Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்)

Featured Replies

  •  

தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்-1)

 

Dawood%20head01.jpg

மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில் வந்து தெறிக்கும். அதனால் எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும் அந்த ஹோட்டல் வாசல் சாலை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெரிய பிசினஸ் புள்ளிகள், பாலிவுட் ஸ்டார்கள், முக்கியமான அரசியல் வாரிசுகள், உயர் அதிகாரிகள் என அனைவருவே அதிகார வர்க்கம்தாம். அந்த பிரமாண்ட ஹோட்டலில் யார் யாருடன் வருகிறார், யார் யாருடன் போகிறார் என்கிற விபரங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை.

பாலிவுட்டில் மிக பிரபலமாக இருந்த கனவுக்கன்னி நடிகை ஒருவர் மாலை நேரம் ஒன்றில் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார். ஐந்தாவது தளத்தில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் அவர் எட்டாவது தளத்தில் இருந்த அறைக்கு முகங்களை மூடிக்கொண்டு ரகசியமாக சென்றார். ஏற்கனவே அந்த அறையில் இந்திய வருவாய் துறை அதிகாரி ஒருவர் காத்திருந்தார். இந்தியாவின் பொருளாதரத்தை நிர்ணம் செய்யும் பங்குச்சந்தை உலகின் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் அவர். நடிகையும் அதிகாரியும் பரஸ்பர அறிமுகமாகி அடுத்த இரண்டு நொடிகள் கூட தாமதிக்காத அந்த அதிகாரி, சினிமாவில் தான் பார்த்து ரசித்த அந்த அழகியை, நேரில் பார்த்த அதிர்ச்சியில் அவரை இழுத்துப்பிடித்து அணைத்து, ஆசை தீர முத்தம் கொடுத்திருக்கிறார்.

அதோடு விடாமல், அவர் அழகை மிகவும் வர்ணனை செய்திருக்கிறார். அடுத்த பத்து நிமிடங்களில் அவர் ஆசைப்பட்ட அனைத்தும் நடந்து முடிந்து, களைப்பின் வியர்வை துளிகளின் ஈரம் காயும்முன்பே அந்த அறையின் கதவை உடைத்து வருகிறார் அன்னியர் ஒருவர். வந்தவர் கையில் அமெரிக்க மேட் பிஸ்டல் ஒன்று பளபளத்து. அதற்கு பிறகு அந்த அதிகாரி வளைக்கப்படுகிறார்.

இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், பிசினஸ் மீட்டிங்க்காக  பாங்காங் நாட்டில் ஒரு ஸ்டார் ஹோட்டல் தங்கி இருந்தார், இந்தியாவில் இயங்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒருவர். அன்றைய மீட்டிங் முடிந்து பாத்ரூம் போன அந்த முதலாளியை அங்கு வைத்து துப்பாக்கி முனையில் கடத்தினார்கள் இருவர். பிறகு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு, இந்தியாவில் அவருக்கு இருக்கும் முக்கியமான சொத்துக்களின் பெரும்பாலான பங்குகள் எழுதி வாங்கப்பட்டன. இந்த இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்தது ‘டி’ கம்பெனியின் ஆட்கள்.

dawood1-02.jpg

டி கம்பெனி என்பது தாவூத் இப்ராஹிம் என்ற நிழல் உலக தாதாவின் நிறுவனம். நிறுவனம் என்றதும் நம்மூரில் இயங்கும் சாப்ட்வேர் கம்பனியோ இல்லை, தயாரிப்பு நிறுவனமோ இல்லை. மாறாக இந்த நிறுவனத்தின் வேலைகள் அனைத்தும் அப்படியே அக்மார்க் உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட பிசினஸ்கள். ஆட்கள் கடத்துவது, ஆயுதம் விற்பது, கடத்துவது, போதைப்பொருள்கள் கடத்தி உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது என பெரிய சாம்ராஜ்யம் டி கம்பெனி. பல சமயம் டி கம்பெனிக்கு போர் அடித்தால் உலகமே உற்றுக்கவனித்து கொண்டு இருக்கும் ஒரு விஷயத்தின் முடிவை இவர்கள் தீர்மானிப்பார்கள். அதாவது அந்த விஷயத்தின் முடிவை பெட்டிங் கட்டி இயக்குவது. இதுதான் டி கம்பெனியில் முக்கியமாக பொழுது போக்கு அண்ட் பிசினஸ்.

ஒரு மாதத்தில் பாங்காங்கில் வளைக்கப்பட்ட தொழில் அதிபரின் நிறுவனத்தின் ஷேர்கள் சந்தையில் சக்கை போடு போட்டன. அதற்கு காரணம், நடிகை மூலம் வளைக்கப்பட்ட அந்த அதிகாரியின் கைவண்ணம்தான். ‘டி’ நிறுவனத்திற்கு இது ஒரு சின்ன வேலை. இந்த வேலையை துபாய் ஷேக் ஒருவருக்காக சும்மா டைம்பாஸ்க்கு செய்து கொடுத்தார் டி நிறுவனத்தின் தலைவர் தாவூத்.

தாவூதிதின் டி கம்பெனியின் தலைமை அலுவலகம் துபாய் நாட்டில் இயங்குகிறது. அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளில் தேடப்படும் குற்றவாளி. உலக குற்றவாளிகளின் டாப் 10 பட்டியலில் முதல் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தாவூத். இந்தியாவில் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பு, ஆயுதம் கடத்தியது, ஆள் கடத்தியது என எக்கசக்க குற்றப்பின்னணி இருந்தாலும் இன்றளவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் மோஸ்ட் வாண்டட் பெர்சன் தாவூத். 

யார் இந்த தாவூத் இப்ராஹிம்?

மும்பையில் சாதாரண போலீஸ் தலைமைக்காவலர் இப்ராஹீம் கஸ்காரின் மகன் தாவூத் இப்ராஹீம். 1955ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் மும்பையில் பிறந்தார் என்றாலும், இவரின் பூர்விகம் உத்திரபிரதேசம் என்ற சலசலப்பும் உண்டு. சாதாரண பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத தாவூத்தின் பால்ய வாழ்க்கையில், அவரின் தந்தை மும்பையில் நடக்கும் பல்வேறு குற்றங்களை வீட்டில் வந்து சொல்லுவதுண்டு. அதில் அதிகமாக தங்க கடத்தல்கள், ஹேங் சண்டைகள் என மும்பையில் நடக்கும் பல்வேறு விஷயங்களையும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் உயர் அதிகாரிகள் திணறுவதையும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதே இப்ராஹீம் கஸ்கர், அவரின் உயர் அதிகாரிகள் மீது அளவுக்கு கடந்த பயம் கலந்த மரியாதையை வைத்து இருந்தார். பெரும்பாலும் இரவு நேரங்களில் இப்ராஹிம் கஸ்கருக்கு அவசர வேலைகள் வரும். அப்பொழுது அவர் உயர் அதிகாரிகளுக்கு பயந்து விழுந்து ஓடுவது தாவூத்துக்கு பிடிக்காது. அதோடு வேலை முடிந்து வந்ததும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு குற்றவாளிகள் எஸ்கேப் ஆன திரில் கதைகளை அப்படியே சொல்லுவார்.

அடிக்கடி போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரும், குற்றவாளிகளும் பெயரும் சரிசமமாக அடிபடும். அதனால் போலீஸ்-குற்றவாளி என இருவரும் ஸ்டார் என நம்ப ஆரம்பித்தார் தாவூத். எதிர்காலத்தில் அப்பா போல சாதாரண போலீஸ்காரராக இல்லாமல் உயர் அதிகாரி ஆகனும், அது நடக்கவில்லையென்றால் கடத்தல் தொழிலில் கொடி கட்டி பறக்கவேண்டும் வேண்டும் என்று தனது சகாக்களிடம் தாவூத் சொல்லுவதுண்டு.

dawood1-01.jpgதனது 14 வயதில் தாவூத் பள்ளியில் படிக்கும் பொழுதே செய்தித்தாளில் வரும் கடத்தல், ஹேங் வார்களை பற்றி படித்து அவற்றை கட் பண்ணி நோட்டில் ஒட்டி வைப்பது வழக்கம். அப்படியே காலத்தை கடத்திய தாவூத் உள்ளுரில் இருக்கும் முக்கியமான தாதாக்களை சந்திக்க போவதுண்டு. அவர்களும் கிரைம் பிராஞ்ச் போலீஸ்காரரின் மகன் என்பதால் தாவூத் மூலம் ஏதாவது விஷயம் வரும் என்று தாவூத்திடம் பழகியதுண்டு. அப்படியே பழக்கத்தை உண்டாக்கிய தாவூத் மும்பையின் பிரபல வெள்ளிக்கட்டிகள், தங்கக்கட்டிகள் கடத்தும் முக்கிய புள்ளியான ஹாஜி மஸ்தான் என்பவரோடு பழக ஆசைப்பட்டான்.

ஹாஜி மஸ்தானுக்கு தமிழகம்தான் பூர்விகம் என்பதால், அங்கு அவரை மதராசி ஹாஜி என்று அழைப்பதுண்டு. தவிர அங்கு நிலவும் ஊர் பிரச்னை நீறு பூத்த நெருப்பாக இருந்தது. கடத்தல் தொழிலில் மகாராஷ்டிராவினர் செய்ய முடியாத பல்வேறு வேலைகளை ஹாஜி மஸ்தான் கன கட்சிதமாக செய்து முடிப்பது வழக்கம். அதனால் மும்பை போலீஸ் வட்டாரம் நன்கு அறிந்து, அவரை கண்காணித்து வந்தது. ஹாஜி மஸ்தான் தனது வீட்டை விட்டு வெளியே போகாமல், அவரது சகாக்களை வைத்து அரபிக்கடலில் தங்கம் மற்றும் கருப்பு பணம் எனப்படும் ஹவாலா பணங்களை கடல் மூலம் பல்வேறு இடங்களுக்கு அரசாங்கத்திடம் சிக்காமல் கடத்துவதில் கில்லாடி. அந்தப் பணிகளை பெரும்பாலும் மார்வாடி சமூகத்தினர்களுக்கு செய்து கொடுப்பதால் மும்பையில் மிகப்பெரிய கடத்தல் மன்னனாக இருந்தார் ஹாஜி மஸ்தான்.

அப்படி, கடத்தலில் வரும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற மார்வாடி சமூகத்தினர், அந்த பணங்களை பாலிவுட் சினிமாவில் போட்டு சினிமா எடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். அப்படித்தான் சினிமா பிரபலங்கள் ஹாஜி மஸ்தானுக்கு அறிமுகம் ஆனதுண்டு. அதனால் சினிமாவில் பெரும்பாலும் ஹவலா பணங்களை மொத்தமாக மாற்ற ஹாஜி மஸ்தான் அதிகம் தேவைப்பட்டார். அதனால் என்னவோ ஹாஜி மஸ்தான் பற்றி, அவரை ஹீரோவாக சித்தரித்து காட்டி ஹாஜி மஸ்தான் செய்யும் வேலைகளை கதைக்களமாக்கி, பிரபல நடிகரை வைத்து ஒரு முன்னணி இயக்குனர் சினிமா ஒன்று எடுத்தார். அந்தப்படம் பயங்கர வெற்றி பெற்றது மும்பையில்.

அதுவரை அரசல் புரசலாக தெரிந்த ஹாஜி மஸ்தான் அதன் பிறகு வெகுஜன மக்களுக்கு நன்கு தெரியவந்தார். அதன் விளைவால்   பாதுகாப்பு கருதி ஹாஜி மஸ்தான் தனது புகைப்படங்களை வெளியே வராமல் பார்த்துக்கொண்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தாவூத்திற்கு பிடித்துப்போனது. ஹாஜி மஸ்தானிடம் பழக ஆரம்பித்தான். அதோடு அவர்கள் கடத்தும் பணத்தை அவர்களிடமிருந்து கடத்த திட்டம் தீட்டினான் தாவூத்.

18 வயதான தாவூத்தின் முதல் சம்பவம்

கடத்தலில் கொண்டு வரும் தங்க கட்டிகளை மும்பையில் பிரபலமான மூன்று மார்கெட்டில் வைத்துதான் பிரித்து பல்வேறு நபர்களுக்கு அனுப்புவார்கள். கிராப்ஃபோர்டு, மோகத்தா, மனிஷ் போன்ற முக்கியமான மூன்று மார்க்கெட்தான் அது. இங்கு இருந்துதான் காய்கறிகள், அரிசி பருப்பு உள்பட பல்வேறு பலசரக்கு தானியங்களை மும்பையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு லாரி உள்பட சரக்கு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம்.  இந்த சந்தைகளில் எப்பொழுதும் கூட்டம் நெரிசலாக இருக்கும் என்பதால் கடத்தல்காரர்களுக்கு தொழில் செய்ய நல்ல இடமாக இருந்தது.

இதுபோன்ற ஒரு கருப்பு பணத்தை கொண்டு செல்லும் ஒரு குரூப்பில் இருந்து வந்த தகவலை வைத்து கொள்ளை அடிக்க திட்டம் தீட்டினான் சிறுவனான தாவூத். அதற்காக அவன், யூசுப்கான், அபுபக்கர், இஜாஸ்ஜிங்கி, அசிஸ் டிரைவர், அப்துல் முத்தலிப், சையது சுல்தான், சிர்கான், உள்பட ஏழு நபர்களை கூட்டாளிகளாக வைத்துகொண்டு திட்டம் தீட்டினான்.

திட்டத்திற்கு தேவையான ஒரு கார், கத்திகள், துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்களை வைத்துக்கொண்டு திட்டத்தை செயல்படுத்தும் இடமான தெற்கு மும்பையில் உள்ள மரைன் டிரைவ் பாலத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஒத்திகை பார்த்தனர். கொள்ளைக்கு தேதி குறித்து காத்திருந்து கொள்ளையடிக்கும் நாளும் வந்தது.

காரை அசிஸ் ஓட்டுவதும், ஆயுதங்களை தாவூத் மற்றும் சையது சுல்தான் பயன்படுத்துவது என்று திட்டம். இதில் சையது சுல்தான் கட்டுமஸ்தான உடம்புக்காரன். மிஸ்டர் மும்பைக்கு தயாராக இருந்தான். பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து ஆணழகன் பட்டம் வாங்கி இருக்கிறான். அவனது ஆசை, கனவு எல்லாம் மிஸ்டர் மும்பை, மிஸ்டர் மகாரஷ்டிரா, அப்படியே மிஸ்டர் இந்தியா என்று அவனது கனவுகளின் தூரம் மிக அதிகம். அதற்கு பணம் தேவை என்பதால் இந்த வேலையை செய்ய அவன் முன் வந்தான்.

சோர்ஸ் சொன்னபடி ட்ரக் ஒன்று பணத்தை ஏற்றிக்கொண்டு கிராப்போர்டு மார்கெட் பகுதியை கடந்து மெல்லோ சாலை வழியாக வருவதாக தகவல். கர்னக் பந்தர் பாலம் அருகில் வைத்து கொள்ளை அடிக்க திட்டம். வண்டி முகமது அலி சாலையை கடந்ததும், அந்த வண்டியின் பின்புறம் தாவூத்தின் ஆட்கள் பின் தொடர வேண்டும் என்பது தாவூத்தின் கட்டளை. வண்டியில் டிரைவர் உள்பட இரண்டு மார்வாடிகள் வரை வருவதாகவும் தகவல் வந்தது. அவர்களும் தங்களுக்கு பாதுகாப்புக்கு என்று இரும்பு பைப்பில் கைப்பிடி போட்டு ராடு உள்பட துப்பாக்கி வரை வைத்து இருப்தாக கூடுதல் தகவல் வேறு தந்து இருந்தனர்.

மதியம் இரண்டு மணியளவில் சீறிப்பாய்ந்த அந்த வண்டியை முட்டி மோதி சிறிய விபத்து போல உண்டாக்கி, உள்ளே இருந்தவர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுத முனையில் மடக்கினர் தாவூத்தும் சையதும். மற்றவர்கள் அந்த வண்டியில் இருந்தவர்களை பேச விடாமல் மடக்கினர். அவர்களிடம் தாவூத் 'இனி ஒரு வார்த்தை பேசினால், அடுத்து வார்த்தைகள் பேசமுடியாது. பெட்டி எங்கே' என்று மிரட்டினான். டிரைவர் பயந்து போய்  சீட்டின் பின்புறம் இருந்த இறுக்கி கட்டி சீல் வைக்கப்பட்ட கருப்பு பெட்டியை காட்டினான். கைப்பற்றினார்கள் தாவூத் அண்ட் கோ.

dawood1-03.jpg

பெட்டியை உடைத்து பணக்கட்டுகளை பையில் போட்டுகொண்டவர்கள், அவர்களை தாக்கி  விட்டு அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்து விட்டனர். வேறு வழி தெரியாமல் பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீசுக்கு போனார்கள். பைதொனிக் காவல் நிலையத்தில் குற்ற எண் 725/1974 என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தாவூத் மற்றும் அவனின் கூட்டாளிகளுடன் சேர்ந்து மூன்று வாரங்கள் கழித்து தாவூத் தனது 19வது பிறந்தநாளை கொண்டாடும் பொழுது அன்றைய அணைத்து செய்திதாள்களிலும் மும்பை மெட்ரோபொலிட்டன் கார்பரேசன் வங்கி வண்டியை மடக்கி ரூபாய் 4,75,000 கொள்ளை என்று செய்தி வந்தது. அதோடு இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 20 வயதுக்கு உள்பட்ட நபர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வந்ததோடு, அந்த கொள்ளையின் மாஸ்டர் பிளான் தாவூத் என்ற செய்தி வந்தது. ஒரே சம்பவத்தில் மும்பை முழுவதும் பேமஸ் ஆனான் தாவூத் இப்ராஹீம்.

அதன்பிறகு தான் தெரிந்தது தாவூத் கொள்ளையடித்தது ஹவலா பணம் இல்லை. அரசு கோஆப்ரடிவ் வங்கியின் பணம் என்று.

அதன் பிறகு மும்பை போலீஸ் கவனம் தாவூத் பக்கம் திரும்பியது. அதுவரை நேர்மையான போலீஸ்காரராக இருந்த தாவூத்தின் தந்தை  இப்ராஹீம் கஸ்கர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதோடு அவர் அவமானம் தாங்காமல் தானே முன்வந்து தனது வேலையை ராஜினாமா செய்தார்.

அடுத்து நடந்தது என்ன?

தோட்டாக்கள் பாயும்...

http://www.vikatan.com/news/article.php?aid=52545

 

 
  • தொடங்கியவர்

14 வயதிலேயே வழிப்பறிக்கொள்ளையன்! (தாதா தாவூத் -2)

 

Dawood%20head02%281%29.jpg

ங்கிக்கொள்ளையால் பிரபலமானதால் அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ், தாவூத்தின் முழுப் பின்னணி குறித்து விசாரித்து வந்தது. வங்கிக் கொள்ளைதான் அவனுக்கு முதல் கொள்ளை என்று நினைத்து வந்த போலீஸ் அதிர்ந்து போனது. தாவூத் தனது பள்ளிப்பருவத்தில் இருந்தே பல்வேறு திருட்டு சம்பவங்களை செய்து வந்தது தெரிய வந்தது.

கிராப்ஃபோர்டு மார்கெட்டில் காலை முதல் மாலை வரை நன்றாக வியாபாரம் நடக்கும் கடைகளை கவனித்து வந்தது ஒரு குழு. அந்தக்குழுவில் அனைவருமே  14 வயதுக்கு உட்பட்டவர்கள். மார்க்கெட்டை அடுத்துள்ள சந்துகளில் பகல் பொழுதில் கிரிக்கெட் விளையாடி வந்தனர். அதில் தாவூத்தும் ஒருவன். தாவூத் தான் அந்தக் குருப்பின் தலைவன். கிரிக்கெட் பேட், பந்து உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி கொடுப்பான். அதனால் தாவுத் அந்தக் குழுவின் பிரதான தலைவன்.

dawood2-01.jpg

பலசரக்கு கடை வைத்திருந்த கடை முதலாளி, அன்று வசூலான 2,500 ரூபாய் பணத்தை ஒரு பையில் பத்திரப்படுத்திக்கொண்டு, மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். திடீரென்று அவரை மடக்கிய நான்கு நபர்கள், அவரை தாக்கிவிட்டு அவரின் பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். இரவு நேரம் என்பதால்  தாக்கியவர்கள் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று போலீஸ்காரர்களிடம் விசாரணையில் சொன்னார்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் இன்னொரு வியாபாரியிடம் 5,000 ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு சென்றனர். போலீஸ் இந்த முறை விழித்துக்கொண்டு மார்க்கெட்டில் மூட்டை தூக்குபவர்கள், கூலி தொழிலாளர்கள் என்று பல்வேறு நபர்களை விசாரித்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு மாதம் கழித்து மீண்டும் இதேபோல திருட்டு. இந்த முறை மார்க்கெட் வியாபார சங்கத்தலைவரிடம் 10,000 ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டது. தொடர் வழிப்பறியால் மார்க்கெட் வியாபாரிகள் பெரும் பயத்தில் இருந்தனர். சங்கத்தின் செல்வாக்கை வைத்து, போலீஸ் உயர் அதிகாரிகளை பார்த்து தங்கள் குமுறல்களை கொட்டித்தீர்த்தனர். உடனடியாக சிறப்பு ரோந்துப்படை அமைக்கப்பட்டு, இரவு நேரம் கண்காணிக்கப்பட்டது. தொடர் வழிப்பறி சற்று குறைந்தது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வங்கிக் கொள்ளையை பற்றி விசாரிக்கும்பொழுதுதான் தெரிந்தது, மார்க்கெட்டில் நடந்த வழிப்பறி எல்லாமே தாவூத்தும், அவனது நண்பர்களும் சேர்ந்து செய்தது என்று. இந்த உண்மையை தாவூத்தின் கூட்டாளி ஒருவன் சொன்னபோது போலீஸ் அதிர்ந்து போய் விட்டது. பல்வேறு சமயங்களில் இரவு நேரங்களில் தாவூத், இரவு ரோந்து போலீஸ்காரர்களிடம் சிக்கும் பொழுதெல்லாம் தனது தந்தை போலீஸ்காரர் என்று சொல்லிவிட்டு தப்பிவிடுவதும் தெரிய வந்தது. பல்வேறு போலீஸ்காரர்கள் நடந்த சம்பவங்களை ஞாபகப்படுத்தி உண்மை என்று நம்பினர்.

தாவூத் தாதா ஆன கதை

வேலூரில் இருந்து சென்னை சென்று குடிபுகுந்த முதலியார் குடும்ப வாரிசான வரதராஜன், தனது எட்டு வயதில் சென்னை போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தார்.  அவரது குடும்பமும், வறுமை காரணமாக மும்பைக்கு குடி பெயர்ந்து, அங்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடையை வைத்து வாழ்ந்து வந்தது. படிப்படியாக பல்வேறு நட்புகள் மூலம் வரதராஜ முதலியாரும் மும்பையில் கடத்தல் தொழிலுக்கு வந்தார். மஸ்தான் குரூப்பிற்கும், வரதராஜ முதலியார் குரூப்பிற்கும் இடையே மும்பையில் பெரும் போட்டி நிலவி வந்தது. வரதராஜ முதலியாருக்கு, மும்பை தாராவியில் குடியிருந்த உழைக்கும் தமிழ் மக்களிடம் நல்ல பெயர் இருந்து வந்தது. கடத்தல் தொழிலில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியை மக்களுக்காக பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்தார். அதனால் அவரை ஹீரோ போல பார்த்தனர் தாராவி பகுதி மக்கள்.

மக்களின் செல்வாக்கு இருந்ததால் மும்பையில் உள்ள துறைமுகம் முதல் டாமன் துறைமுகம் வரை கடல்வழிபாதைகளை நன்கு அறிந்து வைத்து இருந்தார் வரதராஜன். அதனால் டாமனில் பெரும் கடத்தல் தொழில் செய்து வந்த சுகுர் நாராயண பசிரா என்கிற குஜராத்திக்கு வரதராஜன், பெரும் தலைவலியை உருவெடுத்தார். வரதராஜ முதலியாரை மடக்க நினைத்த சுகுர் நாராயணன், மஸ்தானிடம் நல்ல தொடர்பை வைத்துக்கொண்டார். அதோடு இல்லாமல் இருவரும் தொழில் பார்ட்டனர் ஆனார்கள். இதனால் மும்பையில் அடிக்கடி அடிதடி, பல்வேறு கொலைகள் என்று நடந்து வந்தன. இந்த நேரத்தில் மஸ்தான் குரூப்பில் இருந்து வெளியான தாவூத், தனியாக கடத்தல் தொழில் செய்ய ஆரம்பித்தான்.

பலியான பத்திரிகையாளர்

1970-80களில் மும்பை, கடத்தல் தொழிலின் மிகப்பெரிய ராஜ்யமாக இருந்து வந்தது. உலக நாடுகள் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்துதான் தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. மும்பையில் இயங்கும் இன்னொரு இரவு உலகத்தை வெளியே வெளிச்சம் போட்டுக் காட்ட பல்வேறு பத்திரிகைகள் தயங்கின. உயிர் பயம் இருந்ததால் தயங்கினர், பல்வேறு இதழின் ஆசிரியர்கள். முகமது இக்பால் நாடிக் என்கிற 26 வயது பத்திரிகையாளர், 1970களின் தொடக்கத்தில் சொந்தமாக பத்திரிகை வைத்து நடத்தினார். 'தி கான்பிடன்ட்' என்கிற பெயரில் உருது மொழியில், உள்ளுரில் பத்திரிகை நடத்தி வந்தார். கிரைம் ரிப்போர்ட் செய்வதில் எக்ஸ்பர்ட் ஆன முகமதுவின் ரிப்போர்ட் மும்பையை உலுக்கியது.

'மும்பை கடல்பகுதிகள் அனைத்தும் கடத்தல் தொழில்களின் சுரங்கமாக இருக்கிறது. இதற்கு பல்வேறு துறை அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள். இரவில் கடல் கண்காணிப்பில் இருக்க வேண்டிய அதிகாரிகள் சொகுசு ஹோட்டல்களில், பெண்களுடன் இரவை கழிக்கின்றனர்' என்று மும்பையில் நடக்கும் இரவு சம்பவங்களை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினார். இதனால் அரசு உடனடியாக இரண்டு, மூன்று என்கவுன்டர்களை நடத்தியது. அதில் தாவூத்தின் குரூப்பில் உள்ள ஒருவன் பலியானான். இருந்தாலும், மும்பையில் கடத்தல் தொழில் நிற்பதாக இல்லை. தனியாக இருந்தவர்கள் மாறாக ஒன்று சேர்ந்தனர்.

dawood2-02%281%29.jpgமுகமதுவின் எழுத்துக்கள் பல்வேறு பத்திரிகையாளர்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. அதற்கு பிறகு பல்வேறு பத்திரிகைகள் எழுதித்தள்ளின. இதனால் கடத்தல் தொழில் செய்யும் தலைகள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆறு மாதம் கழித்து வெளியே ஜாமீனில் வந்தார்கள் கடத்தல் டான்கள்.

வீட்டில் தனது மனைவியுடன் இருந்த முகமதுவை,  'தாவூத் அழைக்கிறார்' என்று தாவூத்தின் ஆட்கள் நள்ளிரவில் வந்து அழைத்தனர்.

'இரவு நேரம் என்பதால் இப்பொழுது வரமுடியாது, காலை வருகிறேன்' என்று சொன்னார் முகமது. 'உன் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் தாவூத். நீ இப்பொழுது வரவில்லை என்றால், அவர் இங்கு வருவார். உனக்கு புது மனைவி இருக்கிறார். அவருக்கு வயது குறைவு, அழகு தாராளம்' என்று மிரட்டினார்கள்.

வேறு வழியின்றி அவர்களுடன் சென்றார் முகமது. முகமதுவின் காரில் அவர் காரை ஓட்டிச்செல்ல, அவருடன் இரண்டு நபர்கள் ஏறிக்கொண்டனர். என்ன நடக்கப்போகிறது என்கிற விபரம் ஏதும் தெரியாமல் இருந்தார் முகமதுவின் 22 வயதான மனைவி சஹீதா.

கார், நகர்ப்புறத்தின் ஒரு பெட்ரோல் பங்கில் நின்றது. அங்கிருந்து இறங்கி தப்பி ஓட நினைத்த முகமது இக்பாலை தாவூத்தின் நண்பர்கள் ஆயூப்பும், சையதுவும் ஓங்கி எட்டி உதைத்தனர். அதை சற்றும் எதிர்பாராத முகமது கீழே விழவும், மாறி மாறி கொடுமையான ஆயுதங்களால் தாக்கினார்கள். ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து போனார் முகமது.

'இந்த கைதானே எழுதுகிறது...?' என்று கேட்டபடியே முகமதுவின் வலது கையை பிடித்து கரும்பை உடைப்பது போல உடைத்தான் சையது. 'உன்னால் எங்களுக்கு தொழில் நஷ்டம், நண்பர்கள் போலீசின் துப்பாக்கிக்கு பலி..!' என்று சொல்லிக்கொண்டே முகத்தில் தனது ஷூ காலால் மிதித்தான் ஆயூப்.

மிருகம் வேட்டையாடுவது போல வேட்டையாடினார்கள் முகமதுவை. தட்டிக்கேட்கவும், தடுக்கவும் யாருமில்லை. உடம்பெல்லாம் ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தததும் மயங்கி சரிந்தார் முகமது. அதோடு  இறந்து விட்டான் என்று நினைத்து, மாஹிம் பகுதியை ஒட்டியுள்ள ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் காரில் வைத்து தூக்கி வீசி எறிந்து விட்டு, முகமதுவின் முகத்தில் சிறுநீரை கழித்து விட்டு சென்றனர். நள்ளிரவில் நடந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் போனது. மறுநாள் நண்பகலில் முகமது கண்விழித்த பொழுது உடம்பெல்லாம் வலி. அதோடு ஈயும் எறும்பும் ஒட்டிக்கொண்டு தொந்தரவு செய்வதை கூட தடுக்க முடியாத நிலைமையில் இருந்தார். அந்த நேரம் பார்த்து அந்தப்பக்கம் வந்த வழிப்போக்கன்  ஒருவன், முகமதுவை பார்த்துவிட்டு அந்தப்பகுதியில் இருந்த ஒரு காவலரை அழைத்து வந்தான்.

உடனடியாக முகமதுவை மீட்டு ஜெஜெ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நடந்த சம்பவங்களை போலீஸ் அதிகாரிகளிடம் வாக்கு மூலமாக சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார் முகமது இக்பால்.

இந்த சம்பவம் மும்பையை உலுக்கியது. பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சோகமும், கோபமும் உண்டானது. இந்த சம்பவத்தை சாதாரணமாக விடக்கூடாது என்று சம்பவத்துக்கு காரணமான தாவூத்தினை கட்டம் கட்டி எழுதினார்கள். இந்த சம்பவத்தினால் இந்தியா முழுவதும் பிரபலமானான் தாவூத்.

அடுத்து நடந்தது என்ன?

தோட்டாக்கள் பாயும்...

http://www.vikatan.com/news/article.php?aid=52836

  • தொடங்கியவர்

போதை ஊசி போட்டால் ஓநாயாக மாறுவான்! (தாதா தாவூத் -3)

 

Dawood%20head03.jpg

த்திரிகையாளர்  இக்பால் கொலையை அடுத்து போலீஸ் வட்டாரம் தாவூத் இப்ராஹிமின் தலைக்கு குறி வைக்கிறது. தாவூத்தின் கூட்டாளிகள் ஆயூப், சையது உள்பட அவனுடன் இருந்த எல்லோரும் தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து, பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆடுன காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பதால் எங்கு சென்றாலும் வழக்கம் போல அவர்களின் கடத்தல் தொழில்களை விடுவதாக இல்லை.

dawood3-03%281%29.jpgபகல் பொழுதுகளில் நன்றாக குடிப்பது, சீட்டு விளையாடுவது என அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வந்ததனர். பகலெல்லாம் அலுவலகம், வேலை என்று உழைத்து களைத்துப்போய் தூங்கும் சாமானியர்கள் போல இல்லாமல் இரவில்தான் தாவூத் அண்ட் கோவிற்கு வேலையே ஆரம்பிக்கும். கடத்தல் தொழில் செய்யும் பொழுது ஒரு சில நேர்மையான அதிகாரிகள்  கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களால் பல லட்சங்கள் மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களை மடக்கவே புதிய திட்டங்களை தீட்டினான் தாவூத்.

