Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர் சிக்கல்களில் துருக்கி

Featured Replies

தொடர் சிக்கல்களில் துருக்கி - 1

 
துருக்கியின் இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதி.
துருக்கியின் இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதி.

எட்டு நாடுகளால் சூழப்பட்டுள் ளது துருக்கி. சிரியா, இராக், ஈரான், அர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, பல்கேரியா மற்றும் கிரீஸ். கருங்கடல், மத்திய தரைக்கடல், ஏஜியன் கடல் ஆகியவையும் துருக்கியின் எல்லைகள்தான்.

இரண்டு கண்டங்களில் அமைந்த நாடு துருக்கி ஆசியா, ஐரோப்பா. துருக்கியில் அமைந்த ‘கிராண்ட் பஜார்’ குறித்த ஒரு தகவலைக் கேட்டால், தி.நகரிலிருந்து இஸ்தான்புலுக்கு ஹெலிகாப்டர் வசதிகள் இருக்கக் கூடாதா என்று தமிழகப் பெண்கள் ஏக்கம் கொள்ளக் கூடும். இஸ்தான்புல் கிராண்ட் பஜாரில் மொத்தம் 64 நீளமான தெருக்கள். 4000-க்கும் அதிகமான கடைகள்.

துலிப் மலர்களின் தாயகம் நெதர்லாந்து என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்குதான் அவை எக்கச்சக்கமாக விளைகின்றன என்றாலும் அவை முதலில் விளைச்சல் கண்டது துருக்கியில்தான்.

கிறிஸ்துமஸ் தாத்தாவை சாண்டா க்ளாஸ் என்பார்கள். செயின்ட் நிகோலஸ் என்பதுதான் சாண்டா க்ளாஸ் ஆக மாறிவிட்டது. புனித நிகோலஸ் பிறந்தது துருக்கி யிலுள்ள படாரா என்ற இடத்தில் தான்.

ஈசாப் கதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரேக்க காவியங்களை எழுதிய ஹோமர் குறித்தும் அறிந்திருப்பீர்கள். புனித பால் குறித்து அறிந்திருந்த கிறிஸ்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இவர்கள் பிறந்தது துருக்கியில்தான்.

துருக்கியின் தலைநகரம் என்ன? இந்தக் கேள்வியை சில வினாடி - வினா நிகழ்ச்சிகளில் கேட்டபோது ஒவ்வொரு முறையும் முதலில் கிடைத்த பதில் ‘இஸ்தான்புல்’ என்பதுதான். அது அல்ல அங்காராதான் துருக்கியின் தலைநகரம்.

இஸ்தான்புல் நகர் முன்பு பைசாண்டியம் என்று அழைக்கப் பட்டது. இது ஒரு கிரேக்க ஆட்சியாளரின் பெயர் (ஒரு காலத்தில் கிரீஸின் காலனியாக இருந்தது இந்தப் பகுதி). ஒன்று தெரியுமா? உலகம் முழுவதுமே இரண்டு கண்டங்களிலும் இடம் பெற்றுள்ள ஒரே நகரம் இஸ்தான்புல்தான்.

துருக்கியில் ஒட்டகங்கள் உண்டு. ஆனால் பாலைவனங்கள் கிடையாது. துருக்கியில் பெரும் பாலானவர்கள் முஸ்லிம்கள். ஆனா லும் அது ஒரு மதச்சார்பற்ற நாடு.

தென்கிழக்கு ஐரோப்பாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலுமாக அமைந்த தீபகற்பம் துருக்கி.

துருக்கி குடியரசு 1923-லிருந்தே மக்கள் தொகை அதிகமாக ஆதரவளித்தது. ஆனால் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு தேவை என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தது.

துருக்கி பற்றி கூறும்போது அன்டோலியா என்ற பெயரும் குறிப்பிடப்படுவது இயல்பு. துருக்கியின் மிகப் பெரும்பாலான பகுதி இது. துருக்கியின் ஆசியப் பகுதி என்றும் கூறலாம். அன்டோலியாவை ஏஷியா மைனர் என்றும் குறிப்பிடுவார்கள்.

துருக்கியின் வடபகுதி கடுமை யான பூகம்பங்களை சந்தித்திருக் கிறது. ஆனால் அது சந்திக்கும் அரசியல் பூகம்பங்கள் மேலும் விபரீதமானவை.

ஐ.நா.சபையில் துருக்கி ஓர் உறுப்பினர். நேட்டோ அமைப்பிலும் தான். எனினும் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது துருக்கி. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த் தால் தெளிவு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பிரச்னையாக நாம் பார்க்கும்போது சரித்திரம் இறந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் ஊசலாடுவது இயற்கை.

ஐம்பது லட்சம் துருக்கியர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பணிபுரிகிறார்கள். (பெரும் பாலானவர்கள் பணிபுரிவது ஜெர்மனியில்தான்). துருக்கியின் அதிகபட்ச வணிகமும் ஐரோப்பிய நாடுகளுடன்தான்.

ஆண்டுதோறும் பலப்பல ஐரோப்பியர்கள் தங்கள் விடுமுறை யைக் கழிக்க துருக்கிக்கு வருகிறார்கள். இதமான வெப்ப நிலை, அழகிய கடற்கரைகள், சரித்திரத்தைக் கண்முன் நிறுத்தும் ரோமானிய அழிவுகள் மற்றும் கோட்டைகள் என்று பல காரணங்கள்.

என்றாலும் துருக்கி ஐரோப்பிய யூனியனில் ஓர் உறுப்பினர் அல்ல. துருக்கி தயார்தான். ஆனால் ஐரோப்பிய யூனியன் தன் முடிவை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன காரணம்? துருக்கியின் மொத்தப் பகுதியில் வெறும் மூன்று சதவிகிதம்தான் ஐரோப்பாவில் உள்ளது என்பதாலா?

அப்படியே இருந்தாலும் இதைக் காரணமாகச் சொல்லி இதற்கு அனுமதி மறுக்க, ஐரோப்பிய யூனியனால் முடியாது. பொருளாதாரத்தில் மந்தகதியும், தீவிரவாதத்தில் உச்ச கதியிலும் இருக்கும் துருக்கியை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறது ஐரோப்பிய யூனியன். அது வெளிப் படையாகக் கூறும் காரணம் ‘சைப்ரஸ் தேசத்துடன் உங்களுக்கு இருக்கும் பஞ்சாயத்தை முதலில் முடித்துக் கொண்ட பிறகு இதுபற்றிப் பேசலாம் என்பதுதான்.

அதென்ன சைப்ரஸ் துருக்கி பஞ்சாயத்து? அதை அறிந்து கொள்வோமா?

 

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-1/article7664144.ece?homepage=true&relartwiz=true

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 1

 
ஐம்பது லட்சம் துருக்கியர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பணிபுரிகிறார்கள். (பெரும் பாலானவர்கள் பணிபுரிவது ஜெர்மனியில்தான்). துருக்கியின் அதிகபட்ச வணிகமும் ஐரோப்பிய நாடுகளுடன்தான்.

 

இரண்டாவது உலகயுத்தத்தில் பெரும் அழிவைக்கொண்ட நாடு யோர்மனி. யுத்தம்முடிந்து நாட்டை மீளக்கடியெழுப்பும் பணியில் கூலிவேலைக்கான ஆட்பலம் அதற்கு நிறையவே தேவைப்பட்டது. தனக்கு கூலி பேலையாட்களைத் தந்துதவுமாறு உலகம் முழுவதற்கும் அது வேண்டுகோள் விடுத்தது. பல நாடுகள் இந்தியா, இலங்கையுட்பட அதற்கு இசைந்தாலும், தங்களிடம் உள்ள அதிகாரத்தரத்துக்கு தகுதியானவர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு நிபந்தனையிட்டன. எவருக்கும் கீழ்படியத் தயாரில்லாத யேர்மனி அதனை நிராகரித்தது. அந்த நேரத்தில் துருக்கிநாடு ஒன்றுதான் கூலிவேலைக்கான ஆட்களை தங்கள் அரசுமூலமாகக் கொடுத்துதவியது. இதன் காரணமாகவே துருக்கியர்கள் அதிகம் நிறைந்துள்ள நாடாக யேர்மனி உள்ளது. 

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 2

 
சைப்ரஸின் லிமோசஸ் தீவில் ஆண்டுதோறும் ஒயின் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு விழாவில் பழங்கால கிரேக்கர்கள் போன்று உடையணிந்து ஊர்வலமாக சென்ற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.
சைப்ரஸின் லிமோசஸ் தீவில் ஆண்டுதோறும் ஒயின் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு விழாவில் பழங்கால கிரேக்கர்கள் போன்று உடையணிந்து ஊர்வலமாக சென்ற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.

சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு நடுவே இருக்கிறது சைப்ரஸ் தீவு.

துருக்கி, 1570-ல் ஒட்டாமன் (துருக்கிய) சாம்ராஜ்யம் அந்தத் தீவை கைப் பற்றியது. அந்தத் தீவில் கிரேக்க மொழி பேசும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர் துருக்கிய சாம்ராஜ்யம் அங்கு உருவான பிறகு ஆசியப் பகுதியைச் சேர்ந்த துருக்கியிலி ருந்து முஸ்லிம்கள் .சைப்ரஸுக்குக் குடியேறத் துவங்கினார்கள். இவர்கள் துருக்கி மொழி பேசுபவர்கள்.

பின்னர் பிரிட்டிஷ் அரசு இப்பகுதி யைக் கைப்பற்றியது. 1960-ல் சைப்ரஸ் சுதந்திரம் அடைந்தது. அப்போது அங்குள்ள மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு துருக்கியர்களாக இருந்தனர்.

சைப்ரஸுக்கு விடுதலை கொடுக்கும்போது சைப்ரஸ் அமை தியாக சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்கான உத்த ரவாதத்தை துருக்கியிடமும், கிரீஸிடமும் வாங்கிக் கொண்டது பிரிட்டன். இது ஏதோ மிகவும் நல்ல எண்ணம் போலத் தோன்றினாலும், உண்மையில் பிரிட்டனின் பிரித்தா ளும் சூழ்ச்சிக்குச் சமமானது இது.

1974-ல் சைப்ரஸ் தீவு முழுவதை யும் கைப்பற்ற முயற்சி செய்தது கிரீஸ். உடனே துருக்கி தன் பங்குக்கு சைப்ரஸை ஆக்கிரமிக்க முயற்சி எடுத்தது. இதன் காரணமாக கிரீஸ் பின்வாங்கியது. ஆனால் சைப்ரஸின் வடபகுதியில் துருக்கி ஆக்கிரமிப்பு செய்தது. இன்றும் அந்தப் பகுதி துருக்கிய ராணுவத்தினரின் வசம்தான் உள்ளது. அதை ‘வட சைப்ரஸ் துருக்கியக் குடியரசு’ என்று வேறு கூறிக் கொள்கிறது. அதுமட்டுமல்ல துருக்கியர்களை அதிக அளவில் சைப்ரஸ் தீவுக்கு குடியேற்றி வருகிறது துருக்கி.

சைப்ரஸ் அருகில் 2010-ல் பெட்ரோலியக் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால் கிடைக்கும் வருமானத்தில் துருக்கி பங்கு கேட்கிறது.

