Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஐயோ… என்ன ஒரு கொடுமையான சூழல்…

 

 
03chkanLee

சீனாவைச் சேர்ந்த 14 வயது லீ ஸியாவோக்விங், அரிய வகை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 2014-ம் ஆண்டு இவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹுனான் மாகாணத்திலிருந்து மருத்துவம் பார்க்க புயாங் நகரத்துக்குச் சென்றனர். பரிசோதனையில் நோய் முற்றியது தெரிந்தது. உடனே பெய்ஜிங்குக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். மிகப் பெரிய கட்டியாக இருப்பதால், கீமோதெரபி கொடுத்து சிறியதாக்கினால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றார்கள் மருத்துவர்கள். அத்துடன் நிறைய செலவாகும் என்பதால், புயாங் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். பள்ளியிலிருந்து விடுமுறை வாங்கிக்கொண்டு, சில மாதங்களில் 5 முறை கீமோதெரபி எடுத்துக்கொண்டார் லீ. எதிர்பாராத விதமாக உடல்நிலை மோசமடைய, மீண்டும் பெய்ஜிங் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சேமிப்பு, சொத்துகள் என்று அனைத்தையும் கொடுத்து இதுவரை 20 முறை கீமோதெரபி அளித்திருக்கிறார்கள். மொத்தம் ரூ.28 லட்சம் செலவாகியிருக்கிறது. இதற்கு மேல் அவர்களுக்கு வசதி இல்லை. தாய், தந்தையின் கஷ்டத்தைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத லீ, தனக்கான சிகிச்சையைக் கைவிடும்படிக் கேட்கிறார். இதைக் கேட்டு லீயின் பெற்றோர் கதறி அழுகிறார்கள். “சக்திக்கு அதிகமாகவே செலவு செய்துவிட்டார்கள். இந்த 2 ஆண்டுகளில் எனக்காகவே வீட்டை விட்டு வந்துவிட்டார்கள். இன்னும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை வளர்க்க வேண்டும். எனக்காக மட்டும் இருவரும் படும் துயரங்களைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதனால் என் சிகிச்சையை நிறுத்தும்படிக் கேட்கிறேன். இனி அவர்களுக்கும் விற்பனை செய்ய ஒரு பொருளும் இல்லை” என்கிறார் லீ. இவர்கள் மூவரும் கண்ணீர் விடும் காட்சி, பார்ப்பவர்களைப் பதறவைக்கிறது. சில அறக்கட்டளைகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஐயோ… என்ன ஒரு கொடுமையான சூழல்…

இங்கிலாந்தைச் சேர்ந்த 70 வயது டிவோன் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பியபோது, வீட்டைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். 40 அடி நீளம் கொண்ட நகரக்கூடிய மொபைல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். “என் கணவரும் நான் வளர்த்த நாயும் இறந்த பிறகு, நான் தனியாக வசித்து வருகிறேன். வயதாவதால் என் பிள்ளைகள், நண்பர்கள் வீடுகளுக்கு அருகே வசிக்க நினைத்தேன். ஒரு இடத்தில் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு இடத்துக்குச் சென்றுவிடலாம் என்பதற்காக மொபைல் வீட்டை வாங்கினேன். ஆனால் வீட்டை வாங்கியதிலிருந்து என்னை யார் யாரோ மிரட்டிக்கொண்டே இருந்தனர். இவர்தான் என்று என்னால் ஒருவரைச் சொல்ல முடியவில்லை. இந்தப் பகுதியிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட நினைத்திருந்தேன். அதற்குள் வீட்டையே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஒரு இரவு முழுவதும் வீடின்றி கழித்தேன். இப்போது என் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன். என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. மொபைல் வீடுகளைப் பாதுகாக்கும் கவுன்சிலிடம் புகார் அளித்திருக்கிறேன்” என்கிறார் டிவோன்.

வீட்டையே எடுத்துட்டுப் போயிட்டாங்களே இந்தப் பாவிகள்…

http://tamil.thehindu.com/world/article21250494.ece

  • Replies 1k
  • Views 150.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: பாவம், ஒவ்வொரு நாளும் திகிலான வாழ்க்கை!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
05chskomasalapic
 
 

ஜெர்மனியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மார்க் வுப்பென்ஹார்ஸ்ட், ஒரு நாளைக்குக் குறைந்தது 20 லிட்டர் தண்ணீரையாவது குடித்துக்கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் அவரது உடல் நீர்ச்சத்தை இழந்து, மரணத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். 35 வயது மார்க், அரிய வகை வளர்சிதை மாற்ற நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 24 மணிநேரமும் இவருக்குத் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாகத் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறார். அதனால் அசாதாரண அளவில் சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கிறார். சிறிது நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், இவரது உடல் நீர்ச்சத்தை முற்றிலுமாக இழந்துவிடுகிறது. சில மணி நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால் மரணத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சாதாரண மனிதர்களால் 2 தம்ளர் தண்ணீர் குடித்தால், பல மணி நேரங்களுக்குத் தண்ணீர் குடிக்காமலேயே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் இவரது உடல் தண்ணீர்ச் சத்தைச் சேமித்து வைத்துக்கொள்வதில்லை. சாதாரண மனிதர்களை விடச் சிறுநீரகம் வெகு வேகமாகத் தண்ணீரை வெளியேற்றிவிடுகிறது. ஒரு மணி நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் தண்ணீர்ச் சத்தை இழக்கும், உதடுகள் வெடிக்க ஆரம்பிக்கும். தலைச்சுற்றல் வரும். தண்ணீர் குடிக்காமல் 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகள் இவருக்கு ஒரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடுகின்றன. மார்க் பிறக்கும்போதே இந்த நோயுடன்தான் பிறந்தார். குழந்தையாக இருந்தபோது இந்த அளவுக்கு நிலைமை மோசமில்லை. அதோடு நிறைய நண்பர்கள், இவர் இயல்பாக இருப்பதற்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாக, தீவிர மன அழுத்தத்துக்கு உள்ளானார்.

“என்னால் மன அழுத்தத்துடனும் நோயுடனும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது. ஒவ்வொரு நாளும் போராட்டமாக மாறியது. நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதும் சிறுநீர்க் கழிப்பதும் மட்டுமே வாழ்க்கை என்றால், அந்த வாழ்க்கை எவ்வளவு கொடூரமானதாக இருக்கும். பகலை விட இரவு இன்னும் கொடுமையானது. என்னால் 2 மணி நேரங்களுக்கு மேல் தூங்க முடிந்ததே இல்லை. ஒரு நாளைக்கு நான் 50 தடவை சிறுநீர் கழிக்கச் செல்கிறேன். ஒரு கட்டத்தில் நானே என் நிலைமையைப் புரிந்துகொண்டு, மன அழுத்தத்திலிருந்து மீண்டேன். வெறும் தண்ணீராக 20 லிட்டர் குடிப்பதும் சலிப்பு ஏற்படுத்தும். அதனால் எலுமிச்சைச்சாறு, தேயிலை, மூலிகை என்று ஏதாவது கலந்துதான் குடிப்பேன். எங்காவது வெளியூர், வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் முன்கூட்டியே திட்டமிட்டுதான் செல்லமுடியும். ஒருமுறை அலுவலகத்திலிருந்து மிகவும் தாமதமாக வீட்டுக்குக் கிளம்பினேன். ரயிலில் ஏறியபோதுதான் தண்ணீர் பாட்டில் கொண்டுவரவில்லை என்பது நினைவுக்குவந்தது. வீடு அதிக தொலைவில் இல்லை என்பதால் பயமின்றி அமர்ந்திருந்தேன். திடீரென்று ரயிலில் ஏதோ பிரச்சினை. வழியில் நின்றுவிட்டது. நீண்ட நேரமாகியும் ரயில் கிளம்பவில்லை. என் உடல் தளர்ந்தது. இன்றுதான் எனக்கு கடைசி நாள் என்று நினைத்தபடியே மயங்கிக் கிடந்தேன். என் நண்பன் ஒருவன் என்னைப் பார்த்து, தண்ணீர் கொடுத்து காப்பாற்றினான். நீரிழிவு என்பதால் பழச்சாறுகளோ, குளிர்பானங்களோ என்னால் குடிக்க முடியாது” என்கிறார் மார்க்.

பாவம், ஒவ்வொரு நாளும் திகிலான வாழ்க்கை!

http://tamil.thehindu.com/world/article21264641.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: என்றும் 16!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
06chskomasalapic
 
 

கியெனியா புக்கர் இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருக்கிறார். 40 வயதான இவருக்கு, பதின் பருவத்தில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் வெளியிடும் ஒளிப்படங்களில் யார் அம்மா, யார் மகள் என்பதே கண்டுபிடிக்க முடிவதில்லை. அவ்வளவு இளமையாகக் காட்சியளிக்கிறார்! “18, 16 வயது மகள்களோடு விதவிதமாகப் படங்கள் எடுப்பேன். பிறகு அவற்றை வெளியிடுவேன். என் மகள் லினியாவின் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் என்னை அவளது அக்கா என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களிடம் மகள்களின் குழந்தைப் பருவப் படங்களில் நான் இருப்பதைக் காட்டிதான், நம்ப வைக்கிறேன். ஒரு சிலர், என் மகள்களை விட இளையவளாக நினைக்கின்றனர். அவர்கள் என் அக்காவா என்று கேட்கும்போது மட்டும் மகள்கள் கொஞ்சம் பொறாமைகொள்வார்கள்” என்கிறார் புக்கர்.

என்றும் 16!

உக்ரைனைச் சேர்ந்த விஞ்ஞானி அலெக்சாண்டர் கோலோட், ரஷ்யாவில் ஒரு பிரமிடை உருவாக்கி, இது நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் ஏற்கெனவே இருக்கும் மருந்துகளின் தன்மையை அதிகரிக்கவும் செய்வதாகச் சொன்னார். 1990-ம் ஆண்டு முதல் பிரமிடை உருவாக்கினார். 2001-ம் ஆண்டில் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் 17 பிரமிடுகளைக் கட்டி முடித்துவிட்டார். தற்போது உலகம் முழுவதும் 50 பிரமிடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பிவிசி குழாய்கள் மூலம் பிரமிடின் சட்டங்களை உருவாக்கி, அவற்றின் மீது கண்ணாடியிழைகளால் மூடியிருக்கிறார். எகிப்திய பிரமிடுகளை விட அகலம் குறைவாகவும் உயரம் இரு மடங்கு அதிகமாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு பிரமிடும் 144 அடி உயரமும் 55 டன்கள் எடையும் கொண்டவை. ஒரு பிரமிடை உருவாக்க 5 ஆண்டுகளும் 10 லட்சம் டாலர்களும் செலவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரமிடுக்குள் எந்த உலோகத்தைக் கொண்டுவந்தாலும் அதன் ஆற்றல் குறைந்துவிடுகிறது அல்லது மறைந்துவிடுகிறது. “என்னுடைய பிரமிடு மாஸ்கோவை காய்ச்சல், புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றிலிருந்து காக்கிறது. நோயாளிகள் இங்கே வந்தால் நோய் காணாமல் போய்விடுகிறது. சிலர் இது கடவுளின் அருளா என்று கேட்கிறார்கள். நாம் ஒற்றுமையாக, தூய்மையான எண்ணங்களுடன் வாழ்ந்தால் நாம் விரும்பும்வரை நம்மால் வாழமுடியும். இந்த அறை முழுவதும் கன சதுரங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரமிடால் செய்ய முடியாத விஷயம் ஒன்றும் இல்லை. பிரமிடுக்குள் வைக்கப்பட்ட ஒரு கல்லை எடுத்து, சிறைச்சாலையில் போட்டேன். உடனே அங்கிருந்த கைதிகள் திருந்திவிட்டனர். சிலிகர் ஏரிக்கு அருகில் ஒரு பிரமிடைக் கட்டியவுடன் அந்த ஏரியின் நீர் சுத்தமாகிவிட்டது” என்று பத்தாண்டுகளுக்கு முன்பு பேட்டி கொடுத்தார் அலெக்சாண்டர். ஓசோன் ஓட்டையை ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து சரி செய்யமுடியும் என்பதால், அங்கு பிரமிடை அமைக்க அனுமதி கேட்டார். ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மாஸ்கோவை ஒரு கடும்புயல் தாக்கியது. அதில் பிரமிடுகளின் பல பாகங்கள் சிதைந்துவிட்டன. தன்னையே காப்பாற்றிக்கொள்ளாத பிரமிடு, எப்படி மக்களைக் காப்பாற்றும் என்று கேள்வி எழுந்துள்ளது.

