Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிறி ரவிசங்கர்

Featured Replies

இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிறி ரவிசங்கர்

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களாக தொடரும் இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவின் ஆன்மீக தலைவர்களின் ஒருவரான சிறி ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று தமிழகத்தில் நடைபெற்ற ஆத்மானந்த உற்சவம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீரவிசங்கர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சியில் இந்தியா ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதிலும் இந்திய அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சியில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2000 இந்திய படையினர் உயிரிழக்க காரணமான கார்கில் யுத்தத்திற்கு பின்னர் பாகிஸ்தானிய ஜனாதிபதி பர்வேஸ் முஸ்ரப்புடன் இந்தியா பேச்சுவார்தை நடத்தியதையுமு; அவரை இந்தியாவிற்கு வரவேற்றதையும் நினைவு கூhந்த ரவிசங்கள் இலங்கை விடயத்தில் மட்டும் இந்தியா தலையிடாக் கொள்கையினை கொண்டிருப்து ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

யார் இந்த ரவிசங்கர்?

இவர் பிரபல்யமானவரா?

இவரின் அரசியல் பின்னனி என்ன?

இவரின் முன்னைய செயற்பாடுகள் பற்றி தெரிந்தவர்கள் விளக்குவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சில மாதங்களுக்கு முன்பு தமிழீழம் சென்று தமிழ்ச்செல்வன் உட்பட சில விடுதலைப்புலிகளின் தலைவர்களினைச் சந்தித்தார்

புலிகளுக்கே கெலி வழங்க அரசு மறுத்துவந்த நேரத்தில் இவருக்கு வழங்கப்பட்டது. பாரிய அரசியல் அழுத்தமின்றி இது சாத்தியமா? பின்னர் ஜாதிக கெல உறுமய கண்டணமும் தெரிவித்தது. ஆனால் அது உடனடியாகவே அமத்தப்பட்டுவிட்டது.

ரவிசங்கர் இந்திய அரசின் நிழல் தூதுவ(றோ)ரோ?

ஆம் எனில் அந்த நிழல் நடவடிக்கைதான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்தியத் தலையீடுதான்

சமாதானத்தைக் கொண்டுவர முடியும்!

"வாழும் கலை' நிறுவுநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவிப்பு

""புரையோடிப் போயிருக்கும் இலங் கையின் இனப்பிரச்சினையில் இந்தியா வின் தலையீடு அவசியம். அப்பொழுது தான் அந்த நாட்டில் தீர்வையும், சமாதா னத்தையும் கொண்டுவர முடியும்'' என்று "வாழும் கலை' நிறுவனத்தின் ஸ்தாபக ரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

"ஆத்மானந்த உற்சவம் 2006' என்ற வைபவம் கடந்த ஞாயிறு இரவு பொள் ளாச்சியில் நடந்தது. இங்கு சமுகமளித் திருந்த அடியார்கள் மத்தியில் ஆன்மீகத் தந்தையான ரவிசங்கர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:

""இலங்கை மக்கள் பல்வேறு இன் னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். போதிய உணவு வசதி, மருத் துவ வசதி, போக்குவரத்து வசதி எதுவும் இல்லாமல் அவர் கள் அவலப்பட்டுக் கொண் டிருக்கிறார்கள். இந் தத் துயரங்களுக்கு எல்லாம் முடிவு கட்டு வதற்கு இந்தியா உடனடியாகத் தலையிட்டு, அங்கு சமாதானத்தை நிலைநாட்ட முன்வர வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வைக் கண்டறிவதற்கு இந்திய அரசு மறுத்து, ஒதுங்கி இருப்பது ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை.

இந்தியாவின் தலையீட்டை எதிர்பார்த் துக் கொண்டு இலங்கை அரசும் இருக்கிறது. விடுதலைப் புலிகளும் இருக்கிறார்கள். எனவே, இந்தியா தலையிட்டு தீர்வுக் கான தனது பங்களிப்பைப் பெரிதாகச் செய்யவேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ

இந்தியா ஏன் இன்னும் முன்வரவில்லை?

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கார்கில் யுத்தத்தில் 2,000 இந்தியப் படையினரின் மரணத்துக்கு அன்று பொறுப்பாக இருந்த பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்புக்கு இன்று செங்கம்பளம் விரித்து இந்திய அரசு வர வேற்புக் கொடுக்கிறது. இந்த நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா ஏன் தயங்க வேண்டும்?