மும்பை 1970களில் பெரும் நகரமாக இருந்தது. அங்கு துறைமுகம் இருந்ததால் அதனை மையமாக வைத்து வடக்கு மும்பை, தெற்கு மும்பை என்று நான்கிற்கும் மேற்பட்ட பகுதிகளாக மும்பையை கூறு போட்டு வைத்து அவர்களுக்கு ஏதுவான தொழில்களை செய்து வந்தனர் மும்பையில் இருந்த ஃமாபியாக்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு டான் இருந்தான். சிறு, சிறு குழுக்களாக இயங்கி வந்தனர். அவர்களுக்குள் கடும் தொழில் போட்டிகள் இருந்து வந்ததால் சில சமயங்களில் அரசு அதிகாரிகளுக்கு போட்டு கொடுப்பதும் நடப்பதுண்டு. அது அவர்களுக்குள் பெரும் பகையை உண்டாக்கி, மார்க்கெட் போன்ற பொதுவான இடங்களில் அவர்கள் சந்திக்க நேரும் பொழுது மோதிக்கொள்வது உண்டு. மோதினால் எப்படியும் குறைந்த பட்சம் ஒரு கொலையாவது விழும். பொது மக்களுக்கு இந்த மாதிரி சம்பவங்களால் பெரும் அச்சமும், பயமும் உண்டானது. ஆனால் போலீஸ்காரர்களுக்கு இது போன்ற சம்பவம் நடந்தது என்றால் கொண்டாட்டம்தான். இது போன்ற செயல்களில் ரவுடிகள் அழிகிறார்கள் என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

மும்பையில் அன்று முதல் இன்று வரை சாராயம் பிசினஸ் கொடிகட்டி பறப்பது யதார்த்தமான ஒன்று. அன்றைய மகராஷ்ட்ரா அரசு மதுவை தடை செய்து இருந்தது. அதனால் மதுவிற்கு கடும் கிராக்கி இருந்து வந்தது. வடக்கு மும்பையை ஒட்டிய பகுதிகளில் சாராயத்தை காய்ச்சி, அதனை லாரி டியூப்களில் கடத்தி வருவது வழக்கம். சாராயம் சின்ன விஷயம் என்றாலும், அதன் மூலம்தான் அதிகபட்சமான நேரடி வருமானம் வந்தது மும்பை மாஃபியாக்களுக்கு. இதனால், மும்பையில் கள்ளச் சாராயம் முதல் உயர் ரக மது வரை அவர்களின் தகுதிக்கு ஏற்ப கடத்தி அதை தொழில் செய்து வந்தனர். இதுபோன்ற தொழிலில் ஆரம்பித்து பிறகு எல்லா முன்னணி கள்ளக்கடத்தல் தொழிலையும் செய்து வந்தவன்  பாசு தாதா என்பவன். இவனிடம் வேலை பார்த்து இவனுக்கு எல்லாமாக இருந்து வந்தவன் காலித் பயில்வான். பல்வேறு வழக்குகள் பிரச்னையில் பாசு தாதா சிக்கிக்கொண்டதால், அவனுக்குப் பிறகு காலித் பயில்வான் தனியாக தொழில் செய்து வளர்ந்து வந்தான். அவனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஈடான வெள்ளிக்கட்டிகள் ஒரு பகுதியில் இருந்தது. அதனை வெளியே எடுக்க முடியாமல் திணறி வந்தான். அப்பொழுது தாவூத்தின் உதவியை நாடியதும் அவனுக்கு தாவூத் உதவி செய்தான்.

நடுக்கடலில் வெள்ளிகட்டிகள் கொண்ட சரக்கு கப்பல், கஸ்டம்ஸ் கண்ணில் படாமல் மும்பைக்கு வர வேண்டும். சிக்கினால் தொழில் உள்பட யார் யார் அதன் பின்னணியில் இயங்குகிறார்கள் என்பதோடு இல்லாமல், பல்வேறு நிலுவை வழக்குகளும் சிக்குபவர்கள் மீது விழும் என்பது தெரிந்தும் தாவூத் துணிந்து செயலில் இறங்கினான். அதற்காக அவன் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. கஸ்டம்ஸ் குடியிருப்பில் புகுந்த தாவூத்தின் ஆட்கள், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் கஸ்டம்ஸ் உயர் அதிகாரி ஒருவரின் ஆசை மகளை தூக்கிக்கொண்டு போனார்கள். சினிமா பாணியில் நடந்தது போல இருக்கு என்று நினைக்கலாம். இங்கு நடந்த உண்மை சம்பவங்கள்தான் சினிமாவில் பின்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன.

dawood3-01.jpg

பின்பு அந்த வெள்ளிக்கட்டிகள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டன. அந்த சம்பவத்திற்க்கு பிறகு போலீஸ், தாவூத்தை சல்லடை போட்டு தேடியது. சிக்கவில்லை. பத்திரிகையாளர் இக்பால் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு வழக்குகளில் தாவூத் சிக்கினால்தான் பல்வேறு சம்பவங்களை வெளியே கொண்டு வரமுடியும் என்பதால் தாவூத்தை பிடிக்க முடியாமல் திணறி வந்தது போலீஸ். அதற்கு பிறகு தாவூத்திற்கு பல்வேறு வழிகளில் உதவினான் காலித்.

தாவூத்தின் அடாவடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தாவூத்திற்கு போதை ஊசி போடும் பழக்கம் இருந்தது. பல்வேறு சமயங்களில் போதை ஊசியை போட்டால் அவன் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. ஓநாய் போன்று மிகக் கொடூரமாக நடந்து கொள்வான் தாவூத். ஒரு முறை போதை ஊசி பயன்படுத்திவிட்டு காலித்துக்கு எதிரியாக இருந்த, வேறு முகாமை சேர்ந்த ஒருவனை போட்டுத் தள்ள திட்டம் தீட்டினான். திட்டம் தீட்டியதுடன் அதற்காக ஐந்து நிமிடம் கூட தாமதிக்காமல் அவனது இருப்பிடம் நோக்கி சென்றான் தாவூத். அங்கு அவன் இல்லை என்பதால் அவன் வழக்கமாக குடிக்க செல்லும் பார் ஒன்றிக்கு திபு திபுவென்று ஆட்களுடன் நுழைந்த தாவூத்தும், அவனது ஆட்களும்  அந்த பாரை நாசம் செய்கிறார்கள். எதிரிகளும் பயங்கரமாக மோதிக்கொண்டார்கள். துப்பாக்கி வெடிக்கிறது. தாவூத் ஆட்களில் ஒருவன் கொல்லப்படுகிறான். ஆனால், யாரை ஒழிக்க வேண்டும் என்று கிளம்பி போனார்களோ அவனை மட்டும் இல்லாமல், அவனுக்காக வேலை பார்த்த ஐந்து நபர்கள் உள்பட அனைவரையும் கொடூரமாக கொலை செய்கிறார்கள் ஒரே இரவில். தனது நண்பனுக்கு எதிரியாக இருந்த சாம்ராஜ்யத்தை ஒழித்து விட்ட சந்தோஷத்தில் தாவூத் சென்றான். மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும், 'கடத்தல் மாஃபியாகளுக்குள் மோதல்; ஆறுபேர் பலி!'  என்கிற செய்தி வந்தது. யார் இந்த சம்பவத்தை செய்தது என்று ஒட்டு மொத்த மும்பையும் குழம்பியது.

ஒரு வாரம் கழித்துதான் நடந்த கொலைக்கு காரணம் தாவூத் என்று தெரிய வந்தது. அதோடு ஒட்டு மொத்த மும்பையில் இருக்கும் மாபியாக்களுக்கு தாவூத் பற்றி தெரிய வருகிறது. தாவூத்தின் தலைக்கு போலீஸ் குறி வைத்து துரத்தியது. இன்னொரு பக்கம் தாவூத் தனக்கு வேலை செய்ய வேண்டும் என்று குஜராத், மாகி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு முக்கியமான தாதாக்கள் அழைப்பு விடுத்தனர். தாவூத் யார் பக்கமும் போகவில்லை. தாவூத்துடன் நட்பு வைத்து ஒருநாள் விருந்து உண்டாலும், தனக்கு பயன்படும் என்று மும்பையை சுற்றி வந்தனர் பல்வேறு கடத்தல் மன்னர்கள். சிலர் தாவூத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அவனை அவனுடைய நண்பனை வைத்து கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.

dawood3-02.jpg

இதனால் தாவூத்திற்கு அடைக்கலம் கொடுத்து வந்தவர்களும், தம்மால்தான் தாவூத் வளர்ந்தான் என்று பேசத் தொடங்கினர். அதனால் காலித் பயில்வான் உள்பட பல்வேறு நபர்களும் தாவூத்தை பழி வாங்க காத்திருந்தனர். தாவூத், தனது தலை தப்பிக்க வேண்டும் என்றால் உடன் இருக்கும் தலையை பலி கொடுக்க அஞ்சமாட்டான். பல்வேறு சண்டைகளில் தனது குருப்பில் இறந்தவர்களுக்காக பெரியதாக வருந்தியதில்லை என்ற முனகல்கள் தாவூத்தின் குரூப்பில் இருந்து வந்தது.

இக்பால் கொலை வழக்கில் பல்வேறு முக்கியமான புள்ளிகளுக்கும் தொடர்பு இருந்தது. இக்பால் கடத்தல் தொழிலின் ஆணி வேர் யார் என்பதை எழுதி இருந்தார். அதனால் பல்வேறு தலைகள் அந்தக் கொலையில் இருந்து தப்பிக்க, தாவூத் கூட்டாளியான ஆயூப்பை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள்.

அவர்கள் குறித்த தேதியில் கொடூரமாக நடுத்தெருவில் கொலை செய்யப்பட்டான். கைகள், உடம்பு என்று உடம்பில் பல்வேறு இடங்களில் கத்தியால் கிழித்து குதறி இருந்தார்கள். நடுத்தெருவில்,  'காப்பாற்றுங்கள்...!' என்று கத்திக்கொண்டு, ஓட ஓட ரத்தம் தெறிக்கும் அளவிற்கு கொலை செய்யப்பட்டான் ஆயூப்.

முதல் முறையாக தாவூத்தின் ஆள் ஒருவன் பயங்கரமாக கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் தாவூத்தை உலுக்கியதா?

அடுத்து நடந்தது என்ன?

http://www.vikatan.com/news/article.php?aid=53159

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மாஹி கடலில் உடல், வீட்டு வாசலில் தலை; தாதா தாவூத் தொடர்-4

 

dhavooth%204%20logo.jpg

மும்பையில் யார் ஆதிக்கம் செலுத்துவது,யார் அதிகாரம் செய்வது என்கிற அதிகார போட்டி நிலவி வந்தது. தாதாக்கள் தங்களுக்கு என்று தனியாக ஒரு மேனரிசம் வைத்துக்கொண்டு இருந்தனர். எல்லா தாதாக்களும் தங்களுக்கு என்று உடைகள், ஷூ, கூலிங் கண்ணாடி, சிகரெட் என்று அவர்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் மிக விலையுர்ந்த பொருட்களாக இருந்தது. அவர்கள் அதை பெருமையாக தனித்துவமாக கருதினார்கள்.

ஆனால் மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார்களுக்கு தாதாக்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தின் மணம், ஷீ தடம், சிகரெட் துண்டுகள் என்று நுகர்பவவை, கிடைப்பவையை வைத்து மும்பையில் நடக்கும் மோசமான கிரைம்களை எந்த டீம் செய்தார்கள் என்று ஸ்மெல் பண்ண வசதியாக இருந்தது.

dhavooth%204%20550%2011.jpg

தாவூத்தின் நண்பன் கொலை வழக்கிலும் அப்படிதான் கண்டுபிடித்தனர். எந்த குரூப் செய்தது என்று கண்டுபிடித்தனர். ஆனால் யார், யார் செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். தாவூத் டீமில்  யார் செய்தார்கள் என்று அவர்களும் அவர்கள் பங்கிற்கு தேடினார்கள். துப்பு கிடைக்கவில்லை. ஆனால் தாவூத்தின் தொழிலில் மாற்றம் இல்லை. அளவிற்கு அதிகமாக பணமும் அதிகாரமும் குவிந்தது. தாவூத்திற்க்கு இப்பொழுது போலீஸ் வட்டாரங்களில் உளவு சொல்ல ஆட்கள் இருந்தார்கள்.

அவர்கள் சொல்லும் செய்தியைப் பொறுத்து தாவூத் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் கட்டுக்களை அள்ளி வீசினான். அதனால் பல்வேறு அதிகாரிகள் அவனுக்கு நெருக்கமாக வலம் வந்தனர்.

சில மாதங்கள் ஓடின. தாவூத் நண்பனை நான்தான் கொலை செய்தேன் என்று பாட்லா என்பவன் உள்ளூர் சாராய கடைகளில் சொல்லி மிரட்டி வந்தான். அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு எல்லோரையும் கொடூரமாக தாக்கி வந்தான். யாரிடமும் இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு மேல் பேசமாட்டான். கத்தியை காட்டி மிரட்டுவதும் அடிப்பது, கீழே தள்ளி கழுத்தில் மிதிப்பது போன்ற கொடூரமான செயல்களை செய்து வந்தான். அவனைப்பற்றி தாவூத்திற்கு தெரிய வந்ததும் தாவூத்தும் அவனது ஆட்களும் வழக்கமாக அவன் வரும் கடைக்கு சென்றார்கள். குடித்து விட்டு பணம் கொடுக்காமல் பல முறை சென்றுவிடுவான். அதனால் அவனிடம் எந்த சர்வரும் ஆர்டர் எடுக்க வரமாட்டார்கள்.          

dhavooth%204%20550%2022.jpg

பாட்லா வந்ததும் அவனது நடவடிக்கைகளை பார்த்து எரிச்சலான தாவூத்தின் ஆட்கள் அவனை பாட்டிலால் தாக்கினார்கள். நிலை குலைந்து போன பாட்லா அப்படியே சரிந்து விழுந்தான். அதோடு விடாமல் அவன் கழுத்தில் கத்தியை வைத்து முகத்தில் கத்தியால் கோடு போட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவனை கத்தியால் கிழித்துக்கொண்டு இருந்தனர். இருந்தாலும் பாட்லா அசரவில்லை.

இறுதியாக அவனது வலது கையில் உள்ள விரல்கள் ஒவ்வொன்றையும் கத்தியால் நறுக்கினார்கள். இந்த காட்சியைக் கண்டு பாரில் குடிக்க வந்தவர்கள் சிதறி ஓடினர். ஒரு சிலர் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டு நடந்தவற்றை பார்த்துக்கொண்டு இருந்தனர். வந்திருப்பது தாவூத் இப்ராஹீம் என்பதை தெரியாத சிலர் பாரில் கலாட்டா என்று காவல்துறைக்கு போன் செய்தார்கள்.

போலீஸ் வந்து சேர்வதற்குள் பாட்லாவின் கையில் உள்ள அனைத்து விரல்களும் துண்டாக நறுக்கப்பட்டு தரையில் சிதறிக்கிடந்தன. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி நடுத்தெருவில் கிடந்தான் பாட்லா. என்ன காரணத்திற்காக பாட்லாவை கொலை செய்யாமல் விட்டனர் என்று காவல்துறைக்கு புரியவில்லை. போலீஸ் விசாரணையில் மோட்டிவ் கொலைக்கான காரணத்தை சொல்லி பாட்லாவை சிறையில் அடைத்தனர்.

மும்பை கடத்தலின் பிதாமகன் வீழ்ந்த கதை  

dhavooth%204%20350%201.jpgமும்பையில் அடிக்கடி இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், தங்கம் கடத்தல் உள்பட பல்வேறு சம்பவங்களால்  கிரைம் ரேட் அதிகமாகி கொண்டு இருந்து. இதற்காக பல்வேறு தனிப்படை போட்டு வேலை செய்தது போலீஸ். ஆனாலும் கடத்தல், கொலை உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன. மும்பையின் தாதா கலாசாரத்தை, கடத்தல் தொழிலை யார் கொண்டு வந்தது என்று ‘ரா’ அமைப்பு களத்தில் இறங்கி விசாரிக்க ஆரம்பித்து. அதில் மூத்த முன்னோடியாக கரீம் லாலா என்பவர் வந்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பிழைக்க வந்த குடும்பம் கரீம் லாலாவின் குடும்பம். ஆப்கானிஸ்தானில் இருந்து சில ஆயிரக்கணக்கான மக்கள் மொத்தமாக அவர்கள் நாட்டை விட்டு மும்பைக்கு வந்தனர். வந்தவர்கள் மும்பையில் மார்கெட், துறைமுகம், உள்பட பல்வேறு இடங்களில் கூலி வேலைகளை செய்துவந்தனர்.

அவர்களைப்போலதான் கரீம் லாலாவின் குடும்பமும் வந்தது. பள்ளிப்படிப்பை தாண்டாத கரீம் லாலா தனது பதினெட்டு வயதில் கள்ளசாராயம் கடத்த ஆரம்பித்தார். அதன்பிறகு தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்களை கடத்தி வந்ததால் செல்வாக்கு உயர்ந்தது. கரீம் லாலாவிடம் மிகவும் சொற்பமான தொகைக்கு வேலை செய்ய நிறைய ஆப்கானிஸ்தான் நபர்கள் வேலைக்கு வந்தனர். இருந்தாலும் மும்பையில் நடந்து வரும் நடைமுறை உள்ளூர் அரசியலை சமாளித்து வேலை பார்க்க உள்ளூர் ஆட்கள் தேவைப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு நபர்கள் கரீம் லாலாவிற்கு வேலை செய்ய ஆரம்பித்தனர்.

இது போன்ற ஒரு தருணத்தில் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு இருந்த இளைஞன் ஹாஜி மஸ்தான் என்பவரை கரீம் லாலாவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர். பின்னாளில் அவர்தான் பாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளாராக வலம் வந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த ஹாஜி மஸ்தான் சில ஆண்டுகள் கழித்து கரீம் லாலாவிடம் இருந்து பிரிந்து வந்து கடத்தல் தொழில் செய்ய ஆரம்பித்தார்.

இருபது வயதில் தொடங்கிய ஹாஜி மஸ்தானின் கடத்தல் பயணம் மும்பையில் யார் ஆட்சியை பிடிப்பது, யார் பாலிவுட்டில் சினிமா ஸ்டாராக நீடிப்பது, கடத்தல் உள்பட பல்வேறு தொழில்களில் அவர்களுக்கு என்று தனியாக தொழில் ஏரியாக்கள் பிரித்து கொடுப்பது உள்பட பல்வேறு டான் வேலைகளை செய்து வந்தார்.

dhavooth%204%20550%202.jpg

அரசியல்பலமும், சினிமாவும் பலமும் ஒன்றாக இருந்ததால் மும்பையின் அசுர சக்தியாக வளம் வந்தார் ஹாஜி மஸ்தான். எப்பொழுதும் வாயில் வெளிநாட்டு சிகரெட், கோட், சூட், தலையில் ஸ்டைலான குல்லா, வெள்ளை நிற பென்ஸ் கார் என்று ஒரு 'டானு'க்குரிய கனக் கச்சிதமான தோற்றத்தில் வலம் வருவார் ஹாஜி மஸ்தான். கரீம் லாவிற்கும் ஹாஜி மஸ்தானுக்கும் இடையில் தொழில் போட்டி இருந்து வந்தது. யார் அதிகாரம் செலுத்துவது என்கிற அதிகார போட்டியில் இவர்கள் அணிகளும் பார்க்கும் இடங்களெல்லாம் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொள்வார்கள்.

இதனால் பொது மக்களுக்கு பெரும் அளவில் பாதிப்பு இருந்தது. இவர்கள் போடும் சண்டையில் பல அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். அதோடு இல்லாமல் மார்கெட், துறைமுகம், நடுவீதி என்று எல்லா இடங்களிலும் சண்டை துப்பாக்கி, கொடூர ஆயுதம் உள்பட பல்வேறு பொருட்களால் தாக்கி கொள்வதால் ஆட்களோடு நிறைய பொருட்களும் சேதாரம் ஆனது.

dhavooth%204%20550%203%281%29.jpg

இருவரையும் அடக்க  போலீஸ் பல்வேறு யுக்திகளை கையாண்டது. இருவருக்கும் பொதுவான ஆட்களை வைத்து சமாதான பேச்சு வார்த்தையை நடத்தியது. பலனில்லை அடுத்த இரண்டு நாட்களில் கரீம் லாலாவின் ஆள் ஒருவனை ஹாஜி மஸ்தானின் ஆட்கள் தலையை வெட்டி எடுத்து வந்து கரீம் லாலாவின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு உடலை மாஹி கடல் பகுதியில் தூக்கி போட்டு விட்டு சென்றனர். இருவருக்குமான ஹேங் வார் அப்போது உச்சகட்டத்தில் இருந்தது.

மும்பையில் யார் புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் ஹாஜி மஸ்தான், கரீம் லாலாவின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்கிற நிலைமை வந்தது. இதனால் இந்திய அரசு பயங்கரமான நெருக்கடியை சந்தித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த அரசு ஒரு முடிவு எடுத்தது. அந்த முடிவுதான் இருவருக்கும் 'தி டான்' என்கிற பெயரும், அவர்களின் தொழில் உள்பட எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக சரிய காரணமாக இருந்தது.

அது என்ன முடிவு?

http://www.vikatan.com/news/article.php?aid=53435

  • தொடங்கியவர்

பிணம் கடத்தி வந்த வைரக்கற்கள்! (தாதா தாவூத் தொடர்-5)

 

dhawood%205%20logo.jpg 

ன்னை எப்போதும் மற்றவர்களை விட அதிக புத்திசாலியாகவும் , திறமையானவனாகவும் காட்டிக்கொள்வதில் விருப்பம் கொண்டவன் தாவூத். அதை பல்வேறு சம்பவங்களில் உணர்த்தியும் இருக்கிறான். பல சமயங்களில் அவனது நடவடிக்கைகள் எல்லாம் கை தேர்ந்த அரசியல்வாதிபோல இருக்கும். யாராலும் செய்ய முடியாது என்று தவிர்க்கப்பட்ட 'விஷயத்தை' கொஞ்சம் கூட உயிர் பயமின்றி சவாலாக செய்து முடிப்பது தாவூத்துக்கு பிடிக்கும்.

சிங்கப்பூர் தேசம் வளர்ந்து வந்த நேரம். எல்லோரின் பார்வையும் சிங்கப்பூர் பக்கம் இருந்து வந்தது.   சுற்றுலா உள்பட பல்வேறு தொழில்கள் மூலம் அந்த நாட்டின் வருமானம் கொட்டியது. இந்தியாவில் இருந்து பெரும்பாலான பணக்கார தொழில் அதிபர்கள் ஓய்வுக்காக சிங்கப்பூர் சென்று வந்தனர். மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ஒருவர்,  சிங்கப்பூருக்கு டூர் செல்வதாக சொல்லிவிட்டு, அங்கு வைத்து தனது பிசினஸ்களை செய்து வந்தார்.

kongu%207%20350%281%29.jpgகோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை வரி கட்டாமல் இந்தியாவுக்கு  வாங்கியும் வந்தார். லண்டனைச் சேர்ந்த பெரும் புள்ளிகளுக்கு சிங்கப்பூரில் வைத்து வரி கட்டாமல் வைரங்களை விற்றும் வந்தார். அடிக்கடி வந்து போனதால், 'இவர் சுற்றுலாவுக்கு வரவில்லை; ஏதோ செய்கிறார்' என்று இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகள், அவர் மீது சந்தேகப் பார்வையை செலுத்தினர்.

அதற்கு ஏற்றாற்போல மும்பையில் இவரது நடவடிக்கைகள் இருந்தன. மும்பையின் டான்களான கரீம் லாலா மற்றும் ஹாஜி மஸ்தான் ஆகிய இருவருக்கும் நெருக்கமாக இருந்தார். இருவருக்கும் அன்பளிப்புகளை அள்ளி வழங்கினார். தனது தொழிலில் எந்த வித பின்னடைவும் வந்துவிடக்கூடாது என்று மும்பையின் மிகப்பெரிய தலைகளுக்கு தானாக முன்வந்து சலுகைகள் செய்து வந்தார்.

அதனால் மார்வாடி சமூகத்தை சேர்ந்த அந்த வைர வியாபாரியின் உண்மையான பெயர் மறைக்கப்பட்டு,  லால் சேட் என்றால் மும்பையின் அனைத்து பெரும் புள்ளிகளுக்கும் தெரிந்து இருந்தது. இந்த விஷயம் மெல்ல மெல்ல போலீஸ், கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கும் தெரிந்து இருந்தது. யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார் வைர வியாபாரி. அரசுக்கு கட்ட வேண்டிய வரிப் பணத்தைக் கட்டாமல் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்து இருந்தார். வரி கட்ட வேண்டிய பணத்தில் ஒரு சிறிய தொகையை,  அந்தந்தத் துறையின் அதிகாரிகளுக்கு கொடுத்து வந்தார்.

அதனால் பல்வேறு அதிகாரிகளும் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். ஒரு சில நேர்மையான அதிகாரிகளும் இருந்து வந்ததால் அந்த வைர வியாபாரியை திட்டமிட்டு மடக்க காத்திருந்தனர்.

மிக விலையுயர்ந்த வைரக்கற்கள் அடங்கிய ஒரு பெட்டியை சிங்கப்பூரில் இருந்து இந்தியா கொண்டுவர வேண்டும். அந்த கற்களின் மதிப்பு அப்போதே இரண்டு கோடிகள். கஸ்டம்ஸ் அதிகாரிகள் தன்னை மடக்கப்போவதாக லால் சேட்டுக்குத் தகவல் வந்தது. சிங்கப்பூர் சென்றால் வழக்கமாக செல்லும் ஒரு ஹோட்டல் ஒன்று இருந்தது. அந்த ஹோட்டலில் மும்பையைச் சேர்ந்த ஒருவன் வேலை செய்து வந்தான். அவனின் உபசரிப்பில் கொஞ்ச நாளில் அவனையும் தன்னுடைய ஆளாக பயன்படுத்திக்கொண்டார் லால் சேட்.

dhawood%205%20550%201.jpg

அதனால் சிங்கப்பூரில் லாலுக்கு எல்லாமாக இருந்துவந்தான் மும்பைக்காரன். தன்னை இந்திய அதிகாரிகள் கைது செய்தால் எளிதாக வெளியே வந்து விடலாம், சிங்கப்பூர் அரசு கைது செய்தால் வெளியே வரமுடியாது. மரண தண்டனைகூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பயந்த லால், தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து நேராக கிளம்பி,  மும்பைக்காரன் அறையில் அந்த வைரக்கற்களை, அவனது கழிவறையில், அவனுக்கே தெரியாமல் ரகசியமாக வைத்துவிட்டு உடனடியாக இந்தியாவுக்கு ஃபிளைட் பிடித்தார்.

இந்தியாவில் லால் சேட்டை மடக்கி கடுமையாக சோதனைகள் செய்தார்கள். நடந்த எல்லா சோதனைகளிலும் எதுவும் கிடைக்கவில்லை. வெறும் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார் சேட். ஒரு மாத காலம் ஆகிவிட்டது. பண நெருக்கடியால் சேட் சிக்கி தவித்து நின்றார். வேறு வழியில்லாமல் பல்வேறு நபர்களின் உதவிகளை நாடினார்.

பல்வேறு நபர்கள் சிரமம் எடுத்தும், வைரக்கற்களை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை. கடைசியாக தாவூத்திடம் வந்தார். தாவூத் அதற்கு கைமாறாக பாதிக்குப் பாதி பங்கு கேட்டான். சேட்டும் ஒப்புக்கொண்டு எப்படியாவது வைரம் வந்தால் போதும் என்று தாவூதின் டீலுக்குத் தலையாட்டினான்ர்.

வைரத்தை சொன்னபடி சொன்ன தேதியில் லாலிடம் கொண்டுவந்து சேர்த்தான் தாவூத். மிரண்டு போனார் லால். என்ன செய்வது என்று தெரியாமல் தாவூத்துக்கு சலாம் அடித்து நன்றி கூறினார். எப்படி கொண்டு வந்தாய் என்று சேட் எத்தனையோ முறை கேட்டும், தாவூத் அதனைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. ஆனால் அந்த ரகசியம் தாவூதின் சகோதரருக்கும்,தாவூத்தின் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்து இருந்தது.

dhawood%205%20550%202.jpg

பயங்கரமான கண்காணிப்பு வளையத்தில் இருந்து வந்த லால் சேட்டின் வைரத்தை சிங்கப்பூரில் இருந்து மும்பைக்குக் கொண்டுவர பல்வேறு சிரமங்கள். கெடுபிடிகள் இருந்து வந்தன. அந்த நேரம் பார்த்து சிங்கப்பூரில் வேலை செய்துவந்த தாவூத்தின் கூட்டாளி ஒருவனின் உறவினர், விபத்து ஒன்றில் இறந்து விட,  இறந்தவனின் உடலை மும்பைக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து வந்தனர். இந்த விஷயம் தாவூத்துக்குத் தெரிய வந்ததும் அதனை வைத்து இரண்டு திட்டங்கள் தீட்டினான்.

இறந்தவரின் உடலை கொண்டுவர எல்லா ஏற்பாடுகளும் செய்துதருவதாக வாக்கு கொடுத்துவிட்டு, தனது கூட்டாளி  இஜாஜாஸ் என்பவனை உடனடியாக சிங்கப்பூர் அனுப்பினான். அங்கே வழக்கமாக செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, ஜெனெரல் மருத்துவமனையில் இருந்த பாடியை வாங்கினார்கள். அங்கிருந்து ஏர்போர்ட் வரும் வழியில் ஒரு சிலரின் உதவியோடு இறந்தவனின் உடலில் வைரக்கற்களை மறைத்து வைத்துவிட்டான் இஜாஜாஸ்.

மரத்திலால் ஆன சவப்பெட்டியை ரெடி செய்து அதனுள் பாடியை  வைத்து, சிங்கப்பூரில் இருந்த அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, பத்திரமாக இந்தியா செல்லும் ஃபிளைட்டில் ஏற்றிவிட்டனர்.

mask%20250%20.jpgஅதே சமயம் அங்கு பத்திரமாக வந்தாலும், இந்தியாவில் இருந்து தாவூத்தின் ஆட்களின் சிங்கப்பூர் பயணத்தின் உள்நோக்கம் பற்றி தெரிய முடியாமல் குழம்பி இருந்தனர். பார்சல் உள்பட இறந்த உடலினை பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவருக்கு லம்பாக ஒரு தொகையை கொடுத்து தாவூத்தின் ஆட்கள் சரிசெய்து வைத்து இருந்தனர். சிறிய அளவில் எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் வருகிறது. அதை கண்டுகொள்ளாமல் விடவேண்டும் என்று சொல்லி இருந்தனர்.

வைரம் வரும் கதையை மறைத்து இருந்தனர். சொன்னபடி தாவூத்தின் நண்பன் பிணத்தின் சவப்பெட்டிக்குள் ஒரு சில கடிகாரங்கள், ட்ரான்ஸ்சிஸ்டர்கள் என்று மறைத்து வைத்து கொண்டுவந்தான்.சோதனை செய்யும் இடம் வந்ததும் மேலோட்டமாக பார்த்த அதிகாரி கண்டுகொள்ளாமல் அனுப்பிவிட்டார்.

எல்லா சோதனைகளும் முடிந்து மும்பையில் இருந்து பிணம் நேராக நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. இடையில் இடைமறித்த தாவூத், வைரங்களை மட்டும் வாங்கிவிட்டு பிணத்தை அனுப்பிவிட்டான். இப்படிதான் தாவூத் யாரும் செய்ய முடியாத செயலை துணிந்து செய்தான். பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் இருந்து லால் விடுபட்டார். அதே நேரத்தில் மிகப்பெரிய பணத்தை ஒரே வேலையில் முழுதாக கையில் பார்த்தான் தாவூத்.

நடந்த சம்பவங்கள் மெல்ல மெல்ல கரீம் லாலாவுக்கும் மஸ்தானுக்கும்  தெரியவந்தது. ஆனால் எப்படி செய்தான் என்று யாருக்கும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா சம்பவங்களிலும் அடாவடித்தனம் கை கொடுக்காது என்று பல்வேறு நபர்கள் உணரத் தொடங்கினர். தாவூத்தின் இந்த திறமையை பற்றி வெளியே எல்லோரும் பேசி முடிப்பதற்குள்,  தாவூத் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டி இருந்தான்.

dhawood%205%20550%203.jpg

இனக் குழுக்கள் போல கடத்தல் குழுக்களும் மும்பையில் நிரம்பி இருந்தது. அதனால் அரசுக்கு பெரும் நெருக்கடியான சூழல் நிலவி வந்தது. இந்தியாவின் பெரும் வரி ஏய்ப்பு சம்பவங்கள் மும்பை, குஜராத், டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் அரசுக்கு தெரிந்தே நிகழ்ந்து வந்தது. போதிய ஆதாரங்கள் இல்லாமல் அரசு வேடிக்கை மட்டும் பார்த்து வந்தது.

பல்வேறு திறமையான அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு போட்டுப்பார்த்தனர். ஆனாலும் கடத்தல்கார்கள், கருப்பு பணக்காரர்கள், தொழில் அதிபர்களின் ஆட்டங்கள் அடங்கவே இல்லை. வழக்கமாக நடைபெறும் எல்லா திரைமறைவு தொழில்களும் வெகு ஜரூராக நடந்துகொண்டு இருந்தன. 

பிக்பாக்கெட் திருடன் முதல் பெரிய டான்கள் என எல்லோரையும் சிறைக்குத் தள்ள அரசு காத்திருந்தது. அதற்கான நேரமும் வந்தது. இந்த முறை நாட்டுக்கு அச்சுறுத்தல் தந்துவந்த பல்வேறு முக்கிய நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் தாவூத்தும் ஒருவன்....

அடுத்து நடந்தது என்ன?

http://www.vikatan.com/news/article.php?aid=53757

  • தொடங்கியவர்

மாஃபியாக்களால் நிரம்பி வழிந்த சிறைகள்! (தாதா தாவூத் தொடர்-6)

 

Dawood%20head06.jpg

ள்நாட்டின் அரசை அச்சுறுத்தும் மாஃபியாக்களும், கடத்தல்காரர்களும் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நிறைந்து இந்தியாவை நாசம் செய்து வந்தார்கள். வைரம், தங்கம், கருப்பு பணம் என்று கடத்தி வந்தவர்கள் நாளடைவில், அவர்களுக்குள் இருக்கும் பிசினஸ் மோட்டிவ்களுக்காக  ஆட்களையும் கடத்த தொடங்கினர். இதனால் கிரைம் ரேட் ஏகத்திற்கும் எகிறியது. ஒரு சிலரை போலீஸ் என்கவுண்டர் செய்து பார்த்தது. வேர்களை வெட்டாமல் விழுதுகளை வெட்டி என்ன பயன்? இருந்தாலும் தாதாக்களின் ஆட்டம் அடங்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த தாதாக்களால் அரசுக்கு பெரும் நெருக்கடி உருவானது.

dawood2-01.jpg

அதன்பிறகு 1971-ல் கொண்டு வரப்பட்ட மிசா சட்டம் மூலம் பல்வேறு சட்ட விதிகளை கையாண்டு, இருபது அம்சத் திட்டம்  மூலம் மும்பை, சென்னை, அகமதாபாத் உள்பட இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய தளங்களில் இருந்து வந்த டான்கள், கடத்தல் மன்னன்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது இந்திராகாந்தியின் அரசு. ஆனால், அதே நேரத்தில் கடத்தல் மன்னன்கள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தங்களது தொழிலை விரிவுபடுத்தி இருந்தனர். வெளிநாடுகளில் பயங்கர நெட்ஒர்க்கை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் அவர்களின் தொழில்களுக்கு எந்தவித பாதிப்பும் வரவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வந்த குடோன்கள், சந்திக்கும் ரகசிய இடங்கள் என்று ஒரு சிலவற்றை சீல் வைத்தது அரசு. இதுபோன்ற செயல்களால் மாஃபியாக்களின் தொழில்கள் நசுங்கவில்லை. கட்டுக்குள் கொண்டு வர நினைத்த அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது இதுபோன்ற சம்பவங்கள். என்னதான் செய்தாலும் கடத்தல்காரர்களை, அரசு தங்களின் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனால் இந்திய அரசு அடுத்த கட்டமாக மிசா சட்டத்தை  மாஃபியாக்களின் மீதும் பாய்ச்சினார்கள்.

indhira%20gandhi.jpgமிசா சட்டத்தை மாஃபியாக்கள் மீது பாய்ச்சுவதற்கு முன்பாக, அச்சட்டம் அனைத்து தரப்பு மக்கள் மீதும் பாய்ந்தது. இதனால் சாதாரண அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் இயங்க விடாமல் முடக்கப்பட்டன. பத்திரிகையாளர்களின் பேனா முனைகள் உடைக்கப்பட்டு, அனைத்து பத்திரிகைகளும் சென்சார் செய்யப்பட்டன. மொத்தத்தில் இந்திய நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது வெடிகுண்டு விழுந்து இருந்தது. சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரின் மூச்சுகளும் முடக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள சிறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தது.       