விஞ்ஞானியும் இப்படிக் கிளம்பினால் என்ன செய்வது?

http://tamil.thehindu.com/world/article21272295.ece

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2017 at 7:22 AM, நவீனன் said:

சோமாலியா நாட்டைச் சேர்ந்த தாயும் மகனும் லண்டனில் 3 ஆண்டுகளாக தெருவிலேயே வசித்து வருகிறார்கள். இரவு, பகல், பனி, மழை என்று எதையும் பொருட்படுத்தாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். 2014-ம் ஆண்டு இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மருத்துவம் பார்த்ததிலும், அவர் மரணம் அடைந்ததிலும் பொருளாதார நிலைமை மிக மோசமடைந்தது. அதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தெருவுக்கு வந்துசேர்ந்தனார். நூலகத்தின் வெளியே இருக்கும் நீண்ட இருக்கைக்கு அடியில் தங்களின் பொருட்கள் அடங்கிய பெட்டிகளையும் பைகளையும் வைத்துக்கொள்கிறார்கள்.

காலை 10.30 மணிக்கு கண் விழிக்கிறார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு காலை உணவு. நூலகம் திறந்தவுடன் அம்மா உள்ளே சென்றுவிடுவார். காலை கடன்களை முடித்துவிட்டு, சிறிது நேரம் புத்தகங்கள் படித்துவிட்டு, இருக்கைக்கு திரும்புவார். மதியம் 2 மணிக்கு உணவுடன் வந்து சேர்வார் மகன். வெயில் காலமாக இருந்தால் குடையை விரித்து வைத்துக்கொண்டு, உணவைச் சாப்பிட்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். மாலை ஒரு காபியை வாங்கி இருவரும் பகிர்ந்து குடிக்கிறார்கள். மகன் பாட்டு கேட்டு பொழுதுபோக்குவார். அம்மா, அந்த வழியே செல்பவர்களிடம் உற்சாகமாகப் பேசிப் பொழுது போக்குவார். இரவில் பழங்கள், சாண்ட்விச் சாப்பிட்டு 12 மணிக்கு தார்பாலினால் மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். அரசாங்கம் இருமுறை இவர்களுக்காக ஒரு வீட்டை ஒதுக்கிய போதிலும் அந்த வாடகையைக் கொடுக்க முடியாது என்பதால் இவர்கள் செல்லவில்லை.

எத்தனையோ அறக்கட்டளைகள் உதவுவதற்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் எந்த உதவியையும் இவர்கள் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்த வழியாகச் செல்பவர்கள் பரிதாபப்பட்டு தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றை வழங்குகிறார்கள். இந்த அத்தியாவசிய தேவைகளை மட்டும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். யாரிடமும் எந்த உதவியும் தாங்களாகக் கேட்பதில்லை. நகர நிர்வாகம் இவர்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறது. ஒருவருக்கு கட்டாயப்படுத்தி உதவியைப் பெற வைக்க முடியாது என்று சொல்வதும் உண்மை தானோ.

இவர்களுக்காவது உதவுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்…

அட நம்ம tooting வாசிகள் tooting நூலகத்து வாசலில் இருப்பினம் .

The mother and son have been living on the streets since they were evicted from their flat in Tooting and use umbrellas as shelter 

Two young men walked past the mother and son as they were still asleep underneath their tarpauling first thing in the morning

The son was photographed urinating up against the library wall as his mother remained sat down on the bench underneath a blanket 

Every night the couple relax on the bench and usually pull the tarpaulin over themselves just after midnight in Tooting 

இந்த விண்டருக்குள் பக்கத்தில் இருக்கும் மூன்று இருக்கையிலும் இதுகளை  போல் ஒரு குரூப் படுத்து கிடக்கினம் இடையிடையே .

http://www.dailymail.co.uk/news/article-4876282/Somalian-mother-son-chosen-live-bench.html

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

உலக மசாலா: வரலாற்றை மாற்றியமைத்த ரத்தினக்கல் சிற்பம்

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
07chkanPylos-Combat-Agate
 
 

அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கிரேக்க நாட்டின் பைலோஸ் நகரில் ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. வெண்கல காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்லறையில், 2015-ம் ஆண்டு பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. நகைகள், பாதுகாப்பு கவசங்கள், ஆயுதங்கள், விலை உயர்ந்த கற்களில் செய்யப்பட்ட சிற்பங்கள் ஆகியவை கிடைத்தன. சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பொருட்களில் இருந்து, மிக அழகான சிற்பம் ஒன்று கிடைத்திருக்கிறது. 3.6 செ.மீ. அளவுள்ள ரத்தினக்கல் ஒன்றில் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதுதான் உலகை வியக்க வைத்திருக்கிறது. உருப்பெருக்கி மூலம் பார்த்தால்தான் சிற்பம் தெரியும்.

சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட இந்த ரத்தினக்கல்லை மிகக் கவனமாகச் சுத்தம் செய்து, சிற்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் கலைகளைப் பற்றிய வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தச் சிற்பத்தில் இருவர் நேருக்கு நேர் வாள் சண்டையிடுகிறார்கள். இன்னொருவர் சண்டையில் தோற்று கீழே விழுந்து கிடக்கிறார். வீரர்கள் திடகாத்திரமான உடலுடன் காட்சி தருகிறார்கள். எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத காலகட்டத்தில், மிகச் சிறிய இடத்துக்குள் இவ்வளவு நுணுக்கமான ஒரு சிற்பத்தை எப்படி வடிக்க முடிந்தது என்று எல்லோரும் வியக்கின்றனர். “கிரேக்க கலைகளைப் பற்றிய வரலாறு, இப்போது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றுவிட்டது. கிரேக்கத்தின் பாரம்பரியம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதை இந்தச் சிற்பம் எடுத்துக்காட்டிவிட்டது. சில நுட்பமான விஷயங்கள் அரை மில்லிமீட்டருக்குள் வடிக்கப்பட்டதை என்னவென்று சொல்வது! இனி வரக்கூடிய வரலாற்றுப் புத்தகங்களில் சிற்பக் கலையின் வரலாறு மாற்றி எழுதப்படும். கல்லறையில் இருந்து 3 ஆயிரம் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் இந்த ‘சண்டை ரத்தினக்கல்’ போன்று 50 கற்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்தும் உலகத்துக்கு சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கலாம்” என்கிறார் கிரேக்க தொல்லியல் துறை பேராசிரியர் ஜேக் டேவிஸ்.

வரலாற்றை மாற்றியமைத்த ரத்தினக்கல் சிற்பம்!

இஸ்லாமிய விளையாட்டு வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்துகொண்டு, போட்டிகளில் பங்கேற்பது கடினமானது என்று கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்கப் போவதாகக் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது உலகின் மிகப் பிரபலமான நைக் நிறுவனம். 9 மாதங்களுக்குப் பிறகு வீராங்கனைகளுக்கான ஹிஜாபை வெற்றிகரமாகக் கொண்டுவந்துவிட்டது. இந்த ஹிஜாப் விளையாடும்போது மிகவும் வசதியாக இருப்பதாக, பிரபல இஸ்லாமிய விளையாட்டு வீராங்கனைகள் மூவர், விளம்பரத்தில் சொல்கிறார்கள். ஆன்லைனில் கனடா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இந்தப் புதிய ஹிஜாப் விற்பனைக்கு வந்துவிட்டது.

விளையாட வசதியான ஹிஜாப்!

http://tamil.thehindu.com/world/article21288034.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நடக்க முடியாதவர்களுக்கு அற்புத ரோபோ சூட்

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
08chskomasalapic
 
 

மனிதர்கள் அணிந்து கொள்ளக்கூடிய வகையில் உலகிலேயே முதல்முறையாக ‘ரோபோ சூட்’ தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரோபோ உடையை அணிந்துகொண்டால், மனித உடல் உறுப்புகளின் பணியில் முன்னேற்றம் தெரியும். மனிதனும் ரோபோவும் சேர்ந்து இயங்கக்கூடிய தொழில்நுட்பம் இது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மனித உடல் உறுப்புகள் தாங்களாகவே வேலை செய்யாமல், செயல் இழந்துவிடுவதில்லை. அவற்றுக்கு மூளையிலிருந்து இயங்க வைக்கக்கூடிய கட்டளைகள் வருவதில்லை. இந்த ரோபோ உடை மூளை நரம்புகளுக்கு அழுத்தம் கொடுத்து, குறிப்பிட்ட உறுப்புகளுக்குக் கட்டளைகளை அனுப்ப வைக்கிறது. கட்டளைகள் கிடைத்ததும் அந்த உறுப்பு வேலை செய்யத் தயாராகிவிடுகிறது. ஆண்டு கணக்கில் நடக்க இயலாமல் இருப்பவர்கள் கூட, இந்த உடையை அணிந்தவுடன் மாடிப்படிகளில் கூட எளிதாக ஏறிவிடுகிறார்கள். “நான் 5 ஆண்டுகளாகச் சக்கர நாற்காலியில்தான் அமர்ந்திருந்தேன். ரோபோ உடையைப் போட்டவுடன் என்னால் நிற்க முடிந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாடிப்படிகளிலும் ஏறியபோது ஆச்சரியத்தில் உறைந்துபோனேன்” என்கிறார் 74 வயது ஹிஃபுமி ஃபுகுஷிமா. “மனித மூளையையும் பயோ எலக்ட்ரிக் சமிக்ஞைகளையும் இணைத்து, உடல் உறுப்புகளைச் செயல்பட வைக்க நினைத்தோம். அதற்காகக் கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்திருக்கிறோம். ஆரம்பத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து செய்த முயற்சியால் 6 ஆண்டுகளுக்கு முன்பு பயன் அளிக்கக்கூடிய வகையில் ரோபோ உடையைத் தயாரித்துவிட்டோம். ஆனால் அதன் எடை 22 கிலோவாக இருந்தது. இதை எல்லோராலும் அணிந்து செல்வது கடினமானது. அதனால் ரோபோ உடையில் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தோம். தற்போது 10 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட ரோபோ உடைகளை உருவாக்கிவிட்டோம். இது மிகவும் வசதியாக இருக்கிறது” என்கிறார் சைபர்டைன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி யூஷுகி ஷங்காய்.

மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, இந்த உடையை சாதாரணமானவர்களும் அணிந்துகொண்டால் அசாதாரணமான காரியங்களைச் செய்யமுடியும். 40 கிலோ எடை உடைய ஒரு பொருளைக் கூட ரோபோ உடை மூலம் சாதாரணமாகத் தூக்கமுடியும். “எங்கள் மருத்துவமனைக்கு ரோபோ உடை வந்த பிறகு நோயாளிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நடக்கிறார்கள். அவர்களது சக்கர நாற்காலியை அவர்களே தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். இங்கே பணி செய்யும் ஊழியர்களின் சுமையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. நோயாளிகளைத் தூக்கிக்கொண்டு அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல முடிகிறது. படுக்கையில் இருக்கும் 60 கிலோ எடை கொண்ட ஒரு நோயாளியை நான் கூட எளிதாகத் தூக்கிவிடமுடிகிறது. ரோபோ உடை நோயாளிகளுக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற மருத்துவ ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதத்துக்கு 1.3 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து, இந்த ரோபோ உடையை எங்கள் மருத்துவமனை நோயாளிகளுக்காகப் பயன்படுத்திவருகிறது. தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் மேற்கு ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு செவிலியர்.

நடக்க முடியாதவர்களுக்கு அற்புத ரோபோ சூட்!

http://tamil.thehindu.com/world/article21295866.ece

  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டுகளை செய்து அடுத்தவன் தலையில கொட்டுவதை விட இது போன்ற பயனுள்ள தயாரிப்புகளில் ஈடுபடும் விஞ்ஞானிகள் தெய்வத்திற்கு நிகரானவர்கள்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

உலக மசாலா: குதிரையையே தூக்கிய அசகாய சூரர்!