துருக்கி, கிரீஸ் இரண்டுமே சைப்ரஸின்மீது ஆக்கிரமிப்பு செய்த தைக் கண்ட ஐ.நா.சபை ஒரு காரியத்தைச் செய்தது. மேலும் கலவரங்கள் நிகழாமல் இருப்பதற் காக இந்த மூன்று நாடுகளுக் கிடையே ஒரு பகுதியை உருவாக் கியது. இதன்படி யாருக்குமல்லாத ஒரு பிரிவும் (buffer zone) உருவாகியுள்ளது. கடந்த ஓரிரு வருடங்களில் கிரீஸுக்கும், துருக்கிக்கும் உள்ள உறவு கொஞ்சம் சீர்பெற்று வருகிறது.

‘சைப்ரஸ் பிரச்சினையை முதலில் தீர்த்துவிட்டு வரலாமே. பிறகு நீங்கள் எங்கள் அமைப் பில் உறுப்பினராவதைப் பரிசீலிக்க லாம்’’ என்கிறது ஐரோப்பிய யூனியன்.

அது இருக்கட்டும், துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணை வதால் யாருக்காவது லாபம் உண்டா? துருக்கிக்கு லாபம் உண்டா? அல்லது ஐரோப்பிய யூனியனுக்கு லாபம் உண்டா? பார்ப்போம்.

ஐரோப்பாவையும், ஆசியா வையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது துருக்கி. அது ஐரோப்பிய யூனியனில் உறுப்பி னரானால் மத்திய ஆசிய நாடுகளுடன் ஐரோப்பாவுக்கு உள்ள உறவுகள் மேம்பட வாய்ப்பு உண்டு. துருக்கியின் ராணுவம் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு பலமாகிவிடும். தவிர இஸ்தான்புல் ஒரு மாபெரும் நகரம். அதன் பொருளாதார, கலாச்சார மேம் பாடுகள் ஐரோப்பிய யூனியனுக்கும் பெருமை சேர்க்கும்.

துருக்கி ஒரு ஜனநாயக நாடு. பல கட்சிகளை அனுமதிக்கும் அரசியல் சூழல் கொண்டது. அதனை ஐரோப்பிய யூனியனை உறுப்பினர் ஆக்குவதன் மூலம் மேலும் பல புரட்சிகளை அங்கு கொண்டுவர முடியும். தவிர துருக்கி வடஅட்லாண்டிக் உடன் படிக்கை அமைப்பில் (NATO) ஓர் உறுப்பினர் நாடு. அதை உறுப்பினர் ஆக்காமல் தடுத்துக் கொண்டிருந்தால் துருக்கி வேறு திசைகளுக்குப் பயணித்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சங்கடத் தைக் கொடுக்கலாம். அதுமட்டு மல்ல தொடர்ந்து துருக்கியை உறுப்பினர் ஆக்க மறுத்துக் கொண்டே இருந்தால் அது ஐரோப் பிய யூனியனின் நம்பகத்தன்மை யையே கேள்விக்குறியாக்க லாம். அது எப்படி ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாட்டை ஐரோப்பிய யூனியன் மறுக்க முடியும்!

அதுமட்டுமல்ல துருக்கி ஓர் இஸ்லாமிய நாடு. அதை உறுப்பினராக ஏற்றுக் கொள்வதன் மூலம் ‘‘நாங்கள் ஒன்றும் கிறிஸ்தவக் கூட்டணி மட்டுமே அல்ல’’ என்பதை ஐரோப்பிய யூனியன் பறைசாற்ற முடியும். தவிர இஸ்லாமியர்கள் நிறைந்திருந்தும் மதச்சார்பற்ற நாடாகவே விளங்கும் துருக்கி சிலவிதங்களில் உலகுக்கே ரோல் மாடல். மேலும் ஐரோப்பியச் சரித்திரத்தில் பின்னிப் பிணைந்திருக்கிறது துருக்கி. துருக்கியின் கலாச்சாரத்தில்கூட ஐரோப்பிய பண்பாடு கலந்திருக் கிறது.

துருக்கியை அனுமதிப்பதன் மூலம் சைப்ரஸ், அர்மேனியா, குர்துகள் பிரச்சினை போன்றவற் றுக்கும் தீர்வு காண்பது எளிதாக அமைய வாய்ப்பு உண்டு.

ஆக துருக்கியை உறுப்பினராக சேர்த்துக் கொள்வதில் ஐரோப்பிய யூனியனுக்குப் பல சாதகங்கள் உண்டு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-2/article7667657.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 3

 
 
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி. உடன் அவரது மனைவி கர்லா புரூனி, ஒபாமாவின் மனைவி மிட்ஷேல். (கோப்புப் படம்)
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி. உடன் அவரது மனைவி கர்லா புரூனி, ஒபாமாவின் மனைவி மிட்ஷேல். (கோப்புப் படம்)

அமெரிக்க அதிபர் ஒபாமா துருக்கிக்குச் சென்றிருந்தபோது துருக்கி விரைவிலேயே ஐரோப்பிய யூனியனில் சேர வேண்டுமென்று தான் ஆசைப்படுவதாகக் கூறினார்.

உடனடியாக விடை வந்தது. பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியிடமிருந்து. ‘‘வருங் காலத்தில் ஐரோப்பிய யூனிய னுடன் துருக்கி ஒரு சிறப்பான நட்புறபோடு இருக்கும். ஆனால் முழுமையாக துருக்கியை உறுப்பி னராக ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. புவியிய லின்படியும், கலாச்சாரக் கோணத் திலும், துருக்கி ஒருபோதும் ஓர் ஐரோப்பிய நாடு ஆகாது’’ என்றார்.

ஐரோப்பிய யூனியனில் துருக்கி உறுப்பினராக வேண்டும் என்பதில் ஒபாமாவுக்கு என்ன அக்கறை? அமெரிக்க குடுமி சும்மா ஆடுமா?

துருக்கியில் எல்லைப் பகுதிகளில் சமீப வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பெட்ரோலிய வளத்தில்கூட அமெரிக்கா கண் வைத்திருக் கலாம். தவிர நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, துருக்கி இரண்டுமே உறுப்பினர் நாடுகள். துருக்கி ஐரோப்பிய யூனியனிலும் உறுப்பினர் ஆகிவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளின் மீது சில விஷயங்களில் அழுத்தம் கொடுக்க முடியுமென்று அமெரிக்கா நம்புகிறது.

அதாவது நேட்டோ எடுக்கும் முடிவுகளை சக உறுப்பினர் துருக்கி, ஐரோப்பிய யூனியனில் எடுத்துச் செல்ல முடியும்.

நலிந்த பொருளாதாரம் கொண் டுள்ள துருக்கிய ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் ஆக்கி விடுவதன் மூலம் அந்த அமைப் பைக் கொஞ்சம் பலவீனமாக்கி விடுவதுகூட அமெரிக்காவின் எண்ணமாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்புகிறார்கள். (டாலர் Vs. யூரோ).

எப்படியோ ஐரோப்பிய நாடு களுக்கு குறுகிய பார்வை என்ற வாதம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அதிக மக்கள் தொகை யையும், எக்கச்சக்கமான முஸ்லிம் களையும் கொண்டுள்ள துருக் கியை இந்தக் காரணங்களாலேயே ஐரோப்பிய யூனியன் ஏற்க மறுக் கிறது என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது.

அது சரி, துருக்கியை ஐரோப்பிய யூனியன் உறுப்பினராக்கிக் கொள் வதால் அந்த அமைப்புக்கு உண்டாகக்கூடிய பலவித நன்மை களை மேலே விவரித்திருக்கிறோம். இப்படியிருக்க எதனால் இப்படி அனுமதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் தயங்க வேண்டும். உண்மையான பின்னணிதான் என்ன? பார்ப்போம்.

துருக்கி முழுவதுமாக ஒர் ஐரோப்பிய தேசம் அல்ல. ஆசியா விலும் அழுத்தமாகவே கால்பதித் துள்ள தேசம் அது. துருக்கியை அனுமதிப்பதன் மூலம் ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுடன் பொதுவான எல்லைக் கோடுகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்படும். இது வேண்டாத தலைவலி என்று நினைக்கிறது ஐரோப்பிய யூனியன்.

தவிர, மக்கள் தொகை நிரம்பிய துருக்கி இந்த விஷயத்தில் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது. இதன் காரணமாகவே காலப்போக்கில் துருக்கி ஒரு வலிமை மிகுந்த உறுப்பினராக ஆகிவிடலாம். இதை சக ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை.

தவிர கஜகஸ்தான் போன்ற நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் தங்களை உறுப்பினராக்கிக் கொள்ள வேண்டுமென்று குரல் கொடுத்துள்ளன. துருக்கியை உறுப்பினர் நாடாக அனுமதித்தால், அடுத்தடுத்து பல விண்ணப்பங்கள் வந்து சேரும்.

தவிர ஐரோப்பிய பாணி ஜனநாயகத்திலிருந்து துருக்கியின் ஜனநாயகம் மாறுபட்டது. பல காலகட்டங்களில் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கும், ராணுவத் திற்கும் முட்டல் மோதல்கள் இருந்து வந்துள்ளன.

மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கிறது துருக்கி. சிறையில் சித்ரவதைகள் உண்டு. பேச்சுரிமைக்குத் தடை. சிறுபான்மையினருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பெண்களுக்குப் போதிய பாது காப்பு இல்லை. இப்படிப் பல குற்றச்சாட்டுகள். முக்கியமாக குர்துகள் பிரச்னையை தீர்க்க வேண்டிய சிக்கலில் மாட்டிக் கொள்ள ஐரோப்பிய யூனியன் தயாராக இல்லை. துருக்கியை அனுமதித்தால் அந்த வேலையும் ஐரோப்பிய யூனியனுக்கு வந்து சேரும்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-3/article7670668.ece

  • கருத்துக்கள உறவுகள்

2004ம் ஆண்டு வேலை நிமித்தமாக துபாய் இல் இருந்து ஓர் charter flight இல் இஸ்தன்புல் சென்றிருந்தேன். அழகிய நகரம், நான் தங்கியிருந்த ஓட்டலின் கீழ்பக்கம் ஒர் cabarate/strip dance club /pole dance உள்ளது. உள்ளே சென்று அமர்ந்தேன். குளிருக்கு பியரையும் குடித்துக்கொண்டு நோட்டம் விட்டேன். பல நாட்டு அழகிகள் விதம் விதமான  உடைகளுடன்/நிர்வாணமாக‌ ஆடிக்கொண்டு இருந்தார்கள். திடீரென தமிழில் யாரே கதைக்கும் சத்தம் கேட்டது, அட‌ இந்த இடத்திலும் தமிழா? பிறகு பார்த்தால் ஒர் தமிழ் நாட்டுக்காரர். இவர்தான் இந்த கிளப்பின் ஒருங்கினப்பாளர்/மேனஜர். பலர் தமிழ் நாட்டில் இருந்து இங்கு கணவனும் மனைவியுமாக‌ வந்து இந்த show வை பார்க்க‌ வந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

தமிழேண்டா!

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 4

 
துருக்கி
துருக்கி

ஐரோப்பிய யூனியனில் துருக்கியை சேர்த்துக் கொள்வது பற்றிப் பிற ஐரோப்பிய நாடுகளின் இருவேறு கோணங்களையும் மேலும் பார்ப்போம்.

துருக்கியின் பொருளாதாரம் சீரடைந்து வருகிறது. சொல்லப் போனால் பல ஐரோப்பிய நாடுகளைவிட துருக்கியின் பொருளாதார வளர்ச்சி விகிதம் திருப்தி தருவதாகவே உள்ளது. இந்த விஷயத்தில் தெற்கு ஐரோப்பிய நாடுகள் துருக்கியைப் பார்த்து பொறாமைப்படுகின்றன என்றுகூடச் சொல்லலாம்.