அதே சமயம் எமர்ஜென்சி புயல் மும்பை மாஃபியாக்களையும் தாக்கியது. மும்பை நகரங்களில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த கரீம் லாலா, பதான் குரூப், வரதராஜன் என்று முன்னணியில் இருந்த மாஃபியா புள்ளிகள் கைதாகி சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களோடு தாவூத் இப்ராஹிமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்தியாவில் இருந்த சிறிய டான்கள் முதல் பெரிய மாஃபியாக்கள் வரை அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். மும்பையில் உள்ள ஆர்தர் போர்டு சிறையில் பல்வேறு முக்கிய டான்கள் அடைக்கப்பட்டனர். இதனால் கடத்தல் தொழில்கள் கட்டுக்குள் வந்தன.  வெளியே தொழில்கள் செய்ய ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி இருண்டு போய் இருந்தது கடத்தல் உலகம்.

பல்வேறு டான்களுக்கு சிறை பெரும் நெருக்கடியை கொடுத்தலும், ஒரு சில டான்களை பற்றி கேள்விபட்டு இருந்தாலும், யாருக்கும் பரஸ்பரம் அறிமுகம் இல்லை. அதனால் அவர்களுக்கு ஒரு விதத்தில்  சந்தோசம்தான். ஒருவருக்கொருவர் அவர்களின் முகங்களை பார்த்து அறிமுகமாகிக்கொண்டனர். அதோடு இல்லாமல் அவர்களுக்குள் ஒரு  இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி கொண்டனர். ஒரு சிலருக்கு முன்பு இருந்த பகைகளால், அவர்களுக்குள் இருந்த ஆத்திரங்களை அடித்து தீர்த்துக்கொண்டனர். சிறையில் அவர்களுக்கான உலகத்தை கட்டமைத்தனர். பகையும் நட்பும் ஒன்றாக வளர்ந்து வந்தது சிறையில். அதே நேரத்தில் சிறையில் தங்களுக்கான டீம்களை ரெடி செய்து கொண்டனர். யார் யார் எந்த அணி என்று பல்வேறு முக்கியமான தாதாக்களின் கூட்டணிகள் சிறையில் உருவானது. ஒரு சில கூட்டணிகளை உறுதிபடுத்தும் விதமாக எதிராளிகளை சிறையில் வைத்தே தாக்கினார்கள். சிறை நிர்வாகம் மிரண்டு போனது. எதற்காக சம்பந்தமே இல்லாமல் இது போன்ற செயல்கள் நடக்கிறது என்று முக்கியமான தலைகளை கண்காணித்தனர். அதோடு இல்லாமல் ஒரு சில நபர்களை தானே, புனே என்று வேறு சில சிறைகளுக்கும் மாற்றினார்கள். எங்கு போனாலும் டான்களின் நெட் வொர்க் மட்டும் மாறவே இல்லை. பல்வேறு நபர்கள் எப்பொழுது சிறையை விட்டு வெளியே செல்லலாம், மீண்டும் தொழிலை விரிவுபடுத்தலாம் என்று ரகசிய திட்டங்கள் தீட்டினார்கள்.

கடத்தல்கார்கள் வெளியே வந்தால் மீண்டும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவார்கள் என்று முக்கியமான தலைகளின் சொத்துக்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்கி விட்டது அரசு.

haji%20mastan.jpgதாதாக்களின் தலைகள் என்று சொல்லப்படும் ஹாஜி மஸ்தான், கரீம் லாலா உள்பட பல்வேறு நபர்கள் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்ததால் மும்பையோடு சேர்த்து ஒட்டு மொத்த கடத்தல் உலகமும் அப்படியே ஆடிப்போனது. அதனால் மாஃபியாக்களின் உலகம் பெரும் வறட்சியை கண்டது. கரீம் லாலா, ஹாஜி மஸ்தான் போன்ற பெரிய தலைவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்று அரசியல் தலைவர்களுடன் வெளியே ரகசிய டீல்கள் நடந்தன. மாஃபியாக்களின் அண்டர்கிரவுண்ட் ஆட்கள்  மூலம் தூது அனுப்பி பெரும் பணம், வைரங்கள், தங்க கட்டிகள் என்று பரிசாக கொடுக்கப்பட்டன. இருந்தாலும் வெளியே வருவது சிக்கலாக இருந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய கிரிமினல் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி ஹாஜி மஸ்தானுக்காக வாதாடினார். இருந்தாலும் வெளியே கொண்டு வரமுடியவில்லை. இதுபோல பல்வேறு முக்கியமான நபர்கள் வந்து வாதாடியும் வெளியே கொண்டு வரமுடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து எமர்ஜென்சி நீக்கப்பட்டது. ஆட்சியும் மாறியதால் இனிமேல் கடத்தல், போதை மருந்துகள், சாராயங்கள் கடத்த மாட்டோம், கட்டப்பஞ்சாயத்து, அரசுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என்று பிராமண பத்திரங்கள் எழுதிக்கொடுத்த பிறகு பல்வேறு அரசியல் தலைகள் தலையிட்டால் கரீம் லாலா, ஹாஜி மஸ்தான் போன்றோர் வெளியே வந்தார்கள்.

அவர்கள் வெளியே வந்த பிறகு மெல்ல மெல்ல அவர்களின் ஆட்களும் வெளியே வந்தார்கள். நிரம்பிக்கிடந்த சிறை இப்பொழுது காலியானது. மீண்டும் மும்பையில் நிழல் உலகம் இயங்க ஆரம்பித்தது. இந்த முறை பயங்கர பாதுகாப்பாக, படு உஷராக இயங்கினார்கள். சிறிய தடயங்களை கூட விட்டு வைக்காமல் அதிக அளவில் கடத்தல் தொழில் செய்து, இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

அதே நேரத்தில் சிறையில் இருந்த தாவூத்தும், அவனது ஆட்களும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த முறை பயங்கரமான நெருக்கடிகள் உருவானது. மாஃபியாக்களுக்குள் யார் யார், எங்கு, எந்த எந்த  தொழில்களை செய்வது என்று புதிய சட்டங்கள், புதிய பாதைகள், புதிய வழிமுறைகள் என்று  தங்களுக்கான எழுதப்படாத சட்டங்களை கொண்டு வந்தனர். இந்த சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இதுபோன்ற சட்டங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல்  தாவூத் தனக்கான ஒரு அண்டர்கிரவுன்ட் உலகத்தை உருவாக்கினான். இதனால் தாவூத்திற்கு எதிராக பல்வேறு எதிரிகள் உருவாகினர். ஆனால், அந்த நெருக்கடிகளை எல்லாம் தாவூத் அடித்து நொறுக்கி உடைத்தெறிந்து வந்தான்.

அது எப்படி? அடுத்து நடந்தது என்ன?

http://www.vikatan.com/news/article.php?aid=54078

  • தொடங்கியவர்

தாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன் (தாதா தாவூத் தொடர்-7)

 

Dawood%20head07.jpg

மும்பை மாஃபியாவின் வரலாறு அரபிக்கடல் அளவுக்கு ரத்தங்களால் சூழ்ந்து நிறைந்தது. குறிப்பிட்ட இடத்தில்தான் சண்டைகள் வரும் என்று யாரும் நினைக்க முடியாது. நீதிமன்றம், காவல் நிலையங்கள், ரயில் நிலையம், உணவு விடுதிகள், தேநீர் விடுதி என்று மும்பையின் மதிப்பு மிகுந்த இடங்கள் முதல் சாதாரண தெருக்கள் வரை, அதிகார போட்டியில் நடந்த சண்டைகளில் ரத்தங்கள் சிந்திய நீண்ட வரலாறு மும்பைக்கு உண்டு. இன்று வரை முடிவில்லாமல் தொடர்வது காலத்தின் அகோர கோலம்.

ஐந்து ஆண்டுகளில் ஒரு இடம், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு புதியதாக உருமாற்றிக் கொள்கிறது. ஆனால், ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகும் மும்பை மாநகரில் ரத்தம் ஓடுவது மட்டும் நிற்கவே இல்லை. தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் குடும்பத்துடன் குடியுரிமை பெற்று, ஐ.எஸ்.ஐ அமைப்பின் பாதுகாப்பில் இருந்து கொண்டு, துபாயை தலைமை இடமாகக் கொண்டு, உலகத்தின் பல்வேறு நாடுகளில் தனது மாஃபியா சாம்ராஜ்யத்தை கன கச்சிதமாக நடத்தி வந்தாலும், தாவூத்தின் கண்கள் எப்பொழுதும் அவனது சொந்த ஊரான மும்பையை பார்த்துக்கொண்டே இருக்கும். உலகத்தின் பல்வேறு முக்கியமான தலைவர்களையும், அதிகாரம் பொருந்திய முக்கிய புள்ளிகளையும் சந்திக்கும் தருணங்களில், அவர்களுடன் இயல்பாக பேசும் பொழுதும் தாவூத், மும்பையை பற்றி பேசாமல் இருப்பதில்லை. அந்த அளவிற்கு மும்பை மீது தாவூத்திற்கு அளவு கடந்த காதல்.

dawood-chhoto01.jpg

தமிழ்நாடு, குஜராத் போன்ற இந்தியப் பகுதிகளில் இருந்து மும்பைக்கு வந்தவர்களும், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த பல்வேறு நபர்களும் ஆரம்பகாலம் முதல் இன்று வரை தங்களது இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள பல்வேறு யுத்தங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். இதன் பலன் பல்வேறு உயிர்கள் போனதுதான் மிச்சம். எவன் கை ஓங்கி வருகிறதோ அவனது கையை உடைக்கவும், அவனை சிதைக்கவும், போலீஸ் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்த பல்வேறு நபர்களுக்கு மறைமுகமாக உதவிகள் செய்து, பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க வைத்து வளர்த்து விட்டது. அதில் முக்கியமான துருப்பு சீட்டு தாவூத்.

தாவூத் ஆரம்ப காலங்களில்,  போலீஸுக்கு பல்வேறு இன்பார்மர் வேலைகள் செய்து வந்தது பிறகுதான் தெரிந்தது. அவனது சிறு வயது காலம் முதல் பல்வேறு தாதாக்களின் வேலைகளை போட்டுக்கொடுத்து வந்தான். அதன் மூலம் அவனுக்கு போலீஸ் வட்டாரங்களில் செல்வாக்கு இருந்தது என்று, அவன் வளர்ந்த பிறகுதான் பல்வேறு நபர்களுக்கு தெரிய வந்தது. ஆடு புலி ஆட்டம் போல யார் யாரை, எப்பொழுது எங்கு வெட்டி சாய்ப்பார்கள் என்று தெரியாத மர்ம உலகமாக இருந்து வந்தது மும்பை மாஃபியா உலகம். இருந்தாலும் அவர்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். தொண்டைக்குழி வரை மது, அளவிற்கு மீறிய பணம், மிதம் மிஞ்சிய பேரழகிகள் என்று அவர்களின் வாழ்க்கை நிஜமான வாழும் சொர்க்கமாக இருந்து வந்தது.

சிறையில் இருந்து வந்ததும் நடந்த தொழில் சண்டையில் அதிக உயிர்கள் பலியாகின. இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த மஸ்தான், கரீம் லாலா, தாவூத் மற்றும்  ஜீனாபாய் என்கிற லேடி உள்பட ஐந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் ஒன்றாக கூடி இருந்தார்கள். ஜீனாபாய் மும்பையின் மாஃபியா வட்டாரங்களில் தவிர்க்க முடியாத முன்னோடி லேடி. பல்வேறு தாதாக்கள் ஜீனா பாய் பெயரை கேட்டால் பதுங்கி போவார்கள். மஸ்தான், கரீம் லாலா, தாவூத் உள்பட பல்வேறு நபர்கள் ஜீனா பாயை சகோதரி, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதுண்டு. கடைசியில் எழுதப்படாத மாஃபியா உடன்படிக்கை ஒன்று அங்கு உருவானது. குர்ஆன் மீது சத்தியம் செய்து கொண்டு, இனி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அனைவரும் சத்தியம் செய்து கொண்டு அவர்களின் தொழில்களை நடத்த தொடங்கினர்.

dawood-chhoto02.jpg

காலம் உருண்டு ஓடியது. தாவூத் தனது தொழிலை விரிவுபடுத்த தொடங்கினான். அதிக பணமும் புகழும் சேரும் பொழுதே எதிரிகளும் உருவாகி விடுகின்றனர். அப்படி சத்தமில்லாமல் பல்வேறு எதிரிகள் வந்ததும், கண்ணக்கு தெரிந்த எதிரிகளை மெல்ல மெல்ல கொலை செய்ய ஆரம்பித்தான் தாவூத். ஆனால், தாவூத்தின் நிழலாக வலம் வந்த சோட்டா ராஜன்,  பின்னாளில் தாவூத்தின் டி கம்பெனியை ஆட்டம் காண வைத்தான். அதிகாரத்தின் மறுபக்கம் ஒளிந்து கொண்டு தாவூத்தை பல்வேறு நாடுகளுக்கு துரத்தினான். நிம்மதி இல்லாமல் ஓடிய தாவூத், சோட்டா ராஜனின் தலைக்கு பல்வேறு வழிகளில் குறிவைத்தான். 1994ல் வைத்த குறி 2015 வரை தொடந்து கொண்டே இருக்கிறது. அதன் இறுதிக்கட்டம்தான், கடந்த வாரம் இந்தோனேசியாவில் உள்ள பாலீத்தீவில், சோட்டா ராஜன் போலீஸ் கைகளில் சிக்கியது. இந்த ஒரு சம்பவம் போலீஸ் வட்டாரங்களில் ‘கைது’ என்றும், மாஃபியா வட்டாரத்திலும், சில பத்திரிகை வட்டாரங்களில் தாவூத்தின் கைகளில் இருந்து தப்பிக்க ‘சரண்டர்’ என்றும், இது தாவூத்திற்கு விரித்த ‘வலை’ என்றும் பேசப்படுகிறது.

தாவூத்தின் முன்னணி தளபதியும், அவனுக்கு மிகவும் பிடித்தவனுமான சோட்டா ராஜன் ஏன் தாவூத்திற்கு எதிரியானான்?

சோட்டா ராஜனின் அப்பா சதாஷ் ஒரு சாதாரண மில் தொழிலாளி. மும்பையை ஒட்டிய சிறு கிராமம் ஒன்றில் இருந்து மும்பைக்கு பிழைக்க வந்த குடும்பம் சதாஷிவின் குடும்பம். சதாஷிவின் ஆறு பிள்ளைகளில் ஒருவன்தான் ராஜேந்திர நிகல்ஜி என்னும் சோட்டா ராஜன். தனது இளமைக்காலத்தில் மும்பையில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் பிளாக் டிக்கெட் விற்று வந்தான். அப்பொழுது நடக்கும் அடிதடி சண்டைகள் மூலம் தெரு ரவுடியாக மாறினான். அதன் பிறகு படா ராஜன் என்பவனிடம் இருந்து தெற்கு மும்பை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டை காலி பண்ண செய்யும் வேலை வந்ததும், அந்த வேலையை எந்தவித அதிர்வுகளும் வராமல் செய்து கொடுத்தான் சோட்டா ராஜன். அதன் பிறகு படா ராஜனின் எதிரி ஒருவனை மார்க்கெட்டில் வைத்து தாக்கிய சம்பவம், இன்னும் பிற முக்கியமான சம்பவங்கள் மூலம் படா ராஜனின் இதயத்தில் இடம் பிடித்து, படா ராஜனிடம் நிரந்தரமாக வேலை பார்க்க ஆரம்பித்தான். அதன் பிறகு படா ராஜனின் எதிரியான அப்துல் குரூப்பில் உள்ள முக்கியமான ஒருவனை படா ராஜன் கொலை செய்ததால் படா ராஜனை, அப்துல் நீதிமன்றத்தில் வைத்து ஒரு போலீஸ் அதிகாரி மூலம் சுட்டுக்கொன்றான். சில கொலைகளை யார் செய்வார்கள், எதற்கு செய்வார்கள் என்று தெரியாது. அது போலதான் காவல்துறை அதிகாரி மூலம் படா ராஜனை சுட்டுக்கொன்றனர்.

அதன் பிறகு படா ராஜனை கொலை செய்த அப்துலை பழிவாங்க துடித்தான் சோட்டா ராஜன். சோட்டா ராஜன் ஆட்கள் தேடுவது தெரிந்த அப்துல் போலீஸில் சரணடைவதற்காக, நீதிமன்றம் சென்று வரும் வழியில் காரில் வைத்து சோட்டா ராஜன் மற்றும் அவனது ஆட்களால் சுடப்பட்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக  ஒரு சில குண்டடிகளோடு உயிர் தப்பித்தான் அப்துல். அதன் பிறகு இரு வாரங்கள் கழித்து குண்டடிப்பட்ட காயத்திற்கு மருதத்துவம் பார்க்க வந்த அப்துலை, நோயாளிகள் போல சென்று சோட்டா ராஜனின் ஆள் மருத்துவமனையில் வைத்து சுட்டான். அப்பொழுதும் அவன் குண்டடிப்பட்டு தப்பித்து விட்டான். இந்த சம்பவங்கள் மூலம் தாவூத்தின் மனதில் இடம் பிடித்தான் சோட்டா ராஜன். அதன் பிறகு சோட்டாராஜனை தன்னுடைய குழுவில் சேர்த்துக்கொண்டான் தாவூத். மூன்று வருடங்கள் கழித்து தனது ஆட்களுடன் மைதானம் ஒன்றில் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்த அப்துலை, பல்வேறு நபர்கள் முன்னிலையில்,  கிரிக்கெட் வீரர்கள் போல வந்து சத்தமில்லாமல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தனர் சோட்டா ராஜனும் அவனது ஆட்களும். அதன் பிறகு இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

dawood-chhoto03.jpg

சோட்டா ராஜன் எதிலும் மிக உஷாரான பேர்வழி. தாவூத் ஒரு விஷயத்தை நினைத்து பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அதை செய்து முடித்து விடுவான். அதனால் தாவூத் குரூப்பில் அவனை எல்லோரும் ‘ஸ்பீட்’ என்றும், நாணா என்றும் அழைப்பதுண்டு.

மும்பை மாஃபியா வட்டாரங்களில் பெரும்பாலும் டான்களாக இருந்தது பதான்களும், முஸ்லிம்களும், சில இந்துக்களும்தான். அதனால் அவர்களுக்குள் இந்து, முஸ்லிம் சண்டைகள் உண்டு. தாவூத்தின் வளர்ச்சி சிவசேனா அமைப்பை சேர்ந்த பால்தாக்கரேவிற்கு பிடிக்கவில்லை. தாவூத்தை தாண்டி அவர்களால் மும்பையில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. அதற்கு முழுக்காரணம் சோட்டா ராஜன்தான். பால்தாக்கரேவிற்கு பல்வேறு வழிகளில் டஃப் கொடுத்தான் சோட்டா ராஜன். அதனால் சோட்டா ராஜனை முழுவதுமாக நம்பினான் தாவூத். அதன் பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பதை சோட்டா ராஜன் கையில் கொடுத்தான்.

துருக்கியை சேர்ந்த ஆயுதங்கள் விற்கும் பிரபல பிசினஸ் மேன் ஒருவனிடம் பல்வேறு ஆயுதங்களை வாங்க சோட்டா ராஜன் திட்டமிட்டான். ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வாங்கி பல்வேறு நாடுகளில் விற்று வந்தான் அந்த துருக்கிகாரன். மும்பை தாதாக்களிடம் இருந்த  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எல்லாம் அரதபழசாக  இருந்தது. 'மும்பையில் நமது இருப்பை நிலை நிறுத்த வேண்டும் என்றால் அதிநவீன ஆயுதங்கள் வேண்டும் ' என்று தாவூத்திடம் சொல்லி,  பயங்கரமான ஆயுதங்களை வாங்கினான். இதனால் மும்பை வட்டாரமே கதிகலங்கி போனது. பல்வேறு தாதாக்கள் தாவூத்திடம் மோத பயந்தார்கள். எல்லாம் சோட்டா ராஜனின் மூளை என்று இருந்தனர்.

இந்நிலையில் சோட்டா ராஜனின் வளர்ச்சி, தாவூத்திடம் இருந்த மற்ற தளபதிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் சோட்டா ராஜனின் சோலியை முடிக்கும் வேலைகளில் இறங்கினார்கள். விளைவு தாவூத் – சோட்டா ராஜன் இடையே  பிளவு உண்டானது.

இப்பொழுது சோட்டா ராஜனை போலீஸ் கையில் எடுத்துள்ளது.

அதன் பிறகு நடந்தது என்ன?
http://www.vikatan.com/news/article.php?aid=54381

  • தொடங்கியவர்

எப்படி எதிரியானான் சோட்டா ராஜன்? (தாதா தாவூத்: தொடர்-8)

 

dawood%208%20logo.jpg

தாவூத் இப்ராஹிமினால் என் உயிருக்கு ஆபத்து என்று அலறத் தொடங்கி இருக்கிறார் சோட்டா ராஜன். பாலித்தீவில் ஆஸ்திரேலியா காவல் நிலையத்தில் கதறியது முதன்முறையல்ல. சோட்டா ராஜன் தாவூத்தை விட்டு பிரிந்து சென்ற பொழுதே, தப்பிக்க இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மிகவும் பதட்டமான சூழலில், தன்னை காப்பாற்றும்படி கதறி அழுத கதையின் பின்புலம் மிகவும் சுவாரஸ்யமானது.

சோட்டா ராஜனுக்கு சொர்க்கமாக இருந்த துபாய் அன்று நரகமாக மாறிப்போனது. துபாயில் அந்த ஒரு இரவை மட்டும் கழித்து இருந்தால், யாருக்கும் தெரியாமல் கடலில் சுறாவுக்கு இரையாகிவிடுவோம் என்று உயிர் பிழைத்து ஓடிப்போய் சரண்டர் ஆனான். இந்திய ஹை கமிஷன் அதிகாரிகள் தாவூத்தை வீழ்த்த சோட்டா ராஜனை கையில் எடுக்க ஆயத்தமானார்கள். சோட்டா ராஜனின் கவனம் முழுவதும் தாவூத்திடம் இருந்து எப்படியாவது தப்பித்து போக வேண்டும் என்ற ஒரே எண்ணமாக இருந்தது. ஒரே நாளில் தாவூத்தின் முக்கியமான டைரியை துபாயில் இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரியிடம் கொடுத்தான்.

dawood%208%20lefttt.jpgஅந்த டைரியில் தாவூத்தின் நிழல் உலக வியாபார புள்ளிகளின் தொடர்புகள் எண்கள் உள்பட பல்வேறு முக்கியமான விபரங்கள் அடங்கி இருந்தது. அதனை பார்த்த உளவுத்துறை அதிகாரிகள் மிரண்டு போய் விட்டனர். யாரெல்லாம் பல்வேறு நாடுகளின் மிகப்பெரிய அதிகார மையத்தின் முக்கிய புள்ளிகள் என்று நினைத்தார்களோ அவர்கள் எல்லாம் தாவூத்திற்கு  நெருக்கமாக இருப்பது தெரிய வந்தது.

அதோடு துபாய் நாட்டின் ராஜ குடும்பத்தின் மன்னர், இளவரசர் உள்பட அனைவரும் தாவூத்திற்க்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை அந்த டைரி காட்டிக்கொடுத்தது.

அந்த டைரியை மிகவும் ஆர்வமாகவும், அதிர்ச்சியாகவும் அதே நேரத்தில் மிகவும் சுவாரஸ்யமாகவும் படித்துக்கொண்டு முக்கிய குறிப்புகளை எடுத்துக்கொண்டு இருக்கும்பொழுதே சோட்டா ராஜன் அலற ஆரம்பித்தான். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் உயிருக்கு மட்டும்மல்ல; உங்கள் உயிருக்கும் ஆபத்து. உங்கள் உயிர் துப்பாக்கி குண்டுகளால் பறிக்கப்படும் என்று அலறினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சோட்டா ராஜனுக்கு சென்னையில் உள்ள ஒரு முகவரியில் இருந்து பாஸ்போர்ட், விசா ரெடி செய்து காட்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மலேசியாவிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

மலேசியாவிற்கு ஒரே இரவில் சோட்டா ராஜன் தப்பித்துபோன கதை இரண்டு நாள் கழித்துதான் தாவூத்திற்கு தெரிய வந்தது. சோட்டா ராஜன் தாவூத்தை தொடர்பு கொள்ளவில்லை என்பதால், யார் கையிலாவது சிக்கிக்கொண்டானா என்று தீவிரமாக தேடியபொழுதுதான், தாவூத்தின் சோர்ஸ் ஒருவன், சோட்டா ராஜன் அவசர அவசரமாக துபாயில் இருந்து வெளியேறிய கதையை சொன்னான். தாவூத்தின் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளானான் சோட்டா ராஜன். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சோட்டா ராஜனின் தலை தனக்கு வேண்டும் என்று தனது சகாக்களுக்கு கட்டளை போட்டான்.

மலேசியா, சிங்கப்பூர் என்று தாவூத்தின் ஆட்கள் கொலைவெறியோடு தேடினார்கள். இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த இண்டர்போல் அமைப்பு, சோட்டா ராஜனை உடனடியாக தாய்லாந்திற்கு பார்சல் செய்து அனுப்பினார்கள். தாய்லாந்து போன சோட்டா ராஜனை மூன்று மாதம் கழித்து தேடிக்கண்டுபிடித்தனர். அங்கிருந்த சோட்டா ராஜனை போட்டுத்தள்ள ஆயத்தமானபொழுது, அவர்களிடமிருந்து தப்பித்து பாங்காங் கடலுக்குள் ஓடி ஒளிய ஆரம்பித்தான் சோட்டா ராஜன்.

dhavooth%204%20550%201.jpg

பாங்காங் கடலுக்குள், சொகுசு கப்பலில் மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். அவன் குடியிருந்த கப்பலை நோக்கி வந்த பல்வேறு கப்பல்களை கண்டாலே தாவூத் தன்னை கொலை செய்ய வருவதாக பயத்தில் நடுங்கி அலற ஆரம்பித்தான். அதன் பிறகு பாங்காங் நகரில் வைத்து  சோட்டா ராஜன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினான் தாவூத்.

அதில் தப்பித்த சோட்டா ராஜன், கண்விழித்த நொடியில் தாவூத் தன்னை கொல்ல மருத்துவர், நர்ஸ் மூலம்  வருவதாக புலம்பினான். அதிக பட்சமாக மருத்துவமனைக்கே வெடிகுண்டு வைத்து இருப்பதாக புலம்பியே நாட்களை கடத்தினான். அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளில், ஒரு இரவைக்கூட நிம்மதியாக சோட்டா ராஜன் கழித்தது இல்லை.

தற்பொழுது வரை அந்த பயத்தில் சோட்டா ராஜன் வாழ்ந்து வருகிறான். இதுவரை சோட்டா ராஜனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் சோட்டா ராஜனை பாதுகாப்பு வளையத்தில் வைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சோட்டா ராஜனை மும்பைக்கு கொண்டு செல்ல சிபிஐ  தரப்பில் இருந்து ஆறு முக்கிய அதிகாரிகள் பாலீத்தீவிற்க்கு போனார்கள். ஆனால் தன்னை இந்தியா கொண்டு  செல்வதற்கு எதிர்ப்பினை தெரிவித்த சோட்டா ராஜன், மும்பை போலீஸ் முழுவதும் தாவூத்தின் ஆட்கள் இருப்பதாகவும்,  அதனால் தன்னை டெல்லிக்கு கொண்டு செல்லுமாறும் மீடியாக்கள் முன்பு அலறியதன் பின்னணியில், பல்வேறு உண்மைகள் ஒளிந்து இருக்கின்றன.

dawood%208%20600%201.jpg

தாவூத்திற்கு எப்படி எதிரியானான் சோட்டா ராஜன்?

தாவூத்தின் துபாய் டி கம்பனியை நிலைகுலைய வைத்தான். போதை மருந்துகள், ஆயுதம் உள்பட பல்வேறு தாவூத்தின் கடத்தல் பிசினஸ்களில் கையை வைத்தான். அடுத்த கட்டமாக தாவூத்தின் ஆட்களை காலி செய்யும் வேலைகளில் அதிக கவனம் செலுத்தினான். ஒரு கட்டத்தில் இந்தியாவின் துணையோடு டி கம்பனியின் ஆணி வேரை பிடுங்க பார்த்ததால்,  தாவூத் தனக்கு இருந்த உலக செல்வாக்கால் சோட்டா ராஜனை வேட்டையாட நாடு நாடாக துரத்தினான். சோட்டா ராஜனும் ஓடி ஓடி களைத்து விட்டான்.

தற்பொழுது தாவூத்தும், சோட்டா ராஜனும் முதுமையின் விளிம்பில் இருக்கிறார்கள். யார் மரணத்தை யார் முடிவு பண்ணுவது என்கிற போட்டியில் இருக்கிறார்கள். இயற்கை ஒருபக்கம் இவர்களது விளையாட்டை எட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. முடிவு என்ன ஆகும்?

http://www.vikatan.com/news/article.php?aid=54714

  • தொடங்கியவர்

நானும் ரவுடிதான்; சோட்டா ராஜன் சரண்டரான கதை (தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்-9 )

 

dawood%209%20logo.jpg

ந்திரவாதியின் உயிர் கிளியின் இதயத்திற்குள் இருப்பது போல, சோட்டா ராஜனின் உயிர் இன்டர்போலின் கைகைளில் இருக்கிறது. சோட்டா ராஜனுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பை  இந்திய உளவுத்துறை ஒரு நொடி விலக்கிக்கொண்டாலும் அடுத்த நொடி குறி வைத்து காத்துக்கொண்டிருக்கும் தாவூத்தின் துப்பாக்கியின் தோட்டாக்கள் சோட்டா ராஜனின் மேல் பாயும்.

கடந்த வாரம் சோட்டா ராஜன் ஆஸ்திரேலியா போலீஸ் கைகளில் சிக்கியது எப்படி என்று ஊடகங்களில் அடிபடும் செய்திகள் அனைத்தையும் அப்படியே தூக்கி விழுங்கி இருக்கிறது சோட்டாராஜனின் வாக்கு மூலம்.

“ வழக்கமாக வெளியே கிழம்பினேன், எப்பொழுதும் போல கவனமாக தெருவில் யாரும் இருகிறார்களா என்று எனது ஆட்கள் கவனித்தபிறகுதான் வெளியே சென்றேன். கொஞ்சநேரம் வெளியே சென்றபிறகு எங்களை இரண்டு நபர்கள் பின்தொடர்ந்தனர். அவர்களை பார்த்தால் தாவூத்தின் ஆட்கள் போல இருந்தது. அப்படியே அங்கிருந்து மற்றொரு காரில் தப்பித்து வேறு வழியாக எஸ்கேப் ஆகினேன்.

dawood%209%20600%201.jpg

இரண்டு நாள் கழித்து பாலியில் செய்துவரும்  மீன் தொழில்களை பார்க்க சென்று கொண்டிருக்கும்பொழுது, வெளியே அதே நபர்கள் என்னை கொல்வதற்கு துப்பாக்கியோடு காத்திருப்பதாக தகவல் வந்தது. நானும் சந்தேகத்தின் பேரில் வெளியே சென்று பார்த்த பொழுது காரில் அவர்கள் கொலைவெறியோடு காத்திருந்தார்கள்.

நான் வெளியே போகாமல் அப்படியே திருப்பி வந்துவிட்டேன். உள்ளே பயணிகள் காத்திருக்கும் அறையில் காத்திருந்தேன். வெளியே போனால் மரணம் உறுதி என்று என் மனது நம்பியது. உடனடியாக எனக்கு வேண்டியவர்களை தொடர்பு கொண்டேன். யாரும் அவசரத்திற்கு உதவவில்லை. நெருக்கடியான அந்த நிலையில் வாழ்வா, சாவா? என்கிற நிலை  உருவானது. சட்டென முடிவெடுத்தேன். அருகில் இருந்த ஆஸ்திரேலியா போலீசிடம் சென்று 'என்னை கைது செய்யுங்கள். நான் ஒரு குற்றவாளி. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி, என் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர் என்றேன். நான் சொன்னதை அப்பொழுது அவர்கள் நம்பவில்லை.

அவர்களிடம் உண்மையை மறுபடியும் எடுத்து சொன்னேன். சிறிது நேரம் அவர்கள் தலைமை அதிகாரிகளிடம் பேசிவிட்டு என்னை கைது செய்து பத்திரமாக கொண்டு சென்றனர்' என்று இந்திய அதிகாரியிடம் சொல்லி இருக்கிறான் சோட்டா ராஜன். வெளியே சென்றால் தான் எப்படியும் கொல்லப்படலாம் என்று சோட்டா ராஜன் பயந்து போய் இருப்பதால் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தி உள்ளனர். 

dawood%209%20600%2022.jpg

சோட்டா ராஜன் இப்பொழுது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு பயங்கர பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதி என்பதால் இன்னமும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யார் வந்தாலும் போனாலும் கண்காணிப்புகள் கூடுதலாக அமைந்துள்ளதால் எப்பொழுதும் போல இருக்க முடியவில்லை என்று புலம்பி வருகின்றனர் மற்ற அதிகாரிகள்.