09chskomasalapic

TAMILTHTemplateLibrarynation21clIMG2
 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார்கள். ஆனால் உக்ரைனைச் சேர்ந்த ஒரு குதிரை, மனிதர் மீது சவாரி செய்துள்ளது! டிமிட்ரோ காலட்ஸி வலிமையான மனிதராக அறியப்படுகிறார். அவர் ஒரு பெரிய குதிரையைத் தூக்கி, தோள்களில் வைத்துக்கொண்டு சில அடிகள் வரை நடந்து அவ்வப்போது தன் வலிமையை நிரூபிக்கிறார்! இதுவரை இப்படி ஒரு காட்சியை உலகம் கண்டதில்லை என்பதால் இவரின் புகழ் உலகம் முழுவதும் பரவிவிட்டது. 39 வயதான டிமிட்ரோ தன் வலிமையை நிரூபிக்க, பெரிய இரும்புக் கம்பியைப் பற்களால் வளைத்திருக்கிறார். ஆணிகளைச் சுத்தியல் இன்றி, தன் கையாலேயே மரத்தில் அடித்திருக்கிறார். மிகப் பெரிய வாகனங்களைத் தன் மீது ஏற்ற வைத்திருக்கிறார். இரண்டு கால் பாதங்களால் ஒரு காரைத் தூக்கியிருக்கிறார். ஒரு வேனை இரு கைகளால் தூக்கியிருக்கிறார். 4 மனிதர்களை ஒரே கையால் தூக்கியிருக்கிறார். இப்படி இதுவரை 63 கின்னஸ் சாதனைகளைத் தன் வசம் வைத்திருக்கிறார்! சமீபத்தில் குதிரையைத் தூக்கும் சாதனையைச் செய்திருக்கிறார். கால்கள் கட்டப்பட்ட குதிரையைத் தூக்கி, தோள்களில் வைத்துக் கொண்டு நடந்திருக்கிறார். “4 வயதில் கொதிக்கும் தேநீர்க் குவளை என் மீது விழுந்துவிட்டது. அதில் 35% தோல் பாதிக்கப்பட்டது. 7 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தொடர்ச்சியாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. 6 வயதில் தசைகள் இறுகிவிட்டன. அதற்குப் பிறகுதான் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். சில ஆண்டுகள் சர்க்கஸில் பணிபுரிந்தேன். பிறகு விளையாட்டு வீரர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினேன். அதற்காக 2010-ம் ஆண்டு இலக்கியத்துக்கான தங்கப் பேனா விருது பெற்றேன். என் வலிமையான உடலை வைத்து ஏதாவது செய்ய நினைத்தேன். அப்போதுதான் சாதனைகளில் என் கவனம் திரும்பியது. முதலில் ஒரே கையில் 152 கிலோ கல்லைத் தூக்கியபோது எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். இன்னும் சாதனைகளைத் தொடர்வேன்” என்கிறார் டிமிட்ரோ காலட்ஸி.

குதிரையையே தூக்கிய அசகாய சூரர்!

டொமினிகன் குடியரசுக்குச் செல்வதற்காக வாஷிங்டனில் விமானம் ஏறினார், ஓர் இசைக் குழுவைச் சேர்ந்த எம்மிட் வாக்கர். ஆப்பிரிக்க அமெரிக்கரான இவரைப் பார்த்து, ஓர் அமெரிக்கப் பெண் முதல் வகுப்பில் அமர்ந்தது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். தனக்கான இடத்தில் இருப்பதைச் சொல்லியும் அவர் நம்பவில்லை. உடனே போர்டிங் பாஸை எடுத்துக் காட்டியிருக்கிறார். ராணுவத்தில் பணிபுரிவதால் முதல் வகுப்பில் பயணிக்கிறார் என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் சென்றுவிட்டார். இந்த விஷயத்தை வாக்கர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். இனப் பாகுபாடு இன்னும் தொடர்வதாகப் பலரும் கொதித்துவிட்டனர். இரண்டு நாட்களில் இந்த விஷயம் 2,50,000 தடவை பகிரப்பட்டிருந்தது. “இந்த விஷயத்தைப் பகிர்ந்ததுக்கு நான் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்த விரும்ப மாட்டேன். இனி யாரும் அவரைப் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எம்மிட் வாக்கர்.

உயர்ந்த மனிதர்!

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் குதிரைகளில் சவாரி செய்து வருகிறார்கள். ஆனால் உக்ரைனைச் சேர்ந்த ஒரு குதிரை, மனிதர் மீது சவாரி செய்துள்ளது! டிமிட்ரோ காலட்ஸி வலிமையான மனிதராக அறியப்படுகிறார். அவர் ஒரு பெரிய குதிரையைத் தூக்கி, தோள்களில் வைத்துக்கொண்டு சில அடிகள் வரை நடந்து அவ்வப்போது தன் வலிமையை நிரூபிக்கிறார்! இதுவரை இப்படி ஒரு காட்சியை உலகம் கண்டதில்லை என்பதால் இவரின் புகழ் உலகம் முழுவதும் பரவிவிட்டது. 39 வயதான டிமிட்ரோ தன் வலிமையை நிரூபிக்க, பெரிய இரும்புக் கம்பியைப் பற்களால் வளைத்திருக்கிறார். ஆணிகளைச் சுத்தியல் இன்றி, தன் கையாலேயே மரத்தில் அடித்திருக்கிறார். மிகப் பெரிய வாகனங்களைத் தன் மீது ஏற்ற வைத்திருக்கிறார். இரண்டு கால் பாதங்களால் ஒரு காரைத் தூக்கியிருக்கிறார். ஒரு வேனை இரு கைகளால் தூக்கியிருக்கிறார். 4 மனிதர்களை ஒரே கையால் தூக்கியிருக்கிறார். இப்படி இதுவரை 63 கின்னஸ் சாதனைகளைத் தன் வசம் வைத்திருக்கிறார்! சமீபத்தில் குதிரையைத் தூக்கும் சாதனையைச் செய்திருக்கிறார். கால்கள் கட்டப்பட்ட குதிரையைத் தூக்கி, தோள்களில் வைத்துக் கொண்டு நடந்திருக்கிறார். “4 வயதில் கொதிக்கும் தேநீர்க் குவளை என் மீது விழுந்துவிட்டது. அதில் 35% தோல் பாதிக்கப்பட்டது. 7 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தொடர்ச்சியாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. 6 வயதில் தசைகள் இறுகிவிட்டன. அதற்குப் பிறகுதான் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். சில ஆண்டுகள் சர்க்கஸில் பணிபுரிந்தேன். பிறகு விளையாட்டு வீரர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினேன். அதற்காக 2010-ம் ஆண்டு இலக்கியத்துக்கான தங்கப் பேனா விருது பெற்றேன். என் வலிமையான உடலை வைத்து ஏதாவது செய்ய நினைத்தேன். அப்போதுதான் சாதனைகளில் என் கவனம் திரும்பியது. முதலில் ஒரே கையில் 152 கிலோ கல்லைத் தூக்கியபோது எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். இன்னும் சாதனைகளைத் தொடர்வேன்” என்கிறார் டிமிட்ரோ காலட்ஸி.

குதிரையையே தூக்கிய அசகாய சூரர்!

டொமினிகன் குடியரசுக்குச் செல்வதற்காக வாஷிங்டனில் விமானம் ஏறினார், ஓர் இசைக் குழுவைச் சேர்ந்த எம்மிட் வாக்கர். ஆப்பிரிக்க அமெரிக்கரான இவரைப் பார்த்து, ஓர் அமெரிக்கப் பெண் முதல் வகுப்பில் அமர்ந்தது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். தனக்கான இடத்தில் இருப்பதைச் சொல்லியும் அவர் நம்பவில்லை. உடனே போர்டிங் பாஸை எடுத்துக் காட்டியிருக்கிறார். ராணுவத்தில் பணிபுரிவதால் முதல் வகுப்பில் பயணிக்கிறார் என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் சென்றுவிட்டார். இந்த விஷயத்தை வாக்கர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். இனப் பாகுபாடு இன்னும் தொடர்வதாகப் பலரும் கொதித்துவிட்டனர். இரண்டு நாட்களில் இந்த விஷயம் 2,50,000 தடவை பகிரப்பட்டிருந்தது. “இந்த விஷயத்தைப் பகிர்ந்ததுக்கு நான் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்த விரும்ப மாட்டேன். இனி யாரும் அவரைப் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எம்மிட் வாக்கர்.

உயர்ந்த மனிதர்!

 

 

  •  

http://tamil.thehindu.com/world/article21378509.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
உலக மசாலா: மனதை உலுக்கிய பாசப் போராட்டம்!
 
10chskomasalapic
 

சீனாவைச் சேர்ந்த க்வான் ஃபென்ஸியாங், ஸு லிடா தம்பதியர், 22 ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற இடத்தில் தங்கள் மகளை மீண்டும் சந்தித்தனர். இவர்களது மகளின் வளர்ப்புத் தந்தையும் தாயும் அமெரிக்கர்கள். கேத்தரின் சூ போலர் கல்லூரி மாணவியாக இருக்கிறார். “1995-ம் ஆண்டு எங்கள் 2-வது மகள் பிறந்தாள். சீனாவில் ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்த காலகட்டம். அத்துடன் எங்கள் குடும்பம் வறுமையில் வாடியது. எங்களுக்கு வேறு வழி தெரியாமல், பிறந்த 5-வது நாள் ஒரு காய்கறிச் சந்தையில் குழந்தையை வைத்துவிட்டோம். எங்கள் மகள் ஜிங்ஸி 7-வது மாதம் 24-ந் தேதி, காலை 10 மணிக்குப் பிறந்தாள். வறுமை காரணமாக எங்கள் செல்ல மகளைப் பிரிகிறோம். நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவளின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும். 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நேரத்தில் ஒருநாள் காலை ஹங்ஸொவ் பகுதியில் உள்ள உடைந்த பாலத்தில் சந்திப்போம் என்று எழுதி வைத்துவிட்டு ஒளிந்துகொண்டோம். குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த ஒருவர் அவளைத் தூக்கிச் செல்வதைக் கண்டு, சற்று நிம்மதியாக வீடு திரும்பினோம். ஆனால் ஒவ்வொரு நாளும் எங்கள் மகளை நினைத்து அழுதுகொண்டே இருந்தோம். திருவிழாவின்போது மகளுக்காக உடைந்த பாலத்தில் காத்திருந்தோம். அப்போதுதான் எங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆவணப்பட இயக்குநர் ஒருவர், மகளைக் கண்டுபிடித்து தருவதாகச் சொன்னார்” என்கிறார் ஸு லிடா.

காப்பகத்தில் விடப்பட்ட குழந்தையை 1996-ம் ஆண்டு ஓர் அமெரிக்கத் தம்பதி தத்தெடுத்துக்கொண்டது. “எங்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ஆனாலும் மகளை விரும்பி ஏற்றுக்கொண்டோம். கேத்தரின் என்று பெயர் சூட்டினோம். உருவம் சீனர்போல் இருந்தாலும் அவள் அமெரிக்கராகவே வளர்ந்தாள். என்றாவது விவரம் தெரிந்து கேள்வி கேட்கும்போது, உண்மையைச் சொல்ல நினைத்தோம். கல்லூரி சென்றபோதுதான் அவள் சந்தேகம் கேட்டாள். உண்மையைச் சொல்லி, அவளது பெற்றோர் எழுதிய கடிதத்தையும் கொடுத்தோம். அந்த நாள் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இளம் பெண்ணின் போராட்டத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. பெற்றோரைப் பார்க்கலாமா என்று கேட்டவுடன், ஒப்புக்கொண்டாள். அப்போதுதான் சீனாவிலிருந்து ஓர் ஆவணப்பட இயக்குநர் சமூகவலைத்தளம் மூலம் தொடர்புகொண்டார். ஜிங்ஸி என்ற பெயர் சொன்னதும் எங்கள் மகள் என்று உறுதி செய்துகொண்டோம். சீனா சென்றோம். உடைந்த பாலத்தில் அவளது பெற்றோர் காத்திருந்தனர். மகளைக் கண்டதும் அம்மா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டது” என்று வளர்ப்பு பெற்றோர் கென், ரூத் தெரிவித்தனர்.

 

தொடர்புடையவை

“அம்மாவும் அப்பாவும் கோடி முறை மன்னிப்புக் கேட்பதாகச் சொல்லி அழுதார்கள். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. எனக்கு மாண்டரின் புரியவில்லை. ஆனாலும் பாசத்தைப் புரிந்துகொண்டேன். உருவம் சீனராகவும் உள்ளம் அமெரிக்கராகவும் இருக்கும் எனக்கு உணவு, மொழி, கலாச்சாரம் எல்லாமே அந்நியமாக இருந்தது. என்னைப் பெற்றவர்களுடன் தொடர்பில் இருப்பேன். ஆனால் என் வளர்ப்பு பெற்றோரிடம்தான் வாழ்வேன்” என்கிறார் கேத்தரின்.