நியூயார்க், லண்டன், மாஸ்கோ ஆகிய நகரங்களை விட்டுவிட்டால் இஸ்தான்புல் நகரில்தான் உலகில் மிக அதிகமான கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்த்தால் துருக்கியை உறுப்பினராக்குவது ஐரோப்பிய யூனியனுக்கு ஒரு வரம்தான்.

ஆனாலும் உலக அளவீட்டின் படி துருக்கி ஒரு வளர்ச்சியடையாத நாடு. ஒரு கவுரவத்துக்கு வேண்டு மானால் வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என்று கூறலாம். அவ்வளவு தான். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் சராசரி ஆண்டு வருமானத்தில் பாதியைக்கூட அடைய முடியாமல் தவிக்கிறது துருக்கி. போதிய பொருளாதார சீர்திருத்தங்கள் துருக்கியில் நடைபெறாததன் காரணமாக அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி வருகிறது.

தொன்மையான துருக்கி மரபுகளின் வேர்கள் மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று இருக்கிறதே தவிர, ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரமாக புலப்படவில்லை. கிறிஸ்தவ நாடுகளால் நிரம்பியுள்ள ஐரோப்பிய யூனியன், துருக்கியை அனுமதிப்பதன் மூலம் மாபெரும் சங்கடங்களுக்கு வாசலைத் திறந்து விட்டதாக ஆகிவிடலாம்.

தவிர ‘துருக்கி’ என்ற வார்த்தையே சைப்ரஸ் மக்களுக்குப் கேட்கப் பிடிக்காமல் போய்விட்டது. இந்தக் கோணத்தில் பார்க்கும்போதும் துருக்கியை அனுமதிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய யூனியனுக்கு கூறத் தோன்றுகிறது.

பொருளாதாரச் சரிவுகள் அதிக நிதிப்பாதுகாப்புகள் குறித்த அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கி விட்டன. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம் சரிந்து அதை ‘ஐரோப்பாவின் நோயாளி’’ என்றே பிற ஐரோப்பிய நாடுகளை அழைக்க வைத்து விட்டது.

என்றாலும் துருக்கிக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் உள்ள பந்தம் வேறொரு வகையில் அதிகமாகி வருகிறது.

சரித்திரப்படி பார்த்தால் துருக்கியின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் ஏற்கெனவே ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டின் குடி உரிமையையும் பெற்று விட்டனர்.

துருக்கிக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே உள்ள வணிகம் கடந்த இருபது ஆண்டுகளில் பெருகியுள்ளது.

ஐரோப்பாவின் எல்லைகள் மிகத் தெளிவாக வரையறுக்கப் படவில்லை. கிறிஸ்தவப் பகுதி களையெல்லாம் தனக்குள் இணைத்துவிட வேண்டும் என்று ஐரோப்பாவின் எல்லை விரிவான தைத் தொடர்ந்து புதிய எல்லைகள் உருவாயின. ஐரோப்பாவின் கிழக்கு எல்லைதான் ஐரோப்பா வின் வெளி எல்லையாக கருதப்படு கிறது. இந்தப் பகுதி ஆசியா விலிருந்து வேறுபட்டதுதான். என்றாலும் ஐரோப்பிய அடிப்படை என்று கருதப்படுவதிலிருந்தும் மாறுபட்டது. கிரீஸ், ரஷ்யா, பால்கன் போன்றவற்றை இப்படிக் கூறலாம். ஏதோ இரண்டாந்தர ஐரோப்பிய நாடுகள்போல இவை கருதப்படுகின்றன. என்றாலும் புவி அமைப்பின்படி இவை ஐரோப்பாவாகத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவிதத்தில் எதிரிகளாகவும் இவை கருதப்படுகின்றன.

இந்தப் பின்னணிகூட துருக் கியை உறுப்பினராக அனுமதிப் பதில் ஐரோப்பிய யூனியனுக்கு தயக்கம் ஏற்படச் செய்கிறது.

டென்மார்க்கின் பிரதமர் துருக்கி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். தீவிரவாதத்தை அது போதிய அளவு அடக்க வில்லை என்பதுதான் காரணமாம். சைப்ரஸின் கடல் எல்லைக்குள் துருக்கியக் கப்பல்கள் நுழைந்ததை ஐரோப்பிய யூனியன் கண்டித்திருக்கிறது.

‘‘துருக்கியின் நிலைப்பாடுகள் கவலை அளிக்கின்றன’’ என்று கூறியுள்ளார் நெதர்லாந்து தூதர்.

ஒரு பேச்சுக்கு இப்படி ஒரு நிலையைக் கற்பனை செய்து பார்ப் போம். சைப்ரஸ் பிரச்னை தீர்க்கப் படுகிறது. ஐரோப்பிய யூனியன் தன் கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்துகிறது. அதேசமயம் துருக்கியும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கும் மாறறங்களைக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு உடன்படிக்கை ஏற்பட்டு துருக்கி ஐரோப்பிய யூனியனில் உறுப்பி னராகிறது.

ஆனால் பிரான்ஸும் ஆஸ்திரி யாவும் அதைக் கடுமையாக எதிர்த்தால்? ஒரு தேசிய பிரகடன மாக துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று கூறி விட்டால்? ஐரோப்பிய யூனியனுக்கு அது பெரும் தலைவலியாக மாறும்.

சமீபகாலமாக துருக்கியை சேர்த்துக் கொள்ள வேண்டாம் எனும் ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறதாம். முக்கிய மாக ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் வெளிப் படையாகவே துருக்கியை சேர்த்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவிக் கின்றன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-4/article7677088.ece

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 5

 
ஆர்மீனியாவில் தடம் பதித்த ரஷ்ய படைகள். (சித்தரிப்பு ஓவியம்)
ஆர்மீனியாவில் தடம் பதித்த ரஷ்ய படைகள். (சித்தரிப்பு ஓவியம்)

ஐரோப்பிய யூனியனில் சேர்வது தொடர்பாக துருக்கியில் என்னென்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக துருக்கிக்கும் மற்றொரு நாட்டுக்கும் உள்ள உறவுமுறையைப் பார்த்துவிடலாம்.

துருக்கியின் கிழக்கு எல்லைப் பகுதி நாடுகளில் ஒன்று அர்மீனியா. இந்த இரு நாடுகளுக்குமிடையே முன்னொரு காலத்தில் பெரும் பகைமை நிலவியது. அதன் நிழல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக் கிறது. 1915ல் நடைபெற்றது அந்தப் பகைமையின் உச்ச கட்டம்.

நான்காம் நூற்றாண்டின் தொடக் கத்தில் அர்மீனியா சுதந்திரத் தனி நாடாகத்தான் இருந்தது. அதற் கென்று ஒரு தனித்துவம் இருந்தது. உலகிலேயே கிறிஸ்தவத்தைத் தனது அதிகாரபூர்வமாக மதமாக அறிவித்த முதல் நாடு அர்மீனியா தான்.

என்றாலும் காலப்போக்கில் பல சாம்ராஜ்யங்களின் பிடிக்குள் சிக்கியது அர்மீனியா.15ம் நூற்றாண்டில் அந்தப் பகுதியில் பிரம்மாண்டமாகப் பரவியிருந்த ஒட்டாமன் சாம்ராஜ்யத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டது

அபோஸ்டோலிக், கத்தோலிக்க மற்றும் ப்ராடெஸ்டென்ட் ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர் களாக அர்மீனியர்கள் இருந் தார்கள். சுயாட்சி மூலம் இவர்களே அர்மீனியாவை ஆட்சி செய்து கொள்ளலாம் என்ற சலுகையை வழங்கியது ஒட்டாமன் சாம்ராஜ்ய அரசு.

ஆனால் அர்மீனியாவின் கிழக்கு மாகாணங்களில் வசித்தவர்கள் சில குறிப்பிட்ட சித்ரவதைகளுக்கு உள்ளானார்கள். அவர்கள் விற்கும் பொருள்களுக்கு நிறைய வரிகளை செலுத்தினால்தான் வணிகம் என்றார்கள் எல்லைப் பகுதிகளில் வசித்த துருக்கியர்களும், குர்து களும். இது தவிர அவர்களைக் கடத்துவதும், இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறும்படி கட்டாயப் படுத்துவதும் வழக்கமாயின.

பொதுவாக ஓட்டாமன் சாம் ராஜ்யத்தில் முஸ்லிம்கள் அல்லா தவர்கள் சொத்துகளை வாங்கு வது தடை செய்யப்படவில்லை. அவர்களுக்கு வழிபாட்டு உரிமை யும் உண்டு. என்றாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்போலவே நடத்தப் பட்டார்கள். பிற மதத்தைச் சேர்ந்த வர்கள் புதிதாக எந்த வழிபாட்டுத் தலத்தையும் கட்டக்கூடாது என்ற நிபந்தனை அமலுக்கு வந்தது (என்றாலும் இதை சாம்ராஜ் யத்தின் பல பகுதிகளில் அவ்வளவு கண்டிப்புடன் செயல்படுத்த வில்லை என்பதே உண்மை).

சட்டப்பூர்வமாக அர்மீனியாவில் முஸ்லிம்களுக்குச் சமமாக கிறிஸ்தவர்கள் நடத்தப்பட வில்லை. குற்றவியல் பிரிவில் முஸ்லிம்களுக்கு எதிராக கிறிஸ் தவர்களோ, யூதர்களோ அளிக்கும் சாட்சி ஏற்கப்படவில்லை. வணிகம் தொடர்பான விஷயங்களில் மட்டும்தான் முஸ்லிம்களிடமிருந்து அவர்கள் நஷ்டஈடு பெறமுடியும். முஸ்லிம் வீடுகளுக்கு நேரெதிராக அவர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளக் கூடாது. மாதாகோவில்களின் மணியோசை கேட்கக் கூடாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று ஐரோப்பிய மகாசக்திகளும் ஒட்டாமன் சாம்ராஜ்யத்தை கேள்வி கேட்கத் தொடங்கின. ‘‘அர்மீனியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு சம உரிமைகள் அளிக்க வேண்டும்’’.

இதைத் தொடர்ந்து ஒட்டாமன் அரசு சிறுபான்மையினருக்கு ஆதர வாக பல திட்டங்களை அறிவித் தது. ஆனால் அவற்றை நடைமுறை யில் கொண்டுவர பெரும்பாலும் முஸ்லிம்கள் சம்மதிக்கவில்லை.

இத்தனை தடைகளையும் மீறி அர்மீனியர்கள் வளர்ச்சி பெற்றார்கள். துருக்கியர்களைவிட படிப்பிலும் செல்வத்திலும் உயர்வு பெற்று விளங்கினார்கள். இதை துருக்கியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தவிர துருக்கியர் களுக்கு வேறொரு சந்தேகமும் இருந்தது. ‘ஒட்டாமன் ஆட்சியாளர் களைவிட அர்மீனியர்கள் தங்களைச் சுற்றியுள்ள கிறிஸ்தவ நாடுகளிடம் அதிகப் பற்றுதலோடு இருப்பார்கள்’.

அந்த சந்தேகம் உண்மைதான் என்பது போல்தான் அர்மீனியர்கள் நடந்து கொண்டனர். காரணம் மதப் பற்றுதல் என்பதைவிட பாதுகாப்பின்மை எனலாம்.