தாவூத்தின் அதிரடி வளர்ச்சியில் சோட்டா ராஜன் தவிர்க்க முடியாத நபராக இருந்து இருக்கிறான். தாவூத்தின் முக்கிய தளபதியாக சோட்டா ராஜன் இருந்ததிற்கு காரணம், அவனது கூர்மையான அறிவும் அதிரடி நடவடிக்கையும்தான். எந்த வேலையை செய்தலும் அதில் மிச்சம் வைக்காமல் கனக் கச்சிதமாக செய்வதில் சோட்டா ராஜன் படு கில்லாடி. அதுதான் தாவூத் வைத்த குறியில் இருந்து இன்று வரை அவனை காப்பாற்றிவந்தது. உலக அளவில் தாவூத்தின் தொழில் மட்டுமல்ல அவனது சொத்துக்களின் மதிப்பும் உயர உயர சோட்டா ராஜனும் முக்கியத்துவம் பெற்றான். 

dhavooth%204%20550%2022.jpg

சோட்டா ராஜன் குறித்து தாவூத்திடம் யார் புகார் கூறினாலும் அதை தாவூத் காது கொடுத்து கேட்கமாட்டான். அந்த அளவிற்கு செல்வாக்காக இருந்த சோட்டா ராஜனுக்கும் – தாவூத் இப்ராஹிம்க்கும் இடையே சொலைவெறி உருவாகும் அளவு பகை உருவானது எப்படி?

ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்றுதான் இருவருக்கும் பிளவை உண்டாக்கிவிட்டது. அதற்கு காரணமாக அமைந்தது தாவூத்தின் சகோதரி ஹசீனாவின் கணவன் இப்ராஹீம் பார்க்கர் கொலை. சகோதரி ஹசீனாவை இப்ராஹீம் பார்க்கருக்கு கல்யாணம் செய்து வைத்து ஹோட்டல் தொழிலை வைத்துக் கொடுத்தான் தாவூத். பார்க்கருக்கு சினிமா மேல் பயங்கர காதல். அதனால் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தான். முதலில் துணை நடிகராக இருந்தவன் பின்னாளில் நல்ல கேரக்டர்கள் நடித்துக்கொண்டு இருந்தான். தாவூத்தின் மைத்துனர் என்பதால் அவனை வைத்து பெரிய அளவில் சினிமா எடுக்க பயந்தனர். ஒரு சிலர் தைரியத்துடன் அவனை தமது படங்களில் சிறப்பு தோற்றங்கள் தந்து நடிக்க வைத்தனர். அதனால் பல்வேறு பல்வேறு லாபங்களை அவர்கள் பார்த்தனர்.

dawood%209%20600%202.jpg

துபாய் நகரில் இருந்தவாறே தாவூத் இப்ராஹிம் மும்பையை மட்டுமல்லாமல் பல்வேறு இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தமது கட்டுப்பாடுக்குள் வைத்து இருந்தான். அவனுக்கு எல்லாமே சோட்டா ராஜன்தான். அவனும் துபாய் நகரில் தாவூத்தின் இதயமாக இருந்தான். தாவூத்தின் கண் அசைவுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து நடந்து கொண்டு இருந்தான். சோட்டா ராஜன்தான் தாவூத்தின் கருவூலத்தை வளர்த்தவன். துபாயில் இருந்து கொண்டு மும்பையில் நடக்கும் அரசு சம்பந்தப்பட்ட அணைத்து வேலைகளையும் தனக்கு வேண்டிய ஆட்களுக்கு டெண்டர் கொடுக்க சொல்லி காண்ட்ராக்ட் வேலைகளைவாங்கி கொடுத்து அதில் இருந்து கமிஷன் வாங்கி தாவூத்திற்கு கொடுத்தான்.

அதோடு நில்லாமல் மும்பையில் எந்த வேலையும் சோட்டா ராஜனின் அனுமதியில்லாமல் நடக்காது. இதனால் தாவூத்தின் எதிரியான அருண் காவ்லி உள்பட பல்வேறு நபர்களுக்கு எரிச்சலும் கோபமும் உண்டானது. அதனால் முதலில் தாவூத்தின் ஆளான ராஜே என்பவனை குறிவைத்தான் அருண் காவ்லி. அவன்தான் தாவூத்திற்கு உள்ளுரில் தீவிரமாக வேலை செய்து வந்தவன். அதனால் அவனையும் அவனுடன் இருந்த அவனது மூன்று கூட்டாளிகளையும் அருண் காவ்லி ஆட்கள் சுட்டுக்கொன்றார்கள்.

dawood%209%20ibrahim%20arun%20200.jpgஇந்த சம்பவம் தாவூத்திற்கு பயங்கர அசிங்கத்தை கொடுத்தது. உடனடியாக தாவூத், அருண் காவ்லியை கொடூரமாக கொலை செய்ய சொன்னான். ஆனால் சோட்டா ராஜன் அருண் காவ்லியின் உடன் பிறவா சகோதரனான அசோக் ஜோஷியை கொன்றால் அவனது படைகள் உடையும் என்று கணக்கு காட்டினான். தாவூத்தும் ஒப்புக்கொள்ள சோட்டா ராஜனே நேரில் சென்று அசோக் ஜோஷியை சுட்டுக்கொன்றான். தாவூத் உத்தரவிட்ட 15 நாட்களில் இந்த கொலையை செய்து முடித்தான் சோட்டா ராஜன்.

பதிலடியாக தாவூத்திற்கு பணம், மற்ற பொருட்கள் கொடுத்து உதவும் பல்வேறு நபர்களை கொன்றான் அருண் காவ்லி. சோட்டா ராஜன் அருண் காவ்லியின் ஆட்களை ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்தான். இப்படியே இரண்டு பக்கமும் தலைகள் உருண்டன. நடக்கும் சம்பவங்களை காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. உச்சகட்டமாக அருண் காவ்லியின் அண்ணன் பாபா காவ்லியை தாவூத்தின் ஆள் சுட்டுக்கொலை செய்தான். இதனால் அருண் காவ்லிக்கு ஆலோசனை சொல்ல யாருமில்லை. அருண் காவ்லியின் எல்லாமுமாக இருந்த அத்தனை பேரையும் சுட்டுக்கொன்று குவித்தான் சோட்டா ராஜன்.

நிலை தடுமாறிப்போன அருண் காவ்லி அவனது ஆட்கள் மூலம் பிரபல ஹோட்டலில் இருந்த தாவூத்தின் மைத்துனர் பார்க்கரையும் அவனது உதவியாளரையும் ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுகொன்றான். இந்த சம்பவத்தை செய்தது சைலேஷ், பிபின், சந்தோஷ், ராஜீ படாலா என்கிற நான்கு நபர்கள் என்பதை தெரிந்துகொண்ட தாவூத், அவர்களை தூக்கி வரசொல்லி கட்டளை போட்டான். ஆனால் அவர்களை பிடிக்கமுடியவில்லை. அந்த நான்கு நபர்களும் ஒரே இடத்தில் தங்காமல் வேறு வேறு இடங்களுக்கு நாடோடிகள் போல ஓடிக்கொண்டே இருந்தனர். தாவூத்தும் அந்த சம்பவத்தை மறக்கும்படியாக பல்வேறு வேலைகளில் மூழ்கிவிட்டான். அதனால் அவர்களின் வாழ்நாள் நீண்டு கொண்டே சென்றது. இதற்குள் இரண்டு மாதங்கள் ஓடின.

தாவூத் வைத்த குறியிலிருந்து தப்பிவிட்டார்கள் என்பதால் அந்த நான்கு நபர்களும் பேமஸ் பிரபலமடைந்தார்கள். இதனால் பல்வேறு கொலை சம்பவங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. விறுவிறுவென அவர்கள் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்து இருந்தனர்.

dawood%209%20600%203.jpg

ஒரு கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து போகும்பொழுது அடிபட்டு இரண்டு நபர்கள் மட்டும் கீழே விழுந்தனர். அவர்களை பற்றி தெரியாத அந்த பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து அடித்துத் துவைத்து காவல்துறையினரிடம் கொடுத்தனர். அதற்கு பிறகுதான் தெரிந்தது அவர்கள் யார் என்கிற விஷயம். இந்த விஷயம் தாவூத்தின் காதுகளுக்கு போனது. அந்த சமயம் சோட்டா ராஜன் மும்பை நடிகை ஒருத்தியோடு பிரபல ஹோட்டலில் தங்கி இருந்தான். கொடுத்த வேலையை சரியாக செய்யவில்லை என்று சோட்டா ராஜன் மீது இந்த முறை தாவூத் வருத்தப்பட்டான்.

சிக்கிய இருவரும் பொது மக்கள் அடித்தால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். எப்படியும் தாவூத் ஆட்கள் தங்களை கொலை செய்ய வருவார்கள் என்று அவர்கள் நம்பினர். காவல்துறைக்கும் அந்த எண்ணம் இருந்தது.

அதனால் அந்த மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. இந்த முறை தாவூத் ஒரு வேலையை செய்தான். தனது தங்கையின் கணவனை கொன்றவர்களை பழி வாங்க வேறு நபர்களை அனுப்பினான்.

போனவர்கள் கொன்றார்களா? அடுத்து என்ன நடந்தது ?

http://www.vikatan.com/news/article.php?aid=54960

  • தொடங்கியவர்

சோட்டா ராஜன் தலைக்கு மேல் தொங்கும் கத்தி; தாதா தாவூத் இப்ராஹிம் (தொடர் 10)

 

dawood%2010%20logo.jpg

சோட்டா ராஜன் உயிருடன் இருப்பதால் தாவூத்துக்கு நிம்மதி இல்லை. கடந்த பத்து நாட்களில் தாவுத்தின் அண்டர் வேல்ட் பிசினஸ்களின் புள்ளி விபரங்கள் மும்பை பங்குச்சந்தை நிலவரத்தைப்போல சரிய ஆரம்பித்து இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் எப்படியும் தாவூத்தை பிடித்து விட வேண்டும் என்று இந்திய உளவுத்துறை பல்வேறு வேலைகளை கையில் எடுத்து செய்து வருகிறது. அதன் பின்னணிதான் சோட்டா ராஜன் டெல்லி கொண்டு வரப்பட்டதும், அதையொட்டி நடக்கும் விஷயங்களும்!

தாவூத்தை பிடித்து இந்தியா கொண்டு வரவேண்டும் என்று உளவுத்துறை நினைப்பதைப்போலவே சோட்டா ராஜன் கதையையும் முடித்து விடவேண்டும் என்று தாவூத்தின் தரப்பு பல்வேறு வேலைகளை பார்த்து வருகிறது.

gun.jpgமும்பை, டெல்லி, பெங்களுரு, கொச்சின், விசாகபட்டினம், பீகார் என்று பல்வேறு இடங்களில் தாவூத்தின் ஆட்கள் கழுகுகளாய் வலம் வருகிறார்களாம் இந்திய உளவுத்துறையின் பிடியில் இருக்கும் சோட்டா ராஜனை தூக்குவதற்கு.  இதில் இரண்டு அரசியல் பேசப்பட்டு வருகிறது. ஓன்று தாவூத்திற்கு இது தன்மானப்பிரச்சனை, மற்றொன்று தாவூத்தின்  மும்பை நிழல் உலகத்தை யார் நிர்வாகம் செய்வது என்பது போன்ற இரண்டு அரசியல் விசயங்கள் இருப்பதால் சோட்டா ராஜனின் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல, தாவூத்தின் ஆட்களின் துப்பாக்கிகள் எப்பொழுதும் சோட்டா ராஜனின் நெற்றியினை குறிபார்த்து பார்த்துக்கொண்டே இருக்கிறது.

அதனால்தான் சோட்டா ராஜனுக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருக்கும் போலீஸ் அதிகாரிகள் கூட ஒரு சிலரை தவிர வேறு யாரும் சோட்டா ராஜனை நெருங்க முடியாது. இதற்கு இடையில் தாவூத்தின் இந்திய வழித்தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளன.

அதோடு தாவூத்தின் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுப்பது ஐ.எஸ் அமைப்பு உள்பட பாகிஸ்தானில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் என்று பல்வேறு ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளை கைகளில் வைத்துக்கொண்டு வளைகுடா நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், என்று பல்வேறு உலக நாடுகளில் தாவூத்தின் கட்டுமான தொழில்கள், ஷாப்பிங் மால்கள், எரிபொருள் நிறுவன முதலீடுகள், மற்றும் ஆயுதம் விற்பது போன்ற முக்கியமான அண்டர்கிரவுண்ட் வேலைகளின் பங்குகளை அந்நாட்டின் அரசுகளோடு பேசி தாவூத்தை முடக்கும் வேலைகளை இந்திய உளவுத்துறை செய்து வருகிறது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருகிறதோ என்னவோ தாவூத் விசயத்தில் பயங்கரமாக வேலை செய்கிறது.

இதற்கெல்லாம் சோட்டா ராஜன்தான் காரணம் என்று சோட்டா ராஜனை காலி செய்யும் அனைத்து வேலைகளையும் கனக் கட்சிதமாக தாவூத் செய்து வருவதோடு தனக்கு எதிராக விரிக்கப்பட்ட வலைகளை தன் 'உலக' அரசியல் செல்வாக்கால் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்தெறிந்து விட்டு யாரும் தனக்கு தடை போட முடியாது என்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது தாவூத்தின் 'டி' கம்பெனி.

dawood%2010%20600%201.jpg

இதற்கு இடையில் சோட்டா ராஜனை இந்தியா கொண்டு வரும்பொழுது தூக்கும் வேலையை, தாவூத்தின் தளபதியாக வலம் வரும் சோட்டா ஷகிலிடம் கொடுக்கப்பட்டது. சோட்டா ஷகில் பத்துக்கும் மேற்பட்ட குழுவிடம் வேலைகளை பிரித்து கொடுக்கப்பட்டு, காத்து இருந்தபொழுது அதில் முக்கியாமான நபர் சையத் நியாமத் என்கிற நபர் இப்பொழுது பெங்களூரில் போலீஸில் சிக்கி, விசாரணை நடந்து வருகிறது. சையத் நியாமத் சோட்டா ராஜனை குறிவைத்து காத்திருந்த நபர்களுள் முக்கியமான நபர் என்று பேசப்பட்டு வருகிறது.

சோட்டா ஷகிலுக்கும் – சோட்டா ராஜனுக்கும் விரிசல் தாவூத்திடம் இருவரும் வேலை பார்த்த காலத் திலேயே தொடங்கி விட்டது. ஆரம்பத்தில் ஷகிலும்- ராஜனும் நல்ல நெருக்கத்தில்தான் இருந்தார்கள். தாவூத்தின் குரூப்பில் ராஜனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் உடனே அதை ராஜனுக்கு தெரியப்படுத் துவது ஷகில்தான்.

பின்னாளில் அந்த நெருக்கம் சௌத்யா என்பவனால் முறிவானது. சௌத்யாவும் தாவூத்தின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவன்தான். சோட்டா ராஜனுக்கு அடுத்த கட்டத்தில் இருந்தவன். ராஜனை காலி செய்து அந்த இடத்திற்கு சௌத்யா வருவதிற்கு ஷகிலை பயன்படுத்தினான்.

அதனால் சோட்டா ராஜனை பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் தாவூத்திடம் போட்டுக் கொடுத்து வந்தான் சௌத்யா. சோட்டா ராஜன் அவனுக்காக ஆட்களை வளர்த்துகொண்டு டி கம்பெனி நிழலில் செழிப்பாக வளர்வதாக புகார் கூறினான். தாவூத் நம்பவே இல்லை. ஆனால் தாவூத்தின் தங்கை கணவர் இப்ராஹிம் பார்க்கர் கொலைக்கு பலி வாங்காமல் காலம் கடத்தியதால் தாவூத் சோட்டா ராஜன் மீது முதல் முறையாக கோபப்பட்டான்.

dawood%2010%20600%202.jpg

பார்க்கரை கொலை செய்த அருண்காவ்லியின் ஆட்கள் நான்கு நபர்களை கொலை செய்த நான்கு நபர்களில் ஷைலேஷ் ஹால்தான்கர், பிபின் ஷிரோ ஆகிய இருவரும் மும்பை ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸ் உயர் பாதுகாப்போடு இருந்தனர். அவர்களை அங்கு வைத்தே கொலை செய்ய சௌத்யா திட்டம் தீட்டி தாவூத்திடம் அனுமதி கேட்டான். முதல் முறையாக சோட்டா ராஜனுக்கு தெரியாமல் இந்த கோலைத்திட்டம் தீட்டப்பட்டதோடு, செயல்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.

சௌத்யாவும் சோட்டா ஷகிலும் இணைந்து இந்த வேலையை செய்ய ஆயத்தம் ஆனார்கள். இந்த வேலையை மட்டும் வெற்றிகரமாக முடித்து விட்டால் சோட்டா ராஜனை தாவூத்திடம் இருந்து எப்படியும் கழட்டி விடுவதோடு சோட்டா ராஜனின் கதையை முடிக்கவும் பின்னாளில் பிளான் வைத்து இருந்தான் சௌத்யா. ஆனால் இந்த விஷயம் எல்லாம் ஷகிலுக்கு தெரியாது.

dawood%2010%20saheel%281%29.jpgஅவனை பொறுத்தவரை தாவூத்திற்கு மேலும் நெருக்கமாக வேண்டும், அதோடு தாவூத்தின் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்தவர்களை வெறி தீர கொல்லவேண்டும். அந்த செயலால் கண்டிப்பாக தாவூத்தின் குடும்பத்தில் நல்ல பெயர் இருக்கும் என்பதால் தீவிரமாக களத்தில் இறங்கினான்.

மும்பையின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஜேஜே மருத்தவமனையில் தினசரி லட்சக்கணக்கில் மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வதுண்டு. தவிர அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு இருந்ததால் அவர்களை மீறி கொலை செய்வது என்பது சவாலான விஷயம். தவிர பொதுமக்களின் உயிருக்கு குந்தகம் விளைவித்து பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்று தாவூத் சொல்லி இருந்ததால் மூன்று நாட்கள் அந்த மருத்துவமனையை வட்டமடித்தனர் சௌத்யாவின் ஆட்கள்.

போலீஸ்காரர்கள் இரவு பகல் என்று மாறி காவல் இருந்து வந்தனர். பகல் நேரத்தில் துப்பாக்கிகளை கொண்டு தாக்கினால் பெரும் சலசலப்பு உண்டாக்கி மருத்துவமனையின் அமைதி கெட்டுவிடும் என்று அதிகாலை நேரத்தை தேர்வு செய்தனர்.

சொன்னபடியே அதிகாலை மூன்று மணிக்கு பத்து பேர் கொண்டு குழு மருத்துவமனைக்குள் நுழைந்தது.அவர்கள் அனைவரின் கைகளிலும் AK 47 துப்பாக்கிகள். அதிகாலை நேரம் என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கத்தில் இருந்தனர். உள்ளே நுழைந்த நபர்கள் கட்டிலில் படுத்திருந்த ஹால்தான்கரை சுட்டனர். அவனது உடலை துப்பாக்கி துளைத்து எடுத்து எதிரே இருந்த சுவர்களில் இரத்தம் சதையும் கலந்த கறித்துண்டுகள் தெறித்து ஒட்டியது. அவனது உயிர் கொடூரமாக கொல்லப்பட்டது. பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் பதுங்கிக்கொண்டு திருப்பி தாக்குதல் நடத்தினர்.

அங்கு நடந்த களேபரத்தில் பிபின் ஷிரோவை ஆளை காணவில்லை. அவனை பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு மாற்றி இருந்தனர். இந்த விஷயம் சௌத்யா ஆட்களுக்கு தெரியாது. அதனால் அவனையும் கொல்லாமல் போகக் கூடாது என்பதால் அங்கு அவனை தேடுதல் வேட்டை நடந்தது. அதோடு அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரோடு துப்பாக்கி சண்டையும் நடந்தது.

அதில் பக்கத்தில் இருந்த நோயாளி, அவரின் உறவினர், நர்ஸ் என்று ஒரு சிலர் காயமடைந்தனர். அதோடு பாதுகாப்புக்கு இருந்த இரண்டு போலீஸ்காரர்ளும் உயிரிழந்தனர். ஆனால் சௌத்யா குழுவில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

dawood%2010%20600%204.jpg

இந்த தாக்குதல் சம்பவத்தில் கடைசி நேரத்தில் இடம் மாறியதால் பிபின் உயிர் பிழைத்தான். ஆனால் அடுத்த நாள் செய்தித்தாள்களில் இந்த சம்பவம் தலைப்பு செய்தியாக வந்ததோடு, லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு பொது மருத்துவமனையில் இவ்வளவு பெரிய துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியதோடு, ஆளும் அரசுக்கு மிகப்பெரிய கெட்டபெயரை உண்டாக்கியது. ஆனால் தாவூத்தின் ஆட்கள் செய்த சம்பவத்தால் அந்த மும்பை மாநகரமே அதிர்ந்தது. தாவூத்தின் எதிராளிகளும் இந்த சம்பவத்தால் மிகவும் கலவரமானார்கள்.

இந்த சம்பவத்தால் குஷியான தாவூத் இந்த சம்பவத்தை முன்னின்று நடத்திய சௌத்யா-ஷிகில் இருவரையும் பாராட்டும் விதமாக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தான். அந்த பார்ட்டியில் முளைத்தது சோட்டா ஷகிலுக்கும் - சோட்டா ராஜனுக்கும் ஆன நேரடி பகை. புகையும் - பகையும் யாரை விட்டது?
http://www.vikatan.com/news/article.php?aid=55269

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓடிப்போய் சரண்டர் ஆனான். இந்திய ஹை கமிஷன் அதிகாரிகள் தாவூத்தை வீழ்த்த சோட்டா ராஜனை கையில் எடுக்க ஆயத்தமானார்கள். சோட்டா ராஜனின் கவனம் முழுவதும் தாவூத்திடம் இருந்து எப்படியாவது தப்பித்து போக வேண்டும் என்ற ஒரே எண்ணமாக இருந்தது. ஒரே நாளில் தாவூத்தின் முக்கியமான டைரியை துபாயில் இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரியிடம் கொடுத்தான்.[quote]

ஒரு மணி நேரத்தில் சோட்டா ராஜனுக்கு சென்னையில் உள்ள ஒரு முகவரியில் இருந்து பாஸ்போர்ட், விசா ரெடி செய்து காட்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மலேசியாவிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

 

இந்த வசனத்தை வாசித்தவுடன் மலெசியவிலிருந்த எங்க‌ன்ட ஒருத்தர் சிறிலங்கா ‍ஹை கொமிசனுடன் தொடர்பு கொண்டு .........தப்பி பிழைத்த 

 

  • தொடங்கியவர்

தெறிக்கவிட நினைத்த தாவூத்! (தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர்- 11)

 

dawood%2011%20logo.jpg

1980 களில் துபாய் நகரம், அதன் பிரமாண்டமான கட்டடங்களைப்போலவே வளர்ந்து எழும்பி வந்தது. பின்னாளில் பொருளாதாரத்தில் பெரிய நாடாக உருவெடுக்கப்போகிறது என்று தாவூத் உணர்ந்து கொண்டு, அரபு நாட்டின் முக்கியமான அதிகாரிகளோடு தொடர்பை பலப்படுத்திக் கொள்ள, பல்வேறு வேலைகளை செய்ய ஆரம்பித்த காலம். பின்னாளில் தனது தலைமை அலுவலகம் துபாயாக மாறப்போகிறது என்று தாவூத்திற்கே தெரியாது.

ஆனால் துபாய் நகரத்தில் உள்ள அரச குடும்பத்தில், பயங்கர செல்வாக்கான மனிதராக வலம் வர தாவூத்திற்கு கை கொடுத்தது பல்வேறு பழமையான பொருட்கள், விலையுயர்ந்த வைரங்கள், அதைவிட இந்திய நடிகைகளின் உபயத்தால் துபாய் அரச குடும்பத்தில் உள்ள முக்கியமான ஆண்களின் இதயத்தில் இடம் கிடைத்து தாவூத்திற்கு.

இந்திய சினிமாக்கள் கொண்டாடி தீர்த்த அழகிகள், பல்வேறு இந்திய இளைஞர்களின் ஆதர்ஷ கனவுக்கன்னிகள் பலரின் இரவுகள் துபாய் நகரத்தின் ஹோட்டல்களில் கழிந்தன. தாவூத்தின் பகல் பொழுதுகள் பலநாட்கள் மும்பையில் கழிந்தாலும், திடீர் இரவுப்பொழுதுகள் துபாய் நகரில் கழிந்தன. மும்பையும், துபாய் நகரமும் நெருக்கமாக மாறிப்போனது தாவூத்திற்கு.

dawood%208%20lefttt.jpgதாவூத்தின் தொடர்புகள் எல்லாம் மேல்தட்டு வர்க்கத்தோடு வலம் வர ஆரம்பித்தன. அதே நேரம் மும்பை மாநகரத்தில் தாவூத்தின் தொழில்களை முடக்க விடாமல் அனைத்து வேலைகளையும் பார்த்து வந்தான் சோட்டா ராஜன்.

பெரும்பாலும் முஸ்லிம் ஆட்கள் தாவூத்தின் டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். சோட்டா ராஜன் தலைமை நிர்வாகி ஆனதும், அவனுக்கு நெருக்கமான பல்வேறு இந்துக்களும் வேலை பார்க்க ஆரம்பித்தனர். இப்பொழுது டி கம்பெனியில் முஸ்லிம்களுக்கு சரி சமமாக இந்துக்களும் வேலை செய்ய ஆரம்பித்தனர்.

மும்பை, குஜராத் உள்பட பல்வேறு நகரங்களை சோட்டா ராஜன் அவனது கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தான். மும்பையில் அரசு அதிகாரிகளை மிரட்டி,  தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அரசு சார்பில் நடக்கும் சாலை போடுவது, பில்டிங் கட்டுவது போன்ற அனைத்து  காண்ட்ராக்ட்களையும் கொடுக்க செய்தான். அதனை மறுக்கும் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

விடுமுறை நாள் ஒன்றில் மாநகராட்சி அதிகாரி ஒருவர், அவரது குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்று திரும்பும் வழியில், கொடூரமாக தாக்கப்பட்டு அவரது கையை உடைத்து விட்டு சென்றது ஒரு குழு. போலீஸ் விசாரணையில்,  சோட்டா ராஜனின் பெயரை சொல்லியும் மாநகராட்சி டெண்டர் ஒதுக்கவில்லை என்ற காரணம் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கும் சோட்டா ராஜனுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் சோட்டா ராஜனின் பெயரை தவறாக பயன்படுத்தியது தெரிய வந்ததும், அந்த சம்பவத்திற்கு காரணமான ஒப்பந்தகாரர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மும்பையில் உள்ள பெரும் செல்வந்தர்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியது. மறுநாளே பல்வேறு நபர்கள் சோட்டா ராஜனை தேடி வந்து, மும்பை மாநகரில் தங்களது தொழில் நல்லபடியாக நடக்க 'தாவூத் பாயின் ஆசியும், உங்களின் உதவியும் வேண்டும்' என்று சோட்டா ராஜனிடம் சரணடைந்தனர். பெரும் ஹோட்டல்கள், மில், பெரும் நகை கடை முதலாளிகள் என்று பெரும்பாலான நபர்கள் வந்து தங்களை தாவூத்தின் பக்கம் இருப்பதாக அறிவித்துக் கொண்டதோடு, மிகப்பெரிய அளவிலான தொகையையும் கொடுத்து விட்டு சென்றனர். அதில் இருந்து பல்வேறு நபர்கள் தாவூத்திற்கு மாதா மாதம் பெரும் தொகையினை மாமூலாக கொடுத்து வந்தனர்.

dhavooth%204%20550%2011.jpg

 

இதனால் தாவூத்தின் சொத்து பட்டியல்கள் கிடுகிடுவென உயர்ந்தன. அதோடு பல்வேறு தொழில்களை சோட்டா ராஜன் செய்து வந்தான். ஹோட்டல்கள், கட்டுமான தொழில்கள், ஷாப்பிங் மால்கள் என்று சோட்டா ராஜன் முதலீடு செய்தான். அனைத்து தொழில்களிலும் பணம் கொட்டியது. தாவூத்திற்கு சோட்டா ராஜனை நினைத்து பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டானது. அதனால் மற்ற நபர்கள் மேலும் பொறாமை கொண்டனர். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சோட்டா ராஜனை பற்றி பற்ற வைக்க தவறவில்லை ஷோட்டா ஷகீலும் மற்றவர்களும்.

ஆனாலும் தாவூத் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. தாவூத்திற்கு சோட்டா ராஜனை பற்றி நன்கு தெரியும். அவன் வந்த பிறகுதான் அவனால் நிம்மதியாக இயங்க முடிந்தது,  அவன் வந்த பிறகுதான் செல்வமும் பெருகியது. தவிர சோட்டா ராஜன் தனக்கு இதுவரை எந்த கெடுதலும் செய்தது இல்லை. தனது சொல்லை மீறி ஒருநாளும் நடந்து கொண்டது இல்லை. தனது மனம் என்ன நினைக்கிறதோ அதை தவறாமல் செய்து விடும் அதீத ஆற்றல் சோட்டா ராஜனிடம் இருப்பதை உணர்ந்தான். ஒரு முறை தாவூத் கடந்து வந்த பாதையை நினைத்து பார்த்தான். ஆரம்ப கால கட்டங்களில் எவ்வளவு பிரச்னைகள், தொழில் போட்டிகள், எத்தனை துரோகங்கள், எத்தனை சறுக்கல்கள்... அதில் வீழாமல் எழுந்து நிற்க  வேலை செய்த நேரங்களை தனிமையில் நினைத்து பார்த்துக்கொண்டு சோட்டா ராஜனை பற்றி வந்த புகார்களை பின்னுக்கு தள்ளினான் தாவூத்.                                        

dawood%208%20308.jpgதாவூத் இன்று கட்டுமானம், எரிபொருள், எண்ணெய் ரீஃபைனிங், மால்கள், மொபைல் நெட்வொர்க், மருந்து பொருட்கள் உற்பத்தி என்று வெளி உலகத்திற்கு நல்ல தொழில்களிலும்,  ஆயுதம் கடத்துவது, போதைப்பொருள் கடத்துவது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு, பல்வேறு நாடுகளுக்கு எதிரான பகையை வலுப்படுத்தும் நிழல் உலக தொழில்களிலும் கோலோச்சுகிறான். இதன் ஆரம்பகால கட்டங்களில் சோட்டா ராஜனின் பங்கு மிகப்பெரியது.

குஜராத்தில் இருந்து தண்ணீர் பாக்கெட்களில் சாராயம், மது பானங்களை மும்பைக்கு கடத்த ஆரம்பித்த டி கம்பெனிக்கு, இன்று இன்டர்நேஷனல் அளவிற்கு கடத்தல் தொழில் செய்ய  ஆரம்பத்தில் கை கொடுத்தது ஓபியம் என்னும் போதை மருந்துதான். இன்று போதைக்கான வடிவம் பல்வேறு பரிணாம வளர்சிகளை அடைந்தாலும், அன்றைய காலக் கட்டங்களில் ஓபியத்தை பெருமளவில் பல்வேறு நாடுகள் நம்பி இருந்தன. அந்த ஏற்றுமதி தொழிலை தாவூத்தின் ‘டி’ கம்பெனி பெருமளவில் செய்தது. அவர்களின் நெட் உலகம் முழுவதும் பரவி இருந்தது.  

பாகிஸ்தான் நாட்டின் கண்ட்ரோலில் உள்ள கைபன், பக்துன்வா ஆகிய இடங்களில் ஓபியத்தை விளைவிப்பார்கள். அதை பாகிஸ்தான் தலைநகர் கராச்சிக்கு தரை வழியாக கொண்டு வருவார்கள். அங்கிருந்து தரை வழியாகவே இந்தியாவிற்குள் ராஜஸ்தான் ,மும்பை ,குஜராத் ஆகிய நகரங்களுக்கு  வந்தடையும். இதில் பெரும்பாலும் அதிக சரக்குகள் மும்பையில்தான் வந்தடையும்.

சரக்குகளை தரம் பிரித்து அழகான பாக்கெட்டுகளில் பேக் செய்து, பல்வேறு ஏஜென்சிகளுக்கு பிரித்து கொடுக்கப்படும். அங்கிருந்து பல்வேறு பொருட்கள் கடல்வழியாக தூத்துக்குடி, சென்னை துறைமுகம் வழியாக கொழும்பிற்கு செல்லும். அங்கிருந்து சிலர் மூலம் ஃபிரான்ஸ், ஜெர்மனி, லண்டன் போன்ற பெரும் நகரங்களுக்கு பறக்கும். திடீரென்று கடல் வழியாகவும் சரக்குகளை அனுப்புவார்கள். ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கானா, நைஜீரியாவிற்கும் மும்பை வழியாக அதிக அளவில் செல்வதுண்டு.  இந்த தொழில் முறையை டி கம்பெனி பக்காவாக செய்து வந்தது. இந்த காலக்கட்டம் தாவூத்தின் பொற்காலம் என்று சொல்வதுண்டு.

dawood%208%20600%201.jpg

இந்த தொழில்களால் உலகம் முழுவதும் தாவூத்தின் அதிகாரம் பரவ ஆரம்பித்தது. உலக நாடுகள் முழுவதும் சுமார் இருபதாயிரம் நபர்கள் தாவூத்துடன் சேர்ந்து, பல்வேறு விற்பனை குழுக்களாகவும், தீவிர நுகர்வோர்களாகவும் இந்த நெட்வொர்க்கில் இருந்தனர். இதனால் பல்வேறு நாடுகள் தாவூத்திற்கு கிடுக்கு பிடி போட்டது.