மனதை உலுக்கிய பாசப் போராட்டம்!

http://tamil.thehindu.com/world/article21382124.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பழிக்குப் பழி…

 
 
 
 
12chskomasalapic
TAMILTHTemplateLibrarynation21clIMG2
 

 

பிலிப்பைன்ஸ் நாட்டின் ‘கோப்ரா கிங்’ என்று அழைக்கப்பட்டவர் எல் லிஸ் பீட்டர் லென்டரியோ. நாகப் பாம்பு மீது கோபப்பட்டு, அதைப் பழிவாங்கும் முயற்சியில் இறந்து போனார். பாம்புகளில் அதிக விஷயம் கொண்டவையாகக் கருதப்படும் நாகப் பாம்புகளை வைத்து நிகழ்ச்சி செய்து காட்டுவதுதான் பீட்டரின் தொழில். இதுவரை பல முறை விஷப் பாம்புகளிடம் கடி வாங்கியிருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட அவர் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. கடிபட்ட இடத்தில் தன்னிடம் இருக்கும் சில மூலிகைகளைத் தேய்ப்பார். தானே உருவாக்கி வைத்திருக்கும் மருந்துகளைக் குடிப்பார். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார். ஆனால் இறந்த நாள் அன்று, மோட்டார்பைக்கில் உள்ள பெட்டியில் இருந்த ஒரு நாகப் பாம்பை எடுப்பதற்காக மூடியைத் திறந்தார். நாகப் பாம்பின் வால் மூடியில் சிக்கியிருந்ததால், அது வலியால் துடித்துக்கொண்டிருந்தது. மூடி திறந்தவுடன் கோபத்தில் பீட்டரின் கையில் கொத்திவிட்டது. உடனே பீட்டருக்குக் கோபம் வந்துவிட்டது. சட்டென்று நாகப் பாம்பின் தலையை வெட்டி, அதன் ரத்தத்தைக் குடித்துவிட்டார். சற்று நிதானத்துக்கு வந்த பிறகு வழக்கம்போல் மூலிகையைக் கடிபட்ட இடத்தில் தேய்த்துவிட்டு, மருத்தையும் விழுங்கினார். வழக்கமான விஷயம் என்பதால் வீட்டில் உள்ளவர்களும் இவரைக் கண்டு பதற்றமடையவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் பீட்டரின் வாயில் இருந்து நுரை வந்தது. ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்டவர்கள் உடனே மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றனர். அங்கே பீட்டர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். ‘கோப்ரா கிங்’ என்ற பட்டம் பெறுவதற்கு பீட்டர் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். 15 வயதில் பாம்புகளைத் தன்னால் கையாள முடியும் என்பதைக் கண்டறிந்தார். அன்று முதல் விஷப் பாம்புகளைச் செல்லப் பிராணிகளைப்போல் கையாள்வார். எவ்வளவோ ஆபத்துகளைச் சந்தித்திருக்கிறார். தன்னுடைய மருத்துவத்தால் எளிதில் மீண்டிருக்கிறார். ஆனால் இந்த முறை இறப்பைச் சந்தித்துவிட்டார். கோப்ரா கிங் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக நாடு முழுவதும் விஷயம் பரவியது. உண்மையில் பாம்புக் கடியால் அவர் உயிர் இழந்தாரா, அல்லது வேறு உடல்நலப் பிரச்சினையால் உயிர் இழந்தாரா என்பது புதிராகவே இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

பழிக்குப் பழி…

கனடாவைச் சேர்ந்த 2 வயது சிறுவன் மிகா கேப்ரியல், பீச் பழங்களைத் தவிர எதையும் சாப்பிடுவதில்லை. மரபணுக் குறைபாட்டால் உணவு ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். பீச் பழங்களைத் தவிர, எந்த உணவையும் இவனது உடல் ஏற்றுக்கொள்வதில்லை. உரம் போடாமல் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பீச் பழங்கள் ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை. கிடைக்கும் காலத்தில் பழங்களை வாங்கி, மீதிக் காலத்துக்குப் பயன்படுத்துவதற்கு அதிகமாக செலவாகிறது. “ஆறு மாதங்களுக்கு முன்புதான் இவனுக்கு இந்தப் பிரச்சினை இருப்பது தெரிந்தது. மிகவும் அன்பான குழந்தை. எதையும் சாப்பிட முடியாமல் தவிக்கிறான். எங்களுக்கு வசதியும் இல்லை. அதனால் செலவுகளைச் சமாளிக்க நல்ல உள்ளங்களிடம் நன்கொடை திரட்டிவருகிறோம்” என்கிறார் கேப்ரியலின் அம்மா.

பாவம் குழந்தை…

http://tamil.thehindu.com/world/article21461883.ece

  • தொடங்கியவர்
13chskomasalapic
TAMILTHTemplateLibrarynation21clIMG2
 

 

உலகம் பணமில்லா பரிவர்த்தனையான டிஜிட்டல் பரிவர்த்தனைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அதனால் கையில் பணமில்லை என்று சொல்லிவிடுவதால் யாசகம் கேட்பவர்களின் நிலைமை மோசமாகிவிட்டது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டனர் சீன யாசகர்கள். ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் இருக்கும் யாசகர்கள், டிஜிட்டல் யாசகத்துக்கு மாறிவிட்டனர். கையில் ஒரு பாத்திரம், பிரிண்ட் செய்யப்பட்ட QR Code, கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான இயந்திரம் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்களிடம் பணமாகவும் இல்லாதவர்களிடம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யும்படியும் சொல்கிறார்கள். உடனே அவர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் சென்றுவிடுகிறது. சீனாவின் டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனங்கள், பெய்ஜிங் உட்பட்ட பல நகரங்களில் க்யூஆர் கோட் மூலம் யாசகர்கள் அதிக அளவில் வருமானம் பெறுகிறார்கள் என்று சொல்கின்றன. இந்த டிஜிட்டல் யாசகத்தை எல்லா இடங்களிலும் செய்துவிட முடியாது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில்தான் வெற்றிகரமாகச் செய்ய முடியும். இதுபோன்ற இடங்களில் ஒரு யாசகர் மாதத்துக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாயைச் சம்பாதித்து விடுகிறார். டிஜிட்டல் பரிவர்த்தனையில் கடந்த ஆண்டே அமெரிக்காவை விட 50 மடங்கு அதிகமாக சீனா ஈடுபட்டுவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாறிவரும் டிஜிட்டல் யாசகம்!

 

கலிபோர்னியாவின் சான் டிகோ நகரில் உள்ள நடைபாதையில் முன்னாள் மேயரின் மனைவியான 70 வயது சிந்தியா ஹெட்ஜ்காக், 2015-ம் ஆண்டு ஜூலை 31 அன்று ஒரு கையில் போனும் இன்னொரு கையில் பையுமாக நடந்துவந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி விழுந்தார். இரண்டு கைகளிலும் பொருட்கள் இருந்ததால் அவரால் விழும்போது கைகளை ஊன்றி, தப்பிக்க இயலவில்லை. அதனால் அவரது மார்பு தரையில் மோதியது. அதில் ஒரு மார்பகம் மோசமாகப் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. “நான் ஓடவில்லை. உயரமான குதிகால் செருப்புகளையும் அணியவில்லை. நடைபாதையில்தான் ஏதோ பிரச்சினை. இல்லாவிட்டால் விழுந்திருக்கமாட்டேன். சுமார் 13 லட்சம் ரூபாய் செலவு செய்து, மீண்டிருக்கிறேன். அதனால் நகர நிர்வாகம் மீது வழக்கு தொடுத்தேன். கடந்த 5-ம் தேதி என்னுடைய உடல் வலிக்கும் மன வலிக்கும் ஆறுதல் தரும் வகையில் சுமார் 55 லட்சம் ரூபாய் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது” என்கிறார் சிந்தியா. ஆனால் நகர நிர்வாகம், சிந்தியா விழுந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் மார்பக அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் புதிய மார்பகங்களைப் பெற்றிருக்கிறார். இது ஏமாற்று வேலை என்று எதிர்ப்பு தெரிவித்தது. நீதிமன்றம் இந்தக் கூற்றைக் கண்டித்ததோடு, நடைபாதைகளைச் செப்பனிடவும் உத்தரவிட்டுள்ளது.

நியாயமான இழப்பீடு…

 

http://tamil.thehindu.com/world/article21571202.ece

  • தொடங்கியவர்
 

உலக மசாலா: மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது

 
 
 
 
 
ryanjpg

 

யுடியூப் மூலம் உடற்பயிற்சி, சமையல், விளையாட்டு, ஃபேஷன் போன்ற பல விஷயங்கள் இப்போது சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. யுடியூப் பிரபலங்களும் திரைப்பட நட்சத்திரங்களைப்போல் பிரபலமாகி வருகிறார்கள். அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். அவர்களில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருப்பவர் 6 வயது ராயன். யுடியூப் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டும் சிறுவன். தன்னுடைய ராயன் யுடியூப் சேனல் மூலம், விதவிதமான பொம்மைகளை தனக்கே உரிய மொழியில் மிக அழகாக அறிமுகப்படுத்துகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான குழந்தைகள் ரசிகர்களாக இருக்கிறார்கள். ராயன் யுடியூப் சேனல் ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார். 2016 ஜூன் முதல் 2017 ஜூன் வரையிலான காலகட்டத்தில் 800 கோடி முறை இவரது வீடியோக்கள் பார்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ரூ.71 கோடி சம்பாதித்திருக்கிறார் ராயன். ஃபோர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட யுடியூப் குறித்த கட்டுரையில், அதிக வருமானம் ஈட்டும் சிறுவன் ராயன் 8-வது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இவர், ஸ்மாஷ் என்ற நகைச்சுவை சேனலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பல குழந்தைகள் ரயானைப் பார்த்து, அதேபோல் வீடியோக்களை எடுத்து கலக்கி வருகிறார்கள்.

“குழந்தையிலிருந்தே நிறைய வீடியோக்களை விரும்பிப் பார்ப்பான். ஒருநாள் இதேபோல் தானும் வீடியோவில் வரவேண்டும் என்று கேட்டான். ஒரு ரயில் பொம்மையை வாங்கிக் கொடுத்து, அவனை வீடியோ எடுத்தோம். நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, அவ்வளவு அழகாக அந்தப் பொம்மையை அறிமுகம் செய்தான். உறவினர்கள், நண்பர்களுக்கு அதை அனுப்பி வைத்தோம். எல்லோரிடமும் பாராட்டுகள் குவிந்தன. இப்படித்தான் இவனது யுடியூப் சேனல் ஆரம்பமானது. மூன்றே ஆண்டுகளில் 1 கோடி பேர் சந்தாதாரர்களாக இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம். பாதுகாப்பு கருதி ராயனின் முழுப் பெயரையோ, முகவரியையோ நாங்கள் இதுவரை வெளியிட்டதில்லை” என்கிறார் ராயனின் அம்மா.

“சின்ன வயதில் இருந்தே பொம்மைகளை அறிமுகம் செய்யும் வீடியோக்களைத்தான் பார்ப்பான். இன்று அந்த நிகழ்ச்சிக்கே சூப்பர் ஸ்டாராகிவிட்டான். என் மனைவிதான் முழுக்க முழுக்க ராயனின் சேனலை நிர்வகிக்கிறார். நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யும் பொம்மைகளை குழந்தைகளுக்கான அறக்கட்டளைகளுக்கு வழங்கி விடுகிறோம். இன்றுவரை தன்னுடைய வேலையை மிகவும் ரசித்து, உற்சாகமாக செய்கிறான். என்றாவது ஒருநாள் அவன் இதை விட்டுவிட விரும்பினால் அதையும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்” என்கிறார் இவரது அப்பா.

தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நீச்சல் குளம், பொம்மை ரயில், பேருந்து, பார்ட்டி பொம்மைகள், பிக்னிக் பொம்மைகள் என்று ஒவ்வொன்றையும் மிக அழகாகவும் இயல்பாகவும் குழந்தைத் தன்மையுடனும் அறிமுகம் செய்வதுதான் ராயனின் தனிச்சிறப்பு. சமையல் பொம்மைகளை அறிமுகம் செய்யும்போது சந்தேகங்களை அம்மாவிடம் கேட்டுக்கொண்டே, சமைத்துக் காட்டுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்றாவது இந்த வேலை பிடிக்காமல் போனால்கூட, ஏராளமான புகழையும் பல தலைமுறைகளுக்கு பணத்தையும் சம்பாதித்துவிட்டார் இந்த ராயன்.

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது

http://tamil.thehindu.com/world/article21618850.ece

  • தொடங்கியவர்
 

உலக மசாலா: உலக மயமாக்கலில் எந்த நாட்டையும் புறக்கணிக்க இயலாது!

 
 
15chskomasalapic

 

இஸ்ரேல் நாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அப்படி என்றால் பட்டியலிடப் போகும் விஷயங்களையும் நீங்கள் புறக்கணிக்க வேண்டும் என்கின்றன இஸ்ரேல் ஆதரவு அமைப்புகள். இண்டெல், பெண்டியம், செலெரான் கம்ப்யூட்டர் பிராசசர் சிப்களை உங்களது கணினி, மடிக் கணினி, நோட்புக் போன்றவற்றிலிருந்து நீக்க வேண்டும். இவற்றை உற்பத்தி செய்வது இஸ்ரேல்தான். புரட்சிகர கண்டுபிடிப்பாகக் கருதப்படும் Ivy Bridge பிராசசரைத் தயாரிப்பதும் இஸ்ரேல்தான். விண்டோஸ் XT ஆபரேட்டிங் சிஸ்டம் உங்களிடமிருந்தால் அதையும் நீக்க வேண்டும். ஆன்ட்டி வைரஸ், ஃபயர்வால் போன்றவற்றையும் நீக்கவேண்டும். அடுத்து அனைத்து மொபைல்போன்களையும் குப்பையில் போடவேண்டும். இந்தத் தொழில்நுட்பம் முதலில் இஸ்ரேலில்தான் உருவானது. மொபைல் சிப் தொழில்நுட்பம் இஸ்ரேலிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, இன்று 100 மில்லியன் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எஸ்.எம்.எஸ். அனுப்புவதையும் மறந்துவிட வேண்டும், அதை முன்னேற்றியதில் இஸ்ரேலுக்குப் பங்கு உண்டு. 4ஜி சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப்கள் அனைத்தும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டவை. வாய்ஸ் மெயில், பதிவு செய்யப்பட்ட குரல்களையும் நீக்க வேண்டும். இணையத்தில் ஏதாவது தேடுகிறீர்கள் என்றால், இஸ்ரேலிய தேடு பொறிதான் அதைக் கண்டுபிடித்துக் கொடுக்கும். அதனால் அதையும் பயன்படுத்த முடியாது.