பல ஆண்டுகள் அர்மீனிய கிறிஸ்தவர்கள் அநீதிகளை பொறுத் துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் படித்துவிட்டு வந்த அர்மீனியாகள் ‘சம உரிமை தாகத்தை’ தங்கள் சமூகத்தினரி டமும் விதைத்தாரகள். அரசு அதிகாரிகளின் அடாவடித்தனங் களையும் சட்டத்தின் பார்வை யில் தாங்கள் தாழ்வாக நடத்தப் படுவதையும் விவரித்து மனு கொடுத்தார்கள். ஆவன செய்வ தாக உறுதியளித்த அரசு எதுவுமே செய்யவில்லை.

காலப்போக்கில் ரஷ்ய சாம்ராஜ்யம்தான் தங்களுக்குப் பாதுகாப்பானது என்ற எண்ணம் அர்மீனியர்களுக்கு அதிகமானது. (அப்போது ரஷ்யாவை ஆண்டது கிறிஸ்தவ ஆட்சியாளர்கள்தான்). ரஷ்யப் படைகளும் அர்மீனி யாவில் கால் வைத்தன. அர்மீனி யர்களுக்கு சமத்துவம் அளித் தால்தான் தங்கள் படை பின்வாங் கும் என்றது ரஷ்யா. அர்மீனியர்கள் ‘‘எங்களுக்குச் சுதந்திரம்கூட வேண்டாம். உண்மையான சுயாட்சி அளித்தால் கூட போதுமானது’’ என்றனர்.

1915ல் உலகப்போர் நடை பெறும் பகுதியிலிருந்த அர்மீனிய மக்களை தெற்குப் பகுதி மாகாணங் களுக்குக் குடியேற்றியது ஒட்டாமன் அரசு. ஆனால் இது சந்தேகத் துடன் பார்க்கப்பட்டது.அந்த சந்தே கத்தின் எதிரொலிகள் வெகுபயங் கரமாக வெளிப்பட்டன.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-5/article7680517.ece

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 6

 
பாலைவனத்தில் விரட்டப்பட்ட அர்மீனியர்கள்.
பாலைவனத்தில் விரட்டப்பட்ட அர்மீனியர்கள்.

ஒட்டாமன் சாம்ராஜயம் மெல்ல மெல்ல வீழ்ச்சி காண, சந்தேகங்கள் அதிகமாயின. அதாவது அர்மீனியர்கள் ரஷ்ய அரசோடு கைகோர்க்கிறார்கள் என்ற துருக்கியின் சந்தேகம். தங்களை பல்வேறு மாகாணங் களக்கு துருக்கி அரசு மாற்றி மாற்றி குடியேற்றுவதற்கு உள்நோக்கம் உண்டு என்ற அர்மீனியர்களின் சந்தேகம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அர்மீனியாவில் உரிமை களுக்கான போராட்டம் அதிகமான போது துருக்கிய சுல்தான் இரண்டாவது அப்துல் ஹமீது ஒரு முடிவுக்கு வந்தார். அர்மீனி யர்களை ஒரு வழியாக்கப் போவ தாக பத்திரிகையாளர் ஒருவரிடம் அவர் கூறினார்.

1894-லிருந்து 1896 வரை துருக்கிய ராணுவ அதிகாரிகள் அர்மீனியர்கள் அதிகம் வசித்த பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தினர். பல அர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல என்றால்? ஆயிரக்கணக்கில்.

1914-ல் துருக்கியர்களும் முதலாம் உலகப் போரில் பங்கு கொண்டார்கள். அவர்கள் இருந்தது ஜெர்மனியின் பக்கம். அதே சமயம் ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின் மதகுருவாதிகள் “எங்களுடன் கூட்டு சேராத எல்லா கிறிஸ்தவர்கள் மீதும் ஜிகாத் நடத்தவிருக்கிறோம்” என்றனர். அதாவது புனிதப்போர்!

“அர்மீனியர்களே எங்களுக்கு எதிரான கூட்டு நாடுகள் வென்றுவிட்டால் உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நினைத்தால் நீங்கள் துரோகிகள் ஆவீர்கள்” என்று முழக்கமிட்டனர் துருக்கிய ராணுவத் தலைவர்கள்.

போர் தீவிரம் அடைந்தது. அர்மீனியர்கள் துருக்கியர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டனர். ரஷ்ய ராணுவத்துக்கு ஆங்காங்கே உதவி செய்தனர். துருக்கிய அரசு கொதித்துப் போனது. அர்மீனியர் களை ‘நீக்கிவிட வேண்டும்’ என்று முடிவெடுத்தது. 1915 ஏப்ரல் 24 அன்று அர்மீனிய இனப்படு கொலை தொடங்கியது. நூற்றுக் கணக்கான அர்மீனிய கல்விமான் களை துருக்கிய அரசாங்கம் கைது செய்தது. அவர்களில் பலரை தூக்கிலிட்டது.

சாதாரண அர்மீனிய மக்களை யும் துருக்கிய அரசு விட்டு வைக்க வில்லை. அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர். உணவோ, தண்ணீரோ இன்றி அவர்கள் மெஸபடோமி யாவிலுள்ள பாலைவனத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் பெரும்பாலான உடைகள் நீக்கப் பட்டன. கொளுத்தும் வெயிலின் உக்கிரம் தாங்காமல் ஆயிரக்கணக் கானவர்கள் பாலைவனத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.

“பாலைவனத்தில் நடக்கும் போது ஓய்வெடுக்கக் கூடாது. அப்படி ஓய்வெடுத்தால் சுட்டுவி டுவோம்” என்றது துருக்கிய ராணுவம். ஆக குண்டு அல்லது கொதிக்கும் சூரியக் கதிர்கள் ஆகிய இரண்டில் ஒன்றின் மூலமாக இறப்பு நிச்சயம் என்ற கதி உருவானது. .

1908-ல் துருக்கியில் புதிய அரசு அமைந்தது. அதில் தங்களை புரட்சியாளர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் ஒரு குழுவாக உருமாறினர். தங்களை ‘இளந்துருக்கியர்’ (Young Turks) என்று அழைத்துக் கொண்டனர்.

இவர்கள் சுல்தான் அப்துல் ஹமீதுவின் ஆட்சியைத் தூக்கி எறிந்தனர். நவீனமான அரசியல் அமைப்புக்கு உட்பட்ட அரசை உருவாக்கப் போவதாக அறிவித் தனர்.

அர்மீனியர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இனிமேல் தாங்களும் கிட்டத்தட்டவாவது சமமாக நடத்தப்படுவோம் என்று எண்ணினார்கள். ஆனால் அத்த னையும் கானல் நீர் ஆனது. கிறிஸ்தவர்கள் தங்கள் அரசுக்கு எதிரி என்றே நினைக்கத் தொடங்கி னார்கள் துருக்கிய ஆட்சியாளர்கள்.

இளந்துருக்கியர்கள் ஒரு சிறப்பு அமைப்பை உருவாக்கி னார்கள். அது ‘கசாப்புக்கடை சைனியம்’ என்று பின்னர் குறிப்பிடப் பட்டது. இவர்களின் பணி என்பது ‘கிறிஸ்தவ சக்திகளை நீர்த்துப் போக வைப்பதுதான்’. இந்தக் குழுவில் பல கொலைகாரர்களை யும், முன்னாள் கைதிகளையும் சேர்த்துக் கொண்டனர். கிறிஸ்த வர்களை அழிக்க வேண்டும் என்பது எழுதப்படாத நிபந்தனையாக அவர்களுக்கு விதிக்கப்பட்டது. அந்த சைனியம் விரைந்து செயல்பட்டது. அவர்கள் செய்த கொலைகளுக்குத் தகுந்த மாதிரி வெகுமதிகள் அளிக்கப்பட்டன.

அவ்வளவுதான், மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்மீனி யர்கள் கீழே தள்ளப்பட்டனர். வேறு பலர் கொத்துக் கொத்தாக நதிகளில் மூழ்கடிக்கப்பட்டனர். “நீங்களும் உங்கள் மேய்ப்பரின் வழியிலேயே செல்லுங்கள்” என்றபடி பலரும் சிலுவையில் அறையப்பட்டனர். உயிருடன் கொளுத்தப்பட்ட அர்மீனியர்களும் அநேகம் பேர். குழந்தைகள்கூட கடத்தப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாற்றப் பட்டு துருக்கிய குடும்பங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டனர்.

மேற்படி இனப்படுகொலை ஒரு முடிவுக்கு வந்தபோது, ஒட்டாமன் சாம்ராஜ்யத்தில் உயிரோடு இருந்த அர்மீனியர்களின் எண்ணிக்கை நான்கு லட்சம்கூட இல்லை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-6/article7684515.ece

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 7

 
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள அர்மீனியா இனப்படுகொலை நினைவிடம்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள அர்மீனியா இனப்படுகொலை நினைவிடம்.

1918-ல் ஒட்டாமன் சாம்ராஜ்யம் சரணடைந்தது. இளந்துருக்கியத் தலைவர்கள் ஜெர்மனிக்குப் பறந்தார்கள். ‘‘நீங்கள் செய்த இனப்படு கொலைகளுக்காக நாங்கள் உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’’ என்ற உறுதிமொழியை ஜெர்மனி தந்திருந்தது.

ஆனால் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் இப்படி ஒரு இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று சாதிக்கிறது துருக்கிய அரசு. ‘‘அர்மீனியர்கள் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அவர்களைக் கொல்வது என்பது யுத்த தர்மம்’’ என்கிறது.

இன்று (மிக அதிக அளவில் கிறிஸ்தவர் களைக் கொண்டுள்ள) அமெரிக்கா மற்றும் வேறு சில மேலை நாடுகளின் முக்கியக் கூட்டாளியாக விளங்குகிறது துருக்கி. இதன் காரணமாகவே முன்பு நடைபெற்ற இனப்படுகொலை பற்றி பேசுவதற்குத் தயக்கம் காட்டுகிறது. ஒட்டாமன் சாம்ராஜ்ய ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் 15 லட்சம் அர்மீனியர்கள் துருக்கியர்களால் கொல்லப்பட்டனர். ‘இது சந்தேகமில்லாமல் இனப்படுகொலை. ஹிட்லரின் செயல்பாடுகளுக்கு இணையாக இதைக் கூறலாம்’. இது அர்மீனியர்களின் வாதம்.

ஆனால் துருக்கி இதை ஏற்றுக்கொள்ள வில்லை. ‘முதலாம் உலகப்போரில் இறந்த வர்களையெல்லாம் இதில் ஏற்றிச் சொல் கிறது அர்மீனியா. தவிர இந்தக் கலவரத் தில் நூற்றுக்கணக்கான துருக்கிய முஸ்லிம்களும்தானே இறந்தார்கள்’ என்கிறது துருக்கி. என்றாலும் மூன்று லட்சம் அர்மீனியர்கள் இறந்திருப்பார்கள் என்கிற அளவில் ஒத்துக் கொள்கிறது துருக்கி.

இப்போதைக்கு இந்த இரு நாடு களுக்கிடையே ஒழுங்கமைக்கப்பட்ட தூதரக உறவு இல்லை. ‘‘குறைந்தபட்சம் இனப்படு கொலை நடந்ததை துருக்கி ஒத்துக்கொள்ள வேண்டும்’’ என்று எதிர்பார்க்கிறது அர்மீனியா.

1991-ல் அர்மீனியா விடுதலை பெற்றது. துருக்கி அதை தனிநாடாக ஏற்றுக் கொண்டது. இன்றளவும் இருதரப்பிலும் கசப்புகள் தொடர்கின்றன.