ஆனாலும் அங்கு உள்ள உள் அரசியல் பலவீனங்களை கண்டு பிடித்து மாற்று சக்திகளை உருவாக்கி தமது தொழிலை செழுமையாக நடத்தி வந்தது ‘டி’கம்பெனி. இப்படி போய்க்கொண்டு இருந்த தாவூத்திற்கு ஒரு கட்டத்தில் இதெல்லாம் சலிப்பு தந்தது. உலகமே உற்றுப்பார்க்கும் ஒரு சம்பவத்தை செய்து, அனைவரையும் தெறிக்க விட வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான். அந்த சம்பவம் என்ன?

http://www.vikatan.com/news/coverstory/55624-dawoodmasterplan.art

  • தொடங்கியவர்

எங்கிருந்தாலும் மும்பையை கண்ட்ரோலில் வைத்திருந்த தாவூத்! (தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர்- 12)

 

தாவூத்திற்கு பல்வேறு வழிகளில் பணங்கள் குவிய ஆரம்பித்தன. துபாய் நகரத்தில் தனியாக ஒரு மன்னரைப்போல ஆட்சி செய்துகொண்டு இருந்தான் தாவூத். அதோடு இந்தோனிசியா, ரஷ்யா, கம்போடியா, மலேசியா, ஹாங்காங் உள்பட பல்வேறு நாடுகளிலும் அவனது தொழில் தொடர்புகளை கொண்டு போனான். அதனால் பிசினஸ் தொடர்புகளும் உயர்ந்தது. அவன் விரும்பிய நாடுகளில் எல்லாம் தொழில் செய்ய அவனுக்கு இருந்த தொடர்புகள் உதவின.  துபாயில் இருந்து கொண்டே மும்பையை ஆட்டிப் படைத்தான். மும்பையில் நடக்கும் எந்த ஒரு முக்கிய நிகழ்வும் தாவூத்திற்கு தெரியாமல் நடக்காது. ஆக்டோபஸ் போல அவனது அதிகாரங்கள் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களை ஆக்கிரமைப்பு செய்தது.

dawood1-02.jpg

அதே நேரத்தில் சோட்டா ராஜனிடம் இருந்த ஒட்டுமொத்த அதிகாரங்களையும் பறிக்க திட்டமிட்ட சோட்டா ஷகில் ஆட்கள்,  தாவூத்திடம் பல்வேறு விஷயங்களை போட்டுக்கொடுத்தனர். மும்பையில் தனியாக ஆட்சி நடத்தி வருகிறான் தாவூத். அவனுக்கு தனியாக ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், கட்டுமான நிறுவனங்கள் என்று பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக போட்டுக் கொடுத்தனர். அதோடு, அதிக அளவில் அவனது ஆட்களை கொண்டு வந்து ‘டி’ கம்பெனி ஆட்கள் என்று சொல்லாமல் சோட்டா ராஜனின் ஆட்கள் என்று சொல்லியே வசூல் செய்வதாகவும், தனியாக ஆட்களை வைத்து வேலை செய்து வருவதாக சொன்னார்கள். சோட்டா ராஜன் தனியாக சொத்துகள் வாங்கியதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்த தாவூத், தனியாக ஆட்களை வைத்து வேலை செய்வதாக தெரிந்ததும் உடனடியாக சுதாரித்துகொண்டு, சோட்டா ரஜனிடம் இருந்த முக்கியமான பொறுப்புகளை எல்லாம்  சோட்டா ஷகில் உள்பட நான்கு நபர்களுக்கு பிரித்துக்கொடுத்தான்.

முன்பு சோட்டா ராஜனை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது. அடிதடி தவிர வேறு ஒரு விஷயங்களை செய்வது என்றாலும் சோட்டா ராஜன்தான் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், அதோடு அந்த திட்டத்திற்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுப்பது எல்லாமே சோட்டா ராஜன் மட்டும்தான். ஆனால், இந்த முறை அப்படி இல்லை. பல்வேறு குழுக்களுக்கு வேலைகளை பிரிதுக்கொடுத்து விட்டான் தாவூத். இருந்தாலும் முக்கிய நிர்வாக வேலைகளை மட்டும் செய்து வந்தான் சோட்டா ராஜன்.

dawood-chhoto01.jpg

சோட்டா ஷகில் டி குரூப்பில் தனியாக வளர்ந்து வர ஆரம்பித்தான். மும்பையில் வேலை இல்லாமல் சுற்றி திரிந்த பதின் வயது இளைங்கர்களை தேடிப்பிடித்து, அவர்களை மத ரீதியான புள்ளியில் இணைத்தான். அதோடு விடவில்லை, அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கி கொடுத்து பயிற்சி கொடுத்தான். அந்தப் பயிற்சி அவர்களுக்கு மிக அதிகமாக உதவியது. உள்ளூர் எதிரிகளை சமாளிப்பது எளிதாக போனது. வேட்டை நாய்களை வளர்ப்பது போல அவர்களை வளர்த்து வந்தான் ஷகில். யாரை கடிக்க வேண்டும் என்று சொல்லி நாயின் கழுத்து கயிறை அவிழ்த்து விட்டால் எப்படி பாயுமோ அதைப்போல பாய்ந்தார்கள் ஷகிலின் ஆட்கள்.

ஷகிலின் ஆட்களுக்கு பணம் இல்லையென்றால் பல்வேறு ஆட்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தனர். இதனால் ஏரியா விட்டு, ஏரியா போனதால் பிரச்னை வெடித்தது. உள்ளூர் அடியாட்களுக்குள் மோதல் உண்டானது. சின்னச் சின்ன சண்டைகளுக்கு கூட துப்பாக்கிகளை எடுத்து சுட்டுக்கொண்டார்கள். இன்று சென்னையில் நடக்கும் வார இறுதி பார்ட்டிகளைப்போல, அன்று மும்பையில் வெள்ளி இரவு நேரங்களில் பார்ட்டிகள் நடக்கும். அந்த பார்ட்டிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த தாதாக்களுக்கு மரியாதைகள் கிடைக்கும். அதற்காகவே பல்வேறு மும்பையில் இருந்த இருபது வயதை கடக்காத சிறுவர்கள் கூட தாதாக்களின் பிடியில் இருந்தார்கள். இவர்களை வைத்து பெரிய தலைகளை சாய்த்து காரியம் சாதித்து வந்தான் ஷகில்.

அதில் தாவூத்தின் ஆட்களுக்கும். அருண் காவ்லியின் ஆட்களுக்கும் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. அப்படி ஒரு மோதல் இருவரின் தலைமை வரை மேலும் பகைமையை உண்டாக்கியது. அருண் காவ்லியின் ஆட்கள் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டி வந்தனர். அதனால் பல்வேறு சண்டைகள் வந்தன. அருண் காவ்லி சார்பில் அவனது தளபதியாக இருந்த மும்பை பைகுலா பகுதியை சேர்ந்த பாபு கோபால் என்பவன் ஆதிக்கம் செலுத்தி வந்தான். அவனது எல்லை தாண்டி அவன் பல்வேறு கொலைகளை செய்து வந்ததால் தாவூத்தின் ஆட்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்தான். இதுபோன்ற சின்னச் சின்ன செயல்களை செய்ய சோட்டா ராஜனோ, ஷகிலோ இறங்கி வருவது இல்லை. சமயம் பார்த்து கிடைக்கும் கேப்பில் சிதைத்து விட்டு செல்வது சோட்டா ராஜனின் வழக்கம். பாவுவை சாய்க்க வாய்ப்பு வரும் வரை காத்துக்கொண்டு இருந்தான் சோட்டா ராஜன்.

பாபுவை கொலை செய்வதற்கு உதவி வேண்டும் என்று எந்த குரூப்பையும் சேராத ஒரு இளைங்கன் பல்வேறு ரவுடிகளின் உதவிகளை நாடி இருந்து இருக்கிறான். அவனைப்பற்றி அறிந்து கொண்ட சோட்டா ராஜன் உடனடியாக அவனை சந்திக்க ஏற்பாடு செய்தான். எதற்காக அவனை கொலை செய்ய வேண்டும் என்று கேட்டான் சோட்டா ராஜன். அவனும்அவனது ஆட்களும் அருண் காவ்லி பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பததோடு, அவர்கள் பகுதி பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக குமுறினான். அதற்காக பாபுவை மூன்று முறை கொலை செய்ய திட்டமிட்டு, அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக சொன்னான். அடுத்த முறை கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு வரும், நம்பி போ என்று வாக்குறுதி கொடுத்தான் சோட்டா ராஜன்.

dawood%2012%2001.jpg

கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜே சர்க்கிள் காவல் நிலைய போலீஸ் ஸ்டேசனில் அடைக்கப்பட்டு இருந்தான் பாவு கோபால். இந்த விஷயம் விஜய்க்கு தெரியப்படுத்தப்பட்டது. துணைக்கு நான்கு நபர்களுடன் ஜே சர்க்கிள் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சிறையில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் போனார்கள். அவர்கள் காவல் நிலைய சிறையில் வைத்து பாபுவை போட்டுத்தள்ள ஆயத்தமாக வந்தார்கள். இவர்கள் வருவதை அறியாத உயர் போலீஸ்கார்கள் யாரும் இல்லை. பாதுகாப்புக்கு மிக குறைந்த அளவிலான போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்தனர். முடிவுகள் எடுக்க கூடிய உயர் அதிகாரி பாதுகாப்புக்கு இல்லை என்பதால், விஜய் குரூப்க்கு அது வசதியாக போய்விட்டது. ஆரம்பத்தில் சாப்பாடு கொடுப்பதாக சொல்லி உள்ளே இரண்டு நபர்களை அனுப்பினான் விஜய். இவர்கள் வந்ததை முதலில் பார்த்த காவலாளி தகவலை சொல்லுவதற்குள் காவல் நிலையத்திற்குள் போய் விட்டனர். 

நள்ளிரவில் இரண்டு கார்களில் வந்து இறங்கியதை சிறையின் வாசலில் இருந்த காவலாளி உஷாரானான். அதற்குள் சிறையின் கதவுகளை வெடி குண்டுகளை வீசி தகர்த்தான் விஜய். வெடிகுண்டின் புகை மறைவதற்குள் சிறையின் அறைக்கு உள்ளே புகுந்த விஜய், அதிர்ச்சியில் சிறையின் மூலையில் பயந்து ஒட்டி நின்று கொண்டு இருந்த பாபுவை துப்பாகியால் துளைத்து எடுத்தான். முப்பது நொடிகள் கூட ஆகவில்லை பாபு இறந்து சரிந்துவிட்டான். ஆனாலும் ஆத்திரம் அடங்கவில்லை விஜய்க்கு. பிணத்தின் அருகில் சென்று விஜய் உடலை எட்டி உதைத்து விட்டு, அவனது மார்பில் ஏறி அமர்ந்து கொண்டு, சுத்தியலால் பாபுவின் தலையில் மாறி மாறி அடித்தான். ஐந்து நிமிடங்களில் அவனது தலையின் மண்டை ஓடு வெடித்தது. உள்ளே இருந்த மூளை சிதறியது. விஜய்க்கு ஆத்திரம்  தீர்ந்த பொழுது அந்த இடத்தில் மண்டை முழுவதும் சிதைக்கப்பட்டு ஒழுங்கில்லாத முண்டம் மட்டும் இருந்தது. அந்த சிறையின் சுவர்களில் ரத்தமும், மண்டையின் உள்ளே இருந்த மூளையும் கலந்த சதைகள் சிதறிப்போய் பிசுபிசுத்து ஒட்டியிருந்தன. அங்கு நடந்த கொடூர கொலைக்கான ஆதாரங்களுடன்.

dawood%2012%2002.jpg

அந்த தாக்குதல் நடந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் விஜய்யும், அவனது ஆட்களும் அங்கிருந்து தப்பித்து போய்விட்டனர். அந்த சம்பவத்தை தடுக்க வந்த மூன்று போலீஸ்காரர்களை துப்பாக்கியால் தாக்கியதில் மருத்துவமனையில் அட்மிட் ஆன ஒரு கான்ஸ்டபிள் இறந்து போனார். இந்த சம்பவம் மும்பையை உலுக்கியது. எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத ஒருவனால் இப்படி சிறைக்குள் வந்து கொடூரமாக எப்படி கொலை செய்ய முடியும் என்பதை மட்டும் ஆராய்ந்தனர். பத்திரிகைகளில் இந்த சம்பவத்தை ரத்தத்தில் மிதக்கும் சிறைச்சாலை, தூங்கும் மும்பை போலீஸ் என்று மிக கடினமான வார்த்தைகளில் எழுதித்தள்ளினார்கள். காவல்துறையில்  இந்த கொலைக்கான காரணத்தை கண்டு பிடிப்பதை விட உடனடியாக இந்த சம்பவத்திற்கு காரணமான விஜய்யை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று விஜய்யை குறி வைத்து துரத்தியது மும்பை போலீஸ். இரண்டு வாரங்கள் கழித்து ஹோட்டல் ஒன்றில் வைத்து இரண்டு போலீஸ்காரர்கள் விஜய்யை சுட்டுக்கொலை செய்த பிறகே நிலைமை ஓரளவிற்கு ஓய்ந்தது.

மீதம் இருந்த அவனது நண்பர்கள் போலீஸில் சரணடைந்தனர். அதற்கு பிறகு அந்த வழக்கை சி.ஐ.டி போலீசார் கவனித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்ததாக காவல்துறையின் குற்ற ஆவணம் தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்தை பின்புலமாக இருந்தது தாவூத் என்கிற உண்மை பின்னாளில்தான் தெரிந்தது. அருண் காவ்லியின் ஆட்களை சம்பந்தமே இல்லாத ஒருவனை வைத்து, சிறைக்குள்ளே வைத்து  கொடூரமாக சிதைத்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் உண்டாக்கியது. தாவூத் எங்கிருந்தாலும் மும்பையை தனது கண்ட்ரோலில் வைத்து இருப்பதற்காக அடிக்கடி இதுபோன்ற செயலில் சத்தமில்லாமல் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது மும்பை அரசுக்கு.

சத்தமில்லாமல் இந்த சம்பவங்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அரசு தாவூத்தை வேட்டையாட ‘ஸ்கெட்ச்’ போட்டது.

அது என்ன?

http://www.vikatan.com/news/coverstory/55910-don-dawood-ibrahim-serial.art

  • தொடங்கியவர்

தாவூத்துக்கு பிடித்த நடிகை! ( தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர் -13)

 

dawood%20ibrahim%2013%20logo.jpg

காட்டன் மில்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் இஞ்சின்கள், புதியதாக எழுந்து வரும் அடுக்கு மாடி குடியிருப்புகள், முன்னணி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் என்று மும்பை மாநகரம் பல வண்ணங்களில் மின்னத் தொடங்கியது. அழகான மாநகரமாக மும்பை பெரும் கட்டடங்களால் எழுந்து  நிமிர்ந்து கொண்டு இருந்தது.

மும்பை மாநகரம் உருவாதைப் போல பல்வேறு டான்களும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டு இருந்தனர். சோட்டா ராஜன், தாவூத்தின் பெயர்களை மையமாக வைத்துக்கொண்டு பல்வேறு புதிய 'தாதா'க்கள் மும்பையை சேர்ந்த பெரும் பணக்காரர்கள், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தனர். தாவூத்தின் தளபதிகள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டனர்.

dawood%208%20308.jpgஅதில் சோட்டா ஷகீல் முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்தான். அதற்காக அவன் பல்வேறு புதிய இளைஞர்களை வேலைக்கு இறக்குமதி செய்து இருந்தான். அவர்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்து, ஆயுத டீல்கள், ரியல் எஸ்டேட், ஹவாலா பண பரிவர்த்தனை, சினிமாக்களுக்கு ஃபைனான்ஸ் தருவது, சினிமா பஞ்சாயத்துக்களை செட்டில் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தான். இதற்கான எல்லா அதிகாரங்களையும் ஷகீல், சௌத்யா, சரத் ஷெட்டி ஆகியோர் பிரித்துக்கொண்டனர்.

'சம்பவங்களை' முடித்துவிட்டு ஜெயிலுக்கு போகும் தாவூத்தின் ஆட்களை வெளியே எடுக்கவும், சிறையில் அவர்களின் தேவைகளை முடித்து கொடுக்கவுமே லட்சக்கணக்கில் செலவு செய்தார்கள். இதனால் போலீஸ், சிறை, நீதித்துறை என்று பல்வேறு வட்டாரங்களில் அவர்களுக்கு தொடர்புகள் மேலும் அதிகரித்தன. அதற்கு பரிசாக பணமும், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களும், நகைகளும் கொடுக்கப்பட்டன. பண ஆசை இல்லாத அதிகாரிகளை வளைக்க பாலிவுட் நடிகைகளை பயன்படுத்தினர். இந்த டீலிங் நீதித்துறை வரை நீடித்து இருந்தது. நேர்மையான பல்வேறு அதிகாரிகளின் குடும்பங்கள் மிரட்டப்பட்டன.

மும்பையில் தாவூத் தனி அரசாங்கத்தை நடத்தி வருவது பரவலாக பேசப்பட்டது. அரசு அதிகாரிகள் பலர் அரசிடம் வாங்கும் சம்பளத்தை விட தாவூத் போன்ற தாதாக்களிடம் அதிக சம்பளத்தை வாங்கினார்கள். இதனால் அரசு,  தாவூத் போன்றவர்களை ஒழிக்க பல்வேறு முடிவுளை எடுத்தாலும் அது தோல்வியிலேயே முடிந்தது.

அரசு ஒடுக்க ஒடுக்க அதே வேகத்தில் மீண்டும் அசுர வளர்ச்சியில் மும்பையில் டான்கள் எழுந்து வந்தார்கள். இந்த முறை பல்வேறு தொழில் அதிபர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் மிரட்டி பணம் வாங்கினார்கள். அதனால் சினிமா நட்சத்திரங்கள் பலர் தாதாக்களிடம் 'நட்பு' பாராட்டினார்கள். சில கொலைகளின் எதிரொலியாக இந்து-முஸ்லிம் சண்டைகள் நடக்க ஆரம்பித்தன. அந்த சண்டை அப்படியே பரவி பொதுமக்கள் மத்தயில் இந்து-முஸ்லிம் கலவரமாக வீதிக்கு வரத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல்வாதிகள் அவர்களின் ஆளுமையை காட்ட வெளியே வந்து, பஞ்சாயத்து பேச ஆரம்பித்தனர்.

dawood%202.jpg

சோட்டா ஷகீலுக்கு பி.ஜே.பியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான ராமதாஸ் நாயக் மீது கடும் கோபம் வந்தது. நாயக்கின் செயல்கள் எல்லாம் முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிராக இருப்பதாக நினைத்தான். அதனால் நாயக்கை கொலை செய்ய திட்டம் தீட்டினான் ஷகீல். அதற்கான பொறுப்பு ஷாஜித் என்பவனிடம் கொடுக்கப்பட்டது. அவன் பெரோஸ், ஜாவேத் ஆகியோர்களை வைத்து அதற்கான செயலில் இறங்கினான். அதற்கான நாளை குறித்துக்கொண்டு ஒரு பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்தனர்.

பரபரப்பான மும்பை பாந்த்ரா சாலையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரியுடன் ராம்தாஸ் நாயக், தம் நண்பர்கள் இருவருடன் சென்றுகொண்டிருந்தபோது காரை மறித்து இரண்டு நபர்கள் சுட்டார்கள். கார் கண்ணாடிகள் சில்லு சில்லாக உடைந்து உள்ளே இருந்தவர்கள் மீது தெறித்து குத்தியது. நாயக்கின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியை துாக்குவதற்கு முன் ஏ.கே 47 துப்பாக்கியின் குண்டுகள் அந்த காரை துளைத்து எடுத்தன.

சில நிமிடங்களில் நாயக்கின் ரத்தம் காரில் இருந்து வழிந்து சாலையில் ஓடியது. உயிரை விட்டார் நாயக். காரின் உள்ளே இருந்த மற்ற  இரண்டு நபர்களும் குத்துயிரும், குலையிருமாக கிடந்தார்கள். இரண்டு நிமிடங்களுக்குள் அத்தனை சம்பவங்களும் அரங்கேறிவிட்டன.

dawood%209%20600%203.jpg

கொலைகாரர்கள் யார் என்கிற விபரத்தை கண்டறிய முடியாமல் போலீஸ் திணறியது. அடுத்தடுத்த நாட்களில் இதுபோன்ற கொலைகள் சர்வ சாதாரணமாக மும்பையில் நடக்க தொடங்கின. மும்பையில் நடக்கும் எல்லா விசயங்களும் தாவூத்திற்கு முன்னரே சொல்லப்படும். சம்பவம் முடிந்ததும் தாவூத்திற்கு தகவல் கொடுக்கப்படும். ஆனால் தாவூத்,  துபாய் நகரத்தில் வானுயர்ந்த கட்டடத்தில் இருந்து கொண்டு வாழ்க்கையை ரசித்துக்கொண்டும், விருப்பப்பட்ட அழகிகளுடனும், இந்தியாவில் இருந்து துபாய்க்கு அழைத்து வரப்பட்ட பிரபல சினிமா நட்சத்திர அழகிகளுடன் இனிமையாக, ரம்யமாக பொழுதை கழித்துக்கொண்டிருந்தான்.

மும்பையில் பெரும்பாலான ஆண்களை தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கட்டிபோட்ட பிரபல நடிகை அவர். சாப்பிடக் கூட நேரம் இல்லாத அளவிற்கு பிசியாக இருந்த நடிகை. முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் நடித்து வந்தார். அவர் நடித்த எல்லாப்படங்களும் ஒரே நேரத்தில் ஹிட் அடித்தது. தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் தொகையாக பல லட்சங்களை அவரது காலடியில் கொட்டினர்.

நடிகையின் மேனேஜரும் நடிகைக்கு தெரியாமல் பணத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பல்வேறு நபர்கள் நடிகைக்கு நெருக்கடி கொடுக்கவும்,  நடிகையால் நெருக்கடியை தாங்க முடியவில்லை. எவ்வளவு அட்ஜஸ்ட் செய்தாலும் தொடர் நெருக்கடிகள் நடிகையை கிடுக்குப்பிடி போட்டன. பலரும் அந்தக் 'கனி'யை சுவைக்க விரும்பினர். இதில் இருந்து தப்பிக்க,  யாரோ சொன்ன கதையை நம்பி, துபாய்க்கு ஃபிளைட் பிடித்து தாவூத்தை சந்திக்க சென்றார்.

mandagini.jpgதாவூத்தை சந்திக்க முடியாமல் மூன்று நாட்கள் வரை காத்திருந்தார் நடிகை. உண்மை நிலவரம் பற்றி அறிந்து கொண்ட தாவூத்,  அவரை மாலை நேரம் ஒன்றில் சந்திக்க சம்மதம் தெரிவித்து, சந்திக்கும் இடத்தையும் சொல்லி விட்டான். துபாயின் மிக பிரபலமான ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் காத்திருந்தார் அந்த நடிகை.

அந்த அறை முழுவதும் சிகப்பு நிற ரோஜாக்களும், விதவிதமாக வாசனை திரவியங்கள் தெளிக்கப் பட்டும், அலங்காரம் செய்யப்பட்டும், மெல்லிய நறுமணம் ஏசி காற்றில் மிதக்கும்படி ரம்யமாக இருந்தது. காத்திருந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் தாவூத் அந்த அறைக்குள் வந்து சேர்ந்தான். நடிகைக்கு உள்ளூர பயம் இருந்தாலும் தாவூத்தை பார்த்ததும் அந்த பயம் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது.

தாவூத்தின் நேர்த்தியான உடை, பேச்சு, ஒரே வார்த்தையில் தனது பிரச்னையை போனில் செட்டில் செய்த செயல்கள் எல்லாம் அந்த நடிகைக்குள் ஒரு பெரிய பிரமிப்பை உண்டாக்கியது. எதுவும் பேசாமல் மௌனமாக நடக்கும் காட்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தவர்,  உள் மனதிற்குள் நிஜ ஹீரோவாக தாவூத்தினை வரித்துக்கொண்டார்.

தனது பிரச்னையை சுலபமாக முடித்து வைத்ததற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதுக்கு,  தாவூத் வெறித்துப் பார்த்தபடி மௌனத்தையே பதிலாக தந்தான். அடுத்த சில நிமிடங்களில் அந்த அறைக்கதவு சாத்தப்பட்டது.

எத்தனையோ நடிகைகளோடு பல்வேறு இரவுகளை கழித்த தாவூத்திற்கு இந்த நடிகை மீது மட்டும் கொஞ்சம் கூடுதல் பாசம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அந்த நடிகையை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தான். நல்ல டான்சர் ஆன அந்த நடிகை, பல்வேறு இரவுகளில் தாவூத் ஒருவனுக்காக பல நடனங்களை ஆடி தாவூத்தை குஷிப்படுத்தி இருக்கிறாள்.

தாவூத்திடம் நெருக்கமாக இருந்த காரணத்தினால்,  ஒரு முறை போலீஸ் அந்த நடிகையை விசாரணை செய்த பொழுது,  இருவருக்கும் இருந்த நெருக்கமான காதல் சம்பவங்களை ருசிகரமாக சொல்லி இருக்கிறார். இந்த சம்பவம் பத்திரிகைகளில் கிசு கிசுவாக எழுதப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு வளர்ந்து வரும் தாதாக்கள் அழகான நடிகைகளை காதலிக்க ஆரம்பித்து விட்டனர். அந்தப்பட்டியல் பெரும் நீளமானவை.

டான்களை வளைக்க முடியாத போலீஸ், நடிகைகளை துருப்பு சீட்டாக பயன்படுத்த முடிவு செய்தது.

திமிங்கலங்களை பிடிக்க தூண்டிலை போட்டனர்... சிக்கியதா திமிங்கலங்கள்...?

http://www.vikatan.com/news/coverstory/56172-dawood-ibrahim-favourite-actress.art

  • தொடங்கியவர்

பாலிவுட் நடிகைகளை ஈர்த்த மும்பை தாதாக்கள் ( தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர் -14)

 

dawood%2014%20logo.jpg

மும்பை மாஃபியா  உலகத்தில் சினிமா நடிகைகளுக்கும், நிஜமான டான்களுக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு என்றும் பஞ்சமே இருந்தது இல்லை. பத்திரிக்கைகளுக்கு செய்திகள் இல்லாத நேரங்களில் இந்த செய்திகள் பெரும் தீனி போட்டன. பிரபலமான தாதாக்களை காதலிப்பதை அல்லது தாதாக்களுடன் சேர்த்து எழுதப்படும்  கிசுகிசுக்களை வெறுக்காமல் விரும்பினார்கள் பாலிவுட் நடிகைகள். அதனால் அவர்களுக்கு பெரிதும் பலன் கிடைத்தது. ஒரு சில தாதாக்கள் ஒரு படி மேலே போய் நடிகைகளை திருமணமும் செய்து கொண்டனர். அதற்கு பிறகு அவர்கள் பாலிவுட் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வரத்தொடங்கினர்.

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாதது போல, பாலிவுட்  சினிமாவையும் மும்பை மாஃபியா தொடர்புகளையும் இன்றளவும் பிரிக்க முடியாமல் இரட்டை குழந்தைளை போல இருக்கிறது மும்பை நிலவரம்.

dawood%209%20600%2022.jpg

“தாவூத்திற்கும் பிரபலமான சினிமா நடிகை ஒருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்தது. இருவருக்கும் பிறந்த மகன் இருக்கிறான். அவன் தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகிறான். அவனை நடிகையின் தங்கைதான் வளர்த்து வந்தார். இன்றளவும் தாவூத் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்” என்று கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தார் நீரஜ்குமார். இவர் 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து அதன் பின்னணியில் நடந்த சம்பவங்களை தொகுத்து ‘டையல் டி பார் டான்’ என்கிற புத்தகத்தை எழுதியவர். முன்னாள் சிபிஐயின் துணைத்தலைவர் நீரஜ்குமார்.

இப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு மற்றும் தலைமை ஆலோசகராக இருக்கிறார். நீரஜ் குமார் சொன்னது போல வெளியே தெரியாமல் பல்வேறு விசயங்கள், அதிசயங்கள் நடந்து இருக்கிறது. அந்த அதிசயங்களில் ஒன்றுதான் அபுசலீம் என்பவனின் காதல் கதையும். அபு சலீம் அனிஸ் என்கிற தாதாவிற்கு உதவியாக இருந்து மெல்ல மெல்ல மேலே வந்து மும்பையை தெறிக்கவிட்டவன். அனிஸ்,  தாவூத்தின் பட்டறையில் இருந்து வந்தவன்.

அபுசலீம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சராய் மீர் என்கிற குக்கிராமத்தை சேர்ந்தவன். அவனது அப்பா ஒரு வழக்கறிஞர். அப்பாவின் மரணத்திற்கு பிறகு படிக்க வசதி இல்லாமல் பள்ளியை பாதியில் விட்டுவிட்டு,  அவனது அண்ணனுடன் சேர்ந்து கிடைக்கும் வேலைகளை செய்து வந்தான்.

abu%20saleem%20600%2011.jpg

இளமைக்காலங்களில் உத்தரபிரதேசம், டெல்லி, கல்கத்தா என்று பல்வேறு ஊர்களை சுற்றி விட்டு கடைசியாக மும்பைக்கு வேலை தேடி வந்தவன், மாஃபியா கும்பல் ஒன்றில் சேர்ந்து தொழிலை கற்றுக்கொண்டான். அதன் பிறகு பல்வேறு தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தான்.

அபுசலீம்,  நடிகர்  சஞ்சய்தத்திற்கு துப்பாக்கி  சப்ளை செய்ததாக பிரச்னை கிளம்பியது. அதுதான் அவனின் முதல் சம்பவம். அதற்கு பிறகு நடிகர் சஞ்சய்தத்தின் சந்திப்புக்கு பிறகு அவனது நட்பு வட்டாரங்கள் பெருகியது. மாஃபியா வட்டாரங்களில் அதிக அளவில், பிரபலமான காஸ்டியூம்ஸ்களை பயன்படுத்தும் ஆளாக மாறினான் அபு சலீம். எப்பொழுதும் கோர்ட், சூட், கண்ணாடி, ஷூ என்று எல்லாமே அதிகபட்ச விலையில் வாங்கி பயன்படுத்தி தன்னை எப்பொழுதும் ஒரு ஹீரோ போல காட்டிக்கொண்டான்.

இவனது நடவடிக்கைகளை பார்த்த நண்பர்கள்,  'நீயும் பாலிவுட் ஸ்டார்தான், உனக்கு மசியாத பெண்கள் இல்லை' என்று அவனது ஆசைகளுக்கு டன் கணக்கில் உரம் போட,  அபு சலீம் பிரபலமான நடிகையை விரும்ப ஆரம்பித்தான்.

பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த நடிகை மோனிகா பேடி, தனக்கு ஒரு பெரும் சிக்கல் என்று அபுசலீமை தேடி வந்தார். வந்த இடத்தில் அபுசலீமின் தோற்றம், நடவடிக்கை எல்லாமே பிடித்துபோக,  முதலில் நண்பர்களாக வலம் வந்தவர்கள் பிறகு காதலிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் அதற்கு முன்பே அபு சலீம் வேறு ஒரு நடிகையை மனதிற்குள் காதலித்துக் கொண்டு இருந்தான். மோனிகா வந்ததும் அந்த நடிகை அவன் மனதிற்குள்ளே கரைந்து போய் விட்டாள். இதனிடையே இவர்கள் இரண்டு பேருக்கும் முன்னதாகவே,  அபுசலீம் மும்பைக்கு வந்த புதிதில், அதாவது 1991-ம் ஆண்டு வாக்கில்  சமீரா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.

abu%20saleem%20600%203.jpg

அப்பொழுது சமீராவிற்கு வயது பதினேழுதான். அதன் பிறகு சமீராவிற்கு குழந்தை பிறந்ததும் அவளை கண்டு கொள்ளவே இல்லை. பிறகு சலீமின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவள் வெளிநாட்டிற்கு போய் விட்டதாக மும்பை போலீஸ் சொல்லுகிறது. அதன்பிறகு மோனிகாதான் அபுசலீமின் அறிவிக்கப்படாத மனைவியாக இருந்து வருகிறார். அபுசலீமின் பெரும் குற்றங்களில் பெரும்பங்கு மோனிகாவால் நடந்தது என்று குற்றம் சொல்லுகிறது பாலிவுட் வட்டாராம்.  

அபுசலீம்,  உத்தரபிரதேசத்தில் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டு இருந்த பல்வேறு இளைஞர்களை மும்பைக்கு கொண்டு வந்து, நாட்டு ரக துப்பாக்கிகளை காட்டி பல்வேறு நபர்களை  மிரட்ட ஆரம்பித்தான். இந்நிலையில் சலீம்க்கு தெரியாமல் அவர்களின் ஆட்கள் ஒரு வேலையை செய்து வந்தனர். அது துப்பாக்கி விற்பது. வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு துப்பாக்கிகள் மும்பையில் கிடைக்க ஆரம்பித்தன. சலீம் ஆட்கள் நாட்டுத் துப்பாக்கிகள் செய்வதில் கில்லாடிகள்.

gun%20200.jpgதுப்பாக்கி செய்ய தெரிந்தவர்களுக்கு, அதை வைத்து பணம் பண்ணும் தொழிலையும், அதனால் என்ன வேலைகள் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற குறுக்கு புத்தியையும் விதைத்து விட்டது அபு சலீம்தான். அபு சலீமின் தோற்றம், மிரட்டும் ஸ்டைல் எதிராளிகளை குலைநடுங்க வைக்கும். இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்த நபர்கள் இந்த தொழிலையும் கற்றுக்கொண்டனர்.    

அதன் விளைவாக மும்பையில் பல்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. தொடர் கொள்ளைகள் குறித்து புகார்கள் வந்ததால் குற்றவாளிகள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறியது. தனியாக நடந்து வந்து கொண்டிருந்த கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவரை  துப்பாகியால் மிரட்டி,  நான்கு நபர்கள் கிழித்து எரிந்து விட்டு சென்றனர். குத்துயிரும் குலையிருமாக கிடந்த அந்தப் பெண் கொடுத்த தகவலின்பேரில் அந்த நான்கு நபர்களை போலீஸ் வளைத்தது.