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பெருந் தொகை நிதி உதவிகளைச் செய்துள்ளது. இந்தியன் ஒருவன் அங்கு சிரச்சேதம் செய் யப்பட்டிருந்தாலும் இந்தியா உதவுகிறது. பூகம்பத்தால் சேதமடைந்த பகுதிகளைக் கட்டியெழுப்பப் பாகிஸ்தானுக்கு 180 கோடி ரூபாவை இந்தியா வழங்கியிருக்கி றது. இது போன்ற உதவிகளை இலங்கை யில் அவதிப்படும் தமிழ் மக்களுக்கு இந்தியா ஏன் இன்னமும் வழங்க முன்வர வில்லை?

இலங்கையில் அல்லல்படும் ஆயிரக் கணக்கான மக்களுக்கு இந்திய அரசு உடன டியாகத் தலையிட்டு உதவ வேண்டும்.''

இவ்வாறு சுவாமி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.

-உதயன்

top_index_banner.jpg

சிறி சிறி ரவிசங்கர் பற்றி சில தரவுகள்....

இவர் பற்றி இவரின்இணையத்தளங்கள்:

http://www.artofliving.org/

http://www.srisriravishankar.info/

இவர்பற்றி முரணான கருத்துள்ள இணையத்தளம்:

http://www.deeshaa.org/is-sri-sri-ravi-shankar-a-con-man/

விகிபீடியாவில் இவரைப்பற்றி சில கருத்துக்கள்.

Current Activities

Every year Ravi Shankar travels around the globe to reinforce the message that all religions and spiritual traditions share common goals and values. He claims that his vision is to create a world that is free of stress and violence by globalising wisdom, and his programs offer practical tools to accomplish this. For instance, in 2005 guru Ravi Shankar is said[Please name specific person or group] to have traveled to nearly 180 cities worldwide, an average about one city every two days[citation needed], on the Love Moves the World Tour. He is said[Please name specific person or group] to sleep only 3-4 hours a day and is always ready to meet with people[citation needed]. In 2006, Ravi Shankar took part in a debate with an Islamic scholar Zakir Naik in Bangalore.

Sudarshan Kriya

Developed by Sri Sri Ravi Shankar, the Sudarshan Kriya is the core component of the Art of Living Course. It is a cycle of breaths - long, medium and short. However, since persons taught the technique are required to sign non-disclosure agreements, not much is publicly known about the specific details. Ravi Shankar has claimed that the method has been patented, although no records to this effect are found in US Patent and Trademark Office, or the Indian patent databases.

The Sudarshan Kriya is claimed to infuse the body with energy and harmonize the natural rhythms of the body, mind and emotions. Similar breathing exercises were also taught by controversial Acharya Rajneesh Osho with a difference that they were performed in standing position, whereas Sudarshan Kriya is done in sitting position.

Ravi Shankar's Art of Living Foundation offers many programs centered on Sudarshan Kriya, meditation and group-dynamics for a fee. The charges start from $375.00 ($200.00 for students and senior citizens) for the basic course taught by volunteers. Even though designated as a donation, such a fee is mandatory. Critics claim that AOL is the first religious organization that charges fees to teach ancient science of Pranayama under a different but registered name of Sudarshan Kriya.

கிளிநொச்சியில் இவர்:

swamydx4.jpg

புலிகளுக்கு Art Of Living. :rolleyes:

Tamil tigers to learn the art of living, DNA, September 21, 2006

http://www.srisriravishankar.org/news/2006..._dna_210906.pdf

Sri Sri in LTTE areas, Gulf Times, September 21, 2006

http://www.srisriravishankar.org/news/2006...times092106.pdf

Edited by saanakiyan

:( 1988 - 89 களில் போல யூனியர் விகடனில் காஞ்சி காமகோடி நம்ம பிரச்சனைக்குரிய

ஐயா....அரசியல் கதைக்கேக்க ஏதோ என் மண்டையில் தட்டுப்பட்டது.....அன்மீகத்துக்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீட்டை அரசாங்கமும் புலிகளும் விரும்புகின்றனர்

-மௌனத்தை கலைக்குமாறு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீண்டும் கோரிக்கை

"இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் மௌனம் கலைய வேண்டும்"என்று வாழும் கலை இயக்க நிறுவனர் ரவிசங்கர்ஜி வலியுறுத்தினார்.