துருக்கியை தங்கள் அமைப்பில் உறுப்பினர் ஆக்குவதற்கு ஐரோப்பிய யூனியன் ஏன் தயங்குகிறது என்பது குறித்தும், அப்படி உறுப்பினர் ஆக்கிக் கொண் டால் அதற்கு என்ன லாபம் என்பது குறித்தும் முன்பு விளக்கினோம்.இப்போது ஐரோப்பிய யூனியனில் சேர்வது குறித்து துருக்கியின் தரப்பில் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனிக்கலாம்.

ஐரோப்பிய யூனியனை சமாதானப் படுத்தும் விதத்தில் சில பொருளாதாரப் புரட்சிகளில் துருக்கி ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதை எதிர்க்கும் துருக்கியர்களும் கணிசமாக உள்ளனர். ‘‘எப்படியும் ஐரோப்பிய யூனியன் நம்மைச் சேர்த்துக் கொள்ளப்போவதில்லை. பிறகு எதற்கு அவர்கள் சொன்னபடியெல்லாம் ஆட வேண்டும்?’’ என்ற எதிர்ப்புக் குரல்கள் துருக்கியில் பலமாகவே ஒலிக்கத் தொடங் கியிருக்கின்றன.

அதுமட்டுமல்ல இதையே சாக்காக வைத்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் தங்களை விமர்சிப்பதையும் துருக்கி யர்கள் விரும்பவில்லை (இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்படு கின்றன என்பது உண்மை). பல ஐரோப்பிய நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக துருக்கி நினைக்கிறது. உறுப்பினர் ஆவதற்கு மிகவும் கடுமையான நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் விதிப்பதாக கோபப்படுகின்றனர் துருக்கியர்கள்.

அதுமட்டுமல்ல தங்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்ட பிறகு பின்னர் ஐரோப்பிய யூனியனிலிருந்து தங்கள் தேசத்தைக் கழற்றி விட்டால் அது தங்களுக்குப் பெருத்த அவமானம் என்றும் துருக்கியில் பேசப்படுகிறது.

அதுமட்டுமல்ல ‘‘நமக்கு எதுபோன்ற துருக்கி வேண்டும்?’’ என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதாவது ஐரோப்பிய யூனியனில் சேர்ந்தால் துருக்கி தனது தனித்தன்மையை இழந்துவிடும் என்று கருதுகிறார்கள் சில துருக்கியர்கள். ‘‘கிறிஸ்த வர்களின் கூட்டமைப்பில் சேர நாம் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?’’ என்று வெளிப்படையாகவே துருக்கியின் மதவா திகள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். (என்றாலும் துருக்கி ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால் இவர்களின் எதிர்ப்புக் குரல் அதிகப் பலன் அளிக்கவில்லை).

ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடு களால் சரித்திரத்தை மறக்க முடியவில்லை. ஒட்டாமன் சாம்ராஜ்யத்தில் மிகுந்த துன்பங்களை அவர்கள் அனுபவித்தது உண்டு. ஒட்டாமன் சாமராஜ்யத்தின் அடக்கு முறைகளுக்கு துருக்கி பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் அந்த சாம்ராஜ்யத்தின் இதயமாகத் திகழ்ந்த பகுதி துருக்கி.

இந்தக் கட்டுரையில் சற்று ‘உறுப்பினர் ஆக்கிய பிறகு நம்மை ஐரோப்பிய யூனியன் கழற்றிவிட்டுவிட்டால் என்னாவது? என்ற கேள்வி துருக்கியில் எழுந்திருப்பதாகக் குறிப்பிட்டோம். அப்படியொரு காரியத்தை எந்த நாடு செய்துவிடும்? நாடு என்ன, சில நாடுகளே செய்ய வாய்ப்பு உண்டு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-7/article7694604.ece

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 8

 
 
குர்து இன பெண்களின் நடனம்.
குர்து இன பெண்களின் நடனம்.

பிரான்ஸுக்கு துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பது சுத்தமாகப் பிடிக்க வில்லை. யூனியனில் அதிக உறுப் பினர்கள் சேரச் சேர தனக்கான அதிகாரங்கள் குறைந்துவிடும் என்ற அச்சம் அதற்கு.

அதுமட்டுமல்ல துருக்கியை உறுப்பினர் ஆக்கிக் கொண்டால் ஐரோப்பிய யூனியனிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக துருக்கிதான் இருக்கும்.

தவிர துருக்கியில் வசிக்கும் சுமார் நான்கு லட்சம் அர்மீனிய சிறுபான்மையினரின் கதி என்ன என்பதையும் அறிய விரும்புகிறது பிரான்ஸ்.

ஜெர்மனியைப் பொறுத்தவரை, துருக்கியர்களை அதிக அளவில் அது பல்வேறு பணிகளில் அமர்த் திக் கொண்டிருக்கிறது. ஆனாலும் துருக்கியை ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் ஆக்குவதில் ஜெர்மனிக்கும் மிகுந்த தயக்கம் இருக்கிறது. தங்களிடம் வேலைக்கு வரும் துருக்கியர்களில் பலரும் (இஸ்தான்புல், அங்காரா போன்ற) துருக்கியின் முக்கிய நகரங்களி லிருந்து வருபவர்கள் அல்ல. புறநகர் அல்லது கிராமப் பகுதி களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஜெர்மனியிலும் பெரிதாகக் கலந்து பழகாமல், தங்கள் இனத்தின் பழக்க, வழக்கங்களை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஜெர்மனியில் உள்ள கணிசமான துருக்கியர்கள் தங்கள் மகள்களுக்கு கல்வி அறிவு அளிப்பதில்லை. துருக்கியப் பெண்மணிகள் பிற இனத்தைச் சேர்ந்தவர்களை மணந்தால் கவுரவக் கொலைகள் நடக் கின்றன. ஜெர்மனி இதுபோன்ற கவுரவக் கொலைகளை அடிக்கடி பார்த்து வருகிறது. இஸ்லாம் என்பது பெண்களுக்கு எதிரானது என்று 90 சதவீதம் ஜெர்மானியர்கள் கருதுவதாகக் கூறுகிறது ஒரு சமீபத்திய கணக் கெடுப்பு.

ஆக உறுப்பினர் நாடாகச் சேர்த்துக் கொண்டாலும் துருக்கி என்னவோ மாறப்போவதில்லை என்கிற ஆழமான எண்ணம் ஜெர்மனிக்கு இருக்கிறது.

தவிர பிரான்ஸுக்கு இருக்கும் அதே பயம் ஜெர்மனிக்கும் இருக் கிறது. ‘துருக்கியைச் சேர்த்துக் கொண்டால் தனது அதிகார பலம் குறைந்து விடுமோ?’.

துருக்கிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பலரும் துருக்கி, ஐரோப்பிய யூனியனில் சேர வேண்டுமென்றே எண்ணு கிறார்கள்.

ஒரு தடையல்ல. ஆனால் ஐரோப்பிய கலாச்சாரத்துக்கும், துருக்கியின் கலாச்சாரத்துக்கும் எந்தவிதப் பொருத்தமும் இல்லையே. எங்கள் நாட்டில் வசிக்கும் துருக்கியர்கள்கூட ஏதோ தனி தீவுகள் போலத்தானே வாழ்கிறார்கள்’’ என்கிறார்கள்.

‘‘மதம் நெதர்லாந்து மக்கள் இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட சரிபாதியாகப் பிரிந்திருக்கிறார்கள். ஆஸ்திரியாவைப் பொறுத்தவரை பிரான்ஸின் நிலைப்பாட்டைவிட தீவிரமானதாக இருக்கிறது, துருக் கியை சேர்க்கவே கூடாது எனும் கோஷம். ஒரு காலத்தில் ஓட்டாமன் சாம்ராஜ்ய ராணுவம் (ஆஸ்திரியா வின் இன்றைய தலைநகரான) வியன்னாவை சின்னாபின்னப் படுத்தியதை மறக்க முடிய வில்லை. அங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில்

தவிர குர்துகளின் எதிர்ப்பையும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு ஐரோப்பிய யூனியனுக்கு வரக்கூடும்.

அதென்ன குர்துகளின் எதிர்ப்பு?

துருக்கி சந்தித்து வரும் தலையாய பிரச்னைகளில் ஒன்று குர்துகள் தொடர்பானது. குர்து இன மக்கள் துருக்கியில் மட்டுமே இருக்கிறார்கள் என்பதில்லை. ஆனால் துருக்கியின் தலைவிதி என்பது குர்துகளாலும் அலைக் கழிக்கப்பட்டு வருகிறது என்ப தால் குர்துகள் குறித்து கொஞ்சம் தெளிவாகவே தெரிந்து கொள் வோம்.

பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களைக் கொண்டவர்களாக குர்துகள் இருக்கிறார்கள். எனினும் பெரும்பாலானவர்கள் சன்னி பிரிவு முஸ்லிம்கள்தான். என்றாலும் ஷியா பிரிவினரும், சூஃபியிஸ பிரிவினரும்கூட இதில் உண்டு.

இவர்கள் பெரும்பாலும் மத்திய கிழக்குப் பகுதியில் வசிக்கிறார்கள். துருக்கியின் வடகிழக்குப் பகுதியில் அதிக அளவில் இருக்கிறார்கள். அதேபோல மேற்கு ஈரான், வடக்கு ஈராக், வடக்கு சிரியா ஆகிய பகுதி களிலும் பரவலாகக் காணப்படு கிறார்கள். என்றாலும் அடிப்படை யில் ஈரானிய மக்களுடைய கலாச்சாரம் மற்றும் மொழியை அதிக அளவில் ஒத்திருக்கிறது குர்துகளின் பண்பாடு மற்றும் மொழி. எனவே இவர்களில் சிலர் தங்களை ஈரானியர்கள் என்றே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

(உலகம் உருளும்)

உலகெங்கும் உள்ள குர்துகளின் எண்ணிக்கை மூன்றரை கோடியாக இருக்கக் கூடும். இவர்களில் பெரும்பான்மையினர் மேற்கு ஆசியாவில்தான் இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்வதென்றால் மேற்கு துருக்கியில் உள்ள நகரங்களில் அதிக அளவில் வசிக்கிறார்கள். இஸ்தான்புல் நகரில் மிகுந்த அளவில் குர்துகளைக் காண முடியும்.

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-8/article7701418.ece

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 10

 
லேலா ஜானா
லேலா ஜானா

முதலாம் உலகப் போரின் முடிவில் ஒட்டாமன் சாம் ராஜ்ஜியமும் தோற்கடிக் கப்பட்ட பிறகு மேற்கத்தியக் கூட்டு நாடுகள் வெற்றி ஆனந்தத்தில் திளைத்தார்கள். 1920-ல் உண்டான ஸெவ்ரெஸ் உடன்படிக்கையில் குர்துகளுக்கென ஒரு தனி நாடு உண்டாக ஒப்புக் கொண்டார்கள். (இந்த உடன்படிக்கை கூட்டு நாடு களுக்கும் ஒட்டாமன் துருக்கி சாம் ராஜ்யத்துக்குமிடையே ஏற்பட்டது).

ஆனால் அடுத்த மூன்றே ஆண்டு களில் குர்துகளின் கனவுகள் தகர்க்கப்பட்டன. காரணம் லாஸனே உடன்படிக்கை. இது கிட்டத்தட்ட ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின் மீது கூட்டு நாடுகளால் திணிக்கப்பட்ட உடன்படிக்கை எனலாம். ஆனால் இதில் குர்துகளுக்கென்று தனி நாடு என்பதைப் பற்றிப் பேச்சு மூச்சே இல்லை.