அவர்களிடம் விசாரித்தபொழுது துப்பாக்கியை உத்தரபிரதேசத்தில் இருந்து வந்திருந்த ஆட்களிடம் வாங்கியது தெரிய வந்தது. அவர்களை விசாரித்த பொழுது அவர்கள் அபு சலீமின் ஆட்கள் என்று தெரிய வந்தது. ஆனால் இந்த துப்பாக்கி விற்கும் வேலைகள் எதுவும் எனக்கு தெரியாது என்று அபு சலீம் சொல்லிவிட்டான். அதன் பிறகு நடந்த ஒரு சில என்கவுண்டர்களில் அவர்கள் ஒழித்துக் கட்டப்பட்டனர். ஆனால் அபு சலீம் மட்டும் பயங்கர வளர்ச்சியை அடைந்து இருந்தான்.

மும்பையில் பிரபலமான பில்டர் பிரதீப்ஜெயின். பல்வேறு இடங்களில் அரசுக்கும், தனியாருக்கும் சொந்தமான பெரும் கட்டடங்களை கட்டி வந்தவன். பல்வேறு இடங்களில் நிறைய சொத்துகளை வாங்கி போட்டு இருந்த பிரதீப்பை, பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான் சலீம். போலீஸ் செல்வாக்கு இருப்பதால் சலீமும்க்கு பணம் தர முடியாது என்று பிரதீப் மறுக்கவே,  பிரதீப்பை  கொடூரமாக கொலை செய்ய திட்டம் போட்டான் அபுசலீம்.

இதனையடுத்து பிரதீப்பை மார்ச் 8-ம் தேதி, 1995 ல் அவரது பங்களாவின் வாசலில் வைத்து சுட்டுக்கொன்றார்கள் அபு சலீம் அனுப்பிய ஆட்கள். அதோடு அவர்கள்தான் கொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக  ஒரு துப்பாக்கியையும்  வீட்டு வாசலில் போட்டு வைத்தனர். அதில் A  என்று ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டு இருந்தது. மும்பையில் பிரபலமான பெரும் செல்வந்தர் கொலை செய்யப்பட்டதும் மற்ற தொழில் அதிபர்கள் தங்களது உயிருக்கு பயந்து கொண்டு சலீமுக்கு பணத்தை வாரி இறைத்தனர்.

abu%20saleem%20600%201.jpg

அடுத்த கட்டமாக யார் மும்பையில் அதிகாரம் செலுத்துவது என்கிற போட்டி எழுந்து வந்தது. அபுசலீம் நேரடியாக சோட்டா ராஜனுடன் மோதுவது என்று முடிவு எடுத்து விட்டான். அதனால் அவனுக்கு பணம் தரும் குக்ரேஜா பில்டர் நிறுவனத்தை சேர்ந்த ஓம்பிரகாஷை பணம் கேட்டு மிரட்டினான். சோட்டா ராஜன் ஆள் என்பதால் தைரியமாக இருந்தார். கொலை செய்ய முடிவு எடுத்த சலீம்,  ஓம் பிரகாஷையும், அவருக்கு பாதுகாப்பு கொடுத்த ஆட்கள் இருவரையும் தனது ஆட்கள் மூலம் சுட்டுக்கொன்றான்.  

அதன் பிறகு சலீமின் ஆட்கள் மும்பையை சுற்றி அதிகார போதையில் வலம் வர ஆரம்பித்தனர். சலீமுக்கு நெருக்கமான நண்பன் ஒருவன்,  நடிகை மணிஷா கொய்ராலாவை குறி வைத்தான். மணிஷாவின் பெரிய படங்களை அவனது ரூமில் ஒட்டி வைத்து மணிஷாவின் அழகில் மயங்கினான். எப்படியாவது மணிஷாவை தன் பக்கம் இழுக்கும் வேலைகளை அவர்கள் செய்து வந்தனர். ஆனால் அதற்குள் சோட்டா ராஜனின் ஆட்கள் சலீமை குறிவைத்தனர். அபு சலீமின் ஒட்டு மொத்த கூடாரத்தை காலி செய்யும் வேலைகளில் இறங்கினார்கள்.

காலியானது யார்? அடுத்தவாரம் பார்க்கலாம்...!

http://www.vikatan.com/news/coverstory/56485-bollywood-heroines-and-their-underworld-connection.art

  • தொடங்கியவர்

எதிர்த்தால் துப்பாக்கி... மறுத்தால் வெடிகுண்டு! ( தாதா தாவூத் இப்ராஹிம்- தொடர்: 15)

 

dawood%2015%20logo%281%29.jpg

‘எந்த திசையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் பாயுமென்று தெரியாது. எங்கிருந்து கொடூரமான ஆயுதங்கள் கொண்ட கும்பல் வந்து ரத்தம் உறையும் அளவிற்கான வேலையை செய்யும் என்று தெரியாமல் பயந்த  மனநிலையில் இருந்தனர் மும்பையில் உள்ள பிரபலங்கள், முக்கியமாக பெரிய தொழில்கள் செய்து வரும் தொழில் அதிபர்கள், பல்வேறு முக்கிய நபர்கள். இவர்கள்தான் மும்பை டான்களுக்கு தங்க முட்டையிடும் வாத்துக்கள். தங்க முட்டை யாருக்கு என்பதில்தான் இந்த களேபரத்திற்கு காரணம். பாலிவுட் முதல் அரசியலில் கலக்கிக் கொண்டு இருந்த பல்வேறு முக்கிய புள்ளிகளுக்கு இந்த காலகட்டம் மிக கொடுமையாக இருந்தது.

gun%20350%281%29.jpgஒரு சிலர்,  தம்மை எப்பொழுதும் யாரோ கண்காணித்து வருகிறார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள். சிலர் பார்த்துக்கலாம் என்று அசால்டாக இருந்தனர். அப்படி பயமில்லாமல் இருந்த பல்வேறு முக்கிய புள்ளிகள் கொடூரமான முறையிலும், சாலையின் மையத்திலும், ஆட்கள் அதிகமாக பழங்கும் ஜனரஞ்கமான இடத்திலும் கொடூரமாக கொல்லப்பட்டனர். அது அவர்களுக்கு போதாதா காலம் போல.

மும்பையை பொறுத்தவரை பல்வேறு டான்கள் அவர்களுக்குள் நடக்கும் அதிகார சண்டையில் பல்வேறு அப்பாவி நபர்களை கொலை செய்தனர். ஒரு சில சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியமான டான்கள் வந்து செய்வார்கள். ஒரு சில சம்பவங்களை டான்களின் தளபதிகள் செய்வார்கள். அநேக கொலைகளை கூலிக் கொலையாளிகள் செய்து வந்தனர். இதற்காக பல்வேறு நபர்கள் மும்பை முழுவதும் நிறைந்து இருந்தனர். துப்பாக்கி வைத்து கொலை செய்வது, கொடூரமான ஆயுதங்கள் கொண்டு தாக்கிக் கொல்வது, வெடி குண்டு வீசி வெட்டி சாய்ப்பது, பயணத்தில் வைத்து கொலைசெய்வது, பொது இடத்தில் வைத்து கொலை செய்வது என்று கொலை செய்வது வகை வகையாக இருந்து வந்தன. இங்கு நடந்த கொலைகளின் ஸ்டைல்கள், சண்டைகள், அதற்காக அவர்கள் தீட்டிய  திட்டங்கள் என்று அவர்கள் பயன்படுத்திய முறைகளின் காப்பிதான் இன்றளவும் இந்திய சினிமாக்களுக்கு தீனி போட்டு வலம் வருகிறது.            

வாஹித்தை துளைத்து, குல்ஷன் குமாரை குதறிய டான்களின் மோட்டிவ் மர்டர்ஸ்

மும்பையில் பிரபலமான  நபர்களை குறிவைத்து கொலை செய்ய ஆரம்பித்த காலம். முதன் முதலில் அரசுக்கு போட்டியாக தனியார் விமான சேவையை ஆரம்பித்தார் கேரளாவை சேர்ந்த தாகியுதீன் வாஹித். கடின உழைப்பால் முன்னுக்கு வந்த வாஹித் ‘வாயு தூத்’ என்கிற பெயரில் மும்பையில் இருந்து விமான சேவையை தொடங்கியவர். விமான தொழில்கள் மூலம் பல்வேறு முக்கிய நபர்கள், அரசியல் புள்ளிகள் என பல்வேறு நபர்கள் வாஹித்துக்கு நெருக்கமானார்கள். ஆனாலும் உள்ளூர் டான்களின் அரசியலை தாக்கு பிடிக்கமுடியாமல் தடுமாறினார்.

சோட்டா ராஜனுக்கும் வாஹித்துக்கும் முட்டல் மோதல் ஆரம்பமானது. அதனால் சோட்டா ராஜன் அனுப்பிய ஆட்கள்,  வாஹித்தை பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து கொடூரமாக சுட்டுக்கொலை செய்தார்கள். அதோடு விடவில்லை வாஹித்தின் டிராவல்ஸ் நிறுவனம், விமான நிறுவனம், கட்டுமான நிறுவனம் என்று வாஹித்தின் ஒட்டு மொத்த பிசினஸ் சாம்ராஜ்யத்தையே தரைமட்டமாக்கினார்கள். ஆடிப்போனது மும்பை மாநகரம். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.             

dawood%2016%20kulshan%281%29.jpgஆடியோ கேசட் உரிமையாளர் குல்ஷன்குமார். ‘டி’ சீரியஸ் என்கிற பெரியரில் சிறிய அளவில் பக்தி ஆல்பங்களை ஆடியோ கேசட்களாக தயாரித்து,  குறைந்த விலைக்கு சந்தையில் அறிமுகப்படுத்தி வந்த குல்ஷன் குமாருக்கு பயங்கர வெற்றி. பல்வேறு பாடல்களை, ஆல்பங்களை ஆடியோவாக கேசட்களில் பதிவு செய்து குறைந்த விலைக்கு விற்றதால் நல்ல லாபம். குறுகிய ஆண்டிலேயே மிகப்பெரிய பணக்காராக ஆன குல்ஷன் குமார் மீது பல்வேறு நபர்களுக்கு பொறாமை உண்டானது. அவரை வீழ்த்த பல்வேறு நபர்கள் தொழில் ரீதியாக மோதினார்கள். ஆனால் குல்சன் குமார் பல்வேறு புதிய நபர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களில் சிலர் ஸ்டார் பாடகர்களாக வலம் வந்தனர்.

மும்பை சினிமா வட்டாரங்களிலும் தயாரிப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்த குல்ஷன்குமாரை பல்வேறு நபர்கள் பணம் கேட்டு மிரட்டினார்கள். இது போன்ற மிரட்டல்களை அலட்சியப்படுத்தி வேலையில் பிசியாக இருந்த குல்ஷன் குமாருக்கு குறி வைத்தனர். கோவில் ஒன்றுக்கு போன அவரை,  அபு சலீமின் ஆட்கள் கோவிலின் வாசலில் வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதை சற்றும் எதிர்பாராத குல்ஷன் குமார் குண்டடடி பட்டு வழியும் ரத்தத்தோடு, 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..!'  என்று கதறிக்கொண்டே கோவிலின் வாசலில் இருந்து வீதிகளில் ஓடிய பொழுது, ஒருவர் கூட அவருக்கு உதவ முன் வரவில்லை.

உயிரைக் காக்க அவர் ஓடிய அந்த வீதியில்தான் நேற்றுவரை குல்ஷனுக்கு ஏகப்பட்ட மரியாதைகள் கிடைத்து வந்தன. குல்ஷனை பார்த்தது வணக்கம் வைத்த கைகள் எல்லாம் ஒதுங்கி நின்றன. பதறி ஓடிய குல்ஷன் குமார்,  உயிர் பிழைக்க இடம் கிடைக்காமல் கழிப்பறை ஒன்றில் தஞ்சம் அடைந்து இருந்த பொழுது சிதறிய ரத்தக்கறையை வைத்து கண்டு பிடித்த கொலைகார கும்பல்,   குல்ஷனை வெளியே இழுத்து வந்து போட்டுத்தள்ளியது. குல்ஷன் குமாரின்  உயிர் போகும் நிமிடம் வலியால் கத்துவதை அபு சலீமுக்கு அவனது ஆட்கள் செல்போனில் லைவாக கால் செய்து காட்டியதாகவும், குல்ஷன் குமார் உடல் முழுவதும்  ரத்தம் வழிய  ஓடி வந்து,  பல்வேறு நபர்களிடம் 'உயிரை காப்பற்றுங்கள்...' என்று கெஞ்சியதாகவும் பத்திரிகைகள் அந்த சம்பவம் குறித்து எழுதித்தள்ளின.

சம்பவம் நடந்த கோவிலுக்குதான் அதிக நன்கொடைகள், அன்னதானங்கள் வாரி வழங்கியதாகவும் குறிப்பிட்டு,  அங்கு யாரும் காப்பாற்ற முடியாத நிலையில் குல்சன் குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக மும்பை ஊடகங்கள் எழுதின. குல்ஷன் குமாரின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் கோபத்தை உண்டாக்கியது. அரசு மீதும், காவல்துறை மீதும் பெரும் கடும் கண்டனக்குரல் எதிரொலித்தது.

dawood%2016%20kulshan%20600%202%281%29.j

கொடூர கொலைகாரர்களின்  நகரம்

அரபிக்கடல், வானத்தை முட்டும் பெரும் கட்டடங்கள், தொழிற்சாலைகள், இரவில் அழகான விளக்குகளால் ஜொலித்து மின்னும் மும்பைக்கு அழகான முகம் இருப்பது போல,  இன்னொரு கோரமான ஒரு முகமும் உண்டு. அதுதான் கொலைகளின் மாநகரம். இந்தியாவிலே அதிக கொலைகள் நடந்த நகரங்களின் பட்டியலில் மும்பைக்குதான் இன்றுவரை முதலிடம்.

மும்பை தாதாக்களை பொறுத்தவரை எதிராளிகளுடன் நேருக்கு நேர் மோதாமல் யார் யாருக்கு பொருளாதார உதவி செய்வது, அரசியல் ரீதியான உதவிகளை செய்வது, காவல்துறை, நீதித்துறை உள்பட பல்வேறு வட்டாரங்களில் யாருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதில்தான் கடும் போட்டி. இதில் எதிராகளிகளுக்கு மறைமுகமாக உதவிய பல்வேறு நபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் உண்மையை எழுதிய பல்வேறு பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, ஒரு சில பத்திரிகையாளர்கள் கொலையும் செய்யப்பட்டனர்.

இந்த கொலைகள் நிற்கவில்லை. இது போன்ற சம்பவங்கள் இன்னமும் மும்பையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபக் கொலையாக மிட் டே பத்திரிகையின் கிரைம் பிரிவு செய்தியாளர் ஜோதிர்மோய், கடந்த ஜூன் 11 ல் 2011- ம் ஆண்டு மதியம் இரண்டரை மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த பொழுது,  கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

dawood%2016%20sotta%20600%281%29.jpg

ஆயில் மாஃபியா கும்பல்கள் பற்றி அதிக தகவல்களுடன் கட்டுரை எழுதியததால் மிரட்டப்பட்டு,  கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை சோட்டா ராஜனின் ஆட்கள் செய்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது.

சமூகத்தில் நல்ல நிலைமையில் உள்ள முக்கியமான நபர்களை குறி வைத்து தப்பாமல் கொலை செய்தனர். கடந்த 2008-ல் பிசினஸ் புள்ளியான சுரேஷ் பகத்தை அருண் காவ்லியின் ஆட்கள் கொலை செய்தனர். 2006 ல்  காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்  பவன்ராஜீவை ஓடும் ரயிலில் வைத்து கொலை செய்தனர். இது போன்ற அரசியல் கொலைகளும் அடிக்கடி நடந்தன. போலீஸ் விசாரணையில்,  எம்பி ஒருவர் சொல்லி இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

dawood%2016%20mid%20day%20250.jpgமனிஷா கொய்ராலாவின் செக்ரட்டரி அஜித் திவானி, இயக்குனர் ராஜீவ் ராய், நட்வர் லால் தேசாய், வல்லப்தாக்கர், கரீம் மாரதியா, சுனித் கட்டா போன்ற முக்கிய பிரமுகர்கள் என்று கொலைப்பட்டியல் நீள்கிறது. இதுவரை மும்பையில் மட்டும் இது போன்ற கொடூர கொலைகளாக 170 கொலைகள் நடந்து உள்ளன.

இந்த கொலைகள் எல்லாம் தனித்தனியாய நடந்த கொலைகள். கொலையானவர்கள் அனைவரும் அதிகாரத்தில் வலம் வந்தவர்கள், பெரும் புள்ளிகள், பாலிவுட்டை கலக்கி கொண்டிருந்த பெரும் புள்ளிகள், அரசியல் வாதிகள் என்று  பெரும் பிரபலங்கள்.

கொலை நடந்த இடங்கள் அனைத்தும் பொதுமக்கள் கூடும் இடமான மருத்துவமனை, நீதிமன்றம், கோவில், பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள், சிக்னல்கள், வீட்டின் வாசல்  என்று எல்லாமே பொது மக்களின் பார்வைக்கு மத்தியில், பொது ஜனங்களின் கண்களின் சாட்சியாக நடந்த கொலைகள்தான்.

கொலைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்த அரசு ஒரு முடிவு எடுத்தது... அது என்ன?

http://www.vikatan.com/news/coverstory/56788-businessmens-killed-by-mumbai-dons-.art

  • தொடங்கியவர்

மறக்க முடியாத மும்பை... ஓய்வு அறிவிப்பில் உருகிய தாவூத்! (தொடர்- 16)

 

dawood%2016%20logo.jpg

டிசம்பர் 26 -ம் தேதி  மாலை சூரியன் ஓய்வுக்கு போனதும்,  நிலா அதன் வெளிச்சத்தை பாய்ச்சி கொண்டிருந்த நேரம். இரவு மெல்ல மெல்ல பகலை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தது. பாலைவனத்தில் சல்லிசான மணல்களை வீசும் காற்றில் அனல் பறந்தது. அனல் காற்று அடிக்கும் துபாய் நாட்டின் ஒதுக்குப்புறம் உள்ள துபாய் அரச குடும்பத்தின் அரண்மனை கட்டடத்தில் உள்ளே,  அளவாக ஐம்பது நபர்கள் மட்டுமே சிறப்பு விருந்தாளிகளாக குழுமியிருந்தனர்.

முகம் தெரியும் பால் வெள்ளை நிறமும், வெண் பளிங்கு நிறமும் கொண்ட உயர் கிரானைட் கற்களால் பார்த்து, பார்த்து செதுக்கிய அந்த கட்டடத்தின் உள்ளே மெல்லிய இசை முழங்க,   உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய விருந்தினர்களுக்கு விருந்து உபசரிப்பு நடந்து கொண்டு இருந்தது.

dawood%2019%20600%201.jpg

அந்த மாளிகையை சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களால், வெளியே ஐந்தடுக்கு காவல் போடப்பட்டு இருந்தது. தவிர அந்த மாளிகைக்கு விண்வெளியில் இருந்து தாக்குதல் நடந்தாலும் கூட பாதிப்பு வராத அளவிற்கு சிறப்பு பாதுகாப்பும் செய்யப்பட்டு இருந்தது.

அமெரிக்காவில் உள்ள சிஐஏ ஏஜென்சி,  இந்தியாவின் ‘ரா’ உளவுத்துறை உள்பட பல்வேறு நாடுகளின் ஏஜென்ஸிகள்,  கழுகுப் பார்வை கொண்டு இந்த நாளை கண்காணித்து வந்தன. அவர்களுக்கும் இது போன்ற ஒரு சிறப்பு பார்ட்டி நடப்பது தெரியும். ஆனால் எங்கு நடக்கப் போகிறது என்பது மட்டும் தெரியாமல் குழம்பி போய் இருந்தது. கடைசியில் உளவுத்துறைக்கு  அவர்களின் சோர்ஸ்கள் மூலம் கடைசி நிமிடத்தில் இந்த பார்ட்டி நடக்கும் இடத்தை கண்டு பிடித்தனர்.

ஆனால் உள்ளே நுழைய மட்டும் முடியவில்லை. அப்படி என்ன சிறப்பு இந்த நாளில் என மண்டையை போட்டு உடைத்துக்கொள்கிறீர்களா? உலகத்தை மிரட்டும் தாதா தாவூத்திற்கு 60 வது பிறந்தநாள் விழா.

dawood%2019%20leftttt.jpgவேறு எந்த பிறந்த நாளுக்கு இல்லாமல் இந்த ஆண்டு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்றால், இந்த ஆண்டு நிழல் உலக தாதா பதவியில் இருந்து தாவூத் ஒய்வு(?!) பெறப்போவதாகவும், அவரின் அடுத்த வாரிசை நியமனம் செய்யப்போவதாகவும்  உலகம் முழுவதும் உள்ள அண்டர் கிரவுன்ட் உலகத்திற்கு தகவல் பரவி இருந்தது. அதனால்தான் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது தாவூத்திற்கு. மீடியாக்களும் என்ன நடக்க போகிறது என்று ஆவலுடன் தகவலுக்ககாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இது போன்ற தருணங்களில் மீடியாக்களுக்கு மட்டும் எப்படியாவது தகவல்கள் வந்துவிடும். அன்றும் அப்படிதான் வந்தது.

ஆனால் இந்த விழாவில் பாதுகாப்பு கருதி தாவூத் கலந்து கொள்ளவில்லை. தாவூத், தாவூத்தின் மனைவி மஹஜா பீன், மகன் மொய்ஸ், மகள் மெஹ்ரா ஆகியோருடன் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள  பாதுகாப்பான உயர் அடுக்கு பங்களாவில் நடந்த பிறந்த நாள் விழாவில்,  பாகிஸ்தானின் அரசில் உயர் பதவியில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

தாவூத் ஏற்பாடு செய்த போட்டோகிராபர்கள் தவிர வேறு யாரும் அங்கு ஒரு சின்ன புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் இருந்து கொண்டு,  துபாயில் நடந்த பிறந்த நாள் பார்ட்டியை வீடியோ 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனப்படும் டெக்னாலஜி  மூலம் துபாயில் தோன்றிய தாவூத்,  பல்வேறு விஷயங்களை உணர்ச்சிகரமாக பேசியதாக தகவல்கள் பரபரக்கின்றன.

தனது வாழ்க்கையின்  60 ஆண்டு காலத்தை நினைத்து பார்த்தபொழுது பெரும் மகிழ்ச்சிகரமான மற்றும் பல்வேறு துயரமான சம்பவங்களையும் கடந்து  வந்ததாக தெரிவித்த தாவூத், "என் மனம் முழுவதும் மும்பையை சுற்றியே இருக்கிறது. எங்கு இருந்தாலும் மும்பை நகரத்தின் வீதிகளையும், மசூதியையும் இன்னமும் மறக்க முடியவில்லை" என்று உருகிய தாவூத்,  "இனி ‘டி’ கம்பெனியை எனக்கு பின்னால் எனது சகோதரர் அனீஸ் அஹமது தலைமையேற்று நடத்துவார். அவரை எனது தளபதியாக இருக்கும் சோட்டா ஷகீல் வழிநடத்தி, முன்னின்றும் பார்த்துக்கொள்ளுவார்"  என்று அறிவித்து விட்டு,  தாவூத் மேலும் பல்வேறு விஷயங்களை பேசியதாக ஊடகங்களுக்கு தகவல் வந்தது.                           

இத்தகவலை சோட்டா ஷகீல், தனக்கு நெருக்கமான ஊடவியலாளர்களுக்கு போன் செய்து உறுதிபடுத்தி இருக்கிறான். போதை மருந்து பொருட்கள் கடத்தல், ஹவாலா பணப்புழக்கம், ஆயுதங்கள் விற்பனை, இதர பிசினஸ் என்று சுமார் 30  பில்லியன் டாலர்கள் பணம் புழங்கும் தாவூத்தின் ‘டி’ கம்பெனியின் அதிகாரத்தில் தாவூத்திற்கு அடுத்து யார் இருப்பார்  என்பதற்கான விழாவாக இருந்தது இந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி.

dawood%2019%20600%202.jpg

மும்பையிலும் பல்வேறு இடங்களில், தாவூத்தின் ஆதரவாளர்கள் ரகசியமாக பல்வேறு பார்ட்டிகளை கொண்டாடி தீர்த்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் ஏழைகளுக்கு உணவும், புதுத்துணிகளும் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால் தாவூத் பிறந்தநாள் விழாவை கொண்டாட காவல்துறை இறுக்கம் காட்டியதால் தாவூத்தின் ஆதரவாளர்கள் நடுக்கடல் , பண்ணை வீடுகள் என்று ரகசிய இடங்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொண்டாடி இருக்கிறார்கள்.              

தாவூத் தனது பிறந்தநாளை கொண்டாடும் அதே வேளையில்தான் இந்திய பிரமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு விசிட் அடித்துள்ளார். பாகிஸ்தான் போன மோடியை ஏர்போர்ட்டில் வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், லாகூரில் உள்ள தனது இல்லத்திற்கு அவரை அழைத்து சென்றார். மோடியும் – நவாஸ் ஷெரீப்பும்  மதிய உணவை முடித்துக்கொண்டு ஜம்மு காஷ்மீர் பிரச்னை, உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாத எதிர்ப்பு, போதைபொருள் கடத்தல், இந்து- முஸ்லீம் பிரச்னைகள் என்று  பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார்கள்.

நவாஸ் ஷெரீப்க்கு டிசம்பர் 25 -ல் 66 -வது பிறந்தநாள் என்பதால், மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு,  நவாஸ் ஷெரீப் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்ததாக வந்ததாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்புகள் தெரிவித்தன. இந்த சந்திப்பில் தாவூத் குறித்து மோடி பேசினாரா என்பது எல்லோருக்குள்ளும் எழும் கேள்விதான்.

dawood%2019%20600%203.jpg

இந்த நிலையில் டெல்லியில் உள்ள திகார் சிறையில்,  ஐந்தடுக்கு பாதுகாப்பில் பத்திரமாக இருந்துவரும் சோட்டா ராஜன்,  தாவூத்தின் பிறந்த நாளன்று இறுக்கமாக இருந்துள்ளான். தாவூத்தின் அடுத்த வாரிசாக அனீஸ் அஹமதுவை நியமனம் செய்ததற்கு மௌனமாக இருந்த சோட்டா ராஜன், டி கம்பெனியின் சி.இ.ஓ சோட்டா ஷகீல்தான் என்று ஒரு அதிகாரி சொன்னதற்கு, உரத்த குரலில் கத்தி,  அசிங்கமான வார்த்தையால் திட்டி இனி ‘டி’ கம்பெனி ஆட்டம் காணும் என்று சொல்லி இருக்கிறான். என் இறுதி ஆசை ‘டி’ கம்பெனியை ஒழித்துக்கட்டுவதுதான் என்று சொல்லி இருக்கிறான் சோட்டா ராஜன் சிறைக்கம்பிகளை இறுக்கிப்பிடித்தபடி.

வெளியே தாவூத்தின் தளபதியான சோட்டா ஷகீல் “இந்த ஆண்டு தாவூத்திற்கு பிறந்தநாள் பரிசு சோட்டா ராஜனின் உயிர்தான்” என்று தான் சபதம் எடுத்ததாக நெருக்கமானவர்களிடம் சீறி இருக்கிறான்.    

யார் யாரை வீழ்த்துவார்கள்... நீளுமா பகை?     

http://www.vikatan.com/news/coverstory/57053-cant-forget-mumbai-life-dawood-retirement-speech.art

  • தொடங்கியவர்

அறுபதிலும் ஆசைவரும்... நியூ வெர்ஷனில் 'டி' கம்பெனி! (தாதா தாவூத் இப்ராஹிம் -தொடர்-17)

 

dawood%2017%20logo.jpg

னது ‘60 ‘ வயது பிறந்த நாளை, பாகிஸ்தான் நாட்டின் கிளிப்டன் நகரில் முக்கியமான உறவுகளுடன் முடித்த தாவூத், அடுத்த இரண்டே நாட்களில் தனக்கு நெருக்கமான ‘ஐந்து’ நண்பர்களுடன் மெக்காவிற்கு சென்றான். அங்கு பிரார்த்தனையை முடித்த கையோடு சோட்டா ஷகீலை அழைத்து,  மீடியாக்களிடம் பேச வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புது வடிவத்தில் டி கம்பெனி

‘தாவூத் ஓய்வு பெற்று விட்டான். இனி முன்பை போல ‘டி’ கம்பெனி ஆதிக்கம் செலுத்த முடியாது. அதன் கிளைகள் மெல்ல மெல்ல முறிய ஆரம்பித்து இன்னும் கொஞ்ச நாட்களில் ‘டி’ கம்பெனியின் வேர்கள் அழுகிப்போய் அதன் பிரம்மாண்டத்தை இழந்து வீழ்ந்து விடும்’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இந்த செய்திகள் வந்த அடுத்த நாளே, இதனை  தாவூத்தின் கவனத்திற்கு அனீஸ் கொண்டு சென்றதால் உடனடியாக ஷகீலை அழைத்த தாவூத், மீடியாக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டி கொடுக்க சொல்லி இருக்கிறான்.

dawood%2010%20saheel.jpgசோட்டா ஷகீல் அந்த பேட்டியில்,  “மீடியாக்களில் சொல்வது போல எங்கள் பிசினஸ் படுக்கவில்லை. முன்பை விட இப்பொழுது அதிக பலமாக நடந்து வருகிறது.1993 ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருந்து உளவுத்துறை உள்பட நாட்டின் மிக முக்கியமான துறைகள் எங்களை கண்காணித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.

ஆனாலும் முன்பை விட ‘டி’ கம்பெனி விருட்சத்துடன் வளர்ந்து செல்கிறது. தாவூத் ஒரு இஸ்லாமியராக ஐந்து வேலைகள் தொழுவதும், ஹஜ் யாத்திரை செல்வதும் என்று இருக்கிறார். எங்களை பற்றி வரும் வதந்திகளை நாங்களும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ’டி’ கம்பெனியை யாராலும் அசைக்க முடியாது. அது பயங்கர பலத்துடன் இருக்கிறது" என்று பட படவென பொரிந்து தள்ளி உள்ளான்.

சோட்டா ஷகீல் இந்த  பேட்டியை அளித்து கொண்டிருந்தபோதே, பாகிஸ்தானில் தாவூத்,  ‘டி’ கம்பெனியின் உயர்மட்ட குழுவில் உள்ள ஆட்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிக்கொண்டும்,  புதிய ஆட்களை போடவும், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைகளை செய்து கொண்டும்  இருந்தான். தாவூத் வெளியே ஓய்வு பெற்றதாக அறிவித்து கொண்டு இருந்தாலும்ம்  உள்ளுக்குள் நடக்கும் அனைத்து சம்பவங்களும் தாவூத் காதுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தாவூத்தின் எண்ணம், செயல் என்று எல்லாமே ‘டி’ கம்பெனியை சுற்றியே இருக்கிறது. அதனால்தான் தாவூத் அவனது ஓய்வு குறித்து அறிவித்து இருந்தாலும், அவனது தினசரி நடவடிக்கைகளில் மறக்காமல் ‘டி’ கம்பெனி பற்றி தினசரி நிலவரங்களை கேட்டு தெரிந்து கொள்வதாக சோட்டா ஷகீல்,  அவனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் தெரிவித்து இருக்கிறான்.                      

களமிறங்கிய புதிய படைகள்

தாவூத்தின் தொடர்புகள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கிறது. அவனது தொடர்புகள் இருக்கும் இடங்களில் கடந்த பத்து நாட்களாக புதிய கூட்டங்கள் நடந்து கொண்டே வருகிறது. எல்லாக்கூட்டங்களிலும் சோட்டா ஷகீல் பேசி வருவதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதுவரை நிழல் உலக தாதாவாக வலம் வந்த பல்வேறு தாதாக்கள் கூட,  இந்த கூட்டங்கள் பற்றியும்,  ‘டி’ கம்பெனியில் என்ன மாதிரியான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் அறிந்து கொள்ள ஆர்வமாக  உள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இவர்களின் தொழில்கள் பேரம் பேசியும், ஒரு சில நாடுகளில் அவர்களின் அரச கொள்கை முடிவுகளில் தலையிட்டு, பொருளாதார உடன்படிக்கைகள் போடப்பட்டுள்ளதாகவும் சொல்லுகிறார்கள்.

dawood%209%20600%202.jpg

மிகச்சிறிய நாடுகளை,  அவர்களின் பொருளாதார வளர்ச்சியை மையமாக வைத்து, அந்த நாடுகளின் அதிபர்களை வளைத்து போட்டு, இவர்களின் பிசினஸ் மையங்களின் முக்கிய  மையங்களாக மாற்றியது இப்பொழுதுதான் தெரிய வந்திருக்கிறது. ஒரு சில நாடுகள்,  இதுபோன்ற தொழில்களை அவர்களின் நாட்டிற்குள் வரவிடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. ஆனாலும் தாவூத்தின் போதைப்பொருள் சாம்ராஜ்யம் காற்று போல எல்லா இடங்களிலும் புகுந்து இருக்கிறது. ஆயுதங்கள் விற்பது குறித்த பேச்சு வார்த்தைகளும்,  ஆயுத வியாபாரிகளின் கூட்டமும் சமீபத்தில் ரஷ்யாவிலும், ருமேனியா நாட்டிலும் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தாவூத்தின் ஆட்கள்,  “ஆசியாவின் மிகப்பெரிய சந்தை இந்தியாதான். இந்தியாவில் அரசிடம் இருக்கும் துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற ஆயுதங்கள் எல்லாமே மிகவும் பழமையான ரகத்தை சேர்ந்தவைகளாக இருக்கிறது. ராணுவம், மத்திய மாநில அரசுகளுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் அரசின் ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள்,  உங்களை தொட முடியாத தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களிடம் ஆயுதம் வாங்கி விற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று ருமேனியா நாட்டை சேர்ந்த பிரபல ஆயுத வியாபாரிகளிடத்தில் பேசி இருக்கிறார்கள்.

