்டதா!

கனடாவில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் மிகப் பெரிய புத்தக் கல்வி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பல்வேறு உணவகங்களில் வளர்க்கப்பட்ட 273 கிலோ சிங்கி நண்டுகளை (lobster) வாங்கி, கடலில் சேர்த்துவிட்டனர்.

“நாங்கள் மக்களின் உணவுப் பழக்கங் களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒவ்வொரு மனிதனின் உணவுப் பழக்கத்தையும் மதிக்கிறோம். சைவ உணவுக்கோ, வீகன் உணவுக் கோ நாங்கள் யாரையும் மாறச் சொல்வது இல்லை. எங்களின் நோக்கம் மனிதர்களிடம் இரக்கக் குணத்தைக் கோருவது தான். இது சிங்கிநண்டுகளுக்கு மட்டுமில்லை, புழு, பூச்சிகள், விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களுக்கு மான கோரிக்கைதான். சாலைகளில் கூட மெதுவாகச் சென்றால், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத உயிர்களுக்குக் கூட தீங்கு இழைக்காமல் இருக்க முடியும்’’ என்கிறார் ஒரு புத்தத் துறவி. உயிருள்ள சிங்கி நண்டுகள் சேகரிக்கப்பட்டு, ஒரு படகில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

மீனவர்கள் பிடிக்க முடியாத இடத்துக்குச் சென்று, 20 நிமிடங்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பிறகு ஒவ்வொரு சிங்கி நண்டையும் எடுத்து, கடலில் விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மீனவர்கள் மிகவும் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அவர்கள்தான் சிங்கி நண்டுகளை எங்கே விட்டால், பாதுகாப்பாக இருக்கும் என்பதைச் சொல்கிறார்கள். 8 ஆண்டுகளாக பிரின்ஸ் எட்வர்ட் தீவில் இந்தப் புத்தக் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆசியா முழுவதிலுமிருந்து ஏராளமான புத்தத் துறவிகள் இங்கே வந்து, படித்துச் செல்கிறார்கள்.

மனிதர்களுக்கும் ஏதாவது செய்யக்கூடாதா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாய்களுக்குப்-பேய்-ஓட்டும்-நிகழ்ச்சி/article8858761.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: மாடுகளைக் காப்பாற்ற சிறந்த டெக்னிக்!

 
 
cow_2935884f.jpg
 

அமெரிக்காவின் டென்னிசியில் வசிக்கிறார் 71 வயது அல்மெடா. சமீபத்தில் அவரது மகன் இறந்து போனார். துக்கம் விசாரிக்க வந்தார் 17 வயது கேரி ஹார்ட்விக். அன்பான ஆறுதல் வார்த்தைகள் கூறிய கேரியை அல்மெடாவுக்குப் பிடித்துப் போனது. கேரிக்கும் அல்மெடா மீது அன்பு. ஒருவாரத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்தனர். நீண்ட நேரம் பேசினர். இருவரது கருத்துகளும் ஒத்துப் போயின. கேரி தன் காதலை அல்மெடாவிடம் தெரிவித்தார். தன் பேரனை விட 3 வயது குறைவான கேரியைத் திருமணம் செய்ய முடியாது என்றார் அல்மெடா. “வயது என்பது வெறும் எண்கள்தான். ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் அனுசரணையாகவும் குடும்பம் நடத்துவதற்கு வயது தடை இல்லை என்று புரிய வைத்தேன். அல்மெடாவும் ஒப்புக்கொண்டார். எங்கள் விருப்பத்தை அல்மெடாவின் மருமகள் லிசாவிடம் சொன்னோம். இரண்டே வாரங்களில் எளிய முறையில் திருமணத்தை நடத்திவிட்டார். வாழ்க்கை மிகவும் நிறைவாகப் போகிறது’’ என்கிறார் கேரி. “என் கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 43 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தேன். தாங்க முடியாத தனிமையை அனுபவித்தேன். தற்போது மகனையும் இழந்து, மோசமான மன நிலையில் இருந்தேன். அப்போதுதான் கேரியின் அறிமுகம் கிடைத்தது. இரண்டாவது சந்திப்பிலேயே திருமணம் என்றார். முதலில் அதிர்ந்தேன். குழந்தைகள் அவரவர் குடும்பத்துடன் இருக்கிறார்கள். எனக்கென்று யாரும் இல்லை. அதனால் சம்மதித்தேன். சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்தேன். எல்லோரும் சம்மதித்தனர். கேரியால் என் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பிவிட்டது. கனவு வாழ்க்கை என்று சொல்வார்களே, அதை நான் வாழ்ந்து வருகிறேன்’’ என்கிறார் அல்மெடா.

ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிக் கருத்துச் சொல்ல நாம் யார்?

வண்ணத்துப்பூச்சி மீன், விட்டில் பூச்சிகள் போன்றவற்றின் பின்பக்கம் கண்கள் போன்ற வட்டங்கள் இருக்கின்றன. இவற்றைத் தாக்க வரும் எதிரிகள், கண்கள் என்று நினைத்துப் பின்வாங்கிவிடுகின்றன. இயற்கை அளித்த தகவமைப்பு இது. இந்த உத்தியைப் பின்பற்றி, சிங்கங்களிடமிருந்து மாடுகளைக் காப்பாற்றி வருகிறார் டாக்டர் நீல் ஜோர்டன். மனிதர்களின் செயல்களால் ஆப்பிரிக்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. காடுகளின் இருப்பிடம் குறைவதால், சிங்கங்கள் உணவு தேடி மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து, மாடுகளை வேட்டையாடிவிடுகின்றன. “சிங்கங்களுக்கும் தீங்கு வராமல், மாடுகளையும் காப்பாற்ற வேண்டும். மாடுகளின் பின்புறம் கண்களை வரைவது என்ற எளிமையான உத்தியைச் செயல்படுத்தினேன். 62 மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, இரவில் சரிபார்க்க ஆரம்பித்தோம். 10 வாரங்களுக்குப் பிறகு 3 மாடுகள் மட்டுமே சிங்கங்களால் வேட்டையாடப்பட்டிருந்தன. அதாவது கண்கள் வரையப்படாத மாடுகள் மட்டுமே பலியாகியிருந்தன. இதே பரிசோதனையை ஆஸ்திரேலியாவிலும் செய்து பார்த்தபோது, இந்த உத்தி நன்றாக வேலை செய்வது உறுதியானது’’ என்கிறார் நீல் ஜோர்டன்.