ஆக குர்துகள் வெவ்வேறு நாடுகளில் சிறுபான்மையி னராகவே இருக்க நேரிட்டது.

‘‘தங்களுக்கு என்று ஒரு நாடு இல்லாத மாபெரும் இனம் எங்களுடையதுதான்’’ என்று குர்துகள் குமுறினர். அவர்கள் செயல்பாடு கடுமையாக இருந்தது. இதனால் ஐ.நா.சபை, ஐரோப்பிய யூனியன், நேட்டோ, அமெரிக்கா போன்ற பலவும் குர்துகளைத் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்தன.

துருக்கியிலுள்ள குர்துகள் எவ்வளவு பேர்? ஆளுக்குத் தகுந்த படி 18 முதல் 25 சதவீதம் வரை கூறுகிறார்கள். தாங்கள் இரண்டரை லட்சம்பேர் துருக்கியில் வசிப்பதாக குர்துகள் அறிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் துருக்கியிலுள்ள சிறுபான்மையினரில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் குர்துகள்தான்.

1925, 1930, 1938 ஆகிய ஆண்டுகளில் குர்துகள், துருக்கி யில் புரட்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் துருக்கி அரசால் அந்தப் புரட்சிகளை அப்போது முழுமை யாகவே அடக்க முடிந்தது. என்றாலும் தொடர்ந்து மாறி மாறி குர்துகளை ஒரே இடத்தில் ஒட்டு மொத்தமாக வசிக்க விடாமல் செய்து கொண்டிருந்தது துருக்கிய அரசு.

ஒரு கட்டத்தில் நாட்டில் குர்திஷ் மொழியைப் பேசக் கூடாது. குர்து களின் பெயர்களையே பயன் படுத்தக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு கட்டங்களில் குர்துகளை அடக்க துருக்கிக்குப் பிற நாடுகளின் ஆதரவும் கிடைத்தது.

அவற்றில் முக்கியமானவை சோவியத் யூனியன், ஈரான் மற்றும் இராக்.

PKK எனப்படும் குர்திஸ்தான் அமைப்பு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவற்றால் தீவிரவாத அமைப்பாகவே பட்டியலிடப் பட்டுள்ளது. 1984லி ருந்து சுமார் 15 வருடங்களுக்கு இந்த அமைப்புக்கும், துருக்கிய ராணுவத்துக்கு மிடையே கடும் மோதல்கள் பலமுறை நடந்துள் ளன. இதில் PKK அமைப்பு மிதவாத குர்துகள்மீது நிகழ்த்திய தாக்குதல்களும் உண்டு.

ஒருபுறம் போராடிக் கொண்டே இன்னொரு புறம் துருக்கியின் பொதுத் தேர்தல்களிலும் குர்துகள் போட்டியிட்டனர். அப்படி நாடாளு மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் குர்து இனப் பெண்மணி லேலா ஜானா என்பவர். பதவியேற்பின்போது இவர் கூறிய உருது மொழி வாசகம் நாடாளுமன்றத்தில் பலத்த கைதட்டலைப் பெற்றது. ‘‘துருக்கிய மக்களும், குர்து மக்களும் சகோதர உணர்வோடு விளங்குவதற்காக இந்த உறுதி மொழியை நான் எடுக்கிறேன்’’ என்று தொடங்கினார் அவர்.

பொதுவாக துருக்கி நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை உண்டு. அரசியல் காரணங்களுக்காக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும்வரை அது செல்லாது. ஆனால் 1994-ல் துருக்கிய நாடாளுமன்றம் இந்தச் சலுகையை நீக்கிக் கொண்டது.

இதைத் தொடர்ந்து (மேலே குறிப்பிட்ட பெண்மணி உட்பட) ஆறு குர்து இனத்தைச் சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருட சிறை தண்டனையை விதித்தது உச்ச நீதிமன்றம்.

ஐரோப்பிய யூனியன் இதை ஏற்கவில்லை. மனித உரிமைக்குப் போராடியதற்காக ஜானாவுக்குப் பரிசு வழங்கியது. துருக்கி செய்தது மனித மீறல் என்றது. ஐரோப்பிய யூனியனில் துருக்கியை உறுப்பி னராக சேர்த்துக் கொள்வதற்கு இது பெரும் தடையாக இருக்கும் என்றது. 2004-ல் ஜனாவை மட்டும் விடுவித்தது துருக்கிய அரசு.

குர்து அரசியல்வாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் 1993 94-ல் நடைபெற்ற மறை முகக் கொலைகளை கடுமையாகக் கண்டித்தனர். அதாவது குர்து மற்றும் அசிரிய இனத்தைச் சேர்ந்த வர்களில் சுமார் 3000 பேர் மாயமாக மறைந்துவிட்டனர். ராணுவத்தின் திருவிளையாடல்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது.

நாட்டின் அதிகாரபூர்வ மொழி துருக்கிய மொழியான துர்க்கிஷ். 70லிருந்து 80 சதவீதம் பேர் துருக்கியர்கள். அதாவது தொன்மையான காலத்திலிருந்தே துருக்கியில் வசிப்பவர்கள். இவர்களின் முக்கிய மதம் இஸ்லாம். அதுவும் சன்னி பிரிவு. ஒட்டாமன் சாம்ராஜ்யம் துருக்கியில் கொடி கட்டிப் பறந்த காலத்திலிருந்தே இருப்பவர்கள்.

துருக்கியர்களை விட்டு விட்டால் பாக்கி இருக்கும் சிறுபான்மை இன மக்களில் அதிக எண்ணிக்கையில் குர்துகள் இருக் கிறார்கள். இவர்கள் துருக்கி முழு வதும் பரவி இருக்கிறார்கள். என்றாலும் அந்த நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள். இந்தப் பகுதியைத்தான் அவர்கள் குர்திஸ்தான் என்கிறார்கள்.

மொத்தத்தில் குர்திஸ்தான் என்று அவர்கள் கூறும் பகுதி இப்போதைய துருக்கி, சிரியா, இராக், ஈரான் ஆகிய நான்கு நாடுகளிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்க்கப்பட்ட பகுதி.

இவற்றையெல்லாம் அந்தந்த நாடுகள் அங்கீகரித்துவிட்டனவா?

தெற்கு குர்திஸ்தான் (இராக்) ஏற்கனவே சுயாட்சி அந்தஸ்தை பெற்று விட்டது. 1970-ல் இராக் அரசுடன் இது செய்து கொண்ட ஒப்பந்தம் இந்த அங்கீகாரத்தை அதற்கு அளித்திருக்கிறது. பிற பகுதிகளைப் பொறுத்தவரை அந்த நாடுகள் குர்திஸ்தானை அங்கீகரிக்கவில்லை.

துருக்கியைப் பொருத்தவரை 1988-லிருந்தே சுயாட்சி கோரி குர்துகள் பலவித முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றில் அமைதியான நடவடிக்கை உண்டு. கெரில்லா வகை போர்த் தாக்குதலும் உண்டு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-10/article7705675.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி

 
 
 
இராக் பள்ளியில் குர்து இன மாணவ, மாணவியர்.
இராக் பள்ளியில் குர்து இன மாணவ, மாணவியர்.

சமீப காலமாக குர்துகள் தங்கள் பகுதிகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஒருபுறம் துருக்கியில் தன்னாட்சி கேட்டுப் போராட்டம். மறுபுறம் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போராட்டம். இன்னொரு புறம் இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உண்டாகியுள்ள பதற்ற நிலைக்குத் தங்களாலான பங்களிப்பு.

இராக்கில் குர்துகளுக்கு ஒரு தனி கவுரவம் உண்டு. அந்த நாட்டில் அராபிக் மொழியோடு குர்திஷ் மொழிக்கும் அதிகாரபூர்வ அந்தஸ்து உண்டு.

நடைமுறையில் பெரும்பாலான குர்துகளுக்கு இரண்டு மொழிகளாவது தெரிந்திருக்கிறது. ஒன்று குர்திஷ், மற்றொன்று அவர்கள் வசிக்கும் நாட்டின் பெரும்பான்மை மொழி. அந்தவிதத்தில் துருக்கியிலுள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கும் குர்து மாணவர்கள் தங்கள் இரண்டாவது மொழியாக துருக்கிய மொழியைத் தேர்வு செய்கிறார்கள்.

குர்துகள் எண்ணிக்கையில் மிக அதிகம் வசிப்பது துருக்கியில். மக்கள்தொகையில் சுமார் 25 சதவீதம். குர்துகள் அதிகம் வசிக்கும் அடுத்தடுத்த நாடுகளாக இராக், ஈரான், சிரியா ஆகியவற்றைக் கூறலாம். கொஞ்சம் வியப்பான ஒரு தகவலும் உண்டு. இந்த நாடுகளை விட்டுவிட்டால் குர்துகள் மிக அதிகமாக வசிப்பது வேறு ஏதோ இஸ்லாமிய நாட்டில் அல்ல, ஜெர்மனியில்!

தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும். அல்லது குறைந்தபட்சம் சுயாட்சி அந்தஸ்தோடு கூடிய பகுதி வேண்டுமென்று குர்து இனத் தவர் அழுத்தமாக நினைக்கத் தொடங்கியது முதலாம் உலகப் போருக்குப் பிறகு எனலாம். அதற்கு முன்னால் ஒட்டாமன் சாம்ராஜ்யம் குர்துகளை பயமுறுத் தியே தனது பிடிக்குள் வைத்தி ருந்தது. முதலாம் உலகப்போரைத் தொடர்ந்து ஒட்டாமன் சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வந்தது. துருக்கியில் கூட மதச்சார்பின்மைக்கு முக்கியத் துவம் தரப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு துருக்கி குடியரசில் தங்கள் பகுதி களுக்கு சுயாட்சி தேவையென்று கொடிபிடிக்கத் தொடங்கினார்கள் குர்துகள்.

இதெல்லாம் இளம் துருக்கி யர்கள் என்று அழைக்கப்பட்ட பிரிவினருக்குப் பிடிக்கவில்லை. போர் என்று வந்தால் குர்துகள் ரஷ்யாவின் பக்கம்தான் சாய் வார்கள் என்றும் இவர்கள் கருதி னார்கள். எனவே நாட்டின் முக்கியப் பகுதிகளில் குவிந்திருந்த குர்து களை பல்வேறு எல்லைப் பகுதி களில் படரவிட்டனர். இப்படி இடம் மாற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர் மூன்று லட்சம் குர்துகள். இதன் காரணமாக குர்து இனத்தைச் சேர்ந்த பலரும் வழிவழியாக வைத்திருந்த தங்கள் முன்னோர்களின் நிலங்களை குறைந்தபட்ச விலைக்கு விற்று விட்டுச் செல்லும்படி ஆனது. முதலாம் உலகப்போர் முடிவடை வதற்குள் சுமார் ஏழு லட்சம் குர்துகள் இப்படி கட்டாயமாக பிற பகுதிகளுக்கு மாற்றி குடியேற வைக்கப்பட்டார்கள்.

இராக்கில் குர்துகள் பெரும் புரட்சிகளில் ஈடுபட, துருக்கிக்கும் கவலை வந்தது. குர்துகள் அதிகம் வசிக்கும் துருக்கியப் பகுதிகளில் ராணுவச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தது. குர்துகள் இடமாற்றத்தை மேலும் தீவிரமாக்கியது. குர்துகள் அதிகம் தங்கும் பகுதிகளில் தங்குவதற்கு அல்பேனியா மற்றும் அசிரியா நாட்டு அகதிகளை அனுமதித்தது.