`வாழும் கலை' இயக்கம் சார்பில் `மஹா சத்சங்' விழா தமிழ் நாட்டில் ஈரோடு, வ.உ.சி.மைதானத்தில் திங்கட்கிழமை நடந்தது. வாழும் கலை இயக்க நிறுவனர் ரவிசங்கர்ஜி அருளாசி வழங்கினார்.மேடையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கேள்வி: இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

பதில்: ஒரு மரம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் வேர் நன்றாக இருக்க வேண்டும். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் கலந்து இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இன்றைய இளைஞர்கள் சுய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கேள்வி: சனாதன தர்மம் என்றால் என்ன?

பதில்: எந்த ஒரு கொள்கைக்கு ஆதி இல்லையோ, அந்தம் இல்லையோ அது தான் சனாதனம். எந்த பொருளுக்கு ஆரம்பமும், முடிவும் இல்லையோ அதுதான் சனாதனம். உலகம்,கடவுள், உயிர் ஆகிய மூன்றுக்கும் எப்போதும் அழிவு இல்லை.அதுதான் சனாதனம். அணுவுக்கு ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை இதுதான் சனாதன சாராம்சம்.

கேள்வி: நம் நாடு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தும் உலகளவில் ஏன் பின்தங்கி இருக்கிறது?

பதில்:கடந்த காலங்களில் மருத்துவமனைகளையே மக்கள் அதிகம் நம்பி இருந்தனர். தற்போது ஆன்மிகத்தில் மக்கள் அதிகம் ஈடுபடுவதால் நம் நாடு முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. ஆன்மிகம் மட்டும் இல்லையெனில், நம் நாடு எப்படி போயிருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியவில்லை.

கேள்வி: இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் நிலை பற்றி உங்கள் கருத்து?

பதில்:இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடாமல் விட்டு விட்டது. உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்று. உலகத்தில் மக்கள் எங்கு துன்பப்பட்டாலும் நாம் அதில் பங்கிட வேண்டும். ஈராக் நாட்டில் நடக்கும் போரில் ஏழு இலட்சம் பெண்கள் கணவனை இழந்துள்ளனர்.

நம் நாடு இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு இருந்தால் எவ்வளவோ பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு இருக்கும்.இலங்கைப் பிரச்சினையில் இந்திய நாடு தலையிட வேண்டும் என்று இலங்கை அரசும் விரும்புகிறது. விடுதலைப் புலிகளும் விரும்புகின்றனர். ஆனால், இந்த பிரச்சினையில் இந்திய நாடு தலையிடாமல் மௌனமாக உள்ளது.

கேள்வி:நிறைவான வாழ்க்கை என்பது எது?

பதில்:நம்மால் வேறு ஒருவருக்கு எப்போது சந்தோஷம் கிடைக்கிறதோ அதுதான் நிறைவான வாழ்க்கை.

கேள்வி:கடவுள் எப்போது நம் முன் தோன்றுவார்?

பதில்:கடவுள் உன்னுள்ளே கலந்திருக்கிறார். கடவுள் நம் முன் தோன்ற மாட்டார். திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாதீஸ்வரர் சுவாமி உலகத்துக்கு ஒரு அற்புதமான தத்துவம்.

கேள்வி: ஞானம் என்பது என்ன?

பதில்: பதில் வேண்டும் என்ற எண்ணமே ஞானம்.

கேள்வி:பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறைய என்ன செய்ய வேண்டும்?

பதில்:பெண்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.

கேள்வி:இலஞ்சம் ஒழிய மக்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்:மக்கள் அனைவரும் ஒன்று கூடி இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு ரவிசங்கர்ஜி பதிலளித்தார்.

- தினக்குரல்

இன்று தினக்குரல் வாசிச்சீர்களா

அதில் ஒரு வசனம் இப்படி இருந்தது

"விடுதலை புலிகளுக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை"( ravi sangar)

இதிரிருந்தே தெரிகிறது அவருக்கு எம்மக்களின் பிரச்சினை தெளிவாக தெரியாது அல்லது

வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கலாம்

Edited by karunai_nilal

இந்தியா இன்றும் யாரை புலிகளிடம் இருந்து பிரிக்கலாம் என்று கழுகு கண்னுடன் இருக்கு

இதுக்குள்ளே தீர்வா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.