மாடுகளைக் காப்பாற்ற சிறந்த டெக்னிக்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மாடுகளைக்-காப்பாற்ற-சிறந்த-டெக்னிக்/article8862194.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: செல்லப்பிராணி ஆடு!

 
 
masala_2937942f.jpg
 

பிரிட்டனில் வசிக்கும் 50 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். அவர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறார் 31 வயது டாம் ஹார்ஸ்ஃபீல்ட். இவர் ஓர் ஆட்டுக் குட்டியைத் தன் செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். நாய், பூனைகளைப் போல ஆடுகளை வளர்க்க இயலாது. ‘‘பெஞ்சமின் ஒரு நாயைப் போலவே அத்தனை அன்பாகப் பழகக்கூடியவன். சின்னப் பற்களைக்கொண்டு ஷூலேஸ், சாக்ஸ் முதல் குஷன் கவர் வரை அனைத்தையும் சுவைத்து மகிழ்வான். சோஃபாவில் அமர்ந்து டிவி பார்ப்பது என்றால் அவனுக்கு மிகவும் விருப்பம். ஆடுகளுக்கே உரிய நாற்றம் அவனிடமிருந்து வரும். வீட்டையே கழிவறையாக மாற்றிவிடுவான்.

இந்த 2 விஷயங்களைத் தவிர அவனிடம் வேறு எந்தச் சங்கடங்களும் இல்லை. ஆடுகள் மனிதர்களிடம் அவ்வளவு இயல்பாகப் பழகுவதில்லை என்று நம்பி வந்தனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவில், ஆடுகளும் மனிதர்களுக்கு நல்ல தோழர்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். பெஞ்சமின் பிறந்தபோது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் அம்மா, குட்டி இறந்து போனதாக நினைத்து, கைவிட்டுவிட்டது. நான் குட்டியை எடுத்து வந்து, மருத்துவம் செய்தேன். 5 வேளை பாலூட்டினேன். 6 வாரங்களில் பெஞ்சமின் நன்றாகத் தேறிவிட்டான்.

என்னை ஒரு வளர்ப்புத் தாயாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். ஒரு நாயோ, பூனையோ செய்யக்கூடிய அனைத்துக் குறும்புகளையும் பெஞ்சமினும் செய்கிறான். ரசிக்க வைக்கிறான். இவனைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டேன். ஏராளமான வரவேற்பு. டி சர்ட், காலண்டர்களில் பெஞ்சமின் படங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். தாயால் கைவிடப்பட்ட ஒரு ஆட்டுக் குட்டி, இன்று உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’’ என்கிறார் டாம் ஹார்ஸ்ஃபீல்ட்.

‘ஆட்டுக்கார அலமேலு’ பார்த்தால் என்ன சொல்வீங்க டாம்?

ரஷ்யாவின் வட பகுதியில் இருக்கிறது ஷோய்னா மீனவர் கிராமம். மற்ற மீனவ கிராமங்களை விட, இந்தக் கிராமத்தில் மணல்களின் அளவு மிக அதிகம். இங்கே அடிக்கடி புழுதிக் காற்று வீசும். கடற்கரைகளில் இருக்கும் மணல்கள் எல்லாம் கிராமத்தில் வந்து சேர்ந்துவிடும். கிராமத்தில் உள்ள வீடுகள் பாதி அளவுக்கு மேல் மணலால் மூடப்பட்டு விடுகின்றன. இரவு நேரங்களில் வீடுகளைப் பூட்ட முடியாது. ஒருவேளை கதவுகளைப் பூட்டினால், மறுநாள் காலை திறக்க முடியாது. மணல் குவிந்திருக்கும். தினமும் புல்டோசர், மண்வெட்டிகளைக் கொண்டு மணலை அப்புறப்படுத்துவதே பெரிய வேலையாக இருக்கிறது.

1930ம்- ஆண்டு ஷோய்னா கிராமம் உருவானது. மீன்கள் அதிகம் கிடைத்ததால் மக்கள் இங்கே குவியத் தொடங்கினர். 1950-ம் ஆண்டு 1,500 குடும்பங்கள் இருந்தன. பின்பு பருவ நிலை மாற்றத்தால் மீன்கள் குறைந்தன. புழுதிக் காற்றும் அடிக்கடி வீசின. மக்கள் நிம்மதியாக வசிக்க முடியாததால், வெளியேற ஆரம்பித்தனர். இன்று 300 மனிதர்கள் மட்டும் வசிக்கிறார்கள். இவர்களும் வேட்டையாடுவது, வாத்து மேய்ப்பது போன்ற தொழில்களைச் செய்து வருகிறார்கள். கிராமத்தில் இருந்த பாதி வீடுகள் தற்போது மணலால் மூடப்பட்டு விட்டன. எஞ்சிய வீடுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்துக்கு பேருந்து, ரயில் வசதிகள் இல்லை. கப்பல் மூலமே செல்ல இயலும்.

மணலால் அழியும் கிராமம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-செல்லப்பிராணி-ஆடு/article8869568.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.