இந்தக் காரணங்களினால் துருக் கிக்கும், குர்துகளுக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமானது. இருதரப்பிலும் நம்பிக்கையும், அவநம்பிக்கையும் மாறி மாறி உண்டானது. போராட்டங்களும், அமைதிப் பேச்சு வார்த்தைகளும் மாறி மாறி நடந்து தங்கள் அர்த்தத்தை இழந்து நின்றன.

1922 1924ல் இராக்கில் குர்து களுக்கு சுயாட்சி அந்தஸ்து கொடுக்க குர்திஸ்தான் என்ற ராஜ்யம் உருவானது. ஆனால் 1970ல் குர்துகள் தங்கள் நோக்கங்களை விரிவுபடுத்திக் கொண்டார்கள். சுயாட்சி போதாது. முழு சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க வேண்டும் என்றனர். அதுமட்டுமல்ல இராக்கில் உள்ள பெட்ரோல் வளம் நிரம்பிய கிர்குக் என்ற பகுதியும் தங்களது வருங் கால தேசத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று போராடத் தொடங்கினார்கள்.

குர்திஸ்தான் என்பது இராக்கின் ஒருபகுதி மட்டுமல்ல. அது நான்கு தேசங்களின் சில பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்ட குர்துகளின் கனவு தாகம்.

விரிவான குர்திஸ்தான் (Greater Kusthisthan) என்ற பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதாவது பல்வேறு நாடுகளில் அருகருகே அதிக அளவில் குர்துகள் வசிக்கும் பகுதி. இதன்படி பார்த்தால் வடக்கு குர்திஸ்தான் என்பது தென்கிழக்கு துருக்கியின் சில பகுதிகள். மேற்கு குர்திஸ்தான் என்பது சிரியாவின் வடக்குப் பகுதி, தெற்கு குர்திஸ்தான் என்பது இராக்கின் வடபகுதி, கிழக்கு குர்திஸ்தான் என்பது ஈரானின் மேற்குப் பகுதி.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி/article7710694.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 12

 
 
சிரியாவின் குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் ராணுவப் பிரிவினர்.
சிரியாவின் குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் ராணுவப் பிரிவினர்.

ஒட்டாமன் சாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு 1923-ல்தான் இப் போதைய துருக்கி உரு வானது. இந்த நாட்டின் தற் போதைய நாணயம் துருக்கிய லிரா. மன்டி, கெபாப் போன்ற பிரபல ஐரோப்பிய உணவு வகைகளின் தாயகம் துருக்கிதான். காவியங்களில் இடம் பெற்ற தொன்மையான ட்ராய் நகரம் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள் (Helen of troy). அது இருந்தது தற்போதைய துருக்கியில்தான். இங்கு சாலையின் வலதுபுறமாகத் தான் வண்டி ஒட்டுவார்கள். மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டது துருக்கி.

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பும், குர்துகளும் பகைவர்கள் ஆனது எப்படி?

ஒருவிதத்தில் பார்த்தால் இது கொஞ்சம் விந்தையானது. ஐ.எஸ்.அமைப்பு சன்னிகளுக்கானது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உலகின் பல பகுதிகளுக்கு பரப்ப வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும் இதில் உறுப்பினர் ஆனவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே சன்னி முஸ்லிம்கள்.

குர்துகளை குறிப்பிட்ட மதத்தவர் என்றோ, குறிப்பிட்ட இனத்தவர் என்றோ குறிப்பிட முடியாது. என்றாலும் இதில் மிகப் பலரும் சன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள்தான்.

அப்படி இருக்க இந்த இரு தரப்பினரும் துருக்கியில் ஏன் மோதிக் கொள்ள வேண்டும்? பொதுவான எதிரியாக துருக்கி ஆட்சியை இவர்கள் பாவித்து இணைந்தே போரிடலாமே?

ஐ.எஸ்.அமைப்பைப் பொறுத்த வரை குர்துகளை அவர்கள் முழுமையான முஸ்லிம் பிரி வாகப் பார்த்ததில்லை. அவர் களை அந்நியர்களாகத்தான் பார்க்கிறார்கள்.

பகைமையை வளர்ப்பதுபோல் சமீப வருடங்களில் பல சம்பவங்கள் நடந்து விட்டன.

2013-ல் வடக்கு சிரியாவில் குர்துகள் அதிகம் வசித்த மூன்று பகுதிகளை தாக்கத் தொடங்கியது ஐ.எஸ். தொடர்ந்து ஒரு வருடத் துக்கு இந்தத் தாக்குதல் நடை பெற்றது.

கொஞ்சம் தாமதமாக பதிலுக்கு தாக்கத் தொடங்கினர் YPG அமைப்பினர். இது சிரியாவின் குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் ராணுவப் பிரிவு. இராக்கில் இருந்த யுத்தக் கருவிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்டு சிரியாவில் நுழையத் தொடங்கி இருந்தனர் ஐ.எஸ்.அமைப்பினர்.

இராக்கில் குர்துகள் ஆட்சி செய்த பகுதி ஓரளவு சுயாட்சி பெற்றதாக இருந்தது. இந்தப் பகுதியினர் அப்போதே ஐ.எஸ்.அமைப்பினரை எதிர்க்கத் தொடங்கி விட்டனர்.

இந்தப் பகைமை சிரியாவில் தீவிரமடைந்தது.

ஐ.எஸ்.க்கு எதிராக அமெரிக்கா வட இராக்கில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. சில ஐரோப்பிய நாடுகளும் இராக்கிற்கு (குர்துகள் ஆட்சி செய்த பகுதிக்குமாக சேர்த்து) ஆயுதங்களை அனுப்பின.

அந்த சமயத்தில் துருக்கியி லிருந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் இராக்கிற்கு இந்தக் கோணத்தில் உதவியாக இருந்தது.

சிரியாவின் எல்லைப் பகுதியிலிருந்த கோபேன் (Kobane) என்ற சிறு நகரின் மீது தாக்குதல் நடத்தியது ஐ.எஸ். இதனால் அங்கிருந்து சுமார் 1,60,000 மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்தனர். இவர்களில் மிக அதிகமானவர்கள் குர்துகள்.

ஐ.எஸ்.அமைப்பின் மீது துருக்கி அரசு தாக்குதல் நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர் குர்துகள். அல்லது குறைந்தபட்சம் ஐ.எஸ்.அமைப்பை தாங்கள் எதிர்க்கும்போது மறைமுக ஆதரவு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இதற்கெல்லாம் உடன்பட மறுத்தது துருக்கி அரசு. இதனால் அந்த அரசோடு தாங்கள் நடத்தத் தொடங்கியிருந்த அமைதிப் பேச்சு வார்த்தைகளை குர்துகள் நிறுத்திக் கொண்டார்கள்.

சென்ற ஆண்டு அக்டோபரி லிருந்தே அமெரிக்க ராணுவத் தோடு கொஞ்சம் இணைந்து செயல்படுகிறார்கள் குர்து போராளி கள். பொதுவான எதிரி ஐ.எஸ்.க்கு எதிராக இந்த இருதரப்பினரும் கைகோத்திருக்கிறார்கள். துருக்கியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் எங்கெங்கே கூடாரம் அமைத்திருக் கிறார்கள் என்பது குறித்த ரகசிய விவரங்களை குர்து போராளிகள் அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கொடுக்க, சரியான இடங்களில் வான்தாக்குதல் நடத்துகிறது அமெரிக்கா.

இந்த நடவடிக்கை குர்துகளுக் கும் வசதியாக இருக்கிறது. துருக்கி எல்லைகளில் குர்துகள் அதிகம் வசித்த சில பகுதிகளை ஐ.எஸ்.பலவந்தமாக ஆக்ரமித்துக் கொண்டது. அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் காரண மாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அழிக் கப்பட்டு வருகின்றனர். இதனால் இழந்த பகுதிகளை மீண்டும் அடைகிறார்கள் குர்துகள்.

ஐ.எஸ்.அமைப்பை அழிக்கும் செயலில் துருக்கி அரசின் ஆதரவையும் கோரி வருகிறது அமெரிக்கா. 1952லிருந்தே துருக்கி நேட்டோ அமைப்பின் உறுப்பினராக இருக்கிறது. எனவே ஐ.எஸ்.அமைப்பு சிரியாவில் பரவாமல் இருக்கவும்கூட துருக்கி உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது அமெரிக்கா. ஆனால் துருக்கி அரசுக்கு இதில் தயக்கம். அமெரிக்கா ஆதரவைப் பெற்றால் ஐ.எஸ்-ஸின் தாக்குதல் மேலும் கடுமை அடையலாம் என்பதும் இந்தத் தயக்கத்துக்கு ஒரு காரணம்.

பின்னர் ஒரு கால கட்டத்தில் அமெரிக்காவுக்கு உதவ ஒப்புக் கொண்டது துருக்கி அரசு. ஆனால் எழுதப்படாத நிபந்தனை ஒன்றையும் விதித்தது. துருக்கிய எல்லையில் உள்ள சிரியாவின் பகுதிகளை ஐ.எஸ்., குர்துகள் ஆகிய இருதரப்பினரின் பிடியிலிருந்தும் அமெரிக்கா நீக்க வேண்டும் என்பதுதான் அது.

இதற்கு பதில் மரியாதையாக தனது எல்லைக்குள் அமெரிக்கா போர் விமான தளங்களை அமைத்துக் கொள்ள துருக்கி ஒத்துக் கொண்டிருக்கிறது.

தங்களது முதல் எதிரி ஐ.எஸ்.தான் என்று தீர்மானித்துள்ள அமெரிக்கா குர்துகளின் கட்சிக்கு எதிராகவும் கருத்துகளை வீசி வருகிறது.

“தற்காப்பு என்ற கோணத்தில் எதையும் செய்யும் உரிமை துருக்கிக்கு உண்டு. இந்த விதத்தில் அவர்களது உரிமைகளை நாங்கள் முழுமையாக மதிக் கிறோம்’’ என்று பொதுப்படையான அறிவிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-12/article7715449.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி - 13

 
 
உள்நாட்டுப் போரால் சிதிலமடைந்த டமாஸ்கஸ் நகரின் ஒரு பகுதி.
உள்நாட்டுப் போரால் சிதிலமடைந்த டமாஸ்கஸ் நகரின் ஒரு பகுதி.

சிரியாவுக்கும், துருக்கிக்கும் கூட ஏழாம் பொருத்தம்தான். முதலாம் உலகப்போர் முடிந்த வுடனேயே பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. நவீன துருக்கி யின் ஒரு மாகாணம் ஹடே. ஒப்பந் தப்படி இதை தனக்குரியது என்று கூறிக் கொண்டது துருக்கி. என்றா லும் 1938 வரை பிரான்ஸின் விருப் பப்படி அந்த மாகாணம் சிரியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தப் பகுதிக்கென்றே ஒரு தனி நாடாளுமன்றம் அமைந்தது.

1939-ல் இந்த நாடாளுமன்றம் ஒரு முடிவெடுத்தது. “நம் மாகா ணம் இனி துருக்கியோடு முழு மையாகச் சேர்ந்து விடலாம்’’. ஆனால் இதை சிரியா ஏற்க வில்லை. கசப்புகள் தோன்றத் தொடங்கின.