இந்த சம்பவங்களைக்கூட சமீபத்திய மீட்டிங்கில் சொல்லி இருக்கிறார்கள். அதோடு மார்க்கெட்டில் அப்டேட்டாக இருக்கும் புதிய இளைஞர்களை ‘டி’ கம்பெனி இறக்குமதி செய்து இருக்கிறது. இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை, குறிப்பாக அஸ்ஸாம், ஒடிசா, அருணாசல பிரதேஷ், போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களை அதிக சம்பளத்திற்கு கொண்டு வந்ததாக சோட்டா ஷகீல் சொல்லி இருக்கிறான்.

dawood%209%20600%201.jpg

இது தவிர ஆயுதங்களை வாங்கிக்கொண்டு கூலிக்கு கொலை செய்ய மத்தியபிரதேசம், பிகார், போன்ற இடங்களில் இருந்தும் ஆட்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது போல செய்வது இல்லை. இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு மூலையில் இருப்பார்கள். அவர்களை பயன்படுத்தும்பொழுது அவர்களுக்கான வேலையை மட்டும் சொல்லுவார்கள், வேலையை அவர்கள் செய்து முடித்து விட்டு போய் விடுவார்கள்.

இந்த நெட்வொர்க் ஆரம்பகாலம் முதல் இருந்து வந்தாலும், சோட்டா ஷகீல் இப்பொழுது பல்வேறு புதுமைகளை புகுத்தி இருக்கிறான். அனைத்தும் ஹைடெக் ஆக இருக்கிறதாம். அணியும் ஆடைகள், பயன்படுத்தும் பொருட்கள், செல்போன்கள், லேப்டாப், கார் என்று அனைத்தும் மார்க்கெட்டில் முன்னணி பொருளாக இருக்கிறது. அதனால்தான் தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராஹிமும் சோட்டா ஷகீலும், "  ‘டி’ கம்பெனி புதிய வெர்சனில் வந்து இருக்கிறது. யாரும் எதுவும் செய்ய முடியாது. அதன் வேலைகள் முன்பை விட நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது" என்பதை சொல்லமால் சொல்லி இருக்கின்றனர்.

அச்சத்தின் பிடியில் சோட்டா ராஜன்

dawood%2010%20308.jpgசோட்டா ராஜனுக்கும் வயது ஐம்பதை தாணடிவிட்டதால், சிறு நீரக பிரச்னை, இரைப்பை கோளாறு என்று பல்வேறு நோய்களில் இருக்கிறான். பலத்த பாதுகாப்பில்  இருக்கும் சோட்டா ராஜனுக்கு,  சிறையிலேயே இரண்டு முறை டயாலிசஸ் செய்து இருக்கிறார்கள்.

அவனுக்கு வழங்கப்படும் உணவுகளில் பெரும்பாலும் கோதுமை  ரொட்டிகள், பால், வாழைப்பழம் என்று கொடுக்கப்படுகிறது.

அதுவும் அனைத்து உணவுகளையும் பரிசோதித்த பிறகே கொடுக்கிறார்கள். சோட்டா ராஜன் சிறைக்குள் இருப்பதை பாதுகாப்பாக உணர்ந்தாலும், சோட்டா ராஜனின் ஆட்கள், தாவூத் ஆட்களின் பிடியில் இருக்கிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்று இருக்கும் சோட்டா ஷகீல், சோட்டா ராஜனின் பிசினஸ்களை கருவறுக்கும் வேலைகளில் இறங்கி விட்டதாக சோட்டா ராஜனுக்கு தகவல்கள் போய்க்கொண்டே இருப்பதால், சோட்டா ராஜன் உள்காய்ச்சலில் இருப்பதாகவும்,  மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்த்து,  தாவூத்தின் பின்னனணியில் நடந்த மேலும் சம்பவங்களை தொகுத்து இந்திய அரசின் கைகளில் கொடுத்து, தாவூத்தை பாகிஸ்தானில் இருந்து இந்தியா கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சோட்டா ராஜன் இந்திய அரசின் கைகளில் சிக்கி இருப்பதால், மந்திரவாதியின் உயிர் கிளியின் உடலில் இருப்பதுபோல தாவூத்தின் பிடி, சோட்டா ராஜனிடம் இருப்பதை உணர்ந்த ‘தாவூத்’ அவனது ‘டி’  கம்பெனியின் ரூட்டை மாற்றி, இப்பொழுது புதிய வெர்சனில் இயங்கி கொண்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவங்கள் அனைத்தும் தாவூத்தின் 60 வது பிறந்தநாளில்தான் வெளியே வந்தது. இல்லையென்றால் 80 களில் பார்த்த அதே தாவூத்தைதான் நாம் இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்க முடியும்.

குடும்பம், பிசினஸ், செல்வாக்கு, பாதுகாப்பு போன்ற எல்லாவற்றையும் பத்திரப்படுத்திய தாவூத்தின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி போகிறது தெரியுமா?   அடுத்தவாரம் பார்க்கலாம்...

http://www.vikatan.com/news/coverstory/57339-dawoods-company-in-new-version-dawood-ibrahim.art

  • தொடங்கியவர்

எனக்கு ஓய்வு தேவையில்லை; தாவூத் அதிரடி அறிவிப்பு!- (தாதா தாவூத் இப்ராஹிம் தொடர் 18)

 

dawood%2018%20logo.jpg 

 “வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பக்கத்தில் இருந்து பார்க்கனும், நிலாவிற்கு சென்று பூமியை பார்க்கணும்  மொத்தத்தில் இந்த உலகத்தை ஆளவேண்டும்” தாவூத் துபாயில் சொகுசு வாழ்க்கைக்கு அடியெடுத்த பொழுது, உச்ச கட்ட மகிழ்ச்சி பெருக்கில் இருந்த பொழுது உணர்ச்சியில் சோட்டா ராஜனிடம் உதிர்த்த வார்த்தைகள் இது.

தாவூத் தனது சிறு வயதில் எதிகால வாழ்க்கையில் எப்படியெல்லாம் இருக்க நினைத்தானோ அப்படியே அவனது வாழ்க்கை அமைந்து இருக்கிறது. மும்பையின் மிகப்பெரிய டானாக வலம் வர ஆரம்பித்த தாவூத் குறித்து அவனது தந்தை இப்ராஹீம் கஸ்கர் “மும்பையின் தெருக்களில் ஆரம்பித்த அவனது வாழ்க்கை, எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறமோ என்பது கூட தெரியாமல் அவனது எண்ணம் போன போக்கில் அவனது செயல்கள் இருந்தது.

dawood%201.jpgஅவனது செயல்கள் அனைத்தும் அவனது மனதுதான் தீர்மானித்தது.நல்லது கெட்டது என்று பகுத்துபார்க்கும் நேரத்திற்குள் அவன் வேறு ஒரு இடத்திற்கு போய்விட்டான். இனி தாவூத் எனது மகன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு மனது இடம் கொடுக்கவில்லை” தாவூத் குறித்து அவனது தந்தை சக போலீஸ்காரர்களுடன் பேசிய வார்த்தைகள் இவை. அவர் சொன்னதுபோல இன்று தாவூத் யாரும் நெருங்க முடியாத இடத்தில் இருக்கிறான்.

தாவூத் ஒரு முறை அவனது கூட்டாளிகளுடன் விருந்து ஒன்றில் உலகத்தின் மிக அதிகாரமிக்க இடம் எது? என்று கேட்ட பொழுது அவர்கள் பல்வேறு இடங்களை சொல்லி முடிவில் மிக பாதுகாப்பான இடமாக, அதிகாரங்கள் பொருந்திய இடமாக  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சொன்னார்கள். உடனடியாக தாவூத் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை குறித்த புளு பிரிண்ட்டை கேட்டான்.எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.சோட்டா ராஜனுக்கு தலை சுற்ற ஆரம்பித்து.தேன் கூட்டில் கையை வைக்க போகிறோம் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்த பொழுது, தாவூத் அந்த வெள்ளை மாளிகையை போல ஒரு மாளிகை கட்ட வேண்டும் என்று சொன்னான்.

ஒரு சில மாற்றங்களை மட்டும் எடுத்து விட்டு கிட்ட தட்ட அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை வெண்கல பளிங்குகற்கள்,நீல நிறத்தில் ஆன வரவேற்பு ஹால்கள் என்று வெள்ளை மாளிகையின் அம்சங்களை பார்த்தது பார்த்து செதுக்கினான் துபாயில். மும்பையில் இருந்த அவனது பங்களா கூட கிட்ட தட்ட வெள்ளை மாளிகை போலத்தான் இருந்தது.அதற்கு பிறகு தாவூத்தின் போக்கும் மாறியது.உலகத்தின் சர்வதிகாரி போல பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்களை செய்ய ஆரம்பித்தான்.

அப்படி செய்த ஒரு சம்பவம்தான் மும்பை குண்டு வெடிப்பு சம்பவமும்.அதன் பிறகு நடந்த ஒவ்வொரு உலகை மிரட்டிய பல்வேறு விரும்பதகாத சம்பவங்களின் மூல ஆணிவேரை தேடினால் அதில் இருக்கும் முக்கியமான வேர் தாவூத்தாக இருந்தான்.அதனால் உலகம் முழுவதும் கவனிக்கப்படும் ஒரு குற்றவாளி நபராக மாறிப்போனது அவனது வாழ்க்கை.

ஆனால் தாவூத்தின் வாழ்க்கை அப்படி இல்லை. அவனது வாழ்க்கை ஒரு சர்வமும் பொருந்திய ராஜாவை போல இருந்தது. மிகப்பெரிய பங்களா அதில் பெரிய நீச்சல்குளம், டென்னில் மைதானம்,ஸ்நூக்கர் ரூம், ஹைடெக் ஜிம், தங்கத்தால் வார்க்கப்பட்ட குளியல் அறை,உலகத்திலே அதிக விலையுள்ள அனைத்து கம்பெனிகளின் கார்கள், கையில்  படக் பிலிப்பி வாட்ச்  (ஒரு மில்லியன் டாலர் மதிப்பு), அதிக மதிப்பிலான தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் என்று எல்லாமே மிக மிக அதிகமான விலையுர்ந்த மதிப்புடையவைகளாக இருந்தது.

dawood%202.jpg

தாவூத்தின் இரவுகள் அழகான பெண்களால் நிறைந்து இருந்தது. உலகத்தின் பேரழகிகள் என்று நாம் தூரத்தில் இருந்து ரசித்து வந்த அழகிகள் தாவூத்தின் படுக்கைக்கு மஞ்சம் விரித்தார்கள். இந்த போதை அவனை மேலும் உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. நாளையடைவில் அழகிய பெண்களை விரும்பி கேட்க்கும் அளவிற்கு தாவூத்தை பெண் போதை தள்ளியது. நாளையடைவில் தினசரி ஒரு பெண் என்கிற நிலைக்கு நிறுத்தியது. தாவூத்தின் ஆட்களில் இதற்காக உலகம் முழுவதும் பல்வேறு ஆட்களை பிடித்து வந்தனர்.ஒரு கட்டத்தில் தாவூத்தே போதும் என்று நிறுத்தும் அளவிற்கு வந்து விட்டது. ஆனாலும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவது போல ஆசைகள் வெட்கம் அறியாமல் தாவூத்திற்கு அப்போ அப்போ வந்து வந்து போனது.

பெரும்பாலான இரவுகளில் தாவூத் முழித்தே இருப்பான். அதனால் பகல் பொழுதுகளில் நண்பகல் வரை தூங்கி எழுவது வழக்கம். அப்படி எழும் தாவூத் நீச்சல் குளத்தில்  குளித்து விட்டு,மதிய உணவு இடைவெளியில் காலை உணவை முடித்து விட்டு, அவனது ‘டி’கம்பெனி ஆட்களை சந்திப்பது வழக்கம்.அதன் பிறகு அவனது மூடை பொருத்து கிரிகெட் விளையாடுவது,ஸ்நூக்கர் விளையாடுவது என்று மாலை வரை அவனது பொழுதுகள் நகர்ந்து செல்லும்.இந்த இடையில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு போனில் பேசுவது,நண்பர்களுக்கு பேசுவது என்று அவனது பகல் பொழுதுகள் கழியும்.

dawood%209%20600%203%281%29.jpg

மாலை நேரத்தில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வது தாவூத்தின் வழக்கம். கராச்சியில் இருக்கும் பல்வேறு இடங்களில் அவனக்கு பங்களாக்கள் இருக்கிறது.அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வது வழக்கம்.தவிர கிளிப்டன் நகரில் கடற்கரையையொட்டிய இடங்களில்அடிக்கடி இது போன்ற பார்டிகளும் நடக்கும்.சில இரவுகள் தாவூத்திற்கு பிடித்த பென்ஸ்காரிலும்,பி.எம்.டபுல்யூ காரிலும் பாகிஸ்தான் மலைக்குன்றுகளில் செல்ப் டிரைவிங் நடக்கும்.இது எப்போதாவது ஒரு முறைதான். தாவூத் அப்படி செல்ப் டிரைவிங் போனால்,அந்த மலைக்குன்றுகள் முழுவதும் பாகிஸ்தான் அரசின் தீவிர கட்டுப்பாட்டில் வந்துவிடும்.தாவூத்தின் காருக்கு மேலே கண்காணிப்பில் ஹெலிகாப்டர் வந்து கொண்டே இருக்கும்.இவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியில்தான் தாவூத்தின் ஒரு நாள் வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது.

60 வயதை கடந்த தாவூத்,அவனுக்கு அடுத்த வாரிசை இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினான்.அனைவரும் தாவூத் ஒய்வு பெற போவதாக நினைத்துக்கொண்டு இருந்தனர்.ஆனால் தாவூத் எனக்கு தேவை ஓய்வு இல்லை, கொஞ்சம் கூடுதலான நேரம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு வழக்கம் போல அவனது கண்காணிப்பில்தான் ‘டி’ கம்பனியை வைத்து இருக்கிறான்.ஆனால் இப்பொழுது தாவூத்தின் நேரங்கள்,நடவடிக்கைகள் மாறி இருக்கிறது.   

தாவூத்தின் வாழ்க்கை இன்று எப்படி கழிகிறது. பல ஆண்டுகளாக தாவூத் இரவுகளில் தூங்குவது இல்லை.அதே பழக்கம் இன்னமும் இருக்கிறது.ஆனால் முன்பு போல சூரியன் வரும் வரை அவனால் விழிக்க முடியவில்லை.அதிகாலையில் அவனுக்கே தெரியாமல் அவனது கண்கள் தூக்கத்தை தழுவ ஆரம்பித்து விட்டது. பகல் பொழுதுகளில் இஸ்லாமாபாத்,கராட்சியில் உள்ள சொத்துகளை பார்வையிடுவது, பாகிஸ்தானில் உள்ள சென்ட்ரல் வங்கி பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த பொழுது தாவூத்தான் பெரும் தொகையை கொடுத்து அந்த வங்கியை தூக்கி நிலை நிறுந்தினான். இதுவரை அந்த வங்கி பக்கமே செல்லாத தாவூத் கடந்த இரண்டு வாரங்களில் வங்கி யின் தலைவர்களை ரகசிய இடத்தில் சந்தித்து இருக்கிறான்.

dawood%2019%20600%202.jpg

அதோடு பாகிஸ்தானில் இருக்கும் முக்கியமான கிரிக்கெட் வீரர்கள் இருவரை சந்தித்து பல்வேறு முக்கிய முடிவுகளை பேசி இருப்பதாக தெரிகிறது.இந்த ஏற்பாட்டை ‘ஜாவிட் மின்னட்’தான் செய்தது.அதோடு பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து ரகசிய  கூட்டங்கள் நடந்து இருக்கிறது.

தாவூத்திற்கு முன்பு போல உடல் நிலை இப்பொழுது இல்லையாம்.வயிற்றில் உணவு செரிமான குழாய் பிரச்சனை இருந்து அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறதுதாம்.சிறு நீரக பிரச்சனை வேறு இருக்கிறதாம்.நண்பகலில் தாவூத்தின் மருத்துவர்கள்இருவர் மட்டும் தினசரி தாவூத் சொல்லும் இடத்திற்கு அழைத்து வரப்படுது,அதன் பிறகு தொழுவது,பிறகு பாகிஸ்தானில் முக்கியமான அதிகாரிகளை சந்திப்பது என்று கடந்த இரண்டு வாரங்களில் தாவூத்தின் நேரங்கள் மாறி இருக்கிறது.

இரவு வேளைகளில் தாவூத்திற்கு பிடித்த மும்பையின் பழைய சினிமாக்களை பார்ப்பது,தேவை என்றால் பெண்கள்,அவசியமாக அவனுக்கு பிடித்த ‘ரெட்லேபிள்’மதுவை குடிப்பது,அதன் பிறகு பாகிஸ்தானில் வழக்கம் போல இரவுகளை சுற்றுவது என்று கழிகிறதாம்.தாவூத்தின் குடும்ப உறுப்பினர்கள்,பேரன் பேத்திகள் என்று அனைவரையும் வரவழைத்து நெடுநாட்களுக்கு பிறகு குடும்ப போட்டாவை எடுத்து இருக்கிறார்கள் தாவூத்தின் குடும்பத்தினர்.

தாவூத்தை சுற்றி  இவ்வளவு சம்பவங்கள் பாகிஸ்தானில் நடந்து கொண்டு இருந்தாலும்,தாவூத் குறித்து இந்தியா பாகிஸ்தானிடம் கேட்கும் பொழுதெல்லாம் பாகிஸ்தான் தாவூத் இங்கு இல்லை என்று சொல்லி வருகிறது.அந்த நேரங்களில் தாவூத் எங்கு இருப்பான்?

கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்

http://www.vikatan.com/news/coverstory/57693-dawood-declared-that-he-is-not-interested-to-retir.art

  • தொடங்கியவர்

பாகிஸ்தானின் தங்கமுட்டையிடும் வாத்து தாவூத்! (தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர்- 19)

 

dawood%20199%20logo.jpg

தாவூத்திற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு என்ன...? ஏன் பாகிஸ்தான் தாவூத்திற்கு பாதுகாப்பு கொடுக்கிறது? பாகிஸ்தானின் தங்க முட்டையிடும் வாத்தாக தாவூத்தை வைத்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஒரே ஒரு சம்பவம்தான் தாவூத்தை இன்றளவும் மும்பைக்குள் நுழையவிடாமல் செய்து வருகிறது. அந்த சம்பவத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் தாவூத்தை மேலும் முடக்கி வைத்து, தாவூத் மூலம் அவர்களுக்கு தேவையான பல்வேறு காரியங்களை சாதித்து கொண்டு வருகிறார்கள்.

அமெரிக்கா முதல் பிரிட்டன் வரை பல்வேறு மேற்க்கத்திய நாடுகள் தாவூத்தை 1990 களுக்கு பிறகு தீவிரமாக  கண்காணிக்க ஆரம்பித்து விட்டனர். 2001  செப்டம்பர்-11 ல் நடந்த அமெரிக்கா தாக்குதலில் 2800 க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். 5000 க்கும் அதிகமான நபர்கள் கை,கால்கள் என்று உடலில் பல்வேறு உறுப்புகளை இழந்து ஊனமாகி நின்றார்கள்.

dawood%2019%20leftttt.jpg60 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இறந்து இருந்தார்கள். உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து கடத்தல்காரர்கள், தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்கள் என்று அனைத்து நபர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். ஒட்டு மொத்த உலகமும் தீவிரவாத செயல்களுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது வந்தன.

இதனால் தாவூத் உலக நாடுகளுக்கு பறக்க முடியாமல் கூண்டுக் கிளி போல ஒரே இடத்தில் பதுங்க வேண்டிய சூழல் ஆகிவிட்டது. தீவிரவாத சக்திகளை ஒழிக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கோடிக்கணக்கான டாலர்களை ஒதுக்கினார்கள். ஆனாலும் தீவிரவாதிகள் ‘அனல் காற்று’ போல அவர்கள் விருப்பட்ட இடங்களில்,  அவர்களது வேலையை காட்டி,  மக்களை கொத்துக்கொத்தாக கொலை செய்து, அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றிக்கொண்டு வந்தார்கள்.

மார்ச் 12, 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு நாள். ஹோட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள், வங்கிகள், மார்கெட் என்று மக்கள் அதிகமாக புழங்கும் இடங்களில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளை கிலோக்கணக்கில் பயன்படுத்தி 13 கார்களில் வைத்து தொடர் குண்டு வெடிப்புகளை வெடித்தனர். தொடர்ச்சியாக வெடித்த குண்டுகளில் மும்பை மாநகரமே ரத்தக்களறியானது. 257 நபர்களின் உடல்கள் வெடித்தது சிதறியது. இறந்துபோன பல்வேறு நபர்களின் முகங்கள் அடையாளம் தெரியாமல், வெகுநாட்கள் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு இருந்தது. 750 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த ஒரு சம்வத்தால் இந்தியாவே அதிர்ந்து போனது.

1992 டிசம்பர் ஆறாம் தேதி,  இந்துத்துவா கும்பல் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்து தள்ளியது. அதன் தாக்கம் இந்து-முஸ்லிம் கலவரமாக மாறி நாடு முழுவதும் பெரும் கலவரங்களை உண்டு பண்ணியது. 2000 த்துக்கும் மேற்பட்ட நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்தியாவில் இது போன்று ஏதாவது சம்பவம் நடக்காதா என்று காத்திருந்த பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ,  இந்தியாவின் ‘மதசார்பற்ற நாடியை’ பல்ஸ் பார்க்க ஆரம்பித்து. இந்தியாவின் இதயத்தில் குத்துவது என்று தீர்மானம் செய்து உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இஸ்லாமிய அடிப்படை வாதிகளை இணைத்து,  பல்வேறு இடங்களில் கூட்டம் போட்டது.

dawood%20199%20right.jpg'பாபர் மசூதியை இடித்ததை பெருமையாக கருதுவதாக சிவசேனா குரல் கொடுக்கிறது. அவர்களின் குரல் வளையை நெறிக்க வேண்டும். திருப்பி தாக்குவதே இதற்கு ஒரே முடிவு' என்று தீர்மானம் போட்டார்கள். இதற்காக முஸ்லிம் அடிப்படை வாதிகள் துபாய், லண்டன், கராச்சி என்று பல்வேறு இடங்களில் கூட்டம் போட்டு ஒரு முடிவை எடுத்தார்கள். அந்த முடிவுதான் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்.

பாகிஸ்தான் அரசே நேரடியாக தலையிட்டால் சர்வதேச அளவில் பல்வேறு சிக்கல்கள் வரும் என்பதால்,  இந்தியாவில், குறிப்பாக மும்பையில் இருந்து, ஸ்லீப்பர் செல்போல 30  இளைஞர்களை தேர்வு செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பாபர் மசூதி இடிப்புக்கு பழிதீர்க்கும் சம்பவமாக இருக்க வேண்டும் என்று சொல்லி துபாய், பாகிஸ்தானில் பயற்சி கொடுக்கப்பட்டது.

பாலஸ்தீனிய அமைப்பு, துபாய் அமைப்பு என்று பல்வேறு அமைப்புகள் இவர்களுக்கு  நிதி உதவி அளித்தார்கள். இந்த ஆபரேஷனுக்கு ‘பழி வாங்கும் முகம்’ என்று பெயர் வைத்து,  மும்பையை சேர்ந்த டைகர் மேமன், முகமது டோசா ஆகிய இருவரையும் தேர்வு செய்து ஆபரேஷன் பொறுப்பாளராக நியமித்தனர்.

இந்த சம்பவத்தை செயல்படுத்துவதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ பயங்கரமாக வேலை செய்து வந்தது. டைகர் மேமன் ஒரு சர்வதேச கடத்தல்காரன். தாவூத்தை விட அதி பயங்கர செல்வாக்கான நபர். தாவூத்திற்கும் டைகர் மேமனுக்கும் தொழில் போட்டிகள் இருந்து வந்தன. இருந்தாலும் இந்த காரியத்தை,  மும்பையில் தாவூத்தின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்று டைகர் மேமன்,  பாகிஸ்தான் உளவாளிகளிடம் சொல்லியதால், ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்த முக்கிய புள்ளிகள் தாவூத்திடம் பேச்சு வார்தைகள் நடத்தி வந்தனர்.

சோட்டா ராஜன் மகாராஷ்டிரா மாநில இந்து என்பதால், அவனுக்கு தெரிந்தால் அவன் போட்டு கொடுத்து விடுவான் என்று தாவூத்தின் நிழலாக வலம் வந்த அவனை கழட்டி விட்டார்கள். அவனுக்கு பதில் சோட்டா ஷகில் போய் வந்தான். ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள், சந்திப்புகள் நடந்த பிறகு டைகர் மேமனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க தாவூத் ஒத்துக்கொண்டான்.

dawood%20199%20600%201.jpg

எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்த டைகர் மேமன் 1993 , பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவின்  ராய்காட் துறைமுகம் வழியாக ஒன்பது டன் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துகள், குண்டுகள், துப்பாகிகள், தேவையான பொருட்கள் என்று பல்வேறு அபாயகரமான பொருட்களை மும்பைக்குள் கொண்டு வந்தான். கொண்டு வந்த வெடிபொருட்களை 15 இடங்களுக்கு பிரித்துக் கொடுத்தான். அதில் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தாவூத்திற்கு சொந்தமான, அவனது கட்டுப்பாட்டில் இருந்த  இடங்கள். அங்கிருந்து 13 வெடிகுண்டுகளை தயார் செய்து அவற்றை கார்களில் நிரப்பி,  மும்பையின் அதிக மக்கள் நடமாடும் இடங்களில் வைத்தார்கள்.

இந்த விஷயங்கள் எல்லாம் தாவூத்திற்கு தெரியாது என்று சோட்டா ராஜன் சொன்னான். இடம் கொடுத்தோம் அவர்களுக்கு, ஆனால் அவர்கள் இது போன்ற படுமோசமான காரியத்திற்கு பயன்படுத்துவது யாருக்கும் தெரியாது என்று அவனுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகளிடம், அவர்களது விளக்கத்தை சொல்லி இருக்கிறான்.   

முதல் வெடிகுண்டு நண்பகலில் ஒரு மணிக்கு மேல், மும்பை பங்கு சந்தை வளாகத்தில் வெடித்தது. அடுத்தடுத்த ஐந்து நிமிடங்களில் பத்து இடங்களில் வெடித்ததால், மும்பை ரத்த வெள்ளத்தில் மிதந்தது. மும்பை விமான நிலையம், மாஹிம் பகுதி என்று ஒரு சில இடங்களில் வெடிக்காத குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. அந்த குண்டுகளும் வெடித்திருந்தால் சேதாரம் இன்னமும் அதிகமாக இருந்து இருக்கும்.

dawood%20199%20600%203.jpg

குண்டுகள் வெடிக்கும் ஒரு நாள் முன்பே டைகர் மேமன், அவனுடைய நான்கு சகோதரர்கள், அவர்களின் குடும்பம், அவனின் பெற்றோர் என்று ஒட்டு மொத்தக் குடும்பமும் இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தான் சென்று விட்டனர். இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அப்படியே இருந்தன. டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமனின் பைக், மச்சானின் கார் என்று பல்வேறு பொருட்கள் மும்பை தாதர் பகுதியில் தனியாக இருந்ததை பார்த்த போலீசார், அவைகளில்  குண்டுகள் இருக்கும் என்று சோதித்து பார்த்து பிறகுதான் தெரிந்தது டைகர் மேமனின் குடும்ப சொத்துக்கள் என்று.

dawood%20199%20600%20leftt1.jpgஅவற்றை அவர்கள் வாங்க வராததால்,  சந்தேகம் வலுவடைந்து டைகர் மேமனின் வீட்டிற்கு போன பொழுது அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமும் இந்தியாவை விட்டு காலியான விபரம் தெரிந்தது.

இந்த சம்பவம் நடந்தபொழுது,  தாவூத் துபாயில் இருந்தான். இந்த குண்டு வெடிப்பின் சேதாரம் படு மோசமாக இருந்ததும், தாவூத் நிலை குலைந்து போனான். அவனுக்கு ஏகப்பட்ட கடிதங்களும், போன் கால்களும் பறந்தன. சொந்த நாட்டை காட்டிகொடுத்த, சொந்த இனத்தினை கருவறுத்த துரோகி, பொதுமக்களை அழித்தொழித்த பாவி என்று பகிரங்க குற்றசாட்டுகள்  நேரடியாகவே அவனது காதுகளுக்கும், கண்களுக்கும் போய் சேர்ந்தது. நிலை குலைந்து போன தாவூத் ஒரு முடிவு எடுத்தான்.

முதல் முறையாக அவன் செய்த செயல் அவனது மனதை கசக்கி நிம்மதியற்றவனாக ஆக்கியது. இந்த செயல்களுக்கு நான் தண்டனையை அனுபவிக்க தயராகிவிட்டேன் என்றும்,  இந்தியாவில் சரணடைய போவதாகவும் தெரிவித்த அவன், அவனுக்கு தெரிந்த மூத்த போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினான்.

அதற்குள் இந்திய அரசு,  துபாயில் இருக்கும் அவனை இந்தியாவில் ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு நாட்டு அரசிற்கு நெருக்கடியை கொடுத்தது. உலகம் முழுவதும் இருந்து மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பெரும் கண்டனக்குரல் எழுந்ததால், வேறு வழியின்றி துபாயில் இருந்து தாவூத் வெளியேற்றப்பட்டான். இந்தியாவின் கைகளில் சிக்கினால் சுட்டுக்கொலை செய்து விடுவார்கள் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. உடனடியாக தாவூத் லண்டனில் இருந்த பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை தொடர்பு கொண்டான். பல்வேறு வாக்குறுதிகளுக்கு பிறகு ராம்ஜெத்மலானி தாவூத்திற்காக ஆஜரானார்.

dawood%20199%20600%202%281%29.jpg

வழக்கு நடந்து கொண்டு இருக்கும் பொழுதே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அந்த எதிர்ப்புகள்தான் இதுவரை தாவூத்தை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து வைத்து இருக்கிறது.

என்ன அது ?

http://www.vikatan.com/news/coverstory/57939-the-brain-of-mumbai-blast-1993.art

  • தொடங்கியவர்

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரம் செய்த தாவூத் இப்ராகிம்! (தாதா தாவூத் இப்ராகிம்: தொடர்-20)

 

dawood%20logo%2020.jpg

தாவூத்தின் மூளைக்குள் குழப்பமான செய்திகள் வந்து பாய்ந்து கொண்டே இருந்ததில், என்ன முடிவுகள் எடுப்பது என்கிற பெரும் குழப்பத்தில் இருந்தான். நெருக்கமாக இருந்த பல்வேறு நபர்கள் மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தாவூத்திடம் பேசுவதை நிறுத்தி விட்டனர். உலகமே தனது கைக்குள் அடங்கி, தனது ஆளுமையின் கீழ் வைத்து இருப்பது போல மமதையில் இருந்த தாவூத்திற்கு, இன்று அதே உலகம் அவனது காலுக்கு கீழே இடிந்து பூமிக்குள் புதைந்து போவது போல இருந்தது.

திடீர் உணர்ச்சியில் ஒரு முடிவு எடுத்தான் தாவூத். இந்தியாவில் சரணடைந்து விடுவது என்று. அதற்காக பேச்சு வார்த்தை நடத்தவே ராம்ஜெத் மலானியை தன் சார்பில் அனுப்பினான். ஒரு சில நிபந்தனைகளோடு. மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தவிர வேறு எந்த வித வழக்குகளும் தன் மீது நிலுவையில் இருக்க கூடாது. அடுத்து தன்னை சிறையில் அடைக்க கூடாது. தடுப்பு காவலில் அதாவது வீட்டுக் காவலில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்கிற இரு வாக்குறுதிகளை இந்திய அரசு செய்து கொடுத்தால்,  தான் சரணடையப் போவதாக அறிவித்தான்.

dawood%202.jpg

இதற்காக மும்பையின் சட்டசபை கூட்டப்பட்டது. தாவூத் சார்பாக ராம்ஜெத் மலானி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். மும்பையிலும், இந்தியாவில் இருந்த பல்வேறு முக்கியமான அரசியல்வாதிகள், அவர்களுக்கு அடுத்து இந்தியாவை ஆண்டு வரும் பல்வேறு அதிகாரிகள் கதி கலங்கி போனார்கள். தாவூத் சரணடைந்தால் இதுவரை தாவூத்திடம் பெற்ற சலுகைகள், டீலிங்குகள், உறவுகள் எல்லாம் வெளியே வந்துவிடும் என்று அஞ்சினார்கள்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகள்,  அரசியல்வாதிகள் மட்டும் தாவூத்தை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்தனர். 'முதலில் தாவூத் சரணடைந்து விடட்டும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று ஒரு முடிவில்லாமல் பேச்சு வார்த்தைகள்,  குதிரைக்கு கடிவாளம் இல்லாதது போல எங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தது  தாவூத்தின் சரணடையும் படலம்.

ram%20jethmalani%201.jpgசில  நாட்கள் கழித்து இந்திய அரசு, தாவூத்தின் நிபந்தனைகளுக்கு நோ சொல்லியது. அந்த மூன்று நாட்களில் தாவூத்தின் காதுகளுக்கு பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருந்தது. தாவூத்திற்கு நெருக்கமாக இருந்த பல்வேறு அதிகாரிகள் சூழ்ச்சி செய்தார்கள். 'நீங்கள் இந்தியாவிற்கு வந்தால் அவ்வளவுதான்' என்று உலகத்தை மிரட்டிய ஒரு டானை, நெடுநாட்களுக்கு பிறகு அவனது மன நிலையை  நிலைகுலையவைத்தனர்.

மதில் மேல் பூனையாக இருந்த தாவூத் ஒரு முடிவு எடுப்பதற்குள் ‘பாகிஸ்தான்’ காற்று தாவூத்தை தள்ளிக்கொண்டு போய் விட்டது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவு போல தாவூத்தும் இந்தியாவை விட்டு பிரிந்து போனான். இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு மாதங்களில் நடக்கவில்லை.

இந்த பிரச்னைகள் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே 1994 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டைகர் மேமனின் சகோதரன் யாகூப் மேமன் இந்தியாவில் சரணடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. யாகூப் சரணடையவில்லை; அவனை கைது செய்தோம் என்ற ‘ரா’வில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ராமன்,  “மும்பையில் இருந்து டைகர் மேமனின் உறவினர் ஒருவர் யாகூப் மேமனை சந்திக்க வருவதாக தகவல்கள் கிடைத்தன. சந்திப்புக்கு பின்னர் யாகூப், காத்மாண்டில்  இருந்து கராச்சிக்கு செல்லும் பொழுது நாங்கள் அவனை காத்மாண்டில் வைத்து கைது செய்தோம்” என்று மீடியாவில் சொல்லி இருக்கிறார்.