அச்சிடப்பட்ட தாள்களை வாங்கினால், அதில் பயன்படுத்திய 50% மை இஸ்ரேல் தயாரிப்பாக இருக்கும். அதேபோல் வீட்டில் பொழுதுபோக்குவதற்காக வீடியோ ஆன் டிமாண்ட் மூலம் திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை வாங்க முடியாது. இவை இஸ்ரேலிய தொழில்நுட்பத்தால் உருவானவை. இ-புத்தகத் தொழில்நுட்பமும் இஸ்ரேலுக்குச் சொந்தமானது. எலக்ட்ரிக் காரையும் பயன்படுத்த முடியாது, அதற்கு சார்ஜ் செய்யும் பேட்டரி இஸ்ரேலுடையது. சாண்ட்விச்களில் பயன்படுத்தப்படும் செர்ரி தக்காளிகள் இஸ்ரேலில் விளைவிக்கப்பட்டவை. உலகம் முழுவதும் தேனீக்கள் குறைந்துவருவதற்குத் தீர்வு இஸ்ரேல் கண்டுபிடித்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி தேனீக்களைப் பெருக்கி, தேன் எடுத்துவருகிறார்கள். அப்படியென்றால் தேனையும் புறக்கணிக்க வேண்டும்.

இஸ்ரேலின் மிகப் பெரிய மருந்து நிறுவனமான Teva, ஏராளமான மருந்துகளைத் தயாரித்து வருகிறது. புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரேலிய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சாதனத்தின் மூலம்தான் இன்சுலின் அளவிடப்படுகிறது. இப்படி மருத்துவத்துறையில் மட்டுமே ஆயிரக்கணக்கான பங்களிப்பை இஸ்ரேல் செய்துவருகிறது.

இஸ்ரேலின் நீர்ப் பாசனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடும் நாடுகளிலிருந்து பெறப்படும் உணவை உட்கொள்ள முடியாது. ஆப்பிரிக்கா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, நேபாளம் போன்ற பல நாடுகள் இந்தப் பாசனத் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. புறக்கணிக்க முடிவு செய்யும் முன், யோசித்து செய்யுங்கள் என்கின்றன இந்த அமைப்புகள்.

உலக மயமாக்கலில் எந்த நாட்டையும் புறக்கணிக்க இயலாது!

http://tamil.thehindu.com/world/article21669582.ece

  • தொடங்கியவர்
 

உலக மசாலா: கல்லீரலில் கையெழுத்து

 
 
 
 
 
SimonBramhall

மருத்துவர்கள் பிரச்சினைகளில் சிக்குவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த 53 வயது மருத்துவ நிபுணர் சிமோன் பிரம்ஹால், வித்தியாசமான, இதுவரை கேள்விப்படாத குற்றச்சாட்டில் மாட்டியிருக்கிறார். நோயாளிகள் தங்கள் உயிரையே மருத்துவர்களை நம்பித்தான் ஒப்படைக்கிறார்கள். அப்படிப்பட்ட உயர்ந்த தொழிலுக்கு மருத்துவர்களும் மரியாதை அளித்து, அர்ப்பணிப்போடு வேலை செய்துவருகிறார்கள்.

பிர்மிங்ஹாமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில், சிமோன் பிரம்ஹால் 2013-ம் ஆண்டு ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். 12 வருட அனுபவம் என்பதால் இரண்டு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடந்துமுடிந்தன. சிமோனைப் பாராட்டி பத்திரிகைகளில் செய்திகளும் வெளிவந்தன. அந்த அறுவை சிகிச்சைகளில்தான் இப்போது குற்றவாளியாக, தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்.

இவர் அறுவை சிகிச்சை செய்தவர்களில் ஒருவருக்குச் சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் ஏதோ பிரச்சினை. அதனால் மறுபடியும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த முறை வேறு மருத்துவர்கள் அந்தப் பணியை மேற்கொண்டனர். அப்போது கல்லீரலில் ‘எஸ்பி’ என்று சிமோன் பிரம்ஹால் பெயரின் முதல் இரண்டு எழுத்துகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாதாரணமாக அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற்படும் வடுக்கள் கூட வெகு விரைவில் மறைந்துவிடும். ஆனால் இவரது எழுத்துகள் அப்படியே இருந்தது கண்டு ஆச்சரியமடைந்தனர். சிமோன் மீது குற்ற வழக்கு தொடுக்கப்பட்டது.

”நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை நினைக்கிறார்கள். அவர்களின் நோய்க்குதான் நாங்கள் மருத்துவம் செய்ய வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல், எங்களின் விருப்பத்தை நோயாளிகளின் உடலில் நிறைவேற்ற யாருக்கும் உரிமை இல்லை. சிமோனின் இந்தச் செயலால் நோயாளி உடல் நிச்சயம் வலியை உணர்ந்திருக்கும். ஒருவேளை மயக்கத்தில் வலி தெரியாவிட்டாலும்கூட இது குற்றம்தான். அனுபவம் மிக்க மருத்துவர் இப்படிச் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நெறிமுறைகளின்படி அவர் செய்தது தவறில்லை என்றாலும் மருத்துவச் சட்டப்படி அது தவறுதான்” என்கிறார்கள் சக மருத்துவர்கள்.

“நான் எத்தனையோ அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறேன். அன்று ஏனோ இப்படிச் செய்துவிட்டேன். இது ஒரு தவறான விஷயமாகவே தெரியவில்லை. அந்த நோயாளிக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்காவிட்டால் இதுவரைகூட யாருக்கும் தெரிந்திருக்காது. நான் செய்ததை ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆனால் இது ஒரு அறுவை சிகிச்சை மருத்துவரைத் தண்டிக்கும் அளவுக்குப் பெரிய குற்றமா என்று யோசிக்க வேண்டும்” என்கிறார் சிமோன் பிரம்ஹால்.

‘‘சிமோன் எவ்வளவு திறமை வாய்ந்த மருத்துவர்! 2010-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் கல்லீரலை எடுத்து, எனக்குப் பொருத்தினார். இன்றுவரை நான் மகிழ்ச்சியாக, இயல்பாக வாழ்ந்துவருகிறேன். என் கல்லீரலில் மருத்துவர் இப்படிச் செய்திருந்தால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருப்பேன். என் உயிரையே காத்தவரின் பெயர், என் கல்லீரலில் இருப்பது எனக்குப் பெருமையான விஷயம் என்கிறார்” டிரேசி ஸ்க்ரிவென்.

தற்போது நிபந்தனையற்ற பிணையில் வெளியில் இருக்கும் சிமோன், அடுத்த மாதம் கிடைக்கப் போகும் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்!

உங்க பெயரைப் பொறிக்க வேறு இடமா இல்லை, டாக்டர்?

http://tamil.thehindu.com/world/article21819972.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: பேரன்புக்காரி!

 
 
 
 
 
 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
17chskomasalapic
 
 

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆந்தையால் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்ட அணிலை, அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள க்ரீன்வில்லி கவுண்ட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பம் காப்பாற்றியது.

இன்றுவரை அந்த வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது அணில். “2009-ம் ஆண்டு பிறந்து 4 வாரங்களே ஆன சிறிய அணிலை, ஒரு ஆந்தை மோசமாகத் தாக்கியது. அது பிழைப்பதற்கான வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம். நல்லவேளையாக வனவிலங்குகள் மீட்புக் குழுவினர் வந்து, இந்த அணிலுக்கு மருத்துவம் செய்தனர். அணில் பிழைத்துக்கொண்டது. மிகச் சிறிய அணிலாக இருந்ததால், சிறிது காலம் பராமரித்து, பிறகு காட்டில் விட்டுவிடும்படிச் சொன்னார்கள். நாங்களும் மகிழ்ச்சியோடு அணிலை அழைத்துவந்தோம். ஏனென்றால் நாங்கள் ஏற்கெனவே இதுபோன்று பாதிக்கப்பட்ட அணில்களுக்கு அடைக்கலம் அளித்து, காட்டில் விட்டிருக்கிறோம். ஆனால் இந்த பெல்லா மட்டும் வித்தியாசமானவள். ஓரளவு வளர்ந்த பிறகு இன்னும் சில அணில்களுடன் சேர்த்து, காட்டில் விட்டோம். எல்லா அணில்களுமே சில நாட்களுக்கு எங்கள் வீட்டுக்குத் தினமும் வந்துகொண்டிருந்தன. காலப்போக்கில் காட்டுடன் இணக்கமான பிறகு வருவதை நிறுத்திவிட்டன. ஆனால் இந்த பெல்லா மட்டும் 8 ஆண்டுகளுக்குப் பிறகும் வந்துகொண்டிருக்கிறாள். இவளுக்காக நாங்கள் சிறப்புக் கவனம் எல்லாம் கொடுக்கவில்லை. ஆனால் எங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள்.

தினமும் காலை கதவுக்கு முன்னால் வந்து காத்திருப்பாள். சற்று நேரம் அவளை யாரும் கவனிக்கவில்லை என்றால், உணவு அறையின் ஜன்னலில் ஏறி, கண்ணாடி வழியே பார்ப்பாள். யாராவது பார்த்துவிட்டால், கதவைத் திறந்து விடுவோம். வீடு முழுவதும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, அமர்வாள். அவளுக்குப் பிடித்த பருப்புகள், பழங்கள் எல்லாம் வாங்கி வைத்திருப்போம். எங்கள் மடி மீது அல்லது தோள் மீது அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுவாள். என் கணவர் ஜான்தான் தினமும் இவளுக்குப் பழங்களும் பருப்புகளும் வாங்கிவருவார். உணவு மேஜையில் இவளது உணவு இல்லை என்றால், உடனே ஜானின் அறைக் கதவைத் தட்டுவாள். சாப்பிட்டு முடித்தவுடன் எங்கள் வீட்டுக் குழந்தைகள், நாய்களுடன் விளையாடுவாள். பிறகு காட்டுக்குச் சென்றுவிடுவாள். சில ஆண்டுகளுக்கு முன்பு பெல்லா தாயானாள். இனி வர மாட்டாள் என்று நினைத்தோம். குட்டிகளை ஈன்ற சில வாரங்களில் தன் 4 குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்த நாளை எங்களால் மறக்க முடியாது. மனிதக் குடும்பமும் அணில் குடும்பமும் சந்தித்துக்கொண்ட அற்புதமான தருணம் அது! சென்ற ஆண்டு காலில் அடிபட்டதோடு வீட்டுக்கு வந்தாள். அவளை வீட்டில் வைத்து சிகிச்சையளித்தோம். அப்போது மீண்டும் 3 குட்டிகள் போட்டாள்.

குட்டிகளையும் கவனித்து, சில வாரங்களுக்குப் பிறகு காட்டுக்கு அனுப்பி வைத்தோம். அணில்களைப் பற்றிய பல கற்பிதங்களை பெல்லா உடைத்திருக்கிறாள். உண்மையில் அணில்கள் அற்புதமான பிராணிகள் என்று எங்கள் நண்பர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறாள். எல்லா ஜீவன்களுக்கும் இரக்கம் என்பது முக்கியமானது என்ற பாடத்தை பெல்லா கற்றுக் கொடுத்திருக்கிறாள். இன்று சமூகவலைதளங்களிலும் பெல்லாவின் புகழ் பரவிவிட்டது” என்கிறார் பிரான்ட்லி ஹாரிசன்.

பேரன்புக்காரி!

http://tamil.thehindu.com/world/article21826188.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: 40 ஆண்டுகள் குடலில் இருந்த ஊசி

 
masala

சீனாவில் லிங்ஷன் தீவில் உள்ள சிறிய கடற்கரைப் பகுதிக்குச் சொந்தக்காரர் ஜியாவோ யங்ஷெங். அவருடைய அழகான வீட்டைப் புதுப்பிக்க பல வழிகளில் யோசித்தார். இறுதியில் கடற்கரையில் கிடைக்கும் சிப்பிகள் மூலம் வீட்டை அலங்கரிக்க முடிவு செய்தார். இரண்டாண்டுகளில் வீட்டுக் கூரை, சுவர், தூண் போன்றவற்றைப் பல்வேறு விதமான சிப்பிகளால் அலங்கரித்துவிட்டார். நடுநடுவே பெரிய சங்குகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அழகான இந்த வீடு, இப்பொழுது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வதால், சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது!

ம்ம்… ஜியாவோ, உங்க ஐடியா ரொம்பப் புதுசாத்தான் இருக்கு!