அடுத்த பிரச்னை நதி நீர் தொடர்பானது. யூஃப்ரடிஸ், அஸி ஆகிய நதிகள் துருக்கி வழியாக சிரியாவுக்குப் பாய்கின்றன. இந்த நதிகளில் அணைகள் எழுப்பியது துருக்கி. இதனால் சிரியாவுக்குச் செல்லும் நீரின் அளவு குறைந்து இரண்டு நாடுகளுக்கும் மீண்டும் மோதல்.

எல்லாவற்றுக்கும் சிகரமான கசப்பை உருவாக்கியது சிரியா வின் அதிபர் பஷார் அல் அஸாத் என்பவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள். இதை அவரது தந்தையின் நடவடிக்கைகள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும். PKK என்ற கட்சிக்கு அவர் இயங்க இடம் கொடுத்தார்.

அதென்ன PKK? குர்துகளின் உழைப்பாளர் கட்சி என்பதன் சுருக்கம் இது. துருக்கிக்கும், குர்துகளுக்கும் உள்ள பிரச் னையை ஏற்கெனவே சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

1980-களிலும், 1990-களிலும் துருக்கி அரசும், குர்துகளும் மோதிக் கொண்டபோது குர்து களை தன் பகுதியில் இயங்க அடித்தளம் அமைத்துக் கொடுத் தது சிரியா.

டமாஸ்கஸ் மீது தனது ராணுவம் படையெடுக்கும் என்று அறிவித்தது துருக்கி. (டமாஸ்கஸ் சிரியாவின் தலைநகர்). இதைத் தொடர்ந்து குர்து தலைவருக்கு தாங்கள் அளித்திருந்த அடைக்கலத்தை நீக்கிக் கொண்டது சிரியா. பின்னர் இருநாடுகளும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு பல சர்வதேச விஷயங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்து `நண்பேன்டா’ என்று காட்டிக் கொண்டன.

ஆனால் ஒரு காலகட்டத்தில் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. சிரியா அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் அதிக மானது. அந்தச் சமயத்தில் புரட்சி யாளர்களை ஆதரித்தது துருக்கி. அதாவது மறைமுகமாக சிரியாவை ஆண்ட பஷார் அல் அஸாத் பதவி நீக்கம் செய்யப்படுவதை ஆதரித் தது. புரட்சியாளர்கள் துருக்கியில் இணைந்து செயல்பட அனுமதித் தது. புரட்சியாளர்களுக்கு தன் எல்லையை தாராளமாகத் திறந்து விட்டது.

இதில் வேறொரு எதிர்பாராத சிக்கல் முளைத்தது தனிக்கதை. ஆயிரக்கணக்கான அகதிகள் (சிரியாவில் நிலவும் உள்நாட்டுப் போரின் விளைவுகளுக்குப் பயந்து கொண்டு) துருக்கிக்குள் நுழைந்தனர்.

துருக்கிகளுக்கும், குர்துகள் கட்சிக்குமிடையே ஒரு வழியாக அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. ஆனால் அதுவும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சிதிலமடைந்தது.

துருக்கி அரசின் ஜெட் விமானங் கள் இராக் பகுதியில் அமைந்த குர்துகளின் இருப்பிடங்களை குறிவைத்துத் தாக்கின.

துருக்கியில் குர்துகளின் இடது சாரிக் கட்சி ஒன்றும் இயங்குகிறது. மக்கள் ஜனநாயக கட்சி எனப் படும் அது HDP என்று அழைக்கப் படுகிறது.

எந்தெந்த இடங்களில் ஜூன் மாதத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு அதிகம்பேர் வாக்களித்தார்களோ அந்தந்தப் பகுதிகளில்தான் அரசு தன் தாக்குதலைக் கூர்மையாக்கி இருக்கிறது.

கணிசமான இடங்களை HDP வென்றதால் ஆளும் கட்சி முழுமை யான பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் தாக்குதல்கள் என்கிறார்கள் குர்துகள்.

1984-ல் தனி நாடு வேண்டு மென்று கேட்கத் தொடங்கியதி லிருந்து அரசுக்கும், குர்துகளுக் கும் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 40 ஆயிரம் பேர் இறந் திருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு இதில் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பும் தன் பங்கை ஆற்றத் தொடங்கியி ருக்கிறது.

ஆக ஒருபுறம் குர்துகள், மறு புறம் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆகிய இருதரப்பையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் துருக்கிக்கு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி-13/article7718709.ece

  • தொடங்கியவர்

தொடர் சிக்கல்களில் துருக்கி

 
 
துருக்கி அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தும் குர்து இன இளைஞர்கள்.
துருக்கி அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தும் குர்து இன இளைஞர்கள்.

நாம் முன்பு குறிப்பிட்ட நிலவரம் இந்த ஆண்டு ஜூலை 20 அன்று மேலும் மோசமடைந்தது.

துருக்கி - சிரியா எல்லையில் உள்ளது சுருக் என்ற பகுதி. குர்துகள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் ஐ.எஸ்.தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் தன் உடலில் வெடிகுண்டை இயங்க வைத்துக் கொண்டு 32 பேரை மேலுலகுக்கு அனுப்பிவிட்டு தானும் போய்ச் சேர்ந்தான்.

ஐ.எஸ்.அமைப்புதான் இதற்குக் காரணம் என்பது தெரிந்தாலும் துருக்கி அரசு ஐ.எஸ்.உடன் மறை முக பேரம் பேசி குர்துகள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்திருக்கிறது என்கிறார்கள் குர்துகள்.

இதற்கு இரண்டு நாட்கள் கழித்து இரு துருக்கிய காவல் துறையினரை குர்து புரட்சியாளர் கள் கொன்றார்கள். சுருக் வெடி குண்டு நிகழ்ச்சிக்கு இந்த இருவரும் உடந்தை என்பதுதான் காரணமாம். ஆனால் அதே சமயம் ஐ.எஸ். தீவிரவாதிகள் துருக்கிய ராணு வத்தோடு போரில் ஈடுபட்டிருக் கிறார்கள்.

அமெரிக்காவின் போர்த் தளவாடங்களை துருக்கி கேட்க, அமெரிக்கா இதில் தாராளம் காட்டி வருகிறது.

துருக்கியின் அதிபர் எர்டோகன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்றத்தை முடக்க முயற்சிக்கிறார் என்றும் இணையதள வசதிகளை சென்சார் செய்கிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. “இன்னமும் தெளி வாகவும் வெளிப்படையாகவும் ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக துருக்கி குரல் கொடுக்க வேண்டும். ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான கூட்டணியில் சேர்ந்துவிட வேண்டும்’’ என்றெல்லாம் ஐரோப் பிய நாடுகள் எண்ணுகின்றன. இரண்டு மாதங்களுக்குமுன் நடைபெற்ற தேர்தலில் எர்டோகன் கட்சியால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. கூட்டணிக்கு முயற்சி எடுத்துக் கொண்டார். என்றாலும் சீக்கிரமே இன்னொரு தேர்தலை சந்திக்க வேண்டியது தான் என்கிற அளவுக்கு ஆட்டம் காண்கிறது அவரது கட்சி. அதே சமயம் துருக்கியின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க அவர் என்ன முயற்சிகளை எடுக்கப் போகிறார் என்பதும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

எர்டோகன் துருக்கியின் 12வது அதிபர். 1994லிலிருந்து 1998 வரை இஸ்தான்புல் நகரின் மேயராக பதவி வகித்தவர். 2002, 2007, 2011 ஆகிய மூன்று பொதுத் தேர்தல் களில் தனது நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சியை வெற்றி பெறச் செய்தவர்.

சிறந்த கால்பந்து வீரர் இவர். வெளிப்படையாகவே தீவிர இஸ்லாமிய பாணி அரசியலை விமர்சனம் செய்தவர்.

சமீபகாலத்தில் பெரும் கலவரம் கிழக்கு துருக்கியில் தொடங்கியது. அரசும் குர்து தீவிரவாதிகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் வன்முறை பரவியது.

செப்டம்பர் 6 அன்று குர்து போராளிகள் சாலைகளில் வீசிய வெடிகுண்டினால் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி துருக்கிய தேசியவாதிகள் குர்து களின் அலுவலகங்கள் மீது தாக்கு தல் நடத்தினர். அங்காராவில் இருந்த அவர்களின் அலுவலகத் துக்குத் தீ வைத்தனர். சிறு சிறு வணிக இடங்களெல்லாம் தீக்கு இரையாகின.

ஊடகங்களும் தப்பிவிட வில்லை. அதிபர் எர்டோஜெனின் பேச்சுகளைத் திரித்து வெளியிட்ட தாக குற்றம் சாட்டப்பட்டு ஹுரியத் என்ற நாளிதழின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

சிஸெர் என்ற சிறு நகரில் 10 பேர் கொலை செய்யப்பட, அங்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ராணுவ அதிகாரி கள் புகுந்து தீவிரவாதிகள் குறித்த சோதனைகளை நடத்துகிறார்கள்.

நடப்பதைப் பார்த்தால் போன வருட அமைதிப் பேச்சுவார்த் தைக்கு அர்த்தமே இல்லை என்று தோன்றுகிறது. அந்தப் பேச்சு வார்த்தை முடிவடைந்த கையோடு இருதரப்பினருமே போருக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டார்கள் என்று தோன்றுகிறது.

முன்பெல்லாம் குர்து புரட்சி யாளர்கள் கிராமங்களையும், சிறு நகரங்களையும்தான் குறிவைத் தார்கள். இப்போதெல்லாம் அவர் களின் முக்கிய இலக்கு நகரங்கள் என்றாகிவிட்டது.

இளைய குர்துகள் என்று அழைக்கப்படும் வயது குறைந்த போராளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இவர்கள் போர் தந்திரங்களில் உரிய பயிற்சி பெற்றதில்லை. ஆனால் ஆக்ரோ ஷம் மிக்கவர்களாக இருக்கிறார் கள். இவர்களுக்கு பேச்சுவார்த்தை களில் நம்பிக்கை கிடையாது.

துருக்கிய அரசு தனது முக்கிய எதிரியாக யாரை எண்ணுகிறது? . “ஐ.எஸ். தான் தனது முக்கிய எதிரி எனக் கருதி, அமெரிக்க உதவி யுடன் ஐ.எஸ்.ஸுடன் மோதும், குர்து எதிர்ப்பாளர்களை கடும் எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள் ளும்’’ என்கின்றனர் ஒரு சாரர். வேறு சிலரோ “ஐ.எஸ். மீது குறைந்த பட்ச நடவடிக்கைகளை எடுத்து விட்டு, குர்துகளைத்தான் தனது முக்கிய எதிரிகளாகக் கருதி துருக்கி அரசு செயல்படும்’’ என்கிறார்கள்.

அதிபர் எர்டோகனின் இந்தச் செயல்களுக்கு அரசியல் பின்னணி உண்டு. இந்த ஜூன் மாதம் நடை பெற்ற தேர்தலில் அவரது கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையை இழந்துவிட்டது. இதற்கு ஒரு முக்கிய காரணம் குர்துகளுக்கு ஆதரவான ஒரு கட்சி கணிசமான இடங்களைப் பிடித்ததுதான். எனவே தீவிரவாதத்தை (ஐ.எஸ்) எதிர்ப்பதைவிட அரசியல் எதிரி களை (குர்துகள்) ஒழிப்பதற்கு அதிபர் முன்னுரிமை காட்டினால் அது வியப்பதற்கு இல்லை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/தொடர்-சிக்கல்களில்-துருக்கி/article7733740.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.