ஆனால் சிபிஐ தரப்பில்,  யாகூப்பை சிபிஐ கைது செய்ததாக இந்திய அரசிடமிருந்து ரிவார்ட் பணம் வாங்கி இருப்பதாக பேச்சுக்கள் ஓடின. ஆனால் யாகூப்பின் மனைவி ரஹீன்,  “சிபிஐ வழக்கிற்காக,   குண்டு வெடிப்பு வழக்கில் பெயில் கொடுப்பதாக சிபிஐ அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அதனால் எங்களது வழக்கறிஞர் ஷ்யாம் கேஸ்வானி மூலம் அவரை நீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்தோம். அங்கு பெயில் கொடுக்காமல் தந்திரமாக அடுத்த நாள் கைது செய்து விட்டனர்” என்று  மீடியாவில் பேட்டி கொடுத்தார். இப்படி ஒரு கைது, அல்லது சரண்டரை பல்வேறு வழிகளில் பல்வேறு துறைகளில் குழப்பம் செய்ததால் யாகூப் மேமனின் விவகாரம்  பற்றிய சர்ச்சை,  தாவூத்திற்கு ஒரு புதிய கோணத்தை உண்டாக்கியது.

Yakub%20Memon.jpgஅவனது சரண்டர் எண்ணம் பனால் ஆனது. அவனது மனம் இப்பொழுது முழு நிம்மதியடைந்தது. தாவூத்திற்கு நெருக்கடியான நிலைமை வந்தபொழுது,  பாகிஸ்தானின் அதிகார உயர் மட்ட குழுவில் இருந்தவர்கள் விருந்து கொடுத்து உபசரிப்பதும், உலகத்தின் பல்வேறு உளவு ஆட்கள் பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்து வந்த பொழுது,  ஒரு சிலரை கண்டறிந்து, அவர்களை பாகிஸ்தானில் வைத்து தாவூத்தின் முன்னிலையில் அவர்களின் கதையை முடித்த சம்பவங்கள் சத்தமில்லாமல் நடந்தன.

இதுபோன்ற பல்வேறு உதவிகளால்,  தாவூத்தின் மனம் முழுவதும்  பாகிஸ்தானுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டான். அதன் விளைவாகத்தான், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியில் இருந்த பாகிஸ்தான் நேஷனல் வங்கியை தூக்கி நிறுத்த பல மில்லியன் டாலர் பணத்தை வாரி வழங்கினான்.

இந்நிலையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு,  தாவூத்தை கையில் எடுத்து இந்தியாவில் பல்வேறு வேலைகளை செய்து வந்தது.  தாவூத்தை வைத்து காஷ்மீரை தங்கள் கையில் எடுக்க திட்டம் போட்டு வேலை பார்த்து வந்தது அந்த அமைப்பு. ஆனால் இந்தியாவில் நிலவி வந்த பல்வேறு அரசியல் சூழ்நிலைகள்,  காஷ்மீரை விட்டுகொடுக்காமல் தக்க வைத்துக் கொள்ள இன்றளவும் போராடிக்கொண்டிருக்கும் நிலை நிலவுகிறது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு மோசமான அமைப்புகளில்  தாவூத் நல்ல தொடர்பை வைத்துக்கொண்டான்.

பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷ்ரப்,  ராணுவத்திற்கு அணு ஆயுதங்கள் வாங்க பல்வேறு உதவிகளை தாவூத்திடம் கேட்ட பொழுது, தாவூத் தாராளமாக உதவினான். அதோடு இல்லாமல் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து அணு ஆயுதங்களை வாங்கி கொடுத்தான் தாவூத். அதனால் முஷ்ரப்பிற்கும், தாவூத்திற்கும் நெருக்கம் உண்டானது. இந்த நெருக்கம் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முஷ்ரப்பை கொண்டு வரும் அளவிற்கு வந்தது. முஷ்ரப்க்காக தாவூத், பாகிஸ்தானில் ஒரே வேனில் தேர்தல் பிரசாரம் செய்ததை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று எழுதியது. அதற்காக அதன் கட்டுரையாளர் குலாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

musharaf%281%29.jpgஅவர் எழுதிய கட்டுரையில், " இந்தியா- பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு நிகழும் பொழுதெல்லாம் தாவூத்,  பாகிஸ்தான் எல்லைகளில் அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பபடுவார். அதோடு இல்லாமல் தாவூத்தை அனுப்பும் அனைத்து வேலைகளையும் பிரதமரின் அந்தரங்க செயலாளர்தான் பொறுப்பாக செய்வார். முஷ்ரப் ஆட்சியில் அதிகமாக போடப்பட்ட பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகளுக்கான பதவிகள் எல்லாமே தாவூத் சொன்ன ஆட்களுக்கு மட்டுமே போடப்பட்டு இருக்கிறது. தாவூத்தின் ஆட்கள்தான் பாகிஸ்தானின் ஆட்சியை நிர்ணயம் செய்யும் இடத்தில் இருக்கிறார்கள்.

பல்வேறு மூத்த அதிகாரிகள் அரசுப்பணியில் இருந்து ஒய்வு பெற்ற பிறகும் தாவூத்திடம் வேலை செய்து வருகின்றனர். தாவூத்தின் இந்திய தொடர்புகள் கூட பயங்கரமானவை. மும்பையில் இருந்து கொண்டே தாவூத்திற்கு பல்வேறு வேலைகளை செய்து கொடுக்கிறார்கள். தாவூத்தினை தேடி வரும் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் புகைப்படங்கள் என்று எல்லாமே பாகிஸ்தானின் அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதனால் இந்திய உளவுத்துறை அதிகாரிகளை பாகிஸ்தான் ஏர்போர்ட்டிலேயே வைத்து திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடந்து இருக்கிறது. ஒரு சில அதிகாரிகள் காணாமல் போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

பாகிஸ்தான் கஜானாவின் ஒரு பகுதி தாவூத்திற்கு சொந்தமானவை. இஸ்லாமிய மதத்திற்கு எதிரான, அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலையை தாவூத், பாகிஸ்தானில் செய்து வருவது மோசமான விஷயம். பாகிஸ்தான் மலைக்குன்றுகள், ஆப்கானிஸ்தான் மலைக்குன்றுகளில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை தாவூத்தின் ஆட்கள் பயிர் செய்து, அதை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இவர்களுக்கு முக்கிய தொழில் தங்கம் கடத்துவது, போதைபொருட்கள் கடத்துவது, கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் போன்றவை. பாகிஸ்தானில் இருக்கும் முக்கியமான அதிகாரிகள் அனைவரும்,  தாவூத்தின் மாலை நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு போடும் ஆட்டம், இந்த நாட்டிற்கு அவமானம்" என்று கூறியிருந்ததோடு,  தாவூத்திற்கு உள்ளூரில், யார் யார் என்ன என்ன வகையில் உதவி செய்கிறார்கள் என்பதையும் பட்டியலிட்டு எழுதியிருந்தார்.

dawood%2019%20600%202.jpg

இதற்காக குலாம் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தப்பட்டார். பிறகு சிறிது நாளில் அவர் அங்கிருந்து தப்பித்து அமெரிக்கா சென்று விட்டார். இப்பொழுதும் குலாம் பல்வேறு சர்வதேச பத்திரிகைகளில்,  தாவூத் குறித்த பல்வேறு அப்டேட் செய்திகளை எழுதி வருகிறார்.

2001-ம் ஆண்டு குலாம் எழுதிய கட்டுரையின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்த கட்டுரையின் வீச்சு பிரான்ஸ் நாட்டின் இயங்கும் இன்டர்போல் அமைப்பிற்கு  இந்தியா,  அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் நெருக்கடியை கொடுக்கும் அளவுக்கு சென்றது. அவர்கள் தாவூத்தை உலகத்தின் மோசமான குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்து, பாகிஸ்தானுக்கு நெருக்கடியை கொடுத்தனர். இருந்தாலும் அதை எளிதாக சமாளித்தது பாகிஸ்தான் அரசு.

அது எப்படி?

http://www.vikatan.com/news/coverstory/58203-dawood-participates-election-campaign-musharraf.art

  • தொடங்கியவர்

அம்பலமான தாவூத்தின் பாகிஸ்தான் ரகசியம்! ( தாவூத் இப்ராஹிம் தொடர்- 21)

 

dawood%20logo%2021.jpg

தாவூத் பாகிஸ்தானில்தான் குடியுரிமை பெற்று வாழ்வதாக செய்திகள் அடிபடும் முன்பே, அதுகுறித்து பல்வேறு நாட்டின் உளவுத்துறை ஏஜென்ட்களுக்கு தெரிந்த இருந்தது. உளவுத்துறைக்கு மட்டும் தெரிந்த விஷயம்,  எப்படி வெளியே போனது என்று தாவூத்தும், பாகிஸ்தானும் அலசி ஆராய்ந்த பொழுது அவர்களுக்கு ‘ஷாக்’கொடுக்கும் சம்பவங்களும் அவர்களுக்கு காத்திருந்தது.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததுபோய் இன்று பாகிஸ்தானில் குடியுரிமை பெற்று,  முழு பாகிஸ்தான் வாசியாக தாவூத் மாறிப்போனதை உளவுத்துறை ஏஜென்டுகள் தவிர்த்து,  பல்வேறு வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கே தெரிந்து இருக்கிறது.

இந்தியர்களை தவிர்த்து ஜப்பானியர்கள், டென்மார்க்காரர்கள் என்று மூன்று பொறியாளர்கள் பாகிஸ்தா னுக்கு போய்விட்டு வந்த பிறகுதான்,  அந்த பவர் பிளான்ட் நிறுவனம் தாவூத்திற்கு சொந்தமானவை என்று தெரிய வந்ததாக சொன்னார்கள். அவர்கள் சொன்ன தகவல்தான் முதன் முதலில் ஆதாரமாக வெளியாகி, இன்டர் நேஷனல் செய்திகளாக உருவாக காரணமாக இருந்தது. அரசல் புரசலாக இருந்து வந்த விஷயம் உறுதியான செய்தியாக வெளியே வந்தது.

dawood%2019%20leftttt.jpgகுட்கா தொழிலில் கொடி கட்டி பறக்கும் அனிஸ்,  பாகிஸ்தானில் குடியேறியதும் பவர் பிளான்ட், கடல் மீன்களை  ஏற்றுமதி செய்வது என்று ஒரு சில வேலைகளை ஆரம்பித்து வந்தாலும்,   நாளடைவில் தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிலில் இறங்கினான். குட்கா, பான் பொருட்களில் அதிக போதை வஸ்துகளை கலந்து,  பாகிஸ்தானில்  தயாரித்து மொத்தமாக விற்றுக்கொண்டு இருந்தான்.

2002 -ம் ஆண்டில் இது போன்ற தொழில்களை பாகிஸ்தான் அரசு தடை செய்தது. ஆனாலும் நம்மூரைப்போல தொழில் வெற்றிகரமாக நடந்தது. அப்போதைக்கு வருடத்திற்கு 450  கோடி ரூபாய் என  மதிப்பீடு
செய்து இருந்தார்கள். மீண்டும் சந்தையில் குட்கா பொருட்கள் கொடி கட்டிப்பறந்தது. இதற்காக அனிஸ்க்கு,  இந்தியாவில் குட்கா தயாரிப்பில் முன்னோடியாக இருந்து வந்த பிரபல குட்கா தொழிலதிபர் ஜோஷி என்பவர் உதவி செய்தது தெரியவந்தது. ஜோஷிக்கும், மாணிக்சந்த் தாரிக்கும் மும்பையில் தொழில் போட்டிகள் இருந்து வந்தன.

பஞ்சாயத்து,  பாகிஸ்தானில் இருக்கும் தாவூத்திற்கு போனது. இருவரையும் பாகிஸ்தானுக்கு அழைத்து பஞ்சாயத்து பேசி அனுப்பி விட்டதாக மும்பை போலீஸ் பிறகு கண்டுபிடித்தது. அந்த நெருக்கத்தில் ஜோஷியை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அனிஸ்,  ஜோஷி மூலம் குட்கா தயாரிக்கும் இயந்திரங்களை துபாயில் இருந்து இறக்குமதி செய்து, தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு பாகிஸ்தானில் தொழிலை விரிவுபடுத்தினான்.

அதன் மொத்த வருவாயில்,  சில நூறு கோடிகளை பாகிஸ்தானில் உள்ள முக்கியப் புள்ளிகளுக்கு பங்கு கொடுத்துள்ளான். அந்த தொழிலில் சேவை வரி, உற்பத்தி வரி என்று பல்வேறு வரிவிலக்குகள் வேறு பாகிஸ்தான் அரசு அளித்தது பின்னாளில்தான் தெரிய வந்தது. கள்ள நோட்டுகளின் பிறப்பிடம் பாகிஸ்தான். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் எத்தனையோ விவகாரங்கள் முட்டிக்கொண்டு இருந்தாலும்,  இன்றளவும் தீர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது கள்ளநோட்டு விவகாரம்தான்.

இந்தியாவில் அதிகமாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது,  பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதக் குழு என்கிற பேச்சு பல்வேறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்தக் குழுவிற்கு அடைக்கலம் கொடுப்பது முதல் அவர்களின் நடமாட்டம், மும்பை பங்கு சந்தையில் அந்நிய செலாவணிகளின்
நிலவரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி என்று உள்ளிட்ட அனைத்து பொருளாதார விவகாரங்களையும்,
பாகிஸ்தானில் இருக்கும் பொருளாதார நிபுணர்களுக்கு அப்டேட் செய்வதுண்டு. அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் கைவைக்க பல்வேறு வேலைகளை செய்வதுண்டு.

curancy%20thiruvanamalai%202.jpg

அதில் முக்கியமான வேலைதான் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது. இதற்காக பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, முல்ட்டன் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரிண்டிங் மெஷின்களை போட்டு ஜரூராக வேலைகளை செய்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கி வரும் லஸ்கர் இ தொய்பா  என்கிற
அமைப்புதான் இந்த வேலையை முன்னின்று செய்து வருகிறது. இதற்கு ஐ.எஸ்.ஐ அமைப்புதான் மூளையாக இருந்து வருகிறது.

இவர்கள் இதற்காக அச்சிடும் தாள்களை வியட்நாம், டென்மார்க் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வாங்கி வருகிறார்கள். இந்தியாவில் இருந்து வெளியாகும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் தாள்களை மட்டும் அச்சிட்டு இந்திய சந்தைகளில் உலாவ விட்டனர். அதன் பிறகு 500,1000 ரூபாய் தாள்களை கோடிக்கணக்கில் அச்சிட ஆரம்பித்து அவற்றை நேபாளம், காத்மாண்டு வழியாக இலங்கை, ஹாலந்து, தாய்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர் என்று பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து கள்ள நோட்டுகளை உலாவவிடுவதில் பயங்கர கில்லாடிகளாக இருந்து வந்தனர்.

dawood%202.jpg


இதற்காக பிரத்யேகமான ஆட்கள் இருந்து வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் தாவூத்திற்கு
நெருக்கமாக இருந்து வந்தவர்கள் என்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த 2013-ம் ஆண்டு  மட்டும் ஆறு கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை இந்திய அரசு பறிமுதல் செய்தது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் கள்ள நோட்டுக்களின் பிடிபடும் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே சென்றது. கள்ள
நோட்டுகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகளை கொண்டு வந்தும், அவை
இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டில் வரவில்லை.

தாவூத் தம்பியுடன் நெருக்கமாக இருந்தாரா  அந்த பிரபல நடிகை...? அடுத்தவாரம் பார்ப்போம்...

http://www.vikatan.com/news/coverstory/58563-dawoods-pakistan-secret-revealed.art

  • தொடங்கியவர்

ஹவாலா பணத்தை கைமாற்ற உதவிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் (தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்- 22)

 

dawood%2022%20logo.jpg

தாவூத்திற்கும் பாலிவுட்டில் வலம் வந்த பல்வேறு நடிகைகளுக்கும் உள்ள தொடர்புகளை மும்பை மீடியாக்கள் எழுதி தள்ளின. அதன் தொடக்கமாக தாவூத்தின் டீமில் இருந்த பல்வேறு நபர்கள் அவர்களின் வசதிகளுக்கு ஏற்ப சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். அதன் தொடக்கமாக தாவூத்தின் தம்பி அனிஸ் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக மீடியாக்கள் எழுதித் தள்ளின. அந்த நடிகை தமிழ்ப்படங்களில் தலைகாட்டிய நடிகையும் கூட.

இந்த சம்பவத்தை பிரபல குட்கா வியாபாரி ஜோஷியே சொன்னதால் பிரச்சனை வெளியே வந்தது. தாவூத் துடன் தொடர்பு வைத்து இருந்ததாலும், பாகிஸ்தானுக்கு சென்று தாவூத்தின் தம்பிக்கு குட்கா தயாரிக்க உதவிகள் செய்து வந்ததை மும்பையில் இருந்து கண்டுபிடித்த மும்பை போலீஸ், ஜோஷி மீது மகாராஷ்டிரா ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

joshi%20gutkha%20agent.jpgஅந்த வழக்கில் தனது 18  பக்க வாக்குமூலத்தில் “ 115 கோடி ஹவாலா பணத்தை தாவூத்திற்காக கொண்டு சென்று பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்தேன். அனிஸ்க்கு குட்கா தயாரிக்கும் இயந்திரங்களை துபாயில் இருந்தும், மும்பையில் இருந்து வாங்கிய உதிரி பாகங்களை துபாய்க்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து கராட்சிக்கு அனுப்பி வைத்ததாகவும், ஒரு நாள் அந்த பிரபல நடிகைக்கு பத்து லட்சம் ரூபாயை, மும்பை பாந்த்ராவில் உள்ள காரிட்டார் சாலையில் இருக்கும் அவரது பிளாட்டில் சென்று அவருக்கு பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். இந்த பணத்தை அனிஸ்தான் கொடுக்க சொன்னார். அனிஸ்ஸின் காதலிதான் அந்த நடிகை” என்று வாக்குமூலம் கொடுத்து இருந்தார் ஜோஷி.

வாக்குமூலம் கொடுத்த அடுத்த நாள் தேசிய செய்திக்குரிய முக்கியத்துவத்துடன் செய்தித்தாள்களில் அது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்த அந்த நடிகை “நான் தேர்தலில் போட்டியிட இருப்பதால் எனக்கு வேண்டாதவர்கள் பல்வேறு வதந்திகளை கிளப்பி விடுகின்றனர்” என்று மறுத்தார். அதன் பிறகு பல்வேறு கிசு கிசு செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

பெங்களூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயருடன் கை கோர்த்த தாவூத் 1996- ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்தது. அந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் விளையாட்டு வீரர் ‘ஜாவேத்
மியாண்டட்’டிற்கு பெங்களூரில் வைத்து மிகப்பெரிய அளவில் ஹவாலா பணத்தை ‘கை’ மாற்றியததாக புகார் எழுந்தது.

dawood%2022%20miyandat%20600%201.jpg

அந்த விளையாட்டு நடந்து கொண்டு இருக்கும் பொழுது தாவூத்தின் ஆட்கள் ஹவாலா பணத்தை அங்கு வைத்து ‘கை’ மாற்றியது தெரிய வந்தது. அந்தக் சம்பவத்திற்கு ஜாவேத்தான் முக்கிய பொறுப்பு வகித்ததாக சொல்லுகிறார்கள். அன்று கூடிய  தாவூத்-ஜாவேத்  கூட்டணி அடுத்த சில ஆண்டுகளில் கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங்கில் உலகையை உலுக்கும் அளவு வளர்ந்தது. அதற்கு பிறகு நடந்த சம்பவங்களால் தாவூத்-ஜாவேத் இருவரையும் சம்பந்தியாகவே ஆக்கியது. அந்த சம்பந்தம்தான் பாகிஸ்தானில் தாவூத்
நிலையாக இருக்க அச்சாரம் போட்டது... அது எப்படி?

http://www.vikatan.com/news/coverstory/58849-javed-miandat-helps-dawood-to-transfer-hawala-fund.art

  • தொடங்கியவர்

மகளின் கல்யாணத்திற்கு மன்னர் வேடத்தில் வந்த தாவூத்! (தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர்-23)

 

dawood%2023%20logo.jpg

“உலகம் தூங்கும் பொழுது நான் மட்டும் விழித்துக்கொண்டு இருப்பேன். எல்லோரும் உழைத்த களைப்பில் கண்ணுறங்கும் பொழுது நான் எனது வேலையை ஆரம்பித்து இருப்பேன்.என மனம் எதை செய்ய சொல்லுகிறதோ அதை மட்டுமே செய்வேன். எந்த வேலையை செய்வது என்றாலும் என் ஆத்மா எனக்குள் சைகை காட்டும், அதை மட்டும்தான் முழுமையாக செய்வேன். இதை எனது வெற்றி என்றும் தோல்வி என்றும் வைத்துக்கொள்ளலாம்” தாவூத் தன்னைப்பற்றியும் தனது வேலையைப்பற்றியும் தனது சகாக்களிடம் பெருமிதமாக எப்போதாவது சொல்லும் வார்த்தைகள் இவை.

பெரும்பாலும் தாவூத்,  இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு மேல் பேசமாட்டான். தாவூத் பார்வைக்கு அர்த்தம் தெரிந்து ஆடுவது சோட்டா ராஜன்தான். சோட்டா ராஜனுக்கு பிறகு சோட்டா ஷகில்தான் எல்லாமே. ஆனால் சோட்டா ராஜனின் இடத்தை இதுவரை யாராலும் நிரப்பவே முடியவில்லை.

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கில் கலக்கிய ஜாவேத்

ஜாவேத்திற்கும் இந்தியாவிற்கும் எப்பொழுதும் ஆகாது. எல்லா நாடுகளுக்கும்,  முன்னாள் கிரிக்கெட் வீரர் என்கிற முறையில் ஜாவேத் உலக நாடுகளுக்கு பறந்தாலும் இந்தியாவிற்கு மட்டும் வருவதில்லை. கிரிக்கெட் நடக்கும் நாடுகளுக்கும் ஜாவேத் சென்று விளையாட்டை வேடிக்கை பார்ப்பதுண்டு. ஆனால் ஜாவேத்தின் ஆட்கள்,  கிரிக்கெட் பிளேயரின் பாத்ரூம் வரைக்கும் போய் வருவார்கள். யார்,  எப்படி,  எந்த வேடத்தில் போவார்கள் என்பது தெரியாது. பல சமயங்களில் அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களை தங்களுக்கு வேலை பார்க்கும் நபராக மாற்றி விடுவதில் கில்லாடி ஜாவேத்.

dawood%2023%20600%201.jpg

இதனால் தாவூத் சொன்ன மாதிரிதான் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். ஒரு சில விதிவிலக்குகள் மட்டும் இருக்கும். மெல்ல மெல்ல இந்த விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் இதற்காகவே தனியாக பயிற்சி கொடுக்கப்பட்ட ஆட்களை இறக்கியது தாவூத்தின் ‘டி’ கம்பெனி. இந்த துறைக்கு முழுப்பொறுப்பு ஜாவேத் என்பது வெளி உலகிற்கு தெரியாத விஷயமாக இருந்தது. பின்னாளில் ஜாவேத் செய்த ஒரு செயலால் அதுவும் அம்பலமானது.                          

2004- ம் ஆண்டு தாவூத்தை சர்வதேச தீவிரவாதியாக உலக நாடுகள் அறிவித்த பிறகு,  தாவூத்தால் முன்பு போல எங்கும் சுதந்திரமாக சுற்றிவர முடியவில்லை. அதனால் அவனுக்கு என்று ஒரு நிரந்த முகவரியை தேடிய பொழுதுதான் கிடைத்த ஐடியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டுக்கு சம்பந்தியாவது.  பாகிஸ்தான் கிரிகெட் அணியில் இருந்து ஜாவேத் ஓய்வு பெற்ற பிறகு,  பல்வேறு மேட்ச் பிக்சிங் விவகாரங்களில் தாவூத்திற்கு மூளையாக செயல்பட்ட காரணத்தினால்,  தாவூத்துடன் நெருக்கமான நட்பை பெற்றார். அந்த நட்புதான் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில்,  ஜாவேத் பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் அளவிற்கு கொண்டு வந்தது. அந்த உறவு அப்படியே டபுள் புரோமொசனாகி சம்பந்தியாக்கியது.

கவனிக்க வைத்த கல்யாணம்... கழுகுப்பார்வையில் தாவூத்

தாவூத்தின் மகள் மாரூ,  லண்டனில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். ஜாவேத்தின் மகன் பிரபல பல்கலைகழகமான ஆக்ஸ்போர்டில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை படித்துக்கொண்டிருந்தான். இருவருக்கும் அவர்கள் வீட்டில் இருந்து திடீர் அழைப்பு வந்ததும், பாகிஸ்தானுக்கு பறந்து வந்தார்கள். வந்தவர்களுக்கு வீட்டுக்குள் நடக்கும் படா படா ஏற்பாடுகள், பாகிஸ்தானின் முக்கிய புள்ளிகளின் வருகைகள் என்று நடப்பது எதுவும் தெரியாமல் இருந்தனர். பின்புதான் தெரிந்தது அது திருமணத்திற்கான நிச்சயதார்த்த ஏற்பாடு என்று.

dawood%2023%20daughter%20600%202.jpg

2005 ஜனவரி 25-ம் தேதி தாவூத்தின் மகள் மாரூ - ஜாவேத் மகன் ஜீனத்கான்  திருமண நிச்சயதார்த்தம்,  பாகிஸ்தானின் முக்கிய புள்ளிகள் முன்னிலையில் நடந்தது. பாகிஸ்தானில் உள்ள நடுநிலை ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டது. உடனே மற்ற ஊடகங்கள்,  ஜாவேத்திடம் தொடர்பு கொண்டு கேள்விகளை கேட்டார்கள். ஜாவேத் “அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம்” என்றார்.

அதன் பிறகு பல்வேறு ஊடகங்கள் கிடுக்கு பிடியை போட்டதும் “தாவூத்தின்  மனைவி மேஜாபீனும், ஜாவித்தின் மனைவி ஷபீனும் சேர்ந்து முடிவு செய்தார்கள். ஜீனத்தும், மாரூவும் விரும்பியதால் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது ” என்று எல்லா மீடியாக்களுக்கு தகவலை சொன்னார். இந்த தகவலை ஜாவேத் சொன்னபொழுது,   “அதனால் வரும் 2005, ஜூலை மாதம் 23  ல் இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது" என அடுத்த தகவலையும் கூடவே சொன்னார்.

திருமண அழைப்பிதழ் வெறும் 500 மட்டுமே அடிக்கப்பட்டது. உலகத்தின் உள்ள முக்கியமான 500 நபர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. துபாயில் உள்ள துபாய் கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் திருமணம் நடக்கப்போகிறது என்று துபாய் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வந்தன. உடனடியாக மொசாட் , MI 6, சி.ஐ.ஏ, ஐ.பி, ரா என்று பல்வேறு நாட்டின் உளவுத்துறை அதிகரிகளும் அலர்ட் ஆனார்கள். எப்படியாவது தாவூத்தை இந்த முறை கையோடு பிடித்து விட வேண்டும் என பல்வேறு நாட்டின் உளவுத்துறையினர்,  ஒரு வாரம் முன்பே கூடினார்கள் துபாயில். இந்தியாவில் உள்ள முக்கியமான பத்திரிகையாளர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஊடவியலாளர்கள் என்று ஒட்டு மொத்த நபர்களும் தாவூத்தின் வரவை நோக்கி காத்திருந்தனர்.


dawood%209%20600%202.jpg

துபாய் கிராண்ட் ஹயாட் ஹோட்டலில்,  பார்க்கிங் சேர்த்து 39 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த ஹோட்டலின்  உள்ள அனைத்து அறைகளையும் புக் செய்து இருந்தனர் தாவூத்தின் ‘டி’கம்பெனி ஆட்கள். திருமண வேலைகளை செய்யும் எடுபிடிகளாக, டிரைவராக, சமையல் வேலை செய்பவராக என்று பல்வேறு இடங்களில் முக்கியமான அதிகாரிகள் ஊடுருவி இருந்தார்கள்.

தாவூத் இல்லத் திருமணத்தில் தாவூத்திற்கு ஸ்கெட்ச் போட்ட இந்திய உளவுத்துறை

திருமணம் நடக்கும் முன்பே ஜூலை 7-ம் தேதி லண்டனில் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. பல்வேறு இழப்புகளை சந்தித்ததால் பெரும் பதட்டமான சூழலில் இருந்த இந்திய உளவுத்துறையான ஐ.பி., நாட்டின் முக்கியமான உளவுத்துறை அதிகாரிகள் கூடும் இடத்தில் தாவூத்தை போட்டு தள்ளுவது என்று முடிவு எடுத்திருந்தது. அதற்காக உயர்மட்டக் குழுவினர் ஒன்று கூடி பேசி,  யார் இதற்கு சரியான ஆட்கள் என்று முடிவு செய்தனர். 'சோட்டா ராஜன்தான் சரியாக செய்வான் அவனிடம் வேலையை கொடுத்தால் கச்சிதமாக வேலை முடிந்து விடும்' என்று சோட்டா ராஜனிடம் பேசினார்கள்.

மகளின் திருமண நாளில் தாவூத்தை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது. பஞ்சாப்பில் 'ஆபரேசன் புளூ ஸ்டார்'  என்ற தாக்குதல் திட்டத்தை முன்னின்று நடத்திய அஜய் தோவ்வால்,  சோட்டா ராஜனிடம் பேசி எல்லா ஏற்பாடுகளும் செய்து தருவதாக வாக்கு கொடுத்து,  முக்கிய அமைச்சர் ஒருவரை வைத்து பேசியும் இருந்தார். இதற்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருந்தன. இந்திய விசா, பாஸ்போர்ட்டில் அரசு அதிகாரிகள் போல துபாய்க்கு பறக்க  மல்ஹோத்ரா, தனஷாவினடாகியோர் மும்பைக்கு வந்தனர். இவர்கள் இருவரும் சோட்டா ராஜனின் ஆட்கள் என்பதால்,  மும்பையில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் அவர்களை கவனிக்க ஆரம்பித்தார்.

gun%20250.jpgஅவர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. பெரிய திட்டம் போட்டிருப்பது உறுதியானது. ஆனால் யாரை கொலை செய்யப்போகிறார்கள் என்பது மட்டும் தெரியவில்லை. இருந்தாலும் இருவரையும் அந்த அதிகாரி துப்பாக்கி முனையில் மடக்கிய பொழுது அஜய் தோவ்வால் உள்ளே புகுந்தார். இருவருக்கும் பயங்கர வாக்குவாதம் நடந்தது. முடிவில் துபாய்க்கு மல்ஹோத்ராவையும், தனஷாவாவையும் அனுமதிக்காமல் இருந்தார் அந்த அதிகாரி. இருவரும் அவரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். விஷயம் எல்லை மீறிப்போய்விட்டது.

மகளின் திருமணத்திற்கு வந்தானா தாவூத்?!?

அடுத்தநாள் ஆங்கில நாளேடு ஒன்று இந்த சம்பவம் குறித்து தாவூத்தை கொலை செய்ய ‘வாடகை கொலையாளிகளை நியமித்த இந்திய அரசு என்று தலைப்பு செய்தியாக வெளியிட்டது. இந்த செய்திகள் பெரும் விவாதத்தை நடத்தி கொண்டிருக்கும்பொழுது தாவூத் வீட்டு திருமணம் நடந்து கொண்டியிருந்தது. துபாய் விமான நிலையம், ஹோட்டல்கள், உல்லாச குழுக்கள் என்று துபாய்க்கு மூன்று மாதங்களாக போய் வந்த நபர்களின் லிஸ்ட்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எடுத்தது. அதோடு துபாய் போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு பாதுகாப்பு கொடுத்தார்கள்.

திருமண விருந்துகள், நான்கு நாட்டு உணவு வகைகள், கமகமக்கும் மல்லிகை பூக்கள் ஆரம்பித்து உலகத்தில் கிடைக்கும் அனைத்து பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த ஹோட்டலில்,  அனைத்து கண்களும் தாவூத்தைதான் எதிர்பார்த்து இருந்தன. திருமணமும்,  விருந்தும் நடந்து முடிந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்பும் நிலையில் ஒரே குழப்பமான சந்தேக நிலையில் போனார்கள். தாவூத் வந்தாரா இல்லையா? என்று அனைவருக்கும் மில்லியன் டாலர் கேள்வி மட்டும் எஞ்சி இருந்தது அந்த உச்சக்கட்ட காஸ்ட்லி கல்யாணத்தில். ஒரு மாதம் கழித்து மொஸார்ட் மட்டும் இதற்கான முடிச்சை அவிழ்த்தது.

ஆம்.... தாவூத் திருமணத்திற்கு வந்திருந்தார். 'துபாய் மன்னரும் அவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கு வந்தார்கள். அந்த மன்னர்களோடு மன்னராக தாவூத் வந்து போனார். ஒரு சில நிமிடங்கள்,  மன்னருக்கு ஒதுக்கிய இடத்தில் இருந்து அனைத்து அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்’ என்று ரிப்போர்ட் போட்டது. இதனை அறிந்த ஒட்டு மொத்த உளவுத்துறை உலகமும் ஆடிப்போனது. எப்படி கோட்டை விட்டோம் என்று விவாதம் நடந்து கொண்டு இருக்கும்பொழுதே மகளின் திருமணத்தில் தனக்கு ஸ்கெட்ச் போட்ட சோட்டா ராஜனுக்கு  தாவூத் போட்ட ஸ்கெட்ச் பயங்கரமானது. அது என்ன... ?

அடுத்த வாரம் பார்க்கலாம்...

http://www.vikatan.com/news/coverstory/59366-dawoods-surprise-visit-to-his-daughter-marriage.art

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நவீனன்.நான் கிட்டடியில் தான் இந்த தொடரை வாசித்து முடித்தேன்...தாவுத் இப்ராகிமையே இந்தியாவால் பிடிக்க முடியவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.