நிகோலா டெஸ்லா எலக்ட்ரிகல் இன்ஜினீயர், கண்டுபிடிப்பாளர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஓர் ஓவியத்தை உருவாக்கியிருக்கிறார் பில் ஹன்சென். இது வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியமல்ல. இரண்டு மின்சார வயர்களை பேட்டரியில் இணைக்கும்போது உருவாகும் தீப்பொறியை வைத்து, டெஸ்லாவின் உருவத்தை வரைந்திருக்கிறார்! தீப்பொறி மூலம் இவ்வளவு அழகான ஓவியத்தைக் கொண்டுவர முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது!

எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங் துறையின் முன்னோடியான டெஸ்லாவுக்கு அளிக்கப்பட்ட மரியாதை மெய்சிலிர்க்குது!

60 வயது ஜுலாங் சமீப காலமாக வயிற்று வலியில் துடித்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சாதாரண வலி என்று நினைத்த மருத்துவர்கள், எக்ஸ்ரே எடுத்த பிறகு அதிர்ந்து போனார்கள். அவருடைய வயிற்றில் அக்குபங்சர் ஊசி இருந்திருக்கிறது. 40 வருடங்களுக்கு முன் ஜு லாங் வயிற்று வலிக்காக அக்குபங்சர் மருத்துவம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஓர் அங்குலம் அளவுள்ள ஊசி அவரது உடலுக்குள் ஒடிந்து விழுந்துவிட்டது. நாற்பதாண்டுகளாக வயிற்றுக்குள்ளேயே பயணம் செய்த ஊசி, இப்போது குடலுக்குள் வந்ததால் வலி ஏற்பட்டிருக்கிறது. துருப்பிடித்துப் போன ஊசியை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

ஒரு பிரச்சினைக்காக டாக்டரிடம் வந்தால், இன்னொரு பெரிய பிரச்சினையைக் கொண்டு வந்துடறீங்களே… இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா…

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக மசாலா: இந்தியாவில் இருந்திருந்தால் செல்லாமல் போயிருக்கும்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
20chskomasalapic
 
 

ஒரு மனிதரால் எவ்வளவு நாணயங்களைச் சேமித்து விடமுடியும்? ஜெர்மனியில் உள்ள ஒரு குடும்பத்திடம் 12 லட்சம் நாணயங்கள் இருந்தன. 2,250 கிலோ எடையுடைய இந்த நாணயங்களை, வங்கியில் கொடுத்து பணமாகப் பெற்றுக்கொள்வதற்காக ஒப்படைத்துள்ளனர். டிரக் டிரைவராக இருந்த அந்தக் குடும்பத்தின் தலைவர், 30 ஆண்டுகளாகத் தினமும் ஒன்றிரண்டு ஃபென்னிக் நாணயங்களைச் சேமித்து வந்திருக்கிறார். அவர் இறந்த பிறகு தான் இந்த விஷயம் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது. மலைபோல் குவிந்துள்ள இந்த நாணயங்களை எப்படி வங்கியில் ஒப்படைப்பது என்று நினைத்தனர். இவற்றில் பல நாணயங்கள் இப்போது புழக்கத்தில் இல்லை. விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜெர்மனி மத்திய வங்கி, பழைய நாணயங்களை வாங்கிக்கொள்வதாகச் சொல்லிவிட்டது. நாணயங்கள் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. சாதாரணமாக நாணயங்களை எண்ணுவதற்கு வங்கியில் கருவிகள் இருக்கின்றன. ஆனால் இந்த நாணயங்கள் துருப்பிடித்திருப்பதால் கருவிகளில் போட முடியவில்லை. அதனால் நாணயங்களைக் கைகளால் எண்ணுவதற்கு வங்கியில் பணிபுரியும் வுல்ஃப்காங் கெமெரிட் என்பவரை நியமித்தது வங்கி. கடந்த 6 மாதங்களாக நாணயங்களை எண்ணுவது மட்டுமே இவரது வேலை. “நாணயங்களைத் தினமும் எண்ணி, பைகளில் நிரப்பி, எழுதி வைப்பதுதான் என்னுடைய வேலை. நாணயங்களை எண்ணுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததால், இந்த வேலை சலிப்பைத் தரவில்லை. 6 மாதங்களில் வேலை முடிந்துவிட்டது. சுமார் 6 லட்சம் ரூபாய் அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்திருக்கிறோம். தனிப்பட்ட ஒரு மனிதரிடம் இவ்வளவு நாணயங்கள் இருந்தது ஆச்சரிய மானது” என்கிறார் வுல்ஃப்காங்.

இந்தியாவில் இருந்திருந்தால் செல்லாமல் போயிருக்கும்!

 

 

சீனாவைச் சேர்ந்த அழகு சாதனப் பொருட்கள் நிறுவனம் ஒன்று, தன்னுடைய ஊழியர்களை நடத்திய விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் அதிக அளவில் பெண்கள் வேலை செய்கிறார்கள். இந்த ஆண்டில் சரியாக வேலை செய்யாத 12 பெண்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை அளிக்க நிர்வாகம் திட்டமிட்டது. நிறுவனத்தின் 14-வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட தினத்தன்று விருந்தும் கலைநிகழ்ச்சிகளும் களைகட்டின. இதே மேடையில் சரியாக வேலை செய்யாத 12 பெண்களும் ஏற்றப்பட்டனர். அவர்களை முட்டி போட வைத்தனர். பிறகு தாங்கள் நிறுத்தச் சொல்லும்வரை ஒருவர் முகத்தில் இன்னொருவரை அறையச் சொன்னார்கள். நூற்றுக்கணக்கான சக ஊழியர்களுக்கு முன்பு, விற்பனைப் பிரிவைச் சேர்ந்த இந்தப் பெண்கள் ஒருவரை ஒருவர் அறைந்தனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த யாரோ ஒருவர் மூலம் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை 60 லட்சம் தடவை இது பார்க்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர், “சாதிக்க வேண்டும் எண்ணத்தை உண்டாக்குவதற்கே இதுபோன்ற செயலில் நிறுவனம் ஈடுபட்டது. இது நிறுவனத்துக்கு மட்டுமின்றி, அந்தப் பெண்களுக்கும் நல்லது. எங்கள் ஊழியர்கள் வலிமையானவர்கள். எதையும் தாங்கும் திறன் படைத்தவர்கள். இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் இல்லை” என்கிறார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அநாகரிகம்

http://tamil.thehindu.com/world/article21997292.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: போன்சாய் மரங்களைப் போல மாடு வந்தாச்சு!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
21chkandust11
 
 

மைக்ரோ பன்றிகளை உருவாக்கியபோது உலகம் வியப்பில் ஆழ்ந்தது. தற்போது மைக்ரோ மாடுகள் மனிதர்களின் செல்லப் பிராணிகளாகிவிட்டன. உலக அளவில் மைக்ரோ மாடுகளை உருவாக்குபவர்கள் வெகு சிலரே இருக்கின்றனர். அவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது டஸ்டின் பில்லார்ட் முக்கியமானவர். 1995-ம் ஆண்டு மைக்ரோ மாடுகளை உருவாக்க ஆரம்பித்தபோதே புகழ் பெற ஆரம்பித்துவிட்டார். தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறிய மாடுகளை உருவாக்கியிருக்கிறார்.

“நான் சின்ன வயதிலிருந்தே தினமும் என் தாத்தாவின் பண்ணையில் சிறிது நேரத்தைச் செலவிடுவேன். அதனால் மாடுகளைப் பற்றிய புரிதல் இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்டேன். அங்கேதான் முதல்முறை மைக்ரோ மாடுகளைப் பார்த்தேன். அதிலிருந்து மைக்ரோ மாடுகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

மூன்று ஆண்டுக்குப் பிறகு 10 ஏக்கர் நிலத்துக்கு உரிமையாளனாக மாறினேன். மிகச் சிறிய விலங்குகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். இன்று ஆக்ஸன் ரிட்ஜ் மினியேச்சர் கால்நடைப் பண்ணையாக வளர்ந்து நிற்கிறது. நான் உருவாக்கும் பசுக்கள், எருதுகளின் உயரம் 33 அங்குலம். வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு வண்ணங்களில் மாடுகளை உருவாக்குகிறேன். ஒரு வருடத்துக்கு 10 முதல் 20 மைக்ரோ மாடுகளை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறேன். தென் அமெரிக்கர்கள்தான் இந்த மாடுகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்க அதிகம் விரும்பினார்கள். இப்போது ஐரோப்பா, மெக்சிகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துவிட்டன.

சாதாரண மாடுகளைச் செல்லப் பிராணியாக வெளியே அழைத்துச் செல்ல இயலாது. எங்கள் மைக்ரோ மாடுகள் உங்களது கால் வரை மட்டுமே இருப்பதால், நாயைப்போல் எங்கும் அழைத்துச் செல்ல முடியும். மக்கள் கூட்டத்துக்குள் சென்றால்கூட, இந்த மாடுகள் முரண்டு பிடிப்பதோ, பயம்கொள்வதோ கிடையாது. அதனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மைக்ரோ மாடுகள் வளர்ப்பதை விரும்புகிறார்கள். நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு மாடுகளுடன் பழகும் வாய்ப்பே கிடைப்பதில்லை. மைக்ரோ மாடுகள் அந்தக் குறையைத் தீர்த்து வைக்கின்றன. இப்படி திட்டமிட்டு இனப்பெருக்கம் செய்யும்போது, உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். நாய், பூனை ஆகியவற்றின் இனப்பெருக்கத்தின்போது எனக்கும் இந்தப் பிரச்சினை வந்தது.

ஆனால் பசுக்களிலும் எருதுகளிலும் அந்தப் பிரச்சினை வரவில்லை. என்னுடைய மைக்ரோ மாடுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றன. எங்களின் லட்சியம் ஆண்டுக்கு 25 முதல் 30 மாடுகளை 33 அங்குல உயரத்திலும் 227 கிலோ எடையிலும் உருவாக்குவதுதான். ஒரு மைக்ரோ எருதின் குறைந்தபட்ச விலை 64 ஆயிரம் ரூபாய். மாடுகளை உருவாக்குவதற்கு செலவு அதிகமாவதால், இதைவிடக் குறைவான விலையில் விற்க இயலாது” என்கிறார் டஸ்டின் பில்லார்ட்.

போன்சாய் மரங்களைப் போல மாடு வந்தாச்சு!

http://tamil.thehindu.com/world/article22121595.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வலி அறியாத அதிசய குடும்பம்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
23chskomasalapic
 
 

வலி என்ற உணர்ச்சி தெரியவில்லை என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எல்லோரும் சொல்வதுண்டு. ஆனால் வலி தெரியவில்லை என்றால் மிகவும் ஆபத்து. இத்தாலியைச் சேர்ந்த லெட்டிஸியா மார்சிலி குடும்பத்தில் உள்ள அனைவரும் வலியை உணராதவர்களாக இருக்கிறார்கள். மரபணு மாற்றத்தால் இவர்களுக்கு வலி என்ற உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. இந்தக் குறைபாட்டுக்கு ‘மார்சிலி சிண்ட்ரோம்’ என்றே மருத்துவர்கள் பெயர் சூட்டிவிட்டனர். 52 வயது மார்சிலி, பிறந்ததிலிருந்தே வலியை உணராதவராக இருக்கிறார். இவரது மகன், பேரன் என்ற மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த ஐந்து பேருக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. மிகப் பெரிய அறுவை சிகிச்சைகளைக் கூட இவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் செய்ய முடியும் என்பதால், இவர்களை வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் மருத்துவர்கள்.

“தினசரி வாழ்க்கையில் வலியை உணர முடியவில்லை என்பது எங்களுக்கு வரமான விஷயமாகத்தான் தெரிகிறது. தலைவலி, முட்டிவலி, கழுத்துவலி என்று எதையும் எங்களால் உணர முடியாது. ஆனால் இதில் சாதகமான விஷயங்களை விட பாதகமான விஷயங்கள்தான் அதிகம். நம் உடல் உறுப்புகளில் ஏதாவது பிரச்சினை என்றால், உடனே மூளை வலியை உணரச் செய்து, அதைக் கவனிக்க வைக்கிறது. ஆனால் எங்களுக்கு உடலில் என்ன பிரச்சினை என்றாலும் வலிமூலம் தெரிய வராது. வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவற்றை வைத்துதான் கண்டுகொள்ளவே முடியும். இது பல நேரங்களில் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடியது. என் பெரிய மகன் லுடோவிகோவுக்குக் கால்பந்து விளையாடும்போதும் அடிபட்டுவிட்டது. வலி தெரியாததால் தொடர்ந்து விளையாடிவிட்டு வந்தான். திடீரென்று ஒருநாள் முட்டியில் வீக்கம் இருந்தபோதுதான் அங்கே காயம் என்பது புரிந்தது. எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தபோது, எலும்பில் ஏராளமான விரிசல்கள் இருப்பது தெரிந்தது. பிறகுதான் சிகிச்சையளித்தோம். என் சின்ன மகன் பெர்னார்டோ, சைக்கிளில் சென்றபோது விழுந்துவிட்டான். வலி தெரியாததால், 14 கி.மீ. தூரம் சைக்கிளை ஓட்டிக்கொண்டே வந்துவிட்டான். அவனது கையில் வீக்கம் வந்தபோதுதான் மருத்துவரிடம் சென்றோம். உடனே வரவில்லை என்றால் உள்ளுக்குள் சீழ் வைத்துவிடும் என்று மருத்துவர் கடிந்துகொண்டார். எல்லோரும் வலி தெரியாத எங்கள் குடும்பத்தை அதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்கிறார்கள். அது தவறு. வலிமூலம் நீங்கள் எளிதில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்கள். எங்களால் அது முடியாது. இந்த நிலை இனி யாருக்கும் வர வேண்டாம்” என்கிறார் மார்சிலி.

“மார்சிலியின் குடும்பத்தினருக்கு வலியை உணரும் எல்லா நரம்புகளும் சரியாக இருக்கின்றன. ஆனால் அவை வேலை செய்வதில்லை. இவர்களின் நிலையை வைத்து, வலி இல்லாமல் சிகிச்சையளிக்க முடியுமா என்ற கோணத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் மயக்க மருந்துக்கு மாற்றாக, வலி உணரும் நரம்புகளைத் தற்காலிகமாகச் செயல் இழக்க வைத்து, அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதுதான் எங்கள் ஆய்வின் நோக்கம்” என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் காக்ஸ்.

வலி அறியாத அதிசய குடும்பம்!

http://tamil.thehindu.com/world/article22264756.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அரிய கலப்பினக் குழந்தை

 
24chskomasalapic

இங்கிலாந்தைச் சேர்ந்த 45 வயது சோபியா பிளேக் ஆப்பிரிக்கர். இவரது மகள் டியாரா, வெள்ளைத் தோலும் நீலக் கண்களுமாக அவளது அப்பாவைப் போல் பிறந்திருக்கிறார்! அம்மாவும் மகளும் வெளியே செல்லும்போது, இது யாருடைய குழந்தை என்று கேட்காதவர்களே கிடையாது. “டியாராவை என் மகள் என்று ஒருவரும் நம்ப மாட்டார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. குழந்தை பிறந்துவிட்டதாக மருத்துவர்கள் இவளைக் காட்டியபோது நானே நம்பவில்லை. இது என் குழந்தையா, இல்லை மாற்றிக் கொண்டு வந்துவிட்டீர்களா என்றுதான் கேட்டேன்.

இது என் குழந்தைதான். கலப்பினப் பெற்றோருக்குப் பிறக்கும் 10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படிப் பிறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். நான் கறுப்பாகவும் என் கணவர் கிறிஸ்டோபர் வெள்ளையாகவும் இருப்பதால் மாநிறமான குழந்தை பிறக்கலாம் அல்லது, என்னைப் போன்றே குழந்தை பிறக்கலாம் என்றுதான் எதிர்பார்த்தேன்.

ஆனால் டியாரா எனக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் பிறந்துவிட்டாள். நாங்கள் இருவரும் வெளியே செல்லும்போது இது யாருடைய குழந்தை என்று கேட்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தொடர்ந்து கேட்கப்படும் இந்தக் கேள்வி டியாராவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வேறு யாரையும் இப்படிக் கேட்பதில்லையே, என்னை மட்டும் ஏன் எல்லோரும் விசாரிக்கிறார்கள் என்பாள்.

மருத்துவரிடம் இவளை அழைத்துச் சென்றால், இவளது பெற்றோர் வரவில்லையா என்று கேட்பார்கள். பள்ளிக்கு அழைத்துச் சென்றால், இவளது பெற்றோரை வரச் சொல்லுங்கள் என்பார்கள். கலப்பினப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் முற்றிலும் வெள்ளையாகவோ, கறுப்பாகவோ பிறக்கும் சாத்தியம் இருப்பது குறித்து நான் பல இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்” என்கிறார் சோபியா பிளேக்.

பொதுபுத்தியை மாற்றுவதற்காகப் பிறந்த குழந்தை!

சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயது லீ ஷியுவான், மரண தண்டனை பெற்ற கைதி. தண்டனை நிறைவேற்றப்படும் நாளன்று, அவரது குடும்பம் கடைசியாக அவரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. வயதான தன் தாயாரைக் கண்டதும் மூன்று முறை காலில் விழுந்து வணங்கினார் லீ. பிறகு மனைவியிடம் விடைபெற்றார். மகளைக் கட்டிப் பிடித்தவரின் கண்களில் நீர் பெருகியது. விஷயம் அறியாத அந்தக் குழந்தை, அப்பாவின் கண்களைத் துடைத்துவிட்டு, குட்பை சொல்லிய வீடியோ எல்லோரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது.

டிரைவராகப் பணியாற்றி வந்தார் லீ. 2015-ம் ஆண்டு மே மாதம் ஒரு கடையில் மூன்று பேருடன் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டார். அந்த மூவரும் காரில் கிளம்பிச் சென்றுவிட்டனர். கோபமடைந்த லீ, அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் நோக்கில் துரத்திச் சென்றார். மூவர் சென்ற கார் வேகம் எடுத்தது. ஆனாலும் லீ விடவில்லை. திடீரென்று அந்த கார் விபத்துக்குள்ளானது. காருக்குள் இருந்த மூவரும் பெட்ரோல் டேங்க் வெடித்து பலியானார்கள். அருகில் இருந்த இருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே கைது செய்யப்பட்டார் லீ. விசாரணையின் முடிவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாவம், திரும்பி வர முடியாதவருக்கு குட்பை சொன்ன குழந்தை!

http://tamil.thehindu.com/world/article22267769.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: புதுமையான அக்ரோபடிக்ஸ்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
26chskomasalapic
 
 

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஸ்டெஃபானி மில்லிங்கர், அக்ரோபடிக்ஸ் கலைஞராக இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய உதவியாளர் பழுப்புக் கரடியுடன் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, விதவிதமாகப் படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார். உடலை ரப்பர்போல் வளைப்பதில் மிகச் சிறந்தவராக அறியப்படுகிற இந்த ஸ்டெஃபானி, ஜெர்மனியில் நடைபெற்ற ‘டாஸ் சூப்பர்டேலண்ட்’ ஷோவின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர். “என்னைப்போல் உலகம் முழுவதும் அக்ரோபடிக்ஸ் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து நான் எந்த விதத்திலாவது வித்தியாசப்பட வேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான் என்னுடைய நண்பன் ஸ்டீபன் கரடியை வைத்து, உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற யோசனை தோன்றியது. அவனும் எனக்கு நன்றாக ஒத்துழைத்து, என் உதவியாளனாகவே மாறிவிட்டான்! பனிப்பகுதியில் படங்களை எடுக்க முடிவு செய்தேன். கை, கால்களில் உறைகள் அணிந்துகொண்டேன். ஸ்டீபனுக்குக் குளிரைத் தாங்குவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஒவ்வொரு படமும் எடுத்தவுடன் சில பெர்ரிகளைக் கொடுத்தால் போதும். அவ்வளவு ஆர்வமாக வேலை செய்தான். நான் நினைத்ததைவிட படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. இந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவுடன் என்னைப் புதிதாகப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துவிட்டது!” என்கிறார் ஸ்டெஃபானி.

புதுமையான அக்ரோபடிக்ஸ்!

கரடியும் நாயும் கலந்த உயிரினம் இருந்தால் எப்படி இருக்கும்! அப்படி ஒரு விலங்கை ரஷ்யாவில் விலங்குகள் மீட்புக் குழுவினர் மீட்டிருக்கிறார்கள். இந்தக் கரடி நாய், பார்ப்பதற்கு கறுப்புக் கரடி போலவே தெரிகிறது. ஆனால் முழுமையான கரடியாகவும் இல்லை, முழுமையான நாயாகவும் இல்லை. “இது ஏதோ மர்மமான உயிரினம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் கரடியும் நாயும் சேர்ந்த கலப்பினம். கரடியின் தோற்றமும் நாயின் குணநலன்களும் பெற்றுள்ளது. யாரோ நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடியவர்களின் வேலையாகத்தான் இது இருக்கும். குட்டியாக இருந்தபோது ஏமாற்றி விற்றிருப்பார்கள். வளர்ந்த பிறகு இந்த அதிசய உயிரினத்தைப் பார்த்து பயந்துபோன உரிமையாளர்கள் துரத்திவிட்டிருக்கிறார்கள். மனிதர்களின் மோசமான நடவடிக்கைகளால் இந்தக் கரடிநாய் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறது. இப்போதுதான் மருத்துவமும் நல்ல உணவும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். மனிதர்களைக் கண்டாலே இது பயப்படுகிறது. தப்பித்துச் செல்லவே நினைக்கிறது. நாங்கள் அன்பாக நடத்தி, மனிதர்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்த இருக்கிறோம். இங்கு வந்த பிறகும் கரடிநாயின் கண்களில் பயம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. இணையதளத்தில் இதைப் பற்றிய செய்திகளை வெளியிட்டோம். ஏராளமானவர்கள் உதவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார் விலங்குகள் மீட்பு மையத்தைச் சேர்ந்த தன்னார்வலர் போலினா.

கரடி பாதி, நாய் பாதி… இரண்டும் சேர்ந்த அதிசய உயிரினம்!

http://tamil.thehindu.com/world/article22279651.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வரியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு திருமணம்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
27chskomasalapic
 
 

அமெரிக்காவைச் சேர்ந்த டேனி க்ராகெட் 2005-ம் ஆண்டு, அவரது வீட்டிலிருந்து காவலர்களால் மீட்கப்பட்டார். இருட்டறையில் துர்நாற்றத்தில் தலை கவிழ்ந்தபடி இருந்த டேனி, தன்னுடைய வாழ்க்கை யில் முதல்முறையாகச் சூரிய வெளிச்சத்தைக் கண்டார். அவரது அம்மா 7 ஆண்டுகளாக ஓர் அறையில் அடைத்து வைத்து, நீர் ஆகாரத்தை மட்டுமே வழங்கி வந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பெர்னி, டயானே தம்பதியர் டேனியலைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். “குழந்தை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாள். தனிமையிலும் இருளிலும் இருந்ததால் மன அழுத்தம் இருந்தது. பேச்சு வரவில்லை. திட ஆகாரங்களை அவள் உண்டதில்லை. சுத்தமாக இருக்கத் தெரியவில்லை. மற்றவர்களுடன் பழகத் தெரியவில்லை. நாங்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று மனதுக்கும் உடலுக்கும் சிகிச்சையளித்தோம். பேசுவதற்கான தெரபி கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாகத் திட உணவுகளை அளித்தோம். பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுத்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் சூழ்நிலையால் ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. ஒருகட்டத்தில் என் மனைவியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விவாகரத்து செய்துவிட்டார். என்னால் டேனியை தனியாகக் கவனிக்க முடியவில்லை. ஒரு காப்பகத்தில் சேர்த்துவிட்டு, அடிக்கடி சென்று பார்க்கிறேன். இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறாள், பொம்மைகளுடன் விளையாடுகிறாள். 19-வது பிறந்தநாள் அன்று அவளை வெளியே அழைத்துச் சென்று, கேக், ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். என்னால் அன்பை மட்டும்தான் தாராளமாகத் தர முடிகிறது. ஒரு நல்ல குழந்தையை ஒரு மோசமான தாய் எப்படி மாற்றியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது” என்கிறார் பெர்னி.

பாவம் டேனி…

அயர்லாந்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் அல்ல. சொத்துவரியில் இருந்து விலக்கு வாங்குவதற்காகத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள்! டப்ளினைச் சேர்ந்தவர் மைக்கேல் ஓ சல்லிவன், அவரது நெருங்கிய நண்பர் மாட். இருவருக்கும் 30 ஆண்டுகால பழக்கம். இருவருமே 80 வயதில் இருக்கிறார்கள். ஓ சல்லிவன்தான் தற்போது மாட்டைக் கவனித்துக் கொள்கிறார். அதனால் அவருடைய வீட்டுக்கும் வீட்டில் உள்ள பொருட்களுக்கும் அவரே வாரிசாக இருக்க முடியும். ஆனால் அயர்லாந்தின் சட்டப்படி பரிசாகச் சொத்துகளை அளிக்கும்போது 33% வரி அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டியிருக்கும். அதுவே மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ சொத்துகளைக் கொடுக்கும்போது வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதனால் ஆண்களாக இருந்தாலும் திருமணம் செய்துகொண்டால், சொத்துகளை வரியின்றி இணைக்குக் கொடுக்க முடியும் என்பதால் இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். “எங்கள் இருவரின் மனைவிகளும் உயிருடன் இல்லை. குழந்தைகள் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதால் ஒருவரை இன்னொருவர் கவனித்துக்கொள்கிறோம். என் மரணத்துக்குப் பிறகு என் நண்பனுக்கு இந்த வீட்டையும் பொருட்களையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன். இப்போது அயர்லாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. வரியிலிருந்து தப்புவதற்காகத்தான் இந்தத் திருமணம் ” என்கிறார் மாட்.

வரியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு திருமணம்!

http://tamil.thehindu.com/world/article22284684.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: நம்பிக்கையளிக்கும் மாற்று மருத்துவம்!

 

28chkanhomeless
28CH-SAN-LSQ-LOKPALIMG0
 
 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் வசிக்கிறார் 9 வயது மோலி மெக்கின்லி. இந்த ஆண்டு கடுங்குளிர் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையிலும் மோலி பள்ளி செல்லும் வழியில் சாலைகளில் சிலர் அமர்ந்து, யாசகம் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். “இத்தனை ஆண்டுகள் வீடற்றவர்களைப் பார்த்தபோது எனக்கு எதுவும் தோன்றியதில்லை. ஆனால் இந்த ஆண்டு குளிரில் அவர்கள் தவித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இந்த கிறிஸ்துமஸுக்கு அவர்களுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொடுக்கலாமா என்று என் அம்மாவிடம் கேட்டேன். அவரும் சம்மதித்தார். என்னுடைய பிறந்த நாளுக்கு செலவாகும் பணத்தையும் இதில் சேர்த்துவிட்டேன். சூடான சூப், சுவையான உணவு, ஷு, கோட், தொப்பி ஆகியவற்றை வாங்கிச் சென்று சிலரிடம் கொடுத்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிறந்தநாள் கொண்டாடியிருந்தால் கூட நான் இவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டேன். அவர்களில் மார்கரெட் நன்றாகப் பாடினார். ஒரு பாடகராக நினைத்தாராம். விவாகரத்து பெற்ற பிறகு சாலைகளில் வசித்து வருகிறார். என்னால் ஒரு சிலருக்குத்தான் அதுவும் சில வேளை உணவுதான் வழங்க முடியும். அரசுதான் இவர்களுக்கு உதவ வேண்டும்” என்கிறார் மோலி மெக்கின்லி.

 

 

சிறிய வயதில் பெரிய சிந்தனை!

 

இங்கிலாந்தில் வசிக்கும் 7 வயது கேலி லாவ், குணப்படுத்த இயலாத அரிய மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதை குணப்படுத்த இயலாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். “எங்கள் மகள் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் உறுதியாக சொல்லிவிட்டாலும் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வசதி இல்லாவிட்டாலும் நன்கொடை திரட்டியாவது உயிரைக் காப்பாற்ற முடிவெடுத்தோம். ஏனென்றால் தன் உயிரை எப்படியும் அப்பாவும் அம்மாவும் காப்பாற்றிவிடுவார்கள் என்று கேலி நம்பினாள். மெக்சிகோவில் மாற்று மருத்துவம் செய்ய முடிவு செய்தோம். எங்கள் பிரச்சினையைச் சொல்லி நன்கொடை சேகரித்தோம். விமானத்தில் அவ்வளவு நேரம் பயணிக்க கேலியின் உடல்நிலை ஒத்துழைக்காது என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பினோம். மூளை முழுவதும் கட்டி பரவிவிட்டாலும் மருத்துவம் செய்து பார்க்கலாம் என்று நம்பிக்கை கொடுத்தார்கள். மாற்று மருத்துவத்தில் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தோம். ஒரே வாரத்தில் மகள் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டாள். மருத்துவர்களே அதிசயம் என்றார்கள். 3 மாத சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்து திரும்பினோம். 2018-ம் ஆண்டு வரை தொடர் சிகிச்சையளிக்க வேண்டும். அதற்கு 3 கோடி ரூபாய் வரை செலவாகும். எங்களால் இதுவரை 1.8 கோடிதான் நன்கொடை பெற முடிந்திருக்கிறது. 11-வது முறையாக சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறோம். இங்கிலாந்து வரலாற்றிலேயே மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக காலம் வாழ்ந்துகொண்டிருப்பவள் கேலிதான் என்கிறார்கள் மருத்துவர்கள். என் மகள் முழுவதும் குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கை எங்களைப் போல் பலருக்கும் இப்போது வந்துவிட்டது” என்கிறார் கேலியின் அப்பா ஸ்காட்.

நம்பிக்கையளிக்கும் மாற்று மருத்துவம்!

http://tamil.thehindu.com/world/article22291644.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வந்துவிட்டது மைக்ரோ மொபைல்போன்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
29chskomasalapic
 
 
29chskomasalapic

இன்று பலரும் பெரிய திரையுடைய ஸ்மார்ட்போன்களை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் ஜான்கோ நிறுவனம் மைக்ரோ மொபைல்போன்களை உருவாக்கியிருக்கிறது! இந்த போன் கட்டை விரல் அளவிலும் ஓர் உலோக நாணயத்தின் எடையிலும் இருக்கிறது. Zanco tiny t1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போன், உலகின் மிகச் சிறிய மொபைல்போன் என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 300 எண்களைச் சேமிக்கலாம். போன்புக் போல பயன்படுத்தலாம். பரிசளிப்பதற்கும் ஏற்ற பொருள் என்கிறார்கள். இந்த போனில் பேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், பெறலாம். “நாங்கள் நீண்டகாலமாக மைக்ரோ மொபைல்போன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பலரும் இதை உருவாக்க இயலாது என்றார்கள். t1 போனில் பாதியளவே உருவாக்க எண்ணினோம். ஆனால் நடைமுறையில் இதுதான் சாத்தியமானது. இதிலும் கீபோர்டு, டிஸ்ப்ளே, பேட்டரி போன்றவை இருக்கின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும். 180 நிமிடம் பேச முடியும். இதை உருவாக்கியதில் பெருமைகொள்கிறோம். முதல்முறை இந்த போனைப் பார்த்தால் நம்ப முடியாது. இரண்டாவது முறை எடுத்துப் பார்ப்பீர்கள். மூன்றாவது முறை வாங்கிவிடுவீர்கள். எந்த மொபைல் நெட் ஒர்க்கிலும் இது வேலை செய்யும். நானோ சிம் பயன்படுத்த வேண்டும். இது 2ஜியில் மட்டுமே வேலை செய்யும். அதனால் உங்கள் நாட்டில் 2ஜி இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். ஆஸ்திரேலியா, ஜப்பானில் 2ஜி சேவை கிடையாது” என்கிறார் ஜான்கோ நிறுவனர்களில் ஒருவரான ஷாஜாட் டாலிப்.

வந்துவிட்டது மைக்ரோ மொபைல்போன்!

அமெரிக்காவைச் சேர்ந்த 74 வயது ஆலன் ராபின்சனும் 72 வயது வால்டர் மெக்ஃபார்லேனும் நீண்டகால நெருங்கிய நண்பர்கள். தற்போது இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று தெரியவந்திருக்கிறது! “நானும் மெக்ஃபார்லேனும் 60 ஆண்டுகால நண்பர்கள். ஒரே பள்ளியில் படித்தோம். பிறகு இதே பகுதியில் வேலை செய்து, திருமணமும் செய்துகொண்டோம். எங்கள் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படித்தார்கள். எங்கள் பேரக் குழந்தைகளும் அதே பள்ளியில் படித்தார்கள். அதனால் எங்கள் நட்பு நீண்ட காலமாக நிலைத்து நின்றுவிட்டது. நாங்கள் இருவரும் எங்களது பெற்றோர் பற்றிய தகவல்களைத் தேட முடிவு செய்தோம். நான் பிறந்தவுடன் என் அம்மா என்னைத் தத்து கொடுக்க முடிவு செய்தார். ஆனால் என் அம்மாவின் பெற்றோர் என்னைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். பிறகு அம்மா இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தையைப் பெற்றார். அந்தக் குழந்தையையும் தத்து கொடுத்துவிட்டார். அம்மாவுடன் எங்களுக்கு தொடர்பு இல்லாமல் போனது. மெக்ஃபார்லேனும் வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்பட்டவன். அதனால் அவனும் அவனது பெற்றோர் குறித்து தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருந்தான். நாங்கள் இருவரும் டிஎன்ஏ பரிசோதனை செய்துகொண்டோம். அதில் நாங்கள் இருவரும் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள் என்பது தெரியவந்தது. எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்! நட்பு இப்போது உறவாகவும் மாறிவிட்டது” என்கிறார் ஆலன் ராபின்சன்.

நண்பர்கள் சகோதரர்களான கதை!

http://tamil.thehindu.com/world/article22324168.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: இந்தக் காலத்திலும் இப்படியெல்லாமா நடக்கும்!

 

 
30chskomasalapic

தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அந்த மனிதரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டது. வாசலில் நிற்கும் அந்த மனிதரை, 7 மாதங்களுக்கு முன்பு இறந்து போனதாகக் கருதி, புதைத்தும் விட்டிருந்தார்கள். 44 வயது சாகோர்ன் சச்சீவா, இரண்டு ஆண்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீன்பிடிப்புத் தொழிலைச் செய்துவிட்டு வீடு திரும்பியிருந்தார். இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தினருடன் எந்தவிதத் தொடர்பும் அவர் வைத்துக்கொள்ளவில்லை. அதனால் மகிழ்ச்சியாகத் தன் குடும்பம் வரவேற்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் பேயாகப் பார்ப்பார்கள் என்றும் நினைக்கவில்லை. பயத்தில் நின்றவர்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு பேச்சுக் கொடுத்தனர். கொஞ்சம் தைரியம் வந்தவுடன் தொட்டுப் பார்த்தனர். குடும்பத்தினரின் இந்த நடவடிக்கைகள் சகோர்னுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “நீண்ட நேரம் கழித்து, நான் இறந்துபோன கதையைச் சொன்னார்கள். 7 மாதங்களுக்கு முன்பு நாங் லோயங் காவலர்கள் எங்கள் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, நான் உடல் நலம் குன்றி இறந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஓர் உடலைக் காட்டி அடையாளம் தெரிகிறதா என்று கேட்டிருக்கிறார்கள். அந்த உடல் கிட்டத்தட்ட என்னைப் போலவே இருந்ததால் நான்தான் என்று நினைத்து, இவர்களும் வாங்கிக்கொண்டனர். ஊருக்கு வந்து இறுதிக் காரியத்தையும் செய்துவிட்டனர். நான் நாட்டின் பல இடங்களுக்கும் வேலைக்காக அனுப்பப்பட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வேலையை விட்டுவிட்டு, குடும்பத்தைப் பார்க்கக் கிளம்பினேன். இப்போது என் இறப்புச் சான்றிதழை மாற்றக் கோரி, அரசாங்க அலுவலகங்களுக்கு நடந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் சாகோர்ன்.

இந்தக் காலத்திலும் இப்படியெல்லாமா நடக்கும்!

சீனாவைச் சேர்ந்த ஸெங், 2005-ம் ஆண்டு அவரது உறவினர் ஒருவரை வாடகைத் தகராறில் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்றபோது, தப்பித்து வேறு ஒரு நகரத்துக்குச் சென்றுவிட்டார். அங்கே தன்னுடைய பெயரை வாங் கை என்று மாற்றிக்கொண்டு, வாய் பேச முடியாதவராகப் பிச்சை எடுத்தார். காவலர்கள் அவரைக் கண்டுபிடித்து விசாரித்தனர். தன்னால் பிறந்ததிலிருந்து வாய் பேச இயலாது என்றும் தான் இந்த ஊரைத் தவிர வேறு ஊருக்குச் சென்றது இல்லை என்றும் எழுதிக் காட்டினார். சில காலம் இவரைக் கண்காணித்த காவலர்கள், இவர் வேறு ஒருவர் என்ற முடிவுக்கு வந்தனர். அங்கிருந்து 700 கி.மீ. தூரத்தில் இருந்த ஒரு கிராமத்துக்குச் சென்றார். வாய் பேச இயலாதவராகவே ஒரு கட்டிட நிறுவனத்தில் வேலை செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணை மணந்து, குழந்தையும் பெற்றுக்கொண்டார். நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தபோது, மீண்டும் அவரைத் தேடி காவலர்கள் வந்துவிட்டனர். ரத்த மாதிரியை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை செய்த ஸெங்தான் இந்த வாங் என்பதைக் கண்டுபிடித்தனர். 12 ஆண்டுகளாக ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்தவருக்கு, பேசும் திறனே இல்லாமல் போய்விட்டது. “பேசாமல் இருந்தால் தப்பிவிடலாம் என்று நினைத்தேன். கடைசியில் பேசும் சக்தியை இழந்துவிட்டேன்” என்று எழுதிக் காட்டி, தன் குற்றத்தையும் ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸெங்.

பயன்படுத்தாத எதுவும் அழிந்துபோகும்!

http://tamil.thehindu.com/world/article22330